ஆதிநாதர் ஒருபா ஒருபது

 ஆதிநாதர்  ஒருபா  ஒருபது.


       பா வகை  ;  வெண்பா

       உட்பிரிவு : இன்னிசை வெண்பா.


அயோத்தி  யரச  னரசர்க்கு  வேந்தனாம்

நாபியின்  தேவி  மருதேவி  மைந்தன்

அகமிந்த்ர  தேவ  னவதாரம்  கொண்டார்

அயோத்தி  நிலமே  மணந்து : 1


மணந்தது  மண்ணுலகு  வந்தார்  வானுலகோர்

வைத்தார்  பெயரினை  ஆதியென  அன்புடனே

கூடியே  நீராட்டி  பாடி  மகிழ்ந்தனர்

நாடியே  வானுலகு  சென்று 2


சென்றபின்  மக்க  ளழைத்தன  ராதியென

பந்துக  ளாடி  பிறையாய்  வளர்ந்தார்

கலைக  ளனைத்தும்  தினமும்  தெளிந்தார்

இளைஞன்  பருவ  மடைந்து. 3


அடைந்தார்  வாழ்க்கையில்  தேவியர்  பாங்காய்

சுனந்தையும்  யஸ்யஸ்  வதியு  மிணைந்தனர்

கல்வியும்  செல்வமும்  கண்னென  சேர்ந்ததால்

பொங்கியே  பூத்தது  வாங்கு . 4


ஆங்கவர்  பெற்றோர்  மணிமுடி  சூட்டினர்

மன்னர்கள்  வந்த  வரடியை  தொட்டனர்

பொன்பொருள்  வைத்து  பணிவில்  வணங்கினர்

    பூமகனை  வாழ்த்தியே  நின்று 5


நின்றவர்  ஐங்குலம்  கண்டு  வழங்கினார்

இட்சவா  குக்கு  யரசனா  யானாரே  

ஆறு  தொழில்க  ளவனிக்குத்  தந்தார்  

நிறைகுண  வாட்சி  நிறைந்து 6


         நிறைந்த  சபையினில்  நீலாஞ்ச  னையாட  

நெஞ்சமே  பொங்கிட  மன்னன்  மகிழ்ந்திட  

மங்கையி  னாட்ட  மிடையினில்  நிற்க

       கொடியென  வீழ்ந்தா  ளணங்கு. 7


அணங்கி  னிறப்பு  நிலையாமை  காட்டிட

ஆதியின்  நெஞ்சி  லெழுந்தது  ஊற்று

துறவெனும்  பற்று  தொடர்ந்தது  நெஞ்சில்

மனமுட  லேற்றத்  துறவு. 8


துறவினில்  தோன்றி  துவங்கிய  வாழ்க்கை

கைலாயம்  சென்று  முடிந்தது  வெந்தவத்தில்

ஊணினைப்  பெறவும்  வீதியில்  வந்தார்

மலர்ந்தது  நல்திரிதி  யாங்கு 9


  ஆங்கவ  ராயிர  மாண்டுக  ளத்தவத்தில் 

ஆதியின்  யாக்கையும்  நிர்மலம்  பூத்திட

தூயநல்  லான்மா  துறந்தது  மண்ணை

அருகர்  பதவியை  யணைத்து 10


  

  


No comments:

Post a Comment