Friday, November 14, 2014

EYYIL - எய்யில்


Shri CHANDRAPRABANATHAR JAIN TEMPLE -ஸ்ரீ சந்திரபிரபநாதர்  ஜிநாலயம் 


Map for Jain pilgrimage centres:   Click
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  எய்யில் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

in the coordination of (12.40799, 79.32656) clicked google map . ie put the latitude, Longitude on the search box

ROUTE:-

Tindivanam → Gingee → Eyyil = 50 kms.

chetpet → Eyyil = 12 kms.

Villupuram → Gingee →  Eyyil = 64 kms.

Tiruvannamalai  → Gingee → Eyyil = 64 kms.

Vandavasi → chetpet → Eyyil = 44 kms.


செல்வழி:-


திண்டிவனம் → செஞ்சி →  எய்யில் = 50 கி.மீ.

சேத்பட் → எய்யில் = 12 கி.மீ. 

விழுப்புரம் → செஞ்சி →  எய்யில் = 64 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி →  எய்யில் = 64 கி.மீ.

வந்தவாசி → சேத்பட் → எய்யில் = 44 கி.மீ. 


 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி  திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து! 
 
 
 


 Eyyil village is situated about 24 kms north-west of Gingee town. The Jinalaya of aged 200 years is dedicated to Shri Chandraprabha nathar by the native Jains living since several centuries there. The antique traces were hidden by the frequent renovations work. But the round shaped pillars of remnants in the yard belongs to Vijayanagara dynasty Period.

The Garbhagriha has Shri Chandraprabu jinar granite plate carving on the plinth. It is crowned by one stage Viman, shikhara and kalash. Four cement mortar Thirthankar statues are exhibited in sitting posture at first stage and standing posture in the Greva portion with whisky maids. In the middle of the Arthamandap daily pooja metal idols are arranged. On either side of the mandap stone made 24 Thirthankar and Navadevatha and metal molded 24 thirthankars cluster, Sruthaskandam, Navadevatha, few Thirthankars, yaksh, yakshies are also placed in order. Apart from that Shri Brahmadevar and Shri Kooshmandini statues are established.

Opening of arthamandap, a Mahamandap and attached Mugamandap were built. East facing enter-gate is attached with enclosed compound wall. A broad and open corridor provides more space for festival celebrations of the Jinalaya.

All poojas and rituals and festivals are celebrated recurrently, like other Jain temples.


 
 
 
 
 
 

செஞ்சியிலிருந்து சேத்பட் சாலையில் 21 கி.மீ. பயணித்து மேற்கு திருப்பசாலையில் 3 கி.மீ.தொலைவில் சென்றால் வருவது எய்யில் கிராமம். அவ்வூரில் ஸ்ரீசந்திரபிரப நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜிநாலயம் ஒன்றுள்ளது. அவ்வூரில் பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் 200 ஆண்டுகளைக் கடந்துள்ளதாக ஜிநாலயக் கட்டமைப்பு தெரிவிக்கிறது. பல சீரமைப்பு பணிகளைக் கண்டதால் அதன் தொன்மைக்கான ஆதாரங்கள் அழிந்துள்ளன. ஆலயத்தில் கிடக்கும் தூண்கள் விஜயநகர அரசர்கள் காலத்தை சேர்ந்ததாக உள்ளது.

ஆலய கருவறையில் ஸ்ரீசந்திரப்பிரப நாதரின் கருங்கற்சிலை அஷ்ட அம்சங்களுடன் செதுக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. அதன் மேல் ஏகதள விமானம் நாற்புறத்திலும் அமர்ந்த நிலையிலும், கிரீவப்பகுதியில் நின்றநிலையிலும் தீர்த்தங்கரர் சிலைகள் நாற்புறமும் சுதையினால் செய்யப்பட்டுள்ளது. அர்த்தமண்டபத்தின் நடுவே உள்ள மேடையில் தினபூஜைக்கான உலோகச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இருபுறம் உள்ள மேடைகளில் 24 தீர்த்தங்கரர்கள், நவதேவதா உலோகம் மற்றும் கற்சிலைகள், ஸ்ருதஸ்கந்தம் முக்கிய தீர்த்தங்கரர்கள், யக்ஷ, யக்ஷிகளின் உலோகச் சிலைகள் அலங்கரிக்கின்றன. மேலும் ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவியின் கற்சிலைகள் வேதிகையில் நிறுவப்பட்டுள்ளன.

அதன் கதவுகளைக் கடந்ததும் மகாமண்டபமும், அதன் முன்பகுதி முகமண்டபமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய நுழைவு வாயில் கீழ்திசை நோக்கி அமைக்கப்பட்டு ஆலய திருச்சுற்றை அரண் அமைத்து பாதுகாத்துள்ளனர். ஆலயத்தை சுற்றிலும் அதிக இடவசதியுடன் காணப்படுகிறது. பல நிகழ்வுகளை ஆலயத்தின் உள்ளேயே நடத்துவதற்கு வசதியாக அமைத்துள்ளனர்.

சமண ஜிநாலயத்தில் நடைபெறும் தின பூஜை, நந்தீஸ்வர பூஜை மற்றும் அனைத்து வழிபாடுகளும் வளமைபோல் நடைபெறுகிறது.


 
 
 
 
 

No comments:

Post a Comment