Friday, October 3, 2014

PONNUR HILL (SIMANDHRA BAHAVAN TEMPLE) - பொன்னூர் மலை (சீமந்திர பகவான் ஜினாலயம்)


Shri SIMANDHRA BAHAVAN TEMPLE  -   ஸ்ரீ சீமந்திர பகவான் ஜினாலயம்





Location  lies on the map in the coordination of (12.50155, 79.52362) put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click  Ponnur Hill
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பொன்னூர் மலை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi  → Desur road   Ponnur Hill = 45 k.m.

Gingee → Pennagar road → vedal → Desur Mazhaiyur road    Ponnur Hill = 37 k.m.

Vandavasi → chetpet road     Ponnur Hill = 9 k.m.

Villupuram → Gingee → Pennagar road →  Desur Mazhaiyur road Ponnur Hill = 77 k.m.

Chetpet  → Vandavasi road  Ponnur Hill = 20 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி  → சேத்பட் சாலை  → பொன்னூர் மலை   = 45 கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை   = 37 கி.மீ.

வந்தவாசி → சேத்பட் சாலை→ பொன்னூர் மலை  9 கி.மீ.

விழுப்புரம் செஞ்சி  வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை  = 77 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை   
→ பொன்னூர் மலை  =  20 கி.மீ.












Ponnur malai is located 9 kms from Vandavasi in the Chetpet road. There is a complex building in the Opposite side of that nilgiri hill. Inside a Jinalaya, a welfare centre with Office room, pilgrims home are there.  The Jinalaya constructed in the last century.Acharya Kundkundhar heritage centre has been running in the complex. However, it is run by North Indian jains, Arugan thathvam, a philophical tamil monthly magazine, is published from there.

Two storied building of this Jinalaya, at Ground floor Shri Simandhra baghvan is established. Living legend of Shri Simandhra baghvan, going to be a Thirthankar in near future, presently preaches the Ahimsa philosophy in our adjacent land named as Vidhega Kshethram(we are in Bharatha kshethram). Five and half feet White Marble sculpture, in the sitting posture,surrounded by well decorated glass-paneled sanctum. His life history portraits of protrude sculptures are mounted on the wall top.Totally it is a modern designed temple.

Upon the first floor another sanctum contains Shri Adhinathar, Shri Mahaveerar and Shri Simandhrar statues. All idols were in Marble stone made and arranged on a well-decorated platform closed by glass panels. Also their life history portraits of protrude sculptures are mounted on the wall top.


Daily pooja, special poojas and Jain festivals are conducted regularly. 




பொன்னூர் மலை;  இம்மலை வந்தவாசி யிலிருந்து சேத்பட் சாலையில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அந்நீலகிரி மலையின்  இறக்கத்தில் எதிற்புறம் ஒரு ஜிநாலயம் உள்ளது. ஒரு வளாகத்தினுள் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதால் தற்கால கட்டமைப்புடன் காணப்படுகின்றது. அதில் அலுவலகம், யாத்திரீகர்கள் தங்கும் விடுதி, போஜன் சாலை போன்றவை உள்ளது. தற்போது வடஇந்திய சமணர்களால் நிருவகிக்கப்படும் இந்த குந்த குந்தர் சேவை மையத்திலிருந்து அருகன் தத்துவம் என்ற தமிழ் மாத இதழ் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது விதேக க்ஷேத்திரத்தில் (நாம் இருப்பது பரத க்ஷேத்திரம்) சமவ சரணம் அமைத்து அனைத்துயிர்களுக்கும் அஹிம்சா தர்மத்தை போதித்து வரும் தற்பவ மோட்ச ஸ்வாமியான (வீடுபேறு அடைவற்கான தகுதியை பெற்றுள்ள) ஸ்ரீசீமந்திர ஸ்வாமிக்கு அமைக்கப்பட்ட ஆலயமாகும். இரு தளங்களாக அமைக்கப்பட்ட இவ்வாலத்தின் தரைத்தளத்தில், பிரம்மாண்ட மாக வடிக்கப்பட்டுள்ள(அமர்ந்த கோலத்திலேயே 5.5 அடி உயரம் உள்ள) வெண்பளிங்கு சிலை, காளை லாஞ்சனத்துடன் மேடைமீது நிறுவப்பட்டுள்ளது. கருவறையை கண்ணாடி சுவர் அமைத்து,  அதனைச்சுற்றி உள்ளே அழகிய கோலங்களுடன் அமைத்துள்ளனர். மேலும் அவரது சரித்திர நிகழ்வுகளை தளத்தை சுற்றி வண்ண புடைப்புச் சிற்பமாக அமைத்துள்ளனர்.

அதன் மேல்தளத்தில் உள்ள கருவறையும் கீழே உள்ளது போல் காணப்பட்டாலும் அதில் ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீமகாவீரர், ஸ்ரீசீமந்திர பகவான் ஆகியோரது வெண்பளிங்கு சிலைகள் வரிசையாக மேடையில் நிறுவி யுள்ளனர். அத் தளத்தில் வண்ண புடைப்பு சிற்பங்களாக ஸ்ரீரிஷபர், ஸ்ரீமாகாவீரரின் சரித்திர நிகழ்வு களையும் அமைத்துள்ளனர்.

தின பூஜைகள் மற்றும் விசேஷகால பூஜைகள் செவ்வனே இவ்வாலயத்தில் நடந்து வருகின்றது.




No comments:

Post a Comment