Thursday, July 23, 2015

ANDIMALAI - ஆண்டிமலை


ANDIMALAI  JAIN CAVERN TEMPLE -  ஆண்டிமலை சமண குகை கோவில்




Location: 

lies on the Google map in the coordination of (11.88404, 79.12465) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:  click new
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Ulundurpet → Elavasanur → Tirukovilur road → Senganankollai → Andimalai  = 125 kms.

Vandavasi → V.pettai → (mylam road) Kooteripattu → Ulundurpet →  Elavasanur → Tirukovilur road → Senganankollai → Andimalai  = 140 kms.

Tiruvannamalai  → Tirukovilur → Elavasanur road → G. ariyur → Andimalai  = 53 kms.

Tiruchy  → Chennai highway → Asanur → Elavasanur → Tirukovilur road → Senganankollai → Andimalai  = 151 kms.

Thanjavur → Kumbakonam → Ulundurpet → Elavasanur →  Tirukovilur road → Senganankollai → Andimalai  = 168 kms.

செல்வழி:-

திண்டிவனம் → உளுந்தூர்பேட்டை → எளவனாசூர் → திருக்கோவிலூர் சாலை → சேங்கனாங்கொல்லை→ ஆண்டிமலை = 125 கி.மீ.

வந்தவாசி  → வெ. பேட்டை → (மைலம் ரோடு) கூட்டேறி பட்டு →உளுந்தூர்பேட்டை → எளவனாசூர் → திருக்கோவிலூர் → சேங்கனாங்கொல்லை→ ஆண்டிமலை = 140 கி.மீ.

திருச்சி → சென்னை சாலை → அசனூர்→ எளவனாசூர் → திருக்கோவிலூர் சாலை → சேங்கனாங்கொல்லை→ ஆண்டிமலை = 53 கி.மீ.

திருவண்ணாமலை  → திருக்கோவிலூர் → எளவனாசூர் சாலை → ஜி. அரியூர் → ஆண்டிமலை = 151 கி.மீ.

தஞ்சாவூர் → கும்பகோணம் → உளுந்தூர்பேட்டை → எளவனாசூர் → திருக்கோவிலூர் சாலை → சேங்கனாங்கொல்லை→ ஆண்டிமலை = 168 கி.மீ.
      





ஸ்ரீ பாகுபலி ஸ்வாமி பூஜை

முகுர விமல கண்டம் சந்தர சங்காச துண்டம்
கஜகர புஜ தண்டம் காமதா வாக்னி குண்டம்
விநுத முனிப ஷண்டம் கோமடே ச ப்சண்டம்
குணேநிவஹ கரண்டம் நௌமி நாபேய பிண்டம்

அம்போஜ நேத்ரம் ஹரிதோரு காத்ரம்
தயா களத்ரம் வரசக்தி பாத்ரம்
பவ்யாப்ஜ மித்ரம் புவனே பவித்ரம்
நா பய புத்ரம் ப்ரணமாமி நித்யம்

ஸ்ரீ பௌத நேசம் புருதேவ சூனும்
துங்காத்மகம் துங்க குணாபி ராமம்
தேவேந்த்ர நாகேந்த்ர முனீந்த்ர வந்தயம்
ஸ்ரீ தோர்பலீசம் மஹயாமி பக்த்யா
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்.. பாகுபலி ஜினதேவ அத்ர....
--------------
மனுநாபி மன்னற்கு மகனாகி வானவர்
     மகிழ்வோங்க வந்த மாரன்
மதியேறும் எழில்சூழ்ந்த  பெளதன புரத்திற்கு 
    மன்னனாய் நின்ற தீரன்
சினமாதி முதலான காஷாயம் நான்கினால்
    சேர்வினை அட்ட வீரன் செப்பரிய தவவேள்வி சீர்பெற நடாத்தியே
    சித்தபத முற்ற சூரன்
முனிவோரும் முனைவோரும் அகலாது நின்றுமே
  முளரிபதம் போற்றி நிற்க
மூண்டுவரு வெஞ்சினைப் போரிலே தோற்றிட்ட
   முன்னவன் பரதனுக்குக்
குணமா மலைமுகடு மிசையேறி நின்றுமே
   குளிர்கருணை காட்டி நின்ற
கோமடே சன்னவன் துணைபாத புணைபற்றி

  கொடும்பவம் தாண்டு வோமே.

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்ட வரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!







































ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!































திருக்கோவிலூர் நகரிலிருந்து எளவசனார் கோட்டை சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள சோழபாண்டிபுர கிராமத்தில்,  ஆண்டிமலை என்னும் சமண பாறை சிற்பக் கோவில். கி.பி. 9 ம் நூற்றாண்டிலிருந்து சமண சமய முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக இருந்துள்ளது. அதற்கு முன்னரே பெருமளவில் அவ்வூரைச் சுற்றி சமணர்கள் வாழந்து உள்ளார்கள் என தெரிகிறது. ஆனால் தற்போது ஒரு சமணர் கூட இல்லை. பல பாறைகளின் தொகுப்பாக கொண்டுள்ள சிறிய மலையாக காட்சி யளிக்கின்றது.

அதில் சாய்வாக உள்ள இரு பாறைகள் ஒன்றோடு ஒன்று தாங்கிப் பிடித்துள்ளதால் கீழ்பகுதி குகை போன்று அமைந்துள்ளதில் சமண துறவிகள் எதிரெதிராக ஸ்ரீபாகுநாதரின் சிற்பத்தையும், ஸ்ரீபார்ஸ்வ ஜிநரின் சிற்பத்தினையும் வடித்துள்ளார்கள், மிகவும் அழகாக வடிக்கப்பட்டுள்ள அதன் பார்வையில் அமரும் வண்ணம் கீழ்பகுதியின் பின் புறம் ஸ்ரீகூஷ்மாண்டினி சிலை ஒன்றும் கற்பலகையில் செதுக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. (ஆனால் அது தற்போது அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.) மேலும் அப்பாறையில் ஒரு கல்வெட்டும் உள்ளது. அதில் கேவலி கொத்தரையர் புத்தடிகள் இக்கோவிலை அமைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ........

Andimalai is situated, in Cholapandipuram village, 12 kms from Tirukoilure towards Elavanasurkottai road. Since 9th Century AD that was an historical importance place for Jains. Before the period many Jain families had lived in and around the spot. But there is no Jain hamlet now.

Andimalai hill is a cluster of several shape rocks. The rock temple formed under two slant and top supported boulders. The Jain ascetics were carved two bas-reliefs of Shri Bahubali (son of Shri Rishabadev) and Shri Parshwa Jinar (snake hooded) on each boulder. The beautiful reliefs are encraved by Holiness.Kevali Kottharaiyar Putthadigal, who is one of the ascetics, displayed by an inscriptions itched on the rock.  ..........




இரண்டு சிற்பங்களும் 810 நூற்றாண்டின் கலைப்பாணியைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிக்கின்றனர். ஸ்ரீகூஷ்மாண்டினி யக்ஷி வடிவம் அழகாக நேர்த்தியாக இரு பெண்குழந்தைகள், பணிப்பெண், சிங்க உருவம் மற்றும் பின்புறம் கமுகமர வடிவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீஅம்மனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாறையின் உள்ளே  வைத்து வணங்கப்பட்டதால் அவ்வூர் மக்கள் காளியம்மனாக வணங்குகின்றனர். மேலும் அருகில் கிடைத்த பழைய இரு தீர்த்தங்கரர்கள் சிலைகளை தற்காலத்தில் மேடை மீது நிறுவியுள்ளனர். இரண்டும் 700 ஆண்டுகளைக் கடந்த கலைப்பாணியை கொண்டுள்ளது.  .........

Shri Koomandini stone plate carving also installed under the plain of two rocks. But it is shifted to nearby now. The ornaments wear by the goddess and the attached figures of two girl children, one servant maid, lion and arecanut tree on her back indicate that it is Shri Dharmadevi Yakshi. But the local devotees are called as Kali (Hindu goddess). All the three influence 8-10th Century AD carving type.
Apart from two Jinar stone statues are on separate podium, which was collected from nearby places. Those sculture art belongs to 13th Century AD fashion. ......
  


அப்பகுதியை கடந்து சென்றால் வழியில் ஸ்ரீபத்மாவதியின் உருவம் ஒன்றும் சிதிலமடைந்து காணப்படுகிறது.  அச்சிற்பமும் அதே தொன்மை வாய்ந்ததாக தெரிகிறது. அதனைக் கடந்து பாறை வழியே சென்றால் சில பாறைத் தொகுப்பில் அமைந்து குகையில் நீண்ட (7அடிக்கு மேல்) 6 படுக்கைகள் உள்ளன. அதனை அம்முனிவர்கள் உறைவிடமாக கொண்டிருந்தனர் என்பது புலனாகிறது. அங்கும் ஒரு பாறையின் மேற் பகுதியில்  ஒரு ஜினர் சிற்பம் அமர்ந்த நிலையில் இரு சாமரை தேவர்களுடன் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.  (ஸ்ரீமகாவீரர் என குறிப்பிடுகின்றனர்.) அச்சிற்பமும் அதே சமயத்தில் செதுக்கப்பட்டிருக்க வேண்டும்.  ....

Adjacent to the section shri Padmavathy Devi stone plate sculture also seated the way. The mutilated idol may be the age of bas-reliefs. Next, six ascetics stone beds of 8 feet and a relief on a Rock shade. A Jinar with two whisk devars named as Shri mahaveerar, beautifully encraved in sitting posture also in 8-10 Century AD. That rock shadow area also a cavern temple of andimalai.

On the way to the cave a Sasanam (charter) in poetic words. It reveals King.Sithavadan, Sethurayar heriditary, ruler of Tirukoilore offered the income of nearby village taxes.  .....




அப்பகுதிக்கு செல்லும் வழியில் ஒரு கல்வெட்டு சாசனம் பாடல் வரிகளாக செதுக்கப்பட்டுள்ளன.  அக்கோவிலின் நிர்வாகத்திற்காக அருகில் உள்ள ஒரு கிராமத்தின் வருமானத்தை தருவதாக, திருக்கோவலூரை ஆண்ட சேதுராய சிற்றரசன், சித்தவடவன், எழுதிய சாசனமாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

அழகிய அச்சுழலை தற்காலத்தில் முட் புதர்களை அகற்றி பாதைகள் அமைத்து செப்பனிட்டுள்ளனர். அச் செயலை செய்த தொண்டர் குழுவிற்கு (பெயர் தெரியவில்லை) நன்றிகள் பல. அழகிய பாறைகள் அடங்கிய ஆண்டிமலைக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது சமணர்கள் சென்று வந்தால் அக்கலைச் செல்வம் பாதுகாக்கப்படும். (இல்லையயனில் கற்துகளாகி இடம் பெயர்ந்து விடும் அபாயம் உள்ளது.)
                                    ------------


Some enthusiastic Volunteers (does’t know the names) paved the ways, fix the indications, fencing and other pantheon shelters for our convenience. Thanks to the noble hearted persons.



The lovely rocky place is vandalized now-a-days by exploding. Our frequent visit to the holy Jain monuments will safeguard the treasures. Otherwise the boulders are disappeared for granite jellys. 
                                     ------------