Wednesday, August 8, 2018

Lakkavalli Jain temple


Bhagawan Parwanathar Basadi

பகவான் பார்ஸ்வநாதர் பஸ்தி


It lies in the Google map with coordination of (13.70418, 75.65233)26.07.2018
வியாழன்


நிட்டூரிலிருந்து மதியம் 1 மணியளவில் சிம்மனஹத்தே நோக்கி புறப்பட்டோம்.  திப்டூர், அரசிகெரெ, காதூர், தரிகெரெ கடைசியாக பெருமனகெல்லியில் புனே சாலையிலிருந்து நரசிம்மராஜபுரத்திற்காக திரும்பினோம். இரவு அங்கேயே தங்க முடிவு செய்ததால், பயணத்தில் அருகில் ஏதாவது சமணச்சின்னம் தென்படுகிறதா என கூகுள் வரைப்படத்தில் தேடியபோது லக்காவல்லி என்ற இடத்தில் ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயம் இருப்பதாக காட்டியது.

லக்காவல்லி

மிகச்சமீப ஆண்டில் கட்டப்பட்ட நூதன ஜினாலயம்…


பெருமனகெல்லி திருப்பத்திலிருந்து 16 கி.மீ. பயணித்தவுடன் லோகஸ்வரூபத்துடன் ஒரு பெயர்பலகை தென்பட்டது. கன்னடத்தில்  எழுதியிருந்ததால்  படிக்க இயலவில்லை. அம்புக்குறி காட்டியவழியே சென்றதும் 100 மீட்டரில் வலதுபுறம் நகரா வடிவமைப்பில் அடர்மஞ்சள் வண்ணத்தில் விமானம், கலசத்துடனும், பின்புறம் ஒரு மானஸ்தம்பமும் தென்பட்டது.


அனைவருக்கும் அமெரிக்காவை கண்டுபிடித்த மகிழ்ச்சி. மிகச்சமீபத்தில் கட்டியதான கட்டமைப்புடன் தென்பட்டது. இன்னும் சுற்றுச்சுவர் கூட கட்டப்படாமல் முன்புற வேலி, இரும்புத்தட்டி கதவுடன் இருந்தது. Van லிருந்து  இறங்கியதுமே எதிரிலுள்ள சமணர்கள் இறங்கி வந்து எங்களைப்பற்றி கன்னடத்தில் வினவினார்கள். நாங்களும் புரிந்து கொண்டது போன்று தமிழ்நாடென்றதும், அரைகுறை தமிழில் ஒரு மூதாட்டி பேசினார். நாங்கள் பேசியது அவர் புரிந்து கொண்டார். அதுவே பெரும் பாக்கியம்.


திறவுக்கோலை எடுத்து வந்து சாலையின் பின்புறப்பார்வையிலிருந்த ஜினாலயத்தின்  முன்புற நுழைவாயிலுக்கு அழைத்துச்  சென்றார். 30 அடிக்கும் குறைவான மானஸ்தம்பத்தின் அடிப்பகுதியில் ஜினர்  புடைப்புச்சிற்பத்துடன் பத்மாவதி, தரணேந்திரன் வடிவங்களும்  திசைக் கொன்றாக வடித்திருந்தனர். மேற்புற மொட்டை விமானத்தின் நாற்புறமும் ஜினர்சிலைகள் அமர்ந்தநிலையில் காணப்பட்டன.


சற்றொப்ப 1500 ச.அடிக்கும் கூடுதலான பிரார்த்தனைக் கூடம் மஹாமண்டபம் போல் காட்சியளித்தது. தரையில் சலவைக்கல் பதித்து வழவழப்பாக இருந்தது. அதன் முடிவில் கர்ப்பக்கிருஹம்; 5 அடி உயர  மேடையில் 3 உயர கருமைநிறக்கல்லில் அழகிய அமர்ந்தநிலை பார்ஸ்வநாதர் முழு உருவத்துடன் நிறுவப்பட்டிருந்தார். பின்புறம் பித்தளை உலோகத்தில் அடைப்பான  பிரபாஒளி சாமரைதாரி, யாளிவாய் உச்சியுடனும், அதன் மேல் ஒற்றைகுடையுடனும் காணப்பட்டது. மேலும் சில உலோகச்சிலைகளும் வரிசையாக அமர்த்தப்பட்டிருந்தன.


மூலவருக்கு வலதுபுறம் ஸ்ரீ தரணேந்திரரின் 2 அடி உயர கருமைநிறகல்லால் ஆன சிலை, சிறிய நாலுகால் மண்டப, விமான கலசத்துடனும்; அதே போன்று மறுபுறம் ஸ்ரீபத்மாவதி சிலை விமான கலசத்துடன் மேடையில் காணப்பட்டது. மேலும் கூஷ்மாண்டினி மற்றும் சில உலோகச்சிலைகளும்  இருந்தன.இம்மூன்று  அமைப்புகளும் தெளிவாக தெரியும் படி 15 அடியுயரத்தில் கூரைத்தளம் அமைத்திருந்தனர்.  கருவறைக்கு  மேலும் சன்னதி இருப்பதாக  கூறியதும். மூலவரை வணங்கிவிட்டு. திருச்சுற்றை வலம் வரும்போது கடைசியாக சிறிய சன்னதியில் க்ஷேத்ரபாலகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.


கருவறைக்குப்  பின்புறம் அமைந்த படிக்கட்டில் ஏறி மேற்தளம் சென்றோம். மானஸ்தம்பத்தின்  உச்சிமண்டபம் தென்பட்டது. கீழேயுள்ள கருவறைக்கு  மேல்தளத்தில் விமானத்தின் அடியில் கிழக்குமுகமாக மற்றொரு கருவறையில் ஸ்ரீ சந்திரப்ரபு நாதர் நின்றநிலையில்  நிறுவப்பட்டிருந்தது. (லாஞ்சனம் ஏதுமில்லை)


அவரையும் வணங்கிவிட்டு கிழே இறங்கினோம். பயணத்திட்டத்தில் இல்லாத ஒரு  புதிய ஜினாலய தரிசனம். மகிழ்ச்சியுடன் அச்சீமாட்டியிடம் விடைபெற்ற போது அந்திமாலைப் பொழுது துவங்கிவிட்டது.


சிம்மனஹத்தே சாலையில் பயணித்தை  துவங்கியுடன் பத்ராநதி அணைக்கட்டை காண முடிந்தது. நீர்ப்பிரவாகம் பெருக்கெடுத்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. சுற்றுலாத்தலமானதால் படகுப்பயணத்துடன் சுற்றுலாவந்தவர்கள்  கூட்டம். சற்றுநேரம் அக்காட்சியைக் கண்டுகொண்டே மெதுவாக நகர்ந்தபடி கடந்தோம்.


சிம்மனஹத்தே வந்த போது பகல்பொழுதை இரவு முழுவதுமாக விழுங்கிக் கொண்டிருந்தது. லேசான தூறல். அலுவலகத்தில்  தங்குமறையை பெற்றுக் கொண்டோம்.


பலமுறை வந்து  சென்ற ஸ்தலம். ஸ்ரீ சந்திரப்ரப ஸ்வாமி, ஸ்ரீ ஜிவாலாமாலினி மற்றும் அங்கிருந்த  சிற்றாலயங்களை தரிசித்ததோடு, ஸ்வஸ்திஸ்ரீ லஷ்மிசேன பட்டாரகரை வணங்கி சற்று நேரம் உரையாடிவிட்டு உறங்கச்  சென்றோம்.

Lakkavalli


After getting Dharshan at Nittur, we travel towards Simhanahadde as per our Program plan. We pass on through Tiptur, Arisekere, Kadur, tarikere, while getting the  right turn at perumanahalli, I accidently search a  jain temple nearby  at this location on the Google map. It indicates a Parshwanath jain temple, Lakkavalli  is  on  the  way to Simhanahadde.


So we are expecting the exact place of   Lakkavalli. At 16 km from perumanahalli, on the way  we saw a board in Kannada words with logaswaroop symbol  with right arrow mark. We turn to that street side.


A nakara type Viman and apart a Manasthamp also saw on the cut road. Stop the vehicle discovering joyfulness. Lay down there and enter inside the gate. A woman opposite to the temple came and help us to get  a darshan inside.

Newly Constructed temple in near-years, has 25 feet Manasthamp with bas-relief of Jinar, Yaksha, Yakshi at the bottom square  and  four thirthankar statues on top the small mantap. After open the main door, a vast praying hall, nearly area of 1500 s.ft. At the end a Garbahruha with Sri Parshwanath Jinar black marble statue of height 3 feet was  installed in the recent year. A brass arch prabaoli with Shamara devars and single umbrella at the top.


On its right side a small Shrine Mantap with viman with Shri Dharanender of black stone statue and on the otherside same as the structure with Shri Padmavathy matha of black stone statue also installed.


On the top of Garbagriha has a Viman of stripped conical shape. Under the Viman on the first floor, a shrine room having a black marble standing posture of Shri Chandraprabu Jinar. On ground floor at the end of circumbulance  a KShetrabalagar statue  also fastened inside a  small shrine.


After finishing the Darshan we thank the woman for his timely help and started toward Simhanahadde. On the way we cross the Badra Dam with full swing flow of  water. Very nice view of the water current. It is a tourist spot with boating. Many people enjoying the location.


We reached the Narasimharajapuram in the dusk. Approch  the mutt office and got two  rooms for  night stay. Then we took a Darshan of shrines  of  the Athisayakshetra; Shri Jwalamalini with silver kavasam is very attractive  and Shri Chandraprabu, Shri Santhinathar, Bhagawan Bagubali and  so on..


After  sepending few minutes  with the Mutt head Shri Lakshmisena  Battarakar , we go to the rest house for sleep.

Monday, August 6, 2018

Nittur


shri Chandraprabusamy digamber Jain mandir, 

ஸ்ரீ சந்திரப்ரபநாதர் திகம்பர் ஜினாலயா
நிட்டூர்

The place lies in the Coordination of (13.32203, 76.86099) set your navigator for.


மதியம் 12 மணியளவில் ஸ்ரீ சந்திரப்ரபு ஸ்வாமி ஜினாலயத்தை அடைந்தோம். வழக்கம் போல் மானஸ்தம்பம் வரவேற்று வணங்கவைத்தது. நாற்பது அடியுயரத்தில் அழகிய விமானத்தில் நாற்புரமும் மூலவரை ஒத்த ஜினரின் அமர்ந்த நிலை  சிலைகள் அலங்கரித்துக் கொண்டிருந்தன.


சற்றொப்ப 1175ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆலயக்கட்டுமானத்தில்  பெரும்பாலானவை ஹொய்சள ஆலய கட்டிடக்கலையை பின்பற்றியே கட்டப்பட்டிருந்தது. மிகவும் பாழடைந்த  இடங்களை மட்டும் இக்கால சிமெண்டு கட்டுமானத்தினால்  சீர்செய்து பாதுகாத்துள்ளனர் என்பதை காணும் போதே தெரிகிறது.  பழமையை அப்படியே வண்ணங்கள் கூட பூசாமல் பாதுகாத்திருப்பது வியக்க வைத்தது.


கர்ப்பக்கிருஹம், சுகநாசி (உன்னாழி), நவரங்க (நாலுகால்) மண்டபம் மற்றும் முகமண்டபம்(9 கால்) என நான்கு பகுதிகளாக தோற்றமளித்தது.


துவக்கத்தில் ஸ்ரீ ஆதிநாதரை மூலவராக கொண்டிருந்த இப்புராதன ஜினாலயத்தை, மிகவும் பாழடைந்து போனபோது 26 ஜனவரி, 1969 ஆம் ஆண்டு சீர்செய்த வேளையில் இவ்வூர் மக்கள் சம்மதத்துடன் பகவான் சந்திரப்ரபுநாதரை பிரதிஷ்டை  செய்துள்ளனர்.

சுகநாசிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் கண்களுக்கு புலப்படவில்லை. நவரங்க மண்டபத்தின் மேல் ஒன்பது கோளவடிவத்தை அமைத்து கூரையில் மரத்தில் மிகநுட்பமான நகாசுவேலை அலங்காரங்களை செய்திருப்பது அழகாக உள்ளது. ஒரு கோள வடிவில் அஷ்ட திக்பாலகர் சிலைகள் தென்பட்டன. அவை மிக அழகிய வேலைப்பாட்டுடன் காணப்பட்டன. (வெளிச்ச மாறுபாட்டினால் புகைப்படம் எடுக்க முடியவில்லை.) அடுத்த ஒரு கூரையில் சங்கீத உபகரணங்களான வீணை, தபலா, டோலக் போன்றவற்றை அழகாக செதுக்கியிருந்தார்கள்.


முகமண்டபம் வழக்கம்போலான கட்டுமானத்துடன் காணப்பட்டது. அதே சமயம் அவற்றின் ஒன்பது  தூண்களும் ஹொயசள கலைநுணுக்கத்துடன் ஒவ்வொன்றும் வெவ்வேறு அலங்கார வேலைப்பாட்டுடன் காட்சி அளித்தன.


மேலும் கூரைப்பகுதில் அழகிய வேலைப்பாடுகளுக்கு இடையே தீர்த்தங்கரர்கள் சிலையும், யக்ஷ, யக்ஷி யர்கள்  உருவங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. தென்திசை நோக்கி ஸ்ரீஜ்வாலாமாலினி யக்ஷி செதுக்கப்பட்டு, அன்றைக்கு விசேஷ பூஜையும் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பட்டுத்துணியுடுத்தி ஆபரண அலங்காரத்துடன் கண்டோம். நல்ல தொரு தரிசனம் கிட்டியது. மேலும் அக்கூடக் கூரையில் ஸ்ரீபத்மாவதியும்  காணக்கிடைத்தது.

மூலவராக 4 அடிஉயர சலவைக்கல்லால் ஆன ஸ்ரீசந்திரப்ரபு நாதஸ்வாமி கட்காசன நிலையில் தரிசனம் தந்து  கொண்டிருந்தார். அவருக்கு  முன்னர் முக்கிய உலோகச்சிலை வடிவங்கள் அடுக்கடுக்காக  காட்சியளித்தன. அதற்கு அடுத்த வெளிப்பகுதிக்கு  வரும்போது மூலவருக்கு  வலதுபுறமாக ஸ்ரீ பிரம்மதேவர் கற்சிலை அன்றைய அலங்காரத்துடனான சன்னதியும், இடது புறம் ஸ்ரீ கூஷ்மாண்டி யக்ஷி  அலங்காரத்துடனான சன்னதியும்,  வழியில் ஸ்ரீ ஜ்வாலாமாலினி உற்சவ மூர்த்தி அலங்காரத்துடன்  வைக்கப்பட்டிருந்தது. நல்ல தெய்வீகமான சூழலை அந்த  நவரங்க கூடம் கொண்டிருந்தது  என்றால் மிகையாகாது.

திருச்சுற்றை வலம் வரும்போது மண்டபங்களின் வெளிச்சுவரில் ஹொய்சளக்கலையில் கும்பபஞ்சரம் போன்ற மாடவடிவில் தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பங்களுடன் காட்சியளித்தன. இடைஇடையே கும்பபஞ்சரம் போன்ற  அமைப்பும் அலங்காரவேலைப்பாடுடன் இருந்தது மேலும் அழகூட்டின.


கருவறைக்கு மேல் இரண்டு தளவிமானம் பத்மகலசத்துடன்  காட்சியளித்தது. கிரீவப்பகுதியில் நாற்புறமும் அமர்ந்த நிலையில் தீர்த்தங்கரர் சிலையும், அடுத்த  தளத்தில் கர்ணகூடம் சாலையும், பின்புறப்பகுதியில் தீர்த்தங்கரர் சிலையும், அதற்கடுத்த தளத்தில் சாலைக்கு கீழே உள்ள  மாடத்தில் தென்புறத்தில் ஸ்ரீஜ்வாலாமாலினி  சுதைசிலையும், மேற்புறத்தில் ஸ்ரீபிரம்மதேவரும், வடபுறத்தில் ஸ்ரீபத்மாவதி மாதா சுதைசிற்பமும் அமர்ந்த  நிலையில் வடிக்கப்பட்டு பொன்னிற வண்ணம்பூசி காட்சியளித்தன.


சுற்று முடியும் இடத்தில் மண்டப சுவற்றுக்கு வெளியே முன்பிருந்த  மூலவர்  ஸ்ரீஆதிநாதர் புராதன பத்மாசனச் சிலையும்,  முனிவர்கள் சல்லேகனா இருந்து உயிர்விட்டதை தெரிவிக்கும் நிஷாதி  சிற்பங்களும், பாதங்களும், நாகச் சிலைகளும் காட்சியளித்தன.


பூஜை நேரத்தில் சென்றதால் நல்ல தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் பல நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளை கண்ட திருப்தியுடன் அவ்வாலயத்தை விட்டு அகன்றோம்.


அடுத்து சிம்மனஹத்தே எனும் நரசிங்கராஜபுரம் நோக்கி செல்ல பயணப்பட்டோம்….
----------------------------------------------- 


12th Century Jain Temple @ Nittur village, Near Tumkur City, Karnataka.

------------------------

Nittur, a village which is 30 kilometers to the west of Tumkur city, has a 12th century ‘Jaina Basadi’. Reflecting rich influence of Hoysala style of architecture, this basadi is divided into 4 main parts – Garbhagriha, Sukhanasi, Navaranga (4 pillared hall) and Mukhamantapa (9 pillared hall).


The temple at Nittur is said to have been built in the year 1175 A.D. At first the idol of Bhagawan Adinatha was the main deity in this temple. But with the passage of time it was ruined and the present idol of Bhagawan Shanthinatha was installed on 26th of January 1969.

While Sukhanasi is too small to go unnoticed, the insides of Navaranga has 9 beautiful dome-shaped ceilings of varied designs carved out of black soapstone (kappu balapada kallu). Of the 9, 2 ceilings in particular bear witness to excellent craftsmanship. One ceiling which is in the centre of Navaranga depicts Ashta Dikpalakas and Yakshis in a very detailed fashion, which has stood the test of time. And the other ceiling portrays musicians playing different musical instruments such as veene, tabala and kolalu among others. Mukhamantapa, although it is ordinary in nature, has 9 pillars each sculpted in different manner.

We can find very artistic and attractive carvings on the ceiling of the temple. We can also find the carvings of the tirthankaras and the yaksha and yakshi on the ceiling. The idols of Goddess Jwalamalini and Goddess Padmavathy found in the temple are very attractive. People from different parts of the state visit this temple every year to offer special prayers to yakshi Jwalamalini. Every Sunday special pooja is being conducted for Goddess Jwalamalini.

In front of the basadi, there is a 40 feet tall Manasthamba on the top of which one can notice a small structure in which there are 4 vigrahas facing four sides of the direction. On the right hand side wall of the basadi, the old statue of Adhinatha is placed next to a detailed stone inscription in old kannada, whose interpretation is not readily available.

There are also remnants of Nishadi stones within the confines of the basadi, which have been placed in the memory of those who undertook Sallekhana and sacrificed their lives. Unfortunately, these stones lie in a dilapidated state and if conservation efforts are not taken, they may get lost for generations to come.