Map for Jain pilgrimage centres: Click Kilvillivalam
காஞ்சிபுரம்→ வந்தவாசி சாலை → சேதராகுப்பம் சாலை→ கீழ்வில்லிவலம் = 50 கி.மீ
.jpg)
கீழ்வில்லிவலம் –
On the Google map put the coordination of (12.44043,
79.62229)
வந்தவாசிக்கு தென்கிழக்கில் 9 கி.மீ. (வந்தவாசி மேல்மருவத்தூர்
சாலையில் மருதாடு என்ற ஸ்தலத்திற்கு தெற்கு திருப்பத்தில்) பயணித்தால் வருவது கீழ்வில்லிவலம்
கிராமம். அங்கு பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே அப்போது
சமணர் ஆலயம் ஒன்று இருந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போதுள்ள அவ்வாலயம் 200 வருடங்களுக்கு முன்னர் முழுவதுமாக
கட்டப்பட்டு, சில ஆண்டுக்கு முன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பல சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதால்
அதன் தொன்மைக்கான ஆதாரங்கள் ஏதும் தென் படவில்லை.
ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்த இவ்வூரில் தற்போது முப்பதுக்கும்
குறைந்தே இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் ஆலய பராமரிப்பு நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை
மற்றும் தீர்த்தங்கரர் ஜன்ம, மோட்ச தினத்திற்கு விதானம், மார்கழி முக்குடை, ஸ்ரீமகாவீரர்
ஜெயந்தி திருவீதியுலா போன்றவைகளை செவ்வனே நடத்தி வருகின்றனர் என்பதைக் கேட்ட போது இவ்வூர்
மக்களின் பெருமையை உணர முடிந்தது.
அதுவும் தீபாவளி அன்று 35 யந்திரங்களில் 35 ஜின பிம்பங்களை நிறுவி
விதானம் நடத்த முன்தினமான இன்று அதற்கான ஆயத்தப் பணிகளை திரு. சுகுமாரன் வாத்தியார்
மற்றும் திரு. ராஜேந்திரன் இருவருமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.
ஜின பக்தி மிகுந்த புனித பிரதேசம் இந்த குக்கிராமம் என்பது இவர்களது
ஆலய செயல்பாடுகளைக் காணும் போதே தெரிகிறது.
-------------
தென்திசை நோக்கிய இவ்வாலயம் ஸ்ரீமகாவீரரை மூலவராகக் கொண்டுள்ளது.
முக்குடையின் கீழ் அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்ட கற்சிலை வேதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அதன் மேற்புற விமானம் ஏகதளத்தில் சிகர கலசத்துடன், மற்றும் தனித்துவமாக, கண்டப்பகுதியிலும்
எழுதகம், கபோத வடிவத்துடன் அமைக்கப்பட்டு, நான்கு தீர்த்தங்கரர் சிலைகள் ஒவ்வொரு அடுக்கிலும் சாமரைதாரிகளுடனும் சிதைவேலைப்பாட்டுடன்
காணப்படுகிறது.
அர்த்த மண்டபத்தின் நடுவே மேடையில் தினபூஜைக்காக மகாவீரரின் வெண்பளிங்குச்சிலை
அழகாக வடிக்கப்பட்டு அமர்த்தப்பட்டுள்ளது. கீழ்ப்புறம் ஸ்ரீஆதிநாதரின் மிகப்பழமையான
சிலையொன்று மேடையில் காணப்படுகிறது. மற்றும் உலோகச்சிலைகள்; முக்கிய தீரத்தங்கரர்கள்,
முக்கிய யக்ஷ, யக்ஷிகள் மற்றும் வெண்பளிங்கு கற்சிலையில் தீர்த்தங்கரர் போன்றவை மேற்புற
மேடையை அலங்கரிக்கின்றன.
மகாமண்டபம் இருபுறமும் துவாரபாலகர் சிலைகளுடன் இரும்பு கதவுகளுடன்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சிறிய முக மண்டபமும் ஆலய திருச்சுற்றின் துவக்கத்தில்
பலிபீடம், மனத்தூய்மைக் கம்பம் கீழ்தட்டில் நான்கு தீர்த்தங்கரர் சிலைகள் சற்று புடைப்புடன்
தாமரை மலரில் அமர்ந்த கோலத்திலும், மேற்தட்டில் நால்வர் கண்ணாடி கதவுகளால் மூடப்பட்டு
சிமெண்டினால் கட்டப்பட்டு அதன்மீது அரைவட்டக் கூரையும் அமைத்துள்ளனர். நுழைவாயிலின்
கீழ்புற மண்டபத்தில் ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி சன்னதிகள் உள்ளன.
மேலும் உயரமான மதிற்சுவருடன் உள்ள திருச்சுற்றின் முடிவில் நவக்கிரக சன்னதியும், ஆலய
கிணறும் (இருக்குமிடத்தில் கச்சிதமாக) கோவில் சாஸ்திரப்படி அமைத்துள்ளனர்.
-----
இத்தலத்திற்கு மிக அருகில் சேதராக்குப்பம் மற்றும் நெல்லியாங்குளம் முதலிய ஜினாலயங்களும் உள்ளன.
The village of "Keezhvillivalam" is reached by traveling 9
km southeast of Vandavasi (taking the south turn at Marudhadu on the
Vandavasi-Melmaruvathur road). Jains have lived in this village for many
centuries, which suggests that a Jain temple must have existed here from
ancient times.
However, the present temple structure was fully built 200
years ago and was renovated a few years ago. Due to the many restoration and
restructuring works undertaken, no evidence of its original antiquity is now
visible.
The village, which once had more than fifty residents, now
appears to have fewer than thirty. Nevertheless, it is a testament to the
villagers' dedication that they successfully conduct the temple maintenance, daily worship (Nithya Puja), Nandeeshwara Puja, and special events like the Vidhānam for the Tirthankaras' birth and *moksha* days, the Margazhi
Mukkudai, and the Shri Mahavira Jayanti street procession.
On the day before Deepavali, the village was preparing to
perform a Vidhānam by installing 35 Jina images in 35 Yantras. Mr.
Sugumaran Vathiyar and Mr. Rajendran were completing the preparations for this
event. Observing the temple's activities clearly shows that this small village
is a sacred place with intense devotion to the Jinas.
***
### **Temple Architecture and Deities**
This south-facing temple has Shri Mahavira as its Mūlavar
(main deity). A granite stone idol of Mahavira, seated beneath a triple
umbrella (Mukkudai), is enshrined on the pedestal. The Vimana (tower) above the
sanctum is a single-tiered structure with a shikara kalasha (finial pot).
Uniquely, the neck section (Griva section) is adorned with Ezhuthagam and Kāpōtha
elements, and four Tirthankara idols with Chamaradhāris (fly-whisk bearers) are
carved on each tier.
In the center of the Artha Mandapa (intermediate hall), a
beautiful seated white marble idol of Mahavira is placed on a platform for
daily worship. An ancient idol of Shri Ādinātha is also found on the lower part
of the platform. The upper platform is decorated with bronze idols of important
Tirthankaras, Yakshas, Yakshinis, and other Tirthankara idols made of white
marble.
The Mahamandapa (main hall) is securely protected by iron
doors and features Dwarapālaka (guardian) idols on both sides. The small Mukha
Mandapa (front hall) marks the beginning of the temple circuit (Thiruchutru).
It houses the Balipeetam (offering altar) and the Manasthambam (pillar of
purification). The base of the pillar has four slightly embossed Tirthankara
idols seated on lotus flowers, while the top tier has four idols enclosed in
glass doors beneath a cemented semi-circular roof.
Sub-shrines for Shri Brahmadeva, Shri Dharmadevi, and Shri
Padmavati are located in the entrance hall inside the main gateway. The temple
circuit, enclosed by a high boundary wall, also features a Navagraha shrine and
a temple well, both installed precisely according to temple shastra (Dravida tradition).
***
Nearby Jinalayas (Jain temples) are also located in “setharakkuppam” and “Nelliyankulam”.
.jpg)
No comments:
Post a Comment