Sunday, April 20, 2014

TIRAKOIL - திறக்கோவில்

  
  Sri MAHAVEERAR JINALAYA

     ஸ்ரீ மகாவீரர் ஜினாலயம் 
    Sri Adhinathar Jinalaya

ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்LOCATION: Click her

Map for Jain pilgrimage centres:   Click   TIRAKOIL  on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:

Vandavasi→ Thellar → Desur→ Tirakoil =   26 k.m.

Tindivanam→ Thellar → Desur→ Tirakoil =  36.5 k.m.

Gingee→ Pennagar→ Kallapuliyur  Tirakoil = 30 k.m.

Chetpet→ Nedungunam → mazhaiyur→ Tirakoil  = 22 k.m.


செல்வழி:

வந்தவாசி→ தெள்ளாறு→ தேசூர்→ திறக்கோவில்  - 26 கி.மீ.

திண்டிவனம்-→ தெள்ளாறு→ தேசூர்→ திறக்கோவில் - 36.5 கி.மீ.

செஞ்சி பென்னகர்→ கள்ளபுலியூர்→ திறக்கோவில் - 30 கி.மீ.

சேத்பட்→ நெடுங்குனம்→ மழையூர்→ திறக்கோவில் - 22 கி.மீ.Shri ADHINATHAR  --  ஸ்ரீ ஆதிநாதர்


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி- க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன்- வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

******


JINAGIRI PALLI  -  ஜினகிரி பள்ளி 
கி.பி. 8 ம் நூற்றாண்டில் இயற்கையாய் அமைந்த மூன்று குகைகள் சமண பள்ளியாய் திகழ்ந்துள்ளது. அதன் அருகில் அமைந்துள்ள 25 அடி உயரமுள்ள பாறையில் மூன்று புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.


கிழ்த்திசையில் ஆதிநாதர்: முன் பார்த்த சிங்க உருவம் கொண்ட பீடத்தில், தலைக்குப் பின் பிரபையுடன், தலைக்கு மேல் முக்குடையுடன் மற்றும் இருவர் சாமரம் வீச தியானக்கோலத்தில் அமர்ந்தவாறும், இத்தொகுதிக்கும்  வலது புறத்தில்,

சந்திரநாதர்: சிங்க உருவம் கொண்ட பீடத்தில், தலைக்குப் பின் பிரபையுடன், தலைக்கு மேல் முக்குடையுடன் மற்றும் இருவர் சாமரம் வீச தியானக்கோலத்தில் அமர்ந்தவாறும், இத்தொகுதிக்கும்  வலது புறத்தில்,

பார்ஸ்வநாதர்; தாமரையில் நின்றவாறும், அவர் தலைக்கு மேல் கமடன் (சத்ரு) கையில் பாறையுடன் தாக்க வருவது போலும், அவருக்கு வலது பக்கம் தரணேந்திர யக்ஷரும், இடது பக்கம் பத்மாவதி யக்ஷி குடை யுடனும், ஐந்து தலை பாம்பு படம் எடுத்து தடுப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு வலது புறத்தில்,

மஹாவீரர்: சிங்க உருவம் கொண்ட பீடத்தில், தலைக்குப் பின் பிரபையுடன், தலைக்கு மேல் முக்குடையுடன் மற்றும் இருவர் (சிறிய உருவில்) பூமாரி பொழிய, இருவர் சாமரம் வீச தியானக்கோலத்தில் அமர்ந்தவாறும் செதுக்கப்பட்டுள்ளது.


பல்லவர் ஆட்சிக் காலத்தில் அக்குகையில் வாழ்ந்த துறவியரே வழிபாடு செய்ய அதனை உருவாக்கியிருக்க வேண்டும்.AIR CORRIDOR VIEWS  -  திருச்சுற்று தோற்றங்கள் 

கி.பி. 11-நூற்றாண்டில்  கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  கருவறை, உள்ளாலை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த ஆலயம் எழுப்ப பட்ட இருந்த  ஸ்ரீஆதிநாதர் கற்சிலை சற்று சிதைந்து கண்டதால் தற்போது பளிங்கு கல்லால் செய்து வைத்துள்ளனர். ஆலய தூண்கள் உருண்டை வடிமாக உள்ளது. அதில் ஒரு 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுள்ளது. ஆலயத்தின் திருச்சுற்றில் தெற்கிலும், தென்மேற்கிலும் தீர்த்தங்கரர் சிலைகள் உள்ளது. அதன் கோபுரம் சில காலத்திற்கு முன்பு புதிதாக கட்டப்பட்டதாகும். மலைமீதுள்ள ஆலயத்திற்கு செல்ல படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.


TEMPLE INTERIOR  -  ஆலய உட்புறம் *********

Shir MAHAVEERAR  -  ஸ்ரீ மகாவீரர் 


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹாஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

*******


Shri MAHAVEERAR TEMPLE ROCK PATH WAY - ஸ்ரீ மகாவீரர் ஜிநாலய பாறைவழி 

சுற்று தோற்றம்

    
 
மலைமீது உள்ள ஆலயத்திற்கு செல்ல தென்புறத்தில் பாதையுள்ளது. சித்த பெரும்பள்ளி என அழைக்கப்பட்ட அவ்வாலயம் கி.பி. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு அழிந்து விட்டது. அதன் இடிபாடுகளை அகற்றி விட்டு தற்போது புதிய ஆலயம் கட்டபட்டு ஸ்ரீமஹாவீரர் மூலவராக அமைத்து ள்ளனர்.************
No comments:

Post a Comment