தருமவுரை - நீரோட்டக வெண்பா அந்தாதி.

 

  தருமவுரை

          நீரோட்டக  வெண்பா  அந்தாதி.  


பா வகை  :  வெண்பா

உட்பிரிவு  :  இன்னிசை  வெண்பா.

சிறப்பு       :   இணையா  இதழ்கள்  வெண்பா.


எண்குண  நாத  னிருவினை  நீக்கியான்

தண்னிழல்  தங்கிய  வெண்குடை  யேற்றவன்

நுண்ணிய  நல்லற  நாயகன்  தந்தது

திண்ணிய  நூலே  வுயர்வு. 1


உயர்தவ  நின்றான்  நெறிநிறை  கொண்டான்

உறுவினை  நீக்கி  யுலகுக்கு  சொன்னான்

அறத்தினைக்  காத்து  யிரதையுந்  தூய்த்தவன்

தாளினை  கொள்வா  ருயர்ந்து. 2


உயர்ந்தது  நல்வினை  வல்வினை  நீங்கிட  

தொல்வினை யென்று  தொடரா  திருந்திட

நல்லறங்  காத்து  நாடிய  வீட்டான்

அருகனின்  தாளை  வணங்கு. 3


வணங்கு  வருகனை  வாழ்த்து  உயர்வினை

நீங்கிடுந்  தீவினை  யேற்றிடு  நல்வினை

காத்திடு  நல்லறங்  கூட்டிடு  நன்னெறியை

தூக்கியே  நெஞ்சி  லிருத்து


இருந்தால்  துறத்த  லெளியது  வல்ல

இருந்துந்  துறந்தோ  ராவா  ருயர்ந்தோர்

திருநெறி  யாள  ருயர்நிலை  கொள்வர்

வருநிலை  எய்வர்  நிறைந்து. 4


நிரைந்த  எவையு  நிலைத்திடா  வாழ்வில்

தொலையா  வினைகள்  தொடரா  தொழிய

கலைந்திடா  நெஞ்சில்  தலையென  கொள்க

அருகனி  னடியினை  யேற்று. 5


ஏற்றிட  வீட்டை   வினைவெல்  லுயிர்கள்

நாட்டில்  துறவினை  நாடியே  சென்று

துறவினில்  தோய்ந்து  துவங்குந்  தவத்தினை

நாடிய  நல்லுயிர்  காண். 6


கண்டனர்  வாலறிவு  ஞானத்தை  விண்ணவர்

நிலத்தில்  செதுக்கினர்  நீண்டதோர்  சூழலை

வாயது  தந்த  திருவொலி  கேட்டு

நனைந்த  வுயிர்கள்  சிறந்து. 7


சிறந்தது  நல்லறங்  கூறிட  சென்று

அறவுரை  தந்திட   ஆக்கிய  கூட்டத்தில்

ஓங்கு  கணதரர்  நல்லற  வேதத்தின்

வார்த்தைக  ளன்னவர்  கூற்று 8


கூற்றிலுந்  தீயவை  நல்லவை  யுள்ளதே

தூயவை  செய்ய  தொடர்ந்திடு  நல்வினை

வையக  வாழ்க்கை  வலியது  யென்றுணர்

ஊழ்வினை  தந்தது  காண். 9


கண்ட  வினையையு  சேர்ந்திடா  நீக்கி

சுகத்தை  ஒதுக்கியே  செல்வந்  துறந்து

அறத்தினை  காத்த  லனைத்துங்  கருணை

அருகனின்  சொல்லே  உயர்ந்து. 10


உயர்ந்ததோர்  நெஞ்சி  லுறைந்திடு  வாசைகள்

ஊற்றென  வூறுத  லூழ்வினை  செய்வதே

ஊழை  யறுத்து  வுறுவினை  நீக்கிட

தாளினை  யேற்ற  லுயர்வு. 11


உயர்வுடை  யில்லற  வாழ்வி  லிருவினை  

நல்லறஞ்  செய்து  நலிந்திட  செய்ததை

நுண்ணிய  ஆற்றலால்  நீக்கிய  நல்லோர்

திறனில்  வளர்ந்தார்  சிறந்து. 12


சிறந்த  துறவற  வூணினை  யேற்க

தெருவினி  லேகிட  இல்லற  ஆன்றோர்

எதிரினில்  நின்று  மிசைவொடு  கூறி

வழங்கிடுந்  தானஞ்  சிறந்து. 13 

சிறந்த  நெறியின்  துறவுடை  நெஞ்சு

குறையிலா  செய்கை  நிறையுடை  யாற்றல்

குறையிலா  தானங்  குணத்தினில்  கொண்டோர்

நிறைவினில்  வாழ்வார்  சிறந்து. 14


சிறந்தது  நல்வினை  சேருங்  கதியினில்

வல்வினை  வெல்ல  நடந்திடு  நல்நெறியில்

துள்ளிய  நல்லறந்  தந்த  அருகனை

உள்ளத்தி  லேற்று  நட. 15


நடந்திடு  நல்வழி  நீங்கிடுந்  தீநெறிகள்

நின்றிடுந்  தொல்வினை  தூயுறு  நல்லுயிர்

சென்றிடு  விண்ணுலகு  செவ்விய  நன்னிலை

வாழ்ந்திடுங்  காலந்  தொடர்ந்து 16


தொடர்வது  நின்றது  ஊழ்வினை  செய்கையே

நல்வினை  தீவினை  ஆற்றுங்  கதிகளை

ஏற்குந்  துறவது  நீக்குந்  துயர்களை

காக்குந்  திறனி  லுயர்ந்து  17


உயர்ந்த  கொள்கையு  உன்னத  நன்னெறி

தந்த  அருகனே  தன்னிலை  யாய்ந்தவன்

நித்தில  வேந்தன்  நெறிகளை  உரைத்தவன்

அன்னவன்  சொல்லே  சிறந்து 18


சிறந்தநல்  வாழ்வியல்  செவ்விய  நூலியல்

நல்லுயி  ராகிட  சொல்லிய  நன்னெறி

திண்ணிய  வேதங்கள்  சொல்லிடு  நாயகன்

நுண்ணிய  நல்லுரை  ஏற்று 19


ஏற்றிடு  நெஞ்சினில்  நல்லறச்  செய்கையை

சென்றிடு  வல்வினை  நின்றிடு  நல்வினை

எண்குண  நல்லோ  னிணையடி  ஏற்றிட

விண்ணுலக  வாழ்வில்  உயர்வு 20


உயர்வினை  யீந்து  வுயிரது  தூய்வுற

நாற்கதி  நீங்கி  நிரந்தர  வீட்டினை

காட்டிடு  நேர்வழி  சேர்த்திடு  நல்வழியை

நாலாறு  நாயகர்  தாள் 21


தாளினை  யேற்றோர்  தடையற  வாழ்வார்

நெறிகளை  நெஞ்சில்  தினந்தினங்  கொள்வார்

அருகனின்  நற்சொ  லவனியை  காக்க

உயிர்களு  வுய்யு  சிறந்து 22


சிறந்து  விளங்க  சிந்தைத்  தெளிவுற

நிறைந்த  நல்நெறி  நித்திலங்  காத்திட

அத்தனை  உயிர்க  ளருக  னடியினை

நித்தந்  தொழுதிட  உயர்வு 23


உயர்வினில்  நின்றோ  ருயர்ந்த  வுயிர்களே

நல்லவை  யேற்றிட  அல்லவை  நீக்கிட

நெஞ்சில்  நழுவிடா  நல்லற  வேதனை

கொள்ள  லென்றுந்  துறவு 24


துறவினை  யேற்க  துயரங்கள்  நீங்கிட

இல்லற  தொல்லைக  ளென்று  விலகிட

யாக்கை  நிலையாத  தத்துவ  சூத்திர

நெஞ்சி  லுறையுதே  நின்று 25


நின்று  நிலைக்கு  நெறியது  நெஞ்சில் 

என்று  விலகா  வருகனின்  சொல்லது

தேனென  கொள்கைகள்  தெள்ளிய  வுள்ளத்தில்

வேரென  நின்றிடுங்  காண் 26


கண்டது  நல்லறங்  கொண்டது  துறவற

எண்ணங்க  ளுள்ளத்தி  லீந்திடுந்  தூய்வினை

தூய்வினை  தந்திடுந்  துயரற்ற  சிந்தனை

காய்த்த  லுவத்தல்  துறந்து 27


துறவினை  ஏற்றலுந்  தொல்வினை  கொள்கையே

கொள்கை  தவக்கங்  கொடுத்திடு  நல்வழி

நல்வழி  சென்றுநீ  நாடிடு  வீட்டை

அருகனின்  தாளைத்  தொழுது 28


தொழுதவர்  கைகள்  துயரத்தை  விட்டன

விட்டிட்ட  நெஞ்சினில்  தொட்டது  நல்வினை

நல்வினை  யோங்கிட  நாதனின்  கால்தொட

நெஞ்சி  லவனை  யேற்று 29

  

ஏற்றிடு  நாலறுவ  ரின்சொற்கள்  நெஞ்சினில்

காத்திடு  நல்லறத்தை  கைலாயங்  கொண்டவனின்

கோர்த்திடு  ஈராறு  சிந்தனைக  ளுள்ளத்தில்

சாற்றிடு  நாளுஞ்  சிறந்து. 30


                   நீரோட்டக  வெண்பா அந்தாதி  நிறைவு.



No comments:

Post a Comment