Friday, October 3, 2014

PONNUR HILL (Shri Adhinathar temple) - பொன்னூர் மலை (ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம்)


Shri ADHINATHAR  JAIN  TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம் 






Location  lies on the map in the coordination of (12.50155, 79.52362) put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click  Ponnur Hill
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பொன்னூர் மலை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi  → Desur road   Ponnur Hill = 45 k.m.

Gingee → Pennagar road → vedal → Desur Mazhaiyur road    Ponnur Hill = 37 k.m.

Vandavasi → chetpet road     Ponnur Hill = 9 k.m.

Villupuram → Gingee → Pennagar road →  Desur Mazhaiyur road Ponnur Hill = 77 k.m.

Chetpet  → Vandavasi road  Ponnur Hill = 20 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வந்தவாசி  → சேத்பட் சாலை  → பொன்னூர் மலை   = 45 கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை   = 37 கி.மீ.

வந்தவாசி → சேத்பட் சாலை→ பொன்னூர் மலை  9 கி.மீ.

விழுப்புரம் செஞ்சி  வெடால் → தேசூர் →மழையூர் சாலை→ பொன்னூர் மலை  = 77 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை   
→ பொன்னூர் மலை  =  20 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





Ponnur hill, a village situated 9 Kms from Vandavasi on the chetpet road. Opposite to the Nilgiri hill and western side of Shri simanthara baghavan Jinalaya, a complex building comprises a Saint house (Yethi Bhavan) and pilgrims’ rest house for the use of those who are visited the holy place. It was founded by charity contributor Jangampoondi Shri.Shridhar nainar  in the year 1952. A  Jinalaya is also inside the compass.

A beautiful white marble stone Shri Adhinathar idol, in sitting posture embraces the sanctum. Adjacent to sanctum a conical shape marble structure comprises 1008 Thirthankar idols called Sahasra koot chaityalayam,unique idol, was established,  a white marble idol of $hri Chandranathar shrine, and Shri Parswanathar marble idol shrine, three white marble idols of Shri Neminathar, Baghavan Bahubali and Shri Santhinathar shrine were built. All are arranged safely in a grilled chamber. On the southern side a big model of Nandheeswara Dheep jinalayas was pillared as per the layout cited in the puranas.

Rest rooms, bhojan shala and a yethi bhavan are constructed inside the complex.

Daily pooja and Special poojas on festivals are celebrated regularly.


பொன்னூர் மலை: வந்தவாசியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் சேத்பட் சாலையில் அமைந்துள்ள குன்று. அதன் எதிரே உள்ள ஸ்ரீசீமந்திர பகவான் ஆலயத்திற்கு மேற்கு பகுதியில் அறக் கொடையாளர் ஜெங்கம் பூண்டி திரு. ஸ்ரீதர் நைனார் அவர்களால் 1952ம் ஆண்டு தோற்று விக்கப்பட்ட வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அதில் ஒரு ஜிநாலயம், யதி பவன், மாணவர் விடுதி, யாத்திரீகர்கள் தங்கும் விடுதி ஆகியன அமைக்கப் பட்டுள்ளது. 

வெள்ளை நிற சலவைக்கல்லால் ஆன ஸ்ரீஆதிநாதரை மூலவராகக் கொண்டுள்ள ஆலயத்தில், மேலும் சலவைக்கல்லால் செய்யப்பட்ட சகஸ்ர கூட சைத்யாலயம் கூம்பு வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது, அடுத்து ஸ்ரீசந்திரப்பிரப வெள்ளை சலவைக்கல் சிலை சன்னதி, ஸ்ரீபார்ஸ்வநாதர் சன்னதி, மற்றும் ஸ்ரீநேமிநாதர், பகவான் பாகுபலி, ஸ்ரீசாந்திநாதர் சலவைக்கல் சிலைகளின் சன்னதி வரிசையாக இரும்புகம்பி கதவிடப்பட்ட அறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தென்புறம் ஸ்ரீநந்தீஸ்வர தீப ஆலயங்களின் மாதிரி வடிவம் அழகாக சற்று பெரிய அளவில் ஓர் அறையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாலயத்தில் நித்ய நியமங்கள் அனைத்தும் தினமும், மற்றும் விசே நாட்களில் நடைபெற்று வருகின்றது.





No comments:

Post a Comment