Tuesday, April 22, 2014

CHITRARUGAVUR - சிற்றருகாவூர்

CHITRARUGAVUR - SRI ADHINATHAR JAIN TEMPLE




Map for Jain pilgrimage centres:   Click    
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 



சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

On the map in the coordinates of (12.39554, 79.46218) and put the latitude, Longitude on the search box



ROUTE:

Tindivanam  Thellar Agarakorakottai Kunnagampundi Chitharugavoor - Total: 35 k.m.

Gingee Sellapratti/Pennagar Rd Chinnagaram Chitharugavoor - Total: 20 k.m.

Vandavasi Thellar Agarakorakottai Kunnagampundi Chitharugavoor -  Total: 24 k.m.

Desur Kunnagampundi Chtharugavoor- Total: 24 k.m.



செல்வழி:

திண்டிவனம் தெள்ளாறு அகரகொரகோட்டை குன்னகம்பூண்டி சித்தருகாவூர் - 35 கி.மீ..

செஞ்சி செல்லபிராட்டி/பென்னகர் சாலை   சின்னகரம் சித்தருகாவூர் - 20 கி.மீ..

வந்தவாசி தெள்ளாறு அகரகொரகோட்டை குன்னகம்பூண்டி சித்தருகாவூர் - 24 கி.மீ.

தேசூர்  குன்னகம்பூண்டி  சித்தருகாவூர் - 8 கி.மீ.




MAIN DEITY  --  மூலவர்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி- க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன்- வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

********

AIR CORRIDOR VIEWS  -  திருச்சுற்று தோற்றம் 


சித்தருகாவூர்தேசூருக்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து உள்ள கட்டமைப்பு கொண்ட ஆலயமாக தெரிகிறது. தற்போது அவ்வூரில் அவ்வாலயம் தோன்றியதற்கு முன்னர் இருந்த குடும்பங்கள் சில இச் ஜிநாலயத்தை பராமரித்து வருகின்றனர். அவ்வூரின் மற்றொரு பகுதியை ஜங்கம் பூண்டி என அழைக்கப்படுகிறது. அவ்வூர் பன் நெடுங்காலமாக சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊராகும்.

அக்கிராமத்திற்கு அருகில் வெடால் என்னும் மலையடிவாரத்தில், பெண்துறவிகளுக்கான சமணப்பள்ளி ஒன்று இருந்துள்ளது. மேலும் ஜெங்கம் பூண்டியில் சமணர் படுக்கைகளும் உள்ளது சிறப்பாகும்.

அவ்வூரில் வாழ்ந்த திரு. ஸ்ரீதர நைனார் என்பவர் பல சமய தொண்டாற்றி வந்துள்ளார். மேருமந்திர புராணத்தை 1967ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிட்டவர். மேலும் பொன்னூர் மலையின் அடிவாரத்தில் ஒரு இலவச சத்திரம் அமைத்து பல தொண்டுகளைப் புரிந்துள்ளார். தற்போதும் அவரது வாரிசைச் சேர்ந்தவர்கள் அதனை செவ்வனே நல்ல பராமரிப்புடன், உள்ளே ஒரு ஜிநாலயத்துடன் நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீஆதிநாதருக்காக கட்டப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் வேதிகை மேடையில் அமர்ந்த கோலத்தில் கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார். சமவ சரண ஜிநரின் எட்டு அம்சங்களை கொண்டுள்ள அதன் திருமேனி அழகுறக் காட்சியளிக்கிறது. 400 ஆண்களுக்கு முன் உள்ள கலைப்பாணியைக் கொண்டுள்ள அம்மூலவர் வடிவத்தில் உள்ள முக்குடை அமைப்பு ஒரே அளவுடையதாகவும், பின்புறம் உள்ள ஒளிவட்டம் இரண்டு அளவில் உள்ளதாகவும் வடிக்கப்பட்டுள்ளது சற்று விசேஷமானது. அவர் அமர்ந்துள்ள இடத்தின் இருபுறமும் யாளி முகங்கள் யானைகளைப் போல் பெரியதாக காட்டப்பட்டுள்ளன. சிங்காதனமும் நன்கு தெரியும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும் நின்ற கோலத்தில் ஸ்ரீரிஷபர் புடைப்புச் சிற்பமும், ஸ்ரீபிரம்ம தேவர் மற்றும் ஸ்ரீதர்மதேவி கற்சிலைகளும் உள்ளன. மேலும் உலோகத்திருமேனிகாளாக ஸ்ரீஆதிநாதரும், மகாமேரு, நந்தீஸ்பர தீபம், ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீசரஸ்வதி சிலைகளும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மூலவருக்கு மேல் அமைந்துள்ள ஏகதள விமானம் அழகாக வடிக்கப்பட்டு மேற் கலசத்துடன் காட்சியளிக்கிறது. நாற்புறமும் சாமரை தாரிகளுடன் தீர்த்தங்கரர் சிலைகள் அமர்ந்த  நிலையிலும், இருபுறமும் சிங்க உருவங்கள் சுதையில் செய்விக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் முகமண்டபத்தின் மேல் சிறிய விமானம் அமைக்கப்பட்டு அதனுள் ஸ்ரீஆதிநாதர் சுதைச்சிலை அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. இரு கோடிகளிலும் சிங்க உருவம் வடிக்கப்பட்டுள்ளது.


ஆலயத் திருச்சுற்று மதிற்சுவர்களுடன் நுழை வாயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்று சற்று விசாலமாக அமைந்துள்ளதால் பார்ப்பதற்கு தெளிவாக இருக்கின்றது. மேலும் துவஜமரமும், சிறிய பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது.


அனைத்து ஜிநாலயங்களில் நடைபெறும் பூஜைகளும், வழிபாடுகளும், பண்டிகைகளும், விழாக்களும் வளமை போல் நடைபெற்று வருகிறது.


அத்திசையில் பயணம் செல்லும் அன்பர்கள் அடிக்கடி சென்று வந்தால் அக்கோவில் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருப்பது திண்ணமே

TEMPLE INTERIOR  -  ஜினாலய உட்புறம் 




No comments:

Post a Comment