சம்யக்தர்சனம் - Samyakdarsan

 


சம்யக்தர்சனம் அடைவோம் வாரீகளா?


பவ்யர் திருவாளர் T. ஸ்ரீதர் அவர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் தொடராக பதிவு செய்த செய்திகளின் தொகுப்பு (copy and paste அடிப்படையில் .  அவருக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.

 

சம்யக்தர்சனம், சம்யக்தர்ஷன் நற்காட்சி என்று சமணர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாக அல்லது அறிமுகப்படுத்திக் கொள்ளும் விதமாக   சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகள்.

 

நற்காட்சி அல்லது சம்யக்தர்சனம் என்றால் அதன் உண்மையான தன்மை அல்லது பொருள் என்ன? என்பதை நாம் உணர்ந்து கொள்ளாமலேயே ஒரு உபசார வார்த்தையாக  உச்சரித்துக் கொண்டு இருக்கின்றோம் .

 

சமணர்கள் வார்த்தைகளாக அதிகமாக உபயோகப்படுத்தும் இந்த தன்மை அல்லது தகுதி இதை அடையும் வழிதான் என்ன? ஏனெனில் இது தான் ஒவ்வொரு உயிரும் உய்வதற்காக  முதன்மையான நுழைவாயிற்படியாகும். ஆனால் அனைவரும் இதன் முக்கியத்துவம் பற்றி அறிந்தும் அறியாமலும் இருப்பது உதாசீனம் செய்து வாழ்நாட்களை வீண் நாட்களாக வீணடித்துக் கொண்டு இருப்பது விந்தையிலும் விந்தை.

 

தர்மம் மலிந்து கிடக்கும் இந்த சமண சமுதாயத்தில் பிறந்த நாம் இந்த அரிய வாய்ப்பினை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வோமா?  வாருங்கள் பவ்யர்களே!

 

சம்யக்த்வம் அதாவது ஆத்மானுபவத்தை பெறும் வழிமுறைகளைச் சுருக்கமாக பார்ப்போம். முதலில் நாம் நம்முடைய ஆத்மனைப் பற்றிய சிந்தனையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.


நம்முடைய இடைவிடாத ஆத்ம சிந்தனையின் காரணமாக நம் புறம் சார்ந்த எண்ணங்கள் குறைகின்றன. அதாவது அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் இவை சார்ந்த எண்ணங்கள் மட்டுப்படுகின்றன. ஆகையால் நம் மனோபாவம் தீய  எண்ணங்கள் குறைந்த விசுத்த பரிணாமம் கொண்டு இருக்கும். இதன் மூலம்  ஆத்மனைப் பற்றிய தேடலில் ஊக்கம் மேலும் வளரும்.


அடுத்து தொடர்ந்த ஆத்ம சிந்தனையில் நம்முடைய  ஞானாவரண  காதி கர்ம வினைகள் நிகழ்காலத்தில் ஒரு சமயத்தில் உதயத்திற்கு வரக்கூடிய நிஷேகங்கள் நிகழ் காலத்தில் உதயத்திற்கு வராமல் உதயாபாவிக் க்ஷய நிலையை அடையும்.


அடுத்து எதிர் காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய  ஞானாவரண  காதி கர்ம வினைகள், ஸத்தாவில் இருப்பாக இருக்கும் 'ஸதவஸ்த்தா வடிவ உபசம' நிலையை அடைந்து இருக்கும்.


அடுத்து நிகழ் காலத்தில் தேசகாதி கர்மவினைகளான மதிஞானாவரணம் ஸ்ருத ஞானாவரணம்  அவதி ஞானாவரணம்  மனப்பர்யய ஞானாவரணம்  இவைகளில் ஒன்றோ அல்லது நான்குமோ உதயத்தில் இருக்கும். இந்த மூன்று நிலைகளும் நம்முடைய தொடர்ந்த ஆத்ம சிந்தனையால் விளைபவை ஆகும். இதனால் நமக்கு தத்துவத்தை புரிந்து கொள்ளும் அறிவாற்றல் ஏற்படும்.

 

அடுத்து நம்முடைய அறிவைத் தூண்டி நாம் தெளிவான ஆத்ம ஞானத்தை அடைய தேவ சாஸ்திர குருவின் உபதேசம் அறவுரை நம்முடைய தொடர்ந்த ஆத்ம தேடலின் காரணமாக ஏற்படும். நமக்கு தேவையான ஆத்ம தத்துவத்தை தெரிந்து கொண்டு அதில் தெளிவும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஏற்படவேண்டும்.

 

ஆத்மனில், ஆத்ம தத்துவத்தில் முழு நம்பிக்கை ஏற்பட்ட பிறகு நம் ஆத்மனில் கட்டியுள்ள கர்ம வினைகளின் ஸ்திதி, அதாவது கால அளவு, ஒரு அந்தர் கோடா கோடி கடற்கால அளவிற்கு குறைந்து விடும். புதிதாக கட்டும் கர்மங்களின் ஸ்திதி, கால அளவு, அந்தர் கோடா கோடி கடற்காலத்தின் ஸங்க்யாதத்தில் ஒரு பகுதியாக குறைந்து கட்டும்.


கட்டியுள்ள கர்ம வினைகள் குறையத் துவங்கும். பாவ கர்ம வினைகள் அழிய ஆரம்பிக்கும்.

 

இந்த நான்கு சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு நாம் புத்தி பூர்வமாக நம்முடைய சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஆத்மனில் செலுத்த வேண்டும். ஆத்மனுள் ஆழ வேண்டும்.

 

ஆத்மனுள் நம்முடைய கவனம் அல்லது உபயோகம் குவிந்த மாத்திரத்தில் நம்முடைய ஆன்மாவின் செயல்பாடு காரணமாக அதக்கரணம் அபூர்வ கரணம் அநிவ்ருத்தி கரணம் என்ற மூன்று அதிசய நிகழ்வுகள் நடைபெறும். இம்மூன்றின் காரணமாக ஆன்மாவின் விசுத்த பரிணாமம் அனந்த மடங்கு தூய்மையை அடையும்.

 

இம்மூன்று கரணங்கள் முடியும் தருவாயில் "அந்தரகரணம்" ஏற்பட்டு ஆத்ம தரிசனம் அதாவது நற்காட்சி அல்லது சம்யக்த்வம் அல்லது ஆத்மானுபவம், மித்யாத்வத்தை ஒதுக்கி விட்டு அந்த இடத்தை சம்யக்த்வம் ஆக்ரமிக்கும். இது சுருக்கமாக நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை பற்றிய விளக்கம். மேலும் விரிவாக அறிய கட்டுரையைத் தொடர்வோம்.

 

முதலில் நாம் நம்மை உடலாக மட்டுமே உணர்ந்து கொண்டு நம் வாழ்நாட்களை வெறுமனே அழித்துக் கொண்டு இருக்கிறோம். நாம் இந்த உடல் அல்ல, அந்த ஜடப்பொருளை அதிஅற்புதமாக இயக்கிக் கொண்டிருக்கும் உயிர் தான் நாம்!  அதுதான் ஆன்மா! என்பதை உணர வேண்டும். ஆன்மா உருவமற்றது, அருவமானது, சுவை, ஒளி,, ஊறு, ஓசை, நாற்றம் அற்றது ஞானமயமானது, அணுவிலும் இருக்கும் அண்ட சராசரங்களையும் வியாபித்து இருக்கும், அழிவில்லாதது நிரந்தரமானது அதன் ஆரம்பத்தை நம்முடைய க்ஷயோபசம ஞானத்தால் அறிய முடியாதது எக்காலத்திலும் நிலைத்து இருக்கக் கூடியது. நிரந்தரமான பேரின்பமாம் மோக்ஷத்தை அடையும் தன்மை கொண்டது. இவைகளை ஆகமங்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். அவை கேவல ஞானிகளால் சொல்லப்பட்டு, அவர்கள் காலம் முடிந்த பிறகு ஆச்சாரியர்களால் வாய்மொழியாக சொல்லப்பட்டு, பிறகு இறுதியாக எழுத்து வடிவில் ஆச்சாரியர்களால் சுவடிகளில் எழுதப்பட்டு நம் கண் முன்னே ஆகம நூல்களாக காணக் கிடைக்கின்றன. அவைகளைப் படித்து அறிவதோடு மட்டும் அல்லாமல் ஆகமங்கள் எங்கெல்லாம் பிரவசனம் செய்து விளக்கப்படுகிறதோ? அங்கெல்லாம் சென்று இந்த உண்மையைக் கேட்டு உணர்ந்து கொண்டு செயலில் இறங்குவோமாக.

 

நாம் யார்? நம்முடைய உடல் மெய் வாய் கண் மூக்கு செவி மற்றும் ஆறாவது புலனாகிய மனம் சேர்ந்த தொகுப்பா?


அல்லது இத்தனையயும் ஒன்று சேர்த்து இயக்குகிறதே! ஒரு அற்புதமான கண்ணுக்குப் புலப்படாத சக்தி அதுவா? நாம் யார்?

 

இந்த வினாவிற்கு விடை காணாத வரை ஆன்மீகத்தில்  சொல்லப்படும் மூலக் கருத்து நமக்குப் புரியவே புரியாது.

 

ஐம்புலன்கள் மற்றும் மனம் கொண்ட இந்த உடல் நாம் என்றால்? நம்முடைய மரணம் என்பது தவிர்க்க இயலாதது. மரணத்திற்குப் பிறகு நம்முடைய உடல் அழிந்த பின்னர் மனம் மற்றும் ஐம்புலன்களின் நிலை என்ன? உடலோடு அவையும் அழிந்துதான் போகின்றன. இப்போது நாம் யார்? அழிந்து போன உடலா? ஆம் எனில் நாம் தான் அதாவது நம் உடல் தான் அழிந்து விட்டதே! எதனைக் கொண்டு அழிந்து போன உடல் தான் நாம் என்று சொல்ல முடியும்? உடல் அழிந்த பின்னர் அது நாம் தான் என்று சொல்வது பைத்தியக் காரத்தனம் அல்லவா?


ஆக அழியக் கூடிய உடல் நாம் தான் என்று சொல்வது சரியல்ல! அது உண்மையும் அல்ல என்பது தெளிவாகிறது.

 

மேலும் சில கருத்துக்கள்.

பெரும்பாலும் சமணர்கள் முன் ஜென்ம பின் ஜென்ம நம்பிக்கை உள்ளவர்கள். நம்முடைய முன் ஜென்மம் என்னவாக இருந்தோம்? என்று தெரியாது. நம்முடைய அடுத்த ஜென்மம் எதுவென்றும் தெரியாது. தற்போது மனித ஜென்மமாக இருக்கிறோம். சமீபத்திய கடந்த பிறவி தற்போதைய மனித பிறவி அடுத்து நாம் அறிய இயலாத மறுபிறவி இவ்வாறு மூன்று பிறவிகள் வெவ்வேறானவை. ஒரே மனித பிறவிகளாகக் கூட இருக்கலாம். ஆனால் உடல்கள் வெவ்வேறானவை. இந்த மூன்று உடல்களை கடந்த பிறவியில் உடலை மரணம் வரை நாம் என்று நினைத்தோம் அது அழிந்து தற்போது உள்ள உடலை நாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம் இதுவும் அழியத்தான் போகிறது. அடுத்த பிறவி என்னவாக பிறப்போம் என்று தெரியாது ஆனால் அந்த உடலையும் நாம்தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கப் போகிறோம். அந்தந்த பிறவிகளில்  அந்தந்த உடல்களை நாம் என்று தான் நினைப்போம். அதில் மாற்றம் இருக்கப் போவதில்லை. இந்த மூன்று உடல்களை உருவாக்கி அவைகளில் வாசம் செய்து கொண்டு இருந்ததே! இனியும் முக்தி அடையும் வரை பல உடல்களில் வாசம் செய்யப் போகிறதே! ஒன்று! அதுதான் நாம்! அதுதான் நம்முடைய ஆன்மா! நிஜமான நாம்! அந்த ஞானமயமான உருவமற்ற அருவமான ஆன்மா தான் நாம்!!!

 

அப்படியானால் நாம் யார்?

அழியக் கூடிய உடலை உருவாக்கி அதில் கரு முதல் ஜனனத்தில் இருந்து மரணம் வரை அதிலேயே தங்கி அதை இவ்வளவு காலமும் இயக்கிக் கொண்டு கடைசி சமயம் வரை இருந்து வெளியேறிச் செல்லப் போகிறதே! ஒரு சக்தி அதுதான் நாம்!!! அதுதான் நம் ஆன்மா!!! நான் ஆன்மா!!! நான் உடல் அல்ல!!! என்று எப்போது புரிந்து கொள்கிறேனோ? அதுவரை எனக்கும் விடிவில்லை எவருக்கும் விடிவில்லை!

 

இப்போது நாம் ஆன்மா!  இந்த உடல் அல்ல என்று முழுவதும் தெளிவாக உணர்ந்து கொண்டு விட்டோம். இது போதாது இனி ஆத்ம சிந்தனையில் மூழ்க வேண்டும். நம்முடைய ஆன்மா ஏன் இப்படி பிறவிச் சுழற்சியில் சிக்கி அல்லல்படுகிறது? பிறவிச் சுழற்சியில் இருந்து மீண்டு வர என்னதான் வழி? என்று தீவிரமாக சிந்திக்க வேண்டும். ஒரு முறையல்ல இருமுறையல்ல பலமுறை அல்ல தொடர்ந்து அதே சிந்தனை! எண்ணம்! என தொடர்ந்து ஆத்ம சிந்தனையில் இருக்க வேண்டும்.

 

நம்முடைய தீவிர ஆத்ம சிந்தனை நல்வழி நாட்டம் நம்மை தேவ சாஸ்திர குருவின் அருகில் நம்மைக் கொண்டு போய் சேர்க்கும். தேவர் என்பவர் முழுதுணர் ஞானி, முக்காலமும் அறிந்தவர், கேவல ஞானி, அரஹந்த பகவான்,  அவரை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தால் நம் ஆத்ம சிந்தனைக்கான நல்வழி உடனே புலப்பட்டு விடும். அது இந்த ஐந்தாம் காலத்தில் சாத்தியம் இல்லை.

 

சாஸ்திரம் என்பது கேவல ஞானத்தால் பகவானால் அருளப்பட்டு அவர் சொன்ன உண்மைகளை எழுத்துரு கொண்டு நம்மிடையே புழங்குபவை. அவைகளை திரும்பத் திரும்ப படித்து அதில் உள்ள கருத்துக்களை தெளிவாக புரிந்து கொண்டு ஐயமின்றி தெளிந்த மனதுடன் இருக்க வேண்டும்.

 

குருவானவர் அரஹந்த பகவானின் உபதேசம் பெற்றோ? அல்லது ஆகமங்களைப் படித்தோ? தெளிவடைந்து பகவான் சொன்ன அறவழியில் ஒழுகுபவர். அது திகம்பர முனிவர் ஆகவும் இருக்கலாம் ஆகமங்களைக் கசடறக் கற்றுணர்ந்த சான்றோர் ஆகவும் இருக்கலாம். அவர்கள் இடம் உபதேசம் பெற்றோ? தர்மத்தை உண்மையைக் கேட்டு அறிந்தோ? அடுத்த முயற்சியில் இறங்கலாம். அதாவது பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

 

அது என்ன வழி? மித்யாத்வ கர்ம வினைகளால் சூழப்பட்ட நாம் அந்த வினைகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு சம்யக்த்வத்தை அதாவது ஆத்மானுபூதியை ஆன்ம அனுபவத்தை நாம் அடைய வேண்டும். இது தான் பிறவிச் சுழற்சியில் இருந்து நாம் விடுபட எடுத்து வைக்கும் முதல் அடியாகும்.

 

என்ன இது? மளிகைக் கடையில் சென்று மளிகைப் பொருட்கள் வாங்கி வருவது போல் எளிதாகச் சொல்கிறாயே? இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கலாம். இது சாத்தியம் தான்!!! ஆகமங்கள் அந்த சாத்தியக் கூறுகளை தெளிவாகச் சொல்கின்றன. அந்த சாத்தியக் கூறுகள் தான் என்ன?

 


கரணலப்தி தான் அந்த சாத்தியக் கூறுகள் ஆகும். இந்த கரணலப்தி என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும் அதை அடையும் வழிகள் என்ன? என்ன? அதை அடைவதற்கான தயார் நிலைகள் என்னென்ன? என்பதைப் பார்ப்போம். இதற்கு என்னுடைய க்ஷயோபசம ஞானத்தை சற்றே ஓரங்கட்டி வைத்து விட்டு திருவாளர் ஜம்புகுமார சாஸ்திரி அவர்கள் மோக்ஷமார்க்க பிரகாசகம் ஏழாவது அத்தியாயத்தை 2023 மார்ச் மாதம் 29,30 மற்றும் 31 ம் தேதிகளில் பரமாகம வகுப்பில் ஆற்றிய உரைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு எழுதுகிறேன். இனி நான் சொல்லப் போகும் கருத்துக்கள் வெற்றுக் கற்பனை அல்ல ஆகம அறிஞர் ஆற்றிய உரையின் சாராம்சம் ஆகும். இனி விஷயத்திற்கு வருவோம்.

 

முதலில் சம்யக்த்வம் எனப்படும் நற்காட்சி அடைவதற்கான நம்முடைய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும்?

 

நமக்கு நமது ஆத்மனில் அசைக்க முடியாத முழுநம்பிக்கை முதலில் ஏற்பட வேண்டும். நாம் உடல் அல்ல, ஆன்மா என்பதை சர்வ நிச்சயமாக உணர வேண்டும்.

 

அடுத்து ஆத்ம தத்துவம் அதாவது மோக்ஷதத்துவத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தேவ சாஸ்திர குருவின் துணையுடன் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

அடுத்து இப்படி அறிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தை நன்கு அலசி ஆராய்ந்து அதை நன்றாகப் புரிந்து கொண்டு அதில் அசைக்க முடியாத ஆணித்தரமான முழு நம்பிக்கை நம் மனதில் ஏற்பட வேண்டும்.

 

அடுத்து சம்யக்த்வம் பெற்றே தீர வேண்டும் என்ற தீராத வேட்கை நம்முள் ஏற்பட வேண்டும். அந்த வேட்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அணுவளவும் தளர்ச்சி என்பதே கூடாது.

 

நம்முடைய ஆத்மனில் நமக்கு இருக்கும் முழு நம்பிக்கை, ஆத்ம தத்துவத்தில் முழுமையான அறிவு, ஆத்ம தத்துவத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை தெளிவு மற்றும் சம்யக்த்வம் அடைந்தே தீர வேண்டும் என்ற தணியாத வேட்கை இவை அனைத்தும் நாம் சம்யக்த்வம் பெறுவதற்கு அல்லது அடைவதற்கு முன்பு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள்.

 

இவ்வாறு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நிலையில் நமக்கு க்ஷயோபசம லப்தி, விசுத்தி லப்தி, தேசனா லப்தி மற்றும் ப்ராயோக்ய லப்தி அல்லது கால லப்தி என்னும் நான்கு லப்திகள் ஏற்படும். இவை அனைத்தும் மேற்சொன்ன  நம்முடைய தீவிர ஆத்ம சிந்தனையால் தெளிவால் தணியாத வேட்கையால் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். மேலும் இவை அனைத்தும் நம்முடைய சுய முயற்சியால் விளைபவை ஆகும். சுயமுயற்சி என்பது மெய் வாய் கண் மூக்கு செவி மனம் சார்ந்த நாம் அதாவது பிறவி உயிர் சுயநினைவோடு செய்வதாகும். மேலே சொல்லப்பட்டவை 29-3-2023 தேதிய ஆடியோ மற்றும் வீடியோ உரையின் சுருக்கமான விளக்கம் ஆகும்.

 

க்ஷயோபசம லப்தி என்றால் என்ன?


நாம் சம்யக்த்வம் பெற ஆத்ம தத்துவத்தை அறியும் அறிவு அதாவது புத்திக்கூர்மை நமக்கு ஏற்பட வேண்டும்.

 

அதற்கு முதலில் ஞானாவரண காதி கர்ம வினைகளில்  ஞானாவரண காதி கர்ம வினை, ஒரு சமயத்தில் நிகழ் காலத்தில்  உதயத்திற்கு வரும் நிஷேகங்கள்  உதயத்திற்கு வராமல் இருக்கும் உதயாபாவிக் க்ஷய நிலையில் இருக்கும். இப்போது உதயத்திற்கு வராமல் இருக்கிறது ஆகையால் க்ஷயம் அதாவது அழிவு என்று சொல்லப்படுகிறது.

 

அடுத்து அதே காதி கர்ம வினை எதிர்காலத்தில் உதயத்திற்கு வரவுள்ள நிலையில் அதனை உதயத்திற்கு வர விடாமல் ஸத்தாவிலேயே இருப்பாக நிறுத்தி வைத்து அல்லது தணித்து விடும் ஸதவஸ்த்தா வடிவ உபசம நிலையில் செய்து விடுவது. சர்வகாதி கர்ம வினையான  ஞானாவரணம் உதயத்தில் இருந்தால் நம்முடைய அறிவு மழுங்கியே இருக்கும். வெளிப்படாது. ஆகையால்  ஞானாவரணம் கர்மவினைகளை உதயாபாவிக் க்ஷய நிலையில் க்ஷயம் செய்தும், ஸதவஸ்த்தா வடிவ உபசம நிலையில் உபசமம் அல்லது தணிந்தும் இருக்குமானால் நம்முடைய சொற்ப அறிவு வெளிப்பட தடையில்லை.

 

தற்போது அதாவது நிகழ் காலத்தில்  தேச காதி கர்ம வினைகளான மதிஞானம் ஸ்ருத ஞானம் அவதி ஞானம் மனப்பர்யய ஞானம் இவைகளில் ஒன்றோ அல்லது நான்குமோ உதயத்தில் இருப்பது. இவைகள் தேசகாதி கர்மங்கள் ஆகவே முழுவதும் நம் அறிவைத் தடுக்க இயலாதவை. ஆகையால் இவைகள் உதயத்தில் இருப்பது தவறில்லை. நம்முடைய அறிவு இயங்கும்.

 

இவ்வாறு க்ஷயம் உபசமம் மற்றும் உதயம் இவை மூன்றும் சேர்ந்த நிலைக்கு க்ஷயோபசம லப்தி என்று பெயர். இதன் காரணமாக ஆத்ம தத்துவத்தை ஆராயும் ஞானம் அதாவது அறிவாற்றல்  நமக்கு ஏற்படும். தத்வார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமக்கு கைகூடும். இவைகள் மூன்றும் நம்முடைய அதிதீவிர ஆத்ம சிந்தனையால் அதனால் ஏற்படும் ஆத்மனின் ஆற்றலால் உண்டாவதாகும்.

 

ஆத்ம தத்துவத்தை ஆராயும் அறிவாற்றல் அல்லது மோக்ஷ தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நமக்கு ஏற்பட்டு விட்டது அதை செயல்படுத்தும் மனோநிலை அல்லது முயற்சி, ஈடுபாடு வேண்டும் அல்லவா? அதற்கு விசுத்தி லப்தி இருந்தால் தான் அது சாத்தியம் ஆகும்.

 

விசுத்தி லப்தி என்றால் என்ன?


நம்முடைய தீவிர ஆத்ம சிந்தனை எண்ணங்கள் காரணமாக சாரித்ர மோகனீய கர்ம வினைகளான அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் ஆகிய கஷாயங்கள் மந்த நிலையை அடைந்து விடும். இது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம். மனதில் முழுக்க முழுக்க அதிதீவிர ஆத்ம சிந்தனையில் நிறைந்துள்ள நிலையில் மற்ற எண்ணங்கள் எழுவதற்கு  இடமில்லை. இந்த மந்த கஷாய நிலை விசுத்த பரிணாமம் எனப்படும். கஷாயங்கள் அற்ற நிலைக்கு சுத்த பரிணாமம் என்று பெயர். கஷாயங்கள் உள்ள நிலைக்கு அசுத்த பரிணாமம் என்று பெயர். மந்த கஷாய நிலைக்கு விசுத்த பரிணாமம் என்று பெயர். அதாவது கஷாயங்கள் அழியவில்லை ஆனால் தணிந்து மந்தப்பட்டு மந்த கஷாய நிலையில் உள்ளன. அதாவது தீய எண்ணங்கள் குறைந்து காணப்படும். அதனால் கஷாயங்கள் குறைந்து காணப்படும். அதனால் விசுத்த பரிணாமம் ஆகிறது. இந்த விசுத்த பரிணாமம் ஆத்ம தத்துவ முயற்சி செய்ய தடையற்ற மனோநிலையை ஊக்கத்தை முயற்சியை நமக்கு ஏற்படுத்தும்.

 

தேசனா லப்தி என்றால் என்ன?


தத்துவம் அறியும் ஞானம் அதற்கான முயற்சி செய்யும் ஊக்கம் இவை இரண்டோடு நாம் தத்துவத்தை அறிந்து இருந்தால் தானே அதனை செயல்படுத்த முடியும். ஆகவே வெளியே இருந்து நம்முடைய அறிவைத் தூண்டும் சக்தி தேவ சாஸ்திர குருவின் உபதேசம் மூலம் ஏற்படுகிறது. அந்த உபதேசத்தின் காரணமாக ஆத்மனில் முழு நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அதனை நன்கு உள்வாங்கிய பிறகு நான்காவது லப்தி கால லப்தி அல்லது ப்ராயோக்ய லப்தி ஏற்படும்.

 

ப்ராயோக்ய லப்தி என்றால் என்ன?


இதற்கு கால லப்தி என்னும் மற்றொரு பெயரும் உண்டு.

ஆத்மனில் உள்ள அத்தனை கர்ம வினைகளின் ஸ்திதியும் அதாவது கால அளவும் ஒரு அந்தர் கோடா கோடி கடற்காலம் அளவிற்கு குறைந்து விடும். இதன் பொருள் என்னவென்றால் சம்யக்த்வம் பெற்ற உயிரானது இந்த அந்தர் கோடா கோடி கடற்காலத்திற்குள் மோக்ஷத்தை அடைந்து விடும் என்பதாகும். இந்த கால அளவிற்கு மேல் சம்சாரத்தில் அந்த உயிர் இருக்காது என்று பொருள்.

 

அடுத்து புதிதாக கட்டும் கர்மங்களின் ஸ்திதி அந்தர் கோடா கோடி கடற்காலத்தின் ஸங்க்யாதத்தில் ஒரு பகுதியாக குறைந்து கட்டும்.

 

ஸத்தாவில் இருப்பாக உள்ள கர்ம வினைகள் குறையும்.

 

பாவ கர்ம வினைகள் அழியும். முற்றிலும் அழியாது ஓரளவு அழியத் துவங்கும். இந்த நான்கு தன்மைகள் கால லப்தி என்னும் ப்ராயோக்ய லப்தியில் உண்டாகும் மாற்றங்கள் ஆகும். இவை நமக்கு ஏற்பட்ட ஆத்மனில் நம்பிக்கை, அதன் காரணமாக ஆத்மனின் ஆற்றல் வெளிப்பட்டு நிகழும் நிகழ்வாகும்.

 

இப்போது சொன்ன க்ஷயோபசம லப்தி விசுத்தி லப்தி தேசனா லப்தி மற்றும் ப்ராயோக்ய லப்தி இவை நான்கையும் பவ்ய ஜீவன்களும் அடையும் அபவ்ய ஜீவன்களும் அடையும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் எந்த உயிரானது விடாப்பிடியாக அடுத்த கட்டமான கரண லப்தியை அடைய தொடர்ந்து தளர்வின்றி முயற்சி செய்கிறதோ? அந்த ஜீவன் சம்யக்த்வத்தை நோக்கி முன்னேறும். நற்காட்சி அனுபவத்தைப் பெறும்.

 

இது வரை சொல்லப்பட்ட நான்கு லப்திகளும் யாருக்கு ஏற்படுகிறது?

 

யதாக்யாத சாரித்ரம் அதாவது பூரண திகம்பர முனி தர்ம ஒழுக்கம் அடைந்தவர்களுக்கா? அல்லது சகல சாரித்ரம் கொண்ட திகம்பர முனிவர்களுக்கா? அல்லது அணுவிரதங்களைக் கடைபிடிக்கும் தேசவிரத இல்லறத்தாருக்கா? அல்லது நற்காட்சி பெற்ற நான்காவது அவிரத நிலையில் உள்ள சம்யக்திருஷ்டி உயிர்களுக்கா? என்றால் இல்லை!! இது வரை அனந்தானந்த காலமாக நற்காட்சியே பெற்றிராத முதலாவது மித்யாத்வ குணஸ்தானத்தில் உள்ள அனாதி மித்யாதிருஷ்டிகளுக்கு தான் இந்த நான்கு லப்திகளும் கைகூடுகின்றன. அதற்குப் பிறகும் கரண லப்திகளும் அந்தரகரணமும் ஏற்பட்டு சம்யக்த்வமும் அதாவது முதன் முறையாக பிரதமோபசம சம்யக்த்வமும் அடையப் போகிறது.

 

இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழுகிறது. இது வரை அஷ்ட கர்ம வினைகளையும் அழித்தொழித்து சித்த பதவி அடைந்த அத்தனை சித்த பகவான்களும் ஒரு காலத்தில் இந்த இருண்ட மித்யாத்வத்தில் இருந்து முதன்முறையாக பிரதமோபசம சம்யக்த்வம் பெற்று பிறகு படிப்படியாக 14 குணஸ்தானங்களிலும் முன்னேறி மோக்ஷம் அடைந்தவர்கள் தான். ஆகையால் வியவகார நயத்தில் சம்சாரத்தில் வீழ்ந்து கிடக்கும் ஒரு ஜீவன் நிச்சய நயமான ஆத்மனை உணர்ந்து அதில் ஆழ்ந்து சம்யக்த்வம் எப்படி பெற முடியும்? என்ற வினாவிற்கே இடம் கிடையாது. அப்படியே உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொள்ள இயலாத ஜீவன்களின் அறியாமையை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இது வரை சொல்லப்பட்ட இரண்டு பாராக்களும் என்னுடைய கருத்து சாஸ்திரியாரால் சொல்லப்பட்டது அல்ல. அவருடைய உரையில் இந்த கருத்து இடம் பெறவில்லை.

 

 

இது வரை பிறவி உயிரின் தளர்ச்சி அடையாத முயற்சியின் விளைவாக க்ஷயோபசம லப்தி விசுத்தி லப்தி தேசனா லப்தி மற்றும் ப்ராயோக்ய லப்தி இவைகள் நான்கையும் அடைந்த ஜீவன் இறுதியாக, கடைசி முயற்சியாக, தன்னுடைய புத்தியை அதாவது சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஒரே இலக்கில் தன்னுடைய ஆத்மனில் செலுத்த வேண்டும். அவ்வாறு சிந்தனையை குவித்து உள்ளுக்குள் ஆத்மனில் லயிக்க விடுவது மட்டுமே பிறவி உயிர் செய்ய வேண்டிய வேலை. எப்போது பிறவி உயிர் தன்னில் அதாவது ஆத்மனில் ஊன்றி விட்டதோ? அதற்குப் பிறகு ஆத்மனின் செயல்பாடு தொடங்கி விடும். பிறவி உயிரின் கடுமையான முயற்சி முழுமை அடைய ஆரம்பிக்கும்.

 

பொதுவான வழக்கு ஒன்று உண்டு. நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், இறைவன் நம்மை நோக்கி பத்து அடி ஓடி வருவான்! என்று ஆன்மீக வாதிகள் அல்லது படைப்புத் தத்துவ வாதிகள் அடிக்கடி சொல்லும் வாக்கியம் ஆகும். ஆத்மனின் விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை தான் என்பதை இப்போது நாம் உணரலாம். 'ஆன்மா' தான் இறைவன் என்பது மட்டும் அல்ல, அந்த ஆன்மாதான் நாம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.

 

கரண லப்திகளின் தொடக்கம் இனி ஆரம்பமாகிறது. கரணம் என்றால் பரிணாமம் என்று பொருள். லப்தி என்றால் ஆற்றல் அல்லது சக்தி என்று பொருள்.

—--------------------------------------------

இரண்டாம் பாகம்.

 

இது வரை புத்தி பூர்வமாக இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும், என்ற சிந்தனையில் முயற்சியில் நடந்த செயல்கள் ப்ராயோக்ய லப்தி தவிர மற்றவை  நம்முடைய ஆழ்ந்த ஆத்ம சிந்தனையால் ஏற்படுபவை. நம்முடைய உபயோகம் அல்லது கவனம் முழுவதும் ஆத்மனில் நிலை கொண்ட இந்த சமயத்தில் இருந்து உணர்வு பூர்வமாக செயல்பாடு, ஆத்மனின் செயல்பாடு! துவங்குகிறது.  இதற்குப் பிறகு நடைபெறுவது எல்லாம் ஆத்மனுள் நடக்கும் அந்தரங்க மாற்றங்கள் ஆகும். இவைகளை கேவல ஞானிகள் மட்டுமே அறிவர். நம்மால் அறிய முடியாது. ஆனால் இந்த கரண லப்திகளைப் பற்றி கேவலிகள் தங்கள் கேவல ஞானத்தினால் கண்டு உரைத்ததை ஜினாகமங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன அவற்றை பார்ப்போம்.

 

இனிமேல் ஆத்ம உணர்வில் லயிப்பது மட்டுமே நம்முடைய வேலை.  அடுத்து நடக்கும் மூன்று கரண லப்திகளும் அவைகளைச் சார்ந்து நடக்கும் கர்ம வினைகளின் பல்வேறு மாற்றங்களும் நம்மால் அறிய முடியாதது. கேவல ஞானிகள் மட்டுமே அறிவர். அந்த நிகழ்வுகளை ஆகமங்களில் இருந்து சாஸ்திரியார் விளக்குகிறார் அந்த விளக்கங்களை நான் கேட்டு எழுதுகிறேன். நம்முடைய வேலை ஆத்ம உணர்வில் லயிப்பது மட்டுமே.

 

கரண லப்தி அதப்ரவிருத்தி கரணம், அபூர்வ கரணம் மற்றும் அனிவிருத்தி கரணம் என்று மூன்று வகையாக நடக்கிறது. இந்த மூன்று கரண லப்திகளும் ஆத்மனின் செயல்பாடுகளே தவிர நம்முடைய செயல் அல்ல. நம்முடைய செயல், சிந்தனையை குவித்து ஒருமுகப்படுத்தி ஆத்மனில் செலுத்துவது அல்லது ஆழ்வது மட்டுமே. ஆத்மனில் நமது உபயோகம் சென்று அடைந்த க்ஷணத்தில் இருந்து ஆன்மா செயலுக்கு வருகிறது.

 

அதப்ரவிருத்தி கரணம்.

நம்முடைய கவனம் ஆத்மனில் ஒடுங்கிய அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு சமயமும் ஆத்மனின் பரிணாமம் தூய்மை அடைய ஆரம்பிக்கும். ஒரு அந்தர் முகூர்த்த காலம் அதப்ரவிருத்தி கரண காலம் ஆகும். இது ஜகன்ய அந்தர் முகூர்த்தம ஆகவும் இருக்கலாம். அல்லது உத்கிருஷ்ட அந்தர் முகூர்த்த காலமாகவும் இருக்கலாம். இவ்விரண்டிற்கும் இடையே பல மத்திம அந்தர் முகூர்த்தங்கள் உள்ளன. நம்முடைய முயற்சியைப் பொருத்து ஏதாவது ஒரு மத்திம அந்தர் முகூர்த்த நேரம் வரை அதப்ரவிருத்தி கரணம் இருக்கும்.

 

அதப்ரவிருத்தி கரணம் நிகழ்வு நடைபெறும் போது ஆரம்ப சமயத்தில் இருந்து அடுத்தடுத்த சமயங்களில் ஆத்மனின் பரிணாமம் தூய்மை அடைந்து கொண்டே இருக்கும். சமயம் என்பது கால அளவுகளில் மிகவும் சிறிய நுண்ணிய காலம் ஆகும். ஒரு அந்தர் முகூர்த்த நேரத்தில் எண்ணிக்கையில் அடங்காத நிறைய சமயங்கள் உள்ளன. அந்த சமயங்களின் கடைசி சமயம் வரை ஆத்மனின் பரிணாமம் தூய்மை அடைந்து கொண்டே இருக்கும்.

 

அதப்ரவிருத்தி கரணத்தை எவ்வாறு கணிப்பது?


ஒரு உயிர் முதல் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தூய்மை பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதே உயிர் அடுத்த அல்லது இரண்டாவது சமயத்தில் முதல் சமயத்தில் ஏற்பட்ட தூய்மையை விட இன்னும் சற்று கூடுதலாக பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

 

அதே நேரத்தில் இன்னொரு உயிர் அதப்ரவிருத்தி கரணத்தில் முதல் சமயத்தில் பிரவேசிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அதன் தூய்மை முதலில் வந்த உயிருக்கு இரண்டாவது சமயத்தில் ஏற்பட்ட தூய்மையின் அளவில் இருந்தது என்றால் இதற்கு அதப்ரவிருத்தி கரணம் என்று பெயர். அதாவது அதப்ரவிருத்தி கரணத்தில் ஈடுபடுகின்ற பல உயிர்களின் பரிணாம தூய்மை சம அளவாக இருக்குமானால் இதற்கு அதப்ரவிருத்தி கரணம் என்று பெயர். அதாவது பல உயிர்கள் பெறும் தூய்மை சமமாக இருப்பதற்கு அதப்ரவிருத்தி கரணம் என்று பெயர். பல உயிர்களின் பரிணாமம்  சமமாக தூய்மை அடைவதற்கு அதப்ரவிருத்தி கரணம் என்று பெயர். அதப்ரவிருத்தி கரணம் முடியும் அடுத்த சமயம் முதல் அபூர்வ கரணம் ஆரம்பமாகும்.

 

அபூர்வ கரணம் என்றால் என்ன?


அதப்ரவிருத்தி கரணத்தில் இருந்து உயிர்கள் இரண்டாவது அபூர்வ கரண நிலைக்கு வரும் போது அவைகளின் பரிணாம தூய்மை சமயத்திற்கு சமயம் அவைகளின் முயற்சியைப் பொருத்து சமமாக இல்லாமல் அபூர்வ அபூர்வமாக அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு சமயம் ஏற்படும் தூய்மை அடுத்த சமயத்தில் சமமாக இல்லாமல் மிகவும் அதிகமாக தூய்மை அடைந்து கொண்டே இருக்கும். கடைசி சமயம் வரை அளவின்றி அதிகரித்துக் கொண்டே போகும். இவ்வாறு உயிரின் பரிணாமம் வேறுபாடுகளுடன் அபூர்வ அபூர்வமாக அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு அபூர்வ கரணம் என்பது பெயர். அபூர்வ கரணம் முடிந்த அடுத்த சமயம் முதல் அனிவிருத்தி கரணம் ஆரம்பமாகும்.

 

அனிவ்ருத்தி கரணம் என்றால் என்ன?

அனிவ்ருத்தி கரண நிகழ்வில் இருக்கும் பல உயிர்களின் பரிணாம தூய்மை எந்தவொரு வேறுபாடுகளும் இன்றி ஒரே அளவில் மாற்றம் இல்லாமல் ஒரே சீராக இருக்கும். இதற்கு அனிவிருத்தி கரணம் என்று பெயர்.

 

இது வரை சொல்லப்பட்டவை 30-3-2023 திருவாளர் ஜம்புகுமார சாஸ்திரியாரால் விளக்கமாக சொன்னதை சுருக்கமாக சொல்லப்பட்டது.

—----------------------------------------------

"ஒரு உயிர்" அடிப்படையில் கரண லப்தியில் ஈடுபடும் போது இந்த மூன்று கரணங்களின் தன்மை எவ்வாறு இருக்கும்?

 

ஒரு உயிர் அடிப்படையில் கரண லப்தியில் அதப்ரவிருத்தி கரணத்தின் முதல் சமயத்தில் ஏற்படும் ஆத்மனின் விசுத்த பரிணாமம் குறிப்பிட்ட அளவு இருக்கும் என்றால் அதற்கு அடுத்த சமயத்தில் ஆத்மனின் தூய்மை அனந்த மடங்கு அதிகரிக்கும். அடுத்தடுத்த சமயங்களில் ஆத்மனின் தூய்மை அனந்தனந்த மடங்கு அடுத்தடுத்து அதிகரித்துக் கொண்டே போகும். இவ்வாறு அந்தர் முகூர்த்த காலம் வரை தொடர்ந்து சமயத்திற்கு சமயம் ஆத்மனின் தூய்மை அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதற்கு அதப்ரவிருத்தி கரணம் என்று பெயர்.

 

அதப்ரவிருத்தி கரணம் நிறைவு பெற்ற அடுத்த சமயத்தில் இருந்து ஒவ்வொரு சமயமும் நம்முடைய உணர்வானது அபூர்வ அபூர்வமாக மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகும். அதாவது நாம் இது வரை அனுபவித்திராத இந்திரிய சுகங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மசுகத்தை ஆத்ம உணர்வை அனுபவிப்போம். இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆத்ம அனுபவம் அல்லது சுகம் என்றும் சொல்லலாம். ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட வெற்று வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆத்ம உணர்வாகும். இதற்கு அபூர்வ கரணம் என்று பெயர். அபூர்வ கரணத்தின் இறுதி சமயம் வரை சமயத்திற்கு சமயம் ஆத்மனின் விசுத்த பரிணாமம் அபூர்வ அபூர்வமாக அதிகரித்துக் கொண்டே செல்லும்.

 

அபூர்வ கரணம் நிறைவு பெற்ற அடுத்த சமயத்தில் இருந்து இப்போது நாம் அடைந்துள்ள அல்லது அடைந்து கொண்டிருக்கின்ற ஆத்மானுபவத்தில் ஆத்ம உணர்வில் இருந்து வெளியே வர மனமின்றி அதிலேயே ஆழ்ந்து இருப்போம். இந்த நிலைக்கு அனிவிருத்தி கரணம் என்று பெயர். மேலும் அனிவிருத்தி கரணத்தில் ஆத்மனின் தூய்மை ஒரே சீராக தூய்மை அடைந்து கொண்டே இருக்கும் ஏற்ற இறக்கங்கள் இருக்காது.

 

இந்த மூன்று கரண லப்தி காலத்தில் நம்முடைய கர்ம வினைகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது நம்மால் அறிய முடியாதது. இந்த கரணலப்தி காலத்தில் ஏற்படும் அபூர்வ உணர்வுகளை மட்டும் தான் நம்மால் உணர முடியும். உள்ளுக்குள் நிகழும் மாற்றங்களை கேவல ஞானிகள் மட்டுமே அறிவர். அவைகள் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

 

அதப்ரவிருத்தி கரண காலம் முழுவதும் சமயத்திற்கு சமயம் ஆத்மனின் தூய்மை அனந்தனந்த மடங்கு அதிகரிக்கும். அதோடு கூட ஆத்மனில் இருக்கும் முன்பே கட்டியுள்ள கர்மங்களின் கால அளவு குறையும்.

புதிதாக கட்டும் கர்மங்களின் கால அளவு குறைந்து கட்டும்.

புண்ணிய கர்மங்களின் பலன் தரும் தன்மை கூடுதலாகும்.

பாவ கர்மங்களின் பலன் தரும் தன்மை குறையும்.

 

அதப்பிரவ்ருத்தி கரணம் நிறைவு பெற்றதும் அபூர்வ கரணம் ஆரம்பமாகும். இதனுடைய கால அளவு அதப்ரவிருத்தி கரண காலத்தை சங்க்யாத அளவாகப் பிரித்து அதில் ஒரு பகுதி எவ்வளவு காலமோ? அது அபூர்வ கரணத்தின் காலமாகும். இந்த அபூர்வ கரணத்தின் ஒவ்வொரு சமயந்தோறும் முன்பே கட்டியுள்ள கர்மங்களின் ஸ்திதிகாண்ட காதம் ஏற்படும். பூர்வ கர்மங்களின் கால அளவு அதாவது ஸ்திதி பந்தம் குறைந்து விடும்.

 

இரண்டாவதாக ஆத்மனில் கட்டியுள்ள கர்மங்களின் அனுபாக காண்ட காதம் நடைபெறும். அதாவது கர்மங்களின் பலன் தரும் தன்மை அல்லது ஆற்றல் மிகவும் அதிகமாக குறைந்து விடும்.

 

மூன்றாவதாக குணஸ்ரேணி நிர்ஜரை நடக்கும். அதாவது மித்யாத்வம் மற்றும் அதனைச் சார்ந்த கர்மங்களின் நிர்ஜரை ஏற்படும். அதாவது அழியத் துவங்கும்.

 

நான்காவதாக புண்ணிய கர்மங்களின் பலன் தரும் தன்மை கூடுதலாகும். இன்பம் சுகம் முதலானவற்றை தரும் ஸாதா வேதனீய கர்மங்களின் பலன் தரும் தன்மை கூடுதலாகும். மேலும் தேசகாதி கர்மவினைகளின் நற்பலனைத் தரும் கர்ம வினைகளின் பலன் தரும் தன்மை கூடுதலாகும். தேசகாதி கர்ம வினைகளில் தீய பலனைத் தரும் கர்ம வினைகளின் பலன் தரும் தன்மை குறையும்.

பாவ கர்மங்களின் பலன் தரும் தன்மை குறைந்து விடும். அதாவது துன்பம் துக்கம் முதலானவற்றை தரும் அஸாதா வேதனீய கர்மங்களின் பலன் தரும் தன்மை வெகுவாக குறைந்து விடும்.

 

இந்த நான்கு  நிகழ்வுகளும் அபூர்வ கரண காலத்தில் நிகழும்.

 

அடுத்து அநிவ்ருத்தி கரணம்! அபூர்வ கரணம் நிறைவு பெற்ற உடன் ஆரம்பமாகும். இதனுடைய கால அளவு அபூர்வ கரணத்தின் கால அளவின் ஸங்க்யாதத்தில் ஒரு பகுதியாக இருக்கும்.

 

 

மூன்று கரணங்களும் சேர்ந்து ஒரு அந்தர் முகூர்த்த காலம் மட்டுமே நிகழும். அதாவது அனிவிருத்தி கரண காலம குறிப்பிட்ட அளவு காலம் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் காலத்தை விட சங்க்யாதத்தில் ஒரு பகுதி கூடுதல் அபூர்வ கரண காலம் ஆகும். அபூர்வ கரண காலத்தை விட சங்க்யாதத்தில் ஒரு பகுதி கூடுதல் அதப்ரவிருத்தி கரண காலம் ஆகும். இந்த மூன்று கரணங்களும் சேர்ந்து ஒரே ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே. அந்த கால அளவிற்கு உள்ளாக மூன்று கரணங்களும் நடந்து முடிந்து விடும். அவைகள் சார்ந்த கர்ம வினை மாற்றங்களும் நடந்து முடிந்து விடும். அடுத்து சம்யக்த்வம் ஏற்படும் முறையை பார்ப்போம்.

—----------------------------------------------

மூன்றாம் பாகம்.


அனிவ்ருத்தி கரண நிகழ்வில் சமயந்தோறும் ஆத்மனின் விசுத்த பரிணாமம் அதாவது தூய்மை ஒரே சீராக நடைபெறும். அனிவ்ருத்தி கரண நிகழ்வு நிறைவு பெறும் தருணத்தில் "அந்தரகரணம்". ஏற்படுகிறது.

 

அந்தரகரணம் என்றால் என்ன?


அனிவ்ருத்தி கரணம் நிறைவு பெறும் தருணத்தில் சம்யக்த்வம் அடைய நேரம் வந்துவிட்டது என்று பொருள். அப்போது ஒரு சமயத்தில் உதயத்திற்கு வரக் கூடிய மித்யாத்வ கர்ம வினை நிஷேகங்களை ஒரு அந்தர் முகூர்த்த நேரம் வரை உதயத்திற்கு வராமல் ஆத்மா தன் ஆற்றலை பயன்படுத்தி தடுத்து நிறுத்தும் அல்லது வேறு வடிவில் அந்த கர்ம வினைகளை மாற்றிவிடும். இந்த அந்தர் முகூர்த்த நேரமானது மித்யாத்வ பிரக்ருதிகளின் குறைந்தபட்ச கால அளவும் இல்லாமல் அதிகபட்ச கால அளவும் இல்லாமல் அதற்கு மத்தியில் ஒரு குறைந்த அந்தர் முகூர்த்த நேரத்திற்கு மித்யாத்வ ப்ரக்ருதி நிஷேகங்களை உதயத்திற்கு வராமல் ஆன்மா செய்து விடும்.

 

அதற்குப் பிறகும் அந்த கால அளவிற்கு மேல் மித்யாத்வ ப்ரக்ருதி நிஷேகங்களை உதயத்திற்கு வர விடாமல் உபசமம் செய்து தணித்து விடுகிறது.

 

இப்போது இந்த அந்தர் முகூர்த்த நேரம் வரை மித்யாத்வம் இல்லாமல் வெற்றிடமாக இருக்கும். அந்த வெற்றிடத்தை சம்யக்த்வம்! அதாவது ஆத்ம உணர்வு! முழுமையாக ஆக்கிரமிக்கும். அதாவது நம் உயிர் சம்யக்த்வத்தை பெற்று அந்த உணர்வில் ஆழ்ந்து இருக்கும். இது வரை மூன்று கரண லப்திகளிலும் நாம் பெற்றது ஆத்ம சுகம். இப்போது நாம் பெறுவது ஆத்மானுபவம் அதாவது ஆத்மனின் சுடரை சக்தியை ஆற்றலை உணர்வோம். இது அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே இருக்கும். பிறகு மித்யாத்வம் ஏற்கனவே இருந்தவாறு மீண்டும் சூழும்.

 

இது தான் உண்மையான "சம்யக்தர்சனம்" "சம்யக்தர்ஷன்" "நற்காட்சி" என்று ஆகமங்கள் அறுதியிட்டு உறுதியாகச் சொல்கின்றன. நற்காட்சி பெறுவதற்கு இவ்வளவு நீண்ட நடைமுறை வரையறை வரைமுறையை நாம் கடைபிடிக்க வேண்டும். மித்யாத்வமானது நாம் சம்யக்த்வம் பெற்ற பிறகு சம்யக்த்வ காலமான அந்த அந்தர் முகூர்த்த நேரம் முடிந்த பிறகு மீண்டும் நம்மை சூழ்ந்து விடும். ஆனால் நாம் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் உடைக்கவே முடியாதிருந்த மித்யாத்வமாகிய கடினமான பாறையை முதல் முறையாக உடைத்து சம்யக்த்வம் பெற்று விட்டோம். உடைக்கப்பட்டு பலம் குறைந்த மித்யாத்வ ப்ரக்ருதிகளை மீண்டும் உடைத்து சம்யக்த்வம் பெறுவது என்பது சுலபமான விஷயமே. ஆனால் எத்தனை முறை சம்யக்த்வம் பெற வேண்டுமென்றாலும் ஆத்ம சிந்தனை ஆத்ம ஞானம் அதில் அசைக்க முடியாத நம்பிக்கை சம்யக்த்வம் பெற்றே தீருவேன் என்று தீராத வேட்கை இவைகளின் அடிப்படையில் க்ஷயோபசம லப்தி விசுத்தி லப்தி தேசனா லப்தி பிராயோக்ய லப்தி மூன்று கரணலப்திகள் பரிணாமம் அவைகளின் இறுதியில் மித்யாத்வ ப்ரக்ருதிகளை உபசமம் செய்து சம்யக்த்வம் பெற்று விட முடியும். ஆகவே முயற்சி எப்போதும் குறையவே கூடாது. முயற்சியில் தளர்ச்சி என்பதே கூடாது.

 

அனாதி காலமாக மித்யாத்வத்தில் இருந்து விலக முடியாமல் இருந்த அனாதி மித்யாதிருஷ்டி தர்சன மோகனீய வினைகளான மித்யாத்வத்தை உபசமம் செய்து அனாதி மித்யாதிருஷ்டி சம்யக்த்வம் பெறுவது இந்த சம்யக்த்வம் தான். இதற்கு பிரதமோபசம சம்யக்த்வம் என்று பெயர். ப்ரதமோபசம சம்யக்த்வம் அடைவதற்கு சற்று முன்பு வரை அந்த ஆத்மனின் ஸத்தாவில் தர்சன மோகனீய மித்யாத்வ கர்மவினைகள் மட்டும்  தான் இருப்பில் இருக்கும். அதை சற்று நேரம்  ஒதுக்கி வைத்து விட்டு சம்யக்த்வத்தை அளிப்பது ஆத்மனின் அளப்பரிய ஆற்றல் தான். இந்த பிரதமோபசம சம்யக்த்வம் முழுமுயற்சியுடன்,  மித்யாத்வ சேற்றில் மூழ்கி இருந்து வெளியே வர நினைக்கும் அத்தனை பவ்ய உயிர்கள் அனைத்தும் பெறக்கூடியதே.

 

அந்தரகரண நிகழ்வின்போது ஒரு மொத்தமாக இருந்த மித்யாத்வ தர்சன மோகனீய கர்மமானது ஆத்மனின் விசுத்த பரிணாமம் காரணமாக உடைந்து மித்யாத்வம், சம்யக்மித்யாத்வம் மற்றும்  சம்யக்த்வம் என மூன்று தர்சன மோகனீய கர்ம வினைகளாக ஸத்தாவில் இருப்பாக நிற்கும். இது போன்றே இவைகளை ஒவ்வொன்றாக ஐந்து லப்திகள் (கரண லப்திகள் உள்பட) கொண்டு மற்றும் அந்தரகரணம் பெற்று உபசம சம்யக்த்வம் க்ஷயோபசம சம்யக்த்வம் இறுதியாக க்ஷாயிக சம்யக்த்வம் அடைய வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் கரண லப்திகள் இல்லாமல் எந்த சம்யக்த்வமும் பெற முடியாது. இந்த கரண லப்திகளும் ஆத்ம சிந்தனை, ஆத்மஞானம், அதில் தெளிவு, ஆத்மனில் முழு நம்பிக்கை, சம்யக்த்வம் பெற்றே தீருவேன் என்ற தீராத வேட்கை‌ இவைகளின் அடிப்படையில் நம்முடைய கவனம் முழுவதையும் ஆத்மனில் குவித்தல் இவை அனைத்தும் ஒன்று சேரும் போது தான் மீண்டும் சம்யக்த்வம்  வாய்க்கும்.

 

ஒரு முறை சம்யக்த்வம் பெற்ற உயிரானது சற்றே குறைந்த அர்த்த புத்கலபராவர்த்தன கால அளவிற்கு உள்ளாக மோக்ஷத்தை அடைந்து விடும். இவ்வாறு ஆகமங்கள் கூறுகின்றன. இது வரை 31-3-2023 தேதியில் சம்யக்த்வம் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி திருவாளர் ஜம்புகுமார சாஸ்திரி அவர்களுடைய உரையை ஓரளவு விரிவாகக் கூறியுள்ளேன். இதற்கு பிறகு மேலும் மோக்ஷ மார்க்கப் பிரகாசகம் ஏழாவது அத்தியாயத்தை பூர்த்தி செய்ய பல கருத்துக்களை கூறினார். கரண லப்திகளின் சாரம் மற்றும் சம்யக்த்வம் அடைவதற்கு உண்டான வழிமுறைகளை மட்டும் அக்கறையுடன் சொல்வதற்கு யாருக்கும் ஆர்வம் இல்லை அவ்வாறே ஆர்வம் இருந்து சொன்னாலும் அதன் முக்கியத்துவம் உயிர்களுக்கு தெரிவதில்லை ஆகவே இந்த பகுதியை மட்டும் எடுத்துக் கூறியுள்ளேன். மேலும் சில கருத்துக்களை எழுதிய பிறகு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

 

ஒரு முறை சம்யக்த்வம் பெற்ற பிறகு மீண்டும் மித்யாத்வ சேறு நம்மைச் சூழ்ந்து விடும். ஏனெனில் சம்யக்த்வமானது அந்த குறிப்பிட்ட அந்தர் முகூர்த்த காலம் மட்டுமே இருக்கும். பிறகு மீண்டும் மித்யாத்வம் சூழ்ந்து விடும். இது பற்றி பெரிதாக கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில் நாம் இது நாள் வரை அனந்தானந்த காலமாக மித்யாத்வத்தினால் சூழப்பட்டு இருந்தோம். அந்த மித்யாத்வ பாறையை உடைத்து ஆத்மனின் சக்தியைச் சிறிதளவு உணர்ந்தோம். அந்த சிறிய கால அளவு ஆத்மானுபவம் நம்மை முக்தியை நோக்கி நிச்சயமாக அழைத்துச் சென்று விடும். ஆனால் தொடர்ந்து ஆத்ம சிந்தனையில் ஆழ்ந்து உபசம சம்யக்த்வத்தை க்ஷயோபசம சம்யக்த்வத்தை பெற்று அதற்கும் பிறகு க்ஷாயிக சம்யக்த்வத்தைப் பெற்று விட தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். முயற்சியில் தளர்ச்சி என்பதே இருக்கக் கூடாது.

 

இந்த ஐந்தாம் காலத்தில் மோக்ஷம் கிடையாதே தவிர உயிர்கள் சம்யக்த்வம் பெறுவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. ஒரு பிறவி உயிர் அதன் வாழ்நாளில் பல முறை சம்யக்த்வம் பெற வாய்ப்பு உள்ளது அதற்கு தடையில்லை. ஆனால் நாம் நற்காட்சியின் அருமையை அதன் அவசியத்தை உணராமல் வாழ்நாளில் ஒரு முறையாவது நற்காட்சி அடைவதற்கான முயற்சியே செய்யாமல் வீணே காலத்தை ஆயுளை விரயம் செய்து கொண்டு இருக்கிறோம். ஆத்மனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை தொடர்ந்த ஆத்ம சிந்தனை அதில் களங்கம் அற்ற தெளிவு , மோக்ஷ தத்துவம் எழிலும் அசைக்க முடியாத நம்பிக்கை அவற்றில் ஆழ்ந்த ஞானம், மீண்டும் சம்யக்த்வம் பெற்றே தீர வேண்டும் என்ற தணியாத வேட்கை அதனோடு ஆத்மனில் ஆழ்தல் அல்லது ஒன்றுதல் இது தான் நற்காட்சி பெறுவதற்கான அவசியத் தேவை. இப்படி தொடர்ந்து முயற்சி செய்வீர்களானால் சம்யக்த்வம் உங்கள் வசப்படும். மோக்ஷ சுகம் உங்களுக்கு சொந்தமாகும்.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே!!!

 

இதோடு கட்டுரையை முடித்து விட நினைத்தேன்.. ஆகம அறிஞர் திருவாளர் ஜம்புகுமார சாஸ்திரி அவர்கள் மேலும் 2023 ஜுலை 17,18,19 ஆகிய தேதிகளில் பரமாகம வகுப்பில் உரையாற்றிய மூன்று ஆடியோக்களை அனுப்பி சம்யக்த்வம் பற்றி மேலும் அரிய கருத்துக்களை எனக்கு சாஸ்திர தானம் அளித்து உள்ளார். அந்த கருத்துக்களையும் எழுதி முடிக்கும் போது தான் இந்த கட்டுரை முழுமை அடையும். பவ்யர்கள் அசௌகரியத்திற்கு மன்னிக்கவும். மீண்டும் இக்கட்டுரை தொடரும்.

-------------------

முந்தைய பதிவுகளில் பஞ்ச லப்திகளின் துணை கொண்டு அனாதி மித்யாதிருஷ்டி முதன் முதலாக சம்யக்த்வம் அடையும் வழி முறைகளைப் பார்த்தோம். அதற்குப் பிறகு உயிரானது பிரதமோபசம சம்யக்த்வம், க்ஷயோபசம சம்யக்த்வம், த்விதியோபசம சம்யக்த்வம் மற்றும் க்ஷாயிக சம்யக்த்வம் இவைகளை விடாமுயற்சியுடன் பெற்று உபசம மற்றும் க்ஷபக ஸ்ரேணிகளில் ஏறி கர்ம வினைகளை அழித்து பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவதற்கு இத்தனை சம்யக்த்வங்களும் எவ்வாறு உயிருக்குத் துணையாக இருக்கின்றன என்பதை மேலும் விளக்கும் முகமாக இந்தக் கட்டுரை தொடர்கிறது. மேலும் கட்டுரையைத் தொடர்வதற்கு முன் சில கடினமான சமஸ்கிருத வார்த்தைகளின் பொருளை முதலில் அறிந்து கொள்வோம்.

--------------------

பிரசஸ்த உபசமம் என்றால் என்ன?


கரண லப்திகளின், அதாவது அதப்ரவிருத்தி கரணம், அபூர்வ கரணம், அநிவ்ருத்தி கரணம் இம்மூன்று காரணங்களின் துணை கொண்டு இறுதியில் அந்தரகரணம் உபசம கரணம் கொண்டு கர்ம வினைகளை உபசமம் செய்வதற்கு பிரசஸ்த உபசமம் என்று பெயர். அனந்தானுபந்தி கஷாயங்கள் பிரசஸ்த உபசமம் அடையாதவை ஆனால் விஸய்யோஜன முறையில் அனந்தானுபந்தி கஷாயங்கள் அப்ரத்யாக்யான கஷாயங்கள் ஆகவும், ப்ரத்யாக்யான கஷாயங்கள் ஆகவும் சஞ்ஜ்வலன கஷாயங்கள் ஆகவும் மாற்றம் அடைந்து பின்னர் உபசமம் அடையும். நேரடியாக அனந்தானுபந்தி கஷாயங்கள் கரணலப்திக்கு கட்டுப்படாது.

 

அப்ரசஸ்த உபசமம் என்றால் என்ன?

கரண லப்திகளின் துணை இல்லாமல் கர்ம வினைகள் தானாக தணிவடைவதற்கு  அப்ரசஸ்த உபசமம் என்று பெயர்.  ஒரு ஜீவன் சம்யக்த்வம் பெறுவதற்கான முழு முயற்சியுடன் ஆத்ம சிந்தனையில் ஈடுபட்டு இருக்கும் போது அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோப கஷாயங்கள், தானாகவே மந்த நிலையை அடைந்து விடும். மேலும் அனந்தானுபந்தி கஷாயங்கள் கரணலப்திக்கு கட்டுப்பட்டு உபசமம் அடையாது. தானாகத் தான் உபசமம் அடையும்.  இது ஒரு தனித்தன்மையாகும். அனாதி மித்யாதிருஷ்டி சம்யக்த்வம் பெற முயற்சி செய்யும்போதும் அதற்குப் பிறகு ஸாதி மித்யாதிருஷ்டி உபசம சம்யக்த்வம் மற்றும் க்ஷயோபசம சம்யக்த்வம் பெற முயற்சி செய்யும்போதும் அனந்தானுபந்தி கஷாயங்கள் குரோதம் மானம் மாயை லோபம் இவை நான்கும் அப்ரசஸ்த உபசம நிலையில் தாங்களாகவே தணிந்து விடும். இது இயல்பாக நடைபெறும் நிகழ்வாகும்.

கஷாயங்கள் அப்ரசஸ்த உபசமம் மட்டுமே அடையும்.

 

2. அனந்தானுபந்தி கஷாயங்கள் கரணலப்திக்கு கட்டுப்பட்டு உபசமம் அடையாது.


3. மந்த நிலையில் உள்ள  அனந்தானுபந்தி கஷாயங்களை  விஸய்யோஜனம் முறையில் அப்ரத்யாக்யான, ப்ரத்யாக்யான மற்றும் சஞ்ஜ்வலன கஷாயங்கள் ஆக கரணலப்தி கொண்டு மாற்றி அவைகளின் பலத்தைக் குறைக்க முடியும். இது சாத்தியம். நேரடியாக அனந்தானுபந்தி கஷாயங்களை கரணலப்தி மூலம் உபசமம் செய்வது என்பது சாத்தியமில்லை.

 

இந்தக் கட்டுரையில் அனந்தானுபந்தி கஷாயங்கள் பற்றி விரிவாகச் சொல்லப்போவதில்லை. உபசம மற்றும் க்ஷயோபசம சம்யக்த்வம் இரண்டிலும் பொதுவாக அப்ரசஸ்த உபசமம் என்ற நிலையிலும் க்ஷாயிக சம்யக்த்வத்தில் விஸய்யோஜன முறையில் அனந்தானுபந்தி கஷாயங்கள் அப்ரத்யாக்யான ப்ரத்யாக்யான மற்றும் சஞ்ஜ்வலன கஷாயங்களாக மாற்றப்படும் என்று குறிக்கப்படும். இந்தக் கட்டுரையின் இறுதியில் அவைகளின் நிலை பற்றி சற்று விரிவாகப் பேசப்படும்.

 

விஸய்யோஜனம் என்றால் என்ன?


கரண லப்திகளின் துணை கொண்டு கர்ம வினைகளை ஒடுக்கி அதே தன்மையுள்ள அவைகளுக்கு அடுத்த சற்றே பலம்  குறைந்த கர்ம வினைகளாக மாற்றம் செய்வது ஆகும். உதாரணமாக மித்யாத்வ தர்சன மோகனீய வினை பரமாணுக்களை ஒடுக்கி சம்யக்மித்யாத்வ அதாவது மிஸ்ர மோகனீய பரமாணுக்கள் ஆக மாற்றம் செய்தும் சம்யக்மித்யாத்வ மிஸ்ர மோகனீய பரமாணுக்களை ச்சல மல அகாட தோஷங்கள் கொண்ட சம்யக்த்வ மோகனீய பரமாணுக்களாக மாற்றம் செய்வதற்கு விஸய்யோஜனம் என்று பெயர். 


சம்யக்த்வம் என்றால் என்ன?


ஆத்ம ஸ்ரத்தாணம் சம்யக் தரிசனம். ஆத்மனில் நம்பிக்கை கொள்வது சம்யக்த்வம் ஆகும்.

தத்வார்த்த ஸ்ரத்தாணம் சம்யக் தரிசனம். ஆத்ம தத்துவத்திலும்  மோக்ஷ தத்துவம் ஏழிலும் நம்பிக்கை கொள்வது சம்யக்த்வம். தேவ சாஸ்திர குரு ஸ்ரத்தாணம் சம்யக்த்வம். இவை ஆரம்ப நிலையில் சொல்லப்படுவது. ஆனால் கரண லப்திகளின் துணை கொண்டு ஏற்கனவே அனந்தானுபந்தி கஷாயங்கள் மந்த கதியில் உள்ள நிலையில், மித்யாத்வ ப்ரக்ருதிகளை உபசமம் செய்து அல்லது தடுத்து விட்டு அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஆத்மா தன்னை தன் ஆற்றலை க்ஷணத்தில் பிறவி உயிருக்கு வெளிப்படுத்தும் அபூர்வ நிகழ்வே! உண்மையான சம்யக்தர்சனம் அல்லது சம்யக்த்வம் ஆகும். இதை ஆத்மானுபூதி அல்லது ஆத்மானுபவம் என்றும் சுருக்கமாகச் சொல்லலாம்.

 

சம்யக் தரிசனம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ஆத்மானுபவம் பெறுதல் என்று பொருள் கொள்வதே சிறப்பாகும்.

 

ஆத்மானுபவம் என்பது ஆத்மனில் திட நம்பிக்கை கொண்டு தீவிர ஆத்ம தேடலில் மனம் குவிந்து ஆத்மனில் ஆழும் போது ஏற்படும் காட்சிகளற்ற அபூர்வ உணர்வே ஆத்மானுபவம் ஆகும். சாதாரணமான ஆத்மனின் பால் நம்பிக்கை இன்றி தியானம் செய்யும் போது ஏற்படும் காட்சிகள் அதில் ஏற்படும் உணர்வுகள் ஆத்மானுபவம் அல்ல, அவை மாயையாகும் அல்லது நம்முடைய முந்தைய எண்ணங்கள் காட்சிகள் ஆகத் தெரிவதாகும். அவை நற்காட்சி அல்லது சம்யக்தர்சனம் ஆகாது.

 

சம்யக்த்வம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ஆத்மானுபவம் பெற்று ஆத்மனில் ஐயத்திற்கு இடமின்றி திட நம்பிக்கையுடன் இருப்பது என்று பொருள் கொள்வதே நன்மை பயக்கும்.

 

மித்யாத்வம் என்றால் என்ன?


ஆத்ம அஸிரத்தாணம் மித்யாத்வம். ஆத்மனில் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது மித்யாத்வம். ஆத்மனைத் தவிர புறத்தில் புறப்பொருள்களில் நம்பிக்கை கொள்வது மித்யாத்வம்.. மித்யாத்வம் என்பது தனிப்பட்ட ஒன்றல்ல தீய நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் உடல் சார்ந்த அபிலாஷைகள் புறப் பொருள் சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தின் ஒட்டுமொத்த வடிவம். நம்முடைய கவனத்தை ஆத்மனில் திரும்ப விடாமல் தடுத்துக் கொண்டு இருப்பது மித்யாத்வம். நம்மை முற்றிலும் சூழ்ந்து இருப்பது மித்யாத்வம் அதனை விலக்கி வெளிப்படும் போது தான் சம்யக்த்வத்தை நாம் உணர முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் உடலைச் சார்ந்து மட்டும் முழுவதும் நம்பிக்கை கொண்டு ஆத்மனில் நம்பிக்கையே இன்றி இருப்பது மித்யாத்வம்.


 அனாதி மித்யாதிருஷ்டி என்றால் யார்?


எந்த உயிரானது அனந்தானந்த பிறவிகளில் அனாதி காலமாக மித்யாத்வத்திலேயே உழன்று கொண்டு சம்சாரக் கடலில் இருந்து இன்று வரை வெளியே வரவே முடியாது தவித்துக் கொண்டு இருக்கின்றதோ? இது நாள் வரை சம்யக்தரிசனத்தை அடையாமல் இருக்கின்றதோ? அந்த உயிருக்கு அனாதி மித்யாதிருஷ்டி என்று பெயர்.


ஸாதி மித்யாதிருஷ்டி என்றால் யார்?

இது நாள் வரை சம்யக்த்வமே பெறாமல் இருந்து மிக்க பிரயாசையுடன் பாடுபட்டு முதன் முறையாக பிரதமோபசம சம்யக்த்வம் பெற்று அந்த பிரதமோபசம சம்யக்த்வமும் ஒரு அந்தர் முகூர்த்த நேரத்திற்கு மேல் நீடிக்காமல் போக மீண்டும் மித்யாத்வத்தால் சூழப்பட்ட  உயிருக்கு ஸாதி மித்யாதிருஷ்டி என்று பெயர். ஒரு முறை சம்யக்த்வம் பெற்று விட்ட உயிர், அனாதி என்ற சொல்லை நீக்கி ஸாதி மித்யாதிருஷ்டி என்று அழைக்கப்படும். ஒரு முறை சம்யக்த்வத்தை பெற்று விட்ட உயிர் ஸாதி மித்யாதிருஷ்டி என்று அழைக்கப்படும். தொடர்ந்த முயற்சிகளால் மீண்டும் மீண்டும் சம்யக்த்வம் பெறும் வல்லமை ஸாதி மித்யாதிருஷ்டிக்கு உண்டு.


பிறவி உயிர் அல்லது சம்சார ஜீவன் என்றால் என்ன?


அஜீவப்பொருள் (உடல்) + ஜீவன் சேர்ந்த நிலை சம்சார ஜீவன் ஆகும்.


அஜீவப்பொருள் (உடல்) கழித்தல் ஜீவன் இல்லாத நிலை ஜடப்பொருள் ஆகும். இயக்கமற்ற அஜீவப்பொருள் அதாவது உடல் ஜடமாகும் அது அழிந்து விடும். 


ஐம்புலன்கள் மற்றும் மனம்+ஆன்மா சேர்த்து பிறவி உயிர் ஆகும். ஆனால் நாம் நம்மை ஆன்மாவாக உணர்வது இல்லை. நாம் உடலாக மட்டுமே பார்க்கின்றோம் அங்கே தான் மாபெரும் தவறை ஒவ்வொரு மனிதரும் செய்து கொண்டு இருக்கிறோம்.  உடலையே ஆத்மாவாக‌ நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். நிரந்தரமான ஆன்மாவை விட்டு விட்டு உடல் தளர்ந்து ஆயுள் முடிந்ததும் அழியப் போகும் நம் உடலைத்தான் நிரந்தரமானது என்ற மயக்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆன்மா வேறு! நம் உடல் வேறு! என்பதை நாம் உணர்வதில்லை.


ஆன்மா நம் உடலில் ஒவ்வொரு அணுவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஏனெனில் ஆன்மா எந்தப் பிறவியிலும் முழுவதும் ஐக்கியமாகி விடும் தன்மை கொண்டது. அதாவது மிக நுண்ணிய நிகோத ஜீவனில் இருந்து நமக்குத் தெரிந்த மிகப் பெரிய காட்டு யானை வரையிலும், மேலும் தேவ பிறவிகளில் ஒரு சில பிறவிகள் மிகப்பெரிய விஸ்வரூபம் கொண்டு இருக்கும் அந்த உடல்களில் கூட முழுமையாக வியாபித்து இருக்கும் தன்மை கொண்டது. ஆகையால் உடல் வேறு! ஆன்மா வேறு! என்பது நம் புத்திக்கு எட்டுவதே இல்லை.


ஐம்புலன்கள் மற்றும் மனம்+ சுயநினைவு அல்லது உயிர்ப்பு சேர்ந்த நிலை பிறவி உயிர் ஆகும். ஏனெனில் உயிர் நம்முள் இருக்கிறது.


இந்தப் பிறவி உயிர் சுய நினைவுடன்  ஆத்மனைத் தன்னுள்ளே எப்போது தேட ஆரம்பிக்கின்றதோ? உணர ஆரம்பிக்கின்றதோ? அப்போது தான் இந்தப் பிறவி உயிரை ஆன்மா உருவாக்கியதன் பலன் பூரணமாகும்.  அதுவரை இந்த பிறவி வீண்தான். வெறும் கர்ம வினைகளை அனுபவித்துக் கழிக்கும் ஒரு சாதாரண கருவியாகத் தான் இந்தப் பிறவி கருதப்படும்.


ஆன்மா மோக்ஷப் பாதையில் பயணிக்க "பிறவி உயிர்" சுய நினைவுடன் ஆத்மனைத் தன்னுள்ளே தேட ஆரம்பிக்க வேண்டும். அப்போது  தான் ஆன்மா மோக்ஷப் பாதையில் நுழைய முடியும். அது வரை ஆன்மா சம்சாரக் கடலில் இருந்து கரையேற வாய்ப்பே கிடைக்காது. தான் செய்த கர்ம வினைகளின் பயன்களான சுக துக்கத்தை அனுபவித்துக் கழிக்கும் செயலைத் தான் வெறுமனே செய்து கொண்டு இருக்கும். நிர்ணயித்துக் கொண்டு வந்த கர்ம வினைகளை கழித்து முடித்தாலும் மேலும் கர்ம வினைகளை சேர்த்துக் கொள்ளத் தான் செய்யும்.


 நற்காட்சியின் எட்டு அங்கங்கள் யாவை?

1.நிச்சங்கை எனப்படும் ஐயம் இன்மை. வீதராக பகவானால் அருளப்பட்ட மோக்ஷ தத்துவத்தை தர்ம நெறிகளை ஐயம் கொள்ளாமல் நம்புவது நிச்சங்கை எனப்படும். சங்கை என்றால் ஐயம். நிச்சங்கை என்றால் ஐயம் இன்மை.

 

2.அவாவின்மை எனப்படும் நிஷ்காங்க்ஷை காங்க்ஷை என்றால் அவா, ஆசை என்று பொருள்படும். உலக இந்திரிய சுகங்களில் விருப்பங்கள் கொள்ளுதலை முற்றிலும் நீக்கி விடுதல் அவாவின்மை எனப்படும். அவாவானது மோக்ஷ சுகத்தை நாடுவதில் தீவிரமாக இருப்பது அவா அல்லது ஆசை என்ற குற்றமல்ல.

 

3.நிர்விசிகித்ஸை எனப்படும் அருவருப்பின்மை.

விசிகித்ஸை என்பது வெறுப்பு மற்றும் அருவருப்பு என்று பொருள். நிர்விசிகித்ஸா என்றால் அருவருப்பின்மை என்று பொருள். நமக்கு ஏற்படும் நோய், பசி, தாகம், குளிர், வெப்பம் இவைகளால் உண்டாகும் துன்பம் துயரங்கள் இவற்றை பொருட்படுத்தாமல் பொறுத்துக் கொள்வதும், நம் உடலில் இருந்து வெளிப்படும் மலம் சிறுநீர் வியர்வை சளி காயங்களில் இருந்து வெளிப்படும் சீழ் இவற்றைக் கண்டு அருவருப்பு அடையாமல் இருப்பது நிர்விசிகித்ஸா எனப்படும். பொதுவாக நம் ஆன்மா தூய்மையானது ஆனால் அது தங்கி இருக்கும் நம் உடலோ அசுத்தமானது. ஆனால் இந்த உடல் தான் நாம் மும்மணிகளைத் தரிப்பதற்கும் நல்லொழுக்கம் கடைபிடித்து நம் ஆன்மனை உணர்வதற்கும் அதன் கர்ம வினை தூய்மைக்கும் பிரதான கருவியாக இருப்பது இந்த உடல் தான் என்பதை அறிந்து உடலின் மீது பற்றின்றி ஆத்ம சிந்தனையில் ஆழ்வதும் சம்யக்த்வத்தின் நிர்விசிகித்ஸா அங்கமாகும்.

 

4.அமூட திருஷ்டித்வம் எனப்படும் மயக்கமின்மை.

அமூட திருஷ்டித்வம்.

திருஷ்டி என்றால் நோக்கம் அல்லது நம்பிக்கை என்பது பொருள். அமூட திருஷ்டித்வம் என்றால் அறியாமை நீங்கிய நம்பிக்கை,  எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உணர்வது சம்யக்த்வம் உடையவரின் இயல்பாக இருக்க வேண்டும். நற்காட்சி உடையவர் எப்போதும் பகுத்தறிவாளராக இருத்தல் வேண்டும். மந்திர தந்திர அதிசயங்களில் மனதைச் சிதற விட்டு மூடநம்பிக்கை கொள்ளாமல் இருப்பது மிகவும் அவசியம். அச்சம் தாழ்வு மனப்பான்மை ஆசை(உலோபம்) தவறானவர்களின் வழிகாட்டல் முதலிய காரணங்களால் மித்யா தேவ குரு சாஸ்திரங்கள் இவை எவற்றிற்கும் இடந்தராமல் ஆத்ம நம்பிக்கையில் ஆழ்ந்து இருக்க வேண்டும். இது அமூட திருஷ்டித்வம் என்னும் நான்காவது அங்கமாகும்.

 

5.உபகூஹனம் எனப்படும் அழிந்தாரைத் தாங்கல்.

உபகூஹனம்.

இந்த ஐந்தாவது அங்கமானது உபபிரம்ஹனனம் மற்றும் உபகூஹனம் என்று இரண்டாகப் பிரித்துச் சொல்லப்படுகிறது. உபபிரம்ஹனனம் என்றால் அதிகரிக்கச் செய்தல் என்று பொருள். நற்காட்சியாளர் உத்தமபொறுமை முதலான பத்து விதமான குணங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவதாகும்.

 

உபகூஹனம் என்பது மறைத்தல் என்று பொருள். நற்காட்சியாளர் அறியாமை, ஆற்றல் இன்மை, சூழ்நிலை மாற்றம், பிணி, இளமை இவைகள் காரணமாக நல்லொழுக்கத்தில் சிறிதளவு தவறினாலும் அதைப் பெரிதுபடுத்தி பகிரங்கப்படுத்தாமல் மறைப்பதே அறத்திற்கும் அவர்களின் விரதங்களில் இருந்து பிறழாமல் இருப்பதற்கும் உதவியாக இருக்கும் என்பதால் நற்காட்சியாளரின் உபகூஹனம் என்னும் அங்கமாகும். உபபிரம்ஹனனம் மற்றும் உபகூஹனம் இரண்டும் வேறு வேறாகத் தோன்றினாலும் இரண்டுமே நல்லொழுக்கம் பேணுவதில் மிக்க துணையாக இருக்கும்.

 

6.ஸ்திதிகரணம் எனப்படும் நிலைநிறுத்துதல்.

ஸ்திதிகரணம்.

ஸ்திதிகரணம் எனப்படும் சம்யக்த்வத்தின் ஆறாவது அங்கம் ஸ்திதிகரணம் ஆகும். ஸ்திதிகரணம் என்றால் நிலை நிறுத்துதல் என்று பொருள்படும்.

 

ஒரு மஹாவிரதி கடுமையான குரோதம் முதலான கஷாயங்கள் காரணமாக தனது நன்னெறியில் இருந்து பிறழும் போது அவருக்கு முக்தி நெறியின் மேன்மையை உணர்த்தி மீண்டும் அவரை நன்னெறியில் நிலை நிறுத்துதல் நற்காட்சியாளர் ஒருவரின் கடமையாகும். ஒரு நற்காட்சியாளர் தானே நன்னெறியில் இருந்து பிறழ்வாராயின் மற்றவர்கள் சுட்டிக் காட்டியோ அல்லது அவரே தான் பிறழ்ந்ததை உணர்ந்து மீண்டும் நன்னெறிக்குத் திரும்புதல் ஸ்திதிகரணம் என்னும் அங்கமாகும்.

 

7.வாத்ஸல்யம் எனப்படும் அறத்தின்பால் மற்றும் அறவோர் பால் மிகவும் ஈடுபாடு கொள்வது  வாத்ஸல்யம் ஆகும்.

வாத்ஸல்யம் என்பது தன்னலமற்ற தூய அன்பைக் குறிக்கும். ஒரு தாய் தன் குழந்தையின் மீது செலுத்தும் அன்பு, ஒரு பசுவானது தன் கன்றின் மீது காட்டும் அன்பு எவ்வளவு ஆர்வத்துடன் ஆசையுடன் காட்டும் அன்போ? அந்த அன்புக்கு நிகரானது வாத்ஸல்யம் ஆகும். நற்காட்சியாளர் முக்தி நெறியின் மீது வைக்கும் அன்பு வாத்ஸல்யத்துடன் இருக்க வேண்டும். மேலும் தர்ம நெறியைக் கடைப்பிடிப்போரிடம் மிகவும் வாத்ஸல்யத்துடன் இருப்பது வாத்ஸல்யம் எனப்படும் நற்காட்சியின் ஏழாவது அங்கமாகும்.

 

8..மார்க்கப்ரபாவனா எனப்படும் தர்மத்தை விளக்கிச் சொல்வதில் மிகுந்த ஈடுபாடு கொள்வதுமார்க்கப்பிரபாவனை ஆகும்.

மார்க்கப்பிரபாவனை என்பது தர்மத்தை விளங்கச் செய்தல் என்று பொருள்படும். ஒருவர் தன்னுடைய ஆத்மனை, வாழ்நாளில் மும்மணிகளைத் தரித்து அதன் ஒளியால் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். சத்பாத்திர தானம் தவம் பூஜை தத்துவ உபதேசம் செய்து கொண்டு ஜினதர்மத்தின், ஆத்ம தத்துவத்தின் பெருமையையும் சிறப்பையும் உலகறியச் செய்ய வேண்டும். உண்மையான மோக்ஷ தத்துவத்தை உயிர்கள் அறியும்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பலர் மித்யாத்வத்தினால் உண்மையான தேவ சாஸ்திர குரு பற்றி அறியாமல் அறியாமையில் ஆழ்ந்து தீய நெறியில் உழல்கின்றனர். அவர்களை மோக்ஷ தத்துவத்தை உபதேசித்து நன்னெறியில் திரும்பி வருமாறு தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு மார்க்கப் பிரபாவனா என்ற சம்யக்த்வத்தின் எட்டாவது அங்கமாகும். நற்காட்சி உடையவர் இந்த எட்டு அங்கங்களையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். 

 

ஒரு முகூர்த்தம் என்பது இரண்டு நாழிகைகள் அல்லது 48 நிமிடங்கள் கொண்டதாகும். 48 நிமிடங்களில் ஒரேயொரு சமய கால அளவு குறைந்தால் ஒரு அந்தர் முகூர்த்தம் எனப்படும். 48 நிமிடங்களில் இரண்டு சமய கால அளவு குறையுமானால் அது உத்கிருஷ்ட அந்தர் முகூர்த்தம் எனப்படும்.

மிகவும் குறைந்த அந்தர் முகூர்த்தமானது ஆறு ஆவளி கூடுதல் ஒரு சமயம் ஜகன்ய அந்தர் முகூர்த்தம் எனப்படும்.

 

குறைந்த பட்ச ஜகன்ய அந்தர் முகூர்த்தத்தில் இருந்து அதிகபட்ச உத்கிருஷ்ட அந்தர் முகூர்த்தம் வரை நிறைய மத்திம அந்தர் முகூர்த்தங்கள் உள்ளன. நம் ஆத்மனில் ஆழ்ந்து ஒன்றும் போது ஜகன்ய அந்தர் முகூர்த்தத்தில் இருந்து உத்கிருஷ்ட அந்தர் முகூர்த்தம் வரையும் அல்லது இவை இரண்டிற்கும் இடையில் உள்ள பல மத்திம அந்தர் முகூர்த்தங்களில் ஏதாவது ஒரு மத்திம அந்தர் முகூர்த்தம் வரை இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் பொதுவாக ஒரு அந்தர் முகூர்த்த நேரம் என்று தான் ஆகமங்களில் குறிப்பிடப்படுகிறது. எந்த அந்தர் முகூர்த்தமானாலும் நம் ஆத்மனுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ? அந்த நேரத்திற்குள்ளேயே அது நிகழ்த்த வேண்டிய அற்புதத்தை நடத்தி முடித்து விடும். ஆகையால் நாம் ஆத்மனில் ஆழ்வதை மட்டுமே லட்சியமாகக் கொள்ள வேண்டும். காலத்தைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. என்ன நிகழ்த்த வேண்டுமோ? அதை ஆன்மா நிகழ்த்திவிடும்.

 

ஆகமங்களில் எந்தவொரு தியானமாக இருந்தாலும்  ஒரு முகூர்த்த காலத்திற்குக் குறையாமல் தியானிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஜபம் செய்ய வேண்டுமா? இரண்டு நாழிகைகள் செய். ஸ்வாத்யாயம் செய்ய வேண்டுமா? ஒரு முகூர்த்தம் வரை செய். மந்திர உச்சாடனம் செய்ய வேண்டுமா? 48 நிமிடங்கள் செய். ஆகமம் ஓத வேண்டுமா? ஒரு முகூர்த்தம் தொடர்ந்து ஓது. தியானம் செய்கிறாயா? இரண்டு நாழிகைகள் செய். இப்படி எதற்கும் ஒரு முகூர்த்த நேரம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. இவ்வாறு தொடர்ந்து ஒரு முகூர்த்த நேரம் வரை தொய்வின்றி தியானிக்கப் பழகி வருவோமானால் நம் ஆத்மனில் நாம் ஒன்றும் போது எந்தவித சலனமும் இன்றி நிலைப்பதற்கு பெரும் உதவியாக அடிப்படை பயிற்சியாக இருக்கும். அதற்காக தான் இவ்வளவு பீடிகையும்  வலியுறுத்தலும்.

 

 மேற்கண்ட பதிவைப் படித்த ஓர் சான்றோர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 48 நிமிடங்கள் நிலைத்து தியானம் செய்வதற்கான செய்முறைப் பயிற்சிகள் அல்ல அவை. உண்மையில் ஒரு முகூர்த்த நேரம் தொடர்ந்து தியானிக்கத் திகம்பர முனிவர்களுக்குக் கூட முடியாத விஷயம். சாதாரண சிராவகர்கள் நிலையில் ஒரு முகூர்த்த நேர தியானம் என்பது முடியாத ஒன்று. மேலும் இங்கு சொல்லப்படுவது தன்னில் தான் ஒன்றிய நிலை. அதாவது உடல் மனம் நீங்கிய நிலையில் அறிவு ஆத்மனில் ஐக்கியம் ஆக வேண்டும். இவ்வாறு ஒரு முகூர்த்த நேரம் நிலைப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

 

நான் சொல்ல வருவது ஒரு முகூர்த்த நேரம் வரை முன் சொன்ன ஸ்வாத்யாயம், மந்திர உச்சாடனம், ஜபம், தபம், தியானம் போன்றவற்றை நிலைக்கிறதோ? இல்லையோ ? வெறுமனேயாகிலும் அமைதியாக செய்ய வேண்டும் என்பதே! தேர்வுக்கு முன்னால் எத்தனை முறை நாம் rivision செய்கிறோம் அதைப் போன்றதே மேற்சொன்ன பயிற்சிகள். உண்மையாக ஆத்மனில் ஆழ்வது என்பது நம்முடைய பிரதான தேர்வு. அதி முக்கியமான அந்தத் தேர்வில் நாம் தேர்ச்சி பெற மேற்சொன்ன பயிற்சிகள் நம்மை சரியான திசையில் கொண்டு சேர்க்கும்.

 

அடுத்து ஒரு ஜீவன் தன்னில் தான் ஒரு முகூர்த்த நேரம் ஒன்றி விடுமானால் பிறவிப் பிணியையே போக்கி விடும். ஆனால் அவ்வளவு நேரம் தன்னில் தான் ஒன்றுவது என்பது மிகவும் கடினமான விஷயம் என்றும் சொன்னார். மேலும் சில நுணுக்கமான விஷயங்களைச் சொன்னார். அவைகளையும் இங்கே பதிவு செய்கிறேன்.

 

உதாரணத்திற்கு பதினோராம் குணஸ்தானமான உபசாந்த மோஹ கஷாயம் இரண்டே இரண்டு சூத்திர பவ காலம் மட்டுமே இருக்கும். அதாவது உபசாந்த மோஹ கஷாயம் குணஸ்தான மொத்த கால அளவே இரண்டு சூத்திர பவ காலம் தான். அதற்கு மேல் பதினோராம் குணஸ்தானம் முடிந்து விடும். பிறகு அங்கிருந்து கீழ் குணஸ்தானங்களுக்கு உயிர் இறங்கி விடும்.

 

சூத்திர பவம் என்பது என்ன?

ஒரு சுவாசம் விடும் நேரத்தில் சில நுண்ணுயிர்கள்  18 முறை பிறந்து இறந்து விடும். அந்த 18 ம் பதினெட்டு பவங்கள் ஆகும். சூத்திர பவம் என்பது அந்தப் பதினெட்டு பவங்களில் ஒரு பவத்திற்கு சூத்திர பவம் என்பது பெயர்.  இந்த இரண்டு சூத்திர பவங்கள் தான் பதினோராம் குணஸ்தான கால அளவாகும்.

 

இது போல் பன்னிரண்டாம் க்ஷீண மோஹ கஷாய குணஸ்தானத்தின் கால அளவு நான்கு சூத்திர பவங்கள் என்றும் சொல்லப்படுகிறது.

 

இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று என்பதை பின்வரும் செய்தி மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது வாழ்நாளில் ஒரேயொரு சமய நேரம் மட்டுமே தியானம் நிலைக்கக் கூடிய பிறவிதனை ஆன்மா சில சமயங்களில் ஒரு பிறவியின் பெரும் பயனாகக் கருதி பிறவி எடுப்பது உண்டு என ஞானி ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதைப் பற்றி எண்ணும் பொழுது சூத்திர பவங்கள் கணக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரேயொரு சமய நேர தியானத்திற்கு ஒரு பிறவியையே ஆன்மா செலவழிக்கிறது என்றால் அந்த ஒரு சமய நேர தியானத்தின் மதிப்பு எவ்வளவு? என்பது நம் கற்பனைக்கு எட்டாதது.

உதாரணத்திற்கு பதினோராம் குணஸ்தானமான உபசாந்த மோஹ கஷாயம் இரண்டே இரண்டு சூத்திர பவ காலம் மட்டுமே இருக்கும். அதாவது உபசாந்த மோஹ கஷாயம் குணஸ்தான மொத்த கால அளவே இரண்டு சூத்திர பவ காலம் தான். அதற்கு மேல் பதினோராம் குணஸ்தானம் முடிந்து விடும். பிறகு அங்கிருந்து கீழ் குணஸ்தானங்களுக்கு உயிர் இறங்கி விடும்.

 

சூத்திர பவம் என்பது என்ன?

ஒரு சுவாசம் விடும் நேரத்தில் சில நுண்ணுயிர்கள்  18 முறை பிறந்து இறந்து விடும். அந்த 18 ம் பதினெட்டு பவங்கள் ஆகும். சூத்திர பவம் என்பது அந்தப் பதினெட்டு பவங்களில் ஒரு பவத்திற்கு சூத்திர பவம் என்பது பெயர்.  இந்த இரண்டு சூத்திர பவங்கள் தான் பதினோராம் குணஸ்தான கால அளவாகும்.

 

இது போல் பன்னிரண்டாம் க்ஷீண மோஹ கஷாய குணஸ்தானத்தின் கால அளவு நான்கு சூத்திர பவங்கள் என்றும் சொல்லப்படுகிறது.

 

இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று என்பதை பின்வரும் செய்தி மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது வாழ்நாளில் ஒரேயொரு சமய நேரம் மட்டுமே தியானம் நிலைக்கக் கூடிய பிறவிதனை ஆன்மா சில சமயங்களில் ஒரு பிறவியின் பெரும் பயனாகக் கருதி பிறவி எடுப்பது உண்டு என ஞானி ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதைப் பற்றி எண்ணும் பொழுது சூத்திர பவங்கள் கணக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரேயொரு சமய நேர தியானத்திற்கு ஒரு பிறவியையே ஆன்மா செலவழிக்கிறது என்றால் அந்த ஒரு சமய நேர தியானத்தின் மதிப்பு எவ்வளவு? என்பது நம் கற்பனைக்கு எட்டாதது. 

 

ஒரு ஆன்மா தனது மோக்ஷப் பாதையில் எத்தனை முறை திகம்பர முனி தர்மத்தைக் கடைபிடிக்கும்?

 

ஒரு ஆன்மா திகம்பர முனி தர்மத்தைக் கடைபிடிக்கும் அத்தனை பிறவிகளிலும் அது பயன்படுத்திய பிச்சு, கமண்டலங்கள் இவைகளை ஒரு குவியலாகக் குவித்து வைப்போமானால் அந்தக் குவியல் மேரு மலையின் அளவில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது திகம்பர முனியாகவே இருந்தாலும் அவர்கள் மனமும் அலை பாயும்! தியானத்தில் நிலைப்பது அதாவது தன்னில் தான் ஒன்றுவது பிரம்மப் பிரயத்தனமே என்று தோன்றுகிறது. ஆனாலும் அதனைச் சாதித்து தான் ஆக வேண்டும்.  திகம்பர முனியோ? அல்லது சாதாரண ஸ்ராவகராகவோ? இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்வதே சாலச் சிறந்தது. எதைக் கண்டும் கேட்டும் மனதைத் தளரவிடக் கூடாது முயற்சியைக் கைவிடக் கூடாது என்பதே அடியேனின் வேண்டுகோள்.

 

இதை விட இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம் ஒரு சில உயிர்கள் நிகோதத்தில் இருந்து வந்து விரல் எண்ணிக்கையில் அடங்கக் கூடிய சில பிறவிகளில் சம்யக்த்வம் அடைந்து முனி தீக்ஷை பெற்று கர்ம வினைகளை முழுவதும் அழித்து முழுதுணர் ஞானம் பெற்று முக்தியை அடைவதும் சாத்தியமான ஒன்று. இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய பரிணாமம் எவ்வளவுக்கு எவ்வளவு தூய்மையாக உள்ளதோ? அவ்வளவுக்கு அவ்வளவு நம்முடைய பிறிவிப்பிணி நீங்குவது என்பது வெகுவிரைவில் சாதிக்க முடியும்.


 இனி சம்யக்த்வம் பெறும் முறையைப் பார்க்கலாம். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் நம்முடைய கவனம் முழுவதையும் ஆத்மனில் செலுத்தி ஐக்கியமாவது மட்டுமே நம் சுய புத்தியுடன் செய்யும் செயல். நாம் ஆத்மனில் ஆழ்ந்த பிறகு கர்ம வினைகளில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் நம் சுய நினைவுக்கு அப்பாற்பட்டது நாம் சுயமாகச் செய்வதல்ல. ஆத்மனால் நடத்தப்படுவது. இந்த மாற்றங்களை கேவலி பகவான்கள் மட்டுமே அறிந்து சொன்னவை ஆகமங்கள் மூலம் ஜம்புகுமார சாஸ்திரியார் 2023  ஜூலை 17, 18 19 தேதிகளில் மோக்ஷமார்க்கப் பிரகாசகம் 9 வது அத்தியாயத்தில் இருந்து பரமாகம வகுப்பில் நடத்திய அறப் பொழிவில் இருந்து இவற்றை எடுத்துப்  பதிவு செய்கிறேன்.


இனி சம்யக்த்வம் எத்தனை வகைப்படும் என்பதைப் பார்ப்போம். 

சம்யக்த்வம் மூன்று வகைப்படும். அவை 

1.உபசம சம்யக்த்வம், 2.க்ஷயோபசம சம்யக்த்வம் ,

3. க்ஷாயிக சம்யக்த்வம்.


உபசம சம்யக்த்வமானது பிரதமோபசம சம்யக்த்வம் மற்றும் த்விதியோபசம சம்யக்த்வம் என மேலும் இரண்டு வகைப்படும்.


அனாதி  மித்யாதிருஷ்டி முதன் முதலாக பெறும் சம்யக்த்வம் பிரதமோபசம சம்யக்த்வம் ஆகும். இதன் கால அளவு ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே. அதற்கு மேல் நீடிக்காது. அனாதி மித்யாதிருஷ்டி பெறுவது பிரதமோபசம சம்யக்த்வம். இதில் உயிரானது அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கும் அப்ரசஸ்த உபசமம் அடைந்து விட கடினமான மித்யாத்வ பிரக்ருதிகள் ஒன்றை மட்டும் உபசமம் செய்தால் போதும்.

 

ஒரு முறை சம்யக்த்வம் பெற்ற ஸாதி மித்யாதிருஷ்டி ஜீவன் மீண்டும் கரணலப்தியை பயன்படுத்தி மீண்டும் சம்யக்த்வம் அடையும் போது அந்த சம்யக்த்வமும் பிரதமோபசம சம்யக்த்வம் என்று தான் அழைக்கப்படும். ஸாதி மித்யாதிருஷ்டி ஜீவன் எத்தனை முறை உபசம சம்யக்த்வம் பெற்றாலும் அத்தனை முறையும் பிரதமோபசம சம்யக்த்வம் என்று தான் சொல்லப்படுகிறது. இந்த சமயக்த்வத்தின் கால அளவும் ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே. இதுவும் அதற்கு மேல் நீடிக்காது. இதற்குப் பிறகு க்ஷயோபசம சம்யக்த்வத்தை பெற முயற்சி செய்யும், அல்லது மித்யாத்வ நிலைக்கு உயிரானது சென்று விடும். ஸாதி மித்யாதிருஷ்டி தரிசன மோகனீய பிரக்ருதிகள் மூன்றையும் உபசமம் செய்த பிறகே பிரதமோபசம சம்யக்த்வத்தைப் பெற வேண்டும்.

 

பிரதமோபசம சம்யக்த்வம் 4 ,5,6 மற்றும் ஏழாவது நிரதிசய குணஸ்தானம் வரை இருக்கும்.

 

த்விதியோபசம சம்யக்த்வம் என்பது ஏழாவது ஸாதிசய அப்ரமத்த குணஸ்தானத்தில் உபசம ஸ்ரேணியில் ஏறுவதற்காக மித்யாத்வம் மற்றும் க்ஷயோபசம சம்யக்த்வம் இவற்றில் இருந்து கரண லப்திகளின் துணை கொண்டு தர்சன மோகனீயம் மூன்று மற்றும் அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கையும் உபசமம் செய்து பெறும் சம்யக்த்வம் த்விதியோபசம சம்யக்த்வம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. த்விதியோபசம சம்யக்த்வம் என்பது இரண்டாவது முறையாக பெறும் சம்யக்த்வம் அல்ல! உபசம ஸ்ரேணியில் ஏறுவதற்காக முனிவர் பெறும் உபசம சம்யக்த்வத்திற்கு த்விதியோபசம சம்யக்த்வம் என்பது பெயர். இதில் அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கு மற்றும் தர்சன மோகனீய மித்யாத்வம், சம்யக்மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் ஆகிய மூன்று ஆக மொத்தம் ஏழு ப்ரக்ருதிகளும் உதயத்திற்கு வராமல் தணிந்து இருக்கும். அதாவது உபசமம் அடைந்து இருக்கும் உதயத்திற்கு வராது. இவை ஏழும் தணிந்துள்ள தெளிவான ஆத்ம பரிணாமம். இதற்கு ஒரு உதாரணம் சொல்லப்படுகிறது. அழுக்கு நீரில் தேத்தான் கொட்டையை சில நிமிடங்கள் ஊறவைத்தபின் அந்த அழுக்கு நீரில் உள்ள அழுக்குகள் அனைத்தும் பாத்திரத்தின் அடியில் படிந்து விட தண்ணீர் மேல் பரப்பு தெளிவாக இருக்கும். அழுக்குகள் உள்ளது ஆனால் அவை கீழே படிந்து விட மேல் பரப்பு தெளிவாக உள்ள நிலை உபசம சம்யக்த்வத்தின் நிலை. இந்த த்விதியோபசம சம்யக்த்வ கால அளவும் ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே.


மேலும் கட்டுரையைத் தொடர்வதற்கு முன் அனந்தானுபந்தி கஷாயங்கள் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். மோக்ஷ மார்க்கப் பிரகாசகம் ஒன்பதாம் அத்தியாயத்தில் சம்யக்த்வம் பெறுவதற்கு பஞ்ச லப்திகளைப் பயன்படுத்தி சம்யக்த்வம் பெறும் முறையை விவரிக்கும் போது மித்யாத்வம் சம்யக்மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் இவைகளின் நிலை பற்றி மட்டுமே விரிவாக அலசுகிறார் கல்ப பண்டிதர் தோடர்மல் அவர்கள். அனந்தானுபந்தி கஷாயங்கள் பற்றி அந்த அத்தியாயத்தின் இறுதியில் விவரிக்கின்றார். ஆகையால் இந்தக் கட்டுரையில் அனந்தானுபந்தி கஷாயங்கள் பற்றி அதிகம் விவரங்கள் இப்போது இருக்காது. அப்படியே சில குறிப்புகள் சொல்லப்பட்டாலும் அவை முழுமையானதல்ல மேலும் விளக்கங்கள் சொல்லப்பட வேண்டும். சம்யக்த்வத்தின் வகைகள் பற்றியும் அதில் தரிசன மோகனீய பிரக்ருதிகள் மித்யாத்வம் சம்யக்மித்யாத்வம் சம்யக்த்வம் பற்றி மட்டுமே விரிவாகப் பேசப்படும். அனந்தானுபந்தி கஷாயங்கள் பற்றி இப்போது புரிபடாத விவரங்கள் கட்டுரையின் இறுதியில் தெளிவாகும் அது வரை பொறுமை காக்க பவ்யர்களை வேண்டிக் கொள்கிறேன்.

 

உபசம சம்யக்த்வம் க்ஷாயிக சம்யக்த்வத்தைப் போலவே தூய்மை கொண்டது. க்ஷாயிக சம்யக்த்வத்திற்கு எந்தவிதத்திலும் குறைவானது அல்ல. காரணம் சம்யக்த்வத்திற்கு எதிரான ஏழு மூலப்ரக்ருதிகளும் உதயத்திற்கு வராமல் இருக்கும் தணிந்து இருக்கும். ஆகையால் க்ஷாயிக சம்யக்த்வத்திற்கு நிகராக உபசம சம்யக்த்வம் இருக்கும். ஆனால் ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே இருக்கும். அதற்கு மேல் நீடிக்காது. பதினோராம் குணஸ்தானம் வரை  மட்டுமே த்விதியோபசம சம்யக்த்வத்துடன்  செல்ல முடியும். அதற்கு மேல் திவிதியோபசம சம்யக்த்வத்துடன் ஸ்ரேணியில் ஏற முடியாது.

த்விதியோபசம சம்யக்த்வ காலமான ஒரு அந்தர் முகூர்த்த நேரம் முடிவதற்கு முன்னரே 8,9,10 மற்றும் பதினோராம் குணஸ்தானம் வரை உயிர்கள் உயர்வு பெறுகின்றன என்று ஆகமங்கள் கூறுகின்றன. த்விதியோபசம சம்யக்த்வம் முடிவுக்கு வந்ததும் ஆறு, ஐந்து , நான்காவது குணஸ்தானத்திற்கு உயிர்கள் இறங்கி விடும் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. சில சமயங்களில் கீழே இறங்கி வரும்போது மித்யாத்வம் உதயத்தில் இருக்குமானால் முதலாவது குணஸ்தானத்திற்கு கூட வந்து விடும். பிறகு? பிறகு என்ன! அடுத்த முயற்சியைத் தொடங்க வேண்டியதுதான்.

 

த்விதியோபசம சம்யக்த்வம் ஏழாவது நிரதிசய குணஸ்தானத்தில் இருந்து 8,9,10 மற்றும் பதினோராவது குணஸ்தானம் வரை இருக்கும்.

 

 மேலும் கட்டுரையைத் தொடர்வதற்கு முன் அனாதி மித்யாதிருஷ்டி பெற்ற பிரதமோபசம சம்யக்த்வத்தில் அதன் இறுதி நிலையில் கற்பாறைக்கு நிகரான மித்யாத்வம் கரண பரிணாமம் காரணமாக மூன்று பிரிவுகளாக உடைக்கப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு? என்று பார்ப்போம்.

 

அனாதி மித்யாதிருஷ்டி சம்யக்த்வம் அடையும் வழிமுறைகளை ஏற்கெனவே இந்தக் கட்டுரையில் விவரித்து உள்ளோம். அதில் கரண நிகழ்வில் அனிவிருத்தி கரணம் நிகழ்வின் இறுதியில் அந்தரகரணம் ஏற்பட்டு மித்யாத்வ பிரக்ருதிகளை உபசமம் செய்து ஒதுக்கி விட்டு சம்யக்த்வம் அந்த இடத்தை ஆக்கிரமித்து முதன் முதலாக சம்யக்த்வம் பெறுகிறது என்று பார்த்தோம். இந்த சம்யக்த்வம் ஒரு அந்தர்முகூர்த்த காலத்திற்கு மேல் நீடிக்காது உயிரை மித்யாத்வம் மீண்டும் சூழ்ந்து விடும். பிரதமோபசம சம்யக்த்வம் அடைந்த உயிர் நான்காவது அவிரத குணஸ்தானத்தில் பிரவேசம் செய்கின்றது. மித்யாத்வம் சூழ்ந்து கொண்டு விட்டாலும் அவிரத குணஸ்தானத்தில்  சம்யக்த்வம் இருப்பதாக தான் கருதப்படும்.


மேற்கண்ட சம்யக்த்வம் அடையும் முறை நம்முடைய சக்தி கொண்டு பெறப்படுவதல்ல. நம்முடைய ஆத்மனில் நம்முடைய கவனம் குவிக்கப்பட்ட க்ஷணத்தில் இருந்து நம்முடைய ஆன்மா செயல்பட்டு உண்டாக்கும்  நிகழ்வுகள் ஆகும். இந்த நிகழ்வுகளை கேவலிகள் மட்டுமே அறிவர்.

 

மேலும் கட்டுரையைத் தொடர்வதற்கு முன் அனாதி மித்யாதிருஷ்டி பெற்ற பிரதமோபசம சம்யக்த்வத்தில் அதன் இறுதி நிலையில் கற்பாறைக்கு நிகரான மித்யாத்வம் கரண பரிணாமம் காரணமாக மூன்று பிரிவுகளாக உடைக்கப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு? என்று பார்ப்போம்.

 

அனாதி மித்யாதிருஷ்டி சம்யக்த்வம் அடையும் வழிமுறைகளை ஏற்கெனவே இந்தக் கட்டுரையில் விவரித்து உள்ளோம். அதில் கரண நிகழ்வில் அனிவிருத்தி கரணம் நிகழ்வின் இறுதியில் அந்தரகரணம் ஏற்பட்டு மித்யாத்வ பிரக்ருதிகளை உபசமம் செய்து ஒதுக்கி விட்டு சம்யக்த்வம் அந்த இடத்தை ஆக்கிரமித்து முதன் முதலாக சம்யக்த்வம் பெறுகிறது என்று பார்த்தோம். இந்த சம்யக்த்வம் ஒரு அந்தர்முகூர்த்த காலத்திற்கு மேல் நீடிக்காது உயிரை மித்யாத்வம் மீண்டும் சூழ்ந்து விடும். பிரதமோபசம சம்யக்த்வம் அடைந்த உயிர் நான்காவது அவிரத குணஸ்தானத்தில் பிரவேசம் செய்கின்றது. மித்யாத்வம் சூழ்ந்து கொண்டு விட்டாலும் அவிரத குணஸ்தானத்தில்  சம்யக்த்வம் இருப்பதாக தான் கருதப்படும்.

 

 

மேற்கண்ட சம்யக்த்வம் அடையும் முறை நம்முடைய சக்தி கொண்டு பெறப்படுவதல்ல. நம்முடைய ஆத்மனில் நம்முடைய கவனம் குவிக்கப்பட்ட க்ஷணத்தில் இருந்து நம்முடைய ஆன்மா செயல்பட்டு உண்டாக்கும்  நிகழ்வுகள் ஆகும். இந்த நிகழ்வுகளை கேவலிகள் மட்டுமே அறிவர்.

 

அனிவ்ருத்தி கரண நிகழ்வில் உபசமம் செய்யப்படும் போது ஒரேயொரு கடினமான பாறையை ஒத்த மித்யாத்வமானது ஆத்மனின் விசுத்த பரிணாமம் காரணமாக பலமிழந்து "மித்யாத்வ தர்சன மோகனீயம்" "மிஸ்ர மோகனீயம்" எனப்படும் "சம்யக்மித்யாத்வ தர்சன மோகனீயம்" மற்றும்"சம்யக்த்வ தர்சன மோகனீயம்" எனப்படும் மூன்று தர்சன மோகனீய ப்ரக்ருதிகளாக உடைக்கப்பட்டு ஸத்தாவில் இருப்பாக நின்று விடுகின்றன. இது வரை மித்யாத்வம் ஒரேயொரு ப்ரக்ருதியாக இருந்தது. இப்போது மூன்று தர்சன மோகனீய ப்ரக்ருதிகளாக பலம் குறைந்த நிலையில் மாற்றப்பட்டு விட்டன. மேலும் விளக்கமாகச் சொல்வது என்றால் கடினமான மித்யாத்வ பாறை ஆத்மனின் தூய பரிணாமம் காரணமாக உடைந்து சம்யக்மித்யாத்வ தரிசன மோகனீய பிரக்ருதிகள் ஆக மேலும் இரண்டாக பிரியும். இதனுடைய அனுபாக பந்தமானது மித்யாத்வ பிரக்ருதிகளின் அனுபாக பந்தத்தில் அனந்தத்தில் ஒரு பாகமாக கட்டும். மேலும் இந்த மிஸ்ர மோகனீய பிரக்ருதிகள் உடைந்து சம்யக்த்வ தரிசன மோகனீய ப்ரக்ருதிகளாக மூன்றாவதாக பிரியும். இதனுடைய அனுபாக பந்தமானது சம்யக்மித்யாத்வ தரிசனமோகனிய ப்ரக்ருதிகளின் அனுபாக பந்தத்தில் அனந்தத்தில் ஒரு பாகமாக கட்டும்.

 

ஒட்டுமொத்தமாக சொல்வதானால் சம்யக்த்வ தரிசன மோகனீய பிரக்ருதிகளின் அனுபாகத்தை விட அனந்த மடங்கு கூடுதலாக சம்யக்மித்யாத்வ தரிசனமோகனிய பிரக்ருதிகள் கொண்டிருக்கும். சம்யக்மித்யாத்வ தரிசனமோகனிய ப்ரக்ருதிகளின் அனுபாகத்தை விட அனந்த மடங்கு கூடுதலாக மித்யாத்வ பிரக்ருதிகளின் அனுபாக பந்தம் கூடுதலாக கொண்டிருக்கும். ஸாதி மித்யாதிருஷ்டி இனிமேல் சம்யக்த்வம் பெற வேண்டும் என்றால் இந்த மூன்று தர்சன மோகனீய ப்ரக்ருதிகளை உபசமம் செய்து தான் சம்யக்த்வம் அடைய வேண்டும். இவ்வாறு ஆகமங்கள் கூறுகின்றன.

 

இதை கடினமான பாறை , பெரிய ஐஸ்கட்டி,  வெண்ணெய் மற்றும் நெய் இவற்றை உதாரணங்களாக பயன்படுத்தி விளக்குவர் ஆச்சாரியர்கள். இதில் நமக்கு மிகவும் பரிச்சயமான பெரிய ஐஸ்கட்டியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

 

குளிர்பானம் விற்கும் கடைகளில் குளிர்ச்சிக்காக பெரிய பெரிய ஐஸ்கட்டிகளை  கோணிகளைச் சுற்றி வைத்து தரையில் மரத்தூள் அல்லது நெல் உமி பரப்பி அதன் மேல் வைத்து இருப்பார்கள். தேவைப் படும் போது அந்த ஐஸ்கட்டிகளில் ஒன்றை எடுத்து இரண்டாகக் கூர்மையான கம்பியால் பிளந்து எடுப்பர். அதில் ஒரு கட்டியைக் கோணியில்  சுற்றி பத்திரப்படுத்தி வைப்பதாகக் கொள்வோம். பத்திரப்படுத்திய ஐஸ்கட்டி மித்யாத்வ மோகனீயம் ஆகும்.  இரண்டாவது ஐஸ்கட்டியை சிறு சிறு துண்டுகளாக மேலும் உடைப்பர். உதாரணத்திற்கு பத்து சிறிய ஐஸ்கட்டிகளாக உடைப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பத்துக் கட்டிகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை பத்திரப்படுத்தி விடுவதாக வைத்துக் கொள்வோம். இவை பத்தில் ஒரு கட்டியை மட்டும் எடுத்து அதைப் பொடிப்பொடியாக நசுக்கி ஒரு மரப் பாத்திரத்தில் போட்டு தேவைப்படும் போது எடுத்து சிறிது குளிர்பானத்தில் போட்டு நாம் அருந்த தருவர்.

 

இதில் இரண்டாவது ஐஸ்கட்டியில் பத்தில் ஒரு சிறிய பகுதி சம்யக்மித்யாத்வ மோகனீயம் ஆகும்.

 

நசுக்கப்பட்ட ஐஸ் துகள்கள் சம்யக்த்வ மோகனீயம் ஆகும். ஒரு பெரிய ஐஸ் கட்டியில் இரண்டாவது ஐஸ்கட்டி  பத்து சிறு துண்டுகளாக ஆக்கப்படுகிறது. அந்தப் பத்தில் ஒரு கட்டி சம்யக்மித்யாத்வ தரிசனமோகனியம் ஆகும். அந்த ஒரு ஐஸ் கட்டியை நசுக்கிச் சிறு சிறு துகள்களாகப் பொடித்து வைக்கப்பட்டு குளிர் பானத்தை குளிர்ச்சியாக்கப் பயன்படுகிறது. பானத்தைக் குளிர்ச்சியாக்கப் பயன்படும் ஐஸ் தூள் சம்யக்த்வ மோகனீயம் ஆகும். இவ்வாறு மித்யாத்வமாகிய பெரிய ஐஸ் கட்டியை உடைத்து மூன்று விதமாகப் பிரிப்பது ஆத்மனின் தூய பரிணாமம் தான். ஆகவே எப்போதும் ஆத்மனின் தூய பரிணாமம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மித்யாத்வ தர்சன மோகனீயம் என்பதைச் சுருக்கமாக உடல் சார்ந்த புறம் சார்ந்த நம்பிக்கைகள் என்று பொருள் கொள்ளலாம்.

 

சம்யக்மித்யாத்வ தர்சன மோகனீயம் என்பதை சுருக்கமாக ஆத்மனில் நம்பிக்கையும் அதோடு உடல் மற்றும் புறம் சார்ந்த நம்பிக்கைகள் இரண்டும் கலந்த விசித்திரக் கலவை என்று பொருள் கொள்ளலாம்.

 

சம்யக்த்வ தர்சன மோகனீயம் என்பதை சுருக்கமாக ஆத்மனில் நம்பிக்கையும் உண்டு அதே நேரத்தில் அந்த நம்பிக்கையில் சலனம், மலினம்  மற்றும் திடமற்ற நிலை இம்மூன்று குற்றங்களும் இருக்கும். ஆகையால் சம்யக்த்வ தர்சன மோகனீயம் வடமொழியில் ச்சல மல அகாட தோஷங்கள் கொண்ட சம்யக்த்வம்  என்று சொல்லப்படுகிறது. இதைக் கேவலிகள் மட்டுமே அறிவர் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன.

 

அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் நான்கு மற்றும் தர்சன மோகனீய கர்மங்கள் மித்யாத்வ தர்சன மோகனீயம்,  சம்யக்மித்யாத்வ தர்சன மோகனீயம் மற்றும் சம்யக்த்வ தர்சன மோகனீயம் மூன்று சேர்த்து ஏழு மூலப்ரக்ருதிகள் ஆகின்றன.


அனாதி மித்யாதிருஷ்டி பிரதமோபசம சம்யக்த்வம் பெறுவதற்கு அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கும் விசுத்தி லப்தியின் போது அப்ரசஸ்த உபசமம் என்று சொல்லும் முறையில் தாங்களாகவே உபசமம் அடைந்து மந்த மந்ததம மந்ததர நிலையில் தணிந்து விடுகின்றன. ஒரேயொரு தன்மையில் உள்ள மித்யாத்வ பிரக்ருதிகள் மட்டும் அந்தர கரணத்தால் சம்யக்த்வம் பெறும் நேரம் வரை தணிக்கப்பட்டு விடுகின்றன.

 

ஸாதி மித்யாதிருஷ்டி சம்யக்த்வம் பெற எண்ணும் போது தர்சன மோகனீய கர்மங்கள் மூன்றையும் ஒரு சேர கரண லப்திகளின் மூலம் உபசமம் செய்தாக வேண்டும். உபசம சம்யக்த்வத்தின் போது அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கும் அப்ரசஸ்த முறையில் தாங்களாகவே தணிந்து விடும். இந்த ஏழும் தணிந்த நிலையில் தான் ஸாதி மித்யாதிருஷ்டிக்கு உபசம சம்யக்த்வம் அதாவது மீண்டும் பிரதமோபசம சம்யக்த்வம் ஏற்படும்.

இந்த மூன்று தர்சன மோகனீய கர்மங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே மித்யாத்வமாக மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அது எப்போது என்றால் ஒரு முறை சம்யக்த்வம் பெற்ற பிறகு அடுத்தடுத்து சம்யக்த்வத்தை அடைய பிறவி உயிரானது தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு முயலாமல் நீண்ட காலம் இருந்தாலோ? அல்லது மரணம் ஏற்பட்டு அடுத்தடுத்த பிறவிகளில் சம்யக்த்வம் அடைவதற்கான முயற்சியில் சுணக்கம் ஏற்பட்டு விட்டாலோ?  தர்சன மோகனீயங்கள் மூன்றும் ஒன்று சேர்ந்து கொண்டு முன்பு இருந்ததைப் போலவே ஒரேயொரு மித்யாத்வ ப்ரக்ருதி ஆகிவிடும். இந்த நிலைக்கு உத்வேலனா என்று பெயர். இந்தப் பெயரைச் சொன்னவர் திரு. பூபாலன் ஸ்ருதகேவலி ஆசிரியர் ஆவார்.ஆகமங்களில் இருந்து இந்தக் குறிப்பைச் சொன்னார். மீண்டும் சம்யக்த்வம் பெற எண்ணும் பிறவிஉயிர் அந்த மித்யாத்வ ப்ரக்ருதியை பழையபடியே உபசமம் செய்து சம்யக்த்வம் பெற வேண்டும்.


இவ்வாறு சொல்கின்ற இந்த நேரத்தில் மீண்டும் உபசம சம்யக்த்வம் பெறும் முறையைப் பார்ப்போம்.


உபசம சம்யக்த்வம்.


ஸாதி மித்யாதிருஷ்டி சம்யக்த்வம் பெறுவதற்கு அனாதி மித்யாதிருஷ்டி சம்யக்த்வம் பெற்ற வழி முறைகள் போன்றதே! எப்போது ஒரு உயிர் சம்யக்த்வம் பெற எண்ணும் போதும் கரணலப்தி பயன்படுத்தி தான் பெற வேண்டும் அதில் எந்த மாற்றமும் இல்லை.


இடைவிடாத ஆத்ம சிந்தனை, ஆத்மனைப் பற்றிய தெளிந்த ஞானம் மற்றும் அதில் முழுமையான நம்பிக்கை, மோக்ஷதத்துவம் ஏழிலும் தெளிவான அறிவு மற்றும் முழு நம்பிக்கை இவற்றோடு கூட சம்யக்த்வம் பெற்றே தீர வேண்டும் என்ற வேட்கை இவை அனைத்தும் சற்றும் குறையக் கூடாது.


இந்தச் சீரிய மனோநிலையில் சுயபுத்தியுடன் நம்முடைய கவனம் முழுவதையும் ஆத்மனுள் ஒருமுகப்படுத்தி ஆழ வேண்டும். அவ்வாறு ஆத்மனில் ஆழும் வரை இந்தப் பிறவி உயிர் சுய நினைவோடு செய்யும். அது வரை தான் பிறவி உயிர் செய்ய வேண்டிய வேலை. அதற்குப் பிறகு ஆத்மனில் நமது கவனம் முழுவதும் குவிந்த பின்னர் நம்முடைய ஆத்மா செயல்பட ஆரம்பிக்கும். 

மித்யாத்வ பிரக்ருதிகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து உதயத்திற்கு வந்து கொண்டு அவைகளின் பலனை தந்து கொண்டேதான் இருக்கும். இது ஒரு வாடிக்கையான நிகழ்வு ஆகும். ஒவ்வொரு சமயம் தீவிர நிலையில் மித்யாத்வ பிரக்ருதிகள் உதயத்திற்கு வரும். ஒவ்வொரு சமயம் மந்த நிலையிலும் உதயத்திற்கு வந்து அதன் பலனைத் தரும். மித்யாத்வ பிரக்ருதிகள் உதயத்திற்கு வராத நிலை என்பதே கிடையாது. நம்முடைய வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் ஒன்று மாற்றி ஒன்று தொடர்ந்து வருவதற்கும் அல்லது துன்பங்களே தொடர்ந்து வருவதற்கும் இன்பங்கள் அல்லது சுகங்களே தொடர்ந்து வருவதற்கும் இது தான் காரணம்ஸாதி மித்யாதிருஷ்டி என்பதால் மித்யாத்வம் சம்யக்மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் இம்மூன்று தரிசன மோகனீய பிரக்ருதிகள் அடுத்தடுத்து மாற்றி மாற்றி உதயத்திற்கு வந்த வண்ணம் இருக்கும். அவைகளின் உதயம் மந்த நிலையில் இருக்கும் போது ஆத்மாவானது ஒரு சமயத்தில் உதயத்திற்கு வரக்கூடிய மித்யாத்வ ப்ரக்ருதி நிஷேகங்களை அனிவிருத்தி கரணத்தின் இறுதியில் அந்தரகரணம் துணை கொண்டு சம்யக்த்வம் பெறும் நேரம் வரை உதயத்திற்கு வர விடாமல் உபசமம் செய்து தணித்து விடும். அதாவது ஸத்தாவில் இருப்பாக நிறுத்தி விடும் உதயத்திற்கு வராமல் தடுத்து நிறுத்தி விடும்.

 

அடுத்து உதீரணை மூலம் சற்று நேரம் கழித்து உதயத்திற்கு வர வேண்டிய மித்யாத்வ பிரக்ருதிகள் சம்யக்த்வம் பெற வேண்டிய நேரத்தில் உதயத்திற்கு வரக்கூடிய சாத்தியக்கூறு உண்டு அவைகளையும் உபசம கரணம் மூலம் உதயத்திற்கு வர விடாமல் உபசமம் செய்து தணித்து விடும். இவ்விரு நிகழ்வுகளும் நடந்து முடிந்ததும் மூன்று தர்சன மோகனீய பிரக்ருதிகளும் தணிந்து அந்த இடம் வெற்றிடமாக இருக்கும். அப்போது ஆத்மா தன்னுடைய சக்தியை பிறவி உயிர் உணரும் வகையில் மிகவும் சிறிய அளவில் வெளிப்படுத்தும். இது தான் ஸாதி மித்யாதிருஷ்டி பெறும் உபசம சம்யக்த்வம் ஆகும். இதுவும் பிரதமோபசம சம்யக்த்வம் என்று சொல்லப்படுகிறது. இது மிகவும் சிறிய கால அளவில் அதாவது அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே இருக்கும். ஆத்மனின் அளப்பரிய ஆற்றல் இருக்கும் அந்த அற்புதமான நேரம் வரை மித்யாத்வ பிரக்ருதிகள் மூன்றும் ஸத்தாவில் இருப்பாக மட்டுமே தணிந்து இருக்கும் உதயத்திற்கு வராது. சம்யக்த்வ காலம் நிறைவு பெறும் தருணத்தில் மித்யாத்வ பிரக்ருதிகள் மீண்டும் பழையபடி உதயத்திற்கு வர ஆரம்பித்து விடும். ஆனால் சம்யக்த்வம் பெற்ற உயிர் தன்னை மீண்டும் உணர்ந்து கொண்டு விட்டது. மோக்ஷப் பாதையில் நடை போட ஆரம்பித்து விட்டது என்று பொருள்.

உபசம சம்யக்த்வம் பெற தீவிர ஆத்ம சிந்தனையில் மூழ்கி இருக்கும் போது அனந்தானுபந்தி கஷாயங்கள் அப்ரசஸ்த உபசமம் முறையில் தானாகவே தணிந்து விடும். உபசம சம்யக்த்வ நிலையில் அனந்தானுபந்தி கஷாயங்களின் நிலை இது தான். கரணங்கள் துணை கொண்டு அனந்தானுபந்தி கஷாயங்களை தணிக்க முடியாது ஆத்ம சிந்தனை தீவிரமாகும் போது அவைகள் தாமாகவே உபசமம் அடைந்து விடும். அதாவது தணிந்து இருக்கும்.

 

உபசம சம்யக்த்வத்தின் கால அளவு ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே. அது நிறைவு பெற்றதும் உயிர் மித்யாத்வ நிலைக்கு வந்து விடும் அல்லது க்ஷயோபசம சம்யக்த்வம் பெறுவதற்கு உயிர் முயற்சி செய்து அதை அடையும்.

 

இந்த பிரதமோபசம சம்யக்த்வத்தை உயிரானது மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் கரண லப்திகளின் துணை கொண்டு தான் பிரதமோபசம சம்யக்த்வத்தை அடைய முடியும்.

 

நான்காவது அவிரத குணஸ்தானத்தில் இருந்து ஐந்தாவது தேச விரத குணஸ்தானம், ஆறாவது பிரமத்த குணஸ்தானம் ஏழாவது நிரதிசய அப்ரமத்த குணஸ்தானம் வரை அடைகின்ற சம்யக்த்வம் பிரதமோபசம சம்யக்த்வம் தான்.

த்விதியோபசம சம்யக்த்வம் பற்றிய விளக்கம் ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது. ஏழாவது ஸாதிசய அப்ரமத்த குணஸ்தானத்தில் க்ஷயோபசம சம்யக்த்வம் கொண்டு உபசம ஸ்ரேணியில் ஏற முடியாது. ஏனெனில் க்ஷயோபசம சம்யக்த்வத்தில் மித்யாத்வம் சம்யக்மித்யாத்வம் இரண்டும் க்ஷயம் மற்றும் உபசம நிலையில் இருந்தாலும் சம்யக்த்வ மோகனீயம் உதயத்தில் உள்ளது. க்ஷல மல அகாட தோஷங்கள் கொண்டது. ஆகையால் க்ஷயோபசம சம்யக்த்வத்தை கொண்டு. உபசம ஸ்ரேணியில் ஏறுவது என்பது இயலாத விஷயம். ஆகையால் க்ஷயோபசம சம்யக்த்வத்தை கரணலப்திகள் துணை கொண்டு மூன்று தர்சன மோகனீய கர்மங்களை உபசமம் செய்தும் அனந்தானுபந்தி கஷாயங்களின் அப்ரசஸ்த உபசமத்தின் துணை கொண்டும் (அனந்தானுபந்தி கஷாயங்களை விஸய்யோஜன முறையில் அப்ரத்யாக்யான ப்ரத்யாக்யான மற்றும் சஞ்ஜ்வலன கஷாயங்களாக மாற்றம் செய்யப்படும் என்ற கருத்தும் உண்டு) உபசம ஸ்ரேணியில் ஏறுவதற்காக உபசம சம்யக்த்வம் பெறப்படும். இந்த சம்யக்த்வத்திற்கு த்விதியோபசம சம்யக்த்வம் என்று பெயர்

த்விதியோபசம சம்யக்த்வத்தின் கால அளவும் ஒரு அந்தர் முகூர்த்த நேரம் மட்டுமே இருக்கும், அதற்கு மேல் நீடிக்காது.

 

பொதுவாக உபசம சம்யக்த்வமான த்விதியோபசம சம்யக்த்வம் க்ஷாயிக சம்யக்த்வம் போன்றே தூய்மையானது. க்ஷாயிக சம்யக்த்வம் போலவே சம்யக்யத்வ மூல பிரக்ருதிகள் ஏழும் உபசமம் அடைந்து ஸத்தாவில் இருப்பாக தங்கி இருப்பதால் ஆத்ம பரிணாமம் மிகவும் தெளிவாக தூய்மையாக இருக்கும். ஆகையால் தான் த்விதியோபசம சம்யக்த்வத்தின் போது உயிரானது பதினோராம் குணஸ்தானம் வரை செல்ல முடிகிறது. அதற்கு மேல் செல்ல முடியாததற்கு காரணம் சம்யக்யத்வ மூல ப்ரக்ருதிகள் ஏழும் உபசமம் தான் அடைந்து இருக்கின்றனவே தவிர அழியவில்லை. அவைகள் எப்போது வேண்டுமானாலும் அதாவது த்விதியோபசம சம்யக்த்வம் முடியும் நேரத்தில் உதயத்திற்கு வந்து விடும் நிலையில் உள்ளன. ஆகையால் தான் பதினோராம் குணஸ்தானத்திற்கு மேல் செல்ல முடியாமல் கீழ் குணஸ்தானங்ளுக்கு உயிர் இறங்கி விடுகிறது. அவ்வாறு இறங்குவதற்கு ஒரு சமய காலமே போதுமானது.

க்ஷயோபசம சம்யக்த்வம் பெறும் முறை.

க்ஷயோபசம சம்யக்த்வம் ஸாதி மித்யாதிருஷ்டி, பிரதமோபசம சம்யக்த்ருஷ்டி அந்தர் முகூர்த்த நேரம் முடிந்ததும் மித்யாதிருஷ்டி நிலையடைந்த உயிர் மற்றும் மிஸ்ர குணஸ்தானத்தில் உள்ள சம்யக்மித்யாத்வ உயிர்களுக்கு ஏற்படும். மிஸ்ர குணஸ்தானத்தில் எவ்வாறு க்ஷயோபசம நிலை ஏற்படுவதானது, முதல் முறையாக 66 கடற்காலம் க்ஷயோபசம சம்யக்த்வம் முடிந்த பிறகு மிஸ்ர குணஸ்தானத்திற்கு வந்து அதாவது சம்யக்மித்யாத்வ நிலையில் சொற்ப காலம் இருந்து இரண்டாவது முறையாக க்ஷயோபசம சம்யக்த்வத்தை உயிரானது பெறும். க்ஷயோபசம சம்யக்த்வம் நீட்டிப்பு மிஸ்ர குணஸ்தானத்தில் தான் நிகழ்கிறது. இது ஒரு சிறப்பம்சமாகும். அனாதி மித்யாதிருஷ்டிக்கு க்ஷயோபசம சம்யக்த்வம் ஏற்படாது. ஒரு முறையாவது சம்யக்த்வம் பெற்ற உயிர்களுக்குத் தான் க்ஷயோபசம சம்யக்த்வம் ஏற்படும். இதை ஆகமங்கள் நிச்சயமாகச் சொல்கின்றன.

க்ஷயோபசம சம்யக்த்வம் பெறுவதற்கும் அதப்ரவிருத்தி கரணம் அபூர்வ கரணம் அநிவ்ருத்தி கரணம் இம்மூன்று கரணங்களையும் உபயோகப் படுத்தித்தான் க்ஷயோபசம சம்யக்த்வம் பெற வேண்டும்.

 

உதயாபாவிக் க்ஷயம்.

 

அனிவ்ருத்தி கரண நிகழ்வின் முடிவில் அந்தரகரணம் ஏற்பட்டு நிகழ்காலத்தில் ஒரு சமயத்தில் உதயத்திற்கு வரக்கூடிய மித்யாத்வ மற்றும் சம்யக்மித்யாத்வ ப்ரக்ருதி நிஷேகங்களை குறிப்பிட்ட கால அளவிற்கு அதாவது (க்ஷயோபசம சம்யக்த்வம் ஏற்படும் காலம் வரை) உதயத்திற்கு வர விடாமல் அந்த நிஷேகங்களை மட்டும் ஆத்ம பரிணாமம் காரணமாக அழித்துவிடுகிறது. ஆகமங்கள் நிஷேகங்கள் நிர்ஜரை செய்யப் படுவதாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு சமயத்தில் உதயத்திற்கு வரக்கூடிய நிஷேகங்கள் மட்டும் நிர்ஜரை செய்யப்பட்டு க்ஷயோபசம சம்யக்த்வம் பெற்ற பிறகு அடுத்து வரும் நிஷேகங்கள் உதயத்திற்கு வரும். அவை பின்னர் நடைபெறும்.இப்போது நிகழ் காலத்தில் ஒரு சமய நேரத்திற்கு உதயத்திற்கு வரக்கூடிய நிஷேகங்கள் மட்டுமே அழிக்கப் படுகின்றன. இதற்கு உதயாபாவிக் க்ஷயம் என்று பெயர்.

 

ஸதவஸ்த்தா ரூப உபசமம்.

 

அதே சமயம்  எதிர்காலத்தில் உதயத்திற்கு வரவுள்ள மித்யாத்வ மற்றும் சம்யக்மித்யாத்வ ப்ரக்ருதிகளை அந்த குறிப்பிட்ட காலத்திற்கு ஸத்தாவில் இருப்பாக நிறுத்தி வைத்து உபசமம் செய்து தணிக்கப்படுகின்றன.  இதற்கு ஸதவஸ்த்தா ரூப உபசமம் (ஸத் அவஸ்தா வடிவ உபசமம்) என்று பெயர்.

 

முன்னர் குறிப்பிட்ட மாங்கனி உதாரணத்தை மீண்டும் பார்ப்போம். மீதமுள்ள 90 மாங்கனிகள்  விற்பனைக்கு உள்ளன. ஆனால் அவைகளில் மீண்டும் ஒரு பத்து மாங்கனிகளை கூடையில் இருந்து ஒரு பையில் தனியாக எடுத்து வைப்பதாக வைத்துக் கொள்வோம்.

 

எதிர்காலத்தில் உதயத்திற்கு வரக்கூடிய மித்யாத்வ மற்றும் சம்யக்மித்யாத்வ பிரக்ருதிகளை உதயத்திற்கு வரவிடாமல் ஸத்தாவில் இருப்பாக வைத்து உபசமம் செய்வதற்கு ஸதவஸ்த்தா ரூப உபசமம் என்ற பெயர். கூடையில் இருந்து எடுத்து வைத்த 10 மாங்கனிகளை பின்னர் விற்பதற்காக தனியாக எடுத்து இருப்பாக ஒரு பையில் வைக்கப்படுகின்றன.  ஆனால் அவை இப்போது பையில் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளன. இப்போது அவை விற்கப்படாமல் பையில் இருப்பாக உள்ளன. ஸதவஸ்த்தா ரூப உபசமத்தை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டு சுற்றி வளைத்து சொல்லி இருந்தாலும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

 

சம்யக்த்வ மோகனீய ப்ரக்ருதியின் உதயம்.

 

நிகழ்காலத்தில் தர்சன மோகனீய கர்மங்களின் சம்யக்த்வ மோகனீய கர்மங்கள் உதயத்தில் இருக்கும். சம்யக்த்வ ப்ரக்ருதிகள் உதயத்தில் இருந்தாலும் சம்யக்த்வம் ஏற்படுவதைத் தடுக்காது. ஏனெனில் தர்சன மோகனீய சம்யக்த்வ ப்ரக்ருதியானது தேசகாதி கர்மவினையாகும். உயிர் சம்யக்த்வம் பெறுவதை அதனால் முழுமையாகத் தடுக்க முடியாது. ஆனால் சம்யக்த்வத்திற்கு களங்கம் ஏற்படுத்தும். அதாவது ச்சல மல அகாட தோஷங்கள் கொண்ட சம்யக்த்வமாக இருக்கும். ஆனாலும் க்ஷயோபசம சம்யக்த்வம் ஏற்படுவதைத் தடுக்காது தடுக்க முடியாது.

 

நிகழ்காலத்தில் தர்சன மோகனீய மித்யாத்வ மற்றும் சம்யக்மித்யாத்வ ப்ரக்ருதிகளின் உதயாபாவிக் க்ஷயம்,

 

எதிர்காலத்தில் தர்சன மோகனீய மித்யாத்வ மற்றும் சம்யக்மித்யாத்வ ப்ரக்ருதிகளின் ஸதவஸ்த்தா வடிவ உபசமம்,

 

நிகழ்காலத்தில் தர்சன மோகனீய சம்யக்த்வத்தின் உதயம் இவை மூன்றும் சேர்ந்த நிலையில் ஏற்படும் சம்யக்த்வம் க்ஷயோபசம சம்யக்த்வம் என்று பெயர்.

க்ஷயோபசம சம்யக்த்வத்தின் கால அளவு ஒரு அந்தர் முகூர்த்தத்தில் இருந்து 66  கடற்காலம் வரை இருக்கும். இந்த க்ஷயோபசம சம்யக்த்வம் இவ்வளவு நீண்ட கால அளவும் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று ஆகமங்கள் கூறுகின்றன. க்ஷயோபசம சம்யக்த்வம் ஏற்படும் கால அளவு ஒரு அந்தர் முகூர்த்த நேரம் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. க்ஷயோபசம சம்யக்த்வம் 66 கடற்காலம் வரை நீடிக்கும் வாய்ப்பு உண்டு அதற்கு குறைவான காலத்திலும் முடிவதற்கும் சாத்தியம் உள்ளது. 66 கடற்காலம் வரை க்ஷயோபசம சம்யக்த்வம்  நீடித்து இருந்து தான் ஆக வேண்டும் என்று இல்லை. ஒரு அந்தர் முகூர்த்தத்தில் இருந்து அதிகபட்சமாக 66 கடற்காலம் வரை இருக்கும். இதற்கு நடுவிலும் முடிந்து விடும் என்றும் பொருள் கொள்ளலாம்.

 

க்ஷயோபசம சம்யக்த்வ கால அளவு 66  கடற்காலம் நிறைவு பெற்றதும் மிஸ்ர மோகனீயம் அதாவது சம்யக்மித்யாத்வ நிலையில் அதாவது மூன்றாவது குணஸ்தானத்திற்கு வந்து ஆறு ஆவளி கால அளவு மட்டும் தங்கி உயிரானது மீண்டும் க்ஷயோபசம சம்யக்த்வம் பெற்று விடும். க்ஷயோபசம சம்யக்த்வ நீட்டிப்பானது ஒரு உயிரின் மோக்ஷப் பாதையில் இரண்டு முறை மட்டுமே ஏற்படும். அதற்குப் பிறகு க்ஷயோபசம சம்யக்த்வத்தில் இருந்து க்ஷாயிக சம்யக்த்வம் பெற்றாக வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் மீண்டும் மித்யாத்வத்திற்கு உயிரானது சென்று விடும். பிறகு மீண்டும் பிரதமோபசம சம்யக்த்வம் பெறுவதற்கு உயிர் முயற்சி செய்து அடைய வேண்டும்.


க்ஷயோபசம சம்யக்த்வம் நான்காவது அவிரத குணஸ்தானத்தில் இருந்து ஐந்தாவது தேசவிரத குணஸ்தானம் ஆறாவது பிரமத்த குணஸ்தானம் மற்றும் ஏழாவதில் ஸ்ரேணியில் ஏறாத நிரதிசய அப்ரமத்த குணஸ்தானம் வரை இருக்கும். ஸ்ரேணியில் ஏறிச்செல்ல க்ஷயோபசம சம்யக்த்வம் கொண்டவர்களால் முடியாது. ஏனெனில் க்ஷயோபசம சம்யக்த்வத்தில் உதயத்தில் உள்ள சம்யக்த்வ பிரக்ருதிகள் ச்சல மல அகாட தோஷங்கள் கொண்டது அதனுடன் ஸ்ரேணியில் ஏறுவது இயலாத ஒன்று. ஆகையால் க்ஷயோபசம சம்யக்த்வத்தை த்விதியோபசம சம்யக்த்வமாக மாற்றிய பிறகு ஸாதிசய அப்ரமத்த முனிவர்  உபசம ஸ்ரேணியில் ஏறுவார். அல்லது க்ஷயோபசம சம்யக்த்வத்தை க்ஷாயிக சம்யக்த்வமாக மாற்றி அதன் பிறகு க்ஷபக ஸ்ரேணியில் ஏறலாம். இவ்வாறு இரு விதமான சாத்தியக்கூறுகள் உள்ளன.

 

இந்த இடத்தில் க்ஷயோபசம சம்யக்த்வம், க்ஷயோபசம ஞானம் மற்றும் க்ஷயோபசம லப்தி இவை மூன்றிற்கும் என்ன வேறுபாடு? என்பதை அறிந்து கொள்ளுதல் நலம்.

 

நேற்றைய பதிவு தான். ஒரு சில கருத்துக்கள் சேர்க்க வேண்டி இருந்தது அதையும் சேர்த்து எழுதி இருக்கிறேன்.

 

 

 க்ஷயோபசம சம்யக்த்வம் நான்காவது அவிரத குணஸ்தானத்தில் இருந்து ஐந்தாவது தேசவிரத குணஸ்தானம் ஆறாவது பிரமத்த குணஸ்தானம் மற்றும் ஏழாவதில் ஸ்ரேணியில் ஏறாத நிரதிசய அப்ரமத்த குணஸ்தானம் அதே ஏழாவது ஸாதிசய குணஸ்தானம்  வரை இருக்கும்.

 

ஸ்ரேணியில் ஏறிச்செல்ல க்ஷயோபசம சம்யக்த்வம் கொண்டவர்களால் முடியாது. ஏனெனில் க்ஷயோபசம சம்யக்த்வத்தில் உதயத்தில் உள்ள சம்யக்த்வ பிரக்ருதிகள் ச்சல மல அகாட தோஷங்கள் கொண்டவை, அதனுடன் ஸ்ரேணியில் ஏறுவது என்பது இயலாத ஒன்று. ஆகையால் க்ஷயோபசம சம்யக்த்வத்தை த்விதியோபசம சம்யக்த்வமாக மாற்றிய பிறகு ஸாதிசய அப்ரமத்த முனிவர்  உபசம ஸ்ரேணியில் ஏறுவார். அல்லது க்ஷயோபசம சம்யக்த்வத்தை க்ஷாயிக சம்யக்த்வமாக மாற்றி அதன் பிறகு ஸாதிசய அப்ரமத்த முனிவர் க்ஷபக ஸ்ரேணியில் ஏறுவார். இவ்வாறு இரு விதமான சாத்தியக்கூறுகள் உள்ளன.

 

உபசம ஸ்ரேணியில் கர்ம வினைகளை உபசமம் செய்து கொண்டு முனிவர் பதினோராவது உபசாந்த மோஹ கஷாய குணஸ்தானம் வரை செல்வார் அதற்கு மேல் செல்ல முடியாது. க்ஷபக ஸ்ரேணியில் கர்ம வினைகளை அழித்துக் கொண்டே முனிவர் 8 9 10 12 வது க்ஷீண மோஹ கஷாய குணஸ்தானம் வரை முன்னேறி அதற்கு மேலும் 13 வது சயோக கேவலி குணஸ்தானத்திற்கும்  பிறகு 14 வது அயோக கேவலி குணஸ்தானத்திற்கும் சென்று இறுதியில் ஸித்த பதவி அடைவார். இது ஸாதிசய அப்ரமத்த திகம்பர முனிவருக்கு மட்டும் தான் சாத்தியம். நிரதிசய அல்லது ஸ்வஸ்தான அப்ரமத்த திகம்பர முனிவர்களுக்கு சாத்தியம் கிடையாது. ஸ்ரேனியில் ஏறாத அப்ரமத்த திகம்பர முனிவர்கள் நிரதிசய அப்ரமத்த குணஸ்தானவர்த்திகள் என்று அழைக்கப்படுவர். ஏனெனில் ஸ்ரேனியில் ஏறும் அதிசயத்தை இது வரை அடையாத  முனிவருக்கு நிரதிசய அப்ரமத்த குணஸ்தானவர்த்தி என்று பெயர்.

 

நான்காவது அவிரத க்ஷயோபசம சம்யக்திருஷ்டி ஸ்ராவகர், ஐந்தாவது தேசவிரத க்ஷயோபசம சம்யக்திருஷ்டி ஸ்ராவகர், ஆறாவது பிரமத்த குணஸ்தானத்தில் க்ஷயோபசம சம்யக்த்ருஷ்டி  திகம்பர முனிவர்கள் ஸ்ரேனியில் ஏற முடியாது.


க்ஷயோபசம சம்யக்த்வம், க்ஷயோபசம ஞானம் மற்றும் க்ஷயோபசம லப்தி இவை மூன்றிற்கும் என்ன வேறுபாடு? என்பதை அறிந்து கொள்ளுதல்

க்ஷயோபசம சம்யக்த்வமானது மித்யாத்வ மற்றும் சம்யக்மித்யாத்வ தரிசனமோகனிய ப்ரக்ருதிகள் நிகழ்காலத்தில் ஒரு சமயத்தில் உதயத்திற்கு வரக்கூடிய நிஷேகங்களின் குறிப்பிட்ட காலம் வரை அழிவு அதாவது உதயாபாவிக் க்ஷயம்,

 

எதிர்காலத்தில் உதயத்திற்கு வரக்கூடிய மித்யாத்வ சம்யக்மித்யாத்வ ப்ரக்ருதிகள் ஸத்தாவில் இருப்பாகத் தங்கிவிடும் ஸதவஸ்த்தா வடிவ உபசமம்

 

நிகழ்காலத்தில் சம்யக்யத்வ மோகனீய பிரக்ருதிகளின் உதயம் சேர்ந்த நிலையில் ஏற்படும் சம்யக்த்வம் க்ஷயோபசம சம்யக்த்வம் ஆகும்.

 

க்ஷயோபசம ஞானம் என்பது பொதுவாக உயிர்களிடத்தில் உள்ள குறையுள்ள (சத்மஸ்த்த ஞானம் என்பர் சமஸ்கிருத மொழியில்) அரைகுறை அறிவிற்கு க்ஷயோபசம ஞானம் என்பது பெயர். அதாவது முழுதுணர் ஞானம் பெறாத வரை உயிர்களிடம் உள்ள ஞானம் சத்மஸ்த்த ஞானம் என்று தான் சொல்லப்படுகிறது.

 

இந்த குறையுள்ள அரைகுறை அறிவானது நிகோத உயிர்களில் இருந்து ஓரறிவு ஈரறிவு மூவறிவு நான்கறிவு மனமற்ற ஐந்தறிவு மனமுள்ள ஐந்தறிவு உயிர்கள் முதல் பன்னிரண்டாம் குணஸ்தானத்தில்  கேவல ஞானம் ஏற்படுவதற்கு முன்பு வரை சகல சாரித்ரம் கொண்ட முனிவர் வரை குறையுள்ள அறிவு தான். ஆனால் அந்தந்த உயிர்களின் நிலைக்கேற்ப அறிவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். கேவல ஞானம் ஏற்படும் வரை உயிர்களிடம் குறைபாடு உள்ள அறிவு தான் அதில் எந்த மாற்றமும் இல்லை.

 

க்ஷயோபசம லப்தி என்பது தத்துவத்தை தர்மத்தை மோக்ஷ தத்துவத்தை தர்மத்தின் பல்வேறு மூலக்கூறுகளை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய விசேஷ அறிவிற்கு ஆற்றலுக்கு க்ஷயோபசம லப்தி என்பது பெயர். க்ஷயோபசம லப்தியானது மனமுள்ள ஐந்தறிவு விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு மட்டும் தான் வாய்க்கும். க்ஷயோபசம லப்தி பெற்ற உயிரானது சம்யக்த்வம் அடையும் போது க்ஷயோபசம லப்தியின் முழு பலனும் கிடைத்து விட்டது என்று பொருள். க்ஷயோபசம லப்தி பெற்றும் உயிரானது சம்யக்த்வம் அடையாமல் போகுமானால் க்ஷயோபசம லப்தி பெற்றது வீணாகிவிடும்.

 

இது தான் க்ஷயோபசம சம்யக்த்வம், க்ஷயோபசம ஞானம் மற்றும் க்ஷயோபசம லப்தி இவைகள் மூன்றிற்கும் உள்ள வேறுபாடு. இதை நன்கு அறிந்து கொண்டோமானால் நம் அறிவு தெளிவாகும்.

 க்ஷயோபசம சம்யக்த்வத்தில் வேறு வகை உள்ளதா?

 

க்ருத க்ருத்ய வேதக சம்யக்த்வம் என்றும் மற்றொரு வகை உள்ளது. அதனுடைய விளக்கம் இவ்வாறு சொல்லப்படுகிறது. அது என்ன?

 

க்ஷயோபசம சம்யக்த்வத்தில் இருந்துதான் க்ஷாயிக சம்யக்த்வம் அடைய முடியும். க்ஷயோபசம சம்யக்த்வத்தில் இருந்து க்ஷாயிக சம்யக்த்வம் பெறும் போது,

 

முதலில் மித்யாத்வ ப்ரக்ருதிகள் அனைத்தையும் விஸய்யோஜன முறையில் முழுமையாக ஒடுக்கி சம்யக்மித்யாத்வ மோஹனீய பிரக்ருதிகளாக மாற்றி மித்யாத்வ ப்ரக்ருதிகள் அனைத்தையும் ஸத்தாவில் இல்லாமல் அழித்து விடுகிறது ஆத்ம பரிணாமம்.

 

அடுத்து சம்யக்மித்யாத்வ பிரக்ருதிகள் அனைத்தையும் விஸய்யோஜன முறையில் மீண்டும் முழுமையாக ஒடுக்கி சம்யக்த்வ மோகனீய பிரக்ருதிகளாக மாற்றி சம்யக்மித்யாத்வ பிரக்ருதிகள் அனைத்தையும் ஸத்தாவில் இல்லாமல் அழித்து விடுகிறது ஆன்மா.

 

மூன்றாவதாக இறுதியில் மீதமுள்ள சம்யக்த்வ மோகனீய பிரக்ருதிகள் அனைத்தையும் உதயத்திற்கு கொண்டு வந்து முழுவதையும் அழித்து தர்சன மோகனீய பிரக்ருதிகள் மூன்றையும் ஸத்தாவில் இருந்து முழுவதும் அழித்து க்ஷாயிக சம்யக்த்வம் பெறப்படும். இவை மூன்றையும் அழிக்கும் காலம் ஒரு அந்தர் முகூர்த்த நேர அளவில் நடைபெற்று முடிந்து விடும்.

 

ஆனால் சில உயிர்களுக்கு இந்த மூன்று நிலைகளில் இறுதியில் உள்ள சம்யக்த்வ மோகனீய பிரக்ருதிகளின் ஸ்திதி கால அளவானது அந்தர் முகூர்த்த கால அளவிற்கு மேலும் நீடிக்கும் நிலையில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. அவைகளை ஸ்திதி காண்ட காதம் செய்து அந்தர் முகூர்த்த கால அளவிற்குள் கொண்டு வந்து அவைகளை அழிக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்ய முடியாமல் அந்த உயிரின் ஆற்றல் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட உயிர்கள் சம்யக்த்வ மோகனீய பிரக்ருதிகளை ஸ்திதி காண்ட காதம் செய்யாமல் இருக்கும். அவைகளை அழித்த பிறகு க்ஷாயிக சம்யக்த்வம் பெறும் நிலையில் உள்ளது. இவ்வாறு மித்யாத்வம் மற்றும் சம்யக்மித்யாத்வ பிரக்ருதிகள் முற்றிலும் அழிந்த நிலையில் சம்யக்த்வ மோகனீய பிரக்ருதிகள் மட்டும் சிறிதளவு எஞ்சிய நிலையில் உள்ள க்ஷயோபசம  சம்யக்த்வத்திற்கு  க்ருத க்ருத்ய வேதக சம்யக்த்வம் என்று பெயர். ஆனால் அந்த உயிர் இன்னும் குறுகிய கால அளவில் அவற்றை அழித்து க்ஷாயிக சம்யக்த்வம் பெற்று விடும் அதில் ஐயமில்லை. இப்படிப்பட்ட உயிர்களுக்கு க்ருத க்ருத்ய வேதக சம்யக்திருஷ்டி என்று பெயர்.

 

க்ஷாயிக சம்யக்த்வம்

 

க்ஷாயிக சம்யக்த்வம் என்பது மித்யாத்வம் சார்ந்த கர்ம வினை நிஷேகங்கள் அனைத்தையும் முழுவதும் அழித்து அதாவது க்ஷயம் செய்து பெறக்கூடிய சம்யக்த்வம் க்ஷாயிக சம்யக்த்வம் ஆகும். மோகனீய கர்ம வினைகளின் அதிகபட்ச கால அளவு 70 கோடா கோடி கடற்காலம் வரை இருக்கும். இந்த நீண்ட கால அளவும் அதற்கு மேலும் உள்ள அனைத்து மித்யாத்வ மோகனீய கர்ம வினை நிஷேகங்களை ஒடுக்கி அழித்து நிர்ஜரை செய்து பெறும் சம்யக்த்வம் க்ஷாயிக சம்யக்த்வம் ஆகும். ஆத்மனின் தரிசன குணம் முழுமையாக தூய்மை அடைந்து மித்யாத்வ கர்ம வினை பரமாணுக்கள் ஏதும் இல்லாமல் ஆன்மா பரிசுத்தம் அடைந்து விடும். இனி மித்யாத்வத்தினால் ஆத்மனை அலைக்கழிக்க முடியாது. இப்படிப்பட்ட க்ஷாயிக சம்யக்த்வத்தை அடையும் வழிமுறையைப் பார்ப்போம்.

 

க்ஷாயிக சம்யக்த்வமானது நான்காவது அவிரத குணஸ்தானத்தில் உள்ள க்ஷயோபசம சம்யக்திருஷ்டி, ஐந்தாவது தேசவிரத குணஸ்தானத்தில் உள்ள க்ஷயோபசம சம்யக்திருஷ்டி, ஆறாவது பிரமத்த குணஸ்தானத்தில் உள்ள க்ஷயோபசம சம்யக்திருஷ்டி  மற்றும் ஏழாவது அப்ரமத்த குணஸ்தானத்தில் உள்ள க்ஷயோபசம சம்யக்திருஷ்டி ஜீவன்களுக்கு உண்டாகும்.

 

உபசம சம்யக்திருஷ்டிக்கு க்ஷாயிக சம்யக்த்வம் ஏற்படாது. க்ஷயோபசம சம்யக்த்வம் அடைந்து தான் க்ஷாயிக சம்யக்த்வம் பெற முடியும். முதலில் உபசம சம்யக்த்வம், இரண்டாவது க்ஷயோபசம சம்யக்த்வம் அதன் பிறகே க்ஷாயிக சம்யக்த்வம். இந்த வரிசை முறையில் தான் க்ஷாயிக சம்யக்த்வம் ஏற்படும். நேராக உபசம சம்யக்த்வத்தில் இருந்து க்ஷாயிக சம்யக்த்வம் அடைய முடியாது.

க்ஷாயிக சம்யக்த்வம் பெறுவதற்கு எப்போதும் போல ஆத்மனில் நம்பிக்கை, ஆத்ம சிந்தனை, தத்துவார்த்த நம்பிக்கை, தத்துவத்தில் தெளிவான ஞானம் , சம்யக்த்வம் அடைந்தே தீரவேண்டும் என்ற வேட்கை இவைகளோடு நம்முடைய கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்தி ஆத்மனில் செலுத்தி ஆத்மனில் நிலைக்கச் செய்ய வேண்டும். இது முதல் படி. நம்முடைய கவனம் ஆத்மனில் குவிந்த பிறகு அதக்கரணம் அபூர்வ கரணம் மற்றும் அனிவிருத்திகரண நிகழ்வுகள் ஏற்பட்டு, அனிவிருத்தி கரணத்தின் இறுதியில் அந்தரகரணத்தின் மூலம் ஆன்மா க்ஷாயிக சம்யக்த்வம் பெறுவதற்கு உண்டான வழி முறைகளைச் செயல்படுத்த ஆரம்பிக்கும்.

 

ஒரு சமயத்தில் மட்டும் உதயத்திற்கு வரக்கூடிய மித்யாத்வ மோகனீய பிரக்ருதிகளுக்கு அல்லது பரமாணுக்களுக்கு நிஷேகங்கள் என்று பெயர். தர்சன மோகனீய கர்ம வினைகளின் ஸ்திதியானது அதாவது கால அளவானது 70 கோடா கோடி கடற்காலங்கள் அதற்கும் கூடுதலாக இருக்கலாம். அத்தனை நீண்ட கால அளவும் அதற்கு மேலும் இருக்குமானால் அவைகளையும் சேர்த்து இருக்கின்ற அத்தனை மித்யாத்வ பிரக்ருதி நிஷேகங்கள் அனைத்தின் கால அளவையும் பலன் தரும் தன்மையையும் ஒட்டு மொத்தமாக ஒடுக்கி மிஸ்ர மோகனீய பரமாணுக்களாக மாற்றம் செய்து, மித்யாத்வ பரமாணுக்கள் அத்தனையையும் ஸத்தாவில் இல்லாமல் செய்து விடுகிறது ஆன்மா, ஆத்மனின் தூய பரிணாமத்தால் அனிவிருத்தி கரணத்தின் இறுதியில்.

இப்போது ஸத்தாவில் மித்யாத்வ மோகனீய பிரக்ருதிகள் அனைத்தும் ஸத்தாவில் இல்லாத நிலை ஆகிவிட்டது. அதாவது மித்யாத்வ மோகனீய ப்ரக்ருதிகள் அனைத்தும் மிஸ்ர மோகனீய பரமாணுக்களாக மாற்றப்பட்டு விட்டது மித்யாத்வ பரமாணுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன.

 

அடுத்து மாற்றம் செய்யப்பட்ட மிஸ்ர மோகனீய பிரக்ருதிகள் அனைத்தின் கால அளவையும் பலன் தரும் தன்மையையும் ஒடுக்கி சம்யக்த்வ மோகனீய பிரக்ருதிகளாக மாற்றம் செய்து சம்யக்மித்யாத்வ பிரக்ருதிகள் அத்தனையையும் ஸத்தாவில் இல்லாமல் செய்து விடுகிறது ஆத்மனின் தூய பரிணாமம். அதாவது இப்போது மிஸ்ர மோகனீயமான சம்யக் மித்யாத்வ ப்ரக்ருதிகள் அனைத்தையும் சம்யக்த்வ மோகனீய பிரக்ருதிகளாக மாற்றம் செய்யப்பட்டு மிஸ்ர மோகனீய பிரக்ருதிகள் ஸத்தாவில் இருந்து அறவே முழுவதும் நீக்கப்பட்டு விட்டன.


இப்போது மீதம் இருப்பது சம்யக்த்வ மோகனீய பிரக்ருதி பரமாணுக்கள் தான். இவைகள் அனைத்தையும் உதயத்திற்கு கொண்டு வந்து தியானாக்னி நெருப்பில் எரித்துப் பொசுக்கி விடுகிறது ஆன்மா. இந்த மூன்று நிகழ்வுகளும் நடந்து முடியும் காலம் ஒரு அந்தர் முகூர்த்த காலம் மட்டுமே. இந்த கால அளவின் இறுதியில் மித்யாத்வம் , சம்யக்மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வ நிஷேகங்கள் அத்தனையும் அழிக்கப்பட்டு நிர்ஜரையாகி க்ஷாயிக சம்யக்த்வம் உயிரில் ஏற்படுகிறது. இனி தூய சம்யக்த்வத்திற்கு எதிரான தர்சன மோகனீயத்தின் மூன்று பிரக்ருதிகளும் அழிக்கப்பட்டு விட்டன. இனி எக்காலத்திலும் மீண்டும் அவை தோன்றவே தோன்றாது. தலை தூக்காது, ஏனெனில் அவைகள் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டன அதாவது க்ஷயமாகிவிட்டன. இந்த க்ஷாயிக சம்யக்த்வம் ஏற்பட்டு ஸித்த பதவி அடைந்த பிறகும் அதற்குப் பின்னரும் முடிவில்லாக் காலம் முழுவதும் எப்போதும் அழியவே அழியாது. மிகவும் தூய்மையான தெளிவான சம்யக்த்வம் க்ஷாயிக சம்யக்த்வம் ஆகும். இதற்கு மேல் சம்யக்த்வத்தில் தூய்மை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. முழுமையான உறுதியான தெளிவான சம்யக்த்வம் ஆக இனி எப்போதும் நிலைத்து நிற்கும்.

 

க்ஷாயிக சம்யக்த்வம் அடைந்த உயிரானது க்ஷபக ஸ்ரேணியில் 8,9,10,12, 13 வது குணஸ்தானத்திற்கு உயர்ந்து காதி கர்ம வினைகள் நான்கையும் அழித்து முழுதுணர் ஞானம் பெற்று அரஹந்த நிலையை அடையும் மற்றும் 14 வது குணஸ்தானத்தில் அகாதி கர்ம வினைகள் நான்கையும் அழித்து பரமாத்ம நிலையை அடைந்து உடலை உதிர்த்து விட்டு ஸித்த பதவியைப் பெற்று முக்திப் பேரானந்தத்தை முடிவில்லாக் காலம் அனுபவிக்கும். அந்தப் பிறவியில் மோக்ஷம் அடையா விட்டாலும் அதிகபட்சம் நான்கு பிறவிகளுக்குள் மோக்ஷத்தை அடைந்துவிடும். அதற்கு மேல் சம்சாரத்தில் இருக்காது.

 

நான்காவது அவிரத குணஸ்தானத்தில் இருக்கும் உயிர் கூட க்ஷாயிக சம்யக்த்வம் பெற்ற பிறகு நான்கு பிறவிகளுக்கு மேல் சம்சாரத்தில் இருக்காது. இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழும். க்ஷாயிக சம்யக்த்வம் பெற்ற ஸ்ராவக நிலையில் உள்ள உயிர் அடுத்த பிறவியில் வைமானிக தேவனாகப் பிறந்து அது நிறைவடைந்து அடுத்து மனித கதியில் பிறந்து முனி தீக்ஷை எடுத்து கர்ம வினைகளை அழித்து முக்தியை அடைந்து விடும். க்ஷாயிக சம்யக்த்வம் பெற்ற பிறவியோடு சேர்த்து நான்கு பிறவிகளில் பூரணத்துவம் அடைந்து விடும். க்ஷாயிக சம்யக்த்வத்தின் தன்மை இவ்வளவு சிறப்பானது ஆகும்.


இந்த க்ஷாயிக சம்யக்த்வம் பெறும் காலம் ஒரு அந்தர் முகூர்த்த நேரம் தான். ஒரு வேளை இந்த அந்தர் முகூர்த்த நேரத்தில் சம்யக்த்வ தர்சன மோகனீய பிரக்ருதிகள் அழியாமல் அவைகளின் ஸ்திதியானது அந்தர் முகூர்த்தத்தை விட  அதிகமாக இருக்குமானால் ஸ்திதி காண்ட காதம் செய்து அவைகளை அழிக்க வேண்டும். ஸ்திதி காண்ட காதம் என்பது கர்ம வினைகளின் ஸ்திதி அதாவது நீடித்த கால அளவைக் குறைத்து குறைந்த கால அளவிற்கு அதாவது அந்தர் முகூர்த்த காலத்திற்குள் கொண்டு வருவதற்கு ஸ்திதி காண்ட காதம் என்று பெயர். ஒரு சில உயிர்கள் அவ்வாறு ஸ்திதி காண்ட காதம் செய்யாமலும் இருந்து விடும். மித்யாத்வம் ஸத்தாவில் இல்லை சம்யக்மித்யாத்வமும் ஸத்தாவில் இல்லாமல் அழிந்து விட்டது. எஞ்சி நிற்பது சம்யக்த்வ தர்சன மோகனீய பிரக்ருதிகள் மட்டும் அழியாமல் உள்ளது அதற்குள் அந்தர் முகூர்த்த காலம் முடிந்து விட்டது. சம்யகத்வ பிரக்ருதிகள் அழிக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு உள்ள இந்த நிலைக்கு க்ருத க்ருத்ய வேதக சம்யக்த்வம் என்று பெயர். ஆனால் இன்னும் சிறிது காலம் கழித்து க்ஷாயிக சம்யக்த்வத்தை அந்த உயிர் பெற்று விடும். இப்போதைக்கு இல்லை அவ்வளவு தான். கண்டிப்பாக நிச்சயமாக அந்த உயிர் வெகு விரைவில் க்ஷாயிக சம்யக்த்வம் அடைந்து விடும் அதில் மாற்றம் இல்லை.

 

இந்தக் கருத்தை மறுப்பவர்களும் உண்டு. இக்காலத்தில் ஆகமங்களை முனிவர்கள் மட்டும் அல்லாமல் முனி நிலையில் இல்லாமலும் பிரவசனம் செய்கின்றனர். ஒரே மாதிரியாக கருத்துக்களை எல்லோரும் விவரிப்பது இல்லை. அவரவர் புரிதலுக்கு ஏற்ப சொல்வதால் சொல்கின்ற கருத்துக்களில் முரண்பாடு ஏற்படுகிறது. ஆகையால் ஆகமக் கருத்துக்களை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதே நலம் பயக்கும்.

 

க்ஷாயிக சம்யக்த்வம் அடைந்த பிறகு உயிரின் ஸ்ரத்தா குணம் முழுமையாக தூய்மை அடைந்து விடுகிறது. அங்கே எந்த விதமான குழப்பமும் சஞ்சலமும் ஐயமும் இல்லாமல் வைரம் போன்ற உறுதியான திட நம்பிக்கை ஆத்மனில் எக்காலமும் எப்போதும் இருக்கும். அந்த உயிரை எதனாலும் சஞ்சலப் படுத்த முடியாது கவர்ந்து பந்தத்திற்கு உட்படுத்த முடியாது. அவநம்பிக்கை ஏற்படுத்த முடியாது. எல்லா விதமான பந்தங்களிலும் இருந்து விடுபட்டு விட்டது. இனி முக்தி ஒன்று தான் அதன் இலக்கு.

 

ஒரு முறை க்ஷாயிக சம்யக்த்வம் ஏற்பட்டு விட்டால் சித்த நிலை வரையும் அதற்குப் பின்பும் முடிவில்லாமல் எப்போதும் நீடித்திருக்கும் அழியவே அழியாது.

ஒரு சில உயிர்களுக்கு க்ஷாயிக சம்யக்த்வம் ஏற்படுவதற்கு முன்னர் நரக கதி கட்டி இருந்தது என்றால் ஒன்றில் இருந்து மூன்றாம் நரகம் வரையில் ஏதாவது ஒன்றில் பிறந்து கர்ம பலனை கழித்து விட்டு அடுத்த பிறவியில் கர்ம பூமியில் மனித கதியில் பிறந்து முனி தீக்ஷை பெற்று அஷ்ட கர்ம வினைகளையும் அழித்து முக்தியைப் பெற்று விடும்.  இதற்கு உதாரணமாக ஸ்ரேனிக மகாராஜன் வரலாறு சொல்லப்படுகிறது.

 

தரிசன குணத்தைப் பொருத்த வரையில் க்ஷாயிக சம்யக்த்வம் வீதராக சம்யக்த்வம் எனப்படும். சாரித்ர குணம் மட்டும் தான் பாக்கி. அதுவும் தூய்மை அடையும் போது உயிர் பரம வீதராக நிலையை அடைந்து விடும்.

 

இனி ஒழுக்கம் மட்டும் தான் சரி செய்யப்பட வேண்டும். யதாக்யாத சாரித்ரமாக இல்லை என்றாலும் நல்லொழுக்கம் தான். அதற்கு உள்ள ஞானம் நல்ஞானமே. முழுதுணர்ஞானம் அடையாது இருந்தாலும் அதற்கு இப்போது உள்ள ஞானம் நல்ஞானமே. 


நான்காவது அவிரத குணஸ்தானம் ஐந்தாவது தேசவிரத குணஸ்தான நிலையில் உள்ள ஸ்ராவகர்களுக்கு க்ஷாயிக சம்யக்த்வம் ஏற்பட்டது என்றால் ஸ்ராவக நிலையில் முக்தி அடைய முடியாது  என்றாலும் நான்கே பிறவிகளில் திகம்பர முனி தர்மத்தைக் கடைபிடித்து முக்தியை அடைந்து விடும். அதற்கு மேல் சம்சாரத்தில் இருக்காது.

 

ஆறாவது ப்ரமத்த குணஸ்தானத்தில் க்ஷாயிக சம்யக்த்வத்தை அடைந்தால் ஏழாவது அப்ரமத்த குணஸ்தானத்திற்கு உயர்ந்து க்ஷபக ஸ்ரேணியில் ஏறி முன்னேறும். நான்கு பவங்களில் அல்லது பிறவிகளில் முக்தியை அடைந்து விடும். ஏழாவது அப்ரமத்த குணஸ்தானத்தில் திகம்பர முனி நிலையில் க்ஷாயிக சம்யக்த்வத்தை பெற்று க்ஷபக ஸ்ரேணியில் ஏறி இறுதி பதினான்காம் அயோக கேவலி குணஸ்தானத்தை அடைந்து முக்தியையும் பெற்று விடும்.

 

இது வரை சம்யக்த்வம் அல்லது சம்யக்தரிசனம் என்றால் என்ன? அதை அடையும் விதம் எவ்வாறு? என்று பார்த்தோம். அதற்குப் பிறகு சம்யக்த்வம் எத்தனை வகைப்படும் என்றும் பார்த்தோம். இது வரை நாம் விரிவாகப் பார்த்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

 

சம்யக்தரிசனம் என்பது நம் ஆத்மனில் நம்பிக்கை கொண்டு ஆத்மனில் ஆழ்ந்து லயிக்கும் போது ஆத்மனின் உணர்வை நாம் சுயமாக உணர்வு பூர்வமாக உணர்வதே சம்யக்தரிசனம் அல்லது நற்காட்சி எனப்படும். இங்கு காட்சி எனப்படுவது உருவமோ? கண்ணால் காண்பதோ? அல்ல ஆத்ம உணர்வினை உணர்வால் அறிவது.

 

அனாதி மித்யாதிருஷ்டிக்கு ஏற்படுவது பிரதமோபசம சம்யக்த்வம் என்றும் அதில் அனந்தானுபந்தி கஷாயங்கள் அப்ரசஸ்த முறையில் தானாகவே தணிந்து இருக்க, ஒரு சமயத்தில் உதயத்திற்கு வரக்கூடிய மித்யாத்வ கர்ம வினை நிஷேகங்களை மட்டும் உதயத்திற்கு வரவிடாமல் உபசமம் செய்து, அந்தச் சிறிய இடைவெளியில் ஆத்மனின் உணர்வு நம்மை ஆட்கொள்ள, அந்த உணர்வை நாம் உணர்வதே சம்யக்தரிசனம் அல்லது நற்காட்சி ஆகும் என்பதைப் பார்த்தோம்.

 

ஸாதி மித்யாதிருஷ்டிக்கு எத்தனை முறை சம்யக்த்வம் ஏற்பட்டாலும் பிரதமோபசம சம்யக்த்வம் என்று தான் அழைக்கப்படும் என்றும் ஸாதி மித்யாதிருஷ்டி தரிசன மோகனீயத்தின் மூன்று பிரக்ருதிகளையும் உபசமம் செய்து அந்த நிலையில் ஆத்மனின் உணர்வு மீண்டும் உண்டாக அதை நாம் உணர்வது உபசம சம்யக்த்வம்   என்பதைப் பார்த்தோம்.

த்விதியோபசம சம்யக்த்வம்.

 

உபசம சம்யக்த்வத்திற்குப் பிறகு‌  க்ஷயோபசம சம்யக்த்வம் அடையும் விதத்தையும் பார்த்தோம். ஏழாவது அப்ரமத்த குணஸ்தானத்தில் திகம்பர முனி நிலையில்  க்ஷயோபசம சம்யக்த்வத்தை த்விதியோபசம சம்யக்த்வமாக மாற்றி உபசம ஸ்ரேணியில் ஏறி முனிவர் பதினோராவது உபசாந்த மோஹ கஷாய குணஸ்தானம் வரை சென்று சம்யக்த்வ கால முடிவு(கால க்ஷயம்) அல்லது பிறவி முடிவு அதாவது மரணம் (பவ க்ஷயம்)  அதற்கு மேல் செல்ல முடியாமல் திரும்பி வருவதையும் கண்டோம்.

 

க்ஷாயிக சம்யக்த்வம்.

 

உபசம சம்யக்த்வத்திற்குப் பிறகு க்ஷயோபசம சம்யக்த்வம் அடைந்து அடுத்து ஏழாவது அப்ரமத்த குணஸ்தானத்தில் விஸய்யோஜன முறையில் ஸத்தாவில் உள்ள அனைத்து மித்யாத்வ பிரக்ருதி பரமாணுக்களையும் சம்யக்மித்யாத்வ பரமாணுக்களாக மாற்றி, பிறகு அவைகளையும் சம்யக்த்வ மோகனீய பிரக்ருதி பரமாணுக்களாக மாற்றி உதயத்திற்கு கொண்டு வந்து நிர்ஜரை செய்து அழித்து விட்டு (முன்பு எப்படி மித்யாத்வம் உயிரைச் சூழ்ந்து கொண்டு இருந்ததோ? அது போல) ஆத்ம உணர்வு முழுவதும் நம்மை ஆக்கிரமிக்க க்ஷாயிக சம்யக்த்வம் அடைந்து க்ஷபக ஸ்ரேணியில் ஏறி முனிவர் கர்ம வினைகளை அழித்துக் கொண்டே சென்று இறுதியில் முக்தியையும் அடைய முடியும் என்றும் கண்டோம்.


உபசம சம்யக்த்வம் க்ஷயோபசம சம்யக்த்வம் க்ஷாயிக சம்யக்த்வம் இவை மூன்றின் போதும் தரிசன மோகனீய மூன்று பிரக்ருதிகள் எங்கே தணிந்து உபசமம் அடைகின்றன? எங்கு உதயாபாவிக் க்ஷயம் அடைகின்றன? எங்கு ஸதவஸ்த்தா ரூப உபசமம் அடைகின்றன? எங்கு விஸய்யோஜன முறையில் பலத்தையும் கால அளவையும் ஒடுக்கி ஸத்தாவில் இல்லாமல் செய்யப்படுகின்றன? இறுதியில் எங்கே பலம் குறைந்த வினைகள் உதயத்திற்கு கொண்டு வந்து அழிக்கப்படுகின்றன? என்ற சில முக்கியமான நிலைகளையும் பார்த்தோம்.

 

பொதுவாக இப்போது நாம் கண்ட மூன்று சம்யக்த்வங்களையும் நாமாக அடைவதில்லை. அவைகள் நம் ஆத்மனையும் அதனுடன் ஏகக்ஷேத்ர அவகாஹனமாகச் சூழ்ந்து உள்ள கர்ம வினைகளில் ஏற்படும் மாற்றங்கள் நிகழ்வுகள் ஆகும். ஆன்மாவையும் நாம் காண முடியாது அதனைச் சுற்றியுள்ள கர்ம வினை பரமாணுக்களையும் நம்மால் காண முடியாது. இந்த நிகழ்வுகளை அறிவதற்கு முழுதுணர் ஞானம் பெற்ற அரஹந்த பகவானால் மட்டுமே உணர்ந்து சொல்ல முடியும். இவையனைத்தும் கேவலி பகவான்கள் உணர்ந்து சொன்ன நிகழ்வுகள். ஒவ்வொரு உயிரும் அடையக்கூடிய அடையப் போகும் நிகழ்வுகள். இது கற்பனையோ? கட்டுக் கதையோ? அல்ல. இவை நிச்சயமான நிதர்சனமான உண்மை. ஆகமங்களில் சொல்லப்பட்டு உள்ள பொக்கிஷங்கள்.

 

நாம் செய்ய வேண்டியது ஆத்ம தத்துவத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆத்மனில் முழு நம்பிக்கை, தத்துவத்தில் தெளிவான அறிவு, ஆத்ம உணர்வை (சம்யக்த்வம்) அடைந்தே தீர வேண்டும் என்ற திடமான எண்ணம் இவைகளோடு நம்முடைய அலை பாய்கின்ற மனதை ஒடுக்கிக் குவித்து ஆத்மனில் மட்டும் ஆழ்ந்து நிலைக்கச் செய்யும் முழு முயற்சி ஒன்றே நாம் செய்ய வேண்டியது. இது வரை தான் நாம் நம் சுய புத்தியுடன் செய்யும் செயல். பிறகு மற்ற அனைத்தையும் ஆத்ம பரிணாமம் செய்து முடிக்கும்.

அனந்தானுபந்தி கஷாயங்கள்.

 

இனி சம்யக்த்வத்தின் போது ஏழு சம்யக்த்வ மூலப்ரக்ருதிகளில் அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கின்  நிலைப்பாடு என்ன? என்பதைப் பார்ப்போம். மோக்ஷ மார்க்கப் பிரகாசகததில் அனந்தானுபந்தி கஷாயங்கள் பற்றி 9 ஆம் அத்தியாயத்தின் இறுதியில் தோடர்மல் அவர்கள் விவரிக்கின்றார். அதை திருவாளர் ஜம்புகுமார் சாஸ்திரி அவர்கள் சொல்ல அதில் சிலவற்றைப் பற்றி மட்டும் எழுதப் போகிறேன்.

 

சம்யக்த்வத்தின் போது அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கிற்கும் மூன்று வகையான நிலைகள்.

ஒன்று அப்ரசஸ்த உபசமம்.

இரண்டு  ப்ரசஸ்த உபசமம். மூன்று விஸய்யோஜனம்.

 

ஒரு உயிர் தன்னை உணர்ந்து சம்யக்த்வம் பெறுவதற்காக முயற்சியில் ஈடுபடும் போது அனந்தானுபந்தி கஷாயங்கள் குரோதம் மானம் மாயை லோபம் ஆகிய நான்கும் மந்த நிலையடைந்து தானாகவே தணிந்து விடும். இதற்கு அப்ரசஸ்த உபசமம் என்று பெயர். அனந்தானுபந்தி கஷாயங்கள் கரணத்திற்கு உட்படாமல் தாங்களாகவே வீரியத்தைக் குறைத்துக் கொண்டு மந்த நிலையை அடைவதற்கு அப்பிரசஸ்த உபசமம் என்று பெயர். 


கரணலப்திக்குக் கட்டுப்பட்டு கர்ம வினைகள் உபசமம் அடைவதற்கு பிரசஸ்த உபசமம் என்று பெயர்.

மித்யாத்வம், சம்யக்மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் ஆகிய மூன்று தரிசன மோகனீயத்தின் ப்ரக்ருதிகள், சாரித்ர மோகனீயத்தில் அனந்தானுபந்தி கஷாய ப்ரக்ருதிகள் தவிர மீதமுள்ள அனைத்து சாரித்ர மோகனீய பிரக்ருதிகள் கரண லப்திக்கு கட்டுப்பட்டு உபசமம் அடைபவை.

 

அனந்தானுபந்தி கஷாயங்கள் கரண லப்திக்கு கட்டுப்படாதவை.  அவைகளை கரண லப்தி கொண்டு உபசமம் செய்ய முடியாது. ஒரு உயிர் சம்யக்த்வம் பெறுவதற்காக முழு முயற்சியில் ஈடுபடும் போது அவைகள் அப்ரசஸ்த முறையில் தானாகவே தணிந்து இருக்கும். பிரசஸ்த உபசமம் அதற்கு கிடையாது. அனந்தானுபந்தி கஷாயங்களை விஸய்யோஜன முறையில் அப்ரத்யாக்யான ப்ரத்யாக்யான மற்றும் சஞ்ஜ்வலன கஷாயங்களாக மாற்றம் செய்து பின்னர் கரண லப்தி கொண்டு  உபசமம் செய்ய முடியும். அப்ரத்யாக்யான ப்ரத்யாக்யான மற்றும் சஞ்ஜ்வலன கஷாயங்கள் கரண லப்திக்கு கட்டுப்படும்.

 

அனந்தானுபந்தி கஷாயங்களை அப்ரத்யாக்யான, ப்ரத்யாக்யான மற்றும் சஞ்ஜ்வலன கஷாயங்களாக மாற்றம் செய்து  அகற்ற முடியும். இந்த முறையில் அனந்தானுபந்தி கஷாயங்களை ஸத்தாவில் இல்லாமல் செய்வதற்கு விஸய்யோஜனம் என்று பெயர். ஏனெனில் எந்த விதமான சம்யக்த்வமாக இருந்தாலும் அனந்தானுபந்தி கஷாயங்கள் ஒன்று உபசமம் அடைந்திருக்க வேண்டும் அல்லது க்ஷயமாகி அழிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்போது தான் சம்யக்த்வம் அடைய முடியும். அனந்தானுபந்தி கஷாயங்கள் தணிந்து இருக்கும் போது தான் நற்காட்சி ஏற்படும் அதில் எந்தவொரு மாற்றமும் ஐயமும் இல்லை.

 

அனாதி மித்யாதிருஷ்டி முதன் முதலாக பெறும் பிரதமோபசம சம்யக்த்வத்தின் போது அனந்தானுபந்தி கஷாயங்கள் அப்ரசஸ்த உபசமம் என்ற முறையில் தாங்களாகவே தணிந்து விடும். பிறகு மித்யாத்வ ப்ரக்ருதிகளை கரணம் வாயிலாக உபசமம் செய்து பிரதமோபசம சம்யக்த்வம் பெறப்படுகிறது.


ஏழாவது அப்ரமத்த குணஸ்தானத்தில் உபசம ஸ்ரேணியில் ஏறுவதற்கு க்ஷயோபசம சம்யக்த்வத்தை த்விதியோபசம சம்யக்த்வமாக மாற்றுவதற்கு முயற்சி செய்யும் போது அனந்தானுபந்தி கர்மங்களை அப்ரத்யாக்யான கர்மங்களாகவும் அடுத்து பிரத்யாக்யான கர்மங்களாகவும் மேலும் மாற்றம் செய்தும் இறுதியில் சஞ்ஜ்வலன கர்மங்களாகவும் மாற்றம் செய்து அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் நான்கையும் விஸய்யோஜன முறையில் ஸத்தாவில் இருந்து முழுவதும் அகற்றி விட்டு பிறகு மித்யாத்வ, சம்யக்மித்யாத்வ மற்றும் சம்யக்த்வ மோகனீய பிரக்ருதிகளை கரண லப்தி கொண்டு உபசமம் செய்து த்விதியோபசம சம்யக்த்வம் பெறப்படும். இம்முறையில் சம்யக்த்வ மூலப்ரக்ருதிகள் ஏழையும் தணியச் செய்து த்விதியோபசம சம்யக்த்வம் பெறப்படுகிறது. உயிர் உபசம ஸ்ரேணியில் ஏறுகிறது.

 

இவ்வாறு ஒரு சில ஆச்சாரியர்  சொல்கின்றனர். வேறு சில ஆச்சாரியர்கள் இவ்வாறு எல்லாம் நியமம் கிடையாது. த்விதியோபசம சம்யக்த்வத்தின் போது அனந்தானுபந்தி கர்மங்கள் அப்ரசஸ்த முறையில் தானாகவே தணிந்து விடும் என்று சொல்வதாகவும் பண்டித கல்பர் தோடர்மல் அவர்கள் மோக்ஷ மார்க்கப் பிரகாசகம் நூலில் 9 வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

 

அவருடைய காலத்தில் ஆச்சாரியர்கள் கேள்வி ஞானம் மூலம் தான் ஆகமங்களைப் பயின்று பவ்யர்களுக்கு வாய்மொழியாக உபதேசம் செய்து வந்தனர். இக் காலத்தைப் போல நவீன வசதிகள் இல்லாத நிலை. ஆகையால் கேள்வி ஞானத்தில் சிற்சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகையால் மேலும் இது கண்ணுக்குத் தெரியாத கர்ம வினைகளில் உண்டாகும் நிகழ்வுகள். நாமாக எதையும் செய்யப் போவதில்லை. ஆகையால் இதைப் பற்றி பெரிதாக நாம் கவலை கொள்ள வேண்டாம். இந்த தகவல்கள் எதற்காகச் சொல்லப்படுகிறது என்றால்? உண்மையான சம்யக்த்வம் என்ன? என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதற்காகவே இத்தனை விளக்கங்கள். நாம் செய்ய வேண்டியது என்ன? நம்முடைய பரிணாமத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டு நம்முடைய கவனம் முழுவதையும் ஆத்மனில் செலுத்தி ஆத்மனில் நிலைக்க வைப்பது மட்டுமே நாம் சுய நினைவுடன் செய்ய வேண்டியது. கர்ம வினைகள் சார்ந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆத்மனின் செயல். ஆகையால் ஆத்மனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு  நாம் ஆத்மனில் ஆழ்ந்திருந்தால் மட்டும் போதும்.

க்ஷயோபசம சம்யக்த்வத்தில் இருந்து க்ஷாயிக சம்யக்த்வம் அடைவதற்கு அனந்தானுபந்தி கர்ம வினைப் பிரக்ருதி பரமாணுக்களை விஸய்யோஜன முறையில் அப்ரத்யாக்யான கர்ம வினைகளாக மாற்றம் செய்து அனந்தானுபந்தி கர்ம வினைப் பிரக்ருதிகளை ஸத்தாவில் இருந்து முழுவதும் அகற்றி விட்டு,

அப்ரத்யாக்யான கர்ம வினைப் பிரக்ருதிகளை, பிரத்யாக்யான கர்ம வினைப் பிரக்ருதி பரமாணுக்களாக மாற்றம் செய்து விட்டு,

ப்ரத்யாக்யான கர்ம வினைப் பரமாணுக்களை சஞ்ஜ்வலன கர்ம வினைப் பரமாணுக்களாக மாற்றி   இறுதியில் அனந்தானுபந்தி கர்ம வினைப் பரமாணுக்களை ஸத்தாவில் இருந்து முழுவதும் நீக்கிவிட்டு  க்ஷாயிக சம்யக்த்வம் பெறப்படுகிறது. தரிசன மோகனீய பிரக்ருதிகள் மூன்றையும் இது போன்றே விஸய்யோஜன முறையில் முற்றிலும் அழிக்கப்பட்டு க்ஷாயிக சம்யக்த்வம் பூர்த்தி அடைகிறது. க்ஷாயிக சம்யக்த்வத்தில் அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் நான்கின் நிலைப்பாடும் இது தான்.

உபசம சம்யக்த்வத்தில் அனந்தானுபந்தி கர்ம வினைப் பிரக்ருதிகள் அப்ரசஸ்த உபசம முறையில் தானாகவே தணிந்து விடுகின்றன.

 

க்ஷயோபசம சம்யக்த்வத்திலும் மற்றும் த்விதியோபசம சம்யக்த்வத்திலும் அனந்தானுபந்தி கஷாயங்கள் விஸய்யோஜன முறையிலும், அப்ரசஸ்த முறையிலும் தணிவதாக இரு வகையாகச் சொல்லப்படுகிறது.

 

க்ஷாயிக சம்யக்த்வத்தில் அனந்தானுபந்தி கஷாயங்கள் மற்றும் கர்ம வினை ப்ரக்ருதிகள் விஸய்யோஜன முறையில் தான் அழிக்கப்படுகின்றன என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது. மூன்று வகையான சம்யக்த்வத்தில் அனந்தானுபந்தி கஷாயங்களின் நிலை பற்றிய குறிப்புக்கள் இதுவேயாகும்.

 

அனந்தானுபந்தி கஷாயங்கள் பற்றிய மேலும் சில குறிப்புக்களை திருவாளர் ஜம்புகுமார் சாஸ்திரி அவர்கள் கூறுகிறார்கள்.  அவைகளைப் பற்றி எழுதினால் இந்தக் கட்டுரை TV சீரியல்களைப் போல வளவளவென்று நீண்டு கொண்டே போகும். அதனால் இந்தமட்டோடு இந்தக் கட்டுரை முடிவிற்கு வருகிறது. அந்தக் குறிப்புக்களை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக ஜுலை 19 ந்தேதி 2023 ம் வருட யூ ட்யூப் வீடியோவைப் பதிவு செய்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் அதனைக் கேட்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக சம்யக்த்வம் அடைவோம் வாரீகளா? என்னும் இந்தக் கட்டுரையில் நற்காட்சி அல்லது சம்யக்தரிசனத்தின் உண்மையான தன்மையை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்னால் முடிந்த அளவு எனக்குப் புரிந்த வரையில் தெளிவாக எழுதி இருப்பதாக எண்ணுகிறேன். என்னுடைய புரிதலிலும் கோளாறுகள் வர வாய்ப்பு உண்டு. ஆகையால் என்னுடைய எழுத்தில் ஏதாவது ஐயம் இருப்பின் என்னைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம். எனக்குத் தெரிந்த வரையில் விளக்கம் தர முயற்சி செய்வேன். திருவாளர் ஜம்புகுமார் சாஸ்திரியார் அவர்கள் பரமாகம வகுப்பில் கூறியுள்ளதைக் கேட்டு எனக்குப் புரிந்த வரையில் எழுதிய இந்தக் கட்டுரை பூர்த்தி ஆகிறது. மேலும் சில கருத்துக்களை என்னுடைய தியான அனுபவத்தைக் கொண்டு எழுதி சம்யக்த்வம் பற்றிய இந்த கட்டுரையை பூர்த்தி செய்ய உள்ளேன். இன்னும் சில தினங்களில் முழுமையடையும்.

 

முக்தியடைவதற்கு முதல் படியாக ஒவ்வொரு உயிரும் நற்காட்சி அடைந்தாக வேண்டும். இது தான் நியமம். நற்காட்சி பெறுவதற்கு நம்முடைய ஆத்மனில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆத்மனைப் பற்றியும், ஆத்ம தத்துவத்திலும் ஆழ்ந்த புரிதலுடன் தெளிவுடன் நம்முடைய கவனம் முழுவதையும் ஒருங்கு சேர்த்து ஆத்மனில் ஆழ வேண்டும் என்பது அவசியம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

நம்முடைய பகவான் கற்சிலைகள் ஆகட்டும் உலோகச் சிலைகள் ஆகட்டும் தியான நிலையில் தான் நமக்குக் காட்சி தருகின்றன. இவை நமக்கு தியானத்தின் அத்தியாவசியத்தைத் தெளிவுபடுத்துகின்றன.

 

ஆகமங்களில் தியானம் பற்றிய குறிப்புகள் இல்லையா? என்றால் இருக்கிறது.  நமக்குத் தேவையான பலவகை தியானங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.  ஆனால் தியானத்தின் அவசியத்தை  சாதாரண மக்களாகிய நாம் அலட்சியம் செய்கிறோம் என்பது தான் உண்மை. அனாதி மித்யாதிருஷ்டியின் நற்காட்சியே  தியானத்தில் தான் பரிமளிக்கிறது என்பதும் உண்மை. அப்படி இருக்க நாம் தியானத்தைச் செய்வதில்லை. உண்மை எது? என்று அறிந்தவர்களும் சரி அறியாதவர்களும் சரி தியானம் செய்வதைப் புறக்கணிக்கிறோம்.

 

ஆத்மனில் ஆழ்வதற்கு என்ன வழி?


ஆத்மனில் ஆழ வேண்டும் அதனோடு ஐக்கியமாக வேண்டும் என்று மொழி வடிவிலும் வாய்மொழியாகவும் சொல்லப்படுகிறது. நாம் நடைமுறையில் எவ்வாறு ஆத்மனில் ஆழ்வது?  என்பதை‌ பயிற்சி வடிவில் தெளிவாக சொல்லப்படவில்லை. தெளிவாக சொல்லப்பட்டு இருந்தாலும் அதை மறை பொருளாக வைத்து உள்ளனர் என்பதுவே உண்மை. முனிவர்கள் தியானம் செய்கின்றனர் ஆனால் சாதாரண மக்களுக்கு தியானம் வலியுறுத்தப்படவில்லை என்பது தான் உண்மை. ஆனால் சாதாரண மக்கள் ஆர்த்த ரௌத்ர தியானத்தில் எப்போதும் இருக்கின்றனரே! ஆர்த்த ரௌத்ர தியானத்தில் இருக்கும் அவர்கள் எப்போது மீள்வது? பிறவிச் சேற்றில் மீள முடியாமல் அவர்கள் தவிக்க வேண்டியதுதானா? அதற்கு விடிவெள்ளியாகத்தான் பஞ்ச லப்திகள் இருக்கின்றன. இப்போது விஷயத்திற்கு வருவோம்.

 

ஆத்மனில் ஆழ்வதற்கு எடுத்த எடுப்பில் இயலாது. அதற்கு முறையான பயிற்சிகளைச் செய்து வந்து  இறுதியில் ஆத்மனில் ஆழ்வதில் வெற்றி அடைய முடியும்.

 

ஞானார்ணவம் என்ற முழுக்க முழுக்க தியானம் சம்பந்தப்பட்ட நூல். தத்வார்த்த சூத்திரத்திலும் தியானங்கள் பற்றிய சூத்திரங்கள் உள்ளது.

 

மனமுள்ள சிந்திக்க முடிந்த மனிதன்  மட்டும் தான் ஆத்மனைப் பற்றி அறிய உணர முடியும். ஆத்மனில் ஆழ முடியும். சிந்திக்கத் தெரிந்த ஆண் பெண் அலி முதல் மொழி இன பேதம் இன்றி வயது வரம்பு இன்றி அனைவரும் தியானம் செய்ய முடியும். இளம் வயதில் இருந்தே தியானம் செய்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வயது ஏற ஏற உடல் ஒத்துழைக்காது ஆனாலும் வைராக்கியம் உள்ளவர்கள் உடலையும் பார்க்காமல் தியானம் செய்வர்.

ஸ்தூலப் பயிற்சி.

 

நாம் ஐம்புலன்களுக்கு எட்டாத ஆத்மனைத் தியானிக்கப் போகிறோம். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் நம்மை நாமே தியானிக்கப் போகிறோம். எடுத்த எடுப்பில் அது முடியாத ஒன்று. ஆகையால் நமது ஸ்தூல சரீரத்தில் இருந்து பயிற்சி செய்ய ஆரம்பிப்போம். மூச்சுப் பயிற்சி மற்றும் பிராணாயாமம் ஸ்தூலப் பயிற்சி சார்ந்தது. பிராணாயாமம் சமணர்களுக்கு உண்டா? என்ற கேள்வி எழும். கண்டிப்பாக உண்டு.  அருக பகவான் நித்திய பூஜா விதிகளில் முதல் விதியாக சந்தியாவந்தனம் என்ற முறையில் பிராணாயாமம் செய்ய வலியுறுத்தப்படுகிறது ஆனால் நாம் அதை ஓம் ஓம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஜ்வீம் ஜ்வீம் க்ஷ்வீம் வம் மம் ஹம் ஸம் தம் பம் த்ராம் த்ரீம் த்ராவய த்ராவய ஹம்ஸஹ அ ஸி ஆ உ சா பிராணாயாமம் கரோமி ஸ்வாஹா என்று மந்திர உச்சாடனத்துடன்  முத்திரைகளோடு  பாவனையாகச் செய்து அதோடு பிராணாயாமம்  செய்து முடித்து விட்டதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.


பிராணாயாமம்.

 

நம்முடைய சுவாசத்தில் தான் உயிர்ப்பே உள்ளது. சுவாசம் நின்றால் மரணம். அந்த சுவாசத்தை கட்டுப்படுத்தி மனதை ஒரு முகப்படுத்தலே பிராணாயாமத்தின் பயன்.

 

பூரகம் என்றால் மூச்சை உள்ளுக்கு இழுப்பதைக் குறிக்கும் சொல்.

 

ரேசகம் என்றால் மூச்சை வெளி விடுவதைக் குறிக்கும் சொல்.

 

கும்பகம் என்றால் மூச்சை உள்ளுக்கு இழுத்து சில வினாடிகள் வெளிவிடாமல் நுரையீரலில் அடக்கி வைப்பதைக் குறிக்கும் சொல்.

 

வலது நாசியில் சுவாசம் நடக்கும் போது அதற்கு பிங்கலை என்று பெயர்.

 

இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது அதற்கு இடகலை என்று பெயர்.

 

இரண்டு நாசிகளிலும் சுவாசம் நடக்கும் போது அப்போது சுழுமுனை நாடி நடக்கிறது என்பர்.

நாடி சுத்தி செய்முறை.

 

நாடி சுத்தி பிராணாயாமத்தின் முதல் படி. நமது மூக்கின்

வலது பக்க நாசித்துவாரத்தை வலது கை கட்டை விரலால் அழுத்தி மூடிக் கொண்டு இடது பக்க நாசித்துவாரத்தில் மூச்சை நுரையீரல் முழுவதும் நிரம்புமாறு நன்கு உள்ளுக்கு  இழுத்து, பின்பு அதே இடது நாசி வழியாக மூச்சுக் காற்றை  மெதுவாக வெளியே  விட வேண்டும். இது போன்று ஐந்து தடவைகள் இடது நாசியிலேயே மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.

 

அடுத்து வலது கை மோதிர விரலால் இடது பக்க நாசித்துவாரத்தை அழுத்தி மூடிக் கொண்டு வலது பக்க நாசித்துவாரத்தில் மூச்சை நுரையீரல் முழுவதும் நிரம்புமாறு நன்கு உள்ளுக்கு இழுத்து, பின்பு அதே வலது நாசி வழியாக மூச்சுக் காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும். இது போன்று ஐந்து தடவைகள் வலது நாசியில் மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியே விட வேண்டும்.

 

இடது நாசியில் பூரகம் அதே இடது நாசியில் ரேசகம்.

வலது நாசியில் பூரகம் அதே வலது நாசியில் ரேசகம். இது நாடி சுத்தியில் முதல் பயிற்சி.

 

இரண்டாவது பயிற்சி.

 

நாடி சுத்தியின் இரண்டாவது செயல்முறை.

முன்பு செய்தது போல வலது கை கட்டை விரலால் வலது நாசியை அழுத்தி மூடிக் கொண்டு பிறகு இடது நாசி வழியாக மூச்சுக் காற்றை நுரையீரல் முழுவதும் நிரம்புமாறு நன்கு உள்ளுக்கு இழுத்துக் கொண்டு,

வலது கை மோதிர விரலால் இடது நாசியை அழுத்தி மூடிக் கொண்டு,

வலது நாசி வழியாக மூச்சுக் காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும். இது போன்று ஐந்து தடவைகள் செய்ய வேண்டும்.

 

இடது நாசியில் பூரகம் பிறகு வலது நாசியில் ரேசகம் . ஐந்து தடவைகள்.

 

அடுத்து வலது கை மோதிர விரலால் இடது நாசியை அழுத்தி மூடிக்கொண்டு வலது நாசி வழியாக மூச்சுக் காற்றை நுரையீரல் முழுவதும் நிரம்புமாறு நன்கு உள்ளுக்கு இழுத்துக் கொண்டு,           பிறகு

வலது கை கட்டை விரலால் வலது நாசியை அழுத்தி மூடிக் கொண்டு, இப்போது இடது நாசி வழியாக மூச்சுக் காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும். இது போன்று ஐந்து தடவைகள் செய்ய வேண்டும்.

 

  வலது நாசியில் பூரகம் பிறகு இடது நாசியில் ரேசகம். ஐந்து தடவைகள். இது நாடிசுத்தியில் இரண்டாவது பயிற்சி.


நாடி சுத்தி மூன்றாவது பயிற்சி.

 

வலது கை கட்டை விரலைக் கொண்டு வலது நாசியை அழுத்தி மூடிக்கொண்டு இடது நாசி வழியாக மூச்சுக் காற்றை நுரையீரல் முழுவதும் நிரம்புமாறு உள்ளிழுக்க வேண்டும். பிறகு இடது நாசியை வலது கை மோதிர விரலால் அழுத்தி மூடிக்கொண்டு,  வலது நாசி வழியாக மூச்சுக் காற்றை வெளியே மெதுவாக விட வேண்டும்.

 

அடுத்து அதே வலது நாசி வழியாக நுரையீரல் முழுவதும் நிரம்புமாறு மூச்சுக் காற்றை நிதானமாக உள்ளிழுத்து வலது நாசியை வலது கை கட்டை விரலால் அழுத்தி மூடிக்கொண்டு இப்போது இடது நாசி வழியாக மூச்சுக் காற்றை வெளியே மெதுவாக விட வேண்டும். இது ஒரு முழு நாடி சுத்தி.

 

இடது நாசியில் பூரகம் பிறகு வலது நாசியில் ரேசகம், மீண்டும் அதே வலது நாசியில் பூரகம் பிறகு இடது நாசியில் ரேசகம். இது ஒரு பூரண நாடி சுத்தி. இது போன்று ஒன்றிலிருந்து படிப்படியாக அதிகரித்து ஒரு வேளைக்குப் பத்து தடவைகள் செய்ய வேண்டும். அதிகபட்சமாக ஒரு வேளைக்கு 15 முறைகள் செய்தாலே போதுமானது. அதற்கு மேல் தேவையில்லை. ஒரு நாளைக்கு நான்கு வேளைகள் செய்தால் நல்லது. முடியாதவர்கள் குறைந்த பட்சம் காலை மாலை இரண்டு வேளைகள் செய்வது அவசியம்.

 

நாடி சுத்தி செய்வதால் என்ன பயன்?

 

 மூச்சு நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதால் சுவாசம் சம்பந்தமான கோளாறுகள் எதுவும் இருக்காது. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். இரத்த ஓட்டம் சீராகும். நரம்பு மண்டலம் நல்ல முறையில் செயல்படும். எல்லாவற்றுக்கும் மேலாக அலைபாய்ந்து கொண்டு இருக்கும் மனம் ஒரு கட்டுக்குள் வர ஆரம்பிக்கும்.

 

பிராணாயாமம்.

செய்முறை.

 

நாடி சுத்தி செய்வது போல் தான். ஆனால் மூச்சு இழுப்பதில் வெளியிடுவதில் நேரக் கட்டுப்பாடு உண்டு. அதாவது மூச்சுக் காற்றை ஒரு பங்கு நேரம் இழுத்து, நான்கு பங்கு நேரம் வெளியே விடாமல் அடக்கி வைத்து , இரண்டு பங்கு நேரம் வெளியே மெதுவாக விட வேண்டும்.

 

1 : 4 : 2 இந்த விகிதாச்சாரத்தில் மூச்சை ஒரு பங்கு இழுத்து நான்கு பங்கு அடக்கி இரண்டு பங்காக வெளி விட வேண்டும்.

 

நேரக் கட்டுப்பாட்டை எவ்வாறு செயல்படுத்துவது?

ஒரு பங்கு நேரத்தைக் கணக்கிட ஆத்மனே நமஹ: என்று ஒரே ஒரு முறை மனதிற்குள் சொல்லிக் கொண்டே மூச்சை இழுக்க வேண்டும்.

 

நான்கு பங்கு நேரத்தைக் கணக்கிட ஆத்மனே நமஹ: என்று நான்கு முறை மனதிற்குள் சொல்லிக் கொண்டே நுரையீரலில் மூச்சை திணறாமல் அடக்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சி செய்தால் திணறல் ஏற்படாது இயல்பாக வந்து விடும்.

 

இரண்டு பங்கு நேரத்தைக் கணக்கிட ஆத்மனே நமஹ: என்று இரண்டு முறை மனதிற்குள் சொல்லிக் கொண்டே மூச்சை நிதானமாக வெளிவிட வேண்டும். மூச்சின் நேரமும் மூச்சுக் காற்றின் அளவும் தொடர்ந்து பயிற்சி செய்யச் செய்ய நாளாவட்டத்தில் சரியான விகிதாச்சாரத்திற்கு வந்து விடும்.


இப்போது பிராணாயாமம் செய்முறையைப் பார்ப்போம்.

அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு வெறும் வயிற்றில் சிறிய அளவில் உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு சில உடற்பயிற்சிகள் செய்துவிட்டு பிறகு பிராணாயாமம் பழக வேண்டும்.

 

பத்மாசனம் அல்லது சுகாசனம் (தங்களின் உடல் நிலைக்கு ஏற்றபடி அமர்வது)  எது உங்கள் உடலுக்கு சௌகரியமோ? அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு,

முதுகெலும்பு நேராக இருக்கும் படி கூன் விழாமல் அமர்ந்து வலது நாசியை விரலால் அழுத்தி மூடிக்கொண்டு இடது நாசி வழியாக மனதிற்குள் ஆத்மனே நமஹ: என்று சொல்லிக் கொண்டு நுரையீரல் முழுவதும் நிரம்புமாறு மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, இடது நாசியை மூடிக்கொண்டு ஆத்மனே நமஹ: என்று நான்கு முறை மனதிற்குள் சொல்லிக் கொண்டே மூச்சை அடக்கி (கும்பகம்) வைக்க வேண்டும்.

 

பிறகு வலது நாசி வழியாக மூச்சுக் காற்றை இரண்டு முறை ஆத்மனே நமஹ: என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே நிதானமாக மூச்சை வெளிவிட வேண்டும் . மூச்சுக் காற்று முழுவதும் வெளியேறிய உடன் இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மூச்சை உள்ளே இழுக்காமல் நிறுத்தி,  —-----------

 

மீண்டும் அதே வலது நாசி வழியாக ஆத்மனே நமஹ: என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே நுரையீரல் முழுவதும் நிரம்புமாறு மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, வலது நாசியை விரலால் அழுத்தி மூடிக்கொண்டு முன்பு செய்தது போல ஆத்மனே நமஹ: என்று நான்கு முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டே மூச்சை அடக்கி வைக்க வேண்டும். (கும்பகம்)

 

அடுத்து இடது நாசி வழியாக ஆத்மனே நமஹ: என்று மனதிற்குள் இரண்டு முறைகள் சொல்லிக் கொண்டே மெதுவாக மூச்சை வெளி விட வேண்டும். இது ஒரு முழு பிராணாயாமம்.

 

சுருக்கமாகச் சொல்வதானால் இடது நாசியில் ஒரு பங்கு பூரகம், நான்கு பங்கு கும்பகம்,

வலது நாசி வழியாக இரண்டு பங்கு ரேசகம், சற்று நேரம் மூச்சை உள்ளே இழுக்காமல் தாமதித்து அதே வலது நாசி வழியாக ஒரு பங்கு பூரகம், வலது நாசியை மூடிக்கொண்டு நான்கு பங்கு மூச்சை நுரையீரலில் நிறுத்தி ( கும்பகம்) இடது நாசி வழியாக இரண்டு பங்கு ரேசகம்.

இது  முழுமையான பிராணாயாமம்.

 

இடதில் ஒரு பங்கு பூரகம்,

நான்கு பங்கு கும்பகம்,

வலதில் இரண்டு பங்கு ரேசகம்,

 

அதே வலதில் ஒரு பங்கு பூரகம்,

நான்கு பங்கு கும்பகம்,

இடதில் இரண்டு பங்கு ரேசகம்.

இது தான் சரியான பிராணாயாமம் செய்முறை.

 

ரேசகம் அதாவது மூச்சை வெளியேற்றியவுடன் சற்று நேரம் உள்ளிழுக்காமல் நிறுத்தக் காரணம் என்ன?

 

 என்றால் சில வினாடிகள் நிறுத்தி மீண்டும் மூச்சை உள்ளிழுக்கும் போது காற்றானது  நாசியில் நன்கு இழுக்கப்படுவதற்காகவே. அந்த ஒரு காரணத்திற்காகவே ரேசகத்திற்கு பிறகு மூச்சை சில வினாடிகள் நிறுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

 

ஒரு சிற்பி ஒரு பாறாங்கல்லில் ஒரு அழகான சிலையை வடிக்கின்றார்  என்று வைத்துக் கொள்வோம். அவர் செதுக்கி முடித்த பின்னர் காட்சி அளிக்கப் போகும் சிலையானது புதிதாக தோன்றப்போவதில்லை ஏற்கெனவே அந்தப் பாறையில் கல்லோடு கல்லாகத் தான் இருக்கிறது. அதில் இருந்து தேவையற்ற பகுதிகளை உளியால் சிறிது சிறிதாகச் செதுக்கி நீக்கிக் கொண்டு வந்து இறுதியில் அழகான சிற்பமாக மாற்றுகின்றார் சிற்பி.  அந்தப் பாறையில் ஏற்கனவே சிலையாக இருந்ததா? என்றால் கிடையாது. சிற்பி சிறிது சிறிதாக தேவையற்ற பகுதிகளைச்    செதுக்கி எடுத்து சிலையாக்குகின்றார்.

 

இதைப் போன்று நம்முடைய ஆன்மாவும் கர்ம வினைத் துகள்களால் கஷாயங்களால் களங்கமடைந்து அதன் தூய தன்மை முழுவதும் மறைக்கப்பட்டுத்  தெளிவற்ற உறுதியான பாறையைப் போல் உள்ளது. ஆகம ஞானத்தால் தன்னை அதாவது ஆத்மனை உணரும் சம்சார ஜீவனாகிய சிற்பி ஆகம ஞானம் என்ற உளியைக் கொண்டு தன்னிடம் உள்ள வேண்டாத குணங்களை எல்லாம்  களைந்து நீக்கிவிட்டு முழுமையான ஆத்மனை ஏற்கனவே தன்னில் உள்ளவரை வெளிக் கொணருகின்றது. வேண்டாத குணங்களை நீக்க நீக்க ஆன்மா மேகங்கள் விலக விலக சூரியன் வெளிப்படுவதை போல அதனுடைய முழு தன்மையுடன் ஞான குணத்துடன் ஞான மயமாக  வெளிப்படும்.

 

சம்சார ஜீவனாகிய சிற்பி ஞான உளி கொண்டு  நீக்கும் அவசியமற்றவைகள்  எவை ? என்று பார்க்கும்போது அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கு, மித்யாத்வகுணம் , சம்யக்மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் ஆகிய தரிசன மோகனீய கர்மங்களின் ஏழு மூலக் கூறுகள், அப்ரத்யாக்யானாவரன    கஷாயங்கள் நான்கு ப்ரத்யாக்யானாவரன கஷாயங்கள் நான்கு சஞ்ஜ்வலன கஷாயங்கள் நான்கு நோகஷாயங்களாகிய  ஹாஸ்யம் (கிண்டல் கேலி நகைச்சுவை நையாண்டி ஏளனம்) விருப்பு வெறுப்பு சோகம் பயம் அருவருப்பு பெண் காமம் ஆண் காமம் அலி காமம் ஆகிய ஒன்பது வகையான தீவிர எண்ணங்கள் அல்லது கஷாயங்கள் நான் உடல்தான்  என்னும் அறியாமை ஆகிய ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் குணங்கள் சம்சார ஜீவனிடம் இருந்து ஞான உளி கொண்டு செதுக்கி எறியப்பட வேண்டியவை.

 

கர்ம வினைகள் நிர்ஜரையாகிய பெரும் சூக்ஷும உளியால் செதுக்கித் தள்ளப்பட வேண்டியவை.  குரோத மான மாயா லோப கஷாயங்கள் நான்கு, புலனிச்சைகள் ஐந்து, விகதைகள் நான்கு ( ராஜகதை பெண்கள் பற்றிய கதைகள் களவு திருடு பற்றிய கதைகள் உணவு பற்றிய பேச்சுக்கள்)  தூக்கம் பிரனயம் ( அன்பு பாசம் அபிமானம் பிரியம்), இவை துறவிகளுக்கான விழிப்புணர்வு இல்லாத நிலை ஞானத்தால் பயிற்சிகளால் நீக்கப்பட வேண்டியவை புறப்பற்றுக்கள் அகப்பற்றுக்கள் ஞான உளியால் செதுக்கப்பட வேண்டியவை. இன்னும் சொல்லப்படாதவைகளும் இருக்கலாம். இவை அனைத்தும் நீங்கிய பின்னர் பரமாத்மா ஞான பிரகாசத்துடன் தூய்மையுடன்  நமக்குக் காட்சி தரும். எப்போதும் நம்மில் உள்ள பரமாத்மா தான் ஆனால் நம்மிடம் உள்ள வேண்டாதவற்றைச் செதுக்கி எடுத்தவுடன் தான் ஆன்மாவின் சுயரூபம் தூய தன்மையுடன் வெளிப்படுகிறது. இதற்கு தான் டங்கோத்கீர்ண ஞாயக சொரூபம் என்று குறிப்பிடப்படுகிறது.

நாடி சுத்தி போலவே பிராணாயாமமும் குறைந்த பட்சம் பத்து முறைகளும் அதிக பட்சமாக பதினைந்து முறைகள் செய்தாலே போதுமானது. பதினைந்து முறைகள் பிராணாயாமம் செய்து முடித்து அமைதியாக அமர்ந்து இருக்க வேண்டும். அப்போது நன்கு பழகிய ஒருவருக்கு இரண்டு நாசிகளிலும் சுவாசம் ஒரே நேரத்தில் நடக்கும். அதாவது மூச்சுக் காற்றை உள்ளிழுப்பதும்  வெளி விடுவதும் இரு நாசிகளிலும் மெதுவாக ஒரே சீராக நடைபெறும்.  சுவாசம் நடைபெறுவதே தெரியாது. அது சிரமமாகவும் தெரியாது. இந்தச் சமயத்தில் மனம் அமைதியாக சாந்த நிலையில் ஒரு விதமான சுகானுபவத்தில் இருக்கும். இது மனமடங்கிய நிலை. ஒரு விதமான சுகத்தை நாம் உணரலாம். ஆத்மனில் ஆழ்வதற்கான உன்னத நிலையை பிராணாயாமம் நமக்கு ஏற்படுத்தும்

 

பொதுவாக நமக்கு சுவாசம் நடப்பதானது ஒரு நாளில் ஒரு நாசியிலும் மறுநாள் அடுத்த நாசியிலும் நடக்கும் என்று யோகாசன நிபுணர்கள் கூறுவர்.  இதற்கு இடையில் ஒரு நாள் அபூர்வமாக இரண்டு நாசிகளிலும் நடப்பது உண்டு. அவ்வாறு நடக்கும் போது நமக்கு எந்த நிலையில் இருந்தாலும் அமைதி கிடைக்கும்.

 

சுழுமுனை நாடி என்றால் என்ன?

இரண்டு நாசிகளிலும் ஒரே நேரத்தில் சுவாசம் நடப்பதே சுழுமுனை நாடியாகும்.  ஆனால் இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள விடாமல் சுற்றி வளைத்து எதை எதையோ புரியாத விதத்தில் கூறி மக்களைக் குழப்புவதே யோகிகளின் முழு நேரத் தொழில்.

 

பிராணாயாமம் செய்து முடித்து தியானத்தில் அமரும் போது சுழுமுனை நாடி தான் நடக்கும். அந்த நேரத்தில் தியானம் நன்கு கைகூடும். மனமானது ஒரு நிலையில் கட்டுப்பட்டு நிற்கும். அதிக நேரம் இல்லை என்றாலும் ஒரு சில வினாடிகளாவது மனம் அடங்கி இருக்கும். இந்த சூழ்நிலையில் தான் ஆத்மனில் ஆழ்வதற்கான தகுந்த சூழ்நிலை ஆகும். ஸ்தூல சரீரம் துணை கொண்டு ஆத்மனில் ஆழ்ந்து நோக்கும் நிலையை பிராணாயாமம் நமக்கு அளிக்கும்.

 

சில வினாடிகள் தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். சமயம் என்ற சமஸ்கிருதச் சொல்லானது மிகவும் நுண்ணிய கால அளவைக் குறிப்பிட  உதவும் சொல்லாகும் . மிக மிகச் சிறிய கால அளவாகும். இதற்கும் குறைவான நுண்மையான கால அளவு வேறு கிடையாது.

 

இதை எவ்வாறு புரிந்து கொள்வது?

 

 ஒரு திடப் பொருளின் மேலும் பிரிக்க முடியாத இறுதி துகள் பரமாணு ஆகும்.

 

அந்தப் பரமாணு ஒன்று மட்டும் ஆகாயப் பிரதேசத்தில் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்குமோ? அந்த நுண்ணிய ஆகாயப் பகுதி ஒரு பிரதேசம் எனப்படும். நம்முடைய சுண்டு விரல் நுனியில் எண்ணற்ற ஆகாயப் பிரதேசங்கள் உள்ளன என்று ஆகமங்கள் கூறுகின்றன. அப்படியானால் ஒரு பிரதேசத்தின் நுண்மை எத்தகையது என்பது உங்களுக்குப் புரியும்.

 

ஒரு பரமாணு தான் இருக்கும் பிரதேசத்தில் இருந்து தனக்கு மிக சமீபத்தில்  உள்ள பிரதேசத்திற்கு மெதுவாகச் சென்றடைய எவ்வளவு நேரம் ஆகுமோ? அந்தக் கால அளவு தான் ஒரு சமயம் என்று சொல்லப்படுகிறது.

 

இப்போது ஒரு வினாடி நேரத்தில் எத்தனை சமயம் இருக்கும் என்ற வினா எழுகிறது?

ஒரேயொரு வினாடியில் எண்ணற்ற சமயங்கள் இருக்கும். இது ஆகமக் கூற்று. அப்படியானால் ஒரு வினாடி நேரம் ஒருவருக்கு தியானம் நிலைக்குமானால் அதுவே ஒரு வரப்பிரசாதம் ஆகும். அந்த ஒரு வினாடி நேர தியானத்திற்காக இரண்டு நாழிகைகள் அதாவது 48 நிமிடங்கள் ஒரு நாளைக்கு செலவு செய்யலாமே! செய்வீர்களா?

 

2. ஒலிப் பயிற்சி.

 

ஞானார்ணவ நூலில் பல்வேறு வகையான தியானங்கள் சொல்லப்பட்டு உள்ளது. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு பதஸ்த தியானம் வரப்பிரசாதம் ஆகும்.

 

பதஸ்த தியானம் என்பது பீஜ மந்திரம் ஏதாவது ஒன்றை நம் மார்பின் மத்தியில் தியானித்து அது பிரகாசமாக ஒளிர்வதாகக் கற்பனை செய்து, அந்த வெளிச்சமானது நம்முடைய உடல் முழுவதும் பரவி, பிறகு நம் உடலில் இருந்தும் வெளியில் பரவி மேலும் மூன்று லோகங்களிலும் வியாபித்து, அதன் பின்னர் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்து மீண்டும் நாம் தியானிக்கும் பீஜ மந்திரத்தில் ஒடுங்கி அடங்கி விடுமாறு தியானித்து முடிப்பது.

 

இந்த பதஸ்த தியானத்தில் பீஜாக்ஷரத்தை ஒளி வடிவில் கற்பனை செய்து அந்த ஒளி வெள்ளம் மூன்று லோகங்களிலும் வியாபிப்பதாக தியானிக்கும் போது நமது கவனம் புறத்தே செல்கிறது. ஆனால் நமக்குத் தேவை அகத்தில் உள்ளுக்குள் நம்மில் நாம் ஆழ வேண்டும் என்பதே!

 

ஆகையால் இதே தியானத்தை பீஜ மந்திர உச்சாடனம் செய்து அந்த ஒலியில் உள்ளுக்குள் ஆழ்ந்து தியானத்தில் ஆழ்வதாகும். இவ்வாறு தியானிக்கும் போது நம்முடைய கவனம் புறத்தே செல்லாமல் அகத்திலேயே நிலைக்கும் அதுவும் ஆத்மனிலேயே நிலைக்கும்.

பஞ்ச மந்திர உச்சாடனம், அரஹந்த பீஜ மந்திரம் அர்ஹம் ஸித்த பீஜ மந்திரம் ஹ்ரீம் பிரணவ மந்திரம் ஓம் ஆகிய இந்த மந்திரங்கள் உச்சாடனம் செய்வதற்கான அருமையான பீஜ மந்திரங்கள் ஆகும். இதில் ஹ்ரீம் மந்திரம் மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று பெயர் பெற்ற மந்திரம் ஆகும். நாம் தியானம் பழக மந்திரங்களுக்கே அரசனான ஹ்ரீம்  மந்திரம் உச்சாடனம் செய்வோம்.

 

விடியற்காலையில் தனியறையில் அருகில் யாருமற்ற நிலையில் தனிமையில் பத்மாசனம் அல்லது சுகாசனம் ஏதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து மந்திரங்களுக்கு எல்லாம் அரசனான ஹ்ரீம் மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும். வெறுமனே சொல்லக் கூடாது. ஹ்ரீம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று நீட்டி முழக்கி சப்தம் கேட்கும்படி உச்சரிக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு நேரம் மந்திரத்தை விடாமல் உச்சரிக்க முடியுமோ? அவ்வளவு நேரம் உச்சரிக்கலாம். ம்ம்ம் ஒலி அதிர்வு அதில் ஏற்படும் ம் ங்கார அதிர்வு  நம் உடல் முழுவதும் பரவுமாறு உணர்ந்து உச்சரிக்க வேண்டும்.

 

ஹ்ரீம்ம்ம்ம் என்று தொடர்ந்து 108 முறை ஜப மாலை கொண்டு கணக்கிட்டு மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இடைவெளி விடாமல் 108 முறை உச்சரித்த பிறகு ஆசனத்தில் இருந்து எழாமல் அப்படியே சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து இருக்க வேண்டும். 108 முறை இவ்வாறு உச்சரிக்கும் போது ஆரம்ப சாதகர்களுக்கே குறைந்த பட்சம் ஒரு நாழிகை அதாவது 24 நிமிடங்களுக்கு குறைவில்லாமல் பிடிக்கும். நன்கு நிறுத்தி நிதானமாக ஆழ்ந்து உச்சரிப்பவர்களுக்கு இரண்டு நாழிகைகள் அதாவது 48 நிமிடங்கள் நீடிக்க வாய்ப்பு உண்டு.

 

இந்த உச்சாடனம் முடிந்ததும் உங்கள் சுவாசமானது பிராணாயாமம் செய்யாமலேயே சுழுமுனை நாடியில் நடக்கும். இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழலாம்.

 

நாம் ஹ்ரீம்ம்ம்ம் என்று விடாமல் தொடர்ந்து மந்திரத்தை உச்சரிக்கும் போது ம்ம்ம்ம்ம் என்ற சப்தத்தோடு நம்முடைய மூச்சுக் காற்றும் சீராக வெளியேறிக் கொண்டே இருக்கும் அதாவது ரேசகம் நடக்கும். ஒரு முறை ஹ்ரீம் உச்சாடனம் முடிந்த பிறகு நுரையீரலில் இருந்து காற்று முழுவதும் வெளியேறி விடும். அடுத்த மந்திர உச்சாடனம் ஆரம்பிக்கும் முன் ஆழமாக மூச்சுக் காற்று நாசிகளின் வழியாக இயல்பாக அதே சமயம் வேகமாக நுரையீரலுக்குச் செல்லும். நீங்களாக தனியாக மூச்சை இழுக்கிறேன் என்று எதுவும் செய்ய வேண்டாம். அது தானாகவே நடக்கும். மந்திர உச்சாடனத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். திரும்பவும் மந்திர உச்சாடனம் செய்யும் போது ம்ம்ம்ம்ம் ஐ தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க மூச்சுக் காற்று மெதுவாக வெளியேறும்.  ஆரம்ப சாதகர்களுக்கு உடனே கைகூடாவிட்டாலும் தொடர்ந்து உச்சாடனம் செய்யச் செய்ய மூச்சும் இயல்பாக நடைபெறும்,  சுழுமுனை நாடியும் செயல்பட  ஆரம்பிக்கும். மனம் அமைதியாக சலனமற்று நிலை பெற ஆரம்பிக்கும். சாந்தியுடன் அதே சமயம் எப்போதும் இல்லாத சுகநிலையை நீங்களே உணர்வீர்கள். ம் ங்கார அதிர்வினால் அந்த சுகானுபவம் மேலும் ஆனந்தத்தைத் தரும். ஆன்மாவை நேரில் காண முடியாது ஆனால் உணர்வு மயமாக ஆத்மனை உணர முடியும். அந்தப் பாதைக்கு  முதன் முதலாக ஹ்ரீம் மந்திர உச்சாடனம் நம்மை  அழைத்துச் செல்லும்.

 

லோக ஸ்வரூப தியானம் அல்லது கூடபிண்டஸ்த தியானம்.

 

இதுவும் நம்முடைய கவனத்தை நம் உடலிலே ஒடுக்கி சிந்தித்து தியானிப்பதாகும். புறப்பொருள் தவிர்த்து நம் உடலுக்கு உள்ளே சர்வ லோகங்களையும் தியானிக்கும் முறையாகும். சர்வ லோகங்களும் புறப்பொருட்கள்  தான் ஆனால் நம் உடலுக்கு உள்ளேயே பாதத்தில் இருந்து சிரசு வரை அனைத்து லோகங்களையும் கற்பனையில் சிந்தனை செய்து தியானிப்பது. இதற்கு கூடபிண்டஸ்த தியானம் என்று பெயர்.

 

லோக ஸ்வரூப வடிவ கொடிகளை ஆலய விழாக்களில் தோரணமாக பார்த்திருப்பீர்கள். அது ஏதோ சாதாரண கொடி அல்லது சமயச் சின்னமாகத் தான் நாம் எண்ணுவோம். ஆனால் அது மூன்று லோகங்கள் அதாவது நாம் வாழும் மத்திம லோகம் முதல் மத்திம லோகத்திற்குக் கீழே நரக லோகங்கள் மற்றும் மத்திம லோகத்திற்கு மேல் பல வகையான தேவ லோகங்கள் அவைகளுக்கும் மேலே  லோகங்களின் உச்சியில் சித்தர்கள் இறுதியில் சென்றடையும் ஸித்தஸிலா வரை அத்தனை லோகங்களை நம்முடைய உடலில் பாதத்தில் இருந்து சிரசின் உச்சி வரை சிந்தனை செய்து தியானம் செய்யும் முறையாகும்.

 

நம்முடைய மனமானது சமயத்திற்குச் சமயம் அலை பாய்ந்து கொண்டு இருக்கும். ஒரு சமயம் இந்த இடத்தில் இருக்கும் அடுத்த சமயம் இமயத்தில் இருக்கும் கைலாச மலைக்குச் சென்று விடும். அடுத்த சமயம் அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்று விடும். ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்ற பழமொழிக்கு இணங்க ஓரிடத்திலும் நிலைத்து நிற்காத மனதை அதன் போக்கில் சென்று அனைத்து லோகங்களையும் நம் உடலில் சிந்தனை செய்து தியானிக்க வேண்டும். கீழே நிகோதத்தில் இருந்து மேலே ஸித்த ஸிலா வரையும் தியானிக்க தியானிக்க நம்முடைய ஆத்மனின் விஸ்வரூபம் நமக்கு தெரிய வரும். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று படைப்புத் தத்துவவாதிகள் சொல்வர். ஆனால் உண்மையில் நம் ஆன்மா அணுவிலும் வாசம் செய்யும் அண்டசராசரங்களிலும் வியாபித்து இருக்கும். உண்மையில் நம் ஆன்மா தான் இறைவன். இந்த கூட பிண்டஸ்த தியானம் நம் ஆன்மனின் பிரம்மாண்டத்தை நமக்கு உணர்த்தும். நான் இந்த தியானத்தின் செய்முறையை மிகவும் சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன். ஆகமங்களில் லோகஸ்வரூபம் பற்றிய விவரங்கள் நிறைய உள்ளன. அவைகளைப் படித்து அப்படியே சிந்தனை செய்து தியானித்தால் போதும். கூடபிண்டஸ்த தியானம் செய்வதால் நம் உடலுக்கு உள்ளேயே நம் மனதை அலைய விடுவதாகும். இவ்வாறு தியானித்து பிறகு ஒரு சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து இருக்க வேண்டும். அலைந்து கொண்டு இருந்த  மனம் ஒடுங்கி நிற்கும்.

4. பிண்டஸ்த தியானம்.

 

கூட பிண்டஸ்த தியானத்தில் இருந்து இது வேறுபட்டது. பிண்டஸ்த தியானம் தர்மத்தியான வகையைச் சார்ந்தது. ஆகையால் இல்லறத்தில் உள்ளவர்கள் செய்யத் தடையில்லை. இந்த தியானமானது ஆன்மாவில் சேர்ந்துள்ள கர்ம வினைகளை கற்பனையில் எரித்து அழிப்பது ஆகும். நம்முடைய மனதில் ஆத்மனில் சேர்ந்து விட்ட கர்ம வினைகளை அழிக்கப்பட வேண்டிய அவசியத்தை நன்கு பதிய வைப்பதற்கான தியானம் இது.  

 

இந்த தியானம்

ப்ருத்வி தாரணா ,

அக்னீ தாரணா,

வாயு தாரணா,

வாருணீ தாரணா

மற்றும் தத்வரூபவதீ தாரணா என்று ஐந்து வித தாரணைகளாக பிரித்துச் செய்யப்படுகிறது. தாரணை என்றால் குறிப்பிட்ட ஒரே கருத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்தி சிந்தனை செய்து தியானிப்பதாகும். ஒவ்வொரு தாரணையாகப் பார்ப்போம். அவைகளைப் பற்றி சுருக்கமாக வர்ணனைகளை தவிர்த்து எழுதப் போகிறேன்.

 

ப்ருத்வி தாரணா.

 

பிண்டஸ்த தியானம் செய்ய எண்ணுபவர் தனிமையில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி தொப்புள் பகுதிக்கு உள்ளே கவனத்தை ஒருமுகப்படுத்தி அங்கே சுயம்புலவண சமுத்திரம் பரந்து விரிந்து கிடப்பதாக சிந்திக்க வேண்டும். அந்த சமுத்திரத்தில் 1008 இதழ்களைக் கொண்டு பெரிய பொற்றாமரை இருப்பதாக சிந்திக்க வேண்டும். அந்தத் தாமரையின் நடுவில் மேருமலைக்கு நிகரான மஞ்சள் நிற கர்ணிகை இருப்பதாகவும் அதன் மேல் வெண்மை நிறத்தில் ஆசனம் ஒன்று இருப்பதாகவும் அதன் மேல் நம்முடைய ஆன்மா பத்மாசனத்தில் அமர்ந்து அஷ்ட கர்ம வினைகளையும் அழிக்கும் தியானத்தில் ஆழ்ந்து இருப்பதாகச் சிந்தனை செய்ய வேண்டும்.

 

அக்னீ தாரணா:

தன்னுடைய வயிற்றில் தொப்புள் பகுதியில் 16 இதழ் தாமரை மலர் ஒன்று மலர்ந்து இருப்பதாகவும், அதன் இதழ்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு எழுத்துக்களாக அ ஆ இ ஈ உ ஊ ரு ரூ ளு ளூ ஏ ஐ ஓ ஔ அம் அஹா என்ற சமஸ்கிருத உயிரெழுத்துக்கள் எழுதப்பட்டு இருப்பதாகவும், அந்தத் தாமரையின் நடுவில் உள்ள கர்ணிகையில் அர்ஹம் என்று எழுதி உள்ளதாகவும் அதற்கு நேர் மேலாக மார்பில் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் எட்டு இதழ் தாமரை மலர் தொப்புள் பகுதியில் உள்ள தாமரையை நோக்கி கவிழ்ந்து இருப்பதாகக் கற்பனை செய்ய வேண்டும். அதன் எட்டு இதழ்களிலும் ,

ஞானாவரணீயம்

தர்சனாவரணீயம்

மோஹனீயம்

வேதனீயம்

ஆயுள் கர்மம்

நாம கர்மம்

கோத்திர கர்மம்

அந்தராய கர்மம்

என்று அஷ்ட கர்ம வினைகளின் பெயர்கள் எழுதி இருப்பதாகவும் சிந்தனை செய்ய வேண்டும்.

 

இப்போது தொப்புள் பகுதியில் உள்ள தாமரை மலரில் எழுதப்பட்டு உள்ள அர்ஹம் பீஜ மந்திரத்தில் உள்ள அக்னி பீஜாக்ஷரமான எழுத்தில் இருந்து இலேசாக புகை எழுவதாகச் சிந்திக்க வேண்டும். அந்தப் புகை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வந்து அடர்ந்த புகையின் நடுவில் நெருப்புக் கங்குகள் சிவந்த நிறத்தில் கனன்று கொண்டு இருப்பதாகவும், அந்த நெருப்புக் கங்குகளில் இருந்து மஞ்சளும் சிவப்பும் கலந்த நெருப்பு ஜ்வாலைகள் எரிந்து கொண்டு மார்புப் பகுதியில் உள்ள அஷ்ட கர்ம வினைகள் எழுதப்பட்ட எட்டு இதழ் தாமரையை நோக்கி எழுவதாகவும், அப்படி மேல் நோக்கி வந்த நெருப்பு ஜ்வாலைகள் எட்டிதழ் தாமரையை எரித்துச் சாம்பலாக்கி விட்டு மேலும் தீயானது வடவாக்னி போல் பெரும் தீக்கோளமாக மாறி நம்முடைய உடம்பையும் எரித்து பஸ்மமாக்கி விட்டு மேற்கொண்டு எரிப்பதற்குத் தேவையான பொருட்கள் கிடைக்காததால் நெருப்பு அணைந்து அடங்கி விடுவதாகக் கற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு பெரும் நெருப்பானது நம்முடைய உடலை எரித்துப் பொசுக்கும் போது நம்முடைய ஆன்மா வெறும் சாட்சியாக எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் அமர்ந்து உள்ளது என்றும் சிந்திக்க வேண்டும். ஆன்மாவை பஞ்ச பூதங்களாலோ? எந்தவொரு ஆயுதங்களாலோ? தேவ மனித விலங்கு நரகர்களாலோ? எவராலும் எதனாலும் அழிக்க முடியாது. ஆகையால் மலை போன்ற சாம்பல் குவியலோடு அமைதியாக அமர்ந்து இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும்.

வாயு தாரணா.

 

1008 இதழ் தாமரையில் சிம்மாசனத்தின் மேல் நம் சரீரம் எரிந்து சாம்பல் குவியலாகக் குவிந்து கிடக்கிறது. நம் ஆன்மா அதன் மத்தியில் அமர்ந்து உள்ளது. இப்போது சமுத்திரத்தின் ஒரு மூலையில் சூறாவளி காற்று அடிக்கும் அறிகுறி தோன்றுகிறது. மேலும் சமுத்திரத்தின் நாலாபக்கமும் இருந்து சூறாவளிக் காற்று வீச ஆரம்பிக்கிறது. இந்தச் சூறாவளிக் காற்றுகள் மேருமலையையே அசைக்கக் கூடிய வேகத்தில் பெரிய பெரிய மரங்களின் வேர்களைப் பிடுங்கி சின்னாபின்னப் படுத்தி வீசிக் கொண்டு இருக்கின்றன மேலும் சமுத்திரத்தின் மேல் பரப்பு மலைகள் அலைகள் எழும்பி பிரளயம் போன்று இருப்பதாக சிந்திக்க வேண்டும். நாலாபக்கமும் சுழன்று சுழன்று அடிக்கும் சூறாவளிகள் காரணமாக சிம்மாசனத்தில் மலை போல் குவிந்து கிடக்கும் சரீர சாம்பல் குவியலை சுயம்புலவண சமுத்திரத்தின் கடைக்கோடியில் எட்டுத் திசைகளிலும் வீசி எறிந்து விடுகின்றன. சாதாரண சாம்பல் குவியலுக்கு இத்தனை சூறாவளிகள் தேவைதானா? என்ற கேள்வி எழும். மேருமலையை ஒத்த கர்ணிகை அதன் பிரம்மாண்டத்திற்கு ஈடான மிகவும் பெரிய சிம்மாசனம். அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் நம் இந்த பிரம்மாண்டங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லா நம் சரீரம் இருக்கிறது அல்லவா? அந்த சரீரத்தை எரித்துச் சாம்பலாக்குவது வடவாக்னிக்கு நிகரான நெருப்புக் கோளம். அப்படிப்பட்ட சரீரத்தின் சாம்பலை வீசி எறிந்து சுத்தம் செய்யச் சாதாரண காற்று போதாதல்லவா? அதற்காகத் தான் இவ்வளவு பெரிய கற்பனை!! மொத்த சாம்பல் குவியலையும் வீசி எறிந்த பிறகு ஊழிக்காற்றுகள் சாந்தம் அடைந்து சுயம்புலவண சமுத்திரத்தின் விளிம்பில் சென்று மறைந்து விட்டன என்று தியானிக்க வேண்டும். சாம்பல் குவியல் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டு விட்டாலும் சூறைக் காற்றின் வேகத்திற்கு தப்பி மெல்லிய படலம் போல் சாம்பல் துகள்கள் ஆத்மனின் மேல் பரப்பில் படிந்து இருக்கின்றன என்று சிந்திக்க வேண்டும்.

 

இந்த இடத்தில் ஆன்மா தான் உருவற்றது அருவமானது சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அற்றது கண்களால் பார்க்க முடியாது தொட்டும் பார்க்க முடியாது அப்படி இருக்க ஆன்மனில் சாம்பல் துகள்கள் படிந்து இருப்பதாகத் தியானிப்பது சரியானதா? என்ற கேள்வி எழும். ஆன்மா கண்களுக்கு புலப்படாதது தான், ஆனால் அரஹந்த பகவானின் பரம ஔதாரிக சரீரம் கண்களால் காண முடியும். அப்படித்தான் ஆகமங்கள் கூறுகின்றன. இந்த இடத்தில் நம் ஆன்மனை பரம ஔதாரிக சரீரம் போன்று கற்பனை செய்து தியானத்தைத் தொடருவோம். மேலும் தத்வரூபவதீ தாரணையில் ஓரளவு ஆத்மனின் உருவமற்ற அருவமான நிலையில் தியானிப்போம். மேற்கொண்டு தியானத்தைத் தொடருவோமாக...


வாருணீ தாரணா.

 

இப்போது பொற்றாமரையின் கர்ணிகையில் சிம்மாசனத்தில் அமர்ந்து சாம்பல் துகள்கள் படிந்து இருக்கும் நிலையில் நமது ஆன்மா அமர்ந்து உள்ளது. சுயம்பு லவண சமுத்திரத்தின் ஒரு பகுதியில் அடிவானத்தில் கன்னங்கரேலென்று மழை மேகக் கூட்டம் திரண்டு மேலெழுந்து வருகிறது. அந்த மழை மேகக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வானம் முழுவதும் நிறைந்து பகலை இரவாக்கிக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் மழை பொழியும் நிலையில் உள்ளது. இலேசான குளிர் காற்றுடன் வானமே பொத்துக் கொண்டதோ? என்று அஞ்சுமளவிற்கு சிறு தூரலாக ஆரம்பித்த மழையானது சோவென்ற சப்தம் காதைப் பிளக்க பெருமழையாகப் பெய்து ஆத்மனில் படிந்திருந்த சாம்பல் துகள்களை எல்லாம் கழுவி  ஆன்மாவைப் ஸ்படிக மணி பிம்பம் போல் ஜொலிக்கும் படி கழுவி சுத்தம் செய்து பிறகு ஓய்ந்து அடங்கி விட்டது என்று சிந்தித்து தியானிக்க வேண்டும். இப்போது ஆன்மா ஒளி ஊடுருவும்படி ஸ்படிக மணி பிம்பம் போல் பொற்றாமரையின் மேல் எதுவுமே நடக்காதது போன்று அமைதியாக சாந்தமே உருவாக அமர்ந்து இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும்.

தத்வரூபவதீ தாரணை.

 

நம்முடைய ஆன்மா ஏழு விதமான தாதுக்கள் நீங்கி ஏற்கனவே இருந்த உடலின் அளவில் சற்றே குறைந்து முழு நிலவிற்குச் சமமான மாசற்ற ஒளியுடன் குளிர்ச்சியாக ஒளிர்வதாகக் கற்பனை செய்ய வேண்டும். வாலறிவனுக்குச் சமமாக நம் ஆத்மனை தியானிக்க வேண்டும்.

 

நான் சாந்த மயமானவன்.

நான் ஞான மயமானவன்.

நான் தரிசன மயயமானவன்.

நான் வரம்பற்ற ஆற்றலைக் கொண்டவன்.

நான் வரம்பற்ற சுகமுடையவன்.

நான் ஸம்வ்ருத்தன் ( வினைகள் அண்ட இடம் தராதவன்).

நான் கர்ம வினைகள் அனைத்தையும் அழித்தவன்.

நான் பற்றற்றவன்.

நான் பேரானந்த மயமானவன்.

இப்படி சிந்தனை செய்து தியானிக்க வேண்டும்.

 

சிம்மாசனத்தில் வீற்றிருப்பவனும் நல்ல அதிசயங்கள் கூடியவனும் மகிமைகள் பொருந்தியவனும் கர்மங்கள் அனைத்தையும் அழித்தவனும் குற்றங்கள் இல்லாதவனும் உடல் வடிவோடு கூடியவனுமான நம் ஆத்மனை தேவேந்திரர்கள் அசுரர்கள் அனைவராலும் போற்றித்  துதிக்கப்படுபவனாகவும் சிந்தனை செய்ய வேண்டும்.

 

களங்கமற்றவனும் அமிர்தத்தில் தோய்ந்த சந்திரனின் ஒளியைப் போல வெண்ணிறமானவனும், முழுதுணர் ஞானிக்குச் சமமானவனும், மேரு மலையின் சிகரத்தில் அமர்ந்தவனாகவும், அனைத்து உலகங்களையும் வெற்றி கொண்டவனாகவும், உலகத்துப் பொருட்களின் அனைத்து உருவங்களும் பிரதிபலிக்கின்ற அளவிற்கு அறியும் தன்மை உடையவராயும், தேவேந்திரர்களால் கூட சிந்திக்க முடியாத அளவிற்கு ஒளி மிகுந்தவராகவும் இருக்கின்ற தன் ஆத்மனை எவர் சிந்தனை செய்கின்றாரோ அந்த நற்சிந்தனையை பிண்டஸ்த தியானம் என்று ஜைன ஆகமங்கள் கூறுகின்றன.

 

பொதுவாக இந்த பிண்டஸ்த தியானம் திகம்பர முனிவர் செய்கின்ற தியானமாகத் தான் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்த தியானம் தர்ம தியான வகையைச் சார்ந்தது என்பதால் இதை தேசவிரத ஸ்ராவகரும் பழகலாம் என்று பிண்டஸ்த தியானத்தை அனைவரும் அறியும்படி வெளிப்படுத்துகிறேன். தேசவிரத ஸ்ராவகரா? என்று மலைக்க வேண்டாம். ஆத்ம தேடலில் இருக்கும் அனைவரும் தேசவிரதிகள்தான். இதைத் தியானிப்பதால் பாவமும் சேராது புண்ணியமும் சேராது. தன் ஆத்மனைப் பற்றிய தெளிவான ஞானம் உண்டாகும். உலக விஷயங்களில் மனம் ஆழ்வதை தவிர்த்து பிண்டஸ்த தியானம் செய்வதால் வினைகள் சேராது இருக்கின்ற மாசுக்கள் அழிந்த பாவனை நற்பாவனையே அதாவது நற்சிந்தனையே. இதனால் எந்தக் கேடும் வராது.

 

ரூபஸ்த தியானம் ஒரே பதிவாகப் பதிவு செய்கிறேன். பிரித்துப் பிரித்துப் பதிவு செய்தால் தொடர்ச்சி விடுபட்டுப் போகும் என்பதால் இப்படிப் பதிவு செய்கிறேன்.  சிரமத்திற்கு மன்னிக்கவும்.

 

அடுத்த ரூபாதீத தியானமும் இதைப் போன்று தான் பதிவு செய்ய உள்ளேன். அட்வான்ஸ் மன்னிப்பு இப்போதே கேட்டுக் கொள்கிறேன்.

 

 ரூபஸ்த தியானம் செய்யும் பயிற்சி முறை.

 பல ஆகமங்களில் குறிப்பிட்டுள்ளதை வைத்து ரூபஸ்த தியானம் செய்யும் விதம் எளிதாக புரியும்படி சொல்ல விழைகிறேன்

விடியற்காலை அல்லது உறங்குவதற்கு முன்பு சுகாசனம் அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி கவனம் முழுவதையும் உள்ளுக்குள் கொண்டு வாருங்கள். கண்களைத் திறக்காமல் மூடிய நிலையில் கண்களால் எதிரில் இருப்பதைப் பார்ப்பதைப் போல் கவனத்தை ஒருமுகப்படுத்தவும்.

 

எதிரே அரஹந்த பகவானின் உருவத்தைக் கற்பனையில் காணுங்கள். சமவ சரணத்தின் நடுவில் செந்தாமரை மலரின் கர்ணிகையின் மேல் தனது பரம ஔதாரிக உடல் பதியாமல் அந்தரத்தில் அமர்ந்து இருக்கும் அரஹந்த பகவானைக் காணுங்கள் கற்பனை செய்யுங்கள்.  இப்போது நீங்கள் காணும் பகவானின் உடல் நம்முடைய உடலைப் போன்ற ஸ்தூல உடல் அல்ல. பரம ஔதாரிக உடலாக இருக்கும். ஆகாயத்தைப் போன்று வெற்றிடமாக ஸ்தூலமின்றி  உருவமற்றும் பளிங்கு போல் பிரகாசமாகவும் சயோக நிலையில் அதாவது மனோயோகம் வசனயோகமின்றி காய யோகம் கூட மிக மிகச் சன்னமாக இருக்க  அவருடைய அவயவங்கள் சர்வ லக்ஷணங்கள் பொருந்தியும் பத்மாசனமிட்டு அமர்ந்து  முழுதுணர் ஞானத்துடன் ஞான குணங்களுடன் ஞானமயமாக சாந்த சொருபமாக பத்துத் திசைகளிலும் ஒளியைப் பரப்பிக் கொண்டு பிரகாசத்துடன் அமர்ந்து இருக்கும் அரஹந்த பகவானைக்  கற்பனை செய்யுங்கள். இந்தப் பிரகாசம் அல்லது ஒளி அவருக்கே உரிய சுயம்பிரகாசமாகும்.

 

இது எவ்வாறெனில் அவருடைய பன்னிரண்டாவது குணஸ்தானத்தில் காதி கர்மமாம் மோகனீய கர்மங்களை  வீதராக பற்றற்ற மனோபாவத்துடன் சகல சாரித்ரத்தின் துணை கொண்டு மோகத்தை முற்றிலும் அழித்து விட்டு மோகத்தை நீக்கிக் களங்கமற்ற தூய பாரிணாமிக பாவத்தில் பளிங்கு போல் சகல பரமாத்மாவாக பிரகாசிக்கின்றார். பன்னிரண்டாவது குணஸ்தானத்தின் இறுதியில் சுக்லத் தியானத்தின் துணை கொண்டு ஞானத்தை மறைக்கக் கூடிய காதி கர்மமாம், ஞானாவரனீய கர்மம், தன்னைத் தான் உணருவதைத் தடுக்கக்கூடிய காதி கர்மமாம் தர்சனாவரனீயம், எதற்கெடுத்தாலும் தடையை ஏற்படுத்தும் காதி கர்மமாம் அந்தராய கர்மம் இவை மூன்றையும், சுக்ல தியானம் கொண்டு அழித்து கடந்த கால நிகழ்கால எதிர்கால மூன்று காலங்களிலும் உயிர்களின் பொருட்களின் நிலைகளைத் தெள்ளத் தெளிவாக உணரும் முழுதுணர் ஞானத்தை முழுமையாக அடைகின்றார் அரஹந்த பகவான் ஆகின்றார். பதின்மூன்றாவது சயோக கேவலி குணஸ்தானத்தில் அரஹந்த பகவான் ஆக காட்சி அளிக்கின்றார்.

 

நவகேவல லப்தி என்னும் வரம்பில்லாத ஞானம், தன்னை முழுமையாக உணரும்  வரம்பில்லாத தர்சனம், வரம்பற்ற பலம் அல்லது சக்தி, வரம்பற்ற சுகம் அதாவது நித்திய சுகம், வரம்பற்ற லாபம், போகம், உபபோகம் மற்றும் க்ஷாயிக சம்யக்த்வம் (தர்சன மோஹனீயத்தின் ஏழு மூலக்கூறுகள் அனைத்தும் அழிந்த நிலை), க்ஷாயிக சாரித்ரம் (சாரித்ர மோஹனீயத்தின் இருபத்தைந்து கஷாயங்கள் முற்றிலும் அழிந்த பூரண பரம பாரிணாமிக நிலை கொண்ட  முழுமையான ஒழுக்கம்), ஆகிய ஒன்பது தன்மைகள் என்றும் மாறாமல் அவரிடம்  நிலைத்து இருக்கின்றன. தூய ஞான குண மயமான அருவமான  பூரண வடிவத்துடன் இருக்கின்றார். ஒளிமயமாகப் பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றார்.

 

அவருக்கு இருபுறமும் தேவர்கள் இருவர்  வெண்சாமரை வீசிக் கொண்டு இருப்பர்.  அவருடைய சிரசின் பின்புறம் பிரபாமண்டலம் என்று சொல்லப்படும் ஒளி பொருந்திய பிரபாமண்டலம் ஒளி வீசிக் கொண்டு இருக்கும். முன்புறம் பின்புறம் பக்கவாட்டில் அதாவது  எந்தப் பக்கத்தில் இருந்து நாம்  பார்த்தாலும் நம்மை நேராகப் பார்ப்பது போல் அவருடைய உருவம் நமக்கு காட்சி தரும்.  தலைக்கு மேல் அழகு பொருந்திய முக்குடை இருக்கும். அசோக விருக்ஷம் அவருக்குப் பின்புறமிருந்து நிழலைக் கொடுத்துக் கொண்டு இருக்கும். அவருடைய திரு வாயில் இருந்து திவ்ய தொனி ஒலித்துக் கொண்டு இருக்கும். த்வ்யத் தொனி அங்கே இருக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அதனதன் மொழிகளில் புரியும்படி ஒலிக்கும். தேவர்கள் பகவான் மேல் மலர் மாரி பொழிந்து கொண்டே இருப்பர். தேவ துந்துபி மூலம் இனிய ஓசையை எழுப்பிக் கொண்டே இருப்பர். இப்படிப் பல்வேறு அதிசயங்களையும் அலங்காரங்களையும் ஏற்படுத்தி இந்திராதி தேவர்கள் ஆனந்த நடனம் செய்து கொண்டு மகிழ்ந்து இருப்பர் மற்றவர்களையும் மகிழச் செய்வர்.

 

இப்படியாக அரஹந்த பகவானின் திவ்ய பரமாத்ம  வடிவத்தினை எவ்வளவுக்கு எவ்வளவு தெளிவாகக் கற்பனை செய்து பார்க்க முடியுமோ? அவ்வாறு சிந்தனை செய்து தியானியுங்கள். இவ்வாறு தியானம் செய்து அரஹந்த பகவானின் உருவத்தைப் பார்த்துக் கொண்டே இதே பரமாத்ம நிலையைத் தன்னுடைய ஆத்மாவும் அடையும் என்று திடமாக சிந்திக்க வேண்டும். மேலும் அரஹந்த பரமாத்மாவே நான்  நானே பரமாத்மா என்றும் நம்மை நம்முடைய ஆன்மாவை அரஹந்த பரமாத்மாவாகவே ஆழ்ந்து தியானிக்க வேண்டும். இதே நிலையில் அரஹந்த பகவானை முன்னிறுத்தி அப்படியே சிறிது நேரம் ஆழ்ந்து தியானிக்க வேண்டும். ரூபஸ்த தியானம் இவ்வாறாகச் செய்து நிறைவு செய்ய வேண்டும். 


ரூபாதீத தியானம்.

 

 

ரூபாதீத

ரூப+அதீத =ரூபாதீத.

உருவமுள்ள பொருள் ரூபம் அல்லது  உருவம் எனப்படும்.

ரூப ரச அதாவது உருவம், ருசி, வாசனை, தொடுபுலன், நிறம் ஓசை உள்ளதும் கண்களுக்குப் புலப்படுவதுமே ரூபப்பொருள் எனப்படும்.

இவைகளில் இருந்து விடுபடுவது ரூபாதீதம் (உருவமற்றது) எனப்படும். அதாவது மேற்சொன்ன உருவம் ருசி வாசனை தொடுபுலன் நிறம் ஓசை இவைகள் இல்லாமல்  அருவமாக ஞானமயமாக எல்லா மாசுக்களும்  நீங்கி சுயமாக இருப்பதே ரூபாதீதம் எனப்படும். இந்தத் தன்மையில் ஆத்மனைச் சிந்தித்து அதனுள் ஐக்கியமாவதே ரூபாதீத தியானம் ஆகும்.

 

உருவமற்றதும் ரூப ரச கந்த ஸ்பரிசம் ஆகிய புத்கலங்களின் அல்லது  பொருட்களின் நிறம் மணம் குணங்கள் இயல்பு தன்மை தொடு உணர்வு கண்ணுக்கு புலப்படும் தன்மை  ஏதும் அற்றதே ரூபாதீதம் (உருவமற்றது) எனப்படும்.

 

சுத்த சைதன்ய ஞானாநந்த கணஸ்வரூப ஆன்மாவே! அதாவது தூய உணர்வுத்தன்மையும், தூய முழுதுணர் ஞான மயமானதும் ஆகிய ஆன்மாவே சுத்த ஆன்மா! அதுவே சித்த ஆன்மா! எனப்படும்.

 

எந்த ஆன்மா திரவ்ய கர்மம் பாவ கர்மம் நோகர்மம் ஆகியவைகள் இல்லாத களங்கமற்ற சுய நிலையில் உள்ளதோ? அந்த ஆன்மாவை தியானம் செய்வது ரூபாதீத தியானமாகும். இது எப்படி சாத்தியம்? நாம் தான் கர்மங்கள் அனைத்தும் கொண்டவர்களாயிற்றே இவைகள் நம்மை விட்டு அகலாது இருக்கின்றனவே. அவைகள் சூழ்ந்துள்ள ஆத்மாதானே நம்முடைய ஆன்மா. அந்த அசுத்தங்கள் நீங்கிய பின்னர் தானே நாம் நமது சுத்த ஆன்மாவைத் தியானிக்க முடியும். அது வரை காத்திருக்க வேண்டும் அல்லவா? அப்போது தானே பரிசுத்த ஆன்மாவை தியானிக்க முடியும்.

 

அலைகள் ஓயட்டும் பிறகு சமுத்திரத்தில் நீராடுகின்றேன் என்பதைப் போன்றது  இந்த எண்ணம்.

அலைகள் ஓய்வது எப்போது? நீங்கள் சமுத்திரத்தில் குளிப்பது எப்போது? சம்சார சமுத்திரத்தில் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கும் நாம் திரவ்ய கர்மம் பாவ கர்மம் நோகர்மம் நீங்கிய பின்னர் ரூபாதீத தியானம் செய்கிறேன் என்று நினைப்பது போன்றது. எனவே மாசுக்கள் உள்ள நாம் களங்கமற்ற அருவமாக நம் ஆன்மனை தியானிக்க முயல வேண்டும். அப்படி தியானித்தால் தான் களங்கமற்ற ஞான மயமான நம்முடைய ஆன்மனை உணர்வது என்பது  முடியும்.

 

இந்த விளக்கத்தை மேலும் தெளிவாக்க வினாவொன்று எழுப்பப்படுகிறது.

அந்த வினாவானது "ரூபாதி குணங்கள் இல்லாத திரவ்யமாகிய தர்மம் அதர்மம் ஆகாயம் காலம் முதலியவைகளும் கூட அதாவது உருவமற்றவை உருவம் ருசி வாசனை தொடுஉணர்வு கண்களுக்குப் புலப்படும் தன்மை ஓசை இல்லாதவை. அருவமானவை. இவைகளை தியானிப்பதும் கூட ரூபாதீத தியானம் எனக் கூறலாம் அல்லவா?

 

பதில்: இஃது உண்மையான கேள்விதான். தர்மம் அதர்மம் ஆகாயம் காலம் இவைகள் கூட உருவமற்றவை உருவம் உள்ளவைகளுக்கான தன்மையும் அற்றவை  என்பது உண்மையே. ஆனால் அவைகளுக்கு சைதன்யம் அதாவது ஞானம் கிடையாது. ஞான குணம் கிடையாது.

சாதகன் ஞான குணமுள்ளவன். ஞான குணமில்லாத தர்மம் அதர்மம் ஆகாயம் காலம் இவைகளை எப்படி தியானிப்பான்? அதனால் கிடைக்கும் பலன்தான் என்ன? ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை.

ஞான குணமுள்ள சாதகன் எந்தப் பொருளைப் பற்றி தியானிக்கின்றானோ? அந்தப் பொருளாகத் தான்  தானும் ஆவதற்கு விரும்புவான்.

நிரஞ்சன களங்கமற்ற வினைகள் இல்லாத சுத்த சைதன்ய குணமுள்ள ஞான மயமான சித்த பகவானாக ஆவதற்கே ஒவ்வொருவரும்  விரும்புவர் அதுதான் லட்சியமாக இருக்க வேண்டும்.  இதற்கு ஏற்ற உருவமாகிய சுத்த ஆன்மாவைத் தியானம் செய்தால்தானே தானும் அந்த நிலையை அடைய முடியும். ஆதலால் மேற்கண்ட வினாவிற்கு இடமில்லை அது அர்த்தமும் அற்றது.

 

நம்முடைய ஆன்மா சின்மயமானது அதாவது ஞான மயமானது.

ஆதலால் சைதன்ய மயமான ஞான மயமான சித்த ஆன்மாவை நினைத்துச் செய்யும் தியானம் தான் அதே போன்ற நிலையை நம்மை அடையச் செய்யும் வல்லமை உடையதாக இருக்கும்.

ரூபாதீத தியானத்தைச் செய்பவன் தன்னுடைய சுத்த ஆத்ம சுபாவத்தில் தன்மயமாகி சிந்தனையை ஒருமுகப்படுத்துகிறான். அவ்வாறு தன்மயமாவதற்கு பிற ரூபமாகிய சித்த சொரூபத்தைத் துணையாகக் கொள்ளுகிறான். எதுவரை தனக்குத் தன்னில் ஆழும் தன்மை அல்லது தகுதி வரவில்லையோ? அதுவரைதான் இந்தத் துணைப் பொருள் அவனுக்கு அவசியம்.

 

ஆனால் தன்னில் அதாவது தன்னுடைய ஆன்மனில்  தோய்ந்து விடுவானாயின் இந்தத்  துணைப் பொருள் தானாகவே விடுபட்டுவிடும். தியானம் செய்பவன் ஒரேயொரு நொடி நேரம் மட்டும் தன்னுடைய ஆன்மாவில் தன்னை நிறுத்தி அதிலேயே லயித்துத் தன்மயமாகி விடும்போது அவனுக்குத்  தியானம், தியானம் செய்பவன் மற்றும் தியானம் செய்யும் பொருள் என்கிற வேறுபாடே (விகல்பமே) தெரியாது அல்லது இருக்காது. அதாவது

 ஆத்ம தியானம்!

 ஆத்மாதான்  தியானி! மற்றும்

ஆத்மா தான் தியானம் செய்யப்படும் பொருள்!  என்ற நிலையில் இருந்து மூன்றும் ஒன்றுக்கொன்று வேறுபாடின்றி ஐக்கியமாகிவிடும்.  இது நிர்விகல்பம் என்று சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையை அடைவதற்கு முதலில் இது போன்று சுத்த ஆன்மாவைச் சிந்தித்துத்  தியானம் செய்வது மிக மிக அவசியமாகும்.

சித்தபரமேஷ்டி சிவப்பு நிறம் உள்ளவராக தியானம் செய்ய வேண்டும் என்று ஆகமம் கூறுகிறது. உண்மை தத்துவத்தை அறிவதற்கெனவே வெவ்வேறு கோணங்களில் ஆன்மாவைப் பற்றி விளக்கப்படுகிறது.

 

1.மனோதத்துவப்படி சிவப்பு நிறம் நம் கவனத்தைக் கவரக்கூடியது. எங்கு மனம் கவரப்படுகின்றதோ? அங்கு மனம் உறுதியாக ஒருமுகப்படும். அதுதான் சிவப்பு வண்ணத்தில் சுத்த ஆன்மாவை உருவகப்படுத்தச் சொல்லும் சூட்சுமம் அல்லது இரகசியம்.

இந்தச் சிவந்த நிறத்தை எங்கே தேடுவீர்கள்?

கர்நாடக வனப்பகுதியில் ஜங்கிள் பாபா என்று அழைக்கப்பட்ட திகம்பர முனிவரைப் பற்றிக்  கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவர் நடுப்பகல் வேளை வெட்ட வெளியில் தியானிப்பதைப் போன்றும், அருவிக்கு மிகவும் அருகில் தியானிப்பதைப் போன்றும் படங்களையும் செய்திகளையும் சமணர்கள் பெரும்பாலோர் அறிவர். அவர் செய்த தியானம் இரண்டும் சீதோஷ்ண நிலைக்குத் தன் உடலைப் பக்குவப்படுத்தும் தியானங்கள் ஆகும். அவர்தான் சல்லேகனா ஏற்று சமாதி அடைந்து விட்டாரே! சிவப்பு வண்ணம் அவரிடம் கிடைக்கும் என்று சொல்கிறீரா? என்று நீங்கள் எரிச்சல் படுவது தெரிகிறது.

 

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் சிறிது நேரம் காலை இளம் வெயில் கண்களில் படும்படி கண்களை மூடி உள்ளுக்குள் கண் இமைகளைக் கவனித்துப் பாருங்கள். அப்போது வெய்யிலின் ஒளி கண் இமைகளில் படுவதால் சிவந்த நிறம் அங்கே தோன்றும். அந்த நிறமானது கண்ணுக்குள் ரம்மியமாக காணப்படும். அந்த நிறத்தை உங்கள் உடல் முழுவதும் பரவுவதாகக் கற்பனை செய்யுங்கள். ஆகமத்தில் சொல்லப்படுகின்ற சிவப்பு வண்ணம் இதுதான். கண்களைத் திறந்தவுடன் இந்த நிறம் மறைந்து விடும். அருவமான சிவப்பு வண்ணமும் இதுதான் ஸ்பரிசிக்க முடியாத சிவந்த வண்ணமும் இதுதான். ருசிக்க இயலாத சிவப்பு வண்ணமும் இதுதான். ஓசையற்ற சிவந்த வண்ணமும் இதுதான்.

மணமற்ற சிவப்பு வண்ணமும் இதுதான்.

 இந்த வண்ணத்தில் சுத்த ஆன்மாவை தியானம் செய்து பழகுங்கள்.

 

2. சூரியன் அதிகாலையில் சிவந்த பொன் நிறமுள்ளதாக உள்ளது. பொன் நிறமாகிய இந்த சூரியன் அமைதியையும் இன்பத்தையும் கொடுக்கக் கூடியது. இது போன்ற பொன்னிறமாக உள்ள சித்த பகவானை தியானிப்பது, இன்பத்தைக் கொடுப்பதாகவும் அமைதியை அளிக்க வல்லதாகவும் தன்னையும் பிற பொருள்களையும் பிரகாசிக்க வைக்கக் கூடியதாகவும் அமைகிறது. இது போன்ற ஞான ரூபமாகிய தியானமும் ரூபாதீத தியானம் ஆகும்.

 

3. விடியற்காலை பொன்னிறமான சூரியன் எப்படி எல்லாப் பொருட்களையும் பிரகாசிக்கச் செய்யக்கூடியதோ? அதுபோல ஆன்மாவிற்கு எல்லாப் பொருட்களையும் அறியும் ஆற்றலும் சுயமாகப் பிரகாசிக்கக் கூடிய தன்மையும் உண்டு. ஆகையால் காய்ச்சிய தங்கம் போன்ற நிறமுள்ள சித்த பகவானைத் தியானிப்பதுதான் உண்மையான தியானமாகும். நன்கு காய்ச்சி உருக்கிய திரவமான தங்கக் குழம்பை  அச்சில் ஊற்றும் போது நமக்குத் தெரிகின்ற சிவப்பு நிறம் இங்கே சொல்லப்படுகிறது.

 

ரூபாதீத தியானத்தின் இலக்கணம் பற்றி வசுநந்தி ஸ்வசம்வேதனம்ஸ்ராவகாச்சாரம் என்னும் நூலில் கூறப்படுவதாவது.

 

வண்ணரச கந்தஃபாசேஹிம் வஜ்ஜிஓ ணாண தம்சணசரூவோ

 

ஜம் ஜ்ஜாஇஜ்ஜஇ ஏவம் தம் ஜ்ஜாணம் ரூவ ரஹியம்த்தி

 

பொருள்

நிறம் ருசி வாசனை தொடுதல் ஆகியவைகள் இல்லாத கேவலஞான கேவலதரிசன ஸ்வரூபமாகிய சித்தபரமேஷ்டியை அல்லது சுத்த ஆன்மாவை தியானம் செய்வது ரூபாதீத தியானமாகும்.

 

ரூபாதீத தியானம் பற்றி ஞானார்ணவ நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது.

 

அதரூபே ஸ்திரீபூத சித்த: ப்ரக்ஷீண விப்ரம

 

அமூர்தமஜமவ்யக்தம் த்யாதுமீ ப்ரக்ரமதே தத

 

எவருடைய மனம் ரூபஸ்த தியானத்தில் உறுதியுடன் நிலைத்துள்ளதோ? அறிவுமயக்கம் நீங்கியுள்ளதோ? அத்தகு தியானியானவர் உருவமற்ற பிறப்பு இறப்பு அற்ற புலன்களுக்குப் புலப்படாத பரமாத்மாவை தியானிக்க முற்படுகின்றார்.

 

சிதா நந்தமயம் சுத்தமமூர்த்தம் பரமாக்ஷரம்

 

ஸ்மரேத் யத்ராத்மநாத்மானம் தத்ரூபாதீதமிஷ்யதே

 

யோகத்தைச் செய்யும் முனிவர் தம் தியானத்தில் சிதாநந்த மயமான (ஞானமயமான) சுத்தமான அமூர்த்தமாகிய (உருவமற்ற) சிறந்த ஆன்மாவை தியானிக்கின்றாரோ? அதுவே ரூபாதீத தியானம் எனப்படும்.

 

சர்வாவய சம்பூர்ணம் சர்வலக்ஷண லக்ஷிதம்

 

விசுத்ததர்ச சங்க்ராந்த ப்ரதி பிம்பசமப்ரபம்.

 

முழுமை பெற்ற எல்லா அவயவங்களுடனும் அனைத்து இலக்ஷணங்களுடனும் கூடிய தூய பரமாத்மனை , கண்ணாடியில் காண்கின்ற பிரதிபிம்பத்தைப் பார்ப்பது  போன்று காண வேண்டும் அல்லது சிந்திக்க வேண்டும்.

ரூபாதீதம் நிரஞ்சனம்  களங்கமற்ற பரமாத்மாவை தியானம் செய்வது ரூபாதீத தியானமாகும்.

 

இந்தத் தியானம் செய்வது தன்னில் தன்னையே தன்மயம் ஆக்குகிறது. இதில் பிற பொருளைச் சார்ந்து செயல்படுவதில்லை. பிறவற்றை நாடுவதும் இல்லை. தியானிப்பவன், பொருள் இவ்விரண்டின்  ஐக்கியத்தை அடைவதே இந்த தியானத்தின் உச்சக்கட்டமாகும்.

 

சோஹம் சகலவித்சார்வ சித்த: சாத்யோ ப்பவச்யுத :

 

பரமாத்மா பரஞ்ஜோதிர் விஸ்வதர்சீ நிரஞ்ஜன:

 

ததாசௌ நிஸ்சலோ மூர்த்தோ நிஷ்கலங்கோ ஜகத்குரு:

 

சின்மாத்ரோ விஸ்புரத்யுச்சைர் த்யான த்யாத்ரு விவர்ஜித :

 

ப்ருதக் ப்பாவமதிக்ரம்ய ததைக்யம் பரமாத்மநி

 

ப்ராப்நோதி ச முநி: சாக்ஷாத் யதா ந்யத்வம் த புத்யதே

 

இந்த மூன்று ஸ்லோகங்களின் அர்த்தம் கீழே சொல்லப்படுகிறது.

 

எப்பொழுது தியானத்தில்  பரமாத்மா நேரடியாக காணப்படுகிறதோ? (நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு இது கற்பனையில் மட்டுமே சாத்தியம் ஆகும். ஏனெனில் கேவல ஞானியைத் தவிர சாதாரண புலன்களுக்கு புலப்படாது)  அப்போது நானும் அந்த பரமாத்மாவாகவே  உள்ளேன் என தியானம் செய்ய வேண்டும். நானே வாலறிவன் (சர்வக்ஞன்),  நானே சர்வவியாபி (எல்லா இடங்களிலும் பரவியுள்ளவன்), நானே சித்த பகவான், நானே சாத்யப் பொருள் சம்சாரத்தில் இருந்து விடுபட்ட பரமாத்மாவாகவும், பரஞ்ஜோதி சொரூபம் உள்ளவனாகவும் உலகம் முழுவதும் பார்க்கக் கூடியவனாகவும் உள்ளேன். நானே நிரஞ்சன் அதாவது களங்கமற்றவன் . உருவமற்றவன். எவ்வித மாசும் இல்லாதவன். உலகத்திற்கே குரு ஞான மயமானவன் என்றும், தியானம் வேறு தியானம் செய்யப்படும் பொருள் வேறு என்கிற வேற்றுமை அற்ற அற்புதமான ஆற்றல் இந்த தியானத்தில் ஏற்படுகிறது.

 

அவ்வமயம் பரமாத்மா வேறு நான் வேறு என்கிற வேற்றுமை எண்ணம் முற்றிலும் உண்டாவதில்லை. அதாவது சுத்த சைதன்ய உணர்வு ஏற்படும் போது பிற எண்ணங்கள் யாவும் மறைந்து ஆன்மாவின் உண்மையான இயல்பான குணம் மட்டும் கவனத்திற்கு வரும்.

 

இதையே பூஜ்ய பாத சுவாமி சமாதி சதகத்தில் கூறுவதாவது.

 

ய பரமாத்மா ஸ ஏவாஹம் யோஹம் ஸ பரமஸ்தத:

 

அஹமேவ மயோ பாஸ்யோ நான்ய: கஸ்சிதிதி ஸ்திதி:

 

பரமாத்மாவிற்கும் மற்றும் என்னுடைய ஆன்மாவிற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. நானே பரமாத்மா நான் என்னால் பூஜிக்கப்படுகிறேன். வேறு யாதும் நான் பூஜிக்கக்கூடிய பொருள் இல்லை என்பதே உண்மையான ஆன்ம தத்துவத்தின் நிலை, ஆன்மா மட்டுமே தான் பூஜிக்கத்தக்கது. சுத்த சைதன்ய ஞான சொரூபமாகிய ஆன்மாவை தியானம் செய்பவன் தான், சுத்த ஞானாகார வடிவமாக ஆகக்கூடும்.

 

உபாஸ்தாத் மாநமேவாத்மா ஜாயதே பரமோதவா

 

மதித்வா ஆத்மாநமாத்மைவ ஜாயதே அக்நிர்யதா தரு:

 

பரமாத்ம சொரூபமாகிய ஆன்மாவை தியானிப்பதால் தன்னுடைய ஆன்மா பரமாத்மாவாக ஆகிறது. காட்டில் உள்ள மூங்கில்கள் ஒன்றோடொன்று மோதுவதால் ஏற்படும் உராய்வுகளால் நெருப்பு உண்டாகிறது. அது போல ஆன்மாவின் சுத்த பரிணாமத்தின் ஒரு நிலை அடையும் சாதகன் கூட தியானத்தில் உறுதி கொள்வதால் தத்ரூப சுத்த ஆன்மாவாக ஆகிவிடுகின்றான்.

 

பரமாநந்த ஸ்தோத்திரத்தில் ஆத்மனின் இருப்பைப் பற்றிய எளிமையான விளக்கத்தைப் பார்ப்போம்.

 

ஆகார ரஹிநம் சுத்தம் ஸ்வ ஸ்வரூபே வ்யவஸ்திதம்

 

சித்தமஷ்டகுணோபேதம் நிர்விகாரம் நிரஞ்ஜனம்:

 

ஆன்மாவிற்கு உருவம் இல்லை அது தன்னுடைய இயல்பான ஸ்வரூபத்தில் உள்ளது. அது சித்தத் தன்மை உடையது.எட்டு விதமான குணங்களுடன் கூடியது களங்கமற்றது உருவமற்றதும் கூட.

 

தத்சத்ருசம் நிஜாத்மானம் யோ ஜாநாதிஸ பண்டித

 

சஹஜானந்த சைதன்ய ப்ரகாசாய மஹீயசே :

 

ஆன்மா ஞான மயமானது, தானே பிரகாசிக்கக் கூடியது என்று தன்னுடைய ஆன்மாவை யார் அறிகிறாரோ அவரே ஞானி.

 

பாஷாணேஷு யதா ஹேமம் துக்த மத்யே யதா க்ருதம்

 

திலமத்யே யதா தைலம் தேஹ மத்யே ததா சிவ:

 

சுவர்ண கற்களில் ( தங்கத் தாதுக்கள்) பொன்னும், பாலில் நெய்யும், எள்ளில் எண்ணெயும் இருப்பது போன்று இந்த உடலில் ஆன்மா உள்ளது.

 

காஷ்ட மத்யே யதா வஹ்னி: சக்திரூபேண திஷ்டதி

 

அயமாத்மா சரீரேஷு யோ ஜாநாதி ஸ பண்டித:

 

கட்டையில் நெருப்பு இருப்பது போன்று இந்த உடலில் ஆன்மா சக்தி வடிவத்தில் உள்ளது என்று யார் அறிகிறாரோ அவரே ஞானி.

 

மேற்கண்டவாறு சுத்தமான களங்கமற்ற ஆன்மாவை தியானம் செய்பவர் தன்னுடைய ஆன்மாவில் ஒன்றி விடுகிறார் ஆழ்ந்து விடுகின்றார். இந்த நிலையில் தியானம் செய்பவர், தியானம் செய்யக்கூடிய பொருள் இவைகளில் வேற்றுமை இருப்பதே இல்லை. இந்த நிலைக்குத் தான் சாத்ய சாதனம்  அதாவது இவ்விரண்டும் தன்மயமாதல் என்பதாம். கட்டையில் நெருப்பும் பாலில் நெய்யும் சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பும் மறைந்து இருப்பதைப் போன்று நித்யமான களங்கமற்ற பளிங்கு மணி மயமான ஆன்மா தன்னுடைய உடலில் மறைந்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் தருணம் இதுவே. இந்தத் தருணத்தை அதாவது சமயத்தை எப்பாடுபட்டாவது ஒவ்வொருவரும் சுயமாகப் பெற வேண்டும் அதுவே நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும்.

 

 ரூபாதீத தியான நிலையில் பற்றற்ற வீதராக பரிணாமம் இயல்பாகவே கைகூடுகிறது. கஷாயங்கள் தியானம் செய்யும் நேரம் வரை அதாவது ஆன்மனில் ஒன்றிய நிலையில் தணிந்து உபசம நிலையில் உள்ளன. அதாவது மனோபாவம் சலனமற்று இருக்கும். சுவாசம் தானாக நிகழும் அதற்காக தனி முயற்சி தேவைப்படாது சிரமமின்றி ஆழ்ந்த நிலையில் இருக்கும். புலன்களுக்கு அப்பாற்பட்ட அதீத சுகம் தியானிப்பவரை ஆட்கொள்ளும். ஏதுமற்ற நிலையிலும் அனைத்தும் அடைந்த பூரண நிறைவான நிலை இருக்கும். இது முடிவல்ல இதுதான் தொடக்கம் நாம் அடைய வேண்டிய இலக்கு வெகுதூரத்தில் உள்ளது. தொடர்ந்து ஆத்ம தியானம் செய்து கொண்டே இருப்போம்.

 

 

ரூபாதீத அதாவது ரூப + அதீத  ரூபாதீத என்பதாகும். உருவமுள்ள பொருள் ரூபம் எனப்படும். ரூப, ரச அதாவது உருவம் ருசி வாசனை தொடுபுலன், நிறம் உள்ளதும்  கண்களால் காணப்படுவதுமே ரூபப் பொருள் எனப்படும்.

 

இவைகளில் இருந்து விடுபடுவது ரூபாதீதம் எனப்படும். அதாவது உருவமற்றதும் ரூப ரச கந்த ஸ்பரிசம் ஆகிய புத்கலங்களின் குணங்கள் இல்லாத பொருள் ரூபாதீதம் (உருவமற்றது) எனப்படும்.

 

சுத்த சைதன்ய ஞானாநந்த கணஸ்வரூப ஆன்மாவே அதாவது தூய உணர்வுத்தன்மையும் தூய முழுதும் ஞான மயமானதும் ஆகிய ஆன்மாவே சுத்த ஆன்மா அதுவே சித்த ஆன்மா எனப்படும்.

எந்த ஆன்மா திரவ்ய கர்மம் பாவ கர்மம் நோகர்மம் ஆகியவைகள் இல்லாத களங்கமற்ற சுய நிலையில் உள்ளதோ?  அந்த ஆன்மாவை தியானம் செய்வது ரூபாதீத தியானம் ஆகும்.

 

 

 

ரூபாதீத தியானம் செய்முறை.

 

தங்கத் தாதுக்களில் தங்கம் இருப்பது போல,

விறகில் நெருப்பு இருப்பது போல,

பாலில் நெய் இருப்பது போல,

எள்ளில் எண்ணெய் இருப்பது போல

நம் உடலில் ஆன்மா இருக்கிறது.

 

தங்கத் தாதுக்களை  நெருப்பில் இட்டுப் புடம் போட்டால் தான் தங்கம் வெளிப்பட்டுப் பிரிந்து வரும்.

விறகினைத்  தீ கொண்டு மூட்டினால் தான் அதிலிருந்து நெருப்பு தோன்றும்.

பாலைக் காய்ச்சி ஆறவைத்து உறைமோர் கொண்டு தயிராக்கித் தண்ணீர் சேர்த்து மோராக்கிக் கடைந்தால் தான் அதிலிருந்து வெண்ணையை எடுத்துக் காய்ச்ச நெய் கிடைக்கும்.

எள் விதைகளை வெய்யிலில்  நன்கு காய வைத்துப் பின் செக்கில் இட்டு ஆட்ட எண்ணெய் தோன்றும்.

 

அதுபோல நம் உடலில் ஆழ்ந்து தேடினால் தான் அதில் இரண்டறக் கலந்து அதனையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும்  ஆன்மா வெளிப்படும். ஆக நம் உடல் பரமாத்மா நீக்கமறக் கலந்திருக்கும் ஆன்ம தாதுப் பொருள் என்று சொல்லலாம்.

 

ரூபஸ்த தியானத்தில் சித்தராகப் போகும் அரஹந்த பாரமாத்மனை முன்மாதிரியாக வைத்துத் தியானித்து, அவரும் நம்முடைய ஆன்மாவும் ஒன்று, அவரைப் போலவே நாமும் பரமாத்ம நிலையை அடைவோம் என்று தியானித்தோம்.  அரஹந்த பரமாத்வை நாம் தியானித்தாலும் அவர் புறப்பொருள் தானே தவிர நம்மில் இருப்பவர் இல்லை  நாமும் அவர்  இல்லை ஆனால் அவர் போலவே நாமும் உருவமற்ற ஞான மயமான தன்மை உடையவரே.  நம் உடலில் உள்ள நம்முடைய ஆன்மாவை அதில் ஆழ்ந்து தேடினால் தான் நம்முடைய ஆன்மா வெளிப்படும். எனவே நமது உடலாகிய தாதுவில் இருந்து அருவமான ஆத்மனை ரூபாதீத தியானம் மூலம் தேடுவோம்.

 

அதற்கு உருவமற்ற நமது ஆத்மனை முதலில் உணருவோம் அதனுள் ஐக்கியமாவோம். உருவமற்ற நமது ஆத்மனின் உறைவிடம் நமது உடல். அதனுள் புகும் வழியை ஆராய்வோம். அதனுள் புகுவதும் நம் ஆத்மனில் ஆழ்வதும் ஒன்றே.  நம்முடைய சுவாசம் தான் நம்முடைய உயிராகப் பரிணமிக்கிறது. சுவாசம் நடைபெறவில்லை எனில் நம்முடைய உடல் வெறும் ஜடப் பொருள் தான். நம்முடைய உடலைத்  தற்போதைக்கு நம் ஆத்மனின் எல்லையாக வகுத்துக் கொண்டு சுவாசத்தின் உதவியுடன் ஆத்மனை அருவமாக உணர்வு மயமாக உணர்வோம்.

 

பயிற்சி.

தனிமையில் பிரம்ம முகூர்த்த நேரம் அல்லது உறங்குவதற்கு முன்பு பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி  உங்கள் கவனம் முழுவதையும் உங்களுக்குள் கொண்டு வாருங்கள். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து விட்டு உங்கள் சுவாசத்தில் கவனம் முழுவதும் ஒருமுகப்படட்டும். மூச்சுக் காற்று மூக்கு துவாரங்கள் வழியாக உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் உன்னிப்பாக கவனியுங்கள்.

 

மூச்சுக் காற்றை அவ்வாறு கவனிக்கும் போது உங்கள் கவனம் உடலை விட்டு வெளிப்புறமாக நாசிக்கு வெளியே தான் இருக்கும். இப்போது உங்கள் கவனத்தை மூக்கிற்கு உட்புறமாக மூச்சுக் காற்று மூச்சுக் குழலில் உராய்ந்து கொண்டு செல்வதைக் கவனியுங்கள். அப்போது உள்ளே வரும் மூச்சுக் காற்று உங்கள் தலைக்கு உள்ளே பரவுவதாகக் கற்பனை செய்யுங்கள். மூச்சுக் காற்று வெளியில் செல்லும் போதும் உங்கள் சிரசு மூச்சுக் காற்றால் நிறைந்து இருப்பதாக உணருங்கள். பலூனில் காற்றை ஊதி நிரப்பும் போது காற்று உள்ளே பரவப் பரவ எப்படி விரியுமோ?  அதுபோல உணருங்கள். ஆனால் உங்கள் சிரசின் அளவு மட்டுமே அந்த உணர்வு இருக்க வேண்டும்.

 

சிரசிற்கு அடுத்து கழுத்து முழுவதும் மூச்சுக் காற்றை பரவ விடுங்கள் அதனை சிரமும் கழுத்தும் சேர்ந்து மூச்சுக் காற்றால் பரவியுள்ளதை உணருங்கள்.

 

அடுத்து உங்கள் தோள்கள் மார்பு முழங்கைகள் வரை மேலும் மூச்சுக் காற்றைப் பரவவிடுங்கள் இப்போது உங்கள் சிரசு கழுத்து தோள்கள் மார்பு முழங்கைகள் வரை மூச்சுக் காற்று பரவி உள்ளதை உணருங்கள்.

 

அடுத்து உங்கள் வயிறு முழங்கை மூட்டுக்களில் இருந்து கை விரல்கள் வரை மூச்சுக் காற்றைப் பரவவிடுங்கள். இப்போது சிரசு கழுத்து தோள்கள் மார்பு முழங்கைகள் மற்றும் வயிறு முழங்கை மூட்டுக்களில் இருந்து கை விரல்கள் வரை மூச்சுக் காற்று பரவி உள்ளதை உணருங்கள்.

 

அடுத்து உங்கள் இடுப்பு உள்பகுதியில் மற்றும் முழங்கால்கள் வரை மூச்சுக் காற்று பரவுவதாக உணருங்கள். தலையில் இருந்து முழங்கால் மூட்டுக்கள் வரை மூச்சுக் காற்று பரவி உள்ளதை உணருங்கள்.

 

அடுத்து முழங்கால் மூட்டுக்களில் இருந்து இரண்டு பாதங்கள் வரை மூச்சுக் காற்று பரவுவதாக கற்பனை செய்யுங்கள். இப்போது கால் பாதங்களில் இருந்து தலை வரை உள்ளுக்குள் உடல் முழுவதும் உணர்வு பரவி இலேசான மிதமான அழுத்தத்துடன் இருப்பதை நீங்கள் உணரலாம். இந்த நிலை மாறாமல் உடலுக்குள் உணர்ச்சி பரவியுள்ளதை அப்படியே தொடர்ந்து நிலைக்க விடுங்கள். முதலில் இந்த நிலையில் இருக்க சில வினாடிகள் வரை தான் முடியும். பழகப் பழக சில நிமிடங்கள் வரை தொடர்ந்து நீங்கள் நிலைத்து இருக்க முடியும். இப்போது உங்கள் உடல் இருப்பது மறைந்து உணர்வு மயமாக அதேசமயம் திடப் பொருளாக இல்லாமல் அருவமான உருவமற்ற நிலையை உணர்வீர்கள். இது உங்கள் ஆத்மனின் உருவமற்ற தன்மையாகும்.

 

ஆத்மனின் உருவமற்ற தன்மையை உணர்ந்து விட்டீர்கள் அடுத்து ஆத்மனில் சைதன்ய மயமான அதாவது ஞான மயமான தன்மையை கற்பனை செய்ய வேண்டும். இங்கே கற்பனைக்கு அவசியம் இல்லை. ஏனெனில் ஆத்மா ஞானமயமானது ஞானம் அதன் இயல்பு. அருவமான ஆன்மாவை உணர்ந்து விட்டீர்கள்.  அந்த அருவமான பகுதி முழுவதும் உணர்வால் அல்லது விழிப்பு நிலையில் நிறைந்து இருப்பதை உணர்வீர்கள். அந்த உணர்வு தான் ஞானம். நாம் கர்ம வினைகளை அழிக்காத சம்சார ஜீவன்கள். ஆனாலும் ரூபாதீத தியானம் செய்கிறோம். கர்ம வினைகள் அழியாத நிலையில்  ஸ்படிகம் போன்ற ஒளிவடிவமாக அருவமான நம் ஆன்மனை பார்க்க இயலாது. இப்போதைக்கு உணர்வு மயமாக நம் ஆத்மனில் ஆழ்வோம் ஆத்ம அனுபவத்தை அடைவோம் இது நம்மால் சாதிக்க முடிந்த விஷயம். இவ்வாறு அருவமான உணர்வு (அறிவுடன்) மயமாக ஆத்மனில் ஆழ்வோம் ஆத்மானுபூதி அடைவோம்.

 

ரூபாதீத தியானம் செய்முறை நிறைவு பெற்றது.

 

 

 ரூபாதீத தியானம் செய்முறை பயிற்சி நிறைவு பெற்றது. ஆத்மனில் நம்பிக்கை,  ஆத்ம ஞானம், ஆத்ம தத்துவத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை அதனோடு கூட ஆத்ம தத்துவத்தில் தெளிவான அறிவு இவற்றோடு நம்முடைய கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்தி ஆத்மனில் செலுத்தி ஆத்மனில் நிலைக்கச் செய்ய வேண்டும் என்பது பஞ்ச லப்திகளில் நான்காவது பிராயோக்ய லப்தி வரையிலும் அதற்குப் பிறகும் சம்யக்த்வம் அடைந்த பிறகும் நாம் செய்ய வேண்டியது. அப்படி ஆத்மனில் ஆழ்வதற்கு ரூபாதீத தியானம் அருமருந்தாகப் பயன்படும். நம் ஆத்மனில் நம் கவனம் ஒருமுகப்பட்டதும் கரண லப்திகள் (அதக்கரணம், அபூர்வ கரணம் மற்றும் அனிவிருத்திகரணம்) செயல்முறைக்கு வந்து அதப்ரவ்ருத்தி கரணத்தில்  சமயத்திற்கு சமயம் நமது பரிணாம தூய்மை அதிகரித்துக்  கொண்டே வந்து, அபூர்வ கரணத்தில் சமயத்திற்கு சமயம் அபூர்வ அபூர்வமாக பரிணாம தூய்மை ஏற்றம் அடைந்து கொண்டே வந்து, மூன்றாவது அனிவ்ருத்தி கரணத்தில் ஆத்ம பரிணாமம் ஒரே சீராக உயர்ந்து கொண்டே வந்து அனிவ்ருத்தி கரணத்தின் இறுதியில் அந்தர கரணம் செயலுக்கு வந்து அதன் மூலம்   மித்யாத்வ கர்ம வினைகளை உதயத்திற்கு வரவிடாமல் சற்றே தணிய வைத்து நம்முடைய ஆத்மனின் பிரவேசம், சம்சார ஜீவனாகிய நாம் உணரும் உன்னதமான நிலையை நாம் பெறுவோம். சம்யக்த்வம் அடைவோம். இது தான் சரியான உண்மையான சம்யக்த்வம். இது வரை மித்யாத்வ உணர்வு நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. இப்போது தான் முதன் முதலாக ஆத்ம உணர்வு சில கணங்கள் நம்மை ஆக்கிரமிக்கிறது. அதாவது சம்சார ஜீவனாகிய நாம் ஆத்மனின் சுடரை அதன் இருப்பை நிச்சயமாக உணர்வு பூர்வமாக உணர்ந்து விட்டோம். இது சிறிய கால அளவு தான். மித்யாத்வ மோகனீய கர்மங்களின் இடத்தில் ஆத்ம உணர்வு முழுவதும் வியாபிக்க வேண்டும். அதற்கான படிப்படியான செயல்முறைகள் தான் பிரதமோபசம சம்யக்த்வம், க்ஷயோபசம சம்யக்த்வம், த்விதியோபசம சம்யக்த்வம் மற்றும் க்ஷாயிக சம்யக்த்வம். அது தான் உண்மையான சம்யக்த்வம். இனி ஆத்மா கர்ம வினைகளின் ஆக்கிரமிப்பை வெகு விரைவில் வெளியேற்றி அழித்து விட்டு பிறவிப் பிணியில் இருந்து விடுபடும்.

 

சம்யக்த்வம் பெறுவதற்கு முன்னர் நாம் பெற்றிருந்தது தீக்காட்சி, அறிவு தீயஞானம் ஒழுக்கம் தீயொழுக்கம். சம்யக்த்வம் அடைந்த பிறகு தீக்காட்சி நற்காட்சியாகி விடும். அறிவு நல்ஞானமாகி விடும். ஒழுக்கம் நல்லொழுக்கம் ஆகிவிடும். இது எப்படி சாத்தியம்? என்று கேட்பீர்கள். சம்யக்த்வம் அடைந்த பிறகு இது சாத்தியம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

நற்காட்சி நல்ஞானம் நல்லொழுக்கம் அடைந்து விட்டோம் என்று வாளாவிருக்க கூடாது. சம்யக்த்வம் அடைந்த பிறகு அவிரத சம்யக்திருஷ்டி. அவிரத நிலையில் இருந்து தேச விரத நிலைக்கு முன்னேற வேண்டும். தேச விரதம் என்பது முடிந்த வரை அணுவிரதங்கள் கடைபிடிக்கும் தன்மை. தேச விரதம் வரை தான் இல்லறம். இல்லறத்தில் இருந்து கொண்டு அணுவிரதங்களைக் கடைபிடிக்க வேண்டும். சாதாரண ஸ்ராவகர் முதல் கௌபீணதாரி வரை இல்லறத்தில் இருப்பதாகத் தான் அர்த்தம். உடலில் ஒட்டுத் துணி இருந்தாலும் இல்லறத்தைச் சேர்ந்தவரே. கௌபீணதாரி ஸ்ராவகரில் உத்தம ஸ்ராவக நிலையை அடைந்தவர். அதில் அவர் பெருமை கொள்ளலாம். ஆனால் அது போதாது சகல சாரித்ரத்திற்கு அவர் உயர வேண்டும். சகல சாரித்ரத்தில் இருந்து யதாக்யாத சாரித்ரத்தை அடைய வேண்டும்.

 

தேச விரத நிலையில் இருந்து அடுத்து உயிரானது அப்ரமத்த நிலை அதாவது விழிப்புணர்வு கூடிய மகாவிரத நிலைக்கு செல்லும். முதன் முதலாக திகம்பர துறவேற்கும் ஒவ்வொரு உயிரும் ஏழாவது அப்ரமத்த குணஸ்தானத்திற்கு தான் உயரும். ஆனால் சற்று நேரத்தில் ஆறாவது ப்ரமத்த குணஸ்தானத்திற்கு வந்து விடும். ஏனெனில் தீக்ஷை எடுக்கும் போது வைராக்கியம் முழுமையாக இருக்கும். ஆனால் அது நிலைத்து இருக்காது. அதனால் ஏழாவது விழிப்புணர்வு குணஸ்தானமான அப்ரமத்த குணஸ்தானத்தில் இருந்து ஆறாவது விழிப்புணர்வு அற்ற ப்ரமத்த குணஸ்தானத்திற்கு அதாவது விழிப்புணர்வு குறைந்த குணஸ்தானத்திற்கு இறங்கும். ஆனால் இந்த ஊஞ்சலாட்டம் உபசம ஸ்ரேணியில் அல்லது க்ஷபக ஸ்ரேணியில் ஏறுவதற்கு முன்பு வரை இது வாடிக்கையான தொடர் நிகழ்வு ஆகும். ஆறுக்கும் ஏழுக்குமாக உயிர் ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருக்கும். மகா விரதம் எனப்படும் நல்லொழுக்கம் விழிப்புணர்வு அற்ற  ஆறாவது ப்ரமத்த குணஸ்தானத்தில் இருந்து தொடங்கி முக்தி அடையும் வரை தொடர்ந்து இருக்கும்.

 

அணு விரதங்கள் மற்றும் மகா விரதங்கள் கர்ம வினைகள் ஆன்மனில் உட்புகும் வழிகளை அடைக்கும் தடுப்புக் கவசங்கள் ஆகும். சம்வரை தத்துவத்தின் செயலாக்கத்திற்கு முழுமையாக உதவுவது அணு விரதங்களும் மகாவிரதங்களும் ஆகும். அணுவிரதங்களானது விரதங்கள் கடைபிடிக்கும் தன்மையினையும் அளவையும் பொருத்து வினைகளைத் தடுக்கும். மஹா விரதங்கள் கர்ம வினைகளை முற்றிலும் தடுக்க வல்லவை.

 

கர்ம வினைகளை அழிப்பதற்கு ஆத்மனில் ஆழ்வது மட்டும் தான் ஒரே வழி. வேறு வழி ஏதும் கிடையாது. வேறு எந்தவொரு குறுக்கு வழியும் கிடையாது. ஆகவே ஆத்ம அனுபவம் பெறுவதற்கு மட்டுமல்ல கர்ம வினைகளை வெல்வதற்கும் ஆத்ம தியானத்தால் மட்டுமே சாதிக்க முடியும். ஒருவர் பவ்யரோ? அபவ்யரோ? எவராக இருந்தாலும் சரி ஆத்ம தியானம் செய்ய வேண்டும். ஆத்மனைத் தவிர நமக்குத் துணை வேறு எவரும் துணையாக முடியாது. எவரை நமக்குத் துணை என்று நம்புகிறோமோ? நம்மைக் கரையேற்றுபவர் என்று எண்ணுகிறோமோ? அவர்களே அவரவரின் ஆத்மனைத் தான் நாட வேண்டும். அப்படி இருக்க அவர்கள் எப்படி நமக்குத் துணை என்று சொல்ல முடியும்?

 

புண்ணிய கர்மம் ஆகட்டும் பாவ கர்மம் ஆகட்டும், முன்பு கொடுத்ததை   வட்டியும் முதலுமாகத் திரும்பப் பெறும் கொடுக்கல் வாங்கல் பரிமாற்றமே தவிர வேறு எந்த விதத்திலும் ஆன்மனுக்குப் பயனற்றது. இவையிரண்டும் சம்சார சுழற்சியில் உடல்களைக் கருவியாக்கி நன்மையோ தீமையோ சுகமோ துக்கமோ உயிருக்கு ஏற்படுத்தி அலைக்கழிப்பவை என்பது தான் உண்மை.

 

ஒரு நாளில் மொத்தம் 60 நாழிகைகள் அதாவது 24 மணி நேரம் உள்ளது. ஒரு நாழிகை 24 நிமிடங்கள் கொண்டது. இரண்டு நாழிகை 48 நிமிடங்கள் கொண்டது. அந்த 60 நாழிகைகளில் ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு நாழிகைகள் மட்டும் மனம் ஆழ்ந்து தியானம் செய்ய உங்கள் ஆத்மனுக்காக ஒதுக்குங்கள். மீதமுள்ள 58 நாழிகைகள் (இரவும் பகலும் சேர்ந்து) உங்கள் இக வாழ்க்கைக்கு உண்டான விஷயங்களில் ஈடுபடுங்கள். ஆனால் அவை அணு விரதங்கள் மகாவிரதங்களின் எல்லைக்கு உள்ளே இருப்பது அவசியம். அவைகளைக் கடந்து உங்கள் நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிறவிகள் கூடுவதை உங்களால் தடுக்க இயலாது.

 

அனிவ்ருத்தி கரணத்தின் இறுதியில் அந்தரகரணம் ஏற்பட்டு மித்யாத்வ மோகனீய பிரக்ருதிகளை உதயத்திற்கு வரவிடாமல் உபசமம் செய்து அந்த இடத்தில் ஆத்மனின் உணர்வு ஆட்கொள்ளும் அதை நாம் சுய உணர்வோடு உணரலாம் என்று பஞ்ச லப்திகள் விவரணத்தின் போது சொல்லப்படுகிறது. அந்த அதியற்புதமான உணர்வு என்ன? என்று கேட்பீர்கள்.

 

பொதுவாக தியானத்தில் ஆழ்ந்து ஈடுபடும் போது மனம் நிர்மலமான உள்ள போது சில பல அதிசய நிகழ்வுகள் ஏற்படும். ஆனால் அவற்றை பெரும்பாலும் வெளியில் சொல்லாமல் விடுவது நல்லது என்று ஆச்சார்யர்கள் சொல்வதுண்டு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். காரணம் யாரும் அதனை நம்ப மாட்டார்கள் மாறாக சொன்னவரையே தாங்கள் பெற்ற அனுபவம் பிரமையோ? என்று ஐயம் கொண்டு சஞ்சலம் அடைய வைத்து விடுவார்கள் என்பதால் சுயானுபவத்தை மறைத்தே வைப்பர் சாதகர்கள். ஆனால் என்னுள் சஞ்சலத்தை உண்டாக்க முடியாது என்று திடத்துடன் என்னுடைய அனுபவத்தை இங்கே சொல்கிறேன்.

 

ஐந்து அல்லது ஆறு வருடங்கள் முன்பு நிகழ்ந்த அனுபவம். அப்போது எனக்கு இப்போது தத்துவத்தில் இருக்கும்  தெளிவு கிடையாது. ஆனால் ஓரளவு ஏழு தத்துவத்தைப் புரிந்து கொண்டு இருந்தேன். அசைக்க முடியாத ஆன்ம நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால் இப்போது தெரிந்து கொண்டு உள்ளது போன்று ஆத்மனின் இயல்பு குணம் எதுவும் அறிந்தவன் இல்லை.

 

ஒரு நாள் இரவில் மூச்சை மட்டும் கவனித்து மந்திரம் ஏதும் உச்சரிக்காமல் வெறுமனே அமர்ந்து இருந்தேன். திடீரென்று என்னுடைய ஸ்தூல சரீரம் கணப்பொழுதில் மறைந்து அங்கே ஸ்தூலம் இன்றி காற்றோடு காற்றாக வெற்றிடமாகி விட்டது. இதை என் சுய உணர்வுடன் உணர்ந்து கொண்டு அமர்ந்து இருக்கிறேன். உணர்வு மட்டும் தான், அமர்ந்து இருக்கும் ஸ்தூல நிலை கூட அங்கே இல்லை. உடலே இல்லாத அருவமான உணர்வு. க்ஷணப் பொழுது தான் இந்த நிகழ்வு, மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டேன். அந்த நிகழ்வு நடக்கும் போது நான் மயக்கத்தில் இருந்தேனோ? உறக்கத்தில் இருந்தேனோ? என்று வினாக்கள் எழும். நான் பூரண சுய உணர்வோடு அனுபவித்த தியான அனுபவம். பஞ்ச லப்திகள் பற்றிய இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான தியான அனுபவம் என்பதால் இங்கு பதிவு செய்கிறேன். ஆன்மா உருவமற்றது அருவமானது சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அற்றது என்ற அத்தனை அம்சங்களும் என்னுடைய அனுபவத்தில் காணப்படுவதால், சம்யக்த்வம் இந்த மாதிரி தான் இருக்கும் என்ற முழு நம்பிக்கையில் இதைக் கூறுகிறேன். நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.

ஆத்மனே நமஹ!

ஆத்மனே நமஹ!!

ஆத்மனே நமஹ!!!

 

நிறைவு பெற்றது.

 

நன்றி வணக்கம் இவண்

T.ஸ்ரீதர்.விளாங்காடுபாக்கம்.

2 comments:

  1. Thank you very much. It will be really useful and we can visit very often.it is a very good idea to post it here. Hope to see many gems like this.

    Raji Sripal.

    ReplyDelete