Saturday, November 15, 2014

SOLAIARUGAVOOR - சோலை அருகாவூர்


Shri ADHINATHAR  JAIN TEMPLE -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம் 




Location:

SOLAIARUGAVOOR  lies on the Google map in the coordination of (12.45023, 79.44462) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click SOLAIARUGAVOOR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  சோலை அருகாவூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Agarakorakottai → Desur → Solaiarugavoor = 39 kms.

chetpet → Vandavasi road → Endal cross road → Solaiarugavoor = 16 kms.

Villupuram → Gingee → Pennagar → Solaiarugavoor = 63 kms.

Tiruvannamalai  → Gingee → Pennagar → Solaiarugavoor = 65 kms.


Vandavasi → Chetpet road → Endal cross road → Solaiarugavoor = 22 kms.


செல்வழி:-

திண்டிவனம் → அகரகொரக்கோட்டை → தேசூர்  → சோலைஅருகாவூர் = 39 கி.மீ.

சேத்பட் → வந்தவாசி சாலை → ஏந்தல் கூட்டுரோடு → சோலைஅருகாவூர் = 16 கி.மீ. 

விழுப்புரம் → செஞ்சி →  பென்னகர் / சாலை → சோலைஅருகாவூர் = 63 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி →  பென்னகர் / சாலை → சோலைஅருகாவூர் = 63 கி.மீ.

வந்தவாசி → சேத்பட் சாலை → ஏந்தல் கூட்டுரோடு → சோலைஅருகாவூர் = 22 கி.மீ. 




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Solaiarugavoor a jain habitat is, 22 kms southwest of Vandavasi, 16 kms southeast of Chetpet near to the Madam village. More jains has been living in the village since several centuries. But they built a Jinalaya nearly 400 years back and shifted their houses adjacent to the temple.

However the Jains living are meager in number, they maintained the Jinalaya, dedicated to Shri Adheswarar, is in good manner. A granite statue of Shri Adhinathar with eight features of Samavasaran Jinar, has semi circular shaped top is established on the holy-platform. It is crowned by one stage Viman, has four thirthankar statues with shamaraitharis ended with two lions at the corner. And also on the top of Arthamandap, shri Kooshmandini statue in south and Shri Parshwanathar in north, sheltered in a gallery.

Inside Arthamandap, Daily pooja stone statue of Adhinathar is seated on the center platform. On either side platforms contains metal idols of Shri Parshwanathar, pooja thirthankars, Navadevatha, panchaparameshti, Sruthaskandam and some Yaksh, Yakshies are exhibited. A mahamandap and Mugamandap also built in the Vedi-block.

East facing entranceway attached with the surrounded compound wall of Open corridor. At the entry level a five-colour flag with mast, altar and Manasthamp. The white stone made manasthamp consists of  two Thirthankar carvings in the east and west; and two Logaswaroob symbol carvings in the north and south. At the top viman four standing posture Siddhaparameshti idols and four bells are hanged under.


Daily pooja, special poojas like Nandheeswara dheeba, Mukkudai and also all rituals are conducted regularly. In addition to that a festival to Shri Adheeswarar is celebrated every year, in the 10th day of Vaikasi month. 

Contact No. Shri Selvaraj Jain  -  +91 8681842740



வந்தவாசியிலிருந்து தென்மேற்காக 22 கி.மீ. தொலைவிலும் சேத்பட்டிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் மடம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கிராமம் சோலை அருகாவூர் ஆகும். அவ்வூரில் பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் 400 ஆண்டு காலத்திற்குள் தற்போதுள்ள இடத்தில் ஆலயத்தை நிறுவி குடிபெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது.

ஸ்ரீஆதீஸ்வரருக்கு அர்ப்பணிக்கபட்ட இவ்வாலயம் கீழ்நோக்கி உள்ளது. தற்போது மிகவும் குறைவான  எண்ணிக்கையில் சமணர்கள் வசித்தாலும் இவ்வூர் ஆலயம் நன்கு சீரமைக்கப்பட்டு பாதுகாப்புடன் உள்ளது.  கருவறை வேதிகையில் மூலவர் சமவசரண ஜினரின் எட்டு அம்சங்களுடன் கருங்கல் சிலையாக வடிக்கப்பட்டு கம்பீரமாக அமர்ந்துள்ளார். அதன் மேல் ஏகதள விமானமும் அதன் நாற்புறமும் சாமரைதாரிகளுடன் தீர்த்தங்கரர் திருவுருவங்களும், கோடியில் இரு சிம்ம உருவங்களுடன் அழகாக காட்சி தருகிறது. மேலும் அர்த்த மண்டபத்தின் மேல் தென்பகுதியில் ஸ்ரீதர்மதேவி திருவுருவமும், வடக்கில் ஸ்ரீபார்ஸ்வநாதர் திருவுருவமும் தேவமாடத்தில் அமைத்துள்ளனர்.

அர்த்தமண்டபத்தின் நடுவே தினபூஜை மேடையில் ஸ்ரீஆதிநாதரின் சிறிய கற்சிலை உள்ளது. இருபுற மேடைகளில் உலோகச்சிலைகளால் ஆன ஸ்ரீபார்ஸ்வநாதர், மற்ற தீர்த்தங்கரர்கள், நந்தீஸ்வர தீப மாதிரிவடிவம் , சுருதஸ்கந்தம் , பஞ்சபரமேஷ்டி, நவதேவதா, மற்றும் யக்ஷ, யக்ஷிகள் அலங்கரிக்கின்றனர். மகாமண்டபமும் வெளியே முகமண்டபமும் அமைத்து வேதிப்பகுதி முடிவடைகிறது.

கீழ்திசை குடவரையுடன் திருச்சுற்று மதிற்சுவர்கள் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றின் துவக்கத்தில் ஐவர்ண கொடியுடன் மேடையும், பலிபீடமும், உயரமான வெண்கல் மானஸ்தம்பம், கீழ்பகுதியில் கிழக்கு, மேற்கில் தீர்த்தங்கரர்களும், தென்வடலில் லோகஸ்வரூப வடிவமும், உயரே விமானத்தில் நின்றநிலையில் நான்கு தீர்த்தங்கரர் சிலைகளும், நான்கு மணிகளுடன் சிறப்பான தோற்றத்துடன் காட்சி தருகிறது. திருச்சுற்றின் தென்புறம் நவகிரக மேடையில் தீர்த்தங்கரர் சிலைகளும், அடுத்து உயரமான யானைமீது அமர்ந்த ஸ்ரீபிரம்ம தேவர் சிலையும், ஸ்ரீதர்மதேவி சிலையும் சன்னதியாக நிறுவப்பட்டு பாதுகாப்பாக கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஜிநாலயத்தில் நித்ய பூஜை, மற்றும் விசேஷ பூஜைகளுடன் நந்தீஸ்வர தீப பூஜை, முக்குடை, சரஸ்வதி பூஜைகள் வளமைபோல் அந்தந்த காலத்தில் நடைபெறுகிறது. மேலும் வைகாசி 10ம் நாள் ஸ்ரீஆதிநாதர் திருவீதியுலா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 

தொடர்புக்கு: ஸ்ரீசெல்வராஜ் ஜெயின் - +91 9003322034


No comments:

Post a Comment