Wednesday, April 30, 2014

DESUR - தேசூர்

DESUR - SRI ADHINATHAR TEMPLE


Map for Jain pilgrimage centres:   Click    
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

On the map in the coordinates of (12.43691, 79.48247) and put the latitude, Longitude on the search box


ROUTE:

Tindivanam  Thellar Agarakorakottai Desur - Total: 33 k.m.

Gingee Sellapratti/Pennagar Rd Desur - Total: 26 k.m.

Vandavasi Thellar Agarakorakottai Desur -  Total: 27 k.m.

செல்வழி:

திண்டிவனம் தெள்ளாறு அகரகொரகோட்டை தேசூர் - 33 கி.மீ..

செஞ்சி செல்லபிராட்டி/பென்னகர் தேசூர் - 26 கி.மீ..

வந்தவாசி தெள்ளாறு அகரகொரகோட்டை தேசூர் - 27 கி.மீ.






Main Deity  -  மூலவர்



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி- க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன்- வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
****

Air corridor views -  திருச்சுற்று தோற்றங்கள் 



வந்தவாசிக்கு தென் திசையில் 20 கி.மீ. தொலைவில் தொலைவில் அமைந்துள்ளது தேசூர் என்னும் சமண ஸ்தலம்அங்கு  பல நூற்றாண்டைக் கடந்த ஜிநாலயம் ஒன்று, முன்னர் அவ்விடத்தில் வாழுந்த சமணக் குடும்பங்கள் பெருமுயற்சியால் எழுப்பப்பட்டு ஸ்ரீஆதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

நாம் அதன் வாயிலை அடைந்ததும்  ஒரு புதிய பொலிவுடன் கூடிய  மனத்தூய்மைக் கம்பமும் அழகிய வடிவில் செய்யப்பட்ட  பெரிய மேடையில் நிறுவப்பட்டு அதன் நாற் திசைகளிலும் கீழ் புறம் நான்கு ஜிநர்களின் உருவங்களும், மேற்புறம் சிறிய விமானத்தில் நான்குமாக அமர்ந்த நிலையில் அலங்கரிக்கின்றனஅதன் முன்னர் சிறிய பலிபீடமும் ஆலய திருச்சுற்றின் துவக்கத்தில் அமைந்து வட கிழக்கு மூலையில் நவக்கிரஹ சன்னதியும் நிறுவப்பட்டுள்ளது.

ஆலயம்  கருவறை, இடைநாழி மற்றும்  அகலமான  முன் மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு கதவுகளுடன் பாதுகாப்பாக உள்ளதுமுன்மண்டபத்தின் இருபுறமும் அழகிய மேடையில் 24 தீர்த்தங்கரர்கள் வெண் பளிங்கு கல்லால் தனித்தனியாக வடிக்கப் பட்டு கண்ணாடி தடுப்பு சுவர்களால் பாதுகாக்கப் பட்டுள்ளது. அடுத்து உள்ள அர்த்த மண்டபத்தில்  உலோகத்தால் ஆன  பல தீர்த்தங்கரர்கள் மற்றும் முக்கிய யக்ஷ, யக்ஷியர்களின்  சிலைகளும் அவற்றுடன் தென்புறம் ஸ்ரீபிரம்மதேவர் கற்சிலையும், வடபுறம் நவதேவதா கற்சிலையும்  மேடைகளில் அமர்த்தப்பட்டுள்ளன.

கருவறை வேதிகையில் ஸ்ரீஆதிநாதரின் பிரம்மாண்டமான கற்பலகையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிலை, எட்டு அம்சங்களுடன்  நிறுவப்பட்டுள்ளது. அச்சிலையில் லாஞ்சனம் இன்றி 600 வருடங்களை கடந்து அலங்கார வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. கற்பலகையின் விளிம்பில் தீச்சுவாலையும், உச்சியில் யாளிமுகமும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல்  அழகிய துவிதள விமான சிகரம் பத்ம கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளதுஅதன் கீழ்தளத்தில்  சாலையின் மேற் நான்கு தீர்த்தங்கரர்கள் சுதைச்சிற்பங்களும்மேற் தளத்தில் நான்கு ஜிநர்களின் சுதைச்சிற்பங்களும்  நின்ற நிலையில்  காட்சி அளிக்கின்றன.


ஆலயத்தில் அனைத்து பூஜைகளும், பண்டிகைகளும் அந்தந்த பருவ நாட்களில் செவ்வனே நடைபெற்று வருகிறது.


                 TEMPLE INTERIOR  -  ஜினாலய உட்புறம் 


2 comments: