Wednesday, October 22, 2014

Thiruparuthikundram - (Chandranathar) - திருப்பருத்திக்குன்றம் (சந்திரநாதர்)


Shri Chandraprabhanathar  Jain Temple  - ஸ்ரீ சந்திரபிரபநாதர்  ஜிநாலயம் 

Map for Jain pilgrimage centres:   Click THIRUPARUTHIKUNDRAM
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  திருபருத்திகுன்றம் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )

Route:

Chennai   Kanchipuram  Thiruparuthikundram  =  73 kms

Tindivanam  vandavasi  Kanchipuram   Thiruparuthikundram  = 77 kms

Arni → cheyyar  Kanchipuram   Thiruparuthikundram  =  63 kms

Gingee →  Vandavasi  Kanchipuram   Thiruparuthikundram  =  90 kms


செல்வழி:

சென்னை → காஞ்சிபுரம் → திருபருத்திகுன்றம்  =  73 கி.மீ.

திண்டிவனம் → வந்தவாசி → காஞ்சிபுரம்  →  திருபருத்திகுன்றம்  =  77  கி.மீ.

ஆரணி  செய்யார்  → காஞ்சிபுரம் → திருபருத்திகுன்றம் = 63 கி.மீ.

செஞ்சிவந்தவாசி → காஞ்சிபுரம்  →  திருபருத்திகுன்றம்  =  90  கி.மீ.ம் ஹ்ரீம் ஸ்ரீசந்திர பிரப  தீர்த்தங்கராதி சகல முனி  கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


   ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து  மகாசேன மகாராஜாவிற்கும் லக்ஷ்மணை தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும்  10 லட்சம் பூர்வம் ஆயுள் உடையவரும்  சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும் விஜய யக்ஷன் ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் பால்குண சுக்ல சப்தமியில் ஒரு அரப் 2 கோடி 80 லட்சத்து 4 ஆயிரத்து  595 முனிவர்களுடன்  லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திர பிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!


Shri chandraprabhanathar Jinalaya was built adjacent to Shri Thrailokianathar temple, in the 8th Centrury AD by the Pallava emperors. since the influences of that art, is reflected. Intially Sanctum, Arthamandap and Mugamandap were constructed. After getting various time of renovations, two stories  are extended in the Chola period. Then the sanctum of the ground floor was shifted to the first floor in the 15th century. Then the ground floor was filled by sand.

It seems like a Jinalaya upon a roof. (Traditional news tells that the cotton cultivations in the land were hiding the temple, so they proposed to construct a storied structure.)  On the first floor sanctum, lime mortar made idol of shri Chandraprabhanathar was installed on the plinth. A staircase is on the north side wall of the temple. The sanctum got a viman with sikhara and kalash on the peak. On four side of the second floor four temple shaped work with Thirthankar statues and also has four thirthankar idols on the viman.


The Jinalaya is surrounded by a beautiful garden. Now the temple is maintained by the Archaeological survey of India.அங்கு அமைந்துள்ள திருலோக்கியநாதர் ஆலயத்திற்கு வடபுறம் ஸ்ரீசந்திரநாதர் ஜிநாலயம் அமைந்துள்ளது. கி.பி. 8ம்  நூற்றாண்டில் அமைக்கப்பட்ட அவ்வாலயம் பல்லவ பேரரசர்கள் காலத்தில் கட்டப்பட்டது.  அப்போதைய கலைப்பாணி தற்போதும் வெளிப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம், முகமண்டபத்துடன் கட்டப்பட்ட இவ்வாலயம் பிற்காலத்தில் அதன் மேல் இரண்டு தளங்கள் கட்டப்பட்டிருக்க வேண்டும். பல சீரமைப்புகளை சோழர் காலத்தில் கண்டுள்ளது. கி.பி. 15ம் நூற்றாண்டிலிருந்து கீழே யிருந்த கருவறை மேல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தரைத்தளம் மணல் கொண்டு மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முதல் தளத்திலிருந்து ஒரு ஜிநாலயத்தை கட்டியது போல்  தோற்றமளிக்கிறது. (அக்காலத்தில் பருத்திச்செடிகள் உயரமாக இருந்த காரணத்தினால் ஆலயம் தெரியவில்லை, அதனால் இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக செவிவழிச்செய்தி ஒன்று  உள்ளது.)  கருவறையில் சுண்ணாம்பு சுதையினால் செய்யப்பட்ட ஸ்ரீசந்திரநாதர் சிலை அழகாக அமைக்கப்பட்டு, சாமரம் வீசும் இரு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. அதன் முன் அர்த்த மண்டபமும், முகமண்டப அமைப்பும் உள்ளது. அத்தளத்திற்கு செல்வதற்கு வடபுறம் படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மேற்தளத்திற்கு வெளியே நாற்புறமும் சிறிய ஆலயத்தோற்றமும் அதில் தீர்த்தங்கரர்கள் வடிவமும், அதற்கும் மேல் சதுர வடிவ சிகரமும், மகாநாசி  தீர்த்தங்கரர்கள் வடிவத்துடனும், உச்சியில் ஒரு கலசமும் வைக்கப்பட்டுள்ளது.


ஆலயத்தை சுற்றிலும் பெரிய தோட்டம் அமைத்து அழகாக வைத்துள்ளனர். தற்போது இவ்வாலயம் தொல்பொருள் இலாகாவினரால் பராமரிக்கப்படுகிறது.

1 comment: