Wednesday, October 15, 2014

MAGARAL - மாகறல்


 Shri ADHINATHAR  JAIN  TAMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்


Map for Jain pilgrimage centres:   Click Magaral
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : மாகறல் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )


Longitude, Latitude (12.71888, 79.75387)

Taluk – Kanchipuram
District – Kanchipuram
State – TAMIL NADU
Pincode – 631603


ROUTE:

Tindivanam Vandavasi→kanchipuram road→ Uthiramerur rdMagaral   = 79 k.m.

Gingee Vandavasi→kanchipuram road→ Uthiramerur rd →Magaral       = 89 k.m.

Vandavasi→kanchipuram road→ Uthiramerur rd Magaral  = 42 k.m.

Arni  → Cheyyar→ Mamandur road   Magaral     = 63 k.m.

Kanchepuram  → Ayyankargulam turn→Magaral     = 17 k.m.செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசிகாஞ்சிபுரம்சாலை →உத்திரமேரூர் சாலை மாகறல் =79 கி.மீ.

செஞ்சி வந்தவாசிகாஞ்சிபுரம்சாலை →உத்திரமேரூர் சாலை மாகறல் = 89 கி.மீ.

வந்தவாசி → காஞ்சிபுரம் சாலை →உத்திரமேரூர் சாலை மாகறல்   = 42 .மீ.

ஆரணி  → செய்யார்    → மாமண்டூர்  →   மாகறல்    = 63கி.மீ.

காஞ்சிபுரம்
உத்திரமேரூர் சாலை  → மாகறல்   =  17 கி.மீ

தொண்டை நாட்டு சமணத்தலம்.


காஞ்சிபுரத்திலிருந்து செல்வது சுலபம். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் (வழி) ஓரிக்கை - பேருந்துப் பாதையில் 17 கி.மீ. தொலைவில் உள்ள தலம்.

செய்யாற்றின் கரையில் உள்ள ஊர். சாலையிலிருந்து 400 மீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

ஊர்ந்துவரும் பல்லியினமான உடும்புகள் அக்கிராமத்தில் புகலிடமாக கொண்டதால் (மாகறம் – உடும்புஅப்பெயர் ஏற்பட்டிருக்கிறதுஅதற்கான கர்ண பரம்பரைக் கதையும் சொல்லப்படுகிறது.

இராசேந்திரசோழனுக்குஇறைவன் பொன் உடும்பாகத் தோன்றி ஓடஅவன் துரத்தி வருவதை கண்டுஒரு எறுப்பு புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம்.

சிறிய அழகான கோயில். நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
---------------

தொன்மை:


கி.பி. 7 ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு விஜயம் செய்த சீன யாத்திரீகர்களான யுவாங், சுவாங் எனும் இரண்டையர்கள் பல்லவ ராஜ்ஜியத்தில், குறிப்பாக காஞ்சீபுரத்தையும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் சமணமும், பெளத்தமும் தழைத்தோங்கி இருந்ததாக பயணக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்லவர் ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டிருந்தபோது (கி.பி.700 – கி.பி. 900)  சமணம் மேன்மையடைந்திருந்ததால் அப்பகுதியைச் சுற்றி பல ஜினாலயங்கள் எழுப்பட்டுள்ளது.

அங்கு 10 நூற்றாண்டுகளுக்கும் முன்னதாக சமணர்களும், ஒரு ஜிநாலயமும் இருந்ததற்கு சான்றாக, அவ்வாலயத்திற்கு அக்கால அரசரிடமிருந்து மான்யம் பெற்றாகவும் தெரிகிறது.

ஆரியப்பெரும்பாக்கம் என்பது இதன் சரியான பெயர். இவ்வூர் அடிப்பட்ட அழகர் கோயிலில் மேலும் இரண்டு சமண உருவங்கள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர் மயிலை சினி. வெங்கசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வூர் திருமாகறலீஸ்வரரைத் திருஞானசம்பந்தர் தரிசிக்க வந்தபோது இங்கிருந்த சமணர் துரத்தப்பட்டனர் என்று இவ்வூர் ஐதீகம் கூறுகிறது. இதிலிருந்தே அங்கு சமணம் தழைதோங்கியிருந்ததை அறியலாம்.


--------
ஆலய உருவாக்கம்:


தற்போது சைவ, வைஷ்ணவ ஆலயங்களும் அவ்வூரை நிறைவு செய்கின்றன.

ஆனால் அக்கிராமத்தில் தற்சமயம் ஒரு சமணர் கூட வசிக்கவில்லை.

மேலும் 500 ஆண்டுகளாக, ஸ்ரீஆதி ஜினருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜிநாலயம் மிகவும் பழுதடைந்து, சிதைந்துவிட்ட நிலையில் முழுவதுமாக சரிசெய்ய முற்பட்டதின் முகமாக; ஒரு புதிய ஜிநாலயம் எழுப்பப்பட்டு சென்ற 2010 ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதிஷ்டையும் செய்துள்ளனர்.

அதன் முழுப்பொறுப்பையும் திரு. அப்பாச்சி நைனார், வெங்காரம் மற்றும் திரு. ஜீவேந்திரன், குரோம்பேட்டை, சென்னை; ஆகிய இரு பவ்யர்களும் தங்களது பொருளுதவியுடன், சிரமங்களுக்கிடையே பல ஊர்களிலிருக்கும் பக்தர்களிடமும் காணிக்கை பெற்று அப்புதிய ஜிநாலயத்தை முனைப்புடன் உருவாக்கியுள்ளார்கள். அவர்களுக்கு நாம் அனைவரும் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

ஆலய அமைப்பு:

மாகறல் ஸ்ரீரிஷ்பர் என்கிற ஸ்ரீஆதிநாதர் ஜினாலயம் அக்காலத்திய திராவிடக் கட்டிடகலையைத் தழுவி அமைக்கப் பட்டுள்ளது.

கீழ் திசை நோக்கிய இந்த ஜிநாலயத்தில் ஸ்ரீஆதிநாதர் மூலவராக வேதிகையில் நிறுவப்பட்டுள்ளார். மிகவும் பழமையான அக்கற்சிலை முப்பரிமாண உருவத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. (புடைப்பு சிற்பமாக இல்லை). அதன் அமைப்பையும், புறப்பரப்பின் அரிமானத்தையும் காணும் போது ஏறக்குறைய 500 ஆண்டுகளை கடந்த பழைய ஜினாலய வழிபாட்டில் மூலவராக இருந்த சிலையாக தோன்றுகிறது.

கருப்பகிரஹத்தின் மேல் ஏகதள விமானம் பத்ம, கலசத்துடன் அமைக்கப்பட்டு, அதன் கிரீவப் பகுதியின் நாற்திசையிலும் தீர்த்தங்கரர் சிலைகளுடன் காட்சியளிக்கிறது. ஆலய மேல் தளத்தின் நாற்புற மூலையிலும் சுதை சிம்மங்கள் அழகாக அமர்த்தப்பட்டுள்ளது.

அடுத்து அர்த்த மண்டபத்தின் உள்ளே ஸ்ரீபிரம்ம தேவர் மற்றும் ஸ்ரீதர்மதேவி கற்சிலைகள் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. சிறிய ஸ்ரீதரணேந்திரர் ஸ்ரீபத்மாவதி உலோகச் சிலைகளும் ஜிநாலயத்தை அலங்கரிக்கின்றன.

அதன் முன் ஒரு முக மண்டபமும் எழுப்பப்பட்டு, இரும்பு கதவுகளுடன் பாதுகாப்புடன் உள்ளது. அதன் மேற்பகுதியில் கோஷ்டபஞ்சரம் போன்ற மாடத்தில் அதனுள் ஜிநர் சிலையும் உள்ளது. அம்மண்டபத்தின் விளிம்பிலிருந்து கூரை தாழ்வாக இறக்கப்பட்டுள்ளது.

ஆலய கட்டுமானம் அனைத்தையும் சுற்றி நாற்புறமும்  சிமெண்ட் தளம் போடப்பட்டு வலம் வர ஏதுவாக அமைத்துள்ளனர்.

செங்கல், சிமெண்டு கட்டுமான தூணிற் பளிங்கு ஓடுகள் பதிக்கப்பட்டு, அழகிய மானஸ்தம்பம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அதன் கீழ் பகுதியின் நாற்புறமும் தீர்த்தங்கரர் உருவங்களும், மேற்புறம் ஒரு விமானமும் அமைக்கப்பட்டு அதனுள் நாற்திசையிலும் தீர்த்தங்கரர் சிலைகளுடன் நெடிதுயர்ந்து காணப்படுகிறது.

மானஸ்தம்பத்திற்கு அருகில் அழகிய பலிபீடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அவ்விரண்டிற்குமான தளவரிசையின் வடபுறம் சிறிய அபிஷேக மேடை அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச் சுவருடன் உள்ள இவ்வாலயத்தின் நுழைவாயில்; இரு இரும்புக்கதவுகளை பாதுகாப்பிற்காக அமைத்து, மேற்புறம் அலங்கார வளைவும், வளைவின் இருமருங்கிலும் காளைமாட்டு சிலைகள் வடிக்கப்பட்டு நடுவே தேவமாடத்தில் தீர்த்தங்கரர் முக்குடையுடன் காட்சியளிக்கிறார்.


சிறப்பு அம்சங்கள்:

திருவறக்கவிஞர் திரு. தோ. ஜம்புகுமாரன் அவர்கள் தமது தமிழக க்ஷேத்திரமாலை என்னும் நூலில் மாகறல் ஸ்ரீஆதிநாதர் பதிகம் ஒன்றும் பாடியுள்ளார்.

ஆர்ப்பாக்கம் உபாத்தியாயர் தினமும் சென்று அபிஷேகம், நித்ய பூஜை செய்து வருகிறார். மேலும் பல விசேஷ பூஜைகளும். வழிபாடுகளும் செவ்வனே நடந்து வருகிறது.

அவ்வாலயத்தின் அருகில் சமணர்கள் யாரும் இல்லை என்பதனால் தென்னிந்திய சமணர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்று அந்த நினைவு சின்னத்தை பாதுகாப்பது நமது கடமையாகும்.
---------------

அருகிலுள்ள ஜிநாலயங்கள் :ஆர்ப்பாக்கம் , திருப்பருத்திக் குன்றம், வெம்பாக்கம், கரந்தை, திருப்பணமூர், கூழமந்தல்


Thondai region Jain site:

Between Kanchipuram and Uthiramerur (via Orikkai) road Maagaral village situated at 12 kms distance. The village is on the bank of Cheyyar river and temple is at about 400 meters from  the main road.

The Iguana (udumpu) lizards are survived more in the place. So it was called as Maagaral village. (Maagaram = Iguana). There is an old oral story also rounding about the name of that place.


King Rajendra chola saw a golden iguana on the way which hid into an anthill when the king tried to catch it.  While demolishing the anthill, it may be noted that the size of the Shive-Linga in the tail of the creature.


Antiquity:

In his writings, Chinese traveller Hiuen Tsang mentioned the presence of a large number of Buddhists and Jains were lived in and around of Kanchipuram during his visit to the Pallava country in 7th century AD.

An ancient Jinalaya get a grant from the then King of Kanchipuram for maintaining cost of the Maagaral temple by the Jains lived in the village.

Ariyaparumpakkam is the name the place in olden times. Two Jain idols are in the Adipatta Azhagar temple.


While Thirugnanasampanthar visiting, the Jains were evacuated from the village. That is also an evidence of Jain vestiges in the place.


Formation of temple.


In the Maagaral Jain, Saiva and  Vaishnava temples were present in the Village. But there is no Jain in the place.

In the past a famous Jaina village, now that the Jain temple dedicated to Sri Rishaba deva was completely degenerated condition for a long period. Dense bushes grown over, damaged completely, this temple has more anthill. The visiting devotees take oath to renovate in good condition for worship.


Staunch devotees Sri Appachi nainar of Vangaram Village and G.Jeevendran of Chrompet, Chennai played major role in the renewal of worship in this temple. With devotion and dedication they set the goal as rebuilding the temple. If there is  a downpour they made a tour to different villages and town to mobilize funds for this renovation work. A new temple with Manasthamb was constructed  in the year 2014. And celebrate the Panchakalyan in march, 2014.


Shri Adhinathar, granite stone statue, a design of 500 years old type, is upon the plinth. It was totally engraved three dimensionaly, not like plate engraved sculptures. The Arthamandap got Shri Brahmadevar and Shrikooshmandini are arranged on either side of karpagraham way.

On the top of garpagruha a single stage Viman raised upwards with Padmam, Kalash on the peak. Four lion figures are seated diagonally on the corner of the terrace.

Two small metal idols of shri Dharanendar  and Shri Padmavathy devi are stored inside the karpagraha. And a muhamandap also in front of arthamandap secured with steel gates.

Front top of Arthamandap a model of Koshtapancharam’ gallery got Sri Jinar mortar statue in sitting posture. A paved corridor circumference the temple structure.
After the block a brick work tiled Manasthamp pillar were erected and an altar on a platform in Open place. All are fenced by a wall around temple whole block corridor.

East arched entranceway was decorated by a small gallery on the top with a Thirthangar statue and two bulls, each on either side.All the important Pooja, rituals and festivals are conducted regularly at the appropriate time in the Jinalaya of all aspects. The priest, Arpakkam Vathiar,  doing the daily puja and other rituals of the temple Gods.

The great tamil poet, Thiruvarakavignar thiru Thou. Jambukumar write a  pathigam poetry favour to the Maagaral Lord Shri Adhinadhar.

We must visit to the temple of no Jains village frequently while we are on the way to place.
---------------------


மாகறல்  ஜிநாலயத்திற்கு அருகிலுள்ள ஜிநாலயங்கள் :
ஆர்ப்பாக்கம் , திருப்பருத்திக் குன்றம், வெம்பாக்கம், கரந்தை, திருப்பணமூர், கூழமந்தல்

------------- 

No comments:

Post a Comment