Monday, April 11, 2016

KARKALA - கார்காளா


BAGHAVAN BAHUBALI -  பகவான் பாகுபலி 
Location: with latitude, longitude of (13.20401, 75.00606 )

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.20401, 75.00606 )


Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Belthangady   Aladangady   Bajagoli   Karkal   = 365 Kms.


Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Belthangady   Aladangady   Bajagoli   Karkal  = 305 Kms.
ஷீர்லாலிருந்து புறப்பட்டு கார்காளா வந்தடைந்தோம். வழியில் ஒரு உணவுவிடுதியில் மாலை உணவை  எடுத்துக் கொண்டு, சதுர்முக பஸ்திக்கு சென்றோம்.

மாலை 6.30 மணி ஆகியிருந்தது. ஆனால் பண்டிட்ஜி ஆலயத்தை மூடிவிட்டு முனிமகராஜ் பிரவசனத்தை கேட்க சென்று விட்டார். அருகிலுள்ள மடவளாகத்தில் உபதேசமொழி கேட்டுக் கொண்டிருந்தது.

உடன் கார்காளா வின் சிறப்பை பறைசாற்றிக் கொண்டிருக்கும் பகவான் பாகுபலி சிலை நிற்கும் மலைக் கோவிலுக்கு சென்றோம் ஆனால் இருட்டி விட்டது. 150 படிகளைக் கொண்ட அதன் மேற்தளத்தை  அடைந்த போது, ஆலயம் மூடப்பட  உள்ளதாக தகவல் வந்தது. பிரம்மஸ்தம்பத்தை வணங்கி விட்டு; உள்ளே செல்லும் போது பாதுகாவலர் சீக்கிரம் வந்து விடுங்கள் மூடப்போகிறேன் என்று தான் சொல்லியிருப்பார்; புரிந்தது போல தலை  ஆட்டிவிட்டு நிமிர்ந்தபோது அழகான 42 அடியுயர ஒரே கல்லில் ஆன நிர்வாண கோலத்தில் நிற்கும் பகவான் பாகுபலியின் பிரம்மாண்ட உருவம் குறைவான வெளிச்சத்தில் தெரிந்தது.

அவசர அவசரமாக இருவரும் அருகிற் சென்று வணங்கினோம். ஒரு தீபம் மட்டும் எரிந்து கோண்டிருந்தது. ஆஜானுபாகுவான தோற்றத்தை ஆங்காங்கே தெரிந்த  வானத்திலிருந்த நட்சத்திரங்கள் ஒளியிட்டு காட்டிக் கொண்டிருந்தன.  பலமுறை விஜயம் செய்து மனதில் படிந்துள்ள அவர் உருவத்தை திரையில் கொண்டுவந்ததால், எதிரே தெரிந்த நிஜ உருவத்தின் அம்சங்கள் தெளிவாக தெரிந்தன.

சற்று அமர்ந்தபோது பாதுகாவலரின் கூக்குரலின் அழைப்பு மணி, உடன் எழுந்து வாயிலைக் கடந்தோம். அவரும் அந்த பிரவசனத்திற்கு செல்வார் போலுள்ளது. கிழே இறங்கிய போது 7.30 மணியை கடந்திருந்தது.

சகோதரர்கள் வாங்கி வைத்திருந்த கடலையை வாங்கி அசை போட்ட படியே வேனை நெருங்கினோம். (அரை அடி நீளமிருந்தாலும் 60 கடலைபருப்புகள் கூட இல்லை அப்பொட்டலத்தில், திடீர் என  தீர்ந்துவிட்டது.)
*******************


Karkala located at the bottom of Western Ghats covered with greenery around the year, was the capital of Jain rulers belonging to bhairava dynasty. The town was called Pandya Nagari during the period of Jain rule, and later became known as Karikallu , ie abandon of black stone, then Karkal and finally to Karkala .கார்காளா ஸ்தலம்….


ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட, சரியாக 41.5 அடியுயர பகவான் பாகுபலி கற்சிலை, உடுப்பி ஜில்லா, கார்காளா நகரத்தில் ஒரு சிறு குன்றின்மீது 1432 ம் ஆண்டு இதனைத் தலைநகராக  கொண்ட  மன்னன் வீரபைரவ பாண்டவர்; கார்காளா சமண மடத்தின் மதகுருவான தவத்திரு லிலிதகீர்த்தி மடாதிபதி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் இச்சிலையை உருவாக்கியுள்ளார். அப்புனித சிலைக்கு எதிரே அமைந்துள்ள பிரம்மதேவ ஸ்தம்பம் 1436ம் ஆண்டு அம்மன்னரே நிறுவியுள்ளார்.

அக்காலத்தில் இப்பகுதியில் ஜைனம் தழைத்தோங்கி இருந்துள்ளது.

கடந்த 586 ஆண்டுகளாக பாகுபலி பகவான் அம்மலைமீது நின்று  கொல்லாமை, பற்றின்மை, தியாகம், அமைதி போன்ற குணங்களை உபதேசித்து  வருகிறார். அம்மாஹா தபஸ்விக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரவண பெலகொளா போன்றே மஹா மஸ்தகாபிஷேகம் என்னும் புனித அபிஷேகவிழா; பால்,கந்தம், கல்கசூர்ணா, மஞ்சள்நீர், கரும்புச்சாறு, இத்தியாதி பூஜை வஸ்துக்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கடந்த 2015 பிப்ரவரி மாதமும் நடைந்தேறியதை ஊடகங்கள் வழியே அறிந்திருப்போம்.

மன்மதன் என்றழைக்கப்படும் பாகுபலியின் உருவத்தில் வண்ணக்கலவையாக அபிஷேகம் செய்வதை பார்த்தால் எவ்வளவு அழகாக தோன்றும் என்பதை சொல்லவும் வேண்டுமோ…

மேலும் பல ஜினாலயங்களைக் கொண்ட ஸ்தலம். இரண்டு சதுர்முக ஜினாலயங்கள் உள்ளன. ஒன்று 52 அடியுயர மானஸ்தம்பத்துடன் அனிகெரே எனும் ஏரிக்கரையிலும், மற்றொன்று குன்றின்மீதுமாக  உள்ளன. 

மேலும் 13 ஜினாலயங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.


-----------------------------------------------  

These benevolent rulers have built more than 18 ancient stone structured Jain temples. These temples include two magnificent Chathurmukha temples, one situated on a hill top and the other one is the midst of a 25 acres spread lake called Anekere. The 52 feet tall monolith Manasthanbha is sculptured on all its four sides.அந்த ஜினாலயங்கள் காலை 9 மணி வரைதான் திறந்திருக்கும் என்பதால் காணச் செல்லவில்லை.

அதனால் எங்களது வேன் அருகிலுள்ள நல்லூர் பஸ்தியை காண பஜகோலி வழியாக செல்ல புறப்பட்டது. வழியில் அத்தலத்திலுள்ள சமவசரணத்தின்  அமைப்பை வர்ணித்தபடியே இரவு 8.05 மணியளவில் சென்றடைந்தோம்.


King Veera Pandya, at the insistence of his Guru Lalitakeerti, the pontiff of Karkala Jaina Math, installed 41.5 feet large statue of Bhagawan Bahubali on the rocky hill of Karkala. The date of the installation has been ascertained as February 13, 1432. This is the icon of the town. Veera Pandya also installed the Brahmadeva Pillar in front of the statue in 1436.


கார்காளா சமண மடத்தின் மதகுருவான தவத்திரு லிலிதகீர்த்தி மடாதிபதி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் வீரபாண்டிய மன்னன் 41.5 அடி உயர பகவான் பாகுபலியின் பிரம்மாண்டமான சிலையினை 1432 ம் ஆண்டு நிறுவியுள்ளார். அவ்வூரின் அப்புனித சிலைக்கு எதிரே அமைந்துள்ள பிரம்மதேவ ஸ்தம்பம் 1436ம் ஆண்டு அம்மன்னரே நிறுவியுள்ளார்.


This idol of Shri.Bhagavan Bahubali Swami is emanating the glorious massage of non-violence, nonmaterialism, sacrifies, peace and tranquility to the world. The 582 years old Shri Bahubali statue is annointed (Mahamasthakabhisheka) every twelve years by the devotees of Bhagavan Bahubali Swami and members of Jain community. The last Mahamasthakabhisheka was between January 21st to January 31st 2015.பகவான் பாகுபலி சிலையாக நின்றாலும் அஹிம்சை, பொருட்பற்றின்மை, தியாகம், சாமாதானம், அமைதி போன்ற உன்னத செய்திகளை உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார். 582 ஆண்டைக்கடந்த ஸ்ரீபாகுபலிநாதருக்கு அவரது பக்தர்களும், சமணப் பெருமக்களும் ஒன்று கூடி 12 ஆண்டுகளுக்கு முறை அபிஷேகம் செய்கின்றனர். அதனை மஹாமஸ்தகாபிஷேகம் என கொண்டாடுகின்றனர். கடைசியாக 2015, ஜனவரி 21-31 வரை அந்த வைபோகம் நிறைவேற்றப்பட்டது.The beautiful sight of Bhagavan Bahubali idol being anointed with various elements like milk, Gandha, Chandana, Calkachurna , turmeric liquid, Sugarcane Juice, etc. during Mahamasthakabhisheka is an ever memorable event. The devotees immerse in the emotional and spirtual ocean in the presence of glorious idol of Bahubali. Shri Bhagavan Bahubali is called Manmatha in jain tradition. This lord of beauty is seen in his most beautiful form during Mahamasthakabhisheka.  


பால், கந்தம், சந்தனம், கல்கசூர்ணம், மஞ்சள் நீர், கரும்புச் சாறு, மற்றும் பல புனிதப் பொருள்களால் அப்பகவான் சிலைக்கு மஹாமஸ்தகாபிஷேகம் செய்யும் நிகழ்வுகள்   கண்கொள்ளாத காட்சியாக மனதைவிட்டு நீங்காத நிகழ்ச்சியாக இருக்கும். அந்த அபிஷேக நிகழ்வுகளின் போது,  மன்மதன் என பக்தர்களால் அழைக்கப் படும் அப்பெருமான் பல அழகிய வண்ணங்களில் காட்சியளித்து அனைவரையும் பரவசப்படுத்துவார் என்றால் மிகையாகாது.

******************

No comments:

Post a Comment