CAVE VIEW - குகை தோற்றம் |
Map for Jain pilgrimage centres: Click Seeyamangalam on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
Route:
Vandavasi → Thellar → Desur → Seeyamangalam 24 k.m.
Tindivanam → Thellar → Desur → Seeyamangalam 36 k.m.
Gingee → Pennagar → Kallapuliyur → Seeyamangalam -25 k.m.
Chetpet → kozhaplur → kottupakkam → Seeyamangalam - 20 k.m.
செல்வழி:
வந்தவாசி → தெள்ளாறு → தேசூர் → சீயமங்கலம்-24 கி.மீ.
திண்டிவனம் → தெள்ளாறு → தேசூர் → சீயமங்கலம்- 36 கி.மீ.
செஞ்சி → பென்னகர் → கள்ளபுலியூர் → சீயமங்கலம்- 25 கி.மீ.
சேத்பட் → கொழப்பலூர் → காட்டுப்பாக்கம் → சீயமங்கலம்- 20 கி.மீ.
CAVE SURROUNDINGS - குகை சுற்றுப்புறம் |
MAHAVEERA ROCKCUT TEMPLE:
This rock cut Jain
temple was built by King
Rajamalla II during the end of 9th century. This temple is seen in a hillock
named Vijayadri. Inside
the rock cut, recently a new Mahaveerar, a new Parshvanathar
statues is kept and
worshipped by nearby Tamil Jains. On the top of the rock facing
east, relief sculptures of Mahaveerar, Parswa nathar and Bahubali are seen. On
the either side of Bahubali,
his sisters Brahmi and Saundari are seen. On the top, left side of Bahubali, Indra sitting on elephant and right side,
two Gandharvas are seen. The left and right side
of Parshavanathar,his attendants Padmavathi and Daranendran can be seen. Both
the images of Bahubali and Parshavanathar were carved in standing posture. The
image of Mahaveerar, sitting in Sukhasana position
on a Simhasana with
his attendants on either side is seen at the extreme southern direction.
|
மஹாவீரர் குகைக் கோவில்:
ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜமல்லன் என்ற மன்னனால் கட்டப் பட்டது. குகைக்
கோவில் உள்ளே புதிய ஸ்ரீமஹாவீரர், ஸ்ரீபார்ஸ்வநாதர் சிலை களைநிறுவி அருகிலுள்ள ஜைன
மக்கள் வணங்கி வருகின்றனர். அந்த பாறையின் மேற்புறம் கிழக்கில் புடைப்பு சிற்பமாக
ஸ்ரீமஹாவீரர்அமர்ந்த நிலையில் சமரதாரி களுடனும், ஸ்ரீபார்ஸ்வநாதர் நின்ற நிலையில்
இருபுறமும் ஸ்ரீதரணேந்த்திரர் / ஸ்ரீபத்மாவதி யுடனும் மற்றும் ஸ்ரீபாகுபலி
ஸ்வாமிகள் நின்ற நிலையில் இருபுறமும் பிராமி/ சுந்தரி சகோத்ரிகளுடன் செதுக்கபட்டுள்ளன.
மேலும் ஸ்ரீபாகுபலி ஸ்வாமிகள் மேற்புறம் இந்திரன் யானையின் மேல் அமர்ந்த
நிலையிலும், இரு கந்தர்வர்கள் சிலைகளும் உள்ளன.
|
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலுகாவைச் சார்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களுள் சீயமங்கலமும்
ஒன்றாகும். இது தேசூரில் இருந்து சுமார் 4 கி.மீ தென்மேற்கில் உள்ளது. இங்குள்ள பாறை
ஒன்றில் பல்லவ மன்னனாகிய முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சியின் போது தோற்றுவிக்கப்பட்ட
சைவ சமயக் குடைவரைக் கோயில் ஒன்றும் உண்டு. இதற்கு சற்று தொலைவில் உள்ள சிறிய மலையில்
இயற்கையாக உள்ள குகைகள் உள்ளன. இவை பண்டைக் காலத்தில் சமணப் பள்ளிகளாகத் திகழ்ந்திருக்கின்றன.
இந்த மலையிலுள்ள குகைகளில் முதன்முதலாக எப்போது சமணத்
துறவியர் உறைந்தனர் என்பதனை உறுதியாகக் கூறுவதற்கில்லை. கி்பி 7 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தில் மகேந்திர
பல்லவன் குடைவரைக் கோயில் ஏற்படுத்துவதற்கு முன்பே இங்கு சமண சமயம் வேரூன்றியிருக்கலாம்.
ஏனெனில் முன்பு சமணத் துறவியர் வாழ்ந்த பல மலைகளில் முதலாம் மகேந்திர பல்லவன் கி.பி
7 ஆம் நூற்றாண்டில் இந்து சமயக் குடைவரைக்
கோயில்கள் ஏற்படுத்தியிருப்பது ஈண்டு நினைவிற் கொள்ள வேண்டிய கருத்தாகும்.
இச் சீயமங்கலத்தில் உள்ள மலையில் இரண்டு குகைப்
பள்ளிகளைக் கி.பி 9- ஆம் நூற்றாண்டில் மேலைக் கங்க அரசனாகிய இரண்டாம் இராஜமல்லன் அமைத்தான் என அறிய வருகிறோம்.
இவற்றுள் ஒன்று மட்டிலும் இன்றளவும் நல்ல நிலையில் இருக்கிறது. இரண்டாவது குகைப்பள்ளி
எதுவென்று அறிவதற்கியலவில்லை. இக்குகைப்பள்ளி தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ அறுபது
அடி உயரத்திலுள்ளது. சிறிய அளவிலான இக் குகையின் மேற்பகுதியிலுள்ள பாறை சற்று முன்னோக்கி
நீண்டிருக்கிறது. இந்தப் பாறையில் மூன்று தொகுதிகளாகச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
சிற்பங்கள்
பாறையின் முகப்பில் நீண்ட பள்ளமான கோடு ஒன்று
வெட்டப்பட்டிருக்கிறது. இதற்கு மேற்குப் பகுதியில் முதலாவதாக மகாவீரர் சிற்பமும், அடுத்து
பார்சுவநாதர் திருவுருவமும், மூன்றாவதாக பாகுபலி யின் சிற்பமும் சிறப்புற படைக்கப்பட்டிருக்கின்றன.
மகாவீரர் சிங்கங்களைக் கொண்ட பீடத்தில் எழிலுற வீற்றிருக்கிறார். இவரது தலைக்குப் பின்புறம்
அரைவட்டப் பிரபையும், அதற்கு மேல் முக்குடையும் வடிக்கப்பட்டிருக்கின்றன. இவரது இருமருங்கிலும்
சாமரம் வீசுவோர், மெய்மறந்த நிலையில் நிற்கின்றனர்.
நடுநாயகமாகத் திகழும்
பார்சுவநாதர் ஐந்து தலை நாகத்தின் நிழலில் அருட்கோலம் கொண்டு நிற்கிறார். இவரது பின்புறம்
பாம்பின் உடற்பகுதி வளைந்து செல்வதாக காட்டப்பட்டிருக்கிறது. இவரது வலதுபுறம் தரணேந்திரன்
முழங்காலிட்டு வணங்கியவாறும், இடதுபுறம் பத்மாவதி யக்ஷி கரங்களைத் தூக்கி அஞ்சலி செலுத்தியவாறும்
திகழ்கின்றனர். பார்சுவதேவரின் தலைக்கு இணையாக வல்புறத்தில் கமடன் பாறையினைத் தூக்கி
தீர்த்தங்கரரின் மீது வீசுவதற்குத் தயாரான நிலையிலிருக்கிறான்.
இச் சிற்பத் தொகுதியினை அடுத்து பாகுபலி
தவமேற்கொண்டு அசைவற்ற நிலையில் காட்சியளிக்கிறார். இவரது இருமருங்கிலும் இவருடைய சகோதரிகள்
நிற்கின்றனர். இத்தேவரது தலைக்கு இணையாக வலது புறத்தில் இரு கந்தர்வர்கள் வியப்பு மேலீட்டால்
பாகுபலியை உற்று நோக்கியவாறு உள்ளனர். இடது புறத்தில் இந்திரன் தமது வாகனமாகிய ஐராவதம்
என்னும் யானை மீது அமர்ந்து அசைவற்ற தவக்கோலத்தில்
எழுந்தருளியிருக்கும் பாகுபலியின் தவ வலிமையைக் காண வருவதாகச் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
ஆடை அலங்காரங்கள் அதிகமின்றி எழிலுறுவாய் படைக்கப்பட்ட இக்கலைச் செல்வங்கள் கி.பி
9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். இவற்றை மேலைக் கங்க அரசனாகிய இரண்டாம் இராஜமல்லன்
தோற்றுவித்தான் என இங்குள்ள சாசனம் ஒன்று பகருகிறது.
கல்வெட்டுக்கள்
சீயமங்கலம் மலைக் குகையில் கங்க அரசனாகிய இரண்டாம் இராஜமல்லனது சாசனம் ஒன்று செய்யுளும்,
உரைநடையும் கலந்தவாறு காணப்படுகிறது. சிதைந்த நிலையில் உள்ள இச்சாசனம் கி.பி. 893- ஆம் ஆண்டு வித்தியாத்திரி என அழைக்கப்பெற்ற
இந்த மலையில் இராஜமல்லன் ஜினராஜாவிற்கென (அருகக் கடவுள்) இரண்டு கோயில்களைத் தோற்றுவித்தான்
எனக் கூறுகிறது. மேலும் ஜினேந்திர சங்கத்தின் உட்பிரிவாகிய நந்தி சங்கத்தைச் (நந்திகணத்தை)
சார்ந்த அருங்களான்வயம் பற்றிய குறிப்பும் இச் சாசனத்தில் இடம் பெற்றிருக்கிறது.
------------------------------
கங்க அரசனான இராஜமல்லன்
உருவாக்கிய கோயில்கள் இங்குள்ள இரு குகைகளேயன்றி கட்டடக் கோயில்களல்ல. இந்தக். குகைகளைச்
சீர் செய்து அவை சமணத் துறவியர் வழிபடுவதற்கேற்ற வகையில் இம்மன்னன் செய்திருக்க வேண்டும்.
வள்ளிமலையிலும் இந்த அரசன் இயற்கையாக உள்ள குகையினை சமணக் கோயில்களாக மாற்றியிருப்பது
குறிப்பிடத்தக்கதாகும். இந்த குகைப் பாழிகளில் ஜினேந்திர சங்கத்திற்குட்பட்ட நந்தி
கணத்தைச் சார்ந்த துறவியர் வசித்து வந்திருக்கின்றனர் எனத் தெரிகிறது. இராசமல்லன் சமண
சமயத்திற்கு ஆற்றிய அருந்தொண்டினை கர்நாடக
மாநிலத்திலுள்ள கல்வெட்டுகள் மட்டுமின்றி தமிழகத்திலுள்ள சாசனங்கள் சிலவும் விளங்குபவையாகத்
திகழ்கின்றன.
சீயமங்கலம் மலையின் அடிவாரத்திலுள்ள பாறையொன்றிலும்
செய்யுளும், உரைநடையும் கலந்த கி.பி.10 - ஆம் நூற்றாண்டு கல்வெட்டு காணப்படுகிறது.
இதில் திராவிட சங்கத்திற்குட்பட்ட நந்திகணத்து அருங்களான் வயம் போற்றிப் புகழப் பட்டிருக்கிறது.
மேலும் அப்போது மண்டலாச்சாரியராகத் திகழ்ந்த வஜ்ரந்ந்தி யோகேந்திரர் இந்த மலையிலுள்ள
கோயிலுக்கு ஏறிச் செல்வதற்கேற்ற வகையில் படிக்கட்டுகள் அமைத்திருக்கிறார் எனவும் அறியக்
கிடக்கிறோம். இதிலிருந்து கி.பி 10- ஆம் நூற்றாண்டிலும் இங்குள்ள பள்ளிகளில் நந்திகணத்தைச்
சார்ந்த துறவியர் வாழ்ந்திருக்கின்றனர் எனவும், அந்த காலத்தில் சமண சமய அமைப்பிற்குத்
தலைமைப் பொறுப்பிலிருந்தவர் வஜ்ரநந்தி யோகேந்திரர் என்பதும் தெளிவாகிறது. கி.பி.
9, 10- ஆம் நூற்றாண்டுகளில் மட்டுமின்றி தொடர்ந்து இங்கு சமண சமயம் செல்வாக்குடன் இருந்திருக்கலாம்.
ஆனால் அதனை விளக்குவதற்குப் போதிய சான்றுகள் எவையும் இல்லை.
----------------🌷------------
[நன்றி:- டாக்டர் ஏ.ஏகாம்பரநாதன்
அவர்கள், தொல்லியல்துறை]
வாட்ஸ்அப் பதிவு:-
G.துரைராஜ்,
செய்யாறு
This comment has been removed by the author.
ReplyDeletevery Good looking ....wish its first of many more photos to come ....Happy blogging....
DeleteGreat!. Excellent work. Keep it up - Singapore Tamil Jains Forum (STJF)
ReplyDeleteThank you; more posts will come soon
ReplyDeleteGreat work Padmaraj ji! i have posted in FB under group sruthakevali
ReplyDeleteமிகவும் உதவிகரமான தகவல்கள் .சிறப்பான சேவை. நிலைத்த பயன்தரும் பதிவுகள் . பலருக்கும் உதவிடும் வழிகாட்டியாக விளங்குகிறது . நன்றியும் பாராட்டுகளும்
ReplyDeleteகனக.அஜிததாஸ்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா...
ReplyDelete