Wednesday, October 22, 2014

THIRUPARUTHIKUNDRAM - திருபருத்திகுன்றம்


 Shri MAHAVEERAR  JAIN TEMPLE - ஸ்ரீ மகாவீரர் ஜிநாலயம் 






Map for Jain pilgrimage centres:   Click THIRUPARUTHIKUNDRAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 


For Google Gps coordinates is (12.830411, 79.680887)


Route:

Chennai →  Kanchipuram → Thiruparuthikundram  =  73 kms

Tindivanam → vandavasi → Kanchipuram →  Thiruparuthikundram  = 77 kms

Arni → cheyyar → Kanchipuram →  Thiruparuthikundram  =  63 kms


Gingee →  Vandavasi → Kanchipuram →  Thiruparuthikundram  =  90 kms



செல்வழி:

சென்னை → காஞ்சிபுரம் → திருபருத்திகுன்றம்  =  73 கி.மீ.

திண்டிவனம் → வந்தவாசி → காஞ்சிபுரம்  →  திருபருத்திகுன்றம்  =  77  கி.மீ.

ஆரணி  செய்யார்  → காஞ்சிபுரம் → திருபருத்திகுன்றம் = 63 கி.மீ.

செஞ்சிவந்தவாசி → காஞ்சிபுரம்  →  திருபருத்திகுன்றம்  =  90  கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!










Thiruparuthikundram suburban is located southwest of Kanchipuram. A predominant, illustrious Jinalaya with all features was built in 6 century AD. This is the standing testimony of the glory of Jainism in this area in ancient times. So the area was called as Jinakanchi since the past. This is one among the four of Vidha Sthanam (Knowledge centre) in those days.

However the temple construction was commenced by the Pallava dynasty but expansions are takes place in subsequent reign of the Chola and the Vijayanagara emperors. All rulers were giving patronage to the Jinalaya.

The Jinalaya complex consists of two sections. One is Thrailokianathar jinalaya and other is ThirukoodaBasdi.

Thrailokianathar temple; the sanctum with Shri Mahaveerar idol and a Arthamandap, was built in 556 AD by king of Simmavarma Pallava. The brick work structure was demaged in due course. Then it was renovated by the king of Kulothunga chola in 10th Century AD. The rear wall of sanctum and viman has a fashion of Gajaprushtam (back view of an elephant). The old stone idol of Mahaveerar was eroded, so a wooden made statue was established on the blinth. The arthamandap and Mugamandap has rumble stone basement and sandbrick superstructure, like the Chola period temple art.

In the 13th Century AD, Shri Pushpathanthar sanctum and the crown were built same as Gajaprushtam model and a separate santum and small viman also built for Shri Dharmadevi. Both structures are adjusted in the width of arthamandap of shri Mahaveerar. Both the statues of thirthankars were damaged, wooden made idols of Shri Mahaveera and Shri Pushpathanthar were installed and coated, frequently, with colour paints.



Thrikoodabasdi: the second Section was built in 12th Century AD and renovated at the end of the same century by the Chola king. It got three sanctums with Shri Padmaprabar, Shri Vasupoojyar, Shri Parshwanathar idols on the respective base. All are made in lime mortar. On the rectangular block, the structure of Shri parshwanathar is adjusted to fit in the middle place, in a standing posture with five headed snake on the backside. It comprises of three sanctum rooms, so it is called as Trikood temple. At front an arthamandap and mugamandap was built in usual manner.

In front of the two porches, 60 feet wide common pavilion called as Sangeethamandap (pavilion for concerts) was built in the year 1387 to 1388 AD by Shri Irugappa, the minister of Vijayanagara king. It has 24 tall pillars with different designs like square, hexagon, octagon type has carvings at the base and art paintings on the roof slab. It exhibits the life events of shri Rishabh, Shri Neminath, Shri Mahaveer and Shri Dharmadevi.

In the year of 1234 AD, in the Chola reign (King Rajaraja chola-III), a long pavilion Santhimandap also built for the purpose of worshipping, during the Urchav (festival) time. After, a Santum was built for Shri Rishabanathar; a stone carved idol was established on the plinth. On the Southeast corner a granary was constuctured then converted as Kitchen room in due course. Southwest end a shrine for Brahmadevar was built. (Evidences of antique was concealed while renovation). Then five saint chambers called as Munivasam was constructed for saints Shri Mallisenar, Shri Pushpasenar, Shri Pushpasenawamanar, shri Chandrakeerthi and Shri Anandhaveeriar. They are the Caretakers and trustees of the temple.

The open corridor was enclosed by raised wall with an entranceway in the east is crowned with three tier tower consists of Thirthankar statues, which was built in 13th Century AD in the Vijayanagara reign period.

Kura, a temple holy tree has been exiting since many centuries. It seems in moderate height, neither growing tall nor getting short, for several years. The enclosure wall is built in 13th Century AD. Nearby two altars were placed in the corridor. They got the carvings of two saints.

Inside the Munivasam sanctums, Shri Parshwanathar stone carved statue and Shri Rishabanathar statue were embraces on the respective plinth. More alloy made God and demi-god idols are secured tightly in a grilled compartment.

The above references of Stone inscriptions were preserved in the temple complex. Now the Jinalaya is under the control of Archaeological Survey of India.

All special poojas, rituals, Urchavs, festivals are celebrated by the local Jain families.


On the southwest outskirts of the temple five pedams are installed on a platform, to commemorate the Five Munis, who were staying in the Muni-vasam chambers, after getting their moksha. The holy spot is identified as Arunagirimedu.  



காஞ்சிபுரத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்தலம் திருப்பருத்திக்குன்றம் ஆகும். கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்தே அங்கு ஒப்பற்ற, பெருமைமிக்க, அனைத்து அம்சங்களும் ஒருங்கே அமைந்த ஜிநாலயம் உள்ளது.  அதற்கு முன்னரே இங்கு சமணம் தழைத்திருந்ததால் அவ்விடம் ஜினகாஞ்சி என பெயர் பெற்றுள்ளது. பாரதத்தின் வித்யா ஸ்தானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பல்லவமன்னரால் தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் சோழ, விஜயநகர பேரரசர்களால் பல காலகட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பின்னரும் பல்வேறு மான்யங்களையும் அரசிடம் பெற்றுள்ளது.

கிழக்கு முகமாக அமைந்துள்ள இந்த ஜிநாலய வளாகத்தில் இரண்டு தொகுதிகளாக கருவறைகள் உள்ளன.

திரைலோக்கிய நாதர் ஆலயம்: என்ற முதற்தொகுதி கி.பி. 556ல் சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னரால் ஸ்ரீமகாவீரர் கருவறையும், அர்த்தமண்டபமும் கட்டப்பட்டுள்ளது. செங்கல்லினால் கட்டப்பட்ட அக்கருவறைபகுதி பிற்காலத்தில் பழுது பட்டதால் முதலாவது குலோத்துங்க சோழன் காலத்தில் (10 ம் நூற்றாண்டின் இறுதியில்) சீரமைப்பு செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கருவறை தூங்கானை மாடம் (கஜ பிருஷ்டம்) என்னும் யானையின் பின்புறம் போன்று அரை வட்டவடிவ பின்புற கட்டமைப்பை கொண்டது. (கரந்தை ஸ்ரீரிஷபர் ஆலயமும் இவ்வடிவில் உள்ளது.) ஆரம்பத்தில் இருந்த ஸ்ரீமகாவீரர் சிலை பழமையானதால், மரத்தால் ஆன பிம்பத்தை பிரதிஷ்டை செய்யப்பட்டு வர்ணம் பூசி வந்துள்ளனர்.  அதன் முன்பகுதியான அர்த்த மண்டபம், முகமண்டபம்,  கருங்கல் அஸ்திவாரமும், மணற்கல் மேற் கட்டுமானமும்,  சோழர்கால கலைப்பாணியை கொண்டது.

அதன் பின்னர் 13ம் நூற்றாண்டில் அதே கஜபிருஷ்ட வடிவில் ஸ்ரீபுஷ்பதந்தர் கருவறையும் மேல் விமானமும், சிறிய அளவில் ஸ்ரீதர்மதேவிக்கு தனி கருவறையும் மேல் விமானமும் அமைக்கப்பட்டுள்ளது.அவை அனைத்தும் பழைய மண்டப அளவில் இருக்கும் படியாக அமைத்துள்ளனர். ஸ்ரீமகாவீரர், ஸ்ரீபுஷ்பதந்தர் சிலைகள் இரண்டும் மரத்தால் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக வர்ணங்கள் பூசப்பட்டு வந்துள்ளது.

 திரிகூடபஸ்தி: அடுத்த தொகுதியான இவ்வாலயத்தை கி.பி. 12 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டு, கி.பி. 13ம் நூற்றாண்டின் துவக்கத்தில் சோழர்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதிலும் மூன்று கருவறைகள் உள்ளன. ஸ்ரீபத்மபிரபர், ஸ்ரீவாசுபூஜ்யர், ஸ்ரீபார்ஸ்வநாதர் ஆகிய தீர்த்தங்கரர்களின் சுதை பிம்பங்கள் அலங்கரிக்கின்றன. 

செவ்வக வடிவில் உள்ள மொத்த கருவறையின் நடுவே உள்ள குறைவான பகுதியில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் உருவம் ஐந்து தலை அரவத்துடன் நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. மூன்று தெய்வங்களின் கருவறைகள் ஒன்றாக அமைந்துள்ளதால் திரிகூடபஸ்தி என வழங்கப்படுகிறது. முன்னால் தனியாக அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன் அமைந்துள்ளது.

இரு தொகுப்பிற்கும் முன்னர்  60 அடி நீளத்தில் சங்கீதமண்டபம் பொதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருவிழாக்காலங்களில் இசை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. சதுர வடிவம், அறுகோணம், எண்கோண வடிவ தூண்களையும் பல சிற்பங்களையும் அழகிய வேலைப்பாடுகளையும் கொண்ட அம்மண்டபத்தை கி.பி.1387ம் ஆண்டு விஜய நகர அரசரின் அமைச்சர் இருகப்பா என்பவர் கட்டியுள்ளார். அவருடைய சிலையும் ஓர் தூணில் உள்ளது. மேலும் கூரைப்பகுதியில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஸ்ரீரிஷபநாதர், ஸ்ரீநேமிநாதர், ஸ்ரீமஹாவீரர், ஸ்ரீதர்மதேவி ஆகிய தெய்வங்களின் வாழ்வு நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன. 


வடபுறம் ஸ்ரீரிஷபநாதர் கருவறை உள்ளது. அதன் முன்புறம் திருவிழாக்காலங்களில் வழிபாடு செய்வதற்காக ஒரு மண்டபம் கி.பி. 1234ம் ஆண்டில் சோழர்களால் கட்டப்பட்டுள்ளது. சில ஆண்டுகள் கழித்தே  பின்புறம் உள்ள கருவறை கட்டப்பட்டு ஸ்ரீஆதிநாதரின் கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலய திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் ஒரு தானிய சேமிப்பு அறை அச்சோழர்கள் கட்டப்பட்டு தற்போது மடப்பள்ளியாக மாறியுள்ளது.




தென்மேற்கு மூலையில் ஸ்ரீபிரம்மதேவர் சன்னதியோன்று உள்ளது. அதனை அடுத்து வடபகுதியில் ஐந்து முனிவாச அறைகள் கட்டப்பட்டுள்ளன. அக் கருவறைகள் ஸ்ரீமல்லிசேனர், ஸ்ரீபுஷ்பசேனர், ஸ்ரீபுஷ்பசேனவாமனர், ஸ்ரீசந்திரகீர்த்தி, ஸ்ரீஅனந்தவீரியர் ஆகிய துறவியருக்கானவை. அவர்களே அவ்வாலயத்தை நிருவகித்து வந்துள்ளனர். 

ஆலய குடவரை மேல் கிழக்கு புறத்தில் மூன்று தள கோபுரம் கி.பி. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. ஆலய திருச்சுற்று மதிலின் மேற்பகுதி அக்காலத்திலேயே உயர்த்தப்பட்டுள்ளது.

ஆலயத்தின் மேற்கில் ஸ்ரீமகாவீரர் கருவறைக்கு பின் ஸ்தல விருக்ஷமாக குராமரம் உள்ளது. அதிக உயரம் வளராமலும், குட்டையாக குறையாமலும் பல நூற்றாண்டுகளாய் அவ்வண்ணமே உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் மேடை கி.பி. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே இரண்டு பலிபீடங்கள் உள்ளன. அதன் நடுப்பகுதியில் இரண்டு முனிவரது உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

முனிவாச கருவறையில் ஸ்ரீமகாவீரரின் பழைய பிரதிமை வைக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள அறையில் ஸ்ரீபார்ஸ்வநாதர் கற்சிலை, அங்குள்ள கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மேலும் உலோகப்படிமங்கள் பல ஆலயத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தீர்த்தங்கரர்கள், யக்ஷ, யக்ஷியர்களும் அடங்குவர்.

இவ்வாலயத்தின் அந்தந்த காலகட்டத்தின் வளர்ச்சிகள் அனைத்தும் அங்குள்ள கல்வெட்டின் மூலமாக அறியலாம். தற்போது ஜிநாலயம்   அரசின் தொல்பொருள் இலாகாவினரால் பாதுகாக்கப்படுகிறது.

சமண ஆலயங்களில் நடைபெறும் அனைத்து பூஜைகளும், திருவிழாக்களும் அவ்வூர் சமணர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  


ஆலயத்தின் தென்மேற்கில் ஒரு பெரிய மேடையில் கல்லினால் செய்யப்பட்ட பீடங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் அவ்வாலயத்தில் முனிவாச கருவறையில் வசித்தும், நிருவகித்தும் வந்த ஐந்து துறவியர்கள்,  ஸ்ரீமல்லிசேனர், ஸ்ரீபுஷ்பசேனர், ஸ்ரீபுஷ்பசேன வாமனர், ஸ்ரீசந்திரகீர்த்தி, ஸ்ரீஅனந்தவீரியர் ஆகியோர்களுக்கு உரியது. அவர்கள் மோட்சம் அடைந்த பின், நல்லடக்கம் செய்த நிகழ்வுகளின் நினைவுச் சின்னங்களாக வைக்கப்பட்டுள்ளது.



2 comments:

  1. கோயிலுக்குச் செல்லும் ஆர்வத்தை உண்டாக்கிய பதிவு.

    ReplyDelete