ஸ்வப்நஸ்தவ ஸ்தோத்திரம்
ஸ்வப்நஸ்தவ ஸ்தோத்திரம்


தினமும் வாட்ஸ் ஆப்பில் வழ்ங்கிய பதிவுகள்.

வழங்கியவர்.  திரு. ரவிச்சந்திரன், போளூர். அவர்கள்.


01. மாதா யஸ்ய ப்ரபாதே கரிபதி வ்ரஷபோ சிம்ஹ பாதம் சலக்ஷ்மீம் I
மாலாயுக்மம் ஸஸாங்கம் ரவிஜஷயுகலே பூர்ண கும்பெள தடாகம் II

பாதோதிம் ஸிம்பீடம் ஷுகண நிப்ருதம் வ்யோம யாநம் மநோஜ்ஞம் I
ஸாத்ராக்ஷீந் நாகபாஸம் மணிகணசிகிநெள தம்ஜிநம் நெளமி பக்த்யா II


ஜினமாதாவானவள் விடியற்காலையில் 1. யானை, 2. எருது, 3. இளம் சிங்கம், 4. மகாலக்ஷ்மி, 5. இரண்டு மந்தார மலர் மாலை, 6. சந்திரன், 7. சூரியன், 8. இரண்டு மீன்கள், 9. பூர்ண கும்பம், 10. குளம், 11. சமுத்திரம், 12. சிம்மாசனம், 13. தேவ விமானம், 14. நாகபவனம், 15. ரத்தினக் குவியல், 16. புகையற்ற நெருப்பு ஆக பதினாறு கனவுகளைக் கண்டால். இந்த பதினாறு கனவுகள் ஜினபாலகன் பிறக்க போகிறான் என்பதை சூசகமாக அறிவிக்கின்றன. அந்த ஜினபாலகனை நான் வணங்குகிறேன்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$02.*கஜேந்த்ர வ்ரஷ ஸிம்ஹபோத கமலாலயா தாமகம்
ஸாங்க ரவிமீந கும்ப நலிநாகராம்போ நிதிம் I

ம்ருகாதிய த்ரதாஸநம் ஹுவிமாந நாகாலயம்
மணிப்ரசய வந்ஹிநா ஸஹவி லோகிதம் மங்கலம் II


ஐராவத யானை, எருது, மிருகங்களுக்கு அரசனான சிம்மம், செல்வங்களுக்குத் தலைவி இலட்சுமி, மணம் கமழும் மந்தார மலர் மாலை, மக்கள் மனதைக் கவரக் கூடிய சந்திரன், சூரியன், பூர்ண கும்பம், நீர்நிரம்பிய தாமரைக் குளம், சமுத்திரம், சிம்மாசனம், தேவ விமானம், நாகபவனம், இரத்தினக் குவியல், புகையற்ற நெருப்பு ஆகிய பாபத்தைப் போக்க கூடிய, புண்ணியத்தைத் தரவல்ல பதினாறு நற்கனவுகளை ஜினமாதா கண்டாள்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$03. ஸ்ரீமதி குணைருதாரைர் பகவதி
பரதஸ்ய பிதரி லோக்ஹிதாய I

ஸ்வாமி நிதிவெள கலெள புவமாகச்சதி
ஸர்வலோக குரு வ்ரஷபஜிநே II


04. ப்ராஸாத ரம்ய பவநே ஸயநீயே
ம்ருதுதரேச ஸுபகத நித்ரா I

ஷோடஸபரம ஸ்வப்நாதி மாநவ பஸ்யத்
பவித்ரதம ஜிநஜநநீ IIஅனைத்து குணங்களுக்கும் இருப்பிடமாகிய பரத சக்கரவர்த்திக்கு பிதாவாகிய எல்லா உலகிற்கும் குருவாகிய ஸ்ரீ விருஷப தேவரின் தாயார் மருதேவி அம்மையார் ஒரு நாள் அரண்மனையில் மிகவும் அழகு வாய்ந்த, மனதைக் கவரக்கூடிய மிருதுவான படுக்கையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது விடியற்காலை வேளையில் மங்களகரமான சிறந்த பதினாறு கனவுகளைக்
கண்டாள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$*முதற் கனவு யானை*


05. பரிபிந்நகரட விகளித மதமதிரா
மோத மத்த மதுகரவவ்ரந்தம் I

த்ரவிதம் நதந்த முந்தசாரத
நீரதர தவளகூட ப்ரதிமம் II


இரு பக்கங்களிலுள்ள கன்னத்திலிருந்து சொரிகின்ற மதஜலத்தை உடையதும், அந்த மதஜலத்தில் மொய்க்கின்ற கருநிறமான வண்டுகளை உடையதும், சரத்கால மேகக் கூட்டங்களைப் போன்றும், பிளிறுகின்ற வெண்மை நிறமுள்ள யானை.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$*இரண்டாவது கனவு எருது*


06. ஸஸிரகர கிரண கெளரம் துங்க கருத்
ஸுகுர ஸுபக தர்ப விஷாணம் I

துந்துபி ஸமாநஸ்கந்தர மபிமுக
மாயர்ந்த மபிச கோபதி மநகம் II


வெண்மையான கிரணங்களை உடைய சந்திரனைப் போன்றும், நல்ல குளம்புகளையும் – கொம்புகளையும், பேரிகையைப் போன்ற உயரமான கொண்டையை உடையதுமாக எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கும் எருது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$


*மூன்றாவது கனவு சிங்கம்*

07. கேசரிண முந்நதெளஜஸ மருணாம்ஸு\
மயம் ஸுருசிரகேசர பாரம்
ஸஸிரேகா ஸமதம்ருஷ்டம் விநிமிர
பரிபூர்ண பூண்டரீகச்சாயம்


அதிக பருத்ததும், உறுதி வாய்ந்ததும், உதய சூரிய ஒளிபோன்று செந்நிறமானதுமான பிடரி மயிர்கள் நிரம்பிய கழுத்தை உடையதும், சந்திர ஒளிக்கு சமமான கோறைப் பற்களை உடையதுமாகிய கர்ஜிக்கின்ற உயரமான வெள்ளை நிறமுள்ள சிங்கம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$*நான்காவது கனவு மகாலக்ஷ்மி*

08. ஸுருசிர ஸுகந்தி ஸலிலை:
ஸுரத்ந கலஸை
ப்ரஸிச்ய மாநாம் ஸம்யக்
கமலாலயாஞ்ச விமலை: மதங்கஜை
ரிந்து குந்த குமதநீ காஸை


வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம் பொதிந்த ரத்தினக் கலசங்களில் தூய நறுமணமுள்ள தண்ணீரை நிரப்பிக் கொண்டு மலர்ந்த வெண்தாமரை மலர் மீது அமர்ந்துள்ள மகாலக்ஷ்மிக்கு, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்யும் காட்சி.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$


*ஐந்தாவது கனவு இரண்டு மலர்மாலை*

09. விமுகுல கமலேந்தீவர மந்தாராஸோக I
குந்த குரவக குடஜம்

ஸ்புடவ குர திலக ரசிதம் ஸ்ரஜெள II
ஸுபெள குமுகுமாய மாநப்ரம ரே


மலர்ந்த தாமரை நெய்தல், மந்தாரை, அசோகம், முல்லை, குறிஞ்சி, மல்லிகை, மகிழம்பூ, திலகம் முதலிய நறுமுணமுள்ள மலர்களால் தொடுக்கப்பட்ட, வண்டுகள் நுகரும் நறுமணமுள்ள அழகான இரண்டு மலர் மாலைகள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$

*ஆறாவது கனவு முழுமதி*

10. ககநதல திலகபூதம் விஸேஷத I
குமுத ஸ்ஹண்ட மண்டந முதிதம்

விமலம் ஸமக்ர ஸஸிநம் நிஸாவது II
அஸித வதந ருசிமத் பிம்பம்


ஆகாயத்திற்கு திலகம் போன்றுள்ளதும், நெய்தல் மலர்களை மலர வைத்து அலங்கரிப்பதும் மேகத்தால் மறைக்கப்படாததும், இரவு என்னும் மங்கையின் சிரிப்புள்ள முகம் போன்ற (முழுமதி) பூர்ணசந்திரன்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$


*ஏழாவது கனவு உதயசூரியன்*

11. ப்ரவிதத ஸஹஸ்ர கிரண ப்ரத்வம்ஸித I
திமிரமுதய பர்வத ஸிகராத்

உத்யந்த முஷ்ணரஸ்மிம் ஸ்வதீதி II
ஸ்பர்ஸ பிந்ந பங்கஜ முகுலம்


ஆயிரம் கிரணங்களால் விஸ்தரிக்கப்பட்டதும், இருளை போக்கடிக்ககூடியதும், பூர்வாசலம் என்னும் மலையிலிருந்து உதயமாகும், கமல அரும்பை மலர்ச் செய்யும் செந்நிறமுள்ள உதயசூரியன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$*எட்டாவது கனவு இரண்டு மீன்கள்*

12. அந்நோந்ய ஸக்த சித்தம் காசமணி I
ச்சாய தோயநிகரே விஸரத்

நீல கநபடல மத்யே ஸ்புரத்தடித் II
தண்ட நீலஜஷ யுகலம்சஒன்றுக்கொன்று அதிக நட்புள்ள மனதை உடையதாயும், கண்ணாடியைப் போன்று வெண்மை நிறமுள்ள நீரில் சஞ்சரிக்கின்ற, நீல நிறமுள்ள மேக படலத்தின் மத்தியில் தோன்றும் நீண்ட மின்னலைப் போன்ற இரண்டு மீன்கள்..

$$$$$$$$$$$$$$$$$$$$$$$


*ஒன்பதாவது கனவு இரண்டு பூர்ண கும்பம்*


13. ஸவச்ச ஸுபஸலிலபூர்ணெள கநக மயெள I
ஸ்புட விசித்ர சந்தந சர்ச்செள

கும்ஜந்த தாலி பரிவ்ருத விகஸித II
ஸிதவதந பங்கஜாவ கலஸெள


தூய நீர் நிரம்பிய பொன்னிறமுள்ள பொலிவு பொருந்திய, சந்தனம் பூசப்பட்ட நறுமணமுள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெண்தாமரை போன்ற அகண்ட முகத்தை உடைய இரண்டு பூர்ண கும்பங்கள்,


$$$$$$$$$$$$$$$$$$$$$$$*பத்தாவது கனவு நீர் நிரம்பிய குளம்*

14. ஷட்சரன நிவஹ ஹஹிதம் ஸ்புடி தோத்பல I
கமல குமுத குவலய கலிதம்

பரமம் ஸரப்ர ஸந்தம் ஸாரஸ II
கலஹம்ஸ சக்ரவாக ஸமேதம்


வண்டுகள் மொய்க்கின்ற பொலிவுடன் கூடிய தாமரை, நெய்தல், குவலயம் முதலிய புஷ்பங்களுடன் சாரச பக்ஷி, ஹம்சம், சக்ரவாகம் பட்சி முதலிய நீர் வாழ் பறவைகள் உள்ள, நிர்மலமான தண்ணீர் உள்ள தாமரைக் குளம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$


*பதினொறாவது கனவு சமுத்திரம்*

15. பஹுவித விகீர்ண ரத்நஸ்புர தம்ஸு I
லதா விதாந பிஞ்ஜர நீரம்

க்ஷிபித ஜஷமகர ஸாகர முருமரமத II
ஸைலபிக்தி ஸந்திய வீசிம்


அநேக விதமான இரத்தினங்கலைப் போன்று பிரகாசிக்கின்றதும், பச்சைக் கொடிகளை உடையதும், மரகதமணி போன்ரு அலைகள் உள்ள தண்ணீரில் நீந்துகின்ற நீர்வாழ் பிராணிகளை (மீன், முதலை) உடைய சமுத்திரம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$


*பன்னி்ரெண்டாவது கனவு சிம்மாசனம்*

16. ஹரிவர்ய வித்ருத மதிஸய மநகர்க்ய I
மணிரத்ந ரஸ்மி ஜடிலித வபுஷம்

ஹேமமய ஸிம்ஹ விஷ்டர முதயாசல II
மஸ்தகஸ்த ஸவித்ர ஸமாநம்


ஒப்பற்ற அதிசயமான மரகதமணி போன்று ஒளி பொருந்தியதும், உதயாசலம் என்னும் மலை மீதிருந்து உதயமாகிற இளஞ்சிவப்புள்ள சூரியனைப் போன்றுள்ள, சிம்மங்கள் தரித்த தங்க சிம்மாசனம் (அரியனை).

$$$$$$$$$$$$$$$$$$$$$$$


*பதிமூன்றாவது கனவு தேவ விமானம்*

17. பவநபத பரம பூஷண அமரவதூ
நிவஹமதுர ஸங்கீதரவம்

விரசித கேது பதாகம் விமாந முக்த
மணி கநக ஜால ஸம்ருத்தம்


ஆகாயத்தில் மிகவும் அழகாக உள்ளதும், தேவ மாதுக்கள் பாடும் சங்கீத ஒலி நிரம்பியதும், பற்பல கொடிகளாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டதும் ஆகிய தேவ விமானம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$


*பதினான்காவது கனவு நாகபவனம்*

18. விலிலித முக்தா தரலை ரலம்க்ரதம்
க்ஷீரநீர நிர்ஜர ஸத்ருஸம்

நிரவத்ய முருகபவநம் ஸமந்த:
ஸகுநி பத்ர சித்ரிதஸுபகம்வெவ்வேறு விதமான முத்துக்களால் அலங்காரிக்கப்பட்டதும், பால் போன்று வெண்மை நிறமுள்ளதும், பற்பல பறவைகளின் இறகுகளைப் போன்ற அழகு வாய்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டதுமாகிய ஒளி பொருந்திய தோஷமற்ற நாகபவனம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$*பதினைந்தாவது கனவு ரத்தினக் குவியல்*


19. வைடூர்ய வஜ்ர மரகத கர்கேதந
கநக ரஜத ஸஸ்யாதி மஹா

ரத்நமணி துங்கராஸிம்
ஸ்வகீர்ண ஸந்தாநமே க்ரதந பஸம்வைடூரியம், வஜ்ஜிரம், மரகதம், கர்கேதனம், தங்கம், வெள்ளிய முதலிய ஒளிமிக்க ததுப் பொருட்களை உடையதும், மேன்மை பொருந்தியதும், தன்னுடைய ஒளியினால் எல்லோரையும் கவரக் கூடியதும் ஆகிய இரத்தினக் குவியல்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$
*பதினாறாவது கனவு புகையற்ற நெருப்பு*


20. தேதீப்ய மாநவந்ஹிம் வித்யுத் தபநீய
கபிலமபக்த தூமம்

க்ரம ஸஸ்ஸமீக்ஷ மாணாகல்யாணா
ஸஹஸ்ர பாகிநீ ப்ரதிபுத்தாஅதிக ஒளியினை உடைய மின்னலுக்கு ஒப்பான இளம் சிவப்பு நிறமுள்ள புகையற்ற நெருப்பு, ஆகிய இத்தகு பதினாறு கனவுகளைக் கண்ட பாகியவதியாகிய ஜினமாதா உறக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்து பகவானை சிந்திக்கலானாள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$
*கனவுகளின் மேன்மையும் பலனும்*


21. ஸம்ஸார தரண தாரண மஸேஷ
து; ஸ்வப்ந துரித ஹரணம் ஸத்யா

ஸுஸ்வப்நவர்தநம் க்கலு ஸதர்ஸ தம்
ஸித்தி கரண மதிபகு பக்த்யா


சம்சாரம் என்னும் பிறவிக் கடலைத் தாண்டுவதற்குக் காரனமானதும், தீய கனவுகளைப் போக்க கூடியதும், நல்ல கனவுகளை வளர்க்க கூடியதும் ஆகிய இந்த ஸ்வப்ன ஸ்தவத்தை எவர் பக்தியுடனும், நன்நம்பிக்கையுடனும் படிக்கிறார்களோ, அவர்கள் மும்மணிகளைப் பெற்று இப்பிறவியிலும் – அடுத்த பிறவியிலும் நற்பலனைப் பெறுவர்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$
22. ஹஸ்தீந்த்ரம் வ்ருஷபம் ஹரிம் ஸரஸிஜாம்
மாலே ஸு தாம் ஸுவ்ரதிம்
மீநெளபூர்ண கடெள ஸரோஜலநிதிம்
ஸிம்ஹா ஸநம் ஸ்வர் புவாம்

கேஹம் போகி நிகேதநம் மணிகணம்
வந்ஹிம்ச யஸ்யாம்பிகா
ஸ்வப்நே பஸ்யநி ஸோ ஜிநோபவதுமே
து: ஸ்வப்நவிச் சித்தயே


ஜினமாதாவானவள் விடியற்காலையில் யானை, எருது, இளம் சிங்கம், மகாலக்ஷ்மி, இரண்டு மந்தார மலர் மாலை, சந்திரன், சூரியன், இரண்டு மீன்கள், பூர்ண கும்பம், குளம், சமுத்திரம், சிம்மாசனம், தேவ விமானம், நாகபவனம், ரத்தினக்குவியல், புகையற்ற நெருப்பு ஆக பதினாறு கனவுகளைக் கண்டபின் (தன் வாயில் ஒரு விருஷபம் நுழைவது போன்று கனவு கண்டு, தீர்த்தங்கரரின் தாயாக) அநேக சுகம் பெற்றதைப் போன்று, ஸ்வப்னஸ்தவ தோத்திரத்தைப் படித்த எங்களுக்கும் கெட்ட கனவு வரக்கூடாது என்று ஜினேஸ்வரனை வேண்டிக் கொள்ளுகின்றனர்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$
*ஸ்வப்நஸ்தவ ஸ்தோத்திரம் முற்றும்.*

*லகு சிராவக பிரதிக்ரமணம்*

தமிழில் பூஜ்ய 105 ஸ்ரீஉபஷமமதி மாதாஜி அவர்கள்.No comments:

Post a Comment