ஆச்சார்ய ஸ்ரீ சாந்திசாகர் முனி மகராஜ்
இருபதாம் நூற்றாண்டில் திகம்பர முனிதர்மத்தை வழங்கிய முதல் ஆச்சார்யர்
ஸ்ரீ சாந்திசாகர் மஹராஜ் ஆவார். வட இந்தியாவில் திகம்பர வாழ்க்கை நெறியை
மறுபடியும் துவங்க பல உபதேசங்களை வழங்கியதோடு,
அவ்வழியில் முன்முயற்சியாளராக வாழ்ந்தவரும் ஆவார்.
1873 ம் ஆண்டு கர்நாடகா பெல்காம் ஜில்லாவிலுள்ள போஜ் கிராமத்தில்
பிறந்தார். அப்போது அவரது தந்தை விவசாயமும், துணி வியாபாரமும் செய்து வந்தார். பதினெட்டு
வயது நிரம்பிய போது பல சமண ஆகமங்களை படித்ததினால் , பல சமணத்தலங்களுக்கு சென்று தரிசித்தமையினால் தனது வாழ்வை மஹாவிரர் முனி
வாழ்வுநெறியில் உறுதியோடு பயணிக்க வேட்கை கொண்டார்.
பெற்றோர்கள் அவரது 39 வது வயதில் இயற்கை எய்தினர். அவரது மனைவியும்
திருமணமான ஆறு மாதகாலத்தில் இறந்த போன வேளையில் சரவண பெலிகுளத்தை அடைந்தார். அங்கு
புராதன நேமிநாதர் சிலைக்கு முன்னர் முனிநிலையை தாமாக ஏற்றார். (தீக்ஷையை) அதற்குரிய
உறுதிமொழிகளை மனதில் நிலைநிறுத்தி தனது ஆடைகளைக் களைந்து நிர்வாண முனிவாழ்வை ஏற்கத்துணிந்தார்.
பல நூற்றாண்டுக்குப் பின்னர் திகம்பர கோலத்தில் முனி நிலையை துணிச்சலுடன், முன்னோடியாக
ஏற்ற ஒரே துறவி சாந்தி சாகர முனி மகராஜ் அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வாழ்க்கை
வரலாறு பொன்னேடுகளில் பொறிக்கக் காரணமாய் இருந்தது இந்நிகழ்வே யாகும்.
அதன் பின்னர் சாந்திசாகரா (அமைதிக்கடல்) முனி என்றே அழைக்கப்பட்டார்.
துறவு வாழ்க்கையை துவங்கியவுடன் ஆச்சார்யஸ்ரீ அவர்கள் பல கடுமையான
விரத, நியமங்களை கடைபிடித்ததோடு இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளுக்கு நடைப்பயணமாக
சென்று மஹாவீரரின் உபதேச மொழிகளை வழங்கி வந்தார். அவருக்கு பல சீடர்கள் ஏற்பட்டனர்.
அவர்கள் அவரை “சாரித்ர
சக்ரவர்த்தி” என்றே அழைத்து
வந்தனர். மேலும் “முனிராஜ்;
சீலாசிந்தி” முனிவர்களுக்கு
அரசர், சீலாச்சாரத்தின் சிகரம் என்றும் அழைக்கப்பட்டார்.
திகம்பர முனிகள் மீதான பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து உண்ண நோன்பிருந்து
எதிர்ப்பை காட்டி வந்தார்.
1920 லிருந்து உடலில் ஒரு
ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணத்துறவியாக
வாழ்ந்து காட்டி இக்கால முனி சங்கத்திற்கு
ஒரு முதன்மை முனிவராக, முன் மாதிரி விரத சீலராக விளங்கினார் எனின் மிகையாகாது.
சல்லேகனா விரதத்தினை 1955 ம் ஆண்டு ஆகஸ்டு 23 ம் நாள் ஏற்று சாகும்
வரை உண்ணாமல் இருக்க உறுதி பூண்டார். அவரது 35 ஆண்டு துறவு வாழ்க்கையின் வெற்றியாக
உண்ணாவிரத இறப்பிற்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டதை அனைவரும் வியந்து பாராட்டினர். அதுவே
பல அண்டுகளுக்கு பின் ஒரு மாமனிதர் பகவான் மஹாவீரர் கூறிய விரத நெறிமுறைப்படி சல்லேகனா
ஏற்றுக் கொண்ட முன்னோடி விரதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
தினமும் மஹாவீரரின் உபதேசங்களை மெதுவாக வழங்கியும், முக்கிய மந்திரங்களை உச்சரித்தும் வந்த அந்த உன்னத ஜீவன் ஆகஸ்டு 14 நாளிலிருந்து
செப்டம்பர் 7 ம் நாள் வரை வெறும் நீரை மட்டுமே ஆகாரமாக ஏற்று வந்த முனிபுங்கவர். பின்னர்
அந்நீர் உணவையும் துறந்தார். 1955 செப்டம்பர் 14 ம் நாள் காலை 6 மணியளவில் குந்தாலகிரி, ஓசாமாபாத், மஹாராட்ஷ்ராவில் அம்மானிதர்
தன் பூதவுடலை நீத்து புகழுடல் எய்தினார். பஞ்சானுத்தர
விமானத்தில் தேவசுகம் பெற சென்றிருக்கும் அப்பவ்ய ஜீவன் என பலரும் வணங்கி ஈமை கிரையைகளை
செய்தனர். மேலும் அவரது விரத, சீலாச்சார வாழ்வுநெறிக்கு அதற்கடுத்த மனிதப்பிறவியிலேயே
விடுதலைப் பேறு கிட்டும் என்பது திண்ணம்.
அவரே தற்போதைய அனைத்து திகம்பர முனிசங்கத்திற்கும் வழிகாட்டுதலை
வழங்கிய முன்னோடியாக, முன்முயற்சியாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Acharya Shri Shantisagar (1872 - 1955) was an Indian monk of
the Digambara school of the Jain faith. He was the first Acharya (preceptor)
and a leader of his sect in the 20th century. Shantisagar revived the teaching
and practice of traditional Digambara practices in North India.
Shantisagar's parents died in 1912. He then traveled to the
Jain holy place, Shravanabelagola, a town in Hassan district, Karnataka, India.
In 1918, whilst in Shravanabelagola, Shantisagar was lustrated into the Sangha
(holy order). He took his ailaka (religious vows) before an image of the
Tirthankara Neminatha, a famous Jain spiritual leader. In about 1920,
Shantisagar became a monk of the Digambara sect of Jainism. In 1922, at
Yarnal village, Belgaum district, Karnataka, he was given the name "Shanti
Sagara" .
Life
Shantisagar was born in either 1873 in Bhoj
village, Belgavi district Karnataka, India.His father either worked as a
farmer or was employed in the clothing business. At age eighteen, having
read religious texts and undergone several pilgrimages, Shantisagar decided to
dedicate his life to a religious order.
He preached the principles of Jainism in various parts of
India and became an Acharya. His disciples also called him "Charitra
Chakravarti" ("Emperor of good character"). He has also been
called "muniraj" ("King among Ascetics"), and
"silasindhi" ("Ocean of Observances"). He began a hunger
strike to oppose restrictions imposed on Digambara monks by the British Raj.
Death
Regarding the observance of the sallekhana vow, a Jain death
ritual, by Acharya Shantisagar, It is 23 August, 1955. On the holy mount of
Kunthalagiri, in the state of Maharashtra in India, an man of great soul called
Shantisagara (Ocean of peace) is ritually fasting to death. He is the Acharya
(spiritual leader) of the Digambara Jain community; now, after thirty-five
years as a mendicant, he is attaining his mortal end in the holy manner
prescribed by the great saint Mahavira almost 2,500 years earlier. Shantisagara
has owned nothing, not even a loincloth, since 1920. He has wandered on foot
over the length and breadth of India, receiving food offerings but once a day,
and then with only his bare hands for a bowl; he has spoken little during
daylight hours and not at all after sunset. From August 14 until September 7 he
takes only water; then, unable to drink without help, he ceases even that. At
last, fully conscious and chanting the Jain a litany, he dies in the early
morning of September 18. The holiness and propriety of his life and of the
manner of his death are widely known and admired by Jainas throughout India.
Acharya Shantisagar took last breath on 18 September 1955 at
6:50 am at Kunthalgiri, Osmanabad district, Maharashtra, India.
Thanks Wikipedia....
No comments:
Post a Comment