கிரியா கலாபம் - தச பக்தி 2 (தொடர்ச்சி)
அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேந ரக்ஷ ரக்ஷ ஜிநேச்வர ! - 250
|
|
ஜிநேச்வர மம அந்யதா சரணம் நாஸ்தி த்வமேவ- சரணம் தஸ்மாத் காருண்ய பாவேந மாம் ரக்ஷ ரக்ஷ | ஜிநேந்திரரே ! எனக்கு உம்மைத் தவிர வேறொருவர் கதியில்லை ; ஆகவே, நீரே எனக்குத் தஞ்சம் (புகல்), ஆதலால் சர்வ ஜீவ தயாபரராகிய நீவிர், நின் கருணை நிறைந்த உள்ளத்தோடு என்னைக் காப்பாற்றுவீராக ! காப்பாற்றுவீராக ! |
விரைவைக் குறித்து இரண்டு முறைக் கூறினார். அதிவிரைவில் என்னைக் காப்பாற்றுங்கள் என்பது பொருள். 'அந்யதா' என்றது வேறு தெய்வங்களையும், புத்ர மித்ராதிகளையும் குறிப்பிடுவதாகும். |
நஹித்ராதா நஹித்ராதா நஹித்ராதா ஜகத் த்ரயே
வீதராகாத் பரோதேவோ நபூதோ நபவிஷ்யதி. 251
|
|
ஜகத்ரயே மம த்ராதா வீதராகாத் பரோ தேவ: நஹி வர்த்தமாநே த்ராதா ந அஸ்தி நஹிநஹி நபூத: ந பவிஷ்யதிஹி | (ஏனெனில்) இம்மூவுலகிலும் என்னைக் காப்பாற்றுகிறவர், ஜிநேஸ்வரனைக் காட்டிலும் வேறொருவர் இல்லை; நிச்சயமாக இல்லை ; இல்லவே இல்லை; கடந்துபோன காலத்திலும் இருந்ததில்லை, இனி எதிர்காலத்தில் இருக்கப்போவதும் இல்லை. இது நிச்சயம். |
------------------ |
விக்நௌகா : ப்ரளயம் யாந்தி சாகிநீ பூத பந்நகா: விஷம் நிர்விஷதாம் யாதி ஸ்தூயமாநே ஜிநேச்வரே. 252 |
|
சந்தஜிநேச்வரே ஸ்தூயமாநே ஸதி சாகிநீ பூதபந்நகா: விக்நௌ கா: ப்ரளயம் யாந்தி விஷம் நிர்விஷதாம்யாதி | ஜிநேஸ்வரர் என்னால் துதிக்கப்படுகின்ற அளவில் (ஜிநனை யான் துதிக்குமிடத்து) பிசாசு, பூதம், சர்ப்பம் ஆகிய இவை முதலான பல்வேறு இடையூறுகளும் நாசமடைகின்றன. மற்றும், கொல்லும் தன்மையுள்ள கொடிய விஷமும், தன்தன், தன்மையில் மாறி அம்ருதமாக நலம் அளிக்கிறது. |
------------------------------ |
ஜிநேபக்திர் ஜிநேபக்திர் ஜிநேபக்திர் திநே திநே ஸதாமேஸ்து ஸதாமேஸ்து ஸதாமேஸ்து பவே பவே. - 253 |
|
பவேபவே திநேதிநே ஜிநே பக்தி ஜிநே பக்தி ஜிநே பக்தி ஸதா மே அஸ்து ஸதா மே அஸ்து ஸதா மே அஸ்து | ஒவ்வொரு பிறவியிலும் ஒருநாளும் தவறாமல் நாள்தோறும் ஜிநரிடம் யான் செய்யும் பக்தியானது மும்முறையும் எப்பொழுதும் எனக்கு ஆகட்டும், எப்பொழுதும் எனக்கு ஆகட்டும், எப்பொழுதும் எனக்கு ஆகட்டும். |
---------------------------------- |
யாசேsஹம் யாசேsஹம் யாசேsஹம் ஜிந
தவ சரணாரவிந்தயோர் பக்திம்
யாசேsஹம் யாசேsஹம் யாசேsஹம்
புநரபி தாமேவ தாமேவ. - 254
|
|
ஜிந தவ சரண அரவிந்தயோ: பக்திம் அஹம் யாசே அறம் யாசே அஹம் யாசே புநரபி தாம் ஏவ தாம் ஏவ தாம் ஏவ அஹம் யாசே | ஜிநேஸ்வரரே! உம்முடைய திருடித் தாமரைகள் இரண்டிலும் செய்யும் பக்தியை யான் யாசிக்கிறேன், யான் யாசிக்கிறேன், யான் யாசிக்கிறேன் ; மீண்டும் மீண்டும் அந்தப் பக்தியை யான் யாசிக்கிறேன் ; மும்முறையும் யாசிக்கிறேன். |
" ஸர்வேந்த்ர ஸ்துத்ய பாதாப்ஜம் ஸர்வஜ்ஞம் தோஷ வர்ஜ்ஜிதம் ஸ்ரீஜிநாதீச்வரம் நௌமீ பரமாநந்த மக்ஷயம். நமஸ்தஸ்மை ஸரஸ்வத்யை: விமல ஜ்ஞாந மூர்த்தயே விசித்ரா லோகயா த்ரேயம் யத் ப்ரஸாதாத் ப்ரவர்த்தே. நமோ வ்ருஷப ஸேநாதி கௌதமாந்த்ய கணேஸிநே மூலோத்தர குணாட்யாயாம் ஸர்வஸ்மை முநயேந் நம: குரு பக்த்யா வயம் ஸார்த்த த்வீப த்விதய வர்த்திநாம் வந்தாமஹே த்ரிஸங்க்யோந நவகோடி முநீச்வராந். அஜ்ஞாந திமிராந்தாநாம் ஜ்ஞாநாஞ்ஜந சலாகயா சாந்தி சக்ஷு ருந் மீலிதம் யேந தஸ்மை ஸ்ரீ குரவே நம: " ஸ்ரீ பரம குரவே நம : பரம்பராசார்ய வித்யா குருப்யோ நமோ நம: |
ஸ்தோத்திரம் முற்றும், சுபம்.
பரிநிர்வாண பக்தி
விபுதபதி ககப நரபதி
தநதோரக பூத யக்ஷபதி மஹிதம்
அதுல ஸுக விமல நிருபம
சிவமசலம் அநாமயம் ப்ராப்தம். 255
கல்யாணை: ஸம்ஸ்தோஷ்யே
பஞ்சபிரநகம் த்ரிளோக பரம குரும்
பவ்ய ஜந துஷ்ட்டி ஜநநை :
துரவாபை : ஸந்மதிம் பக்த்யா. 256
|
|
விபுதபதி ககப நரபதி
தநத உரக பதி பூத-
பதி, யக்ஷபதி
பவ்யஜந துஷ்டி
ஜநநை :
துரவாபை: பஞ்சபி:
கல்யாணை : மஹிதம் அதுலஸுக விமல நிருபம அசலம் அநாமயம் சிவம் ப்ராப்தம் அநகம் த்ரிளோக பரமகுரும் ஸந்மதிம் பக்த்யா ஸம்ஸ்தோஷ்யே |
தேவேந்திரர், விஞ்சைய வேந்தர், குபேரன், தரணேந்திரன், வியந்தரேந்திரன், யக்ஷேந்திரன் ஆகியோரால், பவ்வியர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றனவும், நல்வினையாளர்க்கன்றி ஏனையோர்க்கு எளிதாகக் கிடைத்தற்கரியனவுமான ; கர்ப்பாவதரணம், ஜன்மாபிஷேகம், பரிநிஷ்க்ரமணம், கேவல ஞானம், பரிநிர்வாணம் ஆகிய பஞ்ச கல்யாண பூஜைகளால் பூஜிக்கப்பட்டவரும், கடையிலா இன்பமுடையதும், நிர்மலமானதும், இணையற்றதும், சலனமற்ற நித்தியமானதும் (குற்றமற்றதும்) மங்கள ஸ்வரூபமானதுமான முக்தியின்ப த்தை அடைந்தவரும் ; பாவமில்லாதவரும், சிறந்த மூவுலக நாதனுமான மகாவீரரை ப் பக்தி பரிணாமமுடன் துதித்து வணங்குகிறேன். |
தேவேந்திரன் முதலியோரால் பஞ்சகல்யாண பூஜையை அடைந்த முக்தியின்ப நாதரான மகாவீரரை வணங்குகிறேனென்பதாம். |
கர்ப்பாவதார கல்யாண வர்ணநம்
ஆஷாட ஸுஸித ஷஷ்ட்யாம்
ஹஸ்தோத்தர மத்யமாச்ரிதே சசிநி
ஆயாதஸ் ஸ்வர்க்க ஸுகம்
புக்த்வா புஷ்ப்போத்தராதீச: 257
ஸித்தார்த்த ந்ருபதி தநயோ
பாரத வாஸ்யே விதேஹ குண்ட புரே
தேவ்யாம் ப்ரிய காரிண்யாம்
ஸுஸ்வப்நாந் ஸம்ப்ரதர்ச்ய விபு: 258
|
|
விபு; ஆஷாட
ஸுஸித ஷஷ்ட்யாம்
சசிநி ஹஸ்த உத்தர
மத்யம ஆச்ரிதே
ஈச: ஸ்வர்க்க-
ஸுகம் புக்த்வா-
புஷ்போத்தராத்
பாரத வாஸ்யே
விதேஹ குண்டபுரே
ஸித்தார்த்த ந்ருபதி தநய: தேவ்யாம் ப்ரிய காரிண்யாம் ஸு ஸ்வப்நாந் ஸம்ப்ரதிஸ்ய ஆயாத: |
பகவான் தன்மை அடைந்த மகாவீரர், ஆடி மாதத்து சுக்கில பக்ஷ ஷஷ்டி திதியில், சந்திரன் உத்திரம் அஸ்தம் ஆகிய இரண்டின் மையத்தை அடைந்த அளவில் (நன்னாளில்), (முற்பிறவியில்) அச்சுத கற்பத்திலுள்ள புஷ்போத்தர விமானத்தில் அமரேந்திரனாக இருந்தவர், தனக்குக் கட்டின ஆயுள்ளவும் தேவ இன்பம் நுகர்ந்து (ஆயுள் முடிவில்), அவ்விமானத்தினின்றும் இறங்கி, ஜம்பூத்வீப பரத கண்டத்தில் உள்ள விதேக தேசத்தில் குண்டலபுர த்தின் அரசரான சித்தார்த்த மகாராஜனுக்குப் புதல்வராக, அம்மன்னவனின் மகா ராணியான பிரியகாரிணி மகாதேவியினிடம், கஜேந்திரன் முதலான பதினாறு ஸ்வர்ப்பனங்களைக் கனவின் மூலம் காண்பித்து, அவள் கருவில் வந்தடைந்தார். |
மகாவீரர் முற்பிறவியில் தேவராகியிருந்தார் ; அவர் குண்டலபுரம் அரசன் சித்தார்த்தருக்கும், பிரியகாரிணிக்கும் புதல்வராக, சுப ஸ்வப்ன மூலம், ஆடிமாதத்தில் ஜின மாதாவின் கருவில் வந்தடைந்தார்.
கஜேந்திரன் - சிங்கம் முதலான பதினாறு கனவின் விவரம், "கஜேந்த்ர வ்ருஷ ஸிஹ்ம போத கமலாலய தாமகம் சசாங்க ரவிமீந கும்ப நளிநாங்கராம்போ நிதி: ம்ருகாதிப த்ருதாஸநம் ஸுரவிமாந நாகாலயம் மணிப்ரசய வந்நிநாம் ஸஹ விலோஹிதம் மங்களம்." என்று ஸ்வப் நஸ்தவத்தில் கூறியுளது, ஆங்கு கண்டு கொள்க. |
ஜந்மாபிஷேக கல்யாண வர்ணநம்
சைத்ரஸித பக்ஷ பால்குநி சசாங்க யோகே திநே த்ரயோதச்யாம் ஜஜ்ஞே ஸ்வொச்சஸ் தேஷு க்ருஹேஷு ஸௌம்யேஷு சுப லக்நே. 259 |
|
(இதி கர்ப்பஸ்தித பகவாந்) சைத்ரஸித பக்ஷபால்குநி சசாங்க யோகே திநே த்ரயோ தச்யாம் ஸௌம்யேஷு க்ரஹேஷு, ஸ்வ உச்சஸ் தேஷு சுபக்லநே ஜஜ்ஞே | (மேற்கூறியவாறு கர்ப்பத்திலடைந்திருக்கிற) வீரஜிநர், சித்திரை மாதத்து சுக்கில பக்ஷத்தில் பூரம் உத்திரம் என்ற நக்ஷத்திரங்களின் மையத்தில், சந்திரன் அடைகின்ற காலத்தில் திரயோதசி திதியில், சூரியன் முதலிய சுப கிரகங்கள் தங்கள் தங்களுக்கு உரிய வீட்டில் உச்சமாக இருக்கும் நன்னாளில் (நன் முகூர்த்தத்தில்), பிறந்தார். |
அஜம் - மேஷச் சூரியன், வ்ருஷப - ரிஷபச் சந்திரன், ம்ருக - விருச்சிக அங்காரகன், அங்கநா - கந்யா புதன், குலீராகா: - கடகக் குரு, ஜஷ - மீனச் சுக்கிரன், வணிஜௌ - துலா சனி என்பன உச்ச க்ரஹம் எனப்படும்.
"அஜ வ்ருஷப ம்ருகாsங்கநா குலீராகா ஜஷ வணிஜௌ திவாக ராதி துங்கா " என்பதறிக. |
ஹஸ்தாச்ரிதே சசாங்கே சைத்ர ஜ்யோத்ஸ்நே சதுர்தசி திவஸே பூர்வாஹ்ணே ரத்ந கடை : விபுதேந்த்ராச் சக்ரு ரபிஷேகம். 260 | |
சைத்ர ஜ்யோத்ஸ்நே சதுர்த்தசி திவஸே சசாங்கே ஹஸ்த ஆச்ரிதே ஸதி பூர்வாஹ்ணே விபுதேந்த்ரா : ரத்ந கடை : அபிஷேகம் சக்ரு : | சித்திரை மாத சுக்கில பக்ஷ சதுர்த்தசியில், சந்திரன் அஸ்த நக்ஷத்திரத்திலடைந்த சமயத்தில் காலையில், கற்பத்து அமரர் தலைவனான சௌதர்மேந்திரன், ஈசான இந்திரன் ஆகிய இருவரும், ஏனைய தேவர்களால் கொண்டுவரப்பட்ட ரத்தினகடங்களில் நிறைந்த பாற்கடல் நீரால் ; ஜிநபாலனாகிய *மகாவீரருக்கு, மேரு மலையின் மேலுள்ள பாண்டுக சிலை மண்டபத்தில் ஜன்மாபிஷேக (கல்யாண) த்தைச் செய்தார்கள். |
-------------------- |
பரிநிஷ்க்ரமண கல்யாண வர்ணநம்.
புக்த்வா குமார காலே த்ரிம்சத் வர்ஷாண்யநந்த குணராசி: அ மரோப நீத போகாந் ஸஹஸாபிநி போதிதேந்யேத்யு: 261 நாநாவித ரூப சிதாம் விசித்ர கூடோர்ச்சிதாம் மணி விபூஷாம் சந்த்ர ப்ரபாக்ய சிபிகாம் ஆருஹ்ய புராத் விநிஷ்க்ராந்த: 262 மார்க்கசிர க்ருஷ்ண தசமி ஹஸ்தோத்தர மத்யமாச்ரிதே ஸோமே ஷஷ்டேந த்வபராண்ணே பக்தேந ஜிந ப்ரவ வ்ராஜ. 263 |
|
அநந்த குண ராசி :
குமார காலே
த்ரிம்ஸத் வர்ஷாணி
அமர உபநீத
போகாந் புக்த்வா
அந்யேத்யு: ஸஹஸா
அபிநி போதித:
நாநாவித ரூப சிதாம் விசித்ர கூட உர்ச்சிதாம் மணி விபூஷாம் சந்த்ர ப்ரப ஆக்ய சிபிகாம் ஆருஹ்ய புராத் விநிஷ்க்ராந்த: மார்க்க சிர க்ருஷ்ண தசமி ஸோமே ஹஸ்த உத்தர மத்யம ஆச்ரிதேஸதி அபராண்ணே ஷஷ்டேந அபக்தேந ஜிந: ப்ரவவ்ராஜ |
முடிவிலா நற்குணங்களையுடைய பகவான் மகாவீரர் குமார காலத்தில், முப்பது ஆண்டு வரையில் இடைவிடாமல் தேவர்களால் கொண்டு வரப்பட்ட அணி, ஆடை, மாலை முதலிய போகப் பொருள்களை அனுபவித்து வருகின்றபோது ; ஓர் நாள் தனக்கு ஏற்பட்ட பவஸ்ம்ருதி என்னும் முற்பிறவியில் நடந்தவற்றை அறியும் அவதி ஞானத்தால், தான் (முன்னர்) சிம்மமாயிருந்ததைக் கண்டு, கண்டவுடனே இல்லற இன்பத்தில் வெறுப்பு கொண்ட பகவான், லௌகாந்திக தேவர்களால் போதனை மூலம் எச்சரிக்கப் பட்டவராய் ; பலவகையான சித்திர வேலைப்பாடமைந்த உருவமுடன் விசித்திரமும் உன்னதமுமான சிகர முடையதும், நவமணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான சந்த்ர ப்ரபை என்ற பல்லக்கில் ஏறி அமர்ந்து, குண்டல புரத்தினின்றும் வெளிப் போந்து வனமடைந்து, மார்கழி மாத க்ருஷ்ண பக்ஷ தசமியில் சந்திரன், அஸ்தம் உத்திரம் என்ற இரண்டு நக்ஷத்திரத்தின் மையத்தை அடைந்த மாலைக் காலத்தில் ஆறுபொழுதுடைய இரண்டு நாள் உபவாச விரதத்தை மேற்கொண்ட பகவான் விதிப்படி துறவு பூண்டார். எனவே, தீக்ஷா கல்யாணத்தை தேவர்களால் இயற்றப் பெற்று முனிவரானார்.
|
பால்யம், கௌமாரம், யௌவனம் மூன்றும் சேர்ந்தது குமார காலம் எனப்படும். " கால அத்வநோ: அத்யந்த ஸம்யோகே " என்பது நியாயம். அதாவது, கால வாசகம், அத்வ வாசகம் ஆகிய இரண்டுக்கும் இடைவிடாமல் என்ற பொருள் (அர்த்தம்) தோன்றினால் சப்தமிக்கு த்விதியா விபக்திவரும். (அத்வம் - வழி) எனவே, ஈண்டு வர்ஷாணி என்பதுக்கு இடைவிடாமல் என்ற பதம் சேர்க்கப்பட்டது. உர்ச்சிதம் - உயர்ந்ததான. ப்ரவ்ருஜ்யா - ப்ரக்ருஷேணவ்ரஜதி, வ்ரஜகதௌ - கமனம் என்பது நியாயம். அதாவது, ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் செல்பவர் முனிவர் ஆதலின், அவர்களின் துறவுக்கு ' ப்ரவ வ்ராஜ ' என்றார்.
உத்தம சிராவகன் உணவு கொள்ள வேண்டிய முறை ; ஒரு நாளைக்கு ஒருவேளை உணவும், ஒருவேளை தின்பண்டமும் ஆக இரண்டு வேளையாகும். அவன் துறவு மேற்கொள்ளும் தினத்திற்கு முந்தினநாள் (பூர்வ சேர்வையில்) ஒருவேளை மட்டும் உணவு கொள்ளவேண்டும் ; உபவாசத்துக்கு மறுநாளும் (பாரனையிலும்) ஒரு பொழுது உண்ண வேண்டும். ஆகவே, இரண்டு நாள் உபவாசத்துக்கு நான்கு வேளை, முன்னும் பின்னும் இரண்டுவேளை ஆக ஆறு பொழுதுடைய இரண்டுநாள் உபவாசத்துக்கு " ஷஷ்டேந அபக்தேந " என்றார்.
" ஸமுத்பந்ந மஹாபோதி: ஸ்ம்ருத பூர்வ பவாந்தர :
லௌகாந்தி காsமரை ; ப்ராப்ய ப்ரஸ்துத ஸ்துதிபி: ஸ்துத: " 297
" ஸிம்மேநைவ மயாப்ராப்தம் வநே முநிவதாத் வ்ரதம்
மத்வே வேத்யே கதாம் தத்ர ஸைந்ஹீம் வ்ருத்திம் ஸமாபஸ: " 315
என்று மகாபுராண உத்தர புராணத்தில் (வர்த்தமான புராணத்தில்) கூறியிருப்பதைக் கொண்டு ஈண்டு, உரை வகுக்கப்பட்டது.
|
கேவல
ஞான கல்யாண வர்ணநம்
க்ராம புர கேட கர்வட மடம்ப கோஷா கராந் ப்ரவிஜஹார உக்ரைஸ் தபோ விதாநை: த்வாதச வர்ஷாண்யமர பூஜ்ய: - 264 |
|
அத அமர பூஜ்ய: உக்ரை: தபோ- விதாநை: க்ராம புர கேட கர்வட மடம்ப கோஷ ஆகராந் த்வாதச வர்ஷாணி ப்ரவிஜ ஹார | அதன்பிறகு, தேவர்களால் பூஜிக்கப்பட்டவரான மகாவீர முனிவர், தவத்தில் நிகழும் முறைப்படியே, வேலியினால் சூழப்பட்ட கிராமங்களிலும், கோட்டை, மதில், அகழ் முதலியனவுடைய நகரங்களிலும், ஆற்றினால் சூழப்பட்ட கேடங்களிலும், மலைகளினால் சூழப்பட்ட கர்வடங்களிலும், ஐந்நூறு கிராமங்களுக்குத் தலைநகரான மடம்பங்களிலும், இடைச் சேரியிலும், சிறந்த நவமணிகள் உற்பத்தியாகும் ஆகரங்களிலும், பன்னிரண்டு ஆண்டுகள் வரை சஞ்சரித்தார். |
--------------------- |
ருஜுகூலாயாஸ்தீரே சாலத்ரும
ஸம்ச்ரிதே சிலாபட்டே அபராண்ணே ஷஷ்டேந ஸ்திதஸ்ய கலு ஜ்ரும்பிகா க்ராமே. – 265 வைசாகஸித தசம்யாம் ஹஸ்தோத்தர மத்யாமாச்ரிதே சந்த்ரே க்ஷபக ச்ரேண்யா ரூட ஸ்யோத்பந்நம் கேவல ஜ்ஞாநம். - 266 |
|
ருஜுகூலாயா: தீரே
ஜ்ரும்பிகா க்ராமே
சாலத்ருமஸம்ச்ரிதே
சிலாபட்டே
ஷஷ்டேந ஸ்திதஸ்ய
க்ஷபக ச்ரேணி
ஆரூடஸ்ய
வைசாக- ஸித தசம்யாம் அபராண்ணே சந்த்ரே ஹஸ்த உத்தர மத்யம ஆச்ரிதேஸதி கலு, கேவல ஜ்ஞாநம் உத்பந்நம் |
ருஜுகூலம் என்கிற ஆற்றின் கரையில் ஜ்ரும்பிக மென்கிற கிராமத்தில் குங்கிலிய மரத்தின் கீழ் உள்ள கற்பாறையின் மேல், ஆறுபொழுதுடைய இரண்டு நாள் உபவாசத்தோடு கூடி, குணஸ்தான வரிசையில் க்ஷபகசிரேணியில் ஏறி (அனிவ்ருத்திகரண குணஸ்தானத்தில் காதி) வினைகளை வென்றிருக்கிற மகாவீர முனிவருக்கு, வைகாசி மாத சுக்லபக்ஷ தசமியில், மாலையில் சந்திரன் ஹஸ்தம் உத்திரம் என்ற நக்ஷத்திரங்களின் மையத்தில் அடைந்தபோது, அறிஞர்களால் உடன்படப்பட்ட கேவலஞானம் உதயமாகி (விளங்கி)யது. |
------------------- |
அத பகவாந் ஸம்ப்ராபத்
திவ்யம் வைபார பர்வதம் ரம்யம் சாதுர் வர்ண்யஸு ஸங்கஸ் தத்ராபூத் கௌதம ப்ரப்ருதி. - 267 |
|
அத பகவாந் ரம்யம் திவ்யம்வைபாரபர்வ- தம் ஸம்ப்ராபத் தத்ர கௌதம ப்ரப்ருதி சாதுர் வர்ண்ய ஸு ஸங்க: அபூத் | பிறகு மகாவீர பகவான், மனோஹரமானதும், திவ்வியமுமான வைபார பர்வத்தை அடைந்தார். அவ்விடத்தில் கௌதம கணதரர் முதலான யதிகள், ஆர்யாங்கனைகள் , சிராவகர் (சாவகர்), சிராவகியர் ஆகியோருடைய கூட்டம் ஒருங்கு கூடியது. |
---------------------- |
சத்ராசோகௌ கோஷம்
ஸிம்ஹாஸந துந்துபீ குஸும வ்ருஷ்டிம் வர சாமர பாமண்டல திவ்யாந்யந்யாநி சாவாபத். - 268 |
|
ஏவம்ஸ்தித: பகவாந் சத்ர அசோகௌ கோஷம்ஸிம்ஹாஸந துந்துபீ குஸும வ்ருஷ்டிம், வரசாமர பாமண்டலதிவ்யாநி அந்யாநிச அவாபத் | இவ வண்ணம் சங்கமுடன் கூடிய பகவான், முக்குடை, அசோக தரு, திவ்வியத்வனி, சிம்மாஸனம், தேவ துந்துபி, பூமாரி இவைகளையும், சிறந்த சாமரை, ப்ரபாமண்டலம், ஆகியவற்றுடன் ஏனைய திவ்வியத் தன்மை வாய்ந்த தெய்வீக அதிசயம் முதலான சிறப்பையும் அடைந்தார். |
--------------------- |
தசவித மநகாராணா மேகாதசதா
ததேதரம் தர்மம் தேசயமாநோ வ்யஹரத் த்ரிம்சத் வர்ஷாண்யத ஜிநேந்த்ர: 269 |
|
அத ஜிநேந்த்ர: அநகாராணாம் தசவிதம் தர்மம் ததா ஏகாதசதா தத் இதரம் தர்மம் தேசயமாந : த்ரிம்சத் வர்ஷாணி வ்யஹரத் | அதன் பிறகு பகவான், யதிகளுக்கு யோக்கியமான உத்தம க்ஷமை முதலிய பத்து தர்மங்களையும், அவ்வாறே, தர்சனீகன் முதலான பதினோரு வகை சிராவக தர்மங்களையும், உபதேசம் செய்பவராகி, இவ்வண்ணம் முப்பது ஆண்டு வரை இடைவிடாமல் அறம் போதித்து, எவ்விடங்களிலும் சமவசரணமுடன் விசேஷமாகச் சஞ்சரித்தார். |
------------------ |
பத்மவந தீர்க்கிகாயாம்
விவித தரும் ஷண்ட மண்டிதே ரம்யே
பாவா நகரோத்யாநே
வ்யுத்ஸர்க்கேண ஸ்திதஸ்ஸமுநி: - 271
கார்த்திக க்ருஷ்ண ஸ்யாந்தே
ஸ்வாதாவ்ருக்ஷே நிஹத்யகர்ம ரஜ:
அவசேஷம்ஸம் ப்ராபத் வ்யஜராமர
மக்ஷயம் ஸௌக்யம். - 270
|
|
அத பகவாந் விவித த்ரும ஷண்ட மண்டிதே ரம்யே பாவா நகர உத்யாநே பத்மவந தீர்க்கிகாயாம் ஸ முநி: வ்யுத்ஸர்க்கேண ஸ்தித: கார்த்திக க்ருஷ்ணஸ்ய அந்தே ஸ்வாதௌ ருக்ஷே அவசேஷம் கர்ம ரஜ: நிஹத்ய வ்யஜராமரம் அக்ஷயம் ஸௌக்யம் ஸம்ப்ராபத் | அதன்பிறகு மகாவீர பகவான், பலவகை மரங்களின் சமூகத்தால் வளம் பெற்று அலங்காரமான, அழகதிசயம் பெற்ற பாவாபுரி என்னும் நகரத்தைச் சூழ்ந்துள்ள ஷண்டம் என்னும் உத்யான வனத்தின் மையத்திலுள்ள, தாமரை நிறைந்திருப்பதனால் பத்மவன சரோவரம் என்று பெயர் பெற்ற தடாக மையத்தின் கற்பாறையில், மற்றும் சில முனிவர்களுடன் பரமதியானத்துக்கு உரிய காயோத் ஸர்க்கமாக நின்று, *கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷத்தின் முடிவில், ஸ்வாதி நக்ஷத்திரத்தில் முன் கெடாதிருந்த அகாதி கர்மங்கள் நான்கையும் (நாசம் செய்து) கெடுத்து, மூப்பு இறப்பு இல்லாததும், என்றும் அழியாததுமான அனந்த சுகத்தை அடைந்து சித்தரானார். (முக்தியடைந்தார்). |
ஸ்வாதௌ வ்ருக்ஷே என்பது, சந்தியால் ஔ,ஆ ஆகி ஸ்வாதா வ்ருக்ஷே என்றாயிற்று. வி+அ+ஜரா+மரம் - வ்யஜரா மரம் என்றாயிற்று. வி- விசேஷமாக, அ- அல்லாத, ஜரா- மூப்பு, மரம்- மரணம். (அமரன் - மத்தியில் மரணமில்லாதவன் என்பதறிக.) ஸம்+ ப்ரா+ஆபத் - ஸம்ப்ராபத். ஆபத் - அடைதல். |
பரிநிர்வ்ருதம் ஜிநேந்த்ரம்
ஜ்ஞாத்வா விபுதாஹ்யதாசு சாகம்ய தேவதரு ரக்த சந்தந காலாகரு ஸுரபி கோசீர்ஷை: 272 அக்நீந்த்ராஜ் ஜிநதேஹம் முகுடாநல ஸுரபிதூப வரமால்யை: அப்யர்ச்ய கணதராநபி கதாதிவம் கஞ்ச வந பவநே. 273 |
|
அத விபுதா:
ஜிநேந்த்ரம்
பரிநிர்வ்ருதம்
ஜ்ஞாத்வா ஆசு ச
ஆகம்ய
ஜிந்தேஹம்
தேவதரு ரக்த சந்தந
கால அகுரு
ஸுரபி கோ சீர்ஷை:
அக்நிஇந்த்ராத்முகுட அநல ஸுரபிதூபம் வரமால்யை: அப்யர்ச்ய கணதராந் அபி அப்யர்ச்ய திவம் கம் வந பவநே கதா: |
பிறகு நான்கு வகை தேவர்களும், மகாவீர பகவான் முக்தி அடைந்தார் என்று, தத்தம் அவதி ஞானத்தால் அறிந்து, அவ்விடத்தே விரைந்து வந்து பகவானைப் போன்ற ஓர் உருவத்தை நிருமித்து; அதனை, தேவதாரு, செஞ்சந்தனம், கருத்த அகில், வாசனைமிக்க கோசீர்ஷம் ஆகிய வாசனையுள்ள சந்தனக் கட்டைகளாலும், அக்கினி குமாரனின் மகுடத்தினின்றும் உண்டான நெருப்புப் பொறியினாலும், வாசனை மிக்க தூபங்களாலும், சிறந்த மாலைகளினாலும், அர்ச்சித்து தகனம் செய்து; கணதர பரமேஷ்டிகளையும் எண்வகைப் பொருள்களால் அர்ச்சித்து வணங்கி, கற்ப அமரர்கள் தேவலோகத்தையும், ஜோதிஷ்க தேவர்கள் ஆகாசத்தையும், வியந்தர தேவர்கள் தேவாரண்யம் முதலான வனத்திலுள்ள வியந்தர லோகத்தையும், பவண தேவர்கள் பவணர் உலகத்தையும் அடைந்தார்கள். |
------------------------- |
இத்யேவம் பகவதி வர்த்தமாந சந்த்ரேய: ஸ்தோத்ரம் படதி ஸுஸந்த்யயோ: த்வயோர்ஹி
ஸோsநந்தம் பரமஸுகம் ந்ருதேவ லோகே புக்த்வாந்தே சிவபத மக்ஷயம் ப்ரயாதி. 274
|
|
இதி ஏவம் பகவதி வர்த்தமாந சந்த்ரே ஸ்தோத்ரம் ய: ஸுஸந்த்யயோ: த்வயோர்ஹி படதி ஸ: ந்ருதேவலோகே பரமஸுகம் புக்த்வா, அந்தே அநந்தம் அக்ஷயம் சிவபதம் ப்ரயாதி | இவ்வண்ணம் பகவான் மகாவீரர் முதலான தீர்த்தங்கரர்களைத் துதிக்கும் பரிநிர்வாணக் கிரியையை எவன் ஒருவன், காலையிலும், மாலையிலும் சிறந்த பக்தியுடன் படிக்கின்றானோ அவன், இம்மானிடர் அனுபவிக்கும் இன்பங்களில் சிறந்தவற்றையும், மறுபிறவியில் தேவனாகப் பிறந்து அனுபவிக்கும் தேவ இன்பத்தையும் அனுபவித்துக் கடைசியில் (பிறவி முடிவில்), அனந்தமானதும், என்றும் அழிவில்லாததும் ஆகிய இன்ப காரணமான முக்தியைத் தவறாமல் அடைவான். |
--------------------- |
யத்ரார்ஹதாம் கணப்ருதாம் ச்ருத பாரகாணாம் நிர்வாண பூமிரிஹபாரத வர்ஷஜாநாம் தாமத்ய சுத்தமநஸா க்ரியயா வசோபி: ஸம்ஸ்தோது முத்யதமதி: பரிணௌமி பக்த்யா. - 275 |
|
இஹ பாரத வர்ஷ ஜாநாம் அர்ஹதாம் ச்ருத பாரகாணாம் கணப்ருதாம் (ஏதேஷாம்) நிர்வாணபூமி: யதர தாம் அஹம் அத்ய சுத்த மநஸா க்ரியயா வசோபி: ஸம்ஸ்தோதும் உத்யதமதி: பக்த்யா பரிணௌமி | ஜம்பூத்வீப பரதகண்டத்தில் தோன்றி(அறம் கூறி)ய தீர்த்தங்கரர் முதலான அருகத் பரமேஷ்டிகள், கணதர பரமேஷ்டிகள் ஆகியோர், கர்மக்ஷயம் செய்து முக்தியடைந்த இடம், எங்கெங்கு உண்டோ, அவ்விடங்களை யெல்லாம் யான் இப்பொழுது பரிசுத்தமான மனத்தாலும், அமைதியான வசனத்தாலும், வணங்கும் முறையாகிய செயல்களாலும், நன்முறையில் துதிப்பதற்கு முயற்சியுள்ள உள்ளம் உடையவனாகி, பக்தி பரிணாமத்துடன் துதித்து வணங்குகின்றேன். |
------------------- |
கைலாஸ சைல சிகரே பரிநிர்வ்ருதோsஸௌ சைலேசி பாவமுபபத்ய வ்ருஷோ மஹாத்மா
சம்பாபுரே ச வஸுபூஜ்ய ஸுதஸ் ஸுதீமாந் ஸித்திம் பராமுபகதோ கதராக பந்த: - 276
|
|
அஸௌ மஹாத்மா வ்ருஷ: சைலேசி பாவம் உப பத்ய கைலாஸ சைலசிகரே பரிநிர்வ்ருத: அபூத் ஸு தீமாந் கதராக பந்த: வசுபூஜ்ய ஸுத: பராம்ஸித்திம் சம்பாபுரே உபகத: | இந்த (அவஸர்ப்பிணியில் முதன் முதல் அறம் பாலித்த) மகாத்மாவான விருஷப தேவர் (ஆதிபகவன்), சீலம் முதலான ஆசாரத்தை யாவரும் அறியத் தோற்றுவித்துத் தானும் மேற்கொண்டிருக்கும் தன்மையை அடைந்து, கைலாசகிரியில் பரிநிர்வாணமடைந்தார். மதி சுருத அவதிஜ்ஞானத்தோடு பிறந்தவரும், ராகத்வேஷ மோகங்களை விட்டவரும், வசுபூஜ்ய மகாராஜன் புதல்வருமான, 'வாசுபூஜ்யர்' பகவான் கர்மக்ஷயம் செய்து அடையும் முக்தியை சம்பாபுரத்தி(ன் அருகி)ல் அடைந்தார். |
" சம்பாபுரவர வாலுகா நதி அக்ரமந்தர பர்வத சிகரஸ்தித மோக்ஷகத வாஸுபூஜ்ய ஜிநதேவ " என்று அர்ச்சிப்பதனாலும், சம்பாபுரத்தின் அருகில் என்று அறியலாகும். அது மந்தாரகிரி என வழங்குகிறது. |
யத் ப்ரார்த்த்யதே சிவஸுகம் விபுதேச்வ ராத்யை: பாஷண்டி பிச்ச பரமார்த்தக வேஷ சீலை: நஷ்டாஷ்ட்ட கர்ம ஸமயே ததரிஷ்ட்ட நேமி: ஸம்ப்ராப்தவாந் க்ஷிதிதரே ப்ரஹதூர்ஜ்ஜயந்தே. 277 |
|
விபுதேச்வர ஆத்யை: பரம அர்த்த கவேஷ சீலை: பாஷண்டிபி: ச யத் ப்ரார்த்யதே தத் அரிஷ்டநேமி : நஷ்ட- அஷ்டகர்ம ஸமயே ப்ரஹத் ஊர்ஜ்ஜயந்தே க்ஷிதிதரே சிவஸுகம் ஸம் ப்ராப்தவாந் | தேவேந்திரன் முதலானவர்களாலும் சிறந்த தத்துவப் பொருளைத் தேடுகின்ற சீல ஸ்வபாவத்தை மேற்கொண்ட பாஷண்டி தபஸ்விகளாலும், எந்த முக்தியின்பம் வேண்டப்படுகிறதோ; அந்த முக்தியின்பத்தை, வினைகளை வென்று அடைபவரான நேமி பகவான், எண்வினைகளும் கெடுகின்ற சமயமான அயோகி குணஸ்தானத்தின் அந்திய சமயத்தில், உன்னதமான ஊர்ஜ்ஜயந்தகிரியின் உச்சியில் முக்தி அடைந்தார். |
----------------- |
பாவாபுரஸ்ய பஹிருந்நத பூமிதேசே பத்மோத்பலா குலவதாம் ஸரஸாம் ஹி மத்த்யே ஸ்ரீ வர்த்தமாந ஜிநதேவ இதி ப்ரதீதோ நிர்வாணமாப பகவா நவதூத பாப்மா. 278 |
|
ஸ்ரீ வர்த்தமாந: இதி ப்ரதீத: ஜிந்தேவ: அவதூத பாப்மா பாவா புரஸ்ய பஹி: பத்ம உத்பலா ஆகுலவதாம் ஸரஸாம் மத்யே உந்நத பூமி தேசே நிர்வாணம் ஆப | வர்த்தமானர் என்று புகழப்பெற்ற பகவான் மகாவீரர், எண் வினைகளையும் கெடுத்தவராகி, பாவாபுரத்தினுடைய அருகில் உள்ள தாமரை நெய்தல் முதலிய மலர்கள் நிறைந்த தடாக மத்தியில் நீர் மட்டத்துக்கு மேலே ஓரளவு உயர்ந்து, விசாலமாகவுள்ள கற்பாறையில் (பவ்வியர்கள் அனைவரும் விரும்பத்தக்க) முக்தியை அடைந்தார். |
--------------------- |
சேஷாஸ்து தே ஜிநவரா: ஜிதமோஹ மல்லா:
ஜ்ஞாநார்க்க பூரிகிரணை ரவபாஸ்ய லோகாந் ஸ்தாநம் பரம் நிரவதாரித ஸௌக்ய நிஷ்ட்டம் ஸம்மேத பர்வத தலே ஸமவாபு ரீசா: 279 |
|
ஜித மோஹ மல்லா: ஈசா: சேஷா: தே ஜிநவரா: ஞாந அர்க்க பூரி கிரணை: லோகாந் அவபாஸ்ய ஸம்மேத பர்வததலே நிரவதாரித ஸௌக்ய நிஷ்டம் பரம் ஸ்தாநம் ஸமவாபு: | மோகனீயம் முதலான வலிய வினைப் பகைவர்களை வென்றவர்களும், மூவுலக நாதர்களுமான அஜிதர் முதலான இருபது தீர்த்தங்கரர்களும், கேவலஞானமென்கிற சூரியனுடைய மாபெரும் ஒளியால், உலக மக்களின் அஞ்ஞானமாகிற இருளைப் போக்கி, நன்மார்க்கத்தை விளங்கச் செய்து, ஸம்மேதகிரியின் தாழ்வரை, உச்சி முதலிய இடங்களில், (இத்தகைய பெருமை உடையதென்று) வருணித்துக் கூற இயலாத பரம ஆனந்தமயமான இன்பத்துக்கு இருப்பிடமான முக்தியை அடைந்தார்கள். |
நிலைத்து நிற்கும் இடத்துக்கு, நிஷ்டம் என்றார். |
ஆத்யச் சதுர்தச திநை: விநிவ்ருத்த யோக:
ஷஷ்டேந நிஷ்ட்டித க்ருதி: ஜிநவர்த்தமாந: சேஷா விதூத கநகர்ம நிபத்த பாசா: மாஸேந தேயதிவராஸ் த்வபவந் வியோகா: 280 |
|
ஆத்ய: சதுர்தச திநை: விநி வ்ருத்த யோக: அபூத் ஜிந வர்த்தமாந ஷஷ்டேந நிஷ்டிதக்ருதி: அபூத் சேஷா: து தே யதிவரா: விதூத கந கர்ம நிபத்த பாசா: மாஸேந வியோகா: அபவந் | ஆதிபகவான் (விருஷபதேவர்) தான் முக்தியடைவதற்கு முன், பதினான்கு நாள் முன்னதாகவே (திரவிய) மன வசன காயத்தை விட்டவரானார் ; மகாவீரர் நிர்வாணமடைவதற்கு இரண்டு நாள் முன்னதாக (மேற்கூறியவாறு) யோகத்தை விலக்கினார் ; மற்ற இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களும் கர்மங்களென்னும் கயிற்றினால் வலிவாகக் கட்டப்பட்டிருப்பதனை விடுவித்துக் கொண்டவர்களாய் முக்தியடைவதற்கு ஒரு மாதம் முன்னதாக யோகத்தைத் தடை செய்தவர்களானார்கள். |
முனிவர்கள் முக்தி அடையும்போது இதரமான எவ்வித வியாபாரமும் இல்லாதவர்களாய், மன வசன காயத்தை அடக்கி ஏகாக்ர சிந்தையிலிருந்து, அகாதி கர்மங்களைக் கெடுத்தல் இயல்பு. ஆகவே, ஆதிபகவன் பதினான்கு நாளும், மகாவீரர் இரண்டு நாளும், ஏனையோர் ஒரு மாதமும் உண்டென்னும் அளவில் யோகத்தை நிரோதம் (தடை) செய்தனர் என்க. மகாவீரருக்கு ஆறுநாள் என்று கூறுவாருமுளர். ஈண்டு, யோகம் என்பது, மனம், வசனம், காயம். அவை திரவிய, பாவமென இரண்டாக விரியும். அவற்றுள் திரவிய மன வசன காயத்தை அடக்குவதனையே ஈண்டு கூறினார். என்னை யெனில்? மோகனீயத்தை வென்ற அருகத் பரமேஷ்டி இனி தியானிக்க வேண்டிய ப்ரமேயம் இல்லையாதலின் என்க. |
மால்யாநி வாக் ஸ்துதிமயை: குஸுமை: ஸுத்ருப்தா
ந்யாதாய மாநஸகரை ரபித: கிரந்த: பர்மேய ஆத்ருதியுதா பகவந் நிஷத்யா: ஸம்ப்ரார்த்திதா வயமிமே பரமாம் கதிம் தாம். 281 |
|
வாக் ஸ்துதி மயை: குஸுமை: ஸுத்ருப்தாநி மால்யாநி மாநஸகரை: ஆதாய பகவந் நிஷத்யா: அபித: கிரந்த: இமே வயம் தாம் பரமாம் கதிம் ஸம்ப்ரார்த்திதா: ஆத்ருதியுதா: பகவந் நிஷத்யா: பர்யேம: | வசன ரூபமான தோத்திரங்களென்கிற மலர்களால், நன்முறையில் தொகுத்துக் கட்டப்பட்டிருக்கிற நற்பாமாலைகளை, மனமென்னும் கைகளால் எடுத்துக்கொண்டு, பகவந்தன் நிர்வாணமடைந்த இடங்கள் எங்கும் சூழ்ந்து (சிதறாநின்ற) தூவுகின்ற இந்த (துதிபாடும்) யாங்கள், அத்தகைய மோக்ஷகதியை பெற வேண்டுபவர்களாய் மிக்க விருப்பமுடன் (ஆதரவுடன்) கூடி பகவன் நிர்வாணமடைந்த க்ஷேத்திரங்களை வலம் வருகின்றோம். |
------------------- |
சத்ருஞ்ஜயே நகவரே தமிதாரி பக்ஷா:
பண்டோஸ்ஸுதா: பரம நிர்வ்ருதி மப்யுபேதா:
துங்க்யாந்து ஸங்கரஹிதோ: பலபத்ர நாமா நத்யாஸ்தடே ஜிதரிபுச்ச ஸுவர்ண பத்ர: 282 |
|
தமிதாரி பக்ஷா: பண்டோ: ஸுதா: சத்ருஞ்ஜயே நகவரே பரம நிர்வ்ருதிம் அபி உப இதா: துங்க்யாம் து ஸங்க ரஹித: பலபத்ர நாமா பரம நிர்வ்ருதிம் அப்யுபேத: நத்யாஸ்தடே ஜிதரிபு: ஸுவர்ணபத்ர: பரி நிர்வ்ருதிம் அப்யு பேத: | துரியோதனன் முதலான பகைவர்களை வென்றவர்களான, பாண்டு மன்னனின் மக்களான தருமன், பீமன், அருச்சனன் என்ற மூன்று முனிவர்களும், மலைகளில் சிறந்ததாகிய சத்ருஞ்சயகிரி யில் மேலான முக்தி(யின்பத்தை உடன்பட்டனர். எனவே முக்தி) யை அடைந்தனர். துங்கி என்ற மலையின் மேல், பற்று முதலிய பாஹ்யாப்யந்தர பரிக்ரஹங்களை விட்டுத் துறவு கொண்டவரான பலபத்ர முனிவர் முக்தி எய்தினார். அம்மலையருகே செல்லும் ஆற்றின் கரையில், வினைப் பகைவரை வென்றவரான சுவர்ண பத்ர ஸ்வாமி முக்தி யடைந்தார். |
------------------------ |
த்ரோணீ மதி ப்ரவர குண்டல மேண்ட்ர கேச
வைபார பர்வத தலே வரஸித்த கூடே
(ர்)ருஷ்யாத்ரிகேச விபுலாத்ரி பலாஹ கேச
விந்த்யே ச பௌதநபுரே வ்ருஷ தீபகேச. 283
ஸஹ்யாசலே ச ஹிமவத்யபி ஸுப்ரதிஷ்ட்டே தண்டாத்மகே கஜபதே ப்ரதுஸார யஷ்ட்டௌ யே ஸாதவோ கதமலா: ஸுகதிம் ப்ரயாதா: ஸ்தாநாநி தாநி ஜகதி ப்ரதிதாந்ய பூவந். 284 |
|
த்ரோணீமதி
ப்ரவர குண்டல
மேண்ட்ர கேச
வைபார பர்வத தலே
வர சித்த கூடே
ருஷ்யாத்ரிகேச
விபுலாத்ரி
பலாஹ கேச
விந்த்யேச
பௌதநபுரே
வ்ருஷ தீப கேச
ஸஹ்யாசலே ஹிமவதி அபி ஸுப்ரதிஷ்டே ச தண்டாத்மகே கஜபதே ப்ரதுஸார யஷ்டௌ, ச யே, ஸாதவ: கதமலா: ஸுகதிம் ப்ரயாதா: தாநி ஸ்தாநாநி ஜகதி ப்ரதி தாநி அபூவந் |
மற்றும் த்ரோணீ என்ற மலையின் மேலும், மிகச்சிறந்த குண்டலபுரத்தின் அருகிலுள்ள பாறையின் மேலும், மேண்டர கிரி என்ற முக்தாகிரி யின் மேலும், (அதன் பக்கத்தேயுள்ள ஸ்வர்ணா கிரியிலும்), வைபார பர்வதத்தின் மேலும், மேலான சித்திரகூட பர்வதத்தின் மேலும், சிரவணகிரி யின் மேலும்(ச்ரவண பெளி குளத்திலும்), விபுலாசத்திலும், பலாஹகிரியின் மேலும், பௌதனபுரத்திலும், வ்ருஷ தீபமென்கிற மலையின் மேலும், ஸஹ்யாசலம் என்ற மேற்கு மலைத்தொடரிலேயும், (இமயமலை என்ற) ஹிமவத் பர்வதத்தின் மேலும், ஸுப்ரதிஷ்ட மலையின் மேலும், தண்டாத்மகம் என்ற மலையின் மேலும், மதுரை யிலுள்ள கஜபத மென்ற யானை மலை யின் மேலும், (மிகவும் சாரமான பொருள்கள் உற்பத்தியாகும் காரணத்தினாலும், கோல்போல் உயர்ந்திருப்பதனாலும் ஆகிய) ப்ரதுஸாரயஷ்டி என்ற மலையின் மேலும், மற்றும் இவை போன்ற பல இடங்களிலும், எந்த எந்த முனிவர்கள் கர்ம மலங்கள், அகன்றவர்களாகி முக்தி அடைந்தார்களோ, அவர்கள் அடைந்த அந்த இடங்கள் இவ்வுலகில் மிகவும் பிரசித்தி பெற்ற புகழ் வாய்ந்த இடங்களாக விளங்குகின்றன. |
(பலாகம் - மேகம்) "ச்ரமணா வாதவசநா: " நிகண்டு ச்ரமணர் காற்றை வஸ்திரமாகவுடையவர், திகம்பரர். * ச்ரவணம் ச்ரமணம் என்பதன் மரூஉ. வால்மீகி ராமாயண பாலகாண்டத்தில் தசரதன் புத்ரகாமேஷ்டியாகம் செய்தபோது (யாக உணவை தாபஸரும் ச்ரமணரும் உண்டனர்) ச்ரமணாச்சைவ புஞ்ஜதே - சிரமணரும் உண்டனர். " தாபஸா புஞ்ஜதே சாபி, ச்ரமணா புஞ்ஜதே ததா, சதுர்த்தம் ஆச்ரமம் ப்ராப்தா: ச்ரமணா நாம தே மதா" என்று கூறியுளது. |
இக்ஷோர் விகார ரஸப்ருக்த குணேந லோகே
பிஷ்ட்டோ திகம் மதுரதாமுபயாதி யத்வத் தத்வச்ச புண்ய புருஷை ருஷிதாநி நித்யம் ஸ்தாநாநி தாநி ஜகதாமிஹ பாவநாநி. - 285 |
|
லோகே பிஷ்ட: இக்ஷோ: விகார ரஸப்ருத்த குணே ந அதிகம் மதுரதாம் யத்வத் உபயாதி தத்வத் புண்ய புருஷை: உஷிதாநி தாநி ஸ்தாநாநி, இஹ ஜகதாம் நித்யம் ஸந்தி பாவநாநி | இவ்வுலகில், அரிசியின் மா, கருப்பங் கழியினின்றும் பிழிந்தெடுத்த (கருப்பஞ்) சாற்றில் தயாரித்த வெல்லத்துடன் சேர்ந்த தன்மையால் இனிமை அதிகமாகும் தித்திப்பை அடைகின்றது. அது எவ்வாறோ, அவ்வாறே புண்ணிய புருஷர்கள் தங்கி முக்தி யடையப்பட்ட அந்த இடங்கள் ; இவ்வுலக மக்களுக்கு எப்பொழுதும் பரிசுத்தமும் புண்ணிய காரணமுமாக நிலைத்திருக்கின்றன. |
----------------- |
இத்யர்ஹதாம் சமவதாம் ச மஹாமுநீநாம்
ப்ரோக்தா மயாத்ர பரிநிர்வ்ருதி பூமிதேசா: தேமே ஜிநா: ஜிதபயா முநயச்ச சாந்தா: திச்யாஸுழாசுஸு கதிம் நிரவத்ய ஸௌக்யாம். 286 |
|
அத்ர இதி அர்ஹதாம் சமவதாம் மஹா முநீநாம் பரிநிர்வ்ருதி பூமிதேசா: மயா ப்ரோக்தா: தேஜிநா: ஜிதபயா: சாந்தா: முநய: ச மே நிரவத்ய ஸௌக்யாம் ஸுகதிம் ஆசு திச்யாஸு: | இவ்விடத்தில், இவ்வண்ணம் இருபத்துநான்கு தீர்த்தங்கரர், பரம சாந்தியடைந்த ஏனைய முனிவர்கள், கணதரர் முதலான மகா யதிகள் ஆகியோர் நிர்வாணமடைந்த தேசங்களும், மலைகளும் என்னால் கூறப்பட்டன. அரஹந்தப் பதவியடைந்த அந்த ஜிநர்களும், எவ்வித பயமுமின்றி பரம சாந்தியடைந்த கணதரர் முதலிய முனிவர் கூட்டங்களும், எனக்குக் குற்றங் குறையில்லாத இன்பமுடைய நிர்வாணத்தை (முக்தி யின்பத்தை) சீக்கிரம் அளிக்கட்டும். |
--------------------- |
கைலாஸாத்ரௌ முநீந்த்ர: புருரப துரிதோ
முக்திமாப ப்ரணூத: சம்பாயாம் வாஸுபூஜ்ய ஸ்த்ரிதச பதிநுதோ நேமிரப்யூர்ஜ்ஜயந்தே பாவாயாம் வர்த்தமாந ஸ்திரிபுவந குரவோ விம்சதி: ஸ்தீர்த்த நாதா: ஸம்மேதாக்ரே ப்ரஜக்மு: ததது விநமதாம் நிர்வ்ருதிம் நோ ஜிநேந்த்ரா: 287 |
|
கைலாஸாத்ரௌ முநீந்த்ர: புரு: அபதுரித: முக்திம் ஆப சம்பாயாம், ப்ரணூத: வாசு பூஜ்ய: முக்திம் ஆப ஊர்ஜ்ஜயந்தே த்ரிதச பதிநுத: நேமி: முக்திம் ஆப பாவாயாம் வர்த்தமாந: முக்திம் ஆப ஸ்த்ரிபுவந குரவ: விம்சதி தீர்த்தநாதா: ஸம்மேத அக்ரே முக்திம் ப்ரஜக்மு: தே ஜிநேந்த்ரா: விநமதாம் ந: அபி நிர்வ்ருதிம் ததது | கைலாசகிரியில், முனிநாயகரான ஆதிபகவன் விருஷபதேவர், கர்மங்களைக் கெடுத்து முக்தியடைந்தார் ; சம்பாபுரத்தில் அறிஞர்களால் புகழப்பட்ட வாசுபூஜ்யர் முக்தியடைந்தார் ; ஊர்ஜ்ஜயந்தகிரி யில் தேவேந்திரர்களால் துதிக்கப்பட்ட (அரிஷ்ட) நேமி தீர்த்தங்கரர் முக்தியடைந்தார்; பாவாபுரி யில் பவ்வியர்களால் வணங்கப்படுகின்ற மகாவீரர் முக்தியடைந்தார் ; மூவுலக நாயகர்களான அஜிதர் முதலான இருபது தீர்த்தங்கரர்களும் ஸம்மேத கிரி யின் மேல் முக்தியடைந்தார்கள். இவ்வண்ணம் முக்தியடைந்த இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களும் ; (அவர்களைத்) துதித்து வணங்குகின்ற நமக்கு அவர்களடைந்த முக்தியை அளிக்கட்டும். |
----------------- |
அட்டா வயம்மி உஸஹோ
சம்பாயே வாஸுபுஜ்ஜ ஜிணணாஹோ உஜ்ஜந்தே ணேமிஜிநோ பாவாயே நிவ்வுதோ மஹாவீரோ. 288 |
|
அட்டாவயம்மி உஸஹோ சம்பாஏ வாஸு புஜ்ஜ ஜிண- ணாஹோ உஜ்ஜந்தே நேமி ஜிநோ பாவாஏ மஹாவீரோநிவ்வுதோ | அஷ்டாபத மென்னும் கைலாசகிரியில் விருஷபரும் (ஆதி பகவனும்), சம்பாபுரத்தில் வாஸுபூஜ்ய ஜிநநாதரும், ஊர்ஜ்ஜயந்தகிரியில் நேமி ஜினரும், பாவாபுரியில் மகாவீரரும் நிர்வாணத்தை அடைந்தார்கள். |
நிர்வாணம் - அணைதல், அதாவது சரீரம் நாசமாதல், "நிர்வாணோவாதே' என்பது வியாகரண சூத்ரம். பரதசக்ரவர்த்தி குமாரன் அர்க்ககீர்த்தியால் கைலாசகிரியை எட்டு பட்டையாகச் செய்யப்பட்டதென்பது புராண வரலாறு. விவரம் ஸ்ரீ புராணத்தில் காணலாகும். ஜிநநாதர், ஜிநேந்திரர் என்பது போன்ற வாக்கியம். |
வீஸந்து ஜிணவரிந்தா
அமராஸுர வந்திதா துதகிலேஸா ஸம்மேத கிரிஸஹரே ணிவ்வாண கயா ணமோ தேஸிம். 289 |
|
அமராஸுர வந்திதா துத கிலேசா வீஸந்து ஜிணவரிந்தா ஸம்மேத கிரிஸிஹரே ணிவ்வாண கயா தேஸிம் ணமோ ஹொந்து | தேவர்கள் முதலியோரால் துதிக்கப்பட்டவர்களும், பிறவித் துன்பங்களை ஒழித்தவர்களும், ஜிந சிரேஷ்டர்களுமான அஜிதர் முதலான இருபது தீர்த்தங்கரர்களும் சம்மேதகிரியின் உச்சியில் பரம நிர்வாணத்தை (முக்தியை) அடைந்தார்கள். அவர்கள் பொருட்டு என் நமஸ்காரம் இருக்கட்டும். (சேரட்டும்). |
----------------- |
ராமஸுதா பெண்ணி ஜிணா
லாட ணரிந்தாண பஞ்ச கோடீஓ பாவாயே கிரிஸிஹரே ணிவ்வாண கயா ணமோ தேஸிம். 290 |
|
ராமஸுதா பெண்ணி ஜிணா லாட ணரிந்தாண பஞ்சகோடீஓ பாவாயே கிரிஸிகரே ணிவ்வாண கயா தேஸிம் அஹம் ணமோ அஸ்து | இராமஸ்வாமி யின் குமாரர்களான லவன், குசன் ஆகிய இரண்டு ஜிந முனிவர்களும், லாட தேசத்து நரேந்திரர்களான ஐந்து கோடி எண்ணிக்கையுள்ள ஜிந முனிவரர்களும் (பாவாபுரத்தின் பக்கத்தேயுள்ள) பாவாகிரி என்னும் மலையின் மேல் நிர்வாணத்தை அடைந்தார்கள். அவர்கள் பொருட்டும் என் நமஸ்காரம் சேரட்டும். |
லவன், குசன் ஆகிய இருவரும் ஸ்ரீ ராம்பிரானின் புதல்வர்களே! |
ணமஸாமி பஜ்ஜுண்ணோ
ஸம்புகுமாரோ தஹேவ அணிருத்தோ பாஹத்தரி கோடீஓ உஜ்ஜந்தே ஸத்தஸயா ஸித்தா. 291 |
|
உஜ்ஜந்தே பஜ்- ஜுண்ணோ, ஸம்பு குமாரோ தஹேவ அணிருத்தோ பாஹத்தரி கோடீஓ ஸத்தஸயா ஸித்தா: தேஸிம் ணமஸாமி | ஊர்ஜ்ஜயந்த கிரியின் உச்சியில், (வாசுதேவன் மனைவி, ருக்மணியின் பிள்ளையான) ப்ரத்யும்னரும், ஜம்புகுமாரரும், அவ்வாறே,அநிருத்தரும் முதலாக (த்வாசபத்தி). எழுபத்திரண்டு கோடியுடன் எழுநூறு பேர்கள் முக்தியடைந்தார்கள். அவர்கள் பொருட்டும் வணங்குகிறேன். |
----------------- |
பண்டு ஸுதா திண்ணி ஜணா
தவிடணரிந்தாண அட்ட கோடீஓ ஸத்துஞ்ஜய கிரிஸிஹரே ணிவ்வாண கயாணமோ தேஸிம். 293 |
|
ஸத்துஞ்ஜய கிரிஸி- ஹரே பண்டுஸுதா திண்ணி ஜிணா தவிட ணரிந்தாண அட்டகோடீஓ ணிவ்- வாண கயா தேஸிம் அஹம் நமோஸ்து | சத்ருஞ்ஜய கிரியின் மேலே, பாண்டு மன்னன் புதல்வர்களான தருமர், பீமன், அருச்சுனன் ஆகிய மூவரும் திராவிட நரேந்திரர்களான (அரசர்களான) எட்டு கோடி பேர்களும் (பற்றற்று துறவு மேற்கொண்டு தவமியற்றி) நிர்வாணமடைந்தார்கள் ; அவர்களுக்கும் என் வணக்கம் ஆகட்டும். |
----------------- |
ராமோ ஸுக்கீவ ஹணுமோ
கவய கவக்கோய ணீளமஹா ணீளோ துங்கீயே கிரிஸிஹரே ணிவ்வாண கயாணமோ தேஸிம். 294 |
|
துங்கீஏ கிரி ஸிகரே ராமோ சுக்கீவ அணுமோ கவய கவக்கோய நீள மஹாணீளோ ணிவ்வாணகயா தேஸிம் அஹம் ணமோ அஸ்து | துங்கீ என்ற மலையின் மேலே (பத்ம பலதேவராகிய) ஸ்ரீராமபிரானும், வித்தியாதர அரசனான சுக்ரீவனும், ஹநுமானும், (அணுமஹானும்), கவயன், கவாக்ஷன் ஆகிய இருவரும், நீலன், மஹாநீலன் ஆகிய இருவரும், நிர்வாணமடைந்தார்கள். அவர்கள் பொருட்டும் யான் நமஸ்காரம் செய்கிறேன். |
ஸ்ரீ இராமபிரான் முதலியோர் முக்தியடைந்த விவரம் ஸ்ரீ புராணத்திலும் காணலாம். |
இச்சாமி பந்தே பரிணிவ்வாண பக்தி காஉஸ்ஸக்கோ கஓதஸ்ஸ ஆளோசேவும் இம்மிஸே அவஸப்பிணியே சவுத்த ஸமயஸ்ஸ பச்சிமே பாகே ஆவுட்டமாஸே ஹீணவாஸ சவுக்காவாஸே ஸகாளம்மி பாவாயே ணயரீயே கத்திய மாஸஸ்ஸ கிண்ண சவுத்தஸீயே ரத்தீயே ஸாதீயே ஸாக்கத்தே பச்சூஸே பயவதோ வட்டமாணோ ஸித்திம் கதோ திஸுவி லோயேஸு பவணவாஸிய வாணவெந்தர ஜோயிஸிய கப்பவாஸியத்தி சவுவிஹாதேவா, ஸபரிவாரா திவ்வேண கந்தேண திவ்வேண அக்கேண திவ்வேண புப்பேண திவ்வேண தீவேண திவ்வேண தூவேண திவ்வேண சுண்ணேண திவ்வேண வாசேண திவ்வேண ணாணேண ணிச்சகாள மச்சந்தி பூஜந்தி வந்தந்தி ணமம்ஸந்தி பரிணிவ்வாண மஹாகல்லாண புஜ்ஜம் கரந்தி அஹமபி இஹ ஸந்தோதத்த ஸந்தாயிம் பக்தீயே ணிச்சகாளம் அச்சேமி பூஜேமி வந்தாமி ணமம்ஸாமி துக்கக்கவோ கம்மக்கவோ போஹிளாஹோ ஸுகயிகமணம் ஸமாஹி மரணம் ஜிணகுண ஸம்பத்திஹோஉ மச்சம். 295 | |
பந்தே பரிநிவ்வாண பத்தி காஓஸக்கோ கவோதஸ்ஸ ஆளோ சேஉம் இம்மிஸே அவ- ஸப்பிணிஏ சவுத்தஸம யஸ்ஸ பச்சிமபாகே ஆவுட்டமாஸ ஹீணே- வாஸே, சவுக்காவாஸே ஸகாளம்மி பாவாஏ ணயரீஏ கத்திய மாஸஸ்ஸ, கிண்ண சவுத்தஸீஏ ரத்தீயே ஸாதீயே நக்கத்தே பச்சூஸே பயவதோ ளட்டமாணோ ஸித்திம் கதோ திஸுவிளோ ஏஸு பவணவாஸிய வாண வெந்தர ஜோயிஸிய, கப்பவா ஸிய, இதி சஉவிஹா தேவா ஸபரிவாரா திவ்வேண கந்தேண திவ்வேண அக்கேண திவ்வேண புப்பேண திவ்வேண தீவேண திவ்வேண தூவேண திவ்வேண சுண்ணேண திவ்வேண வாசேண திவ்வேண ணாணேண ணிச்சகாளம் அச்சந்தி பூஜந்தி வந்தந்தி ணமம்ஸந்தி பரிநிவ்வாண மஹா- கல்லாண புஜ்ஜம் கரந்தி அஹமபி இஹ- ஸந்தோதத்தஸந்- தாயி, ணிச்சகாளம் அச்சேமி பூஜேமி வந்தாமி ணமஸ்ஸாமி மச்சம் துக்கக்கஓ கம்மக்கஓ போஹி லாஹோ ஸுகயி கம- ணம் ஸமாஹி மரணம் ஜிநகுண ஸம்பத்தி ஹோஉ இச்சாமி |
ஞானவானே !
பரிநிர்வாண பக்தியின் காயோத் ஸர்க்கம் செய்யப்பட்டது அதனை ஆலோசிக்கிறேன். இப்போது நடக்கிற ஹுண்ட அவசர்பிணியின் நாலாங்காலமான 'துஷமஸுஷம' மென்கிற காலத்தின் கடைசி பாகத்தில் மூன்று வருஷமும், எட்டரை மாதமும் உண்டென்னும் அளவில் (அதாவது மிச்சம் இருக்கிற காலத்தில்) பாவா நகரத்தில் கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியின் இரவில் ஸ்வாதி நக்ஷத்திரத்தில், விடியற்காலத்தில், பகவந்தரான வர்த்தமானர் (மகாவீரர்) முக்தியடைந்தார். அவரை, மூவுலகில் உள்ளவர்களான பவணவாசி தேவர்களும், வியந்தர தேவர்களும், ஜோதிஷ்க தேவர்களும், கற்பவாசி தேவர்களும் ஆகிய நான்கு வகை தேவர்களும், தங்கள் தங்கள் தேவியர் முதலான பரிவாரங்களுடன், திவ்வியமான கந்தத்தினலும், திவ்வியமான அக்ஷதையினாலும், திவ்வியமான மலர்களினாலும், திவ்வியமான தீபங்களினாலும், திவ்வியமான தூபங்களினாலும், திவ்வியமான சூர்ணங்களினாலும், ஈரம் துவட்டும் திவ்வியமான வஸ்திரங்களினாலும், திவ்வியமான அபிஷேக ஸ்நானங்களினாலும், எப்பொழுதும் (அன்று முதல் இன்றைய வரையில்) அர்ச்சிக்கிறார்கள், பூஜிக்கிறார்கள், துதி செய்கிறார்கள், வணக்கம் செய்கிறார்கள், பரிநிர்வாண கல்யாண பூஜையை செய்கிறார்கள். அவ்வாறே யானும் இவ்விடம் இருந்தே அவ்விடம் உள்ளவனாக (பாவித்து) எண்ணி, பக்தியுடன், நித்தியமும் அர்ச்சிக்கிறேன், பூஜிக்கிறேன், துதிக்கிறேன், வணங்குகிறேன் . இதனால் எனக்குத் துன்பங்களின் நாசமும், கர்மக்ஷயமும், நல்ல ஞானம் பெறுவதும், நற்கதிச் செல்வதும், ஸமதா பாவமான சமாதி மரணமும், ஜிநனுடைய குணங்களை அடைவதும் எனக்கு ஆகட்டும். இவைகளையே இச்சிக்கின்றேன். |
ப்ரத்யூஷ: என்றது ப்ராக்ரதத்தில் பச்சூஸே என ஏழாம் வேற்றுமையில் நின்றது. "ப்ரத்யூஷோsஹர்முகம் கல்யம், உஷப்ரத்யுஷஸீ அபி" அமரம். ப்ரத்யூஷ: அகஸ்முகம், கலயம், உஷ: ப்ரயுஷஸீ, என்பவை விடியற்காலத்தைக் குறிக்கும். சொற்கள். |
பரிநிர்வாண பக்தி முற்றும்.
சுபம்.
வணங்குதற்குரிய
வீடூர் பூர்ணசந்திர சாஸ்திரியார் அவர்களால்
ஜூன் 1963 ஆம் வருடம் தமிழ் உரையுடன், சென்னை-14 ஆதிபகவன் அறநூற் பதிப்பகத்தாரால்
வெளியிடப்பட்ட, "கிரியா கலாபம்"
என்கிற இந்த அறநூலில் உள்ள சமண அறம் பற்றி பலரும் அறியவேண்டும் என்ற நோக்குடன்,
02-11- 2018 அன்று கிரியா கலாபம் என்கிற இந்நூல் சிறு முன்னுரையுடன்
இக்குழுவில் பதிவிடத்தொடங்கி,(தொடர் பதிவுகள் சிலநாள் தள்ளியும்) ஆக 190 நாட்கள் தொடர்
பதிவாக இக்குழுவில் பதிவிட்டேன். எனது பதிவில்
எங்கேயேனும் சிறு பிழைகள் தென்பட்டாலும் அதற்காக மறைந்த நூலாசியர் அவர்களை நினைவு கூர்ந்து
மன்னிப்பு கேட்டுக்கொள்வதுடன், எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த திரு. பத்மராஜ் ராமசாமி
அவர்கள், திரு. மல்லிநாதன் அவர்கள், திருமதி வசந்தலட்சுமி ஜெயக்குமார் அவர்கள் மற்றும்
குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சமண அறம் திக்கெட்டும்
பரவட்டும் !
திருவறம் வளர்க !
இங்ஙனம்,
கம்பீர- துரைராஜ், செய்யாறு.
No comments:
Post a Comment