Friday, April 18, 2014

ETHANEMILI - ஏதாநெமிலி


 Edanemili main entrance ஏதாநெமிலி குடவறை

LOCATION:  
Map for Jain pilgrimage centres:   Click    
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


Enter  on the clicked map in the coordinates of (12.3314, 79.55745) ie. put the latitude, Longitude on the search box


ROUTE:

Tindivanam →  Vellimedupettai →  Ethanemili   =  17.5 k.m.

Gingee →  Vellimedupettai →  Ethanemili = 29 k.m.

Vandavasi  →  Vellimedupettai →  Ethanemili  =  26.5 k.m.


செல்வழி:

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை →  ஏதாநெமிலி  = 17 கி.மீ.

செஞ்சி →  வெள்ளிமேடுபேட்டை →  ஏதாநெமிலி =  29 கி.மீ.

வந்தவாசி →  வெள்ளிமேடுபேட்டை →  ஏதாநெமிலி =  26.5 கி.மீ.





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ நேமி தீர்த்தங்கராதி சகல முனி  கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



   ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து துவாரகாவதி  நகரத்து ஹரி வம்சத்து  சமுத்திர விஜய மகாராஜாவிற்கும் சிவதேவி தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும்இந்திர நீலம் (கருப்பு) வண்ணரும் 10 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஓரு ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும்  சங்கம் (சங்கு) லாஞ்சனத்தை உடையவரும் சர்வான்ன யக்ஷன் கூஷ்மாண்டி (தர்மதேவி)  யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் வரதத்தர்  முதலிய 11  கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் ஊர்ஜெயந்தகிரியில் ஆஷாட  சுக்ல சப்தமியில் 72 கோடி 700    முனிவர்களுடன்  பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ நேமி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




JINALAYA OTHER VIEWS - ஆலயத்தின் தோற்றங்கள் 




Main entrance work is going on now. Sanctum and santorium is north facing with front mandap. Shri Naminathar in sitting posture.  East facing Shri Dharmadevi sannadhi is the speciality of the temple.


ஏதா நெமிலி, செஞ்சிக்கு வடகிழக்கில் , விழுக்கம், இளமங்கலம் வழியாக அல்லது வெ.பேட்டை வழியாக மேற்கு பகுதியில் சென்றால் அக் கிராமத்தை சென்றடையலாம். நூற்றாண்டு காலமாக இருந்த பழைய ஜிநாலயம் முழுவதும் சிதைந்து போனதால் சென்ற நூற்றாண்டில் புதிய பொலிவுடன் ஸ்ரீநேமிநாதருக்காக ஆலயம் கட்டி அர்ப்பணித்துள்ளனர். அதனால் அவ்வாலயத்தின்  தொன்மைக்கான ஆதாரங்கள் முழுவதுமாக அழிந்து விட்டன. மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் அவ்வூர் மக்கள் அருகிலுள்ள ஜிநாலயத்திற்கு சென்று வந்துள்ளனர்.

வடக்கு நோக்கிய கருவறையின் வேதிகையில் கற்பலகையில் ஸ்ரீநேமிநாதர் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளார். அதற்கு முன் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நாட்களில் உலோகச் சிலையே மூலவராக இருந்துள்ளது. பின்னர் தான் இந்த அழகிய கற்சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். அர்த்தமண்டபமாக உள்ளதில் மேடை அமைத்து தினபூஜைக்கான ஸ்ரீநேமிநாதரின் கற்சிலைக்கு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த மேடையின் இருபுறமும் உலோக பிம்பங்கள் மேடையில் அலங்கரிக்கின்றன. நடுவே மின் விளக்கினால் அமைந்த முக்குடை  சரம் உள்ளது. மண்டபங்கள் முழுவதுமாக இரும்புத்தட்டிகள் நிறுவி பாதுகாப்பாக உள்ளது.
மூலவர் கருவறைக்கு மேல் ஏக தள விமானம் பத்ம கலசத்துடன் காட்சியளிக்கின்றது. முன்மண்டபத்தின் மேல் தேவ மாடத்தில் ஸ்ரீநேமிநாதரின் அமர்ந்த நிலை சுதைச் சிலையும் வடிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் கோபுரம் அமைக்கப்பட்டு அதில் ஸ்ரீதர்மதேவி அம்மன் நிறுவப்பட்டுள்ளது. அதன் முன்னர் சிறிய கொட்டகையும் மண்டபம் போல் காட்சியளிக்கிறது. குடவறை வேலைகள் நடந்து முடிந்ததும் கோவில் புதுப் பொலிவுடன் காட்சியளிப்பது திண்ணமே.

தினபூஜை மற்றும் விசே­ நாட்களில் நடைபெறும் அனைத்து  மதச்  சடங்குகளும், பூஜைகளும் வளமைபோல் நடக்கின்றன.

(தற்போது அனைத்து வேலைகளும் முடிவடைந்து பஞ்ச கல்யாணமும் நடந்துள்ளது. புகைப்படங்கள் அதற்கு முன்னர் எடுக்கப்பட்டது.)

ஆண்டுக்கொரு முறை அவ்விடங்களுக்கு பல குழுக்களாக சென்றுவந்தால் பொக்கிஷங்களைப் பாதுகாக்கலாம்
---------------

Photos Taken on 06 Aug 2022





































No comments:

Post a Comment