Sunday, February 15, 2015

KATTUMALAIYANUR - காட்டுமலையனூர்


Shri  MAHAVEERAR  JAIN TEMPLE  --  ஸ்ரீ மஹாவீரர் ஜிநாலயம்





Location:
lies on the Google map in the coordination of (12.1892, 79.17331) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click KATTUMALAIYANUR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :   காட்டுமலையனூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:-

Tindivanam → Gingee → Pennathur → Karungalikuppam → Kattumalaiyanur  = 65 kms.

Kanchipuram → Vandavasi → Chetpet → Pennathur → Karungalikuppam → Kattumalaiyanur  = 112 kms.

Villupuram  → Vettavalam road → (before) Konalur right turn → Kattumalaiyanur   = 53 kms.

Tiruvannamalai  → Villupuram road → Konalur (after)left turn → Kattumalaiyanur   = 19 kms.

Gingee → Pennathur → Karungalikuppam → Kattumalaiyanur  = 34 kms.


செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி → பென்னாத்தூர் → கருங்காலிக்குப்பம் → காட்டுமலையனூர் = 65 கி.மீ.

காஞ்சிபுரம்  → வந்தவாசி  → சேத்பட் → பென்னாத்தூர் → கருங்காலிக்குப்பம் → காட்டுமலையனூர் = 112 கி.மீ.

விழுப்புரம் → வேட்டவலம் சாலை → கோனலூர் முன் திருப்பம் → காட்டுமலையனூர் = 53 கி.மீ.

திருவண்ணாமலை  → வேட்டவலம் சாலை → கோனலூர் திருப்பம் → காட்டுமலையனூர் = 19 கி.மீ.

செஞ்சி → பென்னாத்தூர் → கருங்காலிக்குப்பம் → காட்டுமலையனூர் = 34 கி.மீ.









 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Kattumalaiyanur is a hamlet at a distance of 17 kms from Tiruvannamalai in the Vettavalam road. (take a north diversion at 14 kms) Despite the Jains are in single digit number, they can construct a beautiful Jinalaya in the last century and dedicate to Shri Mahaveer Jinar. But they are worshipping a five hundred years old Jinar statue in the Jinalaya. The mutilated no-lanchan Thirthankar sculpture was brought from the near river bed.

The Jinalaya has an opening on east side and alround compound wall. A small Kudakarai with iron grill gate and an altar in the open corridor were visible while entering the temple. The top of the main block has Shri Parshwanathar idol in a gallery and two lion specimens at the corner.  .........

காட்டுமலையனூர்  என்னும் சிறிய கிராமம்  17 கி.மீ. தொலைவில் திருவண்ணாமலையிலிருந்து  வேட்டவலம் சாலையில் (14 கி.மீ.ல்  வடதிசை திருப்பம்) உள்ளது. மிகச் சிறிய எண்ணிக்கையில்  சமணர்கள் வாழ்ந்திருந்தாலும்  சென்ற நூற்றாண்டின் இறுதியில்  அழகிய ஜிநாலயம் ஒன்றை எழுப்பி ஸ்ரீமகாவீரருக்கு அர்ப்பணித்துள்ளனர். ஆனால் அவ்வாலயத்தில் 500 ஆண்டுகளைக் கடந்த  ஜிநரின் சிற்பம் ஒன்று வழிபாட்டில் உள்ளது.  அருகிலுள்ள ஆற்று மணற்படுக்கையில் இருந்து கொண்டு வரப்பட்டது.

நாற்புறம் சுவருடன் அமைந்துள்ள இவ்வாலயம் கீழ்திசையில் நுழைவைக் கொண்டுள்ளது.  சிறிய குடகரை இரு இரும்புக் கதவுகளுடன் அடுத்து ஒரு பலிபீடத்துடன் தெருவின் பார்வையில் உள்ளது.  ஆலயத்தின் முன்பகுதியின் மேல் உள்ள அழகிய மாடத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் சுதைச்சிற்பம்  ஒன்று காட்சி அளிக்கிறது. இருபுறமும் சிங்கங்களின் சுதையுடன் காணப்படுகிறது. ....





The rectangular vedi-block was bifurcated by sanctum and a pavilion. Inside the sanctum sanctorum Shri Mahaveerar stone plate, latest carvings, was installed on plinth. It has tri-umbrella canopy, Yazhi with circular ornamental top edge carvings and two whisk maids on either side of the deity. A lion with thick mane is etched as lanchan at the bottom.

A simple Viman has Shikhar, padmam and Kalash is crowned on the top. Four Jinar mortar images in sitting posture are decorated along the grive section. A paved open corridor is surrounded the temple.

However very few Jains are living; the poojas, rituals and festivals are conducted regularly. 

A definite visit by the passersby might safeguard the treasure for future. (Otherwise degenerated  like southern Jain sites) 




Contact No. Shri A. Rishabadoss - +91 7708171956

***********
செவ்வக வடிவில் அமைந்துள்ள ஆலயம் கருவறை மற்றும் முன்மண்டபமாக பிரிக்கப்பட்டுள்ளது.  கருவறை வேதிகையில் ஸ்ரீமஹாவீரரின் அழகிய  தற்கால கற்சிற்பம்  ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  அதன் மேல்புறம் முக்குடை, இருபுற சாமரைதாரிகளுடன் காணப்படும் வட்டப்பகுதி  யாளி மற்றும் அழகிய பூவேலைப் பாடுகளுடன் செதுக்கப் பட்டுள்ளது. மேலும் அதன் கீழ்புறம்  அடர்ந்த பிடரியுடன் கூடிய சிம்மம் ஒன்று லாஞ்சனமாக வடிக்கப்பட்டுள்ளது.

கருவறைப் பகுதிக்கு மேல் எளிய வகை விமானம் பத்ம ஏக கலசத்துடன் காட்சியளிக்கிறது.  மேலும் அதன் கிரீவப்பகுதியின் நாற் திசைகளிலும் அழகிய நான்கு ஜிநர்களின் சுதைச் சிற்பம் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளன.  வேதிப்பகுதியை சுற்றிலும்  தளமிடப்பட்ட  திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சமணர்கள்  வசித்தாலும்  அவ்வாலயத்தில் அனைத்து பூஜைகளும் பண்டிகைகளும் அந்தந்த பருவ நாட்களில் நடைபெறுகின்றது.

மெய்யன்பர்களின்   தொடர் விஜயத்தினால் மட்டுமே இது போன்ற வரலாற்று சின்னங்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்க முடியும்.  (இல்லாவிடில் தென்மாவட்ட  சமண கலைசின்னங்கள் போல் சீரழிந்துவிடும்) 

தொடர்புக்கு: ஸ்ரீவிருஷபதாஸ் -  -  +91 7708171956