Saturday, October 4, 2014

PONNUR HILL (Shri VISHAHACHARIAR CENTRE) - பொன்னூர் மலை (ஸ்ரீ விசாகாசாரியார் மையம்)



Shri AJITHANATHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ அஜிதநாதர்  ஜிநாலயம் 




Location  lies on the map in the coordination of (12.50155, 79.52362) put the latitude, Longitude on the search box



Map for Jain pilgrimage centres:   Click  Ponnur Hill
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பொன்னூர் மலை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )



ROUTE:

Tindivanam → Vandavasi  → Desur road   Ponnur Hill = 45 k.m.

Gingee → Pennagar road → vedal → Desur Mazhaiyur road    Ponnur Hill = 37 k.m.

Vandavasi → chetpet road     Ponnur Hill = 9 k.m.

Villupuram → Gingee → Pennagar road →  Desur Mazhaiyur road Ponnur Hill = 77 k.m.

Chetpet  → Vandavasi road  Ponnur Hill = 20 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி  → சேத்பட் சாலை  → பொன்னூர் மலை   = 45 கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை   = 37 கி.மீ.

வந்தவாசி → சேத்பட் சாலை→ பொன்னூர் மலை  9 கி.மீ.

விழுப்புரம் செஞ்சி  வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை  = 77 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை   
→ பொன்னூர் மலை  =  20 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அஜித நாத ஜிநேந்திராதி சகல முனி  கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா  நகரத்து இக்ஷ்வாகு  வம்சத்து   ஜிநசத்ரு மகாராஜாவிற்கும் விஜயசேன தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும்,  பொன் வண்ணரும் 450  வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 லட்சம் பூர்வம் ஆயுள் உடையவரும் கஜ (யானை) லாஞ்சனத்தை உடையவரும் மகா யக்ஷன் ரோகிணி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சிம்மசேனர்  முதலிய 90  கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் சைத்ர சுக்ல பஞ்சமியில்  ஆயிரம்   முனிவர்களுடன் சித்தவர  கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ அஜிதநாத தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




பொன்னூர் மலை: வந்தவாசியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் சேத்பட் சாலையில் அமைந்துள்ள குன்று. ஸ்ரீவிசாகாச்சாரியார் தபோநிலையம்,  அக்குன்றிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்தால் தொழிற்பள்ளிக்கு எதிரே வடக்கு நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அந்த வளாகத்தின் உள்ளே ஸ்ரீஅஜிதநாதருக்கான அழகிய ஓர் ஜிநாலயம் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மேலும் அவ்வளாகத்தினுள், இவ்வுலகத்து உயிரிகள் அனைத்தும் அமைதியாக வாழ, அஹிம்சை ஒன்றே வழி என்ற நோக்கத்தோடு ஸ்ரீவிசாகாச்சாரியார் கல்வி மற்றும் அஹிம்சை பரப்பு மைய அறக் கட்டளை செயல் படுகிறது. (மற்ற ஊர்களில் உள்ள ஜிநாலயங்களின் நோக்கமும் அதுவே, இருப்பினும் சில …)

அவ்வளாகத்தினுள்  அரவமில்லாமல் அஹிம்சை புரட்சி நடக்கிறது. அதற்கு காரணமாக இருந்தவர் குருவரர் ஸ்ரீஆர்ஜவசாகர் அவர்களின் சீடராக விளங்கிய சமண பவ்யர் திருவாளர் சிவ. ஆதிநாதன் என்று சொன்னால் மிகையாகாது. அவர் சுல்லக் தீட்சை ஏற்று உண்ணா நோன்பிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகை விட்டு அகன்றுவிட்டார்.

இந்த நிறுவனம்  ஸ்ரீமஹாவீரர் இலவச உறைவிடப்பள்ளி நிறுவி அனைத்து மதத்தைச் சார்ந்த அனாதைச் சிறுவர்கள், தாய் அல்லது தந்தை யற்ற குழந்தைகள், மிகவும் ஏழமை நிலையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை தந்து சேர்க்கப்படுகின்றனர். பயிலும் இளம் உள்ளங்களில் அஹிம்சை உணர்வு ஊட்டப்படுகிறது.  மாணவச் செல்வங்கள் தங்குவதற்கும், கல்வி கற்பதற்கான வகுப்பறைகளும் கட்டப்பட்டு செயல்பட்டும் வருகிறது.

கால்நடைக் காப்பகம்: வயதான மாடுகள், பசுக்கள் ஆகியவற்றை பராமரிக்க இயலாதவர்களிடமிருந்து கொண்டு வந்து இயற்கை மரணம் எய்தும் வரை அந்த ஜ்வன்கள் பாதுகாக்கப்படுகின்றது. அதனால் இறைச்சிக்காக கொல்லப்படும் பயனற்ற மாடுகள் காக்கப்படுகின்றன.

ஸ்ரீவித்யாசாகர் குருகுலம் ஒன்றும், ஆத்ம சாதனை செய்ய விரும்பும் சிறுவர்களுக்காக பள்ளிக் கல்வியுடன் அஹிம்சை தத்துவமும் போதிக்கப்படுகிறது.

மேலும் பல ஆண்டுகளாக சுருதகேவலி என்னும் தமிழ் மாத இதழ் ஒன்றும் வெளியிடப்படுகிறது. கொடையுள்ளம் கொண்ட பவ்யர்களால் இச்சாதனையை இவர்கள் புரிந்து வருகின்றார்கள்.

மேலும் ஸ்ரீஅஜித நாதருக்கான தனிஆலயம் ஒன்று இரண்டு தளங்களுடன் அமைத்துள்ளனர். கிழக்கு திசை நோக்கிய நுழை வாயிலுக்குள் கீழ் தளத்தில், சிறிய பிரார்த்தனை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளுக்கான  கூடம் ஒன்று, கருவறையின் முன்னர் அமைத்துள்ளனர். மூலவர் கரும்பளிங்குக் கல்லால் வடிக்கப்பட்டு மேடையில் அமர்த்தப்பட்டுள்ளார். அம்மேடையில் உலோகத் தினால் ஆன தீர்த்தங்கரர்கள், மற்ற விசேஷகால பூஜைக்கான படிமங்கள் வரிசையாக அலங்கரிக்கின்றன.

அதன் மேல் தளத்தில் தனி கருவறையில் ஸ்ரீஅனந்தநாதர் வெண் பளிங்கு சிலையாக நின்ற கோலத்தில் காணப்படுகிறார். அனைத்து சமண வழிபாட்டு முறைகளும் அன்மீக அன்பர்கள் தாமே செய்ய ஏதுவாக அமைத்துள்ளனர்.


அவ்வளாகத்தில் ஸ்ரீகுந்தகுந்தருடைய திருஉருவச்சிலை கரும்பளிங்குக் கல்லால் நின்ற நிலையில் வடிவமைக்கப் பட்டு உயரமான மேடையில் நிறுவப்பட்டுள்ளது.




Ponnur hill is located 8 kms from Vandavasi on the Chetpet road. Opposite of Industrial Technical Institute, few meters aside, on a village road, shri Visakachariar Thappo Nilayam was established. Inside the complex Shri Ajithanathar Jinalaya was built in several decades of year.

 A trust was formed in the name of Shri Visahachariar Education and Ahimsa propagation centre, with motto of, Ahimsa  is the only way to attain the peace in the world. Such a soundless ahimsa revolution was developed by a pavyar,  Shri Siva.Adhinathan, through his dedicated service. He is one of the disciple of Kuruvar. His holiness. Arjavasagar, Muni. But he passed away, as Shullak few years back.

The trust has run,  Shri Mahaveerar free residential school. Preferably they admit children of orphaned, having single parent and poor classes. They offered good education for them, including with food, dress and books. A well terraced Classrooms and hostels were built.

Cattle archive:  stray livestocks, Aged and no feed cattles are fed, till demise. They are safeguarded against slughter. Few numbers of bulls and cows are reared out in a shed.

Shruthakevali, a tamil monthly magazine has been published by the centre. All the expenditures incurred are met by noble donars.

Apart from, the east facing Ajithanathar temple has two storied building.  In the ground floor a black marble idols of Shri Ajithanathar in sitting posture was installed in the sanctum. Few metal idols of Thirthangars and models for other rituals were arranged on a platform.  Also a prayer hall is in front of the divine room. On the first floor a seperate shrine has Shri Ananthanathar white marble idol in the standing posture.

All rituals and prayers are conducted by the devotees itself.

There is a big black marble statue of Shri Kundkundher in the standing posture, was installed on a tall platform





No comments:

Post a Comment