Friday, August 3, 2018

Mandaragiri, Tumkur



MANDARA GIRI JAIN HERITAGES

மந்தாரகிரி ஜைன ஆலயங்கள்










The place lies in the Coordination of (13.29867, 77.18449) set your navigator.


மந்தாரகிரி
கியாத்சந்திரா,  தும்க்கூர்.

மந்தாரகிரி பெங்களுரிலிருந்து தும்க்கூர் செல்லும் சாலையில் 60  கி.மீ. பயணத்திற்கு பின் வலதுபுறம் திரும்பியது வரவேற்கும் அலங்காரவளைவு வழியே சென்றால் தென்படும் ஜைன ஸ்தலம். முதல் நாள் இரவே அங்கிருந்த ஆலய தங்கும் விடுதியில் 10.30 அளவில் தங்கினோம். முன்பே தொடர்பு  கொண்டிருந்ததால் மழைத்தூறலிலும் இல்லத்திலிருந்து வந்து தங்கும் அறைகளின் சாவியை தந்துதவினார்.

உடன் அங்கிருந்த படுக்கைகளை விரித்து தரையில் வீழ்ந்தோம். அதிக குளிர் தெரியவில்லை. தண்ணீர் ஐஸ் வெப்பத்தில் இருந்தது.

(13 அறைகள்; நான்கு நபர்கள் வரை அனுமதி; கழிவறை இணைக்கப்பட்டவை. நாளொன்றுக்கு ரூ.300+50.  சுடுநீர் ஏற்பாடு இல்லை, உணவு பெரும்பாலும் கிடைப்பதில்லை.
தொடர்புக்கு: +91 8550036564, 9444800604, 9448379010; 
காலை 7.30 மணியளவில் ஆலயங்கள் அனுமதி)

26/07/2018
வியாழன்.

காலை 5.30 யளவில் எழுந்து  ஐஸ் தண்ணீரில் குளியல்.
7.30 மணியளவில் தரிசனம் தேடி புறப்பட்டோம்.


குறிப்பு:  மலை ஜினாலயத்திற்கு செல்லும் முன் கீழேயுள்ள பண்டிட்ஜியிடம் திறவுகோலை வாங்கிச் செல்லவேண்டும்.

பூஜை வேளையானதால் பின்னர் அவர் வந்து  சேர்ந்தார்.








The temples are spotlessly clean and very well maintained. there is no crowd – and remember to take the keys from the base when you go up (A yatri nivas with a capacity of ten rooms each has ten member accomation; No regular boarding and hot water facility. +91 8550036564, 9444800604, 9448379010 – is the caretaker). Its a nice calm serene place.

-----------------------------------------------   

சிறப்புகள்:

பஸ்தி பேடா என்ற அவ்வூர்மக்களால் அழைக்கப்படும் இத்தலம் ஜைனத்திருத்தலத்தில் முக்கியமானதாகும்.


இந்தியாவில் முதன் முதலாக 81 அடியுயர பிச்சி வடிவ குருமந்திர் திகம்பர முனிவர் ஆச்சாரிய  ஸ்ரீசாந்திசாகர்ஜி மஹராஜ்  அவர்களுக்கு  அர்ப்பணிக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது.


மேலும் முகமண்டபத்தை கடந்து  சென்றவுடன் 21 அடியுயர பளுங்குக்கல்லாலான ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் நின்ற நிலை முழு உருவச்சிலை நம்மை அண்ணாந்து பார்த்து கைகூப்பி வணங்க வைக்கிறது.


அடுத்து சிறிது தொலைவு சென்றால் சிறிய குன்றில் 435 படிகளைக் கடந்தவுடன் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு புராதனச் ஜினாலயங்கள் கடினமான கற்களால்  ஆன மதிற்சுவற்றுக்குள் காணலாம்.

----------------------------------------------- 



Mandaragiri Hills (aka Basadi Betta), Kyathsandra, Tumkur


Popularly known as Basadi betta among the locals is one of the important pilgrim centers for Jainism in Karnataka

Pinchi shaped 81 ft high Gurumandir first of its kind in Jain History declared as a Unique world record.

The Guru Mandir is dedicated to the Digambar Jain  ascetic Acharya 108 Sri Shanthinsagarji Mahara.

Shri Mukha Mantapa at the base has installed tall statue of Chandranatha Thirthankara inaugurated in 2011.

The Mandaragiri hill is a small hillock with well carved 435 steps which houses 4 ancient temples of which 2 are from 12th century and other two from 14th century.

---------------------------------------

மந்தாரகிரி மலை சந்திரப்ரபு  ஜினாலயம்

Mandaragiri Hill Chandraprabu Jinalayam









































26/07/2018
வியாழன்.

காலை 7.30 மணியளவில் தரிசனம் தேடி புறப்பட்டோம்.

குறிப்பு:  மலை ஜினாலயத்திற்கு செல்லும் முன் கீழேயுள்ள பண்டிட்ஜியிடம் திறவுகோலை வாங்கிச் செல்லவேண்டும். பூஜை வேளையானதால் அவரும் எங்களுடன்  வந்தார்.




ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த குன்று ஜினாலயம்..

சரவண பெலிகுளாவைப்போன்றே ஏறக்குறைய 430 படிகள் கொண்ட வட்டமான குன்று. சற்று சரிவாக அமைந்திருந்ததால் ஒரே எட்டில் ஏறுவதில் சிரமம் அதிகமில்லை. படிகளின் நடுவில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் பொதுவாக கைப்பிடி குழாய்கள் அமைத்திருப்பது புதியதாக, சிக்கனமாக தெரிந்தது.


மேற்சென்றதும் பெரிய சமதள பரப்பளவு. அதன் பின்பாதியளவில் ஆலய நிர்மாணம் அருமையாக அமைக்கப்பட்டிருந்தது. வலதுபுறமாக சென்றால் கிழக்கே நுழைவாயில் கதவுகளுடன் காணலாம். அறுநால்வர் தீர்ந்தங்கரர்கள் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட கருங்கல் மதிற்சுவர் கட்டுமானத்தில், முதலில் அழைப்பது சற்றொப்ப 25  அடி யுயர அழகிய மானஸ்தம்பம். அதன் கீழ்புறம் நாற்திசையிலும் நின்ற நிலை ஸ்ரீசந்திரப்ரபு நாதரின் புடைப்புச் சிலைகள் ஆனால் மேற்புறம் நாலுகால் மண்டபத்தில் அமர்ந்த  நிலையில் முழு உருவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

மானஸ்தம்பத்தின் நேர் எதிரில் கிழக்கு நோக்கிய 12ம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீ சந்திரப்ரபு நாதர் ஜினாலயம்.

----------------------------------------------- 
ஸ்ரீ சந்திரப்ரபு நாதரின் வரலாற்றுச் சுருக்கம்.


-------------------------------------------------


கருவறை வேதியில், நூற்றைம்பது வில் உயரத்தில் வாழ்ந்த ஜினரின், பிரபாஒளியுடன் கூடிய மூன்றடி உயர கருப்புக் கல்லினால் ஆன நின்ற நிலை சந்திரப்ரபுநாத தீர்த்தங்கரர் பிரதிமை நிறுவப்பட்டுள்ளது. கருவறை முன் சிறிய அர்த்த மண்டபமும், சற்று பெரிய மஹா மண்டபமும் நுழைவாயிலுடன் சுற்றிலும் அடைக்கப்பட்ட நிலையில் குகைபோன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ளது. மஹா மண்டபத்தின் மேற்கூரையில் சந்திரப்ரப புராணத்தில் கூறப்பட்ட (பண்டிட்ஜி கூறியவை) சில காட்சிகள் அழகிய புடைப்புச் சிற்பமாக தலைகீழாகக் காட்சியளிக்கின்றன.


அர்த்த மண்டப திண்ணையில் ஒருபுறம் பளுங்குக்கல்லில் வண்ணம் தீட்டப்பட்ட ஸ்ரீ தரணேந்திரரும், புராதனச்சிலை ஸ்ரீதர்மதேவியும், மறுபுறம் வண்ண பளுங்குக்கல்லில் ஸ்ரீபத்மாவதி அன்னையும், வெண்பளுங்குச் சிலை சந்திரப்ரபுநாதர் சிலையும் அமர்த்தப்பட்டுள்ளனர்.


மஹாமண்டபத்தின் நடுவில் புஞ்சமேடையும் காணப்படுகிறது. அமைதியான அக்கூடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கேயே அமர்ந்து, பெண்கள் புஞ்சத்தை வைத்துவிட்டு பிரார்த்தனைப் பாடலை பாடினர்.

கருவறைக்கு  மேல் ஏகதள விமானம் ஹொய்சளர் ஆலயகலைநுணுக்கத்தில் கலசத்துடன் காட்சியளிக்கிறது.


அதே வடிவ அமைப்பில் அடுத்த ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலயம் உருவாக்கப்பட்டு அக்கருவறையில் வெண்பளுங்குக்கல்லில் செதுக்கப்பட்ட 2 அடிஉயர ஸ்ரீ பார்ஸ்வ ஜினரின் உருவம் நிறுவப்பட்டுள்ளது. 16 ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக பண்டிட் தெரிவித்தார்.


அதன் அருகில் மற்றொரு பகவான் பார்ஸ்வநாதர் ஆலயமும் முன்போன்ற கட்டமைப்புடன் விமானத்துடன் காட்சியளிக்கிறது. அதன் மேடையில் மூன்று அடியுயர கருமைநிறக் கல்லினாலான பிரபாவளி, முக்குடை, பாம்பு வடிவத்தில் யக்ஷ, யக்ஷியர் மற்றும் சாமரைதேவருடனான பார்ஸ்வ ஜினர் நிறுவப்பட்டுள்ளார். 12ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.


கடைசியாக மற்றொரு ஸ்ரீ சந்திரப்ரபு ஜினாலயம் முன்உள்ளவை போன்றே கருவறை, அர்த்த, மஹாமண்டமும், விமான கலசத்துடனும் மற்றும் முகமண்டபம் தனியாக நிர்மணிக்கப்பட்டு தனித்தன்மையுடன் காட்சியளிக்கிறது. கருவறை மேடையில் இரண்டு அடி உயர வெண்நிற சலவைக்கலால் ஆன  ஸ்ரீ சந்திரப்ரபு நாதர் முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.


அமர்ந்து சிறிது  நேரம் பிரார்த்தித்து விட்டு வெளியே வந்தவுடன்; உட் சுவர்களில் தீர்த்தங்கரரின் பஞ்சகல்யாண நிகழ்வுகளை சித்தரிக்கும் சித்திரங்களுடன், பகவான்  மஹாவீரரின் சிங்க விலங்குகதியின் புராண காட்சியும், அவர் தவமியற்றுமிடத்தில் பசுவும், சிங்கமும் சிநேகத்துடன் காட்சியளிக்கும் சித்திரமும் அந்த மேடுபள்ளத்துடனான கருங்கல் சுவற்றில் வரையப்பட்டுள்ளன.


ஸ்ரீ மஹாவீரர் பாதம் உள்ள அறை மூடப்பட்டிருந்ததால் காண இயலவில்லை.


பிரகாரச்சுற்று முடிந்தவுடன் வெளியே வந்தவுடன் அவ்வாலயத்திற்கு மேலும்  அழகு சேர்க்கும் வண்ணம் நான்கு மூலைகளிலும் ஜின பாதங்கள் விமானத்துடன் அமைக்கப்படுள்ளதைக் கண்டு ரசிக்கலாம். அருகிலுள்ள சிறிய பாறைக்கற்களில் ஸ்ரீவிருஷப, பரத, பாகுபலி  சித்திரமும், காளை மாட்டுருவமும் வண்ணச்சித்திரமாக தீட்டப்பட்டுள்ளது.


ஆலயத்திற்கு வடக்கு பள்ளத்தாக்கு பகுதிக்கு  செல்லும் வழியில் ஒரு பெரிய பாறையில் குகையும், முன் மண்டபகும் காட்சியளிக்கின்றன. அங்கு செல்ல சரியான பாதையமைப்பு தென்படாததால் செல்ல எத்தனிக்கவில்லை.


குன்றின் உயரத்திலிருந்து நாற்புறமுள்ள பள்ளத்தாக்கு அழகினை நேரில், சென்றால் தான் ரசிக்க முடியும். அவ்வளவு அழகான பிரதேசம். மைடலா கெரெ எனும் ஏரியும், சுற்றி வெவ்வேறு தொலைவிலுள்ள மலைகளும், சிறிய  கட்டிடங்களும், ரயில் ஊர்ந்து செல்லும் பாதையும், துமுக்கூர் நகர நுழைவினையும் பார்க்க வெகு அழகாக உள்ளன.


More  photos were taken in Lanscape mode only. Such facility in camera is most useful for this hill, vallay and surrounding place.


தென்புறம் படிகளில்  இறங்க முற்படும்போது அப்பகுதியிலுள்ள பள்ளத்தாக்கில்  அமைந்த 81 அடியுயர பிச்சு மந்திரும், சந்திரப்பிரபுவின் 21 அடியுயர கம்பீரமாக நின்ற நிலை சிற்பமும் சுற்றிலும் உள்ள பூங்காவுடன் அழகாக காட்சியளித்தது. அடுத்த பத்து நிமிடத்தில் அடிவாரத்தை  அடையலாம் என தெரிந்தாலும், மேலேயே அமர்ந்து சில மணித்துளிகள் அங்குள்ள மலையும், மலையைச் சார்ந்த பள்ளத்தாக்கு பகுதியின் அழகை ரசிக்க அமரத்தான் வேண்டியுள்ளது.



இருப்பினும் கடக்க வேண்டிய பயணம் அழைப்பதால் அடிவாரம் நோக்கி இறங்கி பிச்சு மந்திரை வந்தடைந்தோம்.









 




















































Mandharagiri (Basadi betta), is a picturesque small hillock with jain temple near tumkur. Located opposite to Bangalore-Tumkur highway and 65 km away from bangalore, you can see an entrance arch in the main road stating the name 'Mandaragiri' and going by this way you can reach to a small village, Panditanahalli. Mandargiri is surrounded with boulders of many shapes and sizes, a haven for photographers.


Little distance from this place leads you to the bottom of the hill. You can park you vehicles at the bottom of Basadi Betta, and you can see a Mutt nearby.  Ensure that to get the keys of the temple from the priest in case he is not coming with you towards top.

Once you reach top of the hill after climbing 435 steps, you are welcomed by the main door of the temple. After entering the main door now you are in a huge courtyard in the midst of four temples, two temples are dedicated to Bhagawan Chandranatha and two for Parshwanatha. The idols are simple but wonderful.

Lord Chandraprabu Jinalaya was built in 12th century. In front A twenty five feet Manasthamba was stand erect with Chandraprabu Jinar bas-relief at the bottom and absolute pratima in sitting posture at the top mandap. The temple has structure of Garbahriha, Arthamandapa, mahamandabah with enclosure and entryway in East side. A single stage Vimana also decorate above the Garbahriha with Kalash. The total structure is like Hoysala temple architecture.  All other Shrine structure also as the same as the front one.


You can spend a while at Basadi Betta; rest and get pleasure from the cool breeze blowing via the many aisles of the mantapas. The far-away hills as well as the rocky landscape with small puddles present a lovely view. There is one more surprise when you open the rare door of the temple complex. You can see a beautiful lake called Mydala Kere down below the hill. The views from the top are gorgeous and so are the views from near the lake.


--------------------------------------------  



பிச்சு மந்திர் (பிஞ்சு ஜினாலயம்)

PITCHU MANDIR (PINCHU MANDIR)
















 


















சாரித்ர சக்ரவர்த்தி ஆச்சார்ய ஸ்ரீசாந்திசாகர் முனி மகராஜ் அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

அவரது சரித்திர சுருக்கம்.




அத்தலத்தில் செல்பவரின் கவனத்தை முழுவதும் திருப்பும் முகமாக அமைக்கப்பட்டது 81 அடி உயரத்தில், முனிவர்கள் தம் உடல்அசைவுகளின் போது சிறிய ஜீவன்களுக்குக்கூட தீமை உண்டாகாமல் அவற்றை பாதுகாக்க பயன்படுத்தும் மயிற்பிச்சு வடிவத்தில்  அமைத்திருப்பது அத்தலத்தின் மிகச் சிறப்பான அம்சமாகும்.


சுற்றிலும் அழகிய பூங்காவனம். நடைபாதை படிகள அனைத்தும் அவ்வடிவத்திற்கு அழகு சேர்க்கின்றன. அருகில் சென்றதும் பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் மயிலிறகு அடுக்குகள் கண்ணைக் கவர்கின்றன. அதன் கைப்பிடி அமைப்பு மேற்புறம் வளையம் உட்பட மிகச் சிறந்த கட்டிடக் கலை பொறியாளரின் நிபுணத்துவத்தை பறை சாற்றுகிறது.


சாரித்ர சக்ரவர்த்தி ஆச்சார்ய  ஸ்ரீ சாந்திசாகர் மஹராஜ் அவர்களின் வாழ்வின் சில முக்கிய நிகழ்வுக,ளை அந்த பிச்சு வடிவ ஆலயத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள புனித  கூடத்தின் சுற்றுச்சுவர் முழுவதுமாக வண்ணத்தில்  புடைப்புச்  சிற்பமாக செதுக்கியுள்ளனர். அவற்றை காணும் போது அவரது கடுமையான  விரதமும், சீலமும் நம் மனதில் தோன்றவே அவ்வேற்பாட்டினை ஆலய முக்யஸ்தினர் செய்துள்ளனர் என்பதை உணர வேண்டும்.


அமைதியான அக்கூடத்தில் அமர்ந்து தியான செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். (அவசியம் அனைவரும் ஒரு முறை விஜயம் செய்ய வேண்டும்.)


அதனை விட்டு வெளியேறியதும் நம்மை வரவேற்பது தென் புறத்தில் அமர்ந்த ஸ்ரீ சந்திரப்ரபுவின் நீண்டுஉயர்ந்த சலவைக்கல் சிலையாகும்….



-----------------------------------------------

A Pinchi shaped 81 feet Guru Mandir – the first of its kind in Jain history. The Guru mandir is dedicated to the Digambara Jain ascetic Sri Shantisagarji Maharaj. Inside the Dome coloured bas-relief lifes. It reveals the life history of the pioneer Muni Maharaj of the twentieth Century, Charithra Chakravarthy shri Santhisagar muni maharaj.



-------------------------------------------------

ஸ்ரீ சந்திரப்ரபு முகமண்டப ஜினாயம்

Shri Chandraprabu Mukamandap Jinalayam













அதற்கடுத்த பகுதியாக வேலிக்குள் அமைந்ததுள்ளது.


அழகிய முக மண்டபத்தின்  நுழைவாயில் சென்றவுடன், அண்ணாந்து பார்ப்பவர்களின்நான் எனும் அகந்தை மனதில் அழியும் வண்ணம் அமைக்கப்பட்ட மனத்தூய்மைக் கம்பம் அழகாக 25 அடிக்கும் கூடுதலான அளவில் நம்மை வரவேற்கிறது. அதனை அடுத்து தென்படுவது  ஸ்ரீ  சந்திரப்ரபு ஜினரின் உயர்ந்த உருவச் சில்லை.


நடுவில் பரந்த தாமரை வடிவ மேடையில் 21 அடி உயரத்தில் வெண்பளிங்கு கல்லில் முழு உருவமாக செதுக்கப்பட்ட பகவான் சந்திரப்ரபநாதரின் திருவுருவம் அமைதியின் வடிவமாக, சாந்தஸ்வரூபியாக, காயோத்சர்க்க கோலத்தில் காட்சி அளிக்கிறது. அருகில் சென்றால் அவரின் வலதுபுறம் ஸ்ரீஸ்யாம யக்ஷனும், இடதுபுறம் ஸ்ரீஜ்வாலாமாலினி யக்ஷியும் புடைப்பு  சிற்பமாக வடித்துள்ளனர்.

அவரின் காலடிக்கு கீழே அஹிம்சை சூழலை சித்தரிக்கும் காட்சியை சுதைபிம்பமாக அமைத்துள்ளனர். சமண முனிவர் தவமியற்றும் சூழலில் ஒன்றுக்கொண்று நேர்மறையான கொடிய விலங்கான புலியும், சாதுவான மாடும் ஒன்றாக அவர் அருகில் நிற்பது மட்டுமில்லாமல் அவற்றின் கன்றும், குட்டியும் தாய் மாறி பால் குடிப்பது போன்ற ஒரு காட்சியை உருவாக்கியுள்ளது, அவ்விடத்திற்கு மேலும் புனிதத்தை சேர்க்கிறது.

அவரை வலம் வந்து இறங்கியதும் அடிச்சுரங்கம் போன்ற ஆலய அமைப்பில் பகவான் ஆதிநாதர், சந்திரப்ரபர், பார்ஸ்வநாதர், ஸ்ரீ ஜ்வாலாமாலினி யக்ஷி போன்ற உருவச்சிலைகள் வைக்கப்பட்ட வேதிகையும் உள்ளது.



அவற்றை தரிசித்து விட்டு தங்குமிடம் வந்து உடமைகளை எடுத்துக் கொண்டு குப்பி நகர ஜினாலயம் காணவும், பசி தூண்டுதலால் காலை உணவைத் தேடி தும்க்கூர் நகரை  நோக்கிச் பயணித்தோம்.


----------------------------------------------- 


















 













The mukha mantapa next to the Pinchi has a 21 feet tall statue monolith marble stone encraved statue of  Shri Chandranatha Tirthankara. Looks similar to that of Bahubali – but smaller , was installed recently in 2011. 

At the underground of the base, there is shrine containg Shri Adhinatha, Shri Chandrprabu and Shri Jwalamalini Yakshi.



No comments:

Post a Comment