Saturday, March 31, 2018

Bhandari Basadi - பண்டாரி பஸ்தி.


Chathurvimsadhi Tirthankars temple
சதுர்விம்சதி தீர்த்தங்கரர்கள் ஜினாலயம்.


(Mathada basadi - மத்தாட பஸ்தி)

24













சரவணபெலகுளாவில் மிகப்பெரிய ஜினாலயம். வெவ்வேறு அரசகால கட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிருஹம், அந்தராலயம், சபாமண்டபம், முக மண்டபம் போன்ற அனைத்து கூறுகளையும் கொண்டது.

மூலஸ்தானத்தில் மூன்றடியுயர 24 தீர்த்தங்கரர்கள் கற்சிலைகள் நின்றகோலத்தில் மிகப்பெரிய கர்ப்பகிருஹத்தில் நிறுவப்பட்டுள்ளன. வேதிகை நகாசு வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. மனித, மிருக, தாவர இலைகள் போன்ற உருவங்கள்  செதுக்கப்பட்டுள்ளன.

யக்ஷி பத்மாவதி மற்றும் பிரம்மதேவர் சன்னதிகள் அந்தராலயத்தில் காணலாம். நரசிம்ம ஹொய்சள அரசரின் திவான்(பண்டாரி) ஹுல்லா என்பவரால் 1159 ல் கட்டப்பட்டது. அதனால் பண்டாரி பஸ்தி எனப்பெயர் பெற்றது.
அவற்றுக்கு முன் உள்ள பிரம்மாண்ட கட்டமைப்புக்கள் விஜயநகர பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்டது. முன்னே அழகிய மானஸ்தம்பம்  நெடிதுயர்ந்து காணப்படுகிறது.



 







விஜயநகர பேரரசின் காலத்தில் சமண, வைஷ்ணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களை தீர்த்து சமாதான ஒப்பந்தம் பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளன.  சோவநேரு எனும் கிராம வருமானம் முழுவதுமாக இவ்வாலத்தின் பராமரிப்பிற்கான செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாலத்தின் சரஸ்வதி மண்டபத்தினை 1527 ல் இந்நகர தலைவன் புக்கராயா வின் மகன் தேவப்பதா என்பவரால் கட்டப்பட்டது.


****************************


It is the largest temple seen in the town at Shravanabelagola and is built at different stages in different times. It measures 266 feet X 78 Feet. It bears Garbagriha, Antarala, Sabhamantapa and Mukha Mantapa constructed in simple architectural style. There is a long row of 24 prophets of 3 feet height in Kadgasana filling the Garbhagriha and the images are installed on the ornamental pedestal. It has three splendid doorways with carvings of human and animal figures and foliage.















The idols of Yakshi Padmavathi and Brahma are found in Antarala, the entrance door bears a fine carving of dancing Indra with 12 arms and a plate of conglomeration of musicians. It was built in A.D. 1159 by Hulla, the treasurer (Bhandari) of the Hoysala King Narasimha I (A.D. 1141-1173). Hence it is named after him as Bhandari Basadi. The other huge constructions in front and around the temple were built during the Vijayanagara period. A fine manasthambha was erected in front of the main entrance. The temple has gained its importance because of the fact that it has housed the famous Bukkaraya inscription of Vijayanagara period mentioning the conflict that existed between Jaina and Sri Vaishnavas and finally resolved with compromise. Hulla was conferred the title of ‘Samyaktva-Chudamani’. A village called Sovaneru was granted for the maintenance of the temple. Devappa of Nanjarayapattana the son of chieftain Bukkaraya built a portion of the temple in A.D. 1527 and called it Saraswati Mantap.







The Story of Bahubali





















Nagara Jinalaya - நகர பஸ்தி


Shri Adhinatha basadi
ஸ்ரீஆதிநாதர் பஸ்தி








bears a simple architecture with Devakoshtas. There is Adinatha Tirthankara statue in the Garbhagriha. It was built by Nagadeva in A.D. 1195. He was the minister and chieftain of Ballala II (A.D. 1173-1220). It is called Nagara Jinayala as it was looked after by the merchants of the place. It is also called Sri Nilaya.

















எளிமையான கட்டமைப்புள்ளது. ஸ்ரீ ஆதி நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பல்லால மன்னரின் அரசசபையில் இருந்த நாக தேவா எனும் அமைச்சரால் A.D. 1195 ல் கட்டப்பட்டது. நகரத்திலுள்ள வியாபரிகளால் பராமரிக்கப்பட்டதால் நகர் பஸ்தி என்றழைப்பட்டது. ஸ்ரீநிலையம் என்றும் அழைக்கின்றனர்.