Monday, August 6, 2018

Gubbi shri Adhinath Digamber jain temple


shri Adhinath Digamber jain temple 

ஸ்ரீ ஆதிநாதர் திகம்பர் ஜினாலயம்

The place lies in the Coordination of (13.30696, 76.94558) set your navigator for

26-07-2018
வியாழன்

10.20 மணியளவில் யாத்ரி நிவாஸ் மேலாளரிடம் அறைத் திறவுகோலை ஒப்படைத்து விட்டு, மந்தாரகிரி மலைப்பிரதேசத்தை விட்டு பசியுடன்  உணவுவிடுதி நோக்கி புறப்பட்டோம். தும்க்கூர் புறவழச்சாலையில் காலை உணவை முடித்துக் கொண்டு புனே சாலையில் 18 கி.மீ. பயணத்திற்கு பின்னர் குப்பி எனும் சமணத்தலத்தை 11.30 மணியளவில் வந்தடைந்தோம்.

ஸ்ரீ ஆதிநாத் திகம்பர் ஜைன் மந்திர், குப்பி
பிரதான  சாலையிலிருந்து 500 மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஜினாலயத்தின் 25 அடியுயர  அழகிய மானஸ்தம் கண்ணில் தென்பட்டது. அழகிய மேற்புற விமானத்தில் ஆதிநாதர் அமர்ந்த கோலத்தில் இருந்தார். சுற்றுச் சுவருடன்  இணைக்கப்பட்ட நுழைவாயில் இரும்புத்தட்டித் திறந்து சென்றால் அருகருகே மூன்று ஜினாலயங்கள் உள்ளன. மேலும் தியாகிநிவாஸும், பண்டிட் இல்லமும் பின்பகுதில் உள்ளது.


ஸ்ரீ ஆதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரதானமாக நடுவில் அமைந்த ஜினாலயம் 5 ஏப்ரல் 1934 ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. கருவறை, அர்த்த மண்டம் இரண்டும் சேர்ந்த ஒரு சதுர கட்டமைப்பில் முதலில் இருந்துள்ளது. பின்னர் முக மண்டபம் போன்ற ஒரு கட்டமைப்பு சேர்க்கப்பட்டது போன்றுளது. கருவறையில் விமானம் ஏதும் தென்படவில்லை. (ஏனோ கட்டப்படவில்லை). மண்டப மேல் முகப்பு விளிம்பில் சாலைபோன்ற வடிவில் மாடம் அமைத்து அதில்  தீர்த்தங்கரர் சுதை சிலையை வைத்துள்ளனர். இருபுறமும் சிங்க உருவங்கள் அலங்கரிக்கின்றன.


மூலவராக வெண்பளிங்குக்கல் இரண்டி உயர ஸ்ரீ ஆதிநாதர் திருவுருவம் அமர்ந்த நிலையில் தாமரைவடிவ மேடையில் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது. அருகில் மிகப்பழமையான, 1.5 அடி உயர பார்ஸ்வ ஜினரின் கற்சிலை பிரபாவளி, சாமரை தேவர்களுடன் காட்சி தருகிறார்.


நந்தீஸ்வர ஆஷ்டானிக பருவமாதலால் அதற்குரிய பித்தளை வடிவம் நடுவில் வைக்கப்பட்டு  பூஜை  நிறைவேற்றப்பட்டிருந்தது. அருகில் மேரு வடிவில் நாற்புறமும் பக்கத்திற்கு நான்காக  பொருத்தப்பட்ட ஐம்பொன் சிலையும் இருந்தது. (அதன்  விபரம்  கேட்டும் புரியவில்லை.)


பிரார்த்தனையை  முடித்து விட்டு வெளியேறியதும் கண்ணில் படுவது ஸ்ரீபிரம்மயக்ஷன் சன்னதியும், மாடியில் ஸ்ரீ சீதளநாதர் கருவறையும் வடநாட்டு நகராகலை நயத்தில் கட்டப்பட்ட பட்டை விமான கலசத்துடனான  ஜினாலய அமைப்பு. அழகான  யக்ஷன் கருங்கல் வடிவம் (ஏனோ  மீசையுடன்) கீழ் சன்னதியிலும், படிகளில்  ஏறிச் சென்றால் மேற்புறம் 2 அடி யுயர வெண்பளிங்குக்கல்  பகவான் சீதளநாதர் சிலை  மேடையில்  நிறுவப்பட்டுள்ளது. முன்பிருந்த மிகப்பழமையான கட்டிடத்தை அடியோடு அகற்றிவிட்டு, எட்டு ஆண்டுகளுக்கு  முன்னதாக புதியதாக நிர்மாணிக்கப்பட்டதாக ஆலய முக்யஸ்தர் (பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது) தெரிவித்தார்.


அங்கிருந்து காணும் போது ஆதிநாதர் ஜினாலயத்திற்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ள பகவான் பாகுபலிநாதர் ஜினாலய முகமண்டபமும், கருவறை விமானமும் தென்படும். படியிறங்கி சென்று அவ்வாலத்தை நெருங்கும் போது முகமண்டப நவீன முன்கூடத்தில் வணக்கத்திற்குரிய ஆச்சார்ய வித்யாசாகர் முனிமகராஜ் அவர்களின் சிரித்தமுகத்துடன் வரைந்த ஓவியம் வரவேற்றது. அடுத்துள்ள இருமடிப்பான இரட்டைக் கதவுகளைத் திறந்தால்; வெண்பளிங்குக்கல்லால் உருவாக்கப்பட்டு, உடலில் மாதவிக்கொடியும், முழங்கால் வரை வளர்ந்த பாம்புப்புற்றும் அது கோமடேஸ்வரர் உருவம் என்பதை காட்டிக்கொடுத்தது.


ஏழு அடியுயர பகவான் பாகுபலிச்சிலை மேடையுடன் 10 அடி உயரமாக தெரிகிறது. பின்புறம் அபிஷேகம் செய்ய வசதியாக நிரந்தர சாரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதி ஆண்டு மஹாவீரஜெயந்தி அன்று அச்சிலைக்கு மஹாமஸ்தகாபிஷேகம் வளமைபோல் நடந்து வருகிறதாம்.


அன்றைய தினம் மஹாவீரர் உருவச்சிலை ஊர்வலமாக வீதியுலாவும் ஒவ்வொருஆண்டும் நடைபெற்று வருகிறது என்ற விபரத்தை ஆலய முக்கிய தர்மாக்களில் ஒருவரான திரு. தரணேந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார்கள்.


மேலும் அடிக்கடி முனிநிவாஸில் திகம்பரமுனிகள் சிலநாட்கள் தங்கிஇருந்து  பயணத்தை தொடர்வதாகவும், அதுமட்டுமல்லாமல் ஸ்வேம்பர முனிகளும் அவ்வழியே வரும்போது தங்கி செல்வதாகவும் கூறினார். 

ஆலயத்தின் திருச்சுற்றில் மிகப்பழமையான சில  ஜின பிரதிமைகள், நடுகற்கள் போன்றவை ஒரு சிறிய மண்டபத்தில்  வைத்து அலங்கரித்துள்ளனர்.


அப்பகுதியில் 35 சமணக் குடும்பங்கள் இருப்பதாகவும், பிற மதத்தவர்கள் பலரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்வதோடு மட்டுமல்லாமல்; முத்தாய்ப்பாக பகவான்  பாகுபலி சிலையை, ராஜஸ்தானிலிருந்து பொருளுதவியுடன் தருவித்து கொடுத்துள்ளார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.


அங்கிருந்து 11.75 மணியளவில் கிளம்பி 12 கி.மீ. புனே மார்க்கத்திலுள்ள நிட்டூர் எனும் ஸ்தலத்திலுள்ள ஸ்ரீ சாந்திநாதர் புராதன ஜினாலயத்தை நோக்கி புறப்பட்டோம்…


Gubbi is situated in the Tumkur district and has got good transport facilities from Tumkur.

Gubbi Jain temple is situated about 18 km before the Tumkur town from bangalore and has an idol of Lord Adinatha. Other idols installed in the temple are Lord Bahubali and Lord Brahma Yaksha are very attractive. The construction work of the Jain temple here was completed on 5th April 1934.  It is easily accessible from the main town of Tumkur.

A 30 feet tall Manasthamba welcome when we are nearing the temple. On the top Adinatha statue in sitting posture is seated inside a mini mantap. The main temple of Shri Adinatha is in square structure mantap. On the back of the  Mantap Garbahriha Vedhi with 2 feet high white marble Rishabh Jinar in sitting posture installed 84 years before. Shri  Parwanathar 2 feet ancient statue also on the platform.

Nandeeswara Model brass structure is in the middle of  the Hall for Ashtanica rituals. A meru model brass moulded statue also there. Padmavathy matha also in front of the dias.

Next a Sheethalanath Bhagwan temple also built in near past. Already a dilapidated structure is  at the place. The demolish and built a new temple with Shri Brahmayaksha shrine at the groud floor and Bhagwan Sheethalnath shrine at the first floor.

There si Bahubali  Shrine  is also built resently with the  help of local people donation.  On of Non-Jain devotee donoted for 7 feet Marble Bahubalai statue from Rajasthan. Beautiful look of the Statue has a Mahamasthaga abishek on the occasion  of Mahaveer Jayanthi. A  Urchav for Mahaveer Statue also celebrated with procession  on the same date.

Most  of the  messages were collected from Mr. Dharanendrakumar, one of the Trustee of this Jinalaya.

After finish the Darshan at Gubbi Jain Temple , we propose to travel towards Nittur Jinalaya about 12 kms from there….

No comments:

Post a Comment