Tuesday, April 5, 2016

VADANBAILU - வடான்பைலு (வளையல் பத்மாவதி)

Shri Parshwanathar Jinalaya -  ஸ்ரீபார்ஸ்வநாதர் ஜிநாலயம்






Location: lies in the coordination of (14.21309, 74.76548).

click for map  put on the search box the above figure.

While travelling fix your location and to destination as (14.21309, 74.76548).



Bangaluru → Tumkuru → Arsikere → Banavara → Bhadravati → Shimoga → sagar → Jog falls route → Vadanbail = 390 Kms.

Mysore → Srirangapatna → Chennapatna → Arsikere → Banavara → Bhadravati → Shimoga → sagar → Jog falls route → Vadanbail = 358 Kms.



Important: 5 Kms before reaching the spot, we must took Check-post pass from Karnataka Power Corporation Limited for visiting the place.


முக்கியமானது: வதான்பெயில் செல்வதற்கு 5 கி.மீ. முன்பாக கர்நாடக மின்பகிர்மான கழகத்தின் அலுவலகத்தில் செக் போஸ்ட் அனுமதி சீட்டு வாங்க வேண்டும்.

******************************************* 







Siddhagiri Vadanbailu:



Away from city, the place is situated in the lap of mother nature. The holy place is in the midst of forest is the source of extraordinary happiness. No pollution zone, the pure air is endowed with healing power and is helpful in meditation as well. It is a good place for prayer, when Muni Shri Devanandhiji on 2010 visited and named as Siddagiri Kshetra.

Hebbailu ( perbailu) : Vijayanagara empire is well known in the history of Karnataka. He donated the place to Chandappa  Nayaka,  the first Keladi ruler. Before 10th century hebbailu was a Jaina centre. Padmavathi temple in bebbailu was a place of miracle. Once the place was to be submerged by river sharavati due to Liganamakki dam breached. So the idol of Shri Padmavathi madha was transferred to Vadanbailu. At present the image is surrounded by a large anthill.

Shri  Parshwanatha temple:  There is beautiful temple dedicated to Lord Parshwanath Jinar, by Shri Devandrakritiji the Bhattaraka of Hombuja mutt in the year 2007.  Worship and anointment is conducted daily.  shri Padmavathi devi also established under the foot of shri Parwanathar.


ஹும்புஜம் ஆடிவெள்ளிஅன்று திவ்ய தரிசனத்தை முடித்துக் கொண்டு திருப்தியுடன் பகல் 12 மணியை நெருங்கும் வேளையில் வடான்பைல் பத்மாவதி தரிசனம் வேண்டி புறப்பட்டோம். இன்னும் 95 கி.மீ பயணிக்க வேண்டும். அதன் பின்னர் அங்கிருந்து ஜெருசோப்பா சதுர்முக பஸ்தி, ஸ்ரீபார்ஸ்வநாதர் (மன்னை) ஸ்ரீஜ்வாலாமாலினியின் முற்கால யதாஸ்தானத்தை காண ஓர் விழைவு. பலமுறை கர்நாடகா வந்திருந்தும் அம்பாளை தரிசிக்க வாய்ப்பில்லை. அவ்விடம் செல்வதற்குள்  இருளாகி விட்டால்; பயணம் செல்வது கடினம் என்று அடிக்கடிச் செல்லும் காஞ்சி திரு. ஜீவகன், டூர் கிங் திரு. விஜயன் போன்றோர் வேறு எச்சரிக்கை செய்திருந்தனர். அதேசமயம் ஒருவாகனமே செல்ல வசதியான மலைப்பாதை; இருப்பினும் வேகத்தை குறைக்காமல் சற்று வேகமாகவே ஓட்டுநர் வேனை (van) ஓட்டிச் சென்றார்


ஹும்புஜம், சாகர், தலகொப்பா, ஜோக்பால்ஸ் வழியாக சென்றோம். கடைசியாக வதான்பெயில் செல்வதற்கு 5 கி.மீ. முன்பாக கர்நாடக மின்பகிர்மான கழகத்தின் அலுவலகத்தில் (Karnataka State Power corporation Ltd.)  செக் போஸ்ட் அனுமதி சீட்டு வாங்க வேண்டும். (முன்னர் ஒருமுறை சென்றுள்ளதால் தெரியும்) அந்த அலுவலகத்தில் எங்களது அடையாள அட்டையை அலுவலர் பரிசீலித்த பின்னர்  அனுமதி சீட்டை வழங்கினார். அதனை அரை கி.மீ. தொலைவில் வரும் சோதனைச்சாவடியில் காட்டி அனுமதி பெற்றபின் அந்தப்பாதையிலேயே நான்கு கி மீ. பயணம் செய்ததும் வடான்பைல் எனும் வளையல் ஸ்ரீ பத்மாவதி அம்மன் ஜினாலயத்தை அடைந்தோம்.


சற்று உயரமான  இடத்தில் வேனை நிறுத்திவிட்டு இறங்கியதால் அங்கிருந்து அவ்வாலயம் காண்பதற்கு வெகு அழகாக, வண்ண மயமாக தோற்றமளித்தது. செல்லும்  பாதையில் நுழைவுக்கதவிற்கான வேலையும் நடந்து கொண்டிருந்தது.  தற்போது  முன்புறம் சுற்றுச் சுவர் கட்டப்பட்டிருந்தது.

வழக்கம்போல் ஆலயத்தின் 30 அடி உயரமான மனத்தூய்மைக்கம்பம் எங்களை தரிசனத்திற்காக வரவேற்றது.


சித்தகிரி க்ஷேத்ரமான வடான்பெய்ல் நகரத்து வேளியே இயற்கை அன்னையின் அரவணைப்பில், மலை வனப் பிரதேசத்தில், ரம்மியமான இடத்தில் அமைந்துள்ளது. மாசில்லா காற்றும், அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி களமாகவும், தியானத்திற்கேற்ற அமைதியும் ஒருங்கேயமைந்த ஸ்தலமாகும்.


அதனால் 2010 ல் அவ்விடத்திற்கு விஜயம் செய்த முனிமகராஜ் தேவநந்தி அத்தலத்திற்கு சித்தகிரி க்ஷேத்ரம் என பெயரிட்டுள்ளார்.


ஹேபைலு (பர்பெயிலு): கர்நாடக சரித்திரத்தில் முக்கிய இடமளித்த விஜயநகர பேரரசு, கெலாடி வம்ச அரசர் சந்தப்ப நாயக்கருக்கு பரிசளித்த பூமியில் ஒன்றாகும். பத்தாம் நூற்றாண்டுகளில் சமணம் தழைத்த பகுதியாக இருந்தது. சாராவதி நதி பெருக்கெடுப்பினால் லிகனாமக்கி அணை உடைப்பெடுத்து வெள்ளம் வந்ததால் ஹேபைலு ஊரில் இருந்த ஜிநாலயமும் அடித்துச் செல்லப்பட்டது. அங்கே குடிகொண்டிருந்த ஸ்ரீபத்மாவதி மாதா வடான்பைலுக்கு மாற்றப்பட்டது. தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டபின் அதனைச் சுற்றி எறும்புப்புற்று சூழந்துவிட்டது.















Naga temple: There is huge Naga image, Yaksha Dharanendra installed on a plinth. It is of 91 inch tall established in the year 2010. Those who had nagadosha should circumbulate 108 times the temple and anoint 11 liters of milk to avert it.  

Moolasthan of Devi: The image of Padmavathi madha from Hebbailu is lying on the self evolved anthill. The whole anthill is covered by bangles offered by devotees after their wish fulfilled. Friday and full moon day are special worship day in the temple. The goddess always bless to avert troubles of devotees.

Kshetrapala shrine with black stone statue in standing posture is installed there. 


Specialty of the temple is the four face of goddess in Karnataka. Experience of many that the Prasad of Anthill (soil of anthill) is able to cure many diseases, called as Huttada prasada.

ஸ்ரீபார்ஸ்வ ஜிநர் ஆலயம்:  ஹும்புஜம் மடாதிபதி ஸ்ரீதேவந்திர கீர்த்தி பட்டாரகர் அவர்கள் ஆசியுடன் 2007 ம் ஆண்டு ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஆலயம் உருவாக்கப்பட்டு வேதிகையில் வெண்நிற சலவைக்கல்லால் ஆன சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. அவர் பாதங்களில் ஸ்ரீபத்மாவதி தேவியின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. தினமும் இருவேளை அபிஷேக தீபாராதனை நடைபெற்று வருகிறது.

நாகர் ஆலயம்: ஆலயத்தின் வலது புறம் ஸ்ரீதரணேந்திர யக்ஷ 91 அங்குல பிரம்மாண்டமான நாக வடிவ சிலையொன்று 2010ம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் அவ்வாலத்தை 108 முறை வலம் வந்து 11 லி. பால் அபிஷேகம் செய்தால் அத்தோஷம் விலகும் என நம்பிக்கையுள்ளது.


க்ஷேத்ர பாலகர்க்கான தனியாலமும், அங்கு கருமை நிறக்கல்லால் ஆன சிலையொன்றும் நிறுவப்பட்டுள்ளது.


ஸ்ரீபத்மாவதி தேவி மூலஸ்தானம்: ஹேபைலுவிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்ரீஅம்மன் சிலை நிறுவப்பட்ட இடத்தைச்சுற்றி எறும்பு புற்று தோன்றியுள்ளது. அதன் நடுவில் தெரியும் தேவியைச் சுற்றி வளையல் அலங்காரம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வேண்டுகோளுக்கு கிணங்க வெள்ளிக்கிழமையும், பெளர்ணமி அன்றும் விஷேச பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீஅம்மன் அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்.


கர்நாடகத்தில் நான்முக அம்மன் தரிசனமாக கட்டப்பட்டுள்ள ஒரு விசேஷமான ஒரு ஆலயமாகும். ஸ்ரீஅம்மனைச் சுற்றியுள்ள புற்று மணலை பிரசாதமாக பக்தர்கள் பல நோய்தீர்க்கும் மருந்தாக பெற்றுச் செல்கின்றனர். ஹுட்டாடா பிரசாதா என மதிப்புடன் அழைக்கின்றனர்.



அங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டபிறகு, ஆலயத்திலுள்ள கடையில்  ஜபசரம், கயிறு போன்றவற்றை வாங்கியதும் பொழுது மாலை 3 மணியை நெருங்கி விட்டது.  அதைக் கண்டதும், அதிகநேரம் அமர்ந்து அங்குள்ள இயற்கைக் காட்சியை ரசிக்க முடியாமல் ஜெருசோப்பாவை நோக்கி பயணத்தை துவக்க வேண்டியிருந்தது.










***************************************

Photos taken on 27.07.2018 day visit























************************



A huge Shri Parshwanatha Statue going to be established near soon.



































































3 comments: