Wednesday, October 8, 2014

MELAPAZHANDAI - மேலபழந்தை

Shri ADHINATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்  

Location:   lies on the Google map in the coordination of (12.65692, 79.39304) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click MELAPAZHANDAI
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : வாழைப்பந்தல் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )ROUTE:

Tindivanam → Vandavasi  → Arni road  MELAPAZHANDAI     = 70 k.m.

Gingee → Chetpet → PERANAMALLUR road    MELAPAZHANDAI  = 57 k.m.

Vandavasi → Arni road   MELAPAZHANDAI  = 32 k.m.

Arni  → Vandavasi  road     MELAPAZHANDAI  = 18 k.m.

Kanchepuram  → cheyyar   Thavasi road   MELAPAZHANDAI   = 57 k.m.செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி   சாலை  →  மேலபழந்தை    = 70 கி.மீ.

செஞ்சி சேத்பெட்→ பெரணமல்லூர்  சாலை  → அரணி சாலை → மேலபழந்தை = 57 கி.மீ.

வந்தவாசி → ஆரணி   சாலை  →  மேலபழந்தை   32கி.மீ.

ஆரணி  → மேல சேஷமங்கலம்  →   மேலபழந்தை    = 18 கி.மீ.

காஞ்சிபுரம்→ செய்யார்
சேத்பெட் சாலை → அருகாவூர் சாலை  மேலபழந்தை    =  57 கி.மீ.


 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
வந்தவாசியிலிருந்து 32 கி.மீ. தூரத்தில் வடமேற்கு திசையில் ஆரணி சாலையில் மேலும் ஒரு ஜிநாலயம் அமைந்துள்ளது. அக் கிராமம் மேலப்பழந்தையாகும். ஆலய அமைப்பை காணும் போது சென்ற நூற்றாண்டில் அமைத்துள்ளது போல் தோன்றுகிறது. கிழக்கு நோக்கிய நுழைவாயிலின் மேல் தேவக்கோட்டம் அமைத்து அதில் ஜினர் அமர்ந்த நிலையில் அமைக்கப் பட்டுள்ளார். அந்த சிறிய ஆலயத்தை சுற்றி மதிற்சுவர் அமைக்கப் பட்டுள்ளது.

ஆலயத்தின் கருவறை, மண்டப கட்டுமானம்; வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் மேல் விமானம் சீரமைக்கப்பட்டு கலசம் வைக்க தயார் நிலையில் உள்ளது. தற்போது ஆலயம் அனைத்தும் சீரமைப்பு பணி நடந்து வருவதால் மூலவர் சிலை அகற்றப் பட்டுள்ளது. எட்டு அம்சங்களும் பொருந்திய புதிய மூலவர் நிறுவப்பட உள்ளதால் தற்போதைய ஸ்ரீஆதிநாதர் கற்சிலை அர்த்த மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ளார். மேலும் சில உலோகச் சிலைகளும், ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவி போன்ற கற்சிலையும் புதிய மேடைக்காக காத்திருக்கின்றன. அதன் முன் சிறிய முக மண்டபமும் உள்ளது.

முன்னர் சற்று சிறிய மேடையில் பலிபீடம் வைக்கப்பட்டுள்ளது.   நித்ய பூஜை மற்றும் விசே பூஜைகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. ஜிநாலயம் பஞ்ச கல்யாண வைபோகத்திற்காக காத்திருக்கிறது.Melapazhandai , a village situated North east direction of Vandavasi at about 32 kms in the Arni road. A Jinalaya  was built, one century back, by reviewing the composition. East facing entry has Devakottam on the top with Thirthankar idol in sitting posture. A compound wall was raised around the corridor. The main block built in North facing.

Sanctum; the main deity idol was removed from the pedestal because renovation work is undergone. A new eight features engraved Jinar is going to be installed very soon. The old Moolnayak Shri Adhinathar, seated in the Arthamandap. Other metal idols of Thirthangars, Yaksha, Yakshi and stone idols of Shri Brahmadevar and Shri Dharmadevi were arranged on a platform.

A small Mugamandap also constructed in the front. An altar lies upon a stand. The Jinalaya is waiting for Panchakalyan festival. Then all poojas and festivals will be conduct recurrently.
No comments:

Post a Comment