ஸ்ரீ மல்லிநாத பகவான் திருச்சரிதம்
மதிப்பிற்குரிய முனைவர் திரு கனகசாந்தி. அஜிததாஸ் அவர்கள் எழுதிய வரிகளை உங்களுக்கு அளிக்கிறேன்.
எவருடைய
தாயால் கனவில் யானை, எருது, சிம்மம் முதலியவை காணப்பட்டனவோ, எவருடைய திருப்பிறப்பின்
போது தேவர்களின் தலைகள் தாமாகவே தாழ்ந்து வணங்கினவோ, எவனுடைய திருச்செவிகள் குத்தப்படாமலிருந்தும்
அவற்றில் பதிந்த இரத்தினங்களையுடைய குண்டலம் முதலான காதணிகளால் அலங்கரிக்கப்பட்டனவோ,
எவனால் நாற்கதித் துன்ப சுழற்சி அகற்றப்பட்டதோ, எவனால் பிறவி உயிர்கள் திருவறமாகிய
கண்களைப் பெற்றனவோ, அந்த மல்லிநாதனை நான் சரணடைகிறேன்.
----------
ஜம்பூத்வீபம்,
கிழக்கு விதேகம், கச்சகாவதி நாட்டின் வீதசோக நகரத்து அரசன் வைஸ்ரவணன், பட்டத்தரசி தனஸ்ரீ
எனப்படும் லட்சுமி மகாதேவி. இவர்கள் மகன் ஸ்ரீதரன்; ஒருநாள் வைஸ்ரவணன், மழைக்காலத்தில்,
காட்டில் பொழுதுபோக்காக சென்று கொண்டிருந்தான். அச்சமயம், அங்கு ஓரிடத்தில் வளர்ந்திருந்த
மாபெரும் ஆலமரத்தைக் கண்டான்; அது தன் அடிமரத்தால், தான் தோன்றி, ஊன்றியுள்ள நிலப்பரப்பை
முழுதும் தன்னடிப்படுத்தி நின்றிருந்தது; விண்ணைத் தொடுவது போல. மேல் நோக்கிய பெரும்
கிளைகளைக் கொண்டிருந்தது; புத்திர மகன்கள், பேரப்பிள்ளைகள் போன்ற பல சந்ததியினரோ என
எண்ணும்படியாக, ஒன்றிலிருந்து ஒன்று என வளரும். மெத்தென்ற முனைகளைக் கொண்டிருந்தது;
திக்விஜயம் செய்வதில் விருப்பமுடையது போல எல்லாத் திசைகளிலும் வளர்ந்த நீண்ட கிளைகளைக்
கொண்டிருந்தது; இந்தக் கிளைகளுக்குப் பலம் தருவதற்காக ஆங்காங்கே, பாதுகாப்பிற்காக அறிவார்ந்த
பலசாலிகளை வைப்பது போல, அந்தப் பெரும் கிளைகளின் நடுவில் தொடங்கி, தரையளவு தொங்குகின்ற,
பெரும் விழுதுகளைக் கொண்டிருந்தது. மற்றும் தன்பெரும் கிளைகள், சிறு கிளைகள் ஆகியவற்றினால்
ஏற்பட்ட அடர்ந்த நிழலால் பூமண்டலத்தைக் குளிரச் செய்வது போலிருந்தது.
இந்த
ஒப்பற்ற, மாபெரும் ஆலமரத்தைக்கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றான் வைஸ்ரவணன். கண்குளிர அதைநோக்கி,
''பாராளும் மன்னன்" இந்த ஆலமரம் என எண்ணி அகம் குளிர்ந்தான். அந்த ஆலமரத்திற்கு
"வனஸ்பதி ராஜன்" எனப் பெயர் சூட்டினான். அந்த ஆலமரத்தைச் சிறந்த ஆடை, ஆபரணங்களால்
அலங்கரிக்கச் செய்தான். அதைச் சுற்றிலும் அழகிய வாயிலும் மாடமும் கொண்ட மதிலை அமைக்கச்
செய்தான். காவலாளிகளை ஏற்படுத்தி அந்த விருட்சத்தை நன்கு காக்குமாறு செய்தான்; மீண்டும்
காட்டினுள் சென்று பின்னர் பொழுதுபோக்கி விரைந்து வனஸ்பதிராஜனாகிய ஆல விருட்சம் இருந்த
இடத்திற்குத் திரும்பினான்.
ஆனால்
அங்கே ஆலமரம் இல்லை; அதிர்ச்சியுற்றான்; மனம் கலங்கினான் மன்னன்; வனஸ்பதி ராஜனுக்கு
நேர்ந்தது என்னவோ? எனக் கேட்டான். "பெரும் முழக்கத்துடன் இடிவிழுந்து ஆலமரம் பொடிப்பொடியாகி
அழிந்தது" எனக் கூறினர். மன்னன் மனம் பெரிதும் கலங்கியது; இருவினைப்பயன் காரணமாக
நாற்கதிகளில் திரியும் உயிர்களின் இயல்பு இதுவே என உணர்ந்தான்; இளமையும் எழிலும், ஆண்மையும்,
அழகும், பெரும் செல்வமும், தேஜசும், வெற்றியும், அரச பெருமையும் அழியக் கூடியவை என்பதை
இடியால் அழிந்த இந்த ஆலமரம் தெளிவாக உணர்த்துவதை அறிந்து மனம் தெளிந்தான்.
'வாயில்
மாடமும் மதிலும் அமைத்துக்
காவலாளரிற்காப்பு
நனிபடுத்
தரிதினிற்
போகிய டவினிலாடல்
மருவியது
விடுத்து மறித்துமந் நெறியே'
'என்னை
செய்ததிவ்வநஸ்பதிராஜன்' என
'இது இதற்குற்றிதிறைவ' என்றலும்,
கதுமென
மநநனி கலங்கினனாகி வெடிப்படமுழுக்கத் திடியுருமேற்றிற் பொடிப் பொடியாகியது பொன்றினமைகண்டு
நெடிது
நினைந்து நெஞ்சு கலுழ்வெய்தி
இருவினைப்
பயத்திற்திற் திரிதரும் உயிர்கட்
கருவலி
யுடைமையும் ஆண்மையும் அழகுந்
திருமலி
செல்வமும் தேசும் வென்றியும்
இளமையும்
எழிலும் இராச விபூதியும்
வளமையுங்கிளையும்
மறித்து நோக்குதற்கு
நிறுத்துதல்
அருமையை நிறுத்தியதிது என
வெறுத்துடன்
விடுத்தனன் வினைப்பயன் யாவையும்"
வைஸ்ரவணன்
உலகப் பற்றற்றான்; மகன் ஸ்ரீதரனுக்கு அரசபாரத்தைக் கொடுத்துவிட்டு, முன்னூறு அரசர்களோடு
துறவைக் கைக்கொள்ள உறுதி பூண்டான்; ஸ்ரீநாக மலையில் எழுந்தருளியிருந்த பாலசந்திரரெனும்
ஸ்ரீநாக முனிவரிடம் துறவை ஏற்றான். கடுந்தவமியற்றினான். தூய நற்காட்சி முதலான 16 பாவனைகளை
முழுமையாக ஓம்பி அதன் காரணமாக தீர்த்தங்கர நாம பெரும் நல்வினை கைவரப்பெற்றான்; ஆயுள்முடிவில்
நால்வகை உடலை ஆராதனையுடன் விட்டகன்று, பஞ்சாநுத்தரத்தில் அபராஜித விமானத்தில் அஹமிந்திர
தேவனாகப் பிறந்தான்.
பரதக்ஷேத்திரம்,
வங்க நாட்டு மிதிலாபுரத்து இட்சுவாகு குலவ காஸ்யப கோத்திரத்து அரசன் கும்பன், அரசி
பிரபாவதி. அபராஜித விமானத்து எழுந்தருளியிருந்த பகவான், அங்கு முப்பத்துமூன்று கடற்காலம்
அகமிந்திர சுகம் அனுபவித்தார். மாதேவி பிரபாவதி 16 மங்கலக்கனவுகள், வாயில் யானை நுழைதல்
கனவு காணுதல், சொர்க்காவதரண கலியாணத்தை தேவேந்திரன் நிகழ்த்துதல், முதலிய மங்கலக் குறிப்புகள்
நிகழ்ந்திட, அகமிந்தர லோகத்தில் பகவானுடைய ஆயுள் நிறைவுற்று பின் அங்கிருந்து இறங்கி,
சித்திரைமாதம், வளர்பிறை, பிரதமை, அசுவினி நட்சத்திரத்தில் பிரபாவதி மாதேவியின் கர்ப்பவாசம்
அடைந்தருளினார்.
ஒன்பது
மாதங்கள் நிறைவுற்றன; மார்கழி மாதம், வளர்பிறை, ஏகாதசி, அசுவினி நட்சத்திரத்தில் மூவகை
ஞானங்களுடன் பகவான் கர்ப்பாவதரணம் செய்தருளினார். அதுபோதே, கல்ப, ஜோதிஷ்க, வியந்திர,
பவணவாசியர் எனும் நால்வகைத் தேவதேவேந்திரர்கள் வந்து மந்திராபிஷேக ஜென்மாபிஷேக கலியாணத்தைச்
சிறப்புடன் செய்தனர்; பகவானுக்கு மல்லிநாதன் என்று திருப்பெயரிட்டு, பணிந்துவணங்கி,
விடை கொண்டு சென்றனர்.
அரபட்டாரகர்
தரும தீர்த்த சந்தானகாலம் ஆயிரம் கோடி ஆண்டுகளாகும். இதனுள் அடங்கிய பரமாயுள் கொண்டவராகி
அவதரித்தருளிய மல்லிநாத சுவாமியின் பொன்னிறமான திருமேனியின் உயரம் 25 வில்; பரமாயுள்
ஐம்பத்தையாயிரம் வருடங்கள்; குமாரகாலம் நூறு வருடங்கள் சென்றபின் தம் விவாகத்திற்காக
ரமணீயமாக அலங்கரிக்கப்பட்ட நகரத்தை உலா
எழுந்தருளிப்பய்க்கும்போது முற்பிறவி நினைவுற்றது; பஞ்சாணுத்தர விமானத்தில் அகமித்திரனாக இருந்த ஓப்பில்லா வைபவத்தை அறிந்த பசுவானுக்கு, இந்த சுகமும் துளிபோன்றதே என எண்ணினார். விதராக பாவனையையும் அதனால் ஏற்படும் மகிமையையும் பற்றியும் சிந்தித்தார்; துளி சுகத்திற்குக் காரணமான இந்த விவாகம் பற்றியும் சிந்தித்தார். இந்த அலங்காரங்கள், ஆடல், பாடல்கள், முதலியன எல்லாம் விவேகமில்லாதவர்களால் செய்யப்படும் நடிப்பே என்று சிந்தித்தார்.
துறவு
மனப்பான்மை வலுவுற்றது; உலகப்பற்றற்றார். அதுபோதே
தேவதேவேந்திரர்கள்
பரிநிஷ்க்ரமண கலியாணமாகிய துறவு
பூணும் நிகழ்ச்சியை சிறப்புடன் செய்தனர். 'ஜயை' எனும் துறவுப்
பல்லக்கில் பகவான் அமர்ந்து, பின் ஸ்வேதவனம் எனும் உத்யாவனத்தில் எழுந்தருளினார். முன்னூறு அரசர்களுடன் இருநாட்கள் உபவாசம் செய்தருளி, மார்கழி மாதம், வளர்பிறை, ஏகாதசி, அசுவனி நட்சத்திரத்தில் பிற்பகலில் பரமஜின தீட்சையை ஏற்றருளினார். அதுபோதே மனப்பர்யய ஞானம் கைவரப்பெற்று நால்வகை ஞானதாரியானார். மறுநாள், தவநெழிமுறைகளின் பொருட்டு, சர்யாமார்க்கம் எழுந்தருளினார்: மிதிலாபுரியில், மிக்க கவனம், பக்தி, பேராசையின்மை, கருணை, ஆற்றல், பொறுமை, கூர்த்த அறிவு என்னும் ஏழு சிறந்த பண்புகளைப் பெற்றிருந்த நந்திஷேண மன்னன் இல்லத்தில் எழுந்தருளி உணவேற்றருளினார்; தேவர்களால் பொழியப்பட்ட பொன்மழை, தேவதுந்துபி, சுகந்திமந்தமாருதம், தேவஸ்துதி, மலர்மாரி ஆகிய ஐவகை சிறப்புகள் நிகழ்ந்தன; ஒப்பற்ற மவுனியாகவே, தவவனமடைந்து மறைபுரி காலமாகிய ஆறுநாட்களுக்குப்பின், தான் துறவேற்ற ஸ்வேதநத்தில் சோகமரத்தடியில், கற்பாறை மீது எழுந்தருளி கடுந்தவம் புரிந்தார்.
மார்கழி
மாதம், வளர்பிறை, ஏகாதசியன்று, அசுவினி நட்சத்திரத்தில், முற்பகலில், காதிவினைகளை அகற்றி
கேவல ஞானியானார். அதுபோதே நால்வகைத் தேவதேவேந்திரர்கள் பகவானுக்கு சமவசரணம் முதலான
சிறப்புகளுடன் கூடிய கேவலஞான கலியாண பூஜையைச் செய்து பகவானுடைய பாதசேவையில் ஈடுபட்டனர்.
பகவானுக்கு
விசாகர் முதலான கணதரர்கள் இருபத்தெட்டுபேர் பூர்வதரர் ஐந்நூற்று ஐம்பதுபேர். சிட்சகர்
29 ஆயிரவர்; அவதி ஞானிகள் 2200; கேவலஞானிகள் 2200; வைக்ரியிகர் 2900; மனப்பர்யய ஞானிகள்
1750 பேர்; மகாவாதிகள் 1400; ஆக, தபோதநர்கள் நாற்பதினாயிரவர்; புத்திஷேணை முதலான ஆர்யாங்கனைகள்
ஐம்பத்து ஐயாயிரவர்; சிராவகர் ஒரு லட்சம்; சிராவகிகள் 3 லட்சம்; தேவதேவியர் எண்ணற்றவர்;
மற்ற பிராணிகள் எண்ணிலடங்கியவை;
இந்த
பன்னிரண்டு கணங்களால் சூழப்பட்ட பகவான் தருமத் தலங்களெங்கும் ஸ்ரீவிஹாரம் செய்து, திருவறத்தை
உபதேசித் -தருளினார். இவ்வாறு நாற்பத்து ஒன்பதாயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகள் மற்றும்
ஆறு நாட்கள் ஸ்ரீ விஹாரம் நிறைவுற்றது; இதன் பின், ஸ்ரீவிஹாரத்தைத் துறந்தார்; சம்மேதசிகரியை
அடைந்து, ஐயாயிரம் முனிவர்களுடன், ஒருமாதம் பிரதிமா யோகதாரியாக எழுந்தருளி, பங்குனிமாதம்,
வளர்பிறை பஞ்சமியில், பரணி நட்சத்திரத்தில், முன்னிரவில், யோகத்ரயங்களை தடுத்து நிறுத்தி,
மூவுடல்களையும் ஒதுக்கி, அகாதி வினைகள் அகல, மூவுலகச் சூடாமணியாகிய மோட்ச சாம்ராஜ்யத்தை
அடைந்தருளினார்.
No comments:
Post a Comment