Showing posts with label VELLORE DT. Show all posts
Showing posts with label VELLORE DT. Show all posts

Friday, March 20, 2015

KAVANOOR (Arakonam)- காவனூர் (அரக்கோணம்)



RUINED Shri Parshwanathar Jain Temple 

சிதிலமடைந்த ஸ்ரீபார்ஸ்வநாதர் ஜிநாலயம்.






Location:

lies on the Google map in the coordination of (13.10689, 79.69349) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click for KAVANOOR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  காவனூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-

Tindivanam → Vandavasi → Kanchipuram → Arakkonam → Kavanoor = 112 kms.

chennai(Koyampedu) → Arakkonam → Kavanoor = 77 kms.

Vellore → Arcot → Arakkonam → Kavanoor = 81 kms.

Tiruvannamalai  → Arani → Arcot → Arakkonam → Kavanoor = 146 kms.


செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → காஞ்சிபுரம் → அரக்கோணம் → காவனூர்  = 112 கி.மீ.

சென்னை(கோயம்பேடு) →  அரக்கோணம் → காவனூர்  = 77 கி.மீ.

வேலூர் → ஆர்க்காடு → அரக்கோணம் → காவனூர்  = 81 கி.மீ.

திருவண்ணாமலை  → ஆர்க்காடு → அரக்கோணம் → காவனூர்  = 146 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


காவனூர் என்னும் சமணத் திருத்தலம் அரக்கோணம் அருகில் வடதிசையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சமணம் தழைத்தோங்கி இருந்தமைக்குச் சான்றாக காலச் சூழலில் சிதிலமடைந்த ஒரு ஜிநாலயம் உள்ளது. முழுமையாக இருந்து தற்போது முன் பகுதிகள் அழிந்து கருவறை மற்றும் உள்ளாலை மட்டும் தனித்து நிற்கிறது. ஏனெனில் அதன் நுழைவாயிலின் நிலை அளவு சிறியதாய் உள்ளதால், அர்த்தமண்டபம் முன்னர் இருந்திருக்க வேண்டும் என்பது திண்ணமாகிறது.  மேல் விமானம் முழுவதும் வீழ்ந்து விட்ட நிலையில் பிரஸ்தர பகுதியில் உள்ள உத்திரங்கள் மட்டும் விழாமல் உள்ளன. அனைத்து காரைகளும் ஜீரணித்த நிலையில் வெறும் கருங்கற்களை அடுக்கி வைத்தது போல் காட்சியளிக்கிறது. அதனைச் சுற்றிலும் உள்ள விஸ்தாரமான நிலமும் தற்போது வெற்றிடமாக உள்ளது.

ஆலய அமைப்பு மற்றும் அதில் உள்ள கருங்கற்களைக் காணும் போது கி.பி. 7ம் நூற்றாண்டிற்கு பின் உள்ளதாக தோன்றுகிறது. அதற்கு முன் அப் பிரதேசங்களில் மண், சுதை, மரம் முதலியன மட்டுமே கட்டுமானத்திற்கு உபயோகித்துள்ளனர். ஒரு ஜிநாலயம் கட்ட ஊரில் குடியேறி மூன்று தலைமுறையேனும் பொருள் ஈட்டியிருக்க வேண்டும். அதனை நோக்குங்கால் அப்பிரதேசத்தில் கி.பி.6ம் நூற்றாண்டிற்கு முன்னரே சமணக் குடும்பங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு சமணர் கூட (பட்டின பிரவேசத்தினால்) இல்லை.  ........


Kavanoor is one of the Jain heritage centre and located 3 kms north from near Arakonam town. There is a degenerated Jinalaya in the Village, which reveals the place is more glorious in ancient years. Many Jains had been living in yesteryears. But at present there is no Jains in the village. The remnants consist of Garbahriha with narrow entry passage. So the old arthamandap and other pavilions were demolished and taken away. The crowned Viman also removed except the base beems. The wall granite blocks are separated by no bonding mortar. But luckily the non-structure layout portion of Jinalaya is vacant now. 

The sand stone structure influences that the temple belongs post period of 7th Century AD. Before that mud soil, lime, sand and wood were used for constructions. The village Jains might be lived in 6th Century AD or earlier. Only the descedents of origin were construct the temple. Unfortunately no Jains population is here.  ..........




அந்த ஜிநாலயத்தின் மூலவரான ஸ்ரீபார்ஸ்வ ஜிநரின் சிலையை அவ்வூர் மக்கள் பாதுகாப்பாக அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கருகில், பின்னம் ஏற்படாமல் இருக்க கவிழ்ந்த நிலையில் வைத்துள்ளனர். நின்ற நிலையில் உள்ள அப்பெருமான் தலைக்கு மேல் ஐந்து தலைநாகம் படம் விரித்த நிலையில் பிரபா வட்டமும், இருபுறம் சாமரையை தூக்கிய நிலையில் உள்ள தேவர்களுடன் காட்சியளிக்கிறார். சிலை முழுவதுமாக மிகவும் அரித்துபோன நிலையில் உள்ளது (வழவழப்பு செய்ய முடியும்). அவருக்கு மேடையும் கூரையும் அமைப்பதற்கு ஆர்வமாகவும், அதன் பாதுகாவலராகவும் உள்ள திரு.கோவிந்தாஜன் (தையற் கடை உரிமையாளர்), என்ற அன்பர் முன்பிறவியில் சமணராக இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

தற்போது இதுபோன்று அழிந்து வரும் சிலைகள், ஆலயங்களை சீரமைப்பதில் பல சமண இயக்கங்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி பொருள் உதவி செய்து அந்த இடத்தில் நூதன ஜிநாலயம் அமைத்து அப்பெருமானை பிரதிஷ்டை செய்வார்கள் என நம்புவோமாக. வாழ்க அவர்களது திருத்தொண்டு!


தொடர்புக்கு: திரு. R. கோவிந்தராஜன்   +91 9047877274



The good-hearted people of the village preserve the Moolavar Idol of Shri Parshwanathar in overturn position, to avoiding damage, to the adjacent of nearby Perumal temple. The stone plate carvings exhibits five-headed snake canopy, two whisk devars in raising posture, a prabha circle on the back of head are itched. A noble care-taker Shri R.Govindarajan, Tailorin shop owner, proposed to construct a podium and shelter to the Lord. (He might be a Jain in his previous birth)

The interested individuals (Bavyars)/association of abandoned Jinar statues and ruined Jinalayas, must unit and taken a decision to construct a New temple to the Legends in the same places. That is our wish and prayer.

For contact: R. Govindarajan - +91 9047877274








 அன்பர்திரு. R. கோவிந்தாஜன், (தையற் கடை உரிமையாளர்)

Thursday, March 19, 2015

ARUNGULAM - அருங்குளம்


Shri Dharumanathar Jain Temple  -  ஸ்ரீதர்மநாதர் ஜினாலயம்



Location:


lies on the Google map in the coordination of (13.23029, 79.67325) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click for Arungulam
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  அருங்குளம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-



Tindivanam → Vandavasi → Kanchipuram →Tiruthani → Chennai salai = 132 kms.



chennai(Koyampedu) → Tiruthani road → Arungulam = 74 kms.



Vellore → Arcot → sholingur → Tiruthani → Chennai salai = 87 kms.


Tiruvannamalai  → Arani → Arcot → sholingur → Tiruthani → Chennai salai = 152 kms.




செல்வழி:-


திண்டிவனம் → வந்தவாசி  → காஞ்சிபுரம் → திருத்தணி → சென்னை சாலை → அருங்குளம்  = 132 கி.மீ.



சென்னை(கோயம்பேடு) →  திருத்தணி சாலை → அருங்குளம்  =74கி.மீ.



வேலூர் → ஆர்க்காடு → திருத்தணி → சென்னை சாலை → அருங்குளம்  = 87 கி.மீ.


திருவண்ணாமலை  → ஆர்க்காடு → திருத்தணி → சென்னை சாலை → அருங்குளம்  = 152 கி.மீ.





ஓம் ஹ்ரீம் ஸ்ரீ தர்ம தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து ரத்தினபுர நகரத்து குரு வம்சத்து பானு   மகாராஜாவிற்கும்  சுப்ரபா  தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், பொன் வண்ணரும்   45 வில் உயரம் உடையவரும் பரம ஒளதாரிக தேகத்தை உடையவரும் 10 லட்சம் வருடம் ஆயுள் உடையவரும் வஜ்ராயுதம்  லாஞ்சனத்தை உடையவரும் கின்னர யக்ஷன் மானஸி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும்   ஹரிசேனராதி முதலிய 43 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் ஜ்யேஷ்ட சுக்ல  சதுர்த்தியில் 29 கோடாகோடி 19 கோடி 9 லட்சத்து 9 ஆயிரத்து 795  முனிவர்களுடன் சுதத்தவர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ தர்ம தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


Arungulam a Jinalaya village ,with one Jain family, situated 54 kms from Kanchipuram town towards north. (After reaching Tiruthani take a drive towards Chennai road we will get Arungulam). In the yesteryears more Jains were lived in the village and they construct a Jinalya for dedicate to Shri Dharumanathar. Ancient time the ruler of the region forced to convert all the jains to other religion. Since from 9th century AD the (original Jains) converted families were safeguarded the temple in good manner. We know with the reference of sthala puran the temple was constructed in the period of Tholamozhi devar, author of epic Sulamani.

The speciality of the temple is, it has two corridors, one is closed around the Arthamandapam and secondly the sunlight is directly hit the main deity for three days in the month of Palguna.   ..........


 காஞ்சிபுரத்திலிருந்து 54 கி.மீ. தொலைவில் திருத்தணிசென்னை சாலையில் பயணித்தால் வருவது சமண ஜிநாலயம் உள்ள அருங்குளம் கிராமம்.  பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு அத்தாட்சியாக கி.பி. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு ஸ்ரீதருமநாத ஜிநருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் தற்போதும் உள்ளது.  அக்காலத்தில் அப்பகுதியை ஆண்ட மன்னன் சமணத்திலிருந்து பிற மதத்திற்கு மாறும் படி செய்துள்ளான்.  இருப்பினும் அக்காலத்திலிருந்து இவ்வாலயத்தை மட்டும் ஜைன பரம்பரையில் வந்து பிற மதம் தழுவியவர்கள் அதனை பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது அக் கிராமத்தில் ஒரு உபாத்தியாயர் குடும்பம் மட்டும் உள்ளது. அதன் தொன்மையைக் காண: முற்காலத்தில் சூளாமணியை எழுதிய ஆசிரியர் தோலாமொழித்தேவர் குறிப்பிட்டுள்ளதை கொண்டு ஆராய்ந்தால் (ஸ்தல புராணத்தில் உள்ளது) கி.பி. 9ம் நூற்றாண்டின் ஆரம்பமாக கொள்ளலாம்.

அத்தலத்தில் இரண்டு சிறப்புகள் உண்டு. ஒன்று அர்த்தமண்டபத்தை சுற்றி கூரையுடன் கூடிய உட்பிரகாரமும்,(வெளியே திறந்த பிரகாரம் உள்ளது.) ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் இரண்டு நாட்களும், தக்ஷிணாயன காலத்தில் ஒருநாளும் அவ்வாலய மூலவர் மேல் சூரிய கதிர்கள் விழும் படியும் கட்டப்பட்டுள்ளது.



The vedi block contains Garbhagriha, Arthamandap, inner corridor, Mugamandap, open corridor and fortified walls with East entranceway (Kudagarai). On the sanctum plinth Shri Dharumanatha Jinar granite plate carving with samavasaran Jinar features of throne, whisk maids, prabha circle, tri-umbrella and peepal tree are exhibits. Right side of main deity an idol of Chadurmuhi also seated on the plinth. All metal idols are preserved on either side platforms.

 The Sanctum is crowned by three tier viman. The bottom tier of the viman consists of four Jinars in standing postures on each direction. On the west side shri Parshwanathar suthai statue is flanked by Rev. Achanandhi Muni and a shullak. The centre and top tiers got four Jinar suthai idols in sitting posture are exhibits. The structure influences the chola temple art having Shala, Karnakoot, Nasi, Mahanasi, shikara padmam and kalash. Behind the Garbahriha a granite idol of shri Parshwanathar also installed inside a devamadam.   ......


அவ்வாலயம் சோழர்  காலத்திய கலைப்பாணியில் கருவறை, அர்த்த மண்டபம், உட்பிரகாரம், முக மண்டபம், வெளிப்பிரகாரம், பலிபீடம், சுற்று சுவருடன் கூடிய குடவரை போன்ற அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீதர்மநாதரின் கற்பலகையில் செதுக்கப்பட்ட கற்சிலை வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதில் அவர் அமைதியான முகத்துடன் சிங்காதனத்தில் அமர்ந்த நிலையுடனும், சமவசரண ஜிநரின் அம்சங்களான இருபுற சாமரை தேவர்களுடன், தலைக்கு பின்புறம் பிரபை வட்டம், பிண்டி மரத்துடன் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அருகே சதுர்முகி கற்சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. வேதிகையின் இருபுறமும் உலோக சிலைகளான முக்கிய வழிபாட்டிற்கான ஜிநர்கள், யக்ஷ, யக்ஷியர்கள் மேடையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கருவறைக்கு மேல் மூன்று அடுக்கு விமானம் சிகர பத்ம கலசத்துடன் காட்சி யளிக்கிறது. அதன் கீழ் தளத்தின் நாற் திசையிலும் நின்ற நிலையில் ஜிநர் சுதைச் சிற்பங்கள்  உள்ளன. மேற்திசையில் உள்ள ஸ்ரீபார்ஸ்வ ஜிநரின் இருபுறமும் அச்சணந்தி முனிவர் உருவமும், சுல்லக் துறவியின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த அடுக்கிலும், மேலுள்ள கிரீவப்பகுதியிலும் நாற்திசையிலும் ஜிநரின் உருவ சிற்பங்கள் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு பின்புறம் ஸ்ரீபார்ஸ்வநாதரின் கற்சிலை தேவமாடத்தில் நிறவப்பட்டுள்ளது. உட்பிரகாரத்தில் ஸ்தல விருக்ஷமான மகிழ (மனோரஞ்சிதம்) மரம் அழகாக வளர்ந்து மணம் பரப்புகிறது.





Before sanctum, in the arthamandap the daily pooja Jinar stone idol and some Yakshi alloy made idols are placed for doing rituals. Mukkudai illumination structure vertically covered around the daily pooja podium.

Front mugamandap has rounded pillars with valutes of ancient design (the same in Kovilampoondi and Arni poondi). On the southern side got Shri Brahmadevar shrine with three sculptures and the northern side got Shri Dharmadevi of three sculptures were established.

The circuitous corridor has two altars at front and gardens with flower shrubs on both sides.

The poojas, rituals and festivals are conducted regularly. A definite visit by the passersby might safeguard the treasure for future.

Contact No. Shri D. Nagakumar +919382163302

                                       --------------

ஆலயத்தின் அர்த்த மணடபத்தில் உள்ள தினபூஜை மேடையில் நித்ய பூஜைக்கான தரும தீர்த்தங்கரர் கற்சிலை ஒன்றும் அருகில் அச்சணந்தி மாமுனிவரின் நினைவாக கற்பீடம்  ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அதனைச்சுற்றி உயரமான முக்குடை விளக்குச் சரமும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தின் முக மண்டத்தின் தென்பகுதியில் ஸ்ரீபிரம்மதேவரின் மூன்று கற்சிலைகள் வெவ்வேறு அளவுகளில் மேடையில் நிறுவப்பட்டுள்ளன. அதே போன்று ஸ்ரீதர்மதேவியின் மூன்று கற்சிலைகள் வடபகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

வேதிப்பகுதியை அடுத்து திருச்சுற்று இரு பலிபீடங்களுடன், நந்தவனம் பூஜைக்கான பூச்செடிகளுடன் காட்சியளிக்கின்றன. மேலும் குடவரை தாண்டிய பின் உழவர் பெருமக்கள் பொன்னேர் பூட்டும் தினத்தன்று பூஜை செய்வதற்கான அம்மன் போன்ற சிற்பம் ஏர்கலப்பை உருவத்துடன் கற்தூண் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து ஜிநாலயங்களில் நடைபெறும் பூஜைகளும், வழிபாடுகளும், பண்டிகைகளும், விழாக்களும் வளமை போல் நடைபெற்று வருகிறது.

அத்திசையில் பயணம் செல்லும் அன்பர்கள் அடிக்கடி சென்று வந்தால் அக்கோவில் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருப்பது திண்ணமே.

தொடர்புக்கு: திரு. நாககுமார் உபாத்தியாயர்  +919382163302