Wednesday, November 2, 2016

Edayamadam - இடையமடம்


Idayamadam  Jain temple  -  and footprint  

இடையமடம்  சமணப் பள்ளி  ஜினபாத ஆலயம் 

   


Location map: click here

Map for Jain pilgrimage centres:   Click    Edayamadam on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )




Location: with latitude, longitude of (9.83599,79.08906)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (9.83599,79.08906)


route:-


Chennai → Trichy →Pudukottai → Karaikudi  Devakottai  Anumanthakudi  Idayamadam= 465 kms.

Puduchery → Cuddalore → Kumbakonam →  Mannargudi  Adirampatinam  Idayamadam = 361 kms.

Trichy → Pudukottai → Karaikudi  Devakottai  Anumanthakudi  Idayamadam = 155 kms.

Madurai → Thirupattur → Sivaganga → Devakottai  Anumanthakudi Idayamadam = 145 kms.


செல் வழி :  


சென்னை  →  திருச்சி   → புதுக்கோட்டை    →  தேவக்கோட்டை   →  அனுமந்தகுடி     இடையமடம்   =  465 கி.மீ. 

புதுச்சேரி → கடலூர் → கும்பகோணம் → மன்னார்குடி → அதிராம்பட்டினம்    மீமிசல்     இடையமடம்     =  361 கி.மீ. 

திருச்சி → → புதுக்கோட்டை    →  தேவக்கோட்டை   →  அனுமந்தகுடி    இடையமடம்     =  155 கி.மீ.

மதுரை →திருபத்தூர்  → சிவகங்கை   →  தேவக்கோட்டை   →  அனுமந்தகுடி    இடையமடம்     =  145 கி.மீ. 


How to approach

A ninth century Jain temple with sculptures and bas relief image of ‘Parshavanath’ has been discovered at Idaiyamadam in SP Pattinam, between Mimisal and Thondi, by the Ramanathapuram Archaeological and Historical Conservation Centre. V.Rajaguru, an archaeological enthusiast and founder of the Centre, and his team of school teachers who follow archaeology keenly, discovered the dilapidated temple at the tributary of Pambaru.


It is in a forest of ‘kaattu karuvai’ trees . The temple has three composite parts – a sanctum sanctorum, mandapam and a flag post, all in ruins. 





 தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் பள்ளியை தொல்லியல் ஆர்வலர் கள் கண்டுபிடித்துள்ளனர். 


ராமநாதபுரம் மாவட்டத்தில் 

 பெரியபட்டினம்மேலக்கிடாரம்கீழச்சீத்தைகீழச்சாக்குளம்பசும்பொன்திருப்புல்லாணி உட்பட பல்வேறு இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்துள்ளன.  இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சமண மதத்தை பின்பற்றுவோர் சங்க காலம் முதல் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.



-------------------------------



The sculptures and the ‘Parshavanath’ image indicated that it was a ninth century structure. The Parshvanath carved out on stone on the wall with 27 cm by 17 cm frame was similar to one found in Pechipallam, near Keelakuyilkudi. This pointed to the temple possibly dating back to the ninth century, he says.


Local people told Mr. Rajaguru’s team that they had seen an idol (Thirtankara) in the sanctum sanctorum of the 9th century temple, and that it had gone missing four years ago. The sanctum has a flat roof with no ‘vimana’, resembling the Pandya style of architecture. There was an image of Sidda Chakra, sculpted on the outside wall.





மேலும் தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் இடையமடம் என்னும் கிராமத்தில் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் வே.ராஜகுரு,ஒருங்கிணைப்பாளர்கள்,பரமசிவம்முத்துராமன்மிக்கேல்ராஜ்ராபர்ட் புரோமியர் ஆகியோர் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் பள்ளியை கண்டு பிடித்துள்ள ஜினாலயம்.


இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு  கூறியதாவது:

மூலஸ்தானம்முன்மண்டபம்மானஸ்தம்பம் என்கிற அமைப்பில் இந்த இடையமடம் சமணப்பள்ளி அமைந்துள்ளது. மூலஸ்தானம் செவ்வக வடிவில் உள்ளது. முன் மண்டபத்தின் வலதுபுறம் உள்ள சுவரில் 27 செ.மீ. உயரமும், 17 செ.மீ. அகலமும் உடைய நின்ற கோலத்திலான பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் உள்ளது.

அவரது தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்த நிலையிலும்முதுகின் பின்புறம் அதன் உடல் சுருண்டும் உள்ளது போன்ற இச்சிற்பம் மதுரை கீழக்குயில்குடி பேச்சிப்பள்ளம் பகுதியில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தை ஒத்துள்ளது. எனவே இப்பள்ளி கி.பி. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம்.

இங்கு கல்லாலான சித்தசக்கரம் வெளிப்புறச் சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறை விமானம் கோபுரம் ஏதுமின்றி தட்டையாக உள்ளது. சதுர வடிவ தூண்களில் தரங்க போதிகை அமைப்பு காணப்படுகிறது. இது பாண்டியர் காலக் கட்டிடக் கலை அமைப்பில் உள்ளது.

-----------------------------


Large images of fish and crab, carved opposite each other in the Mandapam indicated that the temple could have been dedicated to the fishing community. There are three small and six big images in the inner wall of the sanctum and the temple, which could have been built by the 18th Tirthankara Aranath during Pandya rule, he said.




மீன் சின்னங்கள்

முன்மண்டபத்தின் உள்புற சுவரில் எதிரெதிரே அமைந்த நிலையில் பெரிய அளவிலான நண்டு; இரு மீன்களின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அதேபோல் மூலஸ்தானத்தின் உள்ளே சிறிய அளவில் மூன்றும்பெரிய அளவில் ஆறுமாக ஒன்பது மீன்கள் புடைப்புச் சிற்பமாகவும்கோட்டுருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மீன் சின்னங்களைக் கொண்டுஇப்பள்ளி சமணர்களின் பதினெட்டாம் தீர்த்தங்கரரான அரநாதருக்கு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். அரநாதரின் வாகனம் மீன் என்பது குறிப்பிடத்தக்கது.





சமணர்களின் நான்கு வகைத் தானங்களில் ஒன்று மருத்துவ தானம். முன்மண்டபத்தின் சுவரில் ஒருவர் உரலில் மருந்து இடிக்கும் ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது. இப்பகுதியில் கொக்கிமுள் ஆதண்டைசங்கஞ்செடி ஆகிய மூலிகைச் செடிகள் காணப்படுகின்றன. இதன் மூலம் சமண முனிவர்கள் இங்கு மக்களுக்கு மருத்துவ சேவை செய்துள்ளதை அறிய முடிகிறது.




சமணப் பள்ளியில் நான்கு துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டு சிதைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள மூன்று கல்வெட்டுகள் மூலம் இது கி.பி. 1180 முதல் கி.பி 1190 வரை அரசாண்ட மாறவர்மன் விக்கிரமபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது எனத் தெரிகிறது.


-------------------------------------------------------------------

A few metres away from the Samanapalli north facing entryway temple, with two foot prints inside was covered with a Viman supported by  four pillars.  In which two people are seen in a worshipping posture, umbrellas over their heads. These, Mr. Rajaguru said to Hindu daily newspaper, possibly represent those who constructed the temple. It proves it should be constructed by Jain devotees.





பாதக்கோயில் சமணப் பள்ளியில் இருந்து ஐம்பது அடி தூரத்தில் பாதக்கோயில் உள்ளது. நான்கு தூண்களுக்கு நடுவே கல்லால் அமைக்கப்பட்ட ஒரு ஜோடி பாதம் மேற்புறம் சிறிய விமானத்துடன் உள்ளது. இதன் இரு தூண்களிலும் வணங்கிய நிலையில் உள்ள இருவரின் சிற்பம் உள்ளது. இவர் களின் தலைக்கு மேல் ஒரு குடை அமைப்பு உள்ளது. எனவே இது சமணர்களால் அமைக்கப்பட்ட பாதக் கோயில் என்பது உறுதி யாகிறது.






கி.பி. 14-ம் நூற்றாண்டு வரை இடையமடம் சமணப் பள்ளி யாக வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும். அதன் பின்பு இது சம ணர்களால் கைவிடப்பட்டு இடிந்த நிலையில் இருந்ததை சேதுபதி மன்னர்கள் காலத்தில் அப்பகுதி மக்கள் புனரமைத்து மடமாகப் பயன்படுத்தி இருக்கலாம். கிழவன் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் எல்லை குறிப் பிடும்போது இடையமடம் குறிப்பிடப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.





சமணர்களால் அமைக்கப்பட்ட குகைப் பள்ளிகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகள வில் காணப்பட்டாலும் கட்டுமானப் பள்ளியாக தென் மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.


எனவே இதை பழுது நீக்கி பாரம்பரியச் சின்னமாகப் பாது காக்க வேண்டும் .








---------------------

Tuesday, April 12, 2016

NALLURU - நல்லூரு


Shri Parshwanatha Jinalayam  -  ஸ்ரீபார்ஸ்வநாத ஜிநாலயம்





Location: with latitude, longitude of (13.1889 , 75.0603)

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.1889 , 75.0603)



Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Belthangady   Aladangady   Bajagoli   Karkal → Nallur   = 375 Kms.


Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Belthangady   Aladangady   Bajagoli   Karkal → Nallur = 315 Kms.


***********************


Nalluru is near Karkala, located at the bottom of Western Ghats. The rulers of Bhairava dynasty  have built more than 18 ancient stone structured Jain temples around the town. Nalluru is also one among them. Very beautiful Jinalaya has a Canarean traditional layout.

Shri Parshwanathar is the main deity and Shri Shanthinathar is also installed there.

A well laid out Samavasaran of Shri Adhinathar is exhibit on the first floor. This is one of the beautifully arranged miniature icons,  also have all the features of samavasarana as written in Jain myth.

One should visit the holy place while travelling along the way to other Jain pilgrimage centre. 























நல்லூர்: கார்காளாவுக்கு அருகில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கிராமம். பைரவ வம்சத்தினர் சமண மதத்தில் பற்று கொண்டு அப்பகுதியில் 18 ஜிநாலயங்களை கட்டி யுள்ளனர். நல்லூர் ஜிநாலயமும் அதில் ஒன்றாகும். அழகிய அவ்வாலயம் கன்னட பாரம்பரியத்துடன் திகழ்கிறது.

ஸ்ரீபார்ஸ்வநாதரை மூலவரை மூலவராக  கொண்ட அந்த ஜிநாலயத்தில் ஸ்ரீசாந்திநாதர் சிலையும் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.

அதன் முதல் மாடியில் ஸ்ரீஆதிநாதரின் சமவசரண அமைப்பு பாங்காக அமைக்கப்பட்டுள்ளது. அழகான சிறிய மாதிரிகளைக் கொண்ட இவ்வமைப்பு சமண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

 அவ்வழியே தீர்த்தயாத்திரை செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஜிநாலயமாகும்.  

*********************