Shri PARSHWANATHAR (Appandainathar) JAIN TEMPLE
ஸ்ரீ பார்ஸ்வநாதர் (அப்பாண்டை நாதர்) ஜிநாலயம்
Location:
lies on the Google map in the coordination of (11.81181, 79.28243) ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click THIRUNARUNGUNDRAM
lies on the Google map in the coordination of (11.81181, 79.28243) ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click THIRUNARUNGUNDRAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : திருநறுங்குன்றம் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Ulundurpet → Thiruvannainallur salai → Pillaiyarkuppam → Thirunarungundram = 83 kms.
Vandavasi →Tindivanam → Ulundurpet → Thiruvannainallur salai → Pillaiyarkuppam → Thirunarungundram = 121 kms.
Tiruvannamalai → Tirukovilur → Periyasevalai → → Pillaiyarkuppam → Thirunarungundram = 69 kms.
Tiruchy → Chennai highway → Ulundurpet → Thiruvannainallur salai → Pillaiyarkuppam → Thirunarungundram = 142 kms.
Thanjavur → Kumbakonam → Ulundurpet → Thiruvannainallur salai → Pillaiyarkuppam → Thirunarungundram = 142 kms.
செல்வழி:-
திண்டிவனம் → உளுந்தூர்பேட்டை → திருவெண்ணைநல்லூர் → பிள்ளையார்குப்பம் → திருநறுங்குன்றம் = 83 கி.மீ.
வந்தவாசி → திண்டிவனம் → உளுந்தூர்பேட்டை → திருவெண்ணைநல்லூர் → பிள்ளையார்குப்பம் → திருநறுங்குன்றம் = 121 கி.மீ.
திருச்சி → திண்டிவனம் → உளுந்தூர்பேட்டை → திருவெண்ணைநல்லூர் → பிள்ளையார்குப்பம் → திருநறுங்குன்றம் = 69 கி.மீ.
திருவண்ணாமலை → திருக்கோவிலூர் → பெரியசெவலை→பிள்ளையார்குப்பம் → திருநறுங்குன்றம் = 142 கி.மீ.
தஞ்சாவூர் → கும்பகோணம் → உளுந்தூர்பேட்டை → திருவெண்ணைநல்லூர் → பிள்ளையார்குப்பம் → திருநறுங்குன்றம் = 142 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Thirunarankondai is one of the
ancient centers of Jainism. A Jain assembly called the ‘Veera Sangam’
flourished here under the leadership of Gunadhara Muni. …….
திருநறுங்கொண்டை:
(திருநறுங்குன்றம் – திருநறுங்குணம்.) திருக்கோயிலூர்
தாலுகா. திருக்கோயிலூருக்கு,
12 மைலில்
உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி உயரம் உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள்
உண்டு. இக்கோயிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோயிலை
அப்பாண்டைநாதர் கோயில் என்றும் கூறுவர். நின்ற திருமேனி. இங்குச் சந்திரநாதர்
கோயிலும் உள்ளது. இங்குப் பல சாசனங்கள் காணப்படுகின்றன.89 குலோத்துங்கச் சோழரது 9 ஆவது ஆண்டில், வீரசேகர் காடவராயர் என்பவர் இங்கிருந்த நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளிக்கு
வரிப்பணம் தானம் செய்திருக்கிறார். இராசராச தேவரது 13 ஆவது ஆண்டில் இங்கிருந்த மேலைப்பள்ளிக்குப் பணம் தானம் செய்யப்பட்ட
செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. இந்தத் தானத்தை ஆதிபட்டாரகர் புஷ்பசேனர்
என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. …… மேலும் விவரம் பெற (touch for details) http://www.tamiljains.org/thirunarunkondai
(Dedicated by my friend A.Selvamani)
*** தமிழ் மொழியும் தமிழர்
வரலாறும்
திருநறுங்குன்றம் குகைப் பள்ளி:-
**************************************************
**************************************************
...................
அறுபத்து மூன்று
நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர்
திருநாவுக்கரசர் என்கிற அப்பர். அவர் தன் வாழ்வின் முற்பகுதியில்
தருமசேனர் எனும் பெயருடன் சமண சமயத்தவராக இருந்தார். பின் சைவ மதத்திற்கு மாறி திருஞானசம்பந்தருடன் பல சிவத்தலங்களை தரிசித்தார். அப்பருக்கு மரியாதை ஒருநாள் அப்பர் கடலூர் மாவட்டம்
உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள திருநறுங்குன்றம் கிராமத்தை
அடைந்தார். அவர் அகிம்சையைப் போதித்ததால் அவ்வூரிலிருந்த சமணர்கள் அவரை அன்புடன் வரவேற்று அவர் மீது அன்பும் மரியாதையும் அதிகம் கொண்டனர். அப்பர் அகம் மகிழ்ந்து,
அந்த ஊரில் உள்ள சமணக் கோயிலைக்காணச் சென்றார்.
திருநாவுக்கரசர் என்கிற அப்பர். அவர் தன் வாழ்வின் முற்பகுதியில்
தருமசேனர் எனும் பெயருடன் சமண சமயத்தவராக இருந்தார். பின் சைவ மதத்திற்கு மாறி திருஞானசம்பந்தருடன் பல சிவத்தலங்களை தரிசித்தார். அப்பருக்கு மரியாதை ஒருநாள் அப்பர் கடலூர் மாவட்டம்
உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள திருநறுங்குன்றம் கிராமத்தை
அடைந்தார். அவர் அகிம்சையைப் போதித்ததால் அவ்வூரிலிருந்த சமணர்கள் அவரை அன்புடன் வரவேற்று அவர் மீது அன்பும் மரியாதையும் அதிகம் கொண்டனர். அப்பர் அகம் மகிழ்ந்து,
அந்த ஊரில் உள்ள சமணக் கோயிலைக்காணச் சென்றார்.
அங்கு குற்றங்களில்லான்
குணத்தால் நிறைந்தான் அருகன்
பார்சுவநாதரைக்கண்டு,
பார்சுவநாதரைக்கண்டு,
“நற்றமிழ்சேர்
நறுங்கொண்டை யருகாவுன்னை நின்பதத்தை நல்குவாயே”
எனப்பதிகங்களைப்
பாடினார். இதனால் சமணர்கள், உம்மை அருகர்
ஆட்கொண்டார் என்று கருதுகிறோம் எனக்கூறி, பார்சுவநாதரை “அப்பரை ஆண்டவர்’ என புகழ்ந்தனர். இன்றும் அக்கடவுளை அப்பாண்டநாதர் என்றே வழிபடுகின்றனர்.
ஆட்கொண்டார் என்று கருதுகிறோம் எனக்கூறி, பார்சுவநாதரை “அப்பரை ஆண்டவர்’ என புகழ்ந்தனர். இன்றும் அக்கடவுளை அப்பாண்டநாதர் என்றே வழிபடுகின்றனர்.
சம்பந்தரும்
“ஆதியே திருநறுங்கொண்டை
வடதி
அஞ்சல் என்றருளே”
அஞ்சல் என்றருளே”
எனப்பதிகங்களைப்
பாடினார்.
.
**** மேலும் விவரம் பெற (touch for details)
https://www.facebook.com/thamizhmozhiyumthamizharvaralarum/posts/816432821743753
*** திருநறுங்கொண்டை:
(திருநறுங்குன்றம் - திருநறுங்குணம்.) திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயிலூருக்கு, 12 மைலில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி உயரம்
உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள் உண்டு.
இக்கோயிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோயிலை அப்பாண்டைநாதர்
கோயில் என்றும் கூறுவர். ...... மேலும் விவரம் பெற (touch for details)
**** வள்ளலார் பிளாக் (கல்பட்டு ஐயா இராமலிங்கம்) ல் உள்ள குறிப்புகள்:-
திருநறுங்குன்றம்
விழுப்புரம் - விருத்தாசலம் இருப்புப்பாதையில் உளுந்தூர்பேட்டை நிலையத்திலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் திருநறுங்குன்றம் என்னும் ஊரில் ஒருகாலத்தில் சமணர்கள் நிறைந்திருந்தனர். அவ்வூரில் உள்ள அப்பாண்டநாதர் கோவில் பழமை வாய்ந்தது. சோழர் கால கல்வெட்டுக்கள் அங்குக் காணப்படுகின்றன. தற்போது அவ்வூர் திருநறுங்கொண்டை அல்லது திண்ரங்கோட்டை என வழங்கி வருகிறது. ............. மேலும் விவரம் பெற (touch for details)
**** வன்னியர்குல ஷத்ரியர்கள் பிளாக்கில் உள்ள குறிப்புகள்....
மிக அற்புதமான உழைப்பு -- நறுங்குன்றத்து நாதனின் தாளடி தொழுதிட உமது பெரும் பணி விவரிக்க முடியாத அரும்பணி . எனது சிரந்தாழ் வணக்கங்கள் ஐயா !
ReplyDeleteமிக்க நன்றி..
ReplyDelete