Sunday, February 8, 2026

முகாசா பரூர் தீர்த்தங்கரர் சிற்பம் - MukasaParur Tirthankar statue.

 அருகர் சிலை -  முகாசா பரூர்



Location:  Google Map - (11.5755, 79.2559) - M.parur

விருத்தாசலத்திலிருந்து 15 கி. மீ. வடமேற்கில் - உளுந்தூர்பேட்டையிலிருந்து 12 கி.மீ. தென்மேற்கில். - M. பரூர் உள்ளது.

It is located on a small raised platform beneath the Peepal tree on the northern side, outside the Sri Varadaraja Perumal Temple compound. 

ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் வடக்கு மதிற்சுவருக்கு வெளியே உள்ள அரசமரத்தடிக்கு கீழே சிறிய  மேடையின் மீதுள்ளது. 





அன்றைய தினம் முகாசபரூர் (கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுக்கா) ஓர் பிண்டி மர நிழலில் (அரசமரம்) அமர்ந்து தியானம் செய்யும் கோலத்தில் 1200 ஆண்டுகளை கடந்த தீர்த்தங்கரர் சிலையை வணங்கும் பேறு பெற்றோம்.

மேடை அமைத்த நண்பருக்கு நன்றி.

 

நடுநாட்டில் பல தனித்த தீர்த்தங்கரர்  சிற்பங்களில் 4.5 அடி  உயரமும் முன்று அடி அகலமும் உடைய அழகான ஒரு சிலையாகும்.

முக்குடை முழுவதுமாக, முகத்தில் சில பகுதிகள் சிதிலமடைந்த நிலையில் இருந்தாலும் தீர்த்தங்கரருக்கான பிண்டி மரம், முக்குடை, பிரபாமண்டலம், சாமரைத்தேவர்கள் இருவர், மலர்தூவும் தேவர்கள், சிங்காதனம் (புதையுண்ட நிலையில்) முதலிய எண் வகைச் சிறப்புகளுடன்  வடிக்கப்பட்டுள்ளது.

இச்சிலையை இவ்வூரின் ஜமீன்தார்(கச்சிராயர்) மற்றும் அவர் குடும்பத்தார் பாதுகாத்து வந்துள்ளார். மேலும் இந்த சிலைவடிவம் வள்ளிமலை, முருகன் அலயத்திற்கு செல்லும் வழியிலுள்ள தூண்டுக்கரை என்ற சிறு குன்றின்மீதுள்ள புடைப்புச் சிற்பத்தை ஒத்துள்ளது. (நன்றி: திருவாளர் மஹாத்மா செல்வபாண்டியன், வரலாற்றறிஞர்)

-------------

இந்த மு.பரூர் எனும் முகாசபரூரை தன் ஆட்சியில் கொண்ட கடலூர் மாவட்டத்தை சங்க காலத்தில் அருவாநாடு என்றும், பிற்கால சோழற்காலத்தில் நடுநாடு, மகதம்(மகதை நாடு) என்று அழைக்கப்பட்டுள்ளது. (தொண்டை மண்டலத்திற்கும், சோழ மண்டலத்திற்கு இடைப்பட்ட பகுதி( பழைய தென் ஆர்க்காடு மாவட்டம்- விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்கள்)

பொதுஊழிக்கு (கி.மு.) 3ம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழகத்தில் சமணம் வந்திருக்க வேண்டும் என்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.

அதாவது 22ம் ஜினரான ஸ்ரீநேமிநாதர் காலத்தில் அகத்தியர் துவாரகைப்பகுதிக்கு சென்று திரும்பும் போது அங்கிருந்த சில பதினென்குடி வேளிரையும், அருவாளரையும் தமிழகத்திற்கு அழைத்து வந்ததாக தொல்காப்பியத்தின் உரையில் நச்சினார்கினியர்  குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.(Ref: தஞ்சையில் சமணம்- நூல்)

அப்போதிலிருந்தே இந்தப் பகுதியில் சமணம் தழுவிய அருவாளர்கள் வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது. அதனால் 7 ம் நூற்றாண்டிற்கு பின் இப்பகுதியில் கட்டிடக் கோவில்களை பிற்காலச் சந்ததியினர் கட்டியிருக்கலாம்.

அப்போது வீசிய சமயப்புயலில் அங்குள்ள சமணராலயம் அழிந்து பட்டிருக்கக் கூடும் என்பது இந்த வரலாற்றையும், இப்போது கிடைத்துள்ள தீர்த்தங்கரர் சிலையையும் காணும் போது தெரியவருகிறது.








An Auspicious Spiritual Experience and a Glimpse into Ancient History

we were blessed with the opportunity to worship a Tirthankara sculpture over 1,200 years old, seated in a meditative posture beneath the shade of a sacred Peepal tree, at Mugāsapurur (Mu. Parur) in Vriddhachalam Taluk, Cuddalore District.

Our sincere thanks to the friend who constructed the platform.

Among the solitary Tirthankara sculptures found in the Nadu Nadu region, this statue stands out for its refined beauty, measuring 4.5 feet in height and 3 feet in width. Although certain portions of the face are damaged, the sculpture retains all the classical iconographic features of a Tirthankara: the Bindi tree, the triple umbrella (mukkudai), the Prabhāmaṇḍala (aureole), two chauri-bearer deities, flower-showering celestial beings, and a lion throne (currently buried underground)—together representing the eight traditional auspicious symbols.

This rare sculpture has been carefully preserved over generations by the local Zamindar (Kachirayar) and his family. Interestingly, the form and style of this image closely resemble the bas-relief sculpture located atop the small hill at Thoondukkarai, along the route to the Vallimalai Murugan Temple to reach.

(Acknowledged by: Thiru Mahatma Selvapaandiyan, historian)

 

During the Sangam period, the region now known as Cuddalore District was referred to as Aruva Nadu. In later Chola times, it came to be known as Nadu Nadu or Magadha Nadu (Magathai Nadu). Geographically, this area lay between Tondai Mandalam and Chola Mandalam, encompassing what was formerly the South Arcot District—today’s Villupuram, Puducherry, and Cuddalore districts.

 

Historical references suggest that Jainism must have arrived in Tamil Nadu even before the 3rd century BCE. According to the commentary on the Tolkāppiyam by Nachinarkiniyar, during the time of the 22nd Tirthankara Śrī Neminatha, the sage Agastya, upon returning from Dvārakā, brought with him members of the Eighteen Velir clans and the Aruvalar community into Tamil Nadu (Ref: Jainism in Thanjavur).

 

From that period onward, it is understood that Aruvalar communities who embraced Jainism lived in this region. Consequently, after the 7th century CE, later generations may have constructed structural temples here. However, during the intense religious upheavals of that era, the original Jain shrine in this locality might have been destroyed. The discovery of this Tirthankara sculpture today stands as a silent yet powerful testament to that lost chapter of history.



Videos 









Villiampakkam sri 1008 Adhinathar Jinalayam - வில்லியம்பாக்கம் ஸ்ரீ 1008 ஆதிநாதர் ஜினாலயம்

 


ஸ்ரீ 1008 ஆதிநாதர் 







Location -   Google map - (12.7492, 79.9353)

வில்லியம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வட்டத்திலுள்ள இரயில் நிலையத்தை கொண்டுள்ள ஒரு கிராமம் மற்றும் ஊராட்சி ஆகும். இது செங்கல்பட்டு (10 km) காஞ்சிபுரம் சாலையில் அமைந்துள்ளது. 






2013ம் ஆண்டு புளியமர வேரில் தீர்த்தங்காரர் சிற்பம் ஒன்று புதைந்துள்ளதைக் கண்டறிந்தனர்.

அதை வெளிக்கொணர்ந்து 2025 ஆண்டு பிப்ரவரி துவங்கி நவம்பர் 30 நாளன்று புதிய சிற்றாலயம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு ஐவிதசிறப்புகளுடன் குடமுழுக்கும் சமண மரபுப்படி நடந்தேறியது இதன் சிறப்பாகும்..

சலையோரத்தில்  அமைந்துள்ள இவ்வாலயம்  கருவறை மேல் சிறுவிமான கலசம் மற்றும் முகமண்டபத்துடனான கட்டுமான  அம்சங்களை கொண்டு  அழகிய வடிவத்துடன் காணப்படுகிறது.

அவ்வழியில் செல்வோர் அனைவருக்கும் அஹிம்ஸா நெறியை அருளும் வண்ணம் உருவான  இச்சமணராலயம் கண்டிப்பாக பேராலயமாக ஒருநாள் காட்சியளிக்கப்போவது என்பதை அது நிர்மாணிக்கப்பட்ட ஸ்தலமே  உறுதிசெய்கிறது.






This beautiful small temple has a 1500-year-old black stone sculpture of the Tirthankara in the sanctum sanctorum:

Williampakkam is a village and a panchayat with a railway station in Kattankolathur taluk, Chengalpattu district. It is located on the Chengalpattu Kanchipuram road.

--------------------

In 2013, a sculpture of the Tirthankara was found buried in the roots of a tamarind tree.

It is noteworthy that a new small temple was built starting from February 2025 and completed on November 30, 2025, and also the panchakalyan ceremony was held according to the Jain agama tradition.

Located on the main roadside , this temple is beautifully designed with architectural features such as a small vimana kalasam above the sanctum sanctorum and a mukhamandapam.

The place where it was built ensures that this shrine, which was built to bestow the principle of non-violence on all those who passes by, will definitely be seen as a large temple one day.

-------------------

1500 years old statue found under the tree root. 24th Thrithankara Mahaveer statue was discovered by a local Archaeological enthusiasts Near chennai . Reknowned Archaeologist who examined this statue says that it was more than 1500 years old.







videos 












Monday, August 11, 2025

Thiruvenkaranai Jain Shrine - திருவரங்கரனை - ஸ்ரீ மஹாவீரர் சமணச் சிலை

 Thiruvenkaranai Jain Shrine


திருவங்கரணை ஸ்ரீ 1008 மஹாவீரர் சமணச் சிலை - 

(13 ம் நூற்றாண்டு)



Thiruvengaranai - A village in Wallajahbath taluk, Kanchepuram district

Location:  (12.8488338, 79.8821973)


Visiting with a group of families organised by Thirulapayanam, Pammal.

--------------

Sri Mahavirar shrine having 13th century carvings.

-------------

The statue was found in December 2019, without proper maintenance, and was being used to tie cattle to the bank of the pond. Tamil nadu History enthusiasts say that many statues like this dilapidated statue are found from time to time in some villages in all talukas in Tamil Nadu without exception.

 

This small temple, located on the bank of the pond of this village, a shrine was built over the 13th century statue by the Ahimsa Walk, Charitable Organization, with the financial support of Mr. Jeevadas and his family on Jan - 2023.

 

Jainism once flourished in Tamil Nadu, and there were many temples and statues. But now many Jain symbols and statues are being destroyed without proper maintenance. The Thiruvankaranai statue is one of them. It is necessary to protect Jain symbols, and we are also seeing the demand for the protection of the identities of the Jains arising among many history enthusiasts and being brought to the attention of the government every day through the news media.

--------------

Ahimsa Walk

Discovering, Preserving Abandoned and Unnoticed Hidden Jain Ancient Heritages and Bringing them to the Notice of the Humanity in Tamilnadu

-----------------












click for Video 


திருவரங்கரனை - ஸ்ரீ மஹாவீரர் சமணச் சிலை, 13ம் நூற்றாண்டைச் சார்ந்தது.- சிற்றாலயம்..

திருவங்கரணை ஊராட்சி (Thiruvangaranai Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

----------------

 

அந்த சிலை முறையான பராமரிப்பு இல்லாமல், அந்தக் குளக்கரையில் மாடுகளைக் கட்டி வைக்கப் பயன்படும் நிலையில் இருந்துள்ளதை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த  இச்சிலையைப்போல பல சிலைகள் தமிழ் நாட்டில் வேறுபாடில்லாமல் எல்லா தாலுக்காக்களில் உள்ள சில சிற்றூர்களிலும் அவ்வப்போது கிடைத்துக்கொண்டே உள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இக்கிராமத்தின் குளத்திற்கருகே கரைமீது அமைந்துள்ள 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சமணச் சிலைக்கு ஒரு சிற்றாலயத்தை அஹிம்சை நடை தொண்டு நிறுவனம், திரு. ஜீவதாஸ் மற்றும் குடும்பத்தினரின் நிதியுதவி கொண்டு ஒரு  சிற்றாலயத்தை Jan – 2023 அன்று நிறுவியுள்ளனர்.

 

சமண சமயம் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் செழித்தோங்கியிருந்தது, பல கோயில்களும், சிலைகளும் இருந்தன. ஆனால், இப்போது பல சமண சின்னங்கள் மற்றும் சிலைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. திருவங்கரணை சிலை அவற்றில் ஒன்று. சமண சின்னங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம், சமணர்களின் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வரலாற்று ஆர்வலர்களிடையே எழுந்து அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுவதையும் நாம் செய்தி ஊடகங்கள் வழியே அன்றாடம் கண்டு வருகிறோம்.


Monday, April 21, 2025

Sri Chandragiri hill Basadi - ஸ்ரீ சந்திரகிரி மலை பஸ்தி

 Shri Bettada Chaturmukha Digambara Jaina Basadi 

 ஸ்ரீ சதுர்முக திகம்பர ஜைன (பெட்டாட)மலைப் பஸ்தி





Location on Google map – (12.8631, 76.6318)

 

Jain spiritual retreat on a mountain surrounded by spectacular scenery.

Temple is under construction and one need to find keys first at the foothills.

Calm place with divinity, few steps at a moderate height. Student of the same ashram.

















ஸ்ரீ ஜைன் க்ஷேத்ர கம்பதஹள்ளி மடத்திற்கு செல்லும் முன் வழியில்  உள்ள ஒரு சிறிய மலையின் மீது உருவாக்கப்பட்டுள்ள ஒரு அழகிய மலைப் பஸ்தி இந்த ஸ்ரீ சந்திரகிரி மலைக்கோவிலாகும்.

 

அமைதியான பிரதேசத்தில் தெய்வீகம் நிரம்பிய மலைக்காட்சி நம்மை மயங்கிடச் செய்துவிடுகிறது.

கீழிறுந்து மேலேறுவது மிகவும் சுலபமாக இருப்பதற்குக் காரணம்; மலை மிகவும் படர்ந்து விரிந்து பரவியுள்ளது. அதனால் அதன் படிக்கட்டுள்ள எல்லாம் இரண்டு அங்குல உயர அளவில் வெட்டப்பட்டுள்ளது ஆகும். கைப்பிடி தடுப்புத்தாங்கி வசதியுள்ளதால் மலைஏறி இறங்க சுலபமாக இருந்தது.

 

உச்சிப்படிக்கட்டில் நின்று அடிவாரத்தையும், சுற்றியுள்ள ரம்மியமான இயற்கை நிலக்காட்சியையும், அருகே தெரியும் பிந்திகானவெல்லி ஏரியையும் ரசித்து விட்டு, மேலுள்ள மலைக்கோவிலின் அழகாக தோற்றத்தை காணும் போது நம்மை மறந்து சில நிமிடம் அங்கேயே நின்று விடுவோம்.

போட்டோ, வீடியோ (Vloggers) ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்தலம்.


முதலில் நம்மை வரவேற்பது சதுர்முக மலைக்கோவிலின் மானஸ்தம்பம். அதன் பின்னால் அமைக்கப்பட்டுள்ள அழகிய  பஸ்தியின் கருவறையில் நாற்திசைநோக்கிய நான்கு தீர்த்தங்கர மூர்த்திகள், ஸ்ரீசந்திரப்பிரர், ஸ்ரீமுனுசூவிரதர், ஸ்ரீபார்ஸ்வநாதர், ஸ்ரீமஹாவீரர் போன்ற ஜினர்கள் தியானக்கோலத்தில் அமர்ந்துள்ளதைப் பார்க்கும் போது இருகரம் கூப்பி வணங்கவே தோன்றுகிறது.

அதனைச் சுற்றி வர உள்சுற்றும் உள்ளது.

அது தவிர அந்த கோவில் கட்டமைப்பைச் சுற்றிலும் ஒரு வெளிப்பிரகார மேடையில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் பாதமேடைகள் சிறு விமானத்துடன் காண அழகாக உள்ளது.

அதனையும் சேர்த்து சுற்றும் அளவிற்கு மலை மேட்டில் இடம் உள்ளது. ஆக மூன்று திருச்சுற்றுகள் அமைந்த ஒரு சதுர்முக பஸ்தியாக காட்சியளிக்கிறது.

ரம்மியமான இந்தச் சந்திரகிரியில் அமர்ந்துள்ள நான்குதிசை தீர்த்தங்கரர்களான ஸ்ரீசந்திரப்பிரர், ஸ்ரீமுனுசூவிரதர், ஸ்ரீபார்ஸ்வநாதர், ஸ்ரீமஹாவீரர் கண்டு தரிசித்த பக்தர்கள் கண்டிப்பாக மனநிறைவுடன் அங்கே அமர்ந்து சிறிது நேரம் கழித்தே கிழிறங்குவார்கள் என்று நிச்சயம்.

















Sri Chandragiri Hill Temple is a beautiful hill basti built on a small hill on the way to Sri Jain Kshetra Kambatahalli Math.

The divine mountain view in a peaceful area enchants us.

The reason why it is very easy to climb up and down; the mountain is very wide and spread out. Therefore, everything in its steps is cut at a height of two inches. Hand rails support also made easy to raise.

 

Standing on the top terrace and enjoying the foothills, the beautiful natural landscape around, and the nearby Bindikanavelli Lake, we forget ourselves and stay there for a few minutes when we see the beautiful appearance of the hill temple above. 

A very popular place for photo and video (Vloggers) enthusiasts.


First, we are welcomed by the Manasthamba of the Chaturmuka Hill Temple. In the sanctum sanctorum of the beautiful basti set up behind it, when you see the four Tirthankara idols facing the four directions, Sri Chandrapracharya, Sri Munusuvirathar, Sri Parswanathar, Sri Mahavira sitting in a meditative posture, you feel like folding your hands and worshipping them.

There is also an inner circle to go around it.

Apart from that, there is an outer platform around the temple structure, where the footstools of twenty-four Tirthankaras are beautifully seen with a small vimana.

There is enough space on the hilltop to go around it. Thus, it appears as a square basti with three circular paths.

Devotees who have seen the four Tirthankaras sitting in this beautiful Chandragiri, Sri Chandrapracharya, Sri Munusuvirathar, Sri Parswanathar, Sri Mahavira, will definitely be satisfied and will be able to relax after spending some time there.


Videos