Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
Map for Jain pilgrimage centres: Click Kolappalur
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கொழப்பலூர் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Gingee → Chetpet → Kolappalur = 64 kms.
chetpet → Arni road → Kolappalur = 12 kms.
Arni → Gengapuram → Kolappalur = 18 kms.
Villupuram → Gingee → Chetpet → Kolappalur = 78 kms.
Tiruvannamalai → Pennathur → Avalurpet → chetpet → Kolappalur = 60 kms.
Vandavasi → arni road → Melsathamangalam cross road → Kolappalur = 35 kms.
செல்வழி:-
திண்டிவனம் → செஞ்சி → சேத்பட் → பெரிய கொழப்பலூர் = 39 கி.மீ.
சேத்பட் → ஆரணி சாலை → பெரிய கொழப்பலூர் = 12 கி.மீ.
ஆரணி → சேத்பட் சாலை → பெரிய கொழப்பலூர் = 18 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → பெரிய கொழப்பலூர் = 78 கி.மீ.
திருவண்ணாமலை → பென்னாத்தூர் → அவலூர்பேட்டை→ சேத்பட்→ பெரிய கொழப்பலூர் = 39 கி.மீ.
வந்தவாசி → ஆரணி சாலை → மேல்சாத்தமங்கலம் கூட்டுரோடு → பெரிய கொழப்பலூர் = 35 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Kolappalur,
a Jains living village is about 12 Kms from Chetpet in the Arni road and take a
diversion at the branch road towards east. Many Jain families had been lived in
ancient times. So they built a Jinalaya and dedicated to Shri Adhinathar before
14th century AD. The antiquity of the temple is known by a stone
inscription incised in the outside wall, belongs to King Sampuvarayar ruling
time. And no-Lanchan carving of main deity stone idol also a very old art design.
Opposite
of Jinalaya a standing rounded pillar is called as Deepakkal, which was
used for lighting purpose during the festival time, like Karthigai Deepam. An
Ahimsa flag mast is erected adjacent to that. East facing entranceway
(Kudavarai) is isolated because the attached compound wall was demolished
recently. (The natives proposed to construct a new one in near future, in
addition to other repair works.)
Shri
Adhinatha thithankar, a stone plate with eight features carving, is installed
upon a plinth. A three tier Viman is covered over it. Thirthankar mortar idols
are in sitting posture along with shamarai maids at the bottom, without maids
in the middle, in standing posture at the top of Griva portion. The arthamandap
chamber consists of Daily pooja dias at the center, on either side stepped
platforms have metal idols like Shri Parshwanathar, other thirthankar for special
pooja purposes, Navadevatha, Mahameru, Panchaparameshti, Rathnathraya (three-cluster)
Jinars, Yaksh, Yakshies are arranged upon. A Brahmmayakshan stone statue having
Thirthankar on the head placed at south and Shri Kooshmandini idol at north over
a pedestal individually in the pavilion. The chamber is secured by collapsible
iron-gate.
A
Mahamandap porch also fitted with grill and doors securely. It has Stone idol
of two Thirthankars granite carvings,(one was taken from nearby village and another from the river), and Bahawan
Bahubali in standing state with bunch of hair(a unique design) and also a
Chadurmugi model viman are placed. A separate shrine chamber without god also
in the portion.
All
poojas, Daily, quarterly and annually has been conducted recurrently. Apart
from, a Urchav for Shri Adhinathar urchav murthi, with street procession, also
celebrated on Akshayathrithiyai day and the third day of Thai (tamil) month
every year.
For Contact: Shri Keerthivijayan - 91 2200957306
For Contact: Shri Keerthivijayan - 91 2200957306
கொழப்பலூர்,
சேத்பட் டிலிருந்து ஆரணிச் சாலையில் 10 கி.மீ. சென்று கிழக்கே கிளைச்சாலையில் 2 கி.மீ.
பயணித்தால் வரும் கிராமம் ஆகும். அதில் பல நூற்றாண்டுகளாக சமணக் குடும்பங்கள் வசித்து
வருகின்றனர். (தற்காலத்தில் அருகியுள்ளது) கொழப்புலியூர், பெரிய கொழப்பலூர் என்றும்
அழைக்கப்பட்ட இக்கிராமத்தில் ஜிநாலயம் ஒன்று உள்ளது. ஸ்ரீஆதிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்ட
இவ்வாலயம் மிகவும் தொன்மையானது என்பதை அவ்வாலயத்தில் (வெளிச்சுவரில்) உள்ள கல்வெட்டின்
மூலம் அறியலாம். கி.பி. 14 ம் நூற்றாண்டில் ஆண்ட சம்புவராயர் ஆட்சிக் காலத்தில் அர்த்தமண்டபம்
அமைக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூலவர் சிலையில் லாஞ்சனம் ஏதும் இல்லை.
ஆலயத்தின்
எதிரே தெருவின் மறுபுறத்தில் ஸ்தூபியின் கால் போல் ஒரு அமைப்பு நிற்கிறது. தீபக்கால்
என கூறப்படும் இதில் அக்காலத்தில் கார்த்திகை போன்ற விழாக்காலங்களில் தீபம் ஏற்றியுள்ளனர்.
அருகில் ஐவர்ண அஹிம்சைக்கொடி கம்பம் உள்ளது. அதனையடுத்து ஆலய குடவரை என்ற நுழைவுவாயில்
கீழ் திசைநோக்கி அமைந்துள்ளது. (திருச்சுற்றின் மதிற்சுவர்கள் இருபுறமும் பழுதடைந்து
வீழ்ந்து விட்டதால் அகற்றப்பட்டுள்ளது. தற்போது புதியதாக கட்ட ஏற்பாடுகள் எடுத்துள்ளனர். பல சீரமைப்புகளும் செய்யப்பட வேண்டியுள்ளது.)
மூலவர்
ஸ்ரீரிஷபநாதரின் திருவுருவம் கற்பலகையில் சமவசரண ஜினரின் எட்டு அம்சங்களுடன் அழகாக
வடிக்கப்பட்டு வேதிகையில் நிறுவியுள்ளனர். அதன் மேற்புறம் திரிதள விமானம் சிகர கலசத்துடன்
அமைக்கப்பட்டுள்ளது. அதில் நாற்திசையிலும் தீர்த்தங்கரரின் உருவச்சிலைகள் கிரீவப்பகுதியில்
நின்ற நிலையிலும், இரண்டாவது தளத்தில் அமர்ந்த நிலையிலும், முதல்தளத்தில் அமர்ந்த நிலையில்
சாமரைதாரிகளுடன் அமைத்துள்ளனர். கருவறையடுத்து அந்தராளப்பகுதியும் உள்ளது. அர்த்தமண்டபத்தின்
நடுவே தினபூஜை மேடையும் , இருபுறம் உள்ள இரு படி மேடைகளில் உலோகச்சிலைகள் அனைத்தும்
வரிசையாக அலங்கரிக்கின்றன. அவற்றில் ஸ்ரீபார்ஸ்வநாதர், முக்கிய தீர்த்தங்கரர்கள் பிரபையுடன்,
நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, ரத்தினத்ரையம் மற்றும் வழிபாட்டில் உள்ள யக்ஷ,யக்ஷிகள் திருவுருவங்கள்
அடங்கும். அதன் கீழ் தினபூஜைமேடைக்கு வலதுபுறம் ஸ்ரீபிரம்மயக்ஷன்(
தலையில் தீர்த்தங்கரர் திருவுருத்துடன் உள்ள) கற்சிலையும், இடதுபுறம் ஸ்ரீதர்மதேவியின்
அழகிய கற்சிலையும் தனித்தனி மேடையில் நிறுவப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்திற்கு இரும்புக்
கதவுகள் அமைத்துள்ளனர்.
அதனை
அடுத்த மகாமண்டபம் கட்டப்பட்டு தற்போது இரும்பு தட்டிக்கதவுகளுடன் பாதுகாப்புடன் உள்ளது.
அங்கு மிகப்பழமையான இரு தீர்த்தங்கரர் சிலைகள் (ஒன்று அருகில் உள்ள ஆற்றிலிருந்தும், மற்றொன்று கீழானூரிலிருந்து
கொண்டு வரப்பட்டது) மற்றும் மிகவும் அரிதான ஸ்ரீபாகுபலி பகவானின் திருவுருவம் ஜடாமுடியுடனும்,
விமானத்தில் சதுர்முக பிம்பங்களின் கற்சிலை வடிவமும் மிகச்சிறிய மேடையில் வைத்துள்ளனர்.
மேலும் வடபுறத்தில் ஒரு சன்னதி மேல் விமானத்துடன் தெய்வம் ஏதும் நிறுவப்படாமல் உள்ளது.
சமண
ஆலயங்களில் நடைபெறும் அனைத்து பூஜைகளும்; தினபூஜை, நந்தீஸ்வர தீபபூஜை, முக்குடை பூஜை
போன்றவையும் அக்ஷய திரிதியை மற்றும் காணும்பொங்கலன்று ஸ்ரீஆதிநாதர் திருவீதியுலாவும் வளமைபோல் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: ஸ்ரீகீர்த்திவிஜயன் - +91 2200957306
தொடர்புக்கு: ஸ்ரீகீர்த்திவிஜயன் - +91 2200957306
No comments:
Post a Comment