Friday, August 31, 2018

VENUR - வேனூர்


BAGHAWAN BAHUBALI  -  பகவான் பாகுபலி  




It lies on the Google map in  coordination of (13.0134, 75.14381)


-------------------------------------------------------

வினைகளை வென்று விடுதலைப் பேற்றை பெற்ற தீர்த்தங்கரர்கள் அறுநால்வரில் கடைசி ஆப்தர் மஹாவீரர் தென்பாரதம் நோக்கி வந்த போது ஜைனம் கர்நாடகத்தில் முளை விட்டிருந்தது. பின்னர் தீர்க்கத்தரிசி மஹாதுறவி ஆச்சார்ய பத்ரபாகு, சந்திரகுப்தருடன் வடதேச பஞ்சத்தினை கருத்தில் கொண்டு,  தென்னகம் வந்து சரவணபெளிகுளத்தில்  தங்கியதால் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில்  தழைத்தோங்கி வளர்ந்தது.

பிற்காலத்தில் இந்து சமயத்தின் தாக்கம் அதிகரிக்கும் போது குறைந்து பட்டாலும் பெரும்பாலான புனித ஜைன க்ஷேத்ரங்கள் அப்படியே இன்றளவும் வளர்ந்து வருவதை காணலாம்.

அதில் வேனூர் சமணத்தலமும் ஒன்றாகும்…

----------------------------------------------- 

வேனூர்

ஞாயிறு காலை 10.15 மணியளவில்; மூடுபத்திரையில் சில ஜினாலயங்கள் மூடியிருந்தது நீங்கலாக மற்றவற்றை தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து வேனூர் நோக்கி பயணித்தோம்.


தக்ஷிண கன்னடா ஜில்லா, பெல்தங்காடி தாலுக்காவில் அமைந்துள்ள வேனூர் எனும் ஜைனத்தலம் தர்மஸ்தலா சாலையில் 22 கி.மீ பயணித்தை கடக்கும் போது வந்தடைந்தது. பிரதான சாலையிலிருந்து இடது புறம் திரும்பி 100 மீ.  சென்றதும் பகவான் பாகுபலியில் நெடிய சிலையின் தலைப்பகுதி  தெரிந்ததும் வேனை நிறுத்திவிட்டு இறங்கினோம்.


முன் வாசல் வழியாக நுழைந்த போது 38 அடியுயர கோமதீஸ்வரர் சிலை பிரம்மாண்டமாக,  தனிக்கல்லில் செதுக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. மானஸ்தம்பத்தை கண்டபோது மான கஷாயம் நீங்குவது போல அவரைப் பார்த்த போது நானே பெரியவன் என்ற உணர்வு காணாமல் போயிருந்தது. அதனால் தானோ இவர் ஆலயங்களுக்கு மானஸ்தம்பம் எழுப்பாமல் பிரம்ம ஸ்தம்பம் நிறுத்தி வருகின்றனர்.


பால்குனி நதிக்கரையில் அமைந்த இந்த வேனூர், முற்காலத்தில் அஜிலப் பேரரசின் தலைநகராக இருந்துள்ளதென வரலாறு பகர்கின்றது. இம்மன்னர்களில் மிகப் பிரபல்யமானவரும், சாமுண்டராயரின் நேரடி பரம்பரையில் வந்தவருமான  திம்மண்ணா பேரரசர், ஒரே கல்லில் செதுக்கி பேருருவாக நிற்கும் பகவான் பாகுபலியை 1604 AD ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது.


அஜிலப் பேரரசு 1154 -1786 வரை இப்பகுதி முழுவதையும் ஆண்ட போது சரவணபெளிகுளா, கார்காளா, வேனூர் போன்ற இடங்களில் பகவான் பாகுபலியின் பேருருக்களை அடுத்தடுத்து கட்டியதில்  இவ்வூர் பாகுபலி உருவமே சற்று சிறியதாகும். இதன் பின்னர் தர்மஸ்தலாவில் இருப்பவர் இன்னும் சிறிய உருவத்தைக் கொண்டிருந்தாலும் இரண்டும் ஒரே கல்வகையைச் சார்ந்தது  என்பதை பார்த்தாலே புரிந்து விடும். இப்போதும் அவர் வம்சத்தினரான டாக்டர் பத்மபிரசாத் அஜிலா என்பவர் அத்தலத்தில் வாழ்ந்து வருகிறார்.


38 அடியுயர பாகுபலி சிலையை ஒரே கல்லில் செதுக்கி நிறுவியவர் அமரசிற்பி ஜகநாச்சாரி என்ற கலைஞர் ஆவார். அவ்வரலாறு நிகழ்வை அங்குள்ள கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. சுற்றுக் சுவருக்கு நடுவே உயரமான மேடையில் கம்பீரமாக பகவான் கார்காளாபோன்றே காட்சி தருகிறார். சாம்பல் பழுப்பு நிறத்தில் நீண்ட பட்டையான ரேகைகளைக் கொண்ட ஒரே கருங்கல்லில் உருவாக்கப்பட்ட இச்சிலைக்கு மஹாமஸ்தகாபிஷேகம் பிப்ரவரி  மாதம் 2012ல் நடைந்தேறியுள்ளது. அடுத்து பன்னிராண்டில் நடைபெறும் என்பது முற்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் வரலாற்றுக் குறிப்பு பகர்கின்றது.

வெளியே பிரம்மஸ்தம்பம் உச்சியில் ஸ்ரீ பிரம்மதேவர் சிலையுடன் அழகாக காட்சியளிக்கிறது.  

























Venur
is a small town in Dakshina Kannada District of Karnataka state situated on the bank of river Phalguni. Venur though a small town was once a great seat of Jainism. It was the capital of the Ajila Dynasty and one of the most prominent Kings of them Thimmanna Ajila built a colossus of Gommateshwara 38 feet high in 1604 AD. He was a direct descendant of Chamundaraya, who built one at Shravanabelagola. The Kings of Ajila Dynasty ruled here from 1154 AD to 1786 AD. The current descendant of the Ajila Dynasty is Thimmnnarasa Dr. Padmaprasad Ajila.

Bhagawan Bahubali also known as Lord Gomateshwara. The single rock statue is 38 feet in height is supposed to have been sculptured by Amarashilpi Jakanachari. The statue stands facing westward on a high platform on the banks of the river Phalguni. This statue of Bahubali is one of the five giant monoliths (of the same Jain monk) found in Karnataka, which are more than 20 feet in height.[4] (the others being at Shravanabelagola, Karkala and Dharmasthala and Gommatagiri). It also stands in an enclosure, on the same pattern as that of Shravanabelagola.

The last mahamastakabhisheka or the head anointing ceremony of the statue (typical of all the four Bahubali statues) was held in the year 2000. The second mahamastakabhisheka of this century held from 28 January 2012 to 5 February 2012 under the guidance of Acharya Vidyananda. It was inaugurated by D.V.Sadananda Gowda, the then Chief Minister of Karnataka.

-----------------------------------------------------------------

நுழைவாயிலின் உட்புறம் இருபுறமும் இரண்டு ஸ்ரீ சாந்திநாதர் சிற்றாலயங்கள்  உள்ளன.

வலதுபுறத்தில் உலோகத்தினாலான 3 அடி உயர ஸ்ரீ சாந்திநாத  ஜினரின் சிலை வெண்கல பிரபாவளி மற்றும் குமிழ் படிச்சட்டகளுக்கிடையே நிறுவப்பட்டுள்ளன. மேலும் கீழேயுள்ள மேடையில் 24 ஜினர்கள் தொகுப்பும், பார்ஸ்வ ஜினரின் உலோகம் மற்றும் கருங்கல் சிலையும், ஸ்ரீ பத்மாவதி மாதா உலோகச்சிலை அலங்காரத்துடனும் காணப்படுகின்றன.

இவ்வாலயம் அஜிலா மன்னனின் மஹாராணி அக்கன்களா என்பரால் சமகாலத்தில் கட்டப்பட்டது.

மேலும் அதே சமயத்தில் பின்னானி எனும் மற்றொரு மஹாராணியரால் இடதுபுறம் கட்டப்பட்ட சிற்றாலயத்தில் வெளிர்சிவந்த சலவைக்கல்லால் ஆன ஸ்ரீ சாந்திநாதரின் 2.5 அடியுயர சிலை வெண்கல பிரபாவளியுடன் காட்சியளிக்கிறது.

----------------------------------------------- 











Seven beautiful temples are here to be viewed with the 35 feet high colossus of Gommateshwara Bahubali. Two out of them were completed simultaneously with the Gommateshwara by the Queens of King Ajila known as Akkangala Basadi and Binnani Basadi.

There is an attractive idol of Lord Chandraprabhu carved in flat rock installed in Akkangala Basadi and in Binnani Basadi a very beautiful bronze idol of Lord Shantinath Swami is worth being seen. Both the temples are situated in either sides of Gommateshwara.

*****************************************************

Shri Parshwanathar basadi  -  ஸ்ரீ பார்ஸ்வநாதர் பஸ்தி

பகவான் பாகுபலி நெடிய சிலையின் பின்புறம் ஸ்ரீபார்ஸ்வநாதரின்  பஸ்தி ஒன்று அழகாக கட்டப்பட்டு நல்ல பராமரிப்பிலும் உள்ளது.

குடவரை, முகமண்டபம், நவரங்க, சுகநாசி மற்றும் கர்ப்பகுடியுடன் காணப்படும் இவ்வாலத்தில் பஞ்சலோகத்தினால் ஆன 3.5 அடியுயர பார்ஸ்வநாதர் சிலை 9 தலை பனாமுடி பாம்புடனும், குமிழ் குமிழான படிச்சட்டத்துடனும் காணப்படுகிறது.

மேலும் சுகநாசி மேடையில் ஸ்ருதஸ்கந்தம், சித்தபரமேஷ்டி, 24 தீர்த்தங்கரர்கள் தொகுதி, பாகுபலி பகவான், விருஷபநாதர் போன்ற சிலைகளுடன் ஸ்ரீ பத்மாவதி தேவியின் சிலை அலங்காரத்துடன் காட்சியளிக்கிறது.

வெளியே முகமண்டபத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் சிலை  கருங்கல்லில் அழகாக செதுக்கப்பட்டு கண்ணைக் கவரும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.

திருச்சுற்றில் ஸ்ரீபிரம்மதேவரின் குதிரை வாகனத்துடனான கருங்கற்சிலையும், கீழே நாகாவும் தனிச்சன்னதியாக கட்டப்பட்டுள்ளன.

அங்குள்ள திருச்சுற்றை சுற்றும் போது பாகுபலிநாதரின் பின்புற தரிசனம் அழகாக கிடைக்கிறது.

தங்கும் வசதிகள் இருந்தாலும், தேநீர் அருந்தியதும் அத்தலத்தை விட்டு 11.30 மணியளவில் தர்மஸ்தலா நோக்கி புறப்பட்டோம்.

----------------------------------------------- 























 





Near situated in a separate enclosure with the principal deity Lord Parsvanath, a beautiful bronze idol of 4 feet high is installed. It has prabavali arch on its back. In the platform of suganasi Sruthaskanth, Siddha idol, 24 jinar cluster and parswanathar also seated. Shri Padmavathy matha  bronze idol in full decoration also  seated along with these idols.  


This temple was reconstructed by Poojya Bhattarakaji of Moodbidri. 

------------------------------------

யாத்ரி நாவாஸ் -  Yatri nivas