Thursday, November 13, 2014

ENNAYIRAM MALAI - எண்ணாயிரம் மலை


Shri PARSHWANATHAR CAVERN TEMPLE - ஸ்ரீ பார்ஸ்வநாதர் குகைக்கோயில்





Map for Jain pilgrimage centres:   Click Ennayiram malai
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  எண்ணாயிரம் மலை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


It lies in the coordination of  longitude and latitude (12.14056, 79.47727). Set the navigator the numbers.


ROUTE:-

Tindivanam → Gingee road → Mudaiyur turn → Gudalore → Ennayiram Malai = 37 kms.

Gingee → Villupuram road → Mattapparai turn → S.kunnathur → Ennayiram Malai = 18 kms.

Villupuram → Gingee road →  Mattapparai turn → S.kunnathur → Ennayiram Malai = 32 kms.

Tiruvannamalai  → Vettavalam road → Mazhavanthangal turn → Ananthapuram road → Ennayiram Malai = 55 kms.

Tiruvannamalai → Gingee → Villupuram road → Mattapparai turn → S.kunnathur → Ennayiram Malai = 57 kms.


செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி சாலை → முடையூர் திருப்பம் → கூடலூர் → எண்ணாயிரம் மலை = 37 கி.மீ.

செஞ்சி → விழுப்புரம் சாலை → மட்டப்பாறை திருப்பம் → எஸ். குன்னத்தூர் → எண்ணாயிரம் மலை = 18 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி சாலை → மட்டப்பாறை திருப்பம் → எஸ். குன்னத்தூர் → எண்ணாயிரம் மலை = 32 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி → விழுப்புரம் சாலை → மட்டப்பாறை திருப்பம் → எஸ். குன்னத்தூர் → எண்ணாயிரம் மலை = 57 கி.மீ.

திருவண்ணாமலை  → வேட்டவலம் → மழவந்தாங்கல் திருப்பம் → அனந்தபுரம் சாலை → எண்ணாயிரம் மலை = 55 கி.மீ.




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

                                                                                         







Ennayiram Malai  is located 3 kms from the Villupuram- Gingee road at Mattaparai turn to S.Kunthur village near Gudalore. Also called as Ivar malai, Panchapandavar malai.  It has historical importance for Jain beds and Cavern temple, identified as 9th Century AD or before. Approximately 100 feet height  and long wide rock has more than 35 stone Jain beds, had been lived by Jain sadhus in ancient times.  They preached the Jain principles and also treat the ailments of the people of the surrounding villages. It is evidenced by the stone-seats and medical-pits, used for gridding herbals, on the surfaces of the rock.   

Five stone inscriptions belong to 9th Century AD ie the period of King Paranthaga Chola is there.  It reveals that some subsidies are granted for lighting to the nearby temples during that time.  In olden days the holy place is called as Senthamangalam (in Panaiyur administration).  So the cavern and the stone beds are lives before the period of inscriptions.

An engraved Statue of Shri Parshwanathar, the 23rd  thirthankar, in a standing posture on a lotus with five-headed snake above the head and Shri  Dharanendhar, Yakshan on right side, having a 9th century fashion;  on one of a rock facing south with roof of a crowned rock that is supported by another one in front. Wonderfully , they made a shelter to that place.  In front of the Shri Parshwanathar statue the Jain monks has been done the worshipping and meditations.

Shri Lakshmisena swamiji and Shri Dhavalakeerthy swamiji and several donars / volunteers are took effort for promoting the holy place. The covered the Statues with iron grill and paved flooring in front of that rock.  Raising steps from the bottom to the cavern also constructed for ease to approach the holy place.  And, also, to pave mud-road from the village to hill.

Frequent visit to the place will preserve the old monuments and prevent the use for evil purposes by some miscreant.

contact : Mr. Rajendran . cell no. +919488456327


செஞ்சி - விழுப்புரம் சாலையில் மட்டப்பாறை திருப்பத்திலிருந்து எஸ்.குன்னத்தூருக்கு அருகில் அமைந்துள்ள குகைக்கோவிலாகும். மேல்கூடலூர் குகைப்பள்ளி. ஐவர் மலை, பஞ்சபாண்டவர் மலை என்றும் அழைக்கப்படும் இத்தலம் ஸ்ரீபார்ஸ்வநாதருக்காக கி.பி. 9 நூற்றாண்டிற்கு முன் அர்ப்பணிக்கப்பட்டதாகும். சுமார் 100 அடி உயரம் கொண்டுள்ள அகலமான பாறையில் 35 க்கும் அதிகமான கற்படுக்கைகள் உள்ளன. அவற்றில் முற்காலத்தில் பல சமண முனிகள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த அந்த பள்ளியில் சமணம் சார்ந்த அறவுரைகள் மட்டுமின்றி மருத்துவ உதவிகளும் அருகில் உள்ளவர்களுக்கு அளித்துள்ளதை அங்குள்ள சிறிய மருந்து அரைக்கும் குழிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  மேலும் மூன்று இடத்தில் அமர்ந்து கொள்ள வசதியாக ஆசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஐந்து கல்வெட்டுகள் அக் கற்படுக்கைகளைச்சுற்றி உள்ளன. அவையும் கி.பி. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் பராந்தக சோழன் காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.  அவ்வூர் அந்நாளில் சேந்தமங்கலம் என்றும், பனையூர் நாட்டை சார்ந்ததாகவும் தெரிய வருகிறது. அதில் அருகில் உள்ள ஆலயங்களுக்கு விளக்கேற்ற வசதி செய்து கொடுத்ததைப்பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆகவே அக்காலத்திற்கும் முற்பட்டதாக அந்த ஸ்ரீபார்ஸ்வ ஜினரின் சிற்பமும், கற்படுக்கைகளும் இருக்க வேண்டும்.

அப்படுக்கைகளுக்கு நடுவே அமைந்துள்ள இருபாறையின் மேல் கூரைபோல் உள்ள குகை யமைப்பில் தெற்கு நோக்கிய பாறையில், தாமரை மலரால் ஆன பீடத்தில் ஸ்ரீபார்ஸ்வநாதர் நின்ற கோலத்தினால் ஆன தலையில் பனாமுடியுடன் , அருகில் அவருடைய யக்ஷன் ஸ்ரீதரணேந்திரருடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அமைதியான முகத்துடன் , மெலிதான உடலமைப்பும் கொண்டதாக வடிக்கப்பட்டுள்ளது. தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் எடுத்த கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கலைப்பாணி கி.பி. 9ம் நூற்றாண்டிற்கும் முற்பட்டதாக கருதப்படுகிறது.   அச் சிற்பத்திற்கு முன்னர் அக்குகையில் வாழ்ந்த சமணத்துறவியர்கள் தவமேற்றி வழிபட்டு வந்துள்ளனர். 

தற்போது ஸ்ரீலஷ்மிசேன ஸ்வாமிகள், மேல்சித்தாமூர், ஸ்ரீதவளகீர்த்தி ஸ்வாமிகள், திருமலை அவர்களது முயற்சியாலும், தன்னார்வ தொண்டர்களின் கொடையுள்ளத்தாலும் அதனைச்சுற்றி இரும்பு தட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாறையின் அடிவாரத்திலிருந்து மேற்செல்ல படிகள் அமைக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள சாலையிலிருந்து அந்த மலைக்கு செல்லும் வழிகளும் சீர்செய்யப்பட்டுள்ளது போற்றத்தக்க செயலாகும்.

இருப்பினும் ஆண்டுக்கொருமுறையேனும் விழா எடுத்து அனைவரும் சென்று அப்புண்ணிய ஸ்தலத்தில் வழிபாடு செய்து வந்தால் கலை பொக்கிஷ­த்தை பாதுகாக்க, வளர்ச்சியடைய செய்ய வாய்ப்பாக அமையும். 

நன்றி : Mr. வெற்றி  மற்றும்  Mr. ஆளவந்தான் ,  (கீழ்வயலாமூர்)

 Mr. Rajendran . cell no. +919488456327

<

No comments:

Post a Comment