Monday, April 11, 2016

KARKALA - கார்காளா


BAGHAVAN BAHUBALI -  பகவான் பாகுபலி 




Location: with latitude, longitude of (13.20401, 75.00606 )

click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as (13.20401, 75.00606 )


Bangaluru   Hassan   saklespur   Dharmasala   Belthangady   Aladangady   Bajagoli   Karkal   = 365 Kms.


Mysore   Srirangapatna   Hassan   saklespur   Dharmasala   Belthangady   Aladangady   Bajagoli   Karkal  = 305 Kms.




ஷீர்லாலிருந்து புறப்பட்டு கார்காளா வந்தடைந்தோம். வழியில் ஒரு உணவுவிடுதியில் மாலை உணவை  எடுத்துக் கொண்டு, சதுர்முக பஸ்திக்கு சென்றோம்.

மாலை 6.30 மணி ஆகியிருந்தது. ஆனால் பண்டிட்ஜி ஆலயத்தை மூடிவிட்டு முனிமகராஜ் பிரவசனத்தை கேட்க சென்று விட்டார். அருகிலுள்ள மடவளாகத்தில் உபதேசமொழி கேட்டுக் கொண்டிருந்தது.

உடன் கார்காளா வின் சிறப்பை பறைசாற்றிக் கொண்டிருக்கும் பகவான் பாகுபலி சிலை நிற்கும் மலைக் கோவிலுக்கு சென்றோம் ஆனால் இருட்டி விட்டது. 150 படிகளைக் கொண்ட அதன் மேற்தளத்தை  அடைந்த போது, ஆலயம் மூடப்பட  உள்ளதாக தகவல் வந்தது. பிரம்மஸ்தம்பத்தை வணங்கி விட்டு; உள்ளே செல்லும் போது பாதுகாவலர் சீக்கிரம் வந்து விடுங்கள் மூடப்போகிறேன் என்று தான் சொல்லியிருப்பார்; புரிந்தது போல தலை  ஆட்டிவிட்டு நிமிர்ந்தபோது அழகான 42 அடியுயர ஒரே கல்லில் ஆன நிர்வாண கோலத்தில் நிற்கும் பகவான் பாகுபலியின் பிரம்மாண்ட உருவம் குறைவான வெளிச்சத்தில் தெரிந்தது.

அவசர அவசரமாக இருவரும் அருகிற் சென்று வணங்கினோம். ஒரு தீபம் மட்டும் எரிந்து கோண்டிருந்தது. ஆஜானுபாகுவான தோற்றத்தை ஆங்காங்கே தெரிந்த  வானத்திலிருந்த நட்சத்திரங்கள் ஒளியிட்டு காட்டிக் கொண்டிருந்தன.  பலமுறை விஜயம் செய்து மனதில் படிந்துள்ள அவர் உருவத்தை திரையில் கொண்டுவந்ததால், எதிரே தெரிந்த நிஜ உருவத்தின் அம்சங்கள் தெளிவாக தெரிந்தன.

சற்று அமர்ந்தபோது பாதுகாவலரின் கூக்குரலின் அழைப்பு மணி, உடன் எழுந்து வாயிலைக் கடந்தோம். அவரும் அந்த பிரவசனத்திற்கு செல்வார் போலுள்ளது. கிழே இறங்கிய போது 7.30 மணியை கடந்திருந்தது.

சகோதரர்கள் வாங்கி வைத்திருந்த கடலையை வாங்கி அசை போட்ட படியே வேனை நெருங்கினோம். (அரை அடி நீளமிருந்தாலும் 60 கடலைபருப்புகள் கூட இல்லை அப்பொட்டலத்தில், திடீர் என  தீர்ந்துவிட்டது.)




*******************


Karkala located at the bottom of Western Ghats covered with greenery around the year, was the capital of Jain rulers belonging to bhairava dynasty. The town was called Pandya Nagari during the period of Jain rule, and later became known as Karikallu , ie abandon of black stone, then Karkal and finally to Karkala .



கார்காளா ஸ்தலம்….


ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட, சரியாக 41.5 அடியுயர பகவான் பாகுபலி கற்சிலை, உடுப்பி ஜில்லா, கார்காளா நகரத்தில் ஒரு சிறு குன்றின்மீது 1432 ம் ஆண்டு இதனைத் தலைநகராக  கொண்ட  மன்னன் வீரபைரவ பாண்டவர்; கார்காளா சமண மடத்தின் மதகுருவான தவத்திரு லிலிதகீர்த்தி மடாதிபதி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் இச்சிலையை உருவாக்கியுள்ளார். அப்புனித சிலைக்கு எதிரே அமைந்துள்ள பிரம்மதேவ ஸ்தம்பம் 1436ம் ஆண்டு அம்மன்னரே நிறுவியுள்ளார்.

அக்காலத்தில் இப்பகுதியில் ஜைனம் தழைத்தோங்கி இருந்துள்ளது.

கடந்த 586 ஆண்டுகளாக பாகுபலி பகவான் அம்மலைமீது நின்று  கொல்லாமை, பற்றின்மை, தியாகம், அமைதி போன்ற குணங்களை உபதேசித்து  வருகிறார். அம்மாஹா தபஸ்விக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரவண பெலகொளா போன்றே மஹா மஸ்தகாபிஷேகம் என்னும் புனித அபிஷேகவிழா; பால்,கந்தம், கல்கசூர்ணா, மஞ்சள்நீர், கரும்புச்சாறு, இத்தியாதி பூஜை வஸ்துக்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கடந்த 2015 பிப்ரவரி மாதமும் நடைந்தேறியதை ஊடகங்கள் வழியே அறிந்திருப்போம்.

மன்மதன் என்றழைக்கப்படும் பாகுபலியின் உருவத்தில் வண்ணக்கலவையாக அபிஷேகம் செய்வதை பார்த்தால் எவ்வளவு அழகாக தோன்றும் என்பதை சொல்லவும் வேண்டுமோ…

மேலும் பல ஜினாலயங்களைக் கொண்ட ஸ்தலம். இரண்டு சதுர்முக ஜினாலயங்கள் உள்ளன. ஒன்று 52 அடியுயர மானஸ்தம்பத்துடன் அனிகெரே எனும் ஏரிக்கரையிலும், மற்றொன்று குன்றின்மீதுமாக  உள்ளன. 

மேலும் 13 ஜினாலயங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.


-----------------------------------------------  

These benevolent rulers have built more than 18 ancient stone structured Jain temples. These temples include two magnificent Chathurmukha temples, one situated on a hill top and the other one is the midst of a 25 acres spread lake called Anekere. The 52 feet tall monolith Manasthanbha is sculptured on all its four sides.



அந்த ஜினாலயங்கள் காலை 9 மணி வரைதான் திறந்திருக்கும் என்பதால் காணச் செல்லவில்லை.

அதனால் எங்களது வேன் அருகிலுள்ள நல்லூர் பஸ்தியை காண பஜகோலி வழியாக செல்ல புறப்பட்டது. வழியில் அத்தலத்திலுள்ள சமவசரணத்தின்  அமைப்பை வர்ணித்தபடியே இரவு 8.05 மணியளவில் சென்றடைந்தோம்.


King Veera Pandya, at the insistence of his Guru Lalitakeerti, the pontiff of Karkala Jaina Math, installed 41.5 feet large statue of Bhagawan Bahubali on the rocky hill of Karkala. The date of the installation has been ascertained as February 13, 1432. This is the icon of the town. Veera Pandya also installed the Brahmadeva Pillar in front of the statue in 1436.


கார்காளா சமண மடத்தின் மதகுருவான தவத்திரு லிலிதகீர்த்தி மடாதிபதி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் வீரபாண்டிய மன்னன் 41.5 அடி உயர பகவான் பாகுபலியின் பிரம்மாண்டமான சிலையினை 1432 ம் ஆண்டு நிறுவியுள்ளார். அவ்வூரின் அப்புனித சிலைக்கு எதிரே அமைந்துள்ள பிரம்மதேவ ஸ்தம்பம் 1436ம் ஆண்டு அம்மன்னரே நிறுவியுள்ளார்.


This idol of Shri.Bhagavan Bahubali Swami is emanating the glorious massage of non-violence, nonmaterialism, sacrifies, peace and tranquility to the world. The 582 years old Shri Bahubali statue is annointed (Mahamasthakabhisheka) every twelve years by the devotees of Bhagavan Bahubali Swami and members of Jain community. The last Mahamasthakabhisheka was between January 21st to January 31st 2015.



பகவான் பாகுபலி சிலையாக நின்றாலும் அஹிம்சை, பொருட்பற்றின்மை, தியாகம், சாமாதானம், அமைதி போன்ற உன்னத செய்திகளை உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார். 582 ஆண்டைக்கடந்த ஸ்ரீபாகுபலிநாதருக்கு அவரது பக்தர்களும், சமணப் பெருமக்களும் ஒன்று கூடி 12 ஆண்டுகளுக்கு முறை அபிஷேகம் செய்கின்றனர். அதனை மஹாமஸ்தகாபிஷேகம் என கொண்டாடுகின்றனர். கடைசியாக 2015, ஜனவரி 21-31 வரை அந்த வைபோகம் நிறைவேற்றப்பட்டது.



The beautiful sight of Bhagavan Bahubali idol being anointed with various elements like milk, Gandha, Chandana, Calkachurna , turmeric liquid, Sugarcane Juice, etc. during Mahamasthakabhisheka is an ever memorable event. The devotees immerse in the emotional and spirtual ocean in the presence of glorious idol of Bahubali. Shri Bhagavan Bahubali is called Manmatha in jain tradition. This lord of beauty is seen in his most beautiful form during Mahamasthakabhisheka. 



 


பால், கந்தம், சந்தனம், கல்கசூர்ணம், மஞ்சள் நீர், கரும்புச் சாறு, மற்றும் பல புனிதப் பொருள்களால் அப்பகவான் சிலைக்கு மஹாமஸ்தகாபிஷேகம் செய்யும் நிகழ்வுகள்   கண்கொள்ளாத காட்சியாக மனதைவிட்டு நீங்காத நிகழ்ச்சியாக இருக்கும். அந்த அபிஷேக நிகழ்வுகளின் போது,  மன்மதன் என பக்தர்களால் அழைக்கப் படும் அப்பெருமான் பல அழகிய வண்ணங்களில் காட்சியளித்து அனைவரையும் பரவசப்படுத்துவார் என்றால் மிகையாகாது.

******************

Sunday, April 10, 2016

VARANGA - வராங்கம்



வராங்க திகம்பர் ஜைன் ஜினாலயங்கள்

VARANGA DIGAMBER JAIN BASADIs




 


Location: 

FOR      Shri Neminath basadi with latitude, longitude of  (13.3955775.00611)
       
            Matada basadi  (13.39538, 75.0073)

              HERE CHATURMUKHA BASADI -  (13.39587, 75.00589


click for map  put on the search box the above figure.

while travelling open navigator on the smart phone find your location and destination as case may be of appropriate numbers.


Bangaluru  Hassan  saklespur  Dharmasala  Belthangady  Aladangady  Bajagoli  Karkal  Varanga  = 385 Kms.

Mysore  Srirangapatna  Hassan  saklespur  Dharmasala  Belthangady  Aladangady  Bajagoli  Karkal  Varanga  = 320 Kms.


************************* 


   Shri Neminath basadi 



Varanga is a popular pilgrim center especially for Jains. This beautiful village houses most ancient and wonderful Basadis (Jain Temples).

The main attractions of Varanga are Neminatha Basadi, Chandranatha (Matada) Basadi and Kere Basadi.

Neminatha Basadi: The history of Neminatha Basadi dates back to 1200 years. This basadi was constructed during the reign of Varanga Raya. The Neminatha Basadi is popularly called as Here Basadi which means Big Temple. The Basadi houses 24 Tirthanakaras in Kayotsarg posture. 









45 அடி நெடிதுயர்ந்த மானஸ்தம்பத்திற்கு அருகில் வேனை நிறுத்தி விட்டு அண்ணாந்து பார்த்தபடி அருகிலிருந்த ஆலயத்தின் சுற்றுச்சுவர் பக்கவாட்டு திறப்பின் வழியாக உள்ளே நுழைந்தோம்.

எதிரே நாற்று நட்ட பரந்த வயல். குளம் போன்று நீர் மழையினால்  நிரம்பி கிடந்ததை கண்டு கொண்டிருந்த போதே லேசான பொடித்தூறல்கள். அவ்வயலின் உயரமான வரப்பின்  மேட்டுப்பகுதியின் மேற்கே, கிழக்கு நோக்கிய ஸ்ரீ நேமிநாதஸ்வாமி பஸ்தி, வடதிசை  நோக்கி மடத்துடனான ஸ்ரீ சந்திரநாதஸ்வாமி பஸ்தி, மேலும் வரப்பின் கிழக்குப் பகுதியில் பெரிய குளமும் அதன் நடுவே ஜலமந்திர் எனும் சதுர்முக பஸ்தி சுற்றிலும் இவையனைத்தும் அழகாக காட்சியளித்தன.

முற்காலத்தில் இத்தலத்தில் பல ஜைனக்குடும்பங்கள் மேற்குடியாக வாழ்ந்த இடம் என்பதை பெரிய பரப்பளவில் அங்குள்ள ஆலயங்கள், மடங்களைப் பார்த்தாலே ஜைன வரலாற்றின் மேன்மை புரிந்தது.

கண்டிப்பாக அப்போது வாழ்ந்த அரசர்களின் முழுஆதரவும் இவர்களுக்கு கிடைத்திருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

என்ற சிந்தனையுடன் ஸ்ரீநேமிநாத பஸ்தியின் பிரதான வாயிலுக்குள் நுழைந்தோம். காமரா நனையாமல் இருக்க பிடித்து வந்த குடையை மடக்கி ஜினாய வளாகத்தில் வைத்து விட்டு (திரும்பும் போது மழை இல்லை எனின் மறந்து விடுவேன். கவனித்து எடுத்து வருபவரிடம் வ…) முன்புறத்தை புகைப்படம் எடுத்தேன்.  உள்ளே அனுமதியில்லை என்ற பிரசுரம் இருந்ததை கவனிக்க வில்லை மேலும் சில பகுதிகளை எடுத்ததும் கவனித்தேன்.


1200 ஆண்டுகளைக் கடந்து  நிற்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஹைரே பஸ்தி/ பெரிய கோவில் ஐ உருவாக்கியவர் ஸ்ரீவராங்கராய என்னும் மன்னர் ஆவார்.

குடவரையை தாண்டியதும் துவஜமரம் காட்சியளித்தது. உற்சவங்கள் நடைபெறும்  ஜினாலயம் இது  என்பதை தெரிவிப்பதே இக்கொடிமரத்தின்  நோக்கம். அகன்ற திருச்சுற்று அரணுக்கு  நடுவே பெரிய கட்டுமானமாக ஜினாலயத்தோற்றம்.

விஜயநகர  ஆலயக்கலை தோற்றத்தை ஒத்தவாறு கட்டப்பட்டிருந்து. வாயிற் படிகளின் இருபுறகும் யானைசிலைகள் வரவேற்றன. பெரிய முகமண்டபம், நவரங்க மண்டபம், அந்தராளம், கர்பகிரஹம் என அடுக்குகளைக்  கொண்டிருந்தது.

70 அடிக்கு 70 அடி என்ற பரப்பில் உருவான இவ்வாலய கல்வெட்டில் இத்தலத்தில் 8ம் – 9 ம் நூற்றாண்டுக்கும் இடையிலான காலத்திலிருந்து ஜைன மடம் இருந்ததாக குறிப்புகள் உள்ளன என்று அங்குள்ளவர்கள் (சென்ற முறை) தெரிவித்தனர்.

------------------------------------ 










The main attraction of this basadi is 5 feet black statue of Lord Neminatha, the 22nd Tirthankara in Padmasana position seating on 'Kamala Peeta' (lotus seat).

Neminatha is also considered as God of the Village (Gramadevaru). Kushmandini Devi, the Yakshi dedicated to Lord Neminath also called as Ambika Devi and idol of Yakshi Padmavati Devi is also present.
                                            
A small shrine dedicated to Kshetrapala is situated outside the temple. A tall Manasthamba of 45 feet can be found outside the temple and 4 Thirthankaras are erected on the top of the pillar.


நேர்த்தியான கருங்கல்லால் செதுக்கப்பட்ட 5 அடியுயர கருங்கல்லாலான ஸ்ரீ நேமிநாதர்சிலை பிரபாவளியுடன் காணப்பட்டது. அவர் ஜெருசோப்பாவில் கண்டதுபோலவே மூன்றில் ஒரு பங்கு பத்மமேடையில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.


 பிரபாவளி உச்சியில் பெரிய முக்குடை, வளைவு முடியும் இடத்தில் சாமரைத்தேவர்கள் மற்றும் அடித்தண்டின் கீழ் பகுதியில் ஸ்ரீ சர்வாண்ண யக்ஷன், ஸ்ரீ கூஷ்மாண்டி யக்ஷியின் புடைப்புச்சிற்பங்களும் அலங்கரிக்கின்றன.  


கர்பகிருஹத்திற்கு வெளியே ஒருபுறம் ஸ்ரீபிரம்மதேவர் குதிரையில் அமர்ந்த நிலையில் கற்சிலையும், மறுபுறம் ஸ்ரீகூஷ்மாண்டி கற்சிலையும் நிறுவப்பட்டுள்ளன. சில உலோகச் ஜினர் சிலைகளும், ஸ்ருதஸ்கந்தமும் காணப்பட்டன.


24 தீர்த்தங்கரர்கள் சிலைகள் காயோத்சர்க்க நிலையில் உலோகச்சிலைகள் இருந்துள்ளதை பாதுகாப்புகருதி அகற்றியுள்ளனர்.


வெளிச்சுற்றின் மூலையில் க்ஷேத்ரபாலகர் சன்னதி, பின்புறம் கீர்த்திஸ்தம்பம் போன்ற வடிவமும் காணப்பட்டது. முட்செடிகள் மழையினால் மண்டிக்கிடப்பதால் இம்முறை அருகே செல்லவில்லை.

தரிசனத்தை முடித்து விட்டு, அங்கிருந்து ஸ்ரீ சந்திரநாத பஸ்தியை நோக்கி நகர்ந்தோம். 

Matada bassadi 

Chandranatha Basadi: Chandranath Basadi is another important Basadi of Varanga. This basadi is also called as Matada Basadi because it houses the Jain Mutt. It is believed that this Basadi has the history of 1000 years. The main deity worshipped here is Chandraprabha, 8th Tirthankara. The uniqueness and main attraction of this Basadi is the idol of the deity is made of Chandrashila and one could see the light across the idol.


மத்தாட பஸ்தி

இங்கு மடம் இருந்ததினால் மத்தாட பஸ்தி என்றும் அழைக்கின்றனர். முற்றம் தாழ்வாரத்துடன் பெரிய மாளிகையை போன்று காணப்படும் இதன் கர்பகிருஹத்தில் ஸ்ரீ சந்திரநாதரின் சந்திரஷீலா எனும் கண்ணாடிவகையைச்சார்ந்த பொருளால்  செய்யப்பட்ட 2 அடி சிலை வேதியில் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.  

அம்மேடைக்குக் கீழ் ஸ்ரீ பத்மாவதி அம்மன்  உலோகச்சிலை அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருகிறது. தரசினத்தை முடித்துக் கொண்டு அருகிலுள்ள குளத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கெரே பஸ்திக்கு செல்ல, படகு சவாரிக்கான அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொண்டோம்.


வரப்பில் நடந்து  சென்றடைந்த போது, படகுத்துறையில்  அதிகமாக பக்தர்கள் கூட்டம்.  முதல் சவாரியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் மலையடிவாரத்தில் அமைந்த  பள்ளத்தாக்கும், நீண்ட ஏரியை யொத்த குளமும் சுற்றியுள்ள மரங்கள், செடி, கொடிகளின்  அழகைப் பருக வாய்ப்பு கிடைத்தது.


 Kere basadi 


The uniqueness of Kere Basadi is that it is situated in the midst of a gentle green lake in Varanga. It seems like a lotus in a pond. This basadi is also called as Jalamandir.

This Basadi remains closed most of the time and devotees can request the priest of the Basadi to take them to the Basadi. The only way to reach this Basadi in Varanga is in a small wooden boat.

Tranquil lake contrasts well with the sharp quadrilateral architecture of the basadi and gentle swaying hills at the distance.







கெரெ பஸ்தி



படகு திரும்பி வந்து பயணிகளை இறக்கிவிட்டதும்; எங்களை ஏற்றுச் சென்றது. குளத்தின் ஆழத்தில் படகு சற்றும் அதிர்வில்லாமல் ஆகாய விமானம் போல் முன்னேறியது. சிறிய வகை மீன் கூட்டம், வழக்கமாய் கிடைக்கும் ஆகாரத்தை எதிர்நோக்கி எழுந்து துள்ளி குதித்த வண்ணமாய் கூடவே நீந்தி வந்து கொண்டிருந்தது.  கைகளால் நீரை தூழாவியபடியே நடுவிலுள்ள சதுர்முக பஸ்தியின் படித்துறையை அடைந்தோம்.


ஜெருசோப்பா சதுர்முக பஸ்தியைப்  போன்றே சிறிய அளவிலான கட்டமைப்பு. நாற்புறமும் நவரங்கம், அந்தராளம், கருபகிருஹம்  என அதில் பாதியளவு பரிமாணத்தில் கட்டப்பட்டிருந்தது. அங்குள்ள சிற்ப  வேலைப்பாடுகள் இல்லையெனினும் அழகிய ஜதிவரி, பட்டை, பத்மம் என அழகாக சுவர் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் கட்டைச்சுவருடன் வலம் வரும் படி திருச்சுற்று அமைக்கப்பட்டிருந்தது.

கிழ்திசை வாயிலுக்கு நேராக ஸ்ரீ பார்ஸ்வநாதர் சிலையும், அடுத்து ஸ்ரீ நேமிநாதர், ஸ்ரீ அனந்தநாதர், ஸ்ரீ  சாந்திநாதர் என்ற வரிசையில் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் நின்ற நிலையில் வழவழப்பாக கருங்கலில் முழுபிதுக்கப் புடைப்புச்சிற்பங்களாக தெரிந்தன. இருபுறமும் செதுக்கப்பட்ட தேவர்கள் ஒரே மாதிரியாக காணப்படுகிறது.  சர்வாண்ண யக்ஷன், கூஷ்மாண்டினி யக்ஷி போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. (உறுதி செய்ய முடியவில்லை. பண்டிட்ஜிக்கும் சரியாக தெரியவில்லை.)

பிரகாரச்சுற்றில் கர்நாடக ஜினாலயங்களில் காணப்படும் நாகராஜர் சன்னதி.

ஜலமந்திர் நாற்புறத் தீர்த்தங்கரர்களின் தரிசனத்தை முடித்துக் கொண்டு படகுக்காக சுற்றியுள்ள கட்டைச் சுவற்றில் அமர்ந்தோம்.
----------------------------------------------- 

----------------

It is believed that this Basadi has the history of 850 years. The Kere Basadi is dedicated to Lord Parshwanath, the 23rd Tirthankara. The basadi is a chaturmukha which has four entrances in four directions. The Kere Basadi houses the idols of Lord Parshwanatha, Lord Shanthinatha, Lord Ananthanatha and Lord Neminatha in Kayotsarga posture facing four different directions.

The idol of Goddess Padmavathi, Yakshi of the deity is installed in front of the Parshwanatha idol.
People believe that offering prayers and worshipping Lord Parshwanath in this Basadi brings prosperity and fulfill the wishes of the devotees.








தென்பாரதத்திற்கென அமைந்த ஒரே ஜலமந்திர் இந்த வராங்க கெரே சதுர்முகபஸ்தி என்றால் மிகையாகாது. 1711 ம் ஆண்டில்  முனி ஷில்விஜய் மகராஜ் இத்தலத்திற்கு விஜயம் செய்துள்ளார். அச்சமயத்தில் இம்மலையிலும், பள்ளத்தாக்கிலுமாக நூற்றுக்கும் மேலான ஜினாலயங்கள் இருந்துள்ளது.  அவ்வேளையில் இப்பகுதி ஜைனர்கள் செழிப்பாக  இருந்துள்ளனர்.
ஆனால்  தற்போது மூன்று ஜினாலயங்களே மிஞ்சியுள்ளன. அக்காலப் பரம்பரையினர் அடிக்கடி இத்தலம் வந்து ஜினரையும், பத்மாவதி  அம்மனையும் தரிசிப்பதோடு பராமரித்தும் வருகின்றனர்.

யக்ஷி ஸ்ரீபத்மாவதி தேவி ஸ்ரீ பார்ஸ்வநாதர் பாதத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபார்ஸ்வ ஜிநரை வணங்குபவர்களுக்கு வாழ்க்கை சுபிக்க்ஷமாகவும், வேண்டிய வரமும் கிடைக்கும் என நம்புகின்றனர்.

----------------------------------------------- 

படித்துறைக்கு படகு வந்தடைந்தது. அதிலிருந்து இறங்கி, மீண்டும் வேன் பயணத்தை தொடர்ந்தோம் அருகிலுள்ள ஷீர்லால் எனும் ஸ்தலத்தை நோக்கி…

----------------------------------------------- 

PHOTOS OF  OUR LAST VISIT IN 29 jULY 2018