Tuesday, October 7, 2014

AYILAVADI - ஆயிலவாடி


Shri ADHINATHAR  JAIN  TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
Map for Jain pilgrimage centres:   Click AYILAVADI
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : ஆயிலவாடி கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )ROUTE:

Tindivanam → Vandavasi  Arni road  AYILAVADI   = 50 k.m.

Gingee → Desur Mazhaiyurroad   vallam   AYILAVADI  = 42 k.m.

Vandavasi → Arni road   AYILAVADI = 12 k.m.

Arni  → Vandavasi  road     AYILAVADI = 31 k.m.

Chetpet  → Vandavasi road  vallam   AYILAVADI  = 26 k.m.செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி   சாலை  →  ஆயிலவாடி  = 50 கி.மீ.

செஞ்சி →  தேசூர் → மழையூர்  சாலை → வல்லம் → ஆயிலவாடி   = 42 கி.மீ.

வந்தவாசி → ஆரணி   சாலை  →  ஆயிலவாடி 12 கி.மீ.

ஆரணி  → வந்தவாசி  சாலை   ஆயிலவாடி  = 31 கி.மீ.

சேத்பட்  → 
வந்தவாசி  சாலை → வல்லம்→ ஆயிலவாடி  =  26 கி.மீ.


 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

வந்தவாசியிலிருந்து 12 கி.மீ. தெற்கே ஆரணி சாலையில் 10 கி.மீ. சென்று திரும்பினால் வருவது ஆயிலவாடி என்னும் கிராமம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமண இல்லறத்தார்கள் வாழ்ந்துள்ளனர். அருகில் உள்ள தென்சேந்தமங்கல ஜிநாலயம் சென்று வணங்கியுள்ளனர். அதன்பின் தங்கள் ஊரிலும்  200 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜிநாலயத்தை அமைத்து மகிழ்ந்துள்ளனர். (அம் மகிழ்ச்சி தற்போதும் வெளிப்படுகிறது, விருந்தினருக்கு உபசரிப்பு அளிப்பதிலிருந்து)

அவ்வூரில் வசிக்கும் மக்களாலும், வெளியூரில் வசிக்கும் ஆயிலவாடி சமணர்களாலும் நன்கு பராமரிக்கப்படும் கீழ்திசை நோக்கிய இந் ஜிநாலயத்தில் ஸ்ரீஆதீஸ்வரர் மூலவராக இருந்து அருள் பாலித்து வருகிறார். வெண் பளிங்கு கல்லால் ஆன ஜெய்ப்பூரில் செய்யப்பட்ட அழகிய வடிவமுடைய கைலாயநாதர் கருவறை வேதிமேடையில் நிறுவப்பட்டுள்ளார். அதன் மேல் ஒருதளம் கொண்ட சிகரத்தில் தீர்த்தங்கரர், ரிபம், சிம்மம் சிலைகளை வடித்துள்ளனர். (அஹிம்சை சின்னமாகவும், ஸ்ரீரிபர் முதல், ஸ்ரீவர்த்தமானர் வரை என குறிக்கும் முகமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.)

சிறிய இடைநாழியை அடுத்து அர்த்த மண்டபத்தின் நடுவே உள்ள மேடையில் அன்றாட பூஜைக்குரிய தீர்த்தங்கரர், ஸ்ரீபார்ஸ்வநாதர், ஸ்ரீபாகுபலி போன்ற உலோகச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இருபுறமும் மேடையில் சமண வழிபாட்டிற்கு உரிய தீர்த்தங்கரர்கள், 24 தீர்த்தங்கரர்கள் தொகுப்பு, யக்ஷ,யக்ஷிகள், நவதேவதா, நந்தீஸ்வர தீபம், மகாமேரு, ஸ்ருதஸ்கந்தம் போன்ற உலோகச் சிலைகள் அலங்கரிக்கின்றன.

அதன் முன் அர்த்தமண்டத்தில் பாதி அளவுள்ள முகமண்டபம் உள்ளது. மேலும் ஆலய திருச்சுற்றில் பலிபீடம், செங்கல். சிமெண்டினால் கட்டப்பட்ட மனத்தூய்மைக் கம்பம் நாற்புறமும் தீர்த்தங்கரர் திருவுருவங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக சிலைகள் மேடையில் அமைக்கப்பட்டு மேற் கூரையிடப்பட்டுள்ளது.

நித்ய பூஜை, நந்தீஸ்வர தீப பூஜை, யுகாதி பூஜை, அக்ஷய திரிதியை போன்றவையும், காணும் பொங்கல் ஸ்ரீரிபநாதர் திருவீதியுலா, ஸ்ரீமாஹாவீரர் ஜெயந்தி வீதியுலா போன்றவை அந்தந்த நேரங்களில் செவ்வனே நடைபெற்று வருகிறது. Ayilavadi. a village situated 12 kms from Vandavasi towards south of Arni road. Many Jain families are living in the village several centuries ago. They built a new Jinalaya at their native 200 years ago to avoid frequent visit to the Thensenthamangalam and other near temples. They are very happy about the occasion since.

This temple is maintained well by the local and immigrated Jains of the village. Shri Adhinathar is the main deity of the east facing Jinalaya. Shri Adhinathar, white marble made statue from Jaipur is established in the vedi-platform of Sanctum. It was crowned by single stage tower with kalash. Thirthankars, Lion and bull cement made idols are exhibit on the tower, to reveal the Ahimsa principle or 24 Thirthangars from Rishbh to Varthamana.

Next to sub-sanctum, Arthamandapam consists of Metal idols of Daily pooja, Shri Parswanathar, Shri Bahubali are seated on center platform. Also main thirthangars for regular worshiping, 24 thirthankars, Yaksha, Yakshis, Navadevatha, Nandheeswara dheepam and Magameru models, and Sruthaskandam are arranged on the platforms of both sides.

At front a half size Mugamandapam was built. On the northeast of open corridor Navagraha idols are arranged on a platform. An altar and cement mortar made Manasthamp with Thirthankar engravings were on four sides.


Daily pooja, Nandheeswara pooja, Mukkudai and special poojas, and also urchav on Kanum pongal day for Shri Adhinathar and on Mahaveerar Jayanthi day with celebrations are conducted recurrently.

1 comment: