லகு சிராவக பிரதிக்ரமணம்
லகு சிராவக பிரதிக்ரமணம்


தமிழாக்கம்: பூஜ்ய 105 ஸ்ரீ உபஷமமதி மாதாஜி


வாட்ஸ் அப்பில் வழங்கியவர் திரு. இரவிச்சந்திரன், போளூர் அவர்கள்.


நம: ஸித்தேப்ய; நம: ஸித்தேப்ய; நம: ஸித்தேப்ய;

சிதாநந்தைக ரூபாய, ஜிநாய பரமாத்மனே I

பரமாத்ம ப்ரகாஷாய நித்யம் சித்தாத்மனே நம” II


நான் எப்போதும் உயர்ந்த சித்த நிலையை அடைந்த பரமான்மாவை வணங்குகிறேன். எட்டு கர்மத்தை வென்று பரமாத்ம இயல்பை அடைந்த பரமாத்ம தத்துவத்தை வெளிப்படுத்திய சித்த பகவானை வணங்குகிறேன்.


ஹே பிரபு!

நான் இது வரை

5 மித்யாத்துவம்,
12 அவிரதம்,
15 யோகம்,
25 கஷாயங்கள் முதலான
57 ஆஸ்ரவத்தின் மூலமும்

_(இதனுள் அடங்கிய ஸம்ரம்பம், ஸமாரம்பம், ஆரம்பம், மன – வசன – காயத்தின் மூலம் செய்தல், செய்வித்தல், ஆமோதித்தல் மற்றும் குரோதம், மானம், மாயை, லோபம் மூலம் 108 வகை கர்ம ஆஸ்ரவம் எப்போதும் நடைபெறுகிறது.)_


மேலும்

3 தண்டங்கள் (மன, வசன, காயம்),
3 சல்யங்கள் (மாயை, மித்யா, நிதானம்),
3 காரவங்கள் (தற்பெருமை – ரச, ரித்தி, சாதா),
3 மூடங்கள் (தேவ மூடம், உலக மூடம், பாஷண்டி மூடம்),
4 வகை ஆர்த்த தியானம் ( இஷ்ட வியோகம், அனிஷ்ட சம்யோகம், பீடா சிந்தனை (நிதான பந்தம்),
4 ரெளத்திர தியானம் (இம்சா நந்தம், ம்ருஷாநந்தம், ஸ்தேயானந்தம், சம்ரக்ஷனாநந்தம்),
4 விகதைகள் (ஸ்த்ரி கதை, ராஜ கதை, உணவு கதை, திருடு கதை)


இவைகளில் நான் அனாதி காலமாக மித்யாத்வ, அஞ்ஞான மற்றும் மோகவசத்தினால் அதன் ரூபமாக என்னை மாற்றினேன் / மாற்றிக் கொண்டு இருக்கிறேன். மற்றும் எதுவரை நல்லறிவு வரவில்லையோ அது வரை மாற்றிக் கொண்டு இருப்பேன். இந்த நிலையில் எனக்கு இப்போது ஜிநவாணி மற்றும் க்ரு தொடர்பின் மூலம் நற்பயன் கிடைத்து உள்ளது. அதன் மூலம் மேலே கூறிய ஆஸ்ரவத்தினால் ஏற்பட்டஎல்லா பாபமும் அழியட்டும். நான் பச்சாதாபம் செய்கிறேன்.ஹே பிரபு!

நான் மித்யாத்வ வசத்தினால் அஞ்ஞான நிலையில் மறதியின் மூலம் நித்ய நிகோதம் 7 லட்சம், இதர நிகோதம் 7 லட்சம், மண்ணுடலி 7 லட்சம், நீருடலி 7 லட்சம், நெருப்புடலி 7 லட்சம், வாயுடலி 7 லட்சம், தாவர உடலி 10 லட்சம், இரண்டு இந்திரியம் 2 லட்சம், மூன்று இந்திரியம் 2 லட்சம், நான்கு இந்திரியம் 2 லட்சம், நரக கதி 4 லட்சம், விலங்கு கதி 4 லட்சம், தேவ கதி 4 லட்சம், மனித கதி 14 லட்சம் முதலான 84 லட்சம் யோனி மற்றும் 199 ½ லட்சம் கோடி குலத்தில் சூக்ஷ்மம், பாதரம், பர்யாப்தம், நிர்வ்ருத்யபர்யாப்தம், லப்தயாபர்யாப்தம் முதலான உயிர்களை துன்பப்படுத்தியதாலும் மற்றும் இவற்றின் மேல் ராக, த்வேஷம் செய்ததாலும் வந்த பாபங்கள் அழியட்டும்; நான் பச்சாதாபம் செய்கிறேன்.


ஹே பகவன்!

எனக்கு விரதத்தில், உபவாசத்தில், அதிக்ரமம், வ்யதிக்ரமம், அனாசாரம் மூலம் பாபங்கள் வந்திருந்தால் என்னுடைய அந்த எல்லா பாபங்களும் அழியட்டும். 5 ஸ்தாவரம் மற்றும் திரச உயிர்களுக்கு துன்பம் செய்திருந்தால். 7 வியசனம் கடைபிடித்திருந்தால், 7 பயம், 8 மதங்களின் மூலம் 8 மூல குணங்களில் அதிசாரம் செய்திருந்தால், 15 பிரமாத வசத்தினால் 12 விரதங்களின்  5-5 அதிசாரம் என மொத்தம் 60 அதிசாரங்களாலும், மற்றும் நீர் வடிக்கும் போதும், ஜீவாணி உரிய இடத்தில் விடாத போதும் ஏற்பட்ட பாபங்களும், என்னுடைய மற்ற எல்லா பாபங்களும்  அழியட்டும். நான் பச்சாதாபம் செய்கிறேன்.


ஹே பகவன்!

என்னுடைய ரெளத்திர பரிணாமம் மற்றும் கெட்ட சிந்தனையின் மூலம் நான் பேசும் போது, நடக்கும் போது, அசையும் போது, தூங்கும் போது, புரண்டு படுக்கும் போது, வழியில் தங்கும் போது, பூமியை கீழே பார்க்காமல் நடக்கும் போது என்னுடைய மன-வசன-காயத்தின் மூலம் தெரிந்தும், தெரியாமலும் எந்தவித பாபங்கள் ஏற்பட்டிருந்தாலும் அந்த எல்லா பாபங்களும் அழியட்டும், நான் பச்சாதாபம் செய்கிறேன்.


ஹே பகவன்!

சூக்ஷ்மம் மற்றும் பாதரம் ஆகிய இரண்டு வித உயிர்க்ள் என் காலின் கீழே வரும்போதும், நான் படுக்கும் போதும், உட்கார்ந்து எழுந்திருக்கும் போது, நடக்கும் போது? துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்யும் போது, சமையல் வேலை செய்யும் போது, மற்ற பிற செயல்களின் போது அவ்வுயிர்களைத் துன்புறுத்தி இருந்தால், பயமுறுத்தி இருந்தால், மரணமடைய செய்திருந்தால், மன – வசன – காயத்தின் மூலம் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட இந்த எல்லா பாபங்களும் அழியட்டும். நான், பச்சாதாபம் செய்கிறேன்.


நான் எல்லா ஜினேந்திர பகவானையும் வந்தனை செய்கிறேன். கடந்த கால, நிகழ்கால, எதிர்கால தீர்த்தங்கரர்கள், விதேஹ க்ஷேத்திரத்தில் உள்ள

20 தீர்த்தங்கரர்கள், சித்த க்ஷேத்திரம், அதிசய க்ஷேத்திரம். க்ருத்திம – அக்ருத்திம ஜிநாலயங்களை வந்தனை செய்கிறேன். முனிவர்கள், ஆர்யிகை, சிராவகர் மற்றும் பிரதிமாதாரி முதலான பவ்விய உயிர்களுக்கு நிந்தனை செய்திருந்தால், கடுமையான வசனத்தின் மூலம் மனத் துன்பம் கொடுத்திருந்தால், விநயம் செய்யாமல் இருந்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட எல்லா பாபங்களும் அழியட்டும். நான் பச்சாதாபம் செய்கிறேன்.


பிரபு!

நான், நிர்மால்ய பொருள்களைப் பயன் படுத்தியிருந்தால், சாமாயிகத்தில் 32 வகையான குற்றம் ஏற்பட்டிருந்தால், கோயிலில் ஐந்து இந்திரிய விஷயம் மற்றும் மனத்தின் மூலம் புலனின்ப விஷயத்தில் ஈடுபட்டிருந்தால், பகவான் பூஜையில் பிரமாதம் செய்திருந்தால் மற்றும் நான் ராக – த்வேஷம் கொண்டதால் மானம் – மாயை ஆகிய பரிணாமத்தினால் விளையாட்டில் கேலி கிண்டல், நாடக சாலையில், நாட்டியம் – பாட்டு சபையில், சினிமாவில் மித்யா பரிணாமத்தின் மூலம் எனக்கு பாப கர்ம பந்தம் ஏற்பட்டிருந்தால், ஏற்பட்ட பிறரைப் பற்றி கெட்ட சிந்தனை ஏற்பட்டிருந்தால் அந்த எல்லா பாபங்களும் அழியட்டும். நான் பச்சாதாபம் செய்கிறேன்.எல்லா உயிர்களிடமும் என்னுடைய மைத்ரி (நட்புணர்வு) பாவனை எப்போதும் இருக்கும். எல்லா உயிர்களும் என்னை மன்னிக்கட்டும். நானும் எல்லா உயிர்களையும் மன்னிக்கிறேன். கர்மங்கள் க்ஷயமாகும் வழியில் இருப்பதற்கு முயற்சி செய்வேன். எனக்கு சமாதி மரணம் கிடைக்கட்டும். எந்த நிலையிலும் என்னுடைய பரிணாமம் தூய்மையாக இருக்கட்டும். இதுவே என்னுடைய வேண்டுகோளாகும்.எனக்கு எப்போதும் ஆகமப் பயிற்சியின் லாபம் கிடைக்கட்டும். நல்ல குணமுடையவரின் தொடர்பு கிடைக்கட்டும். பிறர் குற்றம் சொல்வதில் மெளனமாக இருப்பேன். என்னுடைய குற்றங்களைத் தியாக செய்வதற்குப் பிராயசித்தம் எடுப்பதற்குமான பரிணாமம் எனக்கு இருக்கட்டும். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொள்வேன். இனிமையான வசனம் பேசுவேன். விரதத்தில் உறுதியாக இருப்பேன். நான்கு வகையான தானம் செய்வதற்கு எண்ணம் எனக்கு இருக்கட்டும்.


ஹே பகவன்!

எதுவரை என்னுடைய பிறவிச் சுழற்சி விடுபடாதோ, அது வரை தங்களுடைய கர்ம க்ஷயத்திற்கான முயற்சி, அனந்த சுகம் அடைவதற்கான குறிக்கோள். தங்களுடைய சாந்தமான வடிவம், பயன் தரும் வசனம், வீதராக பரிணாமம், கேவல ஞானம் மூலம் ஆன்ம நன்மை செய்யும் எண்ணம் எனக்கு பிறவிதோறும் கிடைக்கட்டும்.


*இதுவே என்னுடைய இறுதி வேண்டுதலாகும். என்னுடைய இதயம் தங்களுடைய பாதத்தில் ஆழ்ந்து இருக்கட்டும். விரைவில் பிறவி வெல்லும் பாவனை அமையட்டும். இதுவே என்னுடைய பிரார்த்தனை ஆகும்.*
No comments:

Post a Comment