Bhoobalam - பூபாளம்


ஸ்ரீ போஜராஜரின் பூபால ஸ்தோத்ரம்


Related image


இந்த அருமையான பக்திமலரை திரு. இரவிச்சந்திரன் , போளூர் அவர்களால் 
JUNC Whatsapp குழுவில் தினமும் பதிவாக அஞ்சல் செய்யப்பட்டதின் தொகுப்பு.




 நூன்முகம் : 


பஞ்ச ஸ்தோத்திரங்களில் ஐந்தாவதான “பூபாலம்” என்னும் இந்நூல் 27  சமஸ்கிருத பாடல்களால், பூபால கவியால் இயற்றப்பட்டது. இவர் மானதுங்க ஆசாரியரின் சமகாலத்தவராக கருத முடிகிறது. அதனால், இவர் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனலாம். இந்நூல் முக்கியமாக காலையில் துயில் எழுந்ததும் பக்தியுடன் அருகனைத் துதிக்கும் நோக்குடன் இயற்றப்பட்டதால், அதற்குரிய “பூபால” ராகத்தில் பாடப்பட்டுள்ளது. அதனால் தான் முதல் பாடலிலேயே, ”எவனொருவன் விடியற்காலையில், கற்பக மரத் தளிர்களைப் போன்ற பிரகாசத்தை உடைய ஜினேஸ்வரனின் பாத கமலங்களைக் காண்கிறானோ, அவனிடம் நல்ல குலமும், செல்வமும், கல்வியும் இருப்பிடமாகிறது. அதாவது சரஸ்வதியும், இலட்சுமியும் அங்கு விளையாடுமிடமாகிறது. மேலும் மற்ற வைபவத்திற்கும் அவன் ஆளாகிறான்”. (ஸர்வ மஹா உத்ஸவ ஏக பகவம்) என்கிறார்.



”பாலைவனத்தில் நிழல் தரும் விருட்சம் போன்றவரே! உமது சரீரமே சாந்த வடிவமானது: உமது திருமொழியோ செவிகளுக்கு மிகவும் இனிமையானது. உமது ஸ்ரீவிகாரமோ (நடையோ) ஜீவன்களுக்கு உபகாரமானது. அதனால் அறிஞர்கள் உம்மையே அடைகிறார்கள். உம்மைக் காண்பதினால் கர்ப்ப ஜனனம் நீங்கி, பிற்வியை நீத்தேன்: சம்யக் தரிசனமாகிய நற்காட்சியை அடைந்தேன். அதனால் மோட்சத்தை அடையக் கூடிய பயனும் உணடாயிற்று” என மகிழ்கிறார்.

மூவுலக நாயகரே! நீரோ பற்றற்றவர். அப்படியிருக்க தேவர்களால் அமைக்கப்படும் சமவசரணம் முதலான வைபவங்களும், ஐஸ்வர்யங்களும் உமக்குப் பொருந்தாதவையே! ஏனெனில் உம்மிடமுள்ள கேவல ஞான மகிமையும், சாரித்திரத்தின் பெருமையும் எண்ணிப் பார்க்க முடியாத ஈடுயிணையற்ற பெருமை உடையதாகும். அதனால் அவை உமக்கு மிகையே.

மூன்று வெண்மையான குடைகளும், பூ மாரியும், தேவ துந்துபியும், 64 சாமரங்களும் கூடிய எண் வகை பிராதி காரியங்களுடன் மூன்றுலக சகல ஜீவராசிகளுக்கும் சூரியனைப் போன்று ஒளிவிட்டு பிரகாசத்துடன் விளங்கி, இரட்சிக்கின்ற ஜினரே! நீர் இவ்வாறு பிரகாசமாயும், மனோகரமாயும், அமிர்தத்தை வர்ஷிக்கிற சந்திரனைப் போன்றவராயும் உள்ள உமது முகத்தை யான் கண்டதனால், நானே கண்களை உடையவனாகிறேன். நீரே எம்மை காப்பவருமாகின்றீர்! என்கிறார்.


“காம தேவனாகிய மன்மதனை வெல்ல முடியாதவர்களாகி, விஷ்ணுவும், பிரம்மாவும், பரமசிவனும் மனைவியருடன் பிரியாமல் கூடியுள்ளனர். இதனை அறியாதவர்களே அவர்களை வணங்குகின்றனர். ஆனால், நீரோ மன்மதன் அருகில் வரவும் அஞ்சும் தன்மையராய், காமனை வென்றவராகிறீர். அப்படிப்பட்ட உம்மை, என் புண்ணிய வசத்தினால் சதா பார்க்க வேண்டும் என்கிற என் வாஞ்சையினால் என் மனமாகிய விருட்சத்தில் பூக்கள் மலர்ந்து, காய்த்து பயன் தரும் கனிகளாகின்றன!” என்று பூரிக்கின்றனர்.


“காட்டுத்தீயை அணைப்பதற்கு மழை பொழிவதொன்றே பயன் செய்வதைப் போல, மயில்கள் தோகை விரித்தாட, மேகக் கூட்டங்களே காரணமாவது போல, இம் மூவுலக ஜீவன்களுக்கு உமது தர்மோபதேசமாகிய திவ்யத் தொனியே மகிழ்ச்சியையும் நிலைத்த பயனையும் செய்யும் என்பதை அறிவேன். அதனால் தாமரை மொட்டைப் போல் கைகளைக் குவித்து, தலை மீது வைத்து, தேவர், நரேந்திரன், மனிதன் ஆகியோரின் கண்களுக்கு விளையாடும் இடமாகவும், மூவுலகுக்கும் ஒளி தரும் இடமாகவும் உள்ள கோபுர உச்சியில் கொடிகளை உடைய, அருகனின் ஜினாலயத்தை மும்முறை வலம் வந்ததினால், சம்சாரமாகிய காட்டுத் தீ அணைந்து, மோட்சத்தை அடைந்தவன் போலவே உணர்கிறேன்” என்று கூறி ஜினாலய வணக்கத்தின் பயனை நமக்கு விளக்குகிறார்.



தேவேந்திரர்கள் உமக்கு அபிஷேகத்தை செய்து விட்டார்கள்: தேவஸ்ரீகள் மங்கள ஸ்தோத்திரங்களைப் பாடி ஆடி விட்டார்கள். மற்றுமுள்ள சகல தேவர்களும் தங்களுக்குரிய சேவைகளைச் செய்து விட்டார்கள். இனி நாங்கள் வேறென்ன செய்ய முடியும் என்று என் மனம் ஊசலாடுகிறது” என்று வருந்துகிறார். எனினும் “மோட்ச கன்னியை மணந்த உம் அழகான கோயிலைக் கண்டதும் மற்றெல்லா துன்பமும் நீங்கி, முக்திப் பாதை தெரிவதினால் மனம் மகிழ்கிறது” என்று தேறுதல் அடைகிறார். அவ்வழியில் நம்மையும் தேற்றுகிறார். நாலடி போயினும் நல்லோர் பாதையே சிறந்தது என்று அகிம்சை வழியில் ஜினரைத் தொழுவோம், பிறவிப் பிணி நீக்குவோம்.



தொடரும் . . .




 பூபால ஸ்தோத்ரம்





( 1 )


ஸ்ரீலீலாயதநம் மஹீகுலக்ருஹம் கீர்த்தி ப்ரமோதாஸ்பதம்

வாக்தேவீரதிகேதநம் ஜயரமாக்ரீடாநிதாநம் மஹத் I

ஸ:ஸ்யாத் ஸர்வ மஹோத்ஸவைகபவநம் ய: ப்ரார்த்திதார்த்தப்ரதம்

ப்ராத: பச்யதி கல்பபாதபதளச்சாயம் ஜிநாங்க்ரித்வயம் II  



விடியற்காலையில் ஜினேச்வரருடைய இரு பாதங்களையும் தரிசிக்கின்றவர்களுக்கு அஷ்ட ஐச்வர்யம், லக்ஷ்மீ கடாக்ஷம், ஸரஸ்வதியின் நோக்கு, கீர்த்தி, ஸந்தோஷம் முதலானவை உண்டாகும்.





( 2 )


சாந்தம்வபு: ச்ரவண ஹாரி வசச்சரித்ரம்

ஸர்வோபகாரி தவ தேவ! தத: ச்ருதஞ்ஞா: I

ஸம்ஸாமாரவ மஹாஸ்தல ருந்த ஸாந்த்ர

ச்சாயாமஹீருஹ பவந்த முபாச்ரயந்தே: II


ஜினதேவர் சாந்த ஸ்வரூபியாகவும், ஸர்வ உபகாரியாகவும் இருப்பதனால் தான் சாஸ்திரத்தை அறிந்த அறிஞர்கள் அவரை அடைகிறார்கள்.


பகவந்தரே! பாலைவனத்தில் ஸஞ்சரிக்கும் பிராணிகளுக்கு நிழலைக் கொடுக்கும் தனிமரம் போல், நீர் பிராணிகளுக்கு நன்மையான (இனிமையான) உபதேசத்தைச் செய்பவராயும், (சந்திர காந்தியைப் போன்ற அழகான) சரீரத்தை உடையவராயும் இருப்பதனால் தான் அறிஞர்கள் உம்மை அடைகிறார்கள்.





( 3 ) 


ஸ்வாமிந்நத்ய விநிர்கதோZஸ்மி ஜநநீ கர்பார்ந்த கூபோதராத்

அத்யோத்காடித த்ருஷ்டிரஸ்மி பலவஜ்ஜந்மாஸ்மி சாத்யஸ்புடம் I

த்வாமத்ராக்ஷமஹம் யதக்ஷயபதா நந்தாய லோகத்ரயீ-

நேத்ரேந்தீவர காநநேந்துமம் ருதஸ்யந்தி ப்ரபாசந்த்ரிகம் II



பகவந்தரே! இன்று நான் உம்மைக் கண்டதினால் தாயின் கர்ப்பத்தில் உதிப்பதையே நீத்தேன் (பிறவியை நீக்கினவர் ஆனேன்). ஸம்யக் தரிசனத்தையும் (நற்காட்சியையும்) அடைந்தவன் ஆவேன். என்னுடைய இம் மனித பிறவியானது (மோக்ஷத்தை அடையக் காரணமானதால்) ஸபலமாயிற்று (பயன்பெற்றது).



( 4 )

 நிச்சேஷத்ரிதசேந்த்ர சேகர சிகா ரத்நப்ரதீபாவலீ

ஸாந்த்ரீபூத ம்ருகேந்த்ர விஷ்டரதடீ மாணிக்ய தீபாவலி: I

க்வேயம் ஸ்ரீ: க்வ ச நிஸ்ப்ருஹத்வ மிதமித்யூ ஹாதிகஸ்த்வாத்ருச:

ஸர்வஞ்ஞாநத்ருச்சரி த்ரமஹிமா லோகேச லோகோத்த்ர: II



பகவந்தனே! உம்முடைய விராக்த்வம் (பற்றின்மை) எப்பேர்ப்பட்டது. தேவர்களால் அமைக்கப்படும் ஸமவஸரணம் முதலான ஐச்வர்யங்கள் எப்பேர்ப்பட்டது என்றால், உம்முடைய வீதராக்த்வத்திற்கு ஸமவஸரணம் முதலான ஐச்வர்யங்கள் பொருந்தாதவை, ஆயினும் உம்மிடம் இரண்டும் இருப்பதனால் உம்முடைய நடத்தையே மஹிமை பொருந்தியது, இப்பெற்றியதான உம்முடைய மஹிமை உலகத்தில் இல்லாததும், ஆலோசிக்க முடியாததும் ஆம்.


( 5 )


ராஜ்யம் சாஸநகாரிநாகபதி யத் த்யக்தம் த்ருணாவஞ்ஞயா

ஹேலாநிர்தளித த்ரிலோகமஹிமா யந்மோஹமல்லோ ஜித: I

லோகாலோகமபி ஸ்வபோதமுகுரஸ்யாந்த: க்ருதம் யத்த்வயா

ஸைஷாச்சர்ய பரம்பரா ஜிநவர! க்வாந்யத்ர ஸம்பாவ்யதே II



ஜிநேச்வரரே! பெரிய இராஜ்யத்தை விட்டு, மோகநீய கர்மத்தை ஜயித்து, லோகாலோகங்களிலுள்ள பொருள்களை முற்றும் அறியக் கூடிய ஞானத்தை அடைந்தவர், நீர் அல்லாது வேறொருவரும் இல்லை.


( 6 )

தாநம் ஞாநதநாய தத்தமஸக்ருத் பாத்ராய ஸத்வ்ருத்தயே

சீர்ணாந்யுக்ரதபாம்ஸி தேந ஸுசிரம் பூஜாச்ச பஹ்வ்ய: க்ருதா: I

சீலாநாம் நிசய: ஸஹாமலகுணை ஸ்ஸர்வஸ்ஸமாஸாதிதோ

த்ருஷ்டஸ்த்வம் ஜிந! யேநத்ருஷ்டி ஸுபக:  ச்ரத்தா பரேண க்ஷணம்II



பகவந்தனே! சிறிது நேரமாகிலும் உம்மை கண்டவன் (உம்மை துதித்தவன்) , தான் தாம் செய்தவனாயும், தவம் செய்தவனாயும்,  பூஜைகள் செய்தவனாயும், சீல விரதங்களை ஆச்ரயித்தவனாயும் (அனுஷ்டித்தவனாயும்) ஆகிறான். 

பகவந்தனே! அனேக தடவை தானம் செய்தும், கடும் தவம் இயற்றியும், பல பூஜைகள் செய்தும், சீல விரதங்களைக் காப்பாறியும் உண்டான பயன், நான் உம்மைச் சிறிது நேரம் பக்தியினால் தரிசனம் செய்தலாலேயே எனக்கு உண்டாகிறது.

( 7 )



 பரஞ்ஞாபாரமித: ஸ ஏவ கதவாந் பாரம் ஸ ஏவ ச்ருத -

ஸ்கந்தாப்தேர்குணரத்ந பூஷண இதி ச்லாக்ய: ஸ ஏவ த்ருவம் I

நீயந்தே ஜிந! யேந கர்ண ஹ்ருதயாலங்காரதாம் த்வத்குணா:

ஸம்ஸாராஹி விஷாபஹாரமணய ஸ்த்ரைலோக்ய சூடாமணே II



ஜிநேச்வரருடைய குணங்களைக் காதுகளால் கேட்டு, மனதினால் தியானிப்பவர்களுக்குச் சகல ஞானமும், சாஸ்திர வ்யுத்பத்தியும், எல்லா நற்குணங்களும் உண்டாகும்.



( 8 )

ஜயதி திவிஜப்ருந்தாந்தோலிதை ரிந்துரோசிர்

நிசய ருசிபிருச்சைச்சாமரைர் வீஜ்யமாந: I

ஜிநபதி ரநுரஜ்யந் முக்திஸாம்ராஜ்ய லக்ஷ்மி:

யுவதி நவகடாக்ஷ க்ஷேபலீலாம் ததாநை: II


ஜிநேச்வரரே உலகத்தில் எல்லாவற்றிற்கும் மேலானவராக உள்ளார் என்பதாம்.


( 9 )


தேவ: ச்வேதாதபத்ரத்ரய சமரிருஹா சோகபாச் சக்ரபாஷா-

புஷ்பெளகாஸார ஸிம்ஹாஸந ஸுரபடஹை ரஷ்டபி ப்ராதிஹார்யை: I

ஸாச்சர்யைர் ப்ராஜ்மாந: ஸுரமநுஜஸபாம்போஜிநீ பாநுமாலீ

பாயாந்ந: பாதபீடீக்ருத ஸகல ஜகத்பால மெள ளிர் ஜிநேந்த்ர: II



அஷ்டமஹாப் பிராதிஹார்யங்களினால் பெருமை பொருந்திய ஜிநேந்திரரானவர் எங்களையும் இரட்சிக்கட்டும். (காப்பாற்றுவராக).




( 10 )

 ந்ருத்யத் ஸ்வர்தந்திதந்தாம் புருஹவநநடந்நாக நாரீநிகாய ஸத்யஸ்

த்ரைலோக்ய யாத்ரோத்ஸவகர நிநதா தோத்யமாத்யந் நிலிம்ப: I

ஹஸ்தாம் போஜாத ஸேவாவிநிஹித ஸுமநோதாம ரம்யாமரஸ்திரீ, காம்ய:

கல்யாண பூஜாவிதிஷு விஜயதே தேவ தேவாகமஸ்தே II




தேவாதி தேவனே! உம்முடைய பஞ்ச கல்யாண பூஜா காரியங்களுக்கு நர்த்தனம் செய்யப்பட்ட தேவ ஸ்திரீகளுடனும், ஜனங்களை ஜிந பூஜைக்குப் புறப்படச் செய்கிற வாத்திய கோஷங்களால் சந்தோஷமடைகிற தேவர்களுடனும், கற்பக விருக்ஷத்துப் புஷ்பங்களால் ஆன மாலைகளைக் கையிலே ஏந்திய தேவாங்கனைகளுடன் கூடிய பவணர் முதலிய நான்கு வகை தேவர்களின் வருகை விசேஷமாய் உளது (என்றால்), தேவர்கள் எல்லாம் வந்து ஜிநபூஜையை விதிப்படி விசேஷமாய் செய்கின்றார்கள் என்றவாறு.





(11 )

சக்ஷுஷ்மாந ஹமஏவ தேவ! புவநே நேத்ராம்ருதஸ்யந்திநம்

த்வத்வக்த்ரேந்துமதி ப்ரஸாதஸுபகைஸ்தேஜோபிருத்பாஸிதம் I

யேநாலோகயதா மயாZநதிசிராச்சக்ஷு க்ருதார்தீக்ருதம்

த்ரஷ்டவ்யா வதிவீக்ஷணவ்யதிகர வ்யாஜ்ரும்ப மாணோத்ஸ்வம் II




பகவந்தனே! உலகில் எல்லாவற்றிலும் உயர்ந்த பொருளான உமது முகமாகிற சந்திரனைக் கண்டு எனது கண்கள் குருதகிருத்யமானதால் நானே கண்களை உடையவன் ஆனேன்.


(12 )

கந்தோ: ஸகாந்தமபி மல்லமவைதி கச்சித்

முக்தோ முகுந்த மரவிந்தஜ மிந்துமெளளிம் I

மோகீக்ருத த்ரிதசயோஷித பாங்கபாத:

தஸ்ய த்வமேவ விஜயீ ஜிநராஜமல்ல! II



ஜிநேச்வரரே! நீரே காமனை வென்றவர் அன்றி, பிரம்மா, விஷ்ணு, மகேச்வரன் முதலிய மூவரும் மனைவியர்களுடன் கூடியிருப்பதனால், அவர்கள் காமனை வென்றவர்களாக கூறுதல் இயலாது.




(13 )

 கிஸலயிதமநல்பம் த்வத் விலோகாபிலாஷாத்

கிஸுமித மதிஸாந்த்ரம் த்வத்ஸமீபப்ரயாணாத் I

மம பலிதமமந்தம் த்வந்முகேந்தோரிதாநீம்

நயநபத மவாப்தாத் தேவ! புண்யத்ருமேண II


ஜிநதேவரே! நான் உம்மைப் பார்த்து, நெருங்கி ஸ்தோத்திரஞ் செய்வதினால், என் புண்ணியமானது தளிர்த்துப் பூத்துக் காய்க்கின்றது (விருத்தியாகின்றது) என்பதாம்.



( 14 ) 


த்ரிபுவந வநபுஷ்ப்யத்புஷ்ப கோதண்டதர்ப

ப்ரஸரதவநவாம்போ முக்திஸுக்திப்ரஸுதி I

ஸ ஜயதி ஜிநராஜ வ்ராத ஜீமூதஸங்க:

சதமகசிகி ந்ருத்யாரம்ப நிர்பந்தபந்து: II




ஜிநேச்வரருடைய திவ்வியத்துவனியினால் உண்டான தர்மோபதேசமானது இம்மூவுலகத்திலும் பரவி விளங்கட்டும்.



( 15 ) 


பூபால ஸ்வர்கபால ப்ரமுகநரஸுரச்ரேணி நேத்ராளிமாலா –

லீலா சைத்யஸ்ய சைத்யாலய மகிலஜகத் கெளமுதீந்தோர்ஜிநஸ்ய I

உத்தம்ஸீபூத ஸோயாஞ்ஜலிபுட நளிநீகுட்மள ஸ்த்ரி: பரீத்ய

ஸ்ரீபாத தசாயயாபஸ்தித பவதவது: ஸம்ஸ்ரீதோZஸ்மீவமுக்திம்: II



இருகைகளையும் தாமரை மொக்குப் போல் (கூப்பிச்) சிரஸில் (தலையில்) வைத்து, ஸ்ரீ கோவிலை மூன்று தடவை பிரதட்சிணம் செய்து, ஸ்ரீ ஜிநேச்வரரின் பாதங்களில் வணங்குகிறவர்கள் ஆபத்துக்களைக் கடந்து, பிறவியை ஒழித்து, மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைந்தவர்களாகிறார்கள்.



( 16 ) 


தேவ த்வதங்க்ரி நகமண்டல தர்பணேZஸ்மிந்

அர்க்யே நிஸர்கருசிரே சிரத்ருஷ்டவக்த்ர: I

ஸ்ரீகீர்திகாந்தித்ருதி ஸங்கம காரணாநி

பவ்யோ ந காநி லபதே சுபங்களாநி: II




ஸ்ரீ ஜிநபகவானுடைய பாதத்தைத் தரிசிக்கின்ற பவ்வியர்களுக்கு ஸம்பத்து, கீர்த்தி, தேஜஸ், தைரியம் இவை முதலானவை உண்டாவதற்குக் காரணமான எல்லா சுப மங்களங்களும் உண்டாகும்.



( 17 )


ஜயதி ஸுரநரேந்த்ர ஸ்ரீஸுதா நிர்ஜரிண்யா:

குலதரணீதரோZயம் ஜைநசைத்யா பிராம: I

ப்ரவிபுல பலதர்மா நோகஹாக்ர ப்ரவாள –

பரஸரசிகர சும்பத்கேதந: ஸ்ரீநிகேத: II



ஜிந சைத்யாலயமானது (கோவிலானது) தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் கிடைக்கக் கூடிய சம்பத்துக்களுக்கும் காரணமாயுள்ளது.




( 18 )



விநமத மரகாந்தா குந்தளாக்ராந்தகாந்தி

ஸ்புரிதநக மயூக த்யோதிதாசாந்தராள: I

திவிஜமநுஜராஜ வ்ராதபூஜ்ய க்ரமாப்ஜோ

ஜயதி விஜிதகர்மாராதிஜாலோ ஜிநேந்த்ர: II




ஸகல கர்மங்களையும் ஜயித்தவரான ஜிநேச்வரரே எல்லோருக்கும் மேலானவராக விளங்குகிறார்.



( 19 )




ஸுப்தோத்திதேந ஸுமுகேந ஸுமங்களாய

த்ரஷ்டவ்ய மஸ்தி யதிமங்களமேவ வஸ்து I

அந்யேந கிம் ததிஹ நாத! தவைவ வக்த்ரம்

த்ரைலோகய மங்களநிகேதந மீக்ஷணீயம் II


ஒருவன் விடியற்காலையில் விழித்து எழுந்தவுடன் விழிக்கத் தகுந்த மங்களகரமான வஸ்து ஜிநேச்வரருடைய திருமுகமேயாகும். வேறொன்றினாலும் பிரயோஜனமில்லை.



( 20 )


 த்வம் தர்மோதய தாபஸாச்ரமசுக ஸ்த்வம் காவ்ய பந்தக்ரம்

க்ரீடாநந்தநகோகில ஸ்த்வமுசித: ச்ரீமல்லிகா ஷட்பத I

த்வம் புந்நாககதார விந்தஸரஸீ ஹம்ஸஸ்த்வமுத்தம் ஸகை:

கைர்பூபால ந தார்யஸே குணமணி ஸ்ரங்மாலிபிர்மெளளிபி: II



பகவந்தரே! நீர் எல்லோராலும் தலையால் வகிக்கப்படுகின்றீர்.




( 21 )


சுவஸுகமமர ஸ்ரீஸங்கமம் சாபிலஷ்ய

ச்வமபிநியமயந்தி க்லேசபாசேந கேசித் I

வயமிஹ து வசஸ்தே பூபதேர்பாவயந்த –

ஸ்ததுபயமபி சச்வல்லீலயா நிர்விசாம: II



ஜிநேச்வரருடைய தர்மோபதேசங்களை ஸ்மரிப்பதினாலேயே ஸ்வர்க்காபவர்க்க சுகங்களை சுலபமான அடையலாம். ஆத்மாவைக் காயக்கிலேசங்களினால் கஷ்டப்படுத்தத் தேவையில்லை என்பதாம்.



( 22 )


தேவேந்த்ராஸ்தவ மஜ்ஜநாநி விதததுர்தேவாங்கநா மங்களா-

ந்யாபேடு: சரதிந்து நிர்மலயசோ கந்தர்வதேவா ஜகு: I

சேஷாச்சாபி யதாநியோகமகிலா: ஸேவாம் ஸுராச்சக்ரிரே

தத்கிம் தேவ! வயம் விதத்ம இதி நச்சித்தம் து தோலாயதே II



ஜிநதேவர் ஸகல தேவர்களாலும் கொண்டாடப்படுகின்றார் என்பதாம்.



( 23 )

 தேவ! தவஜ்ஜநநாபிஷேக ஸமயே ரோமங்சஸத்கஞ்சுகை:

தேவேந்த்ரைர் யதநர்தி நர்தநவிதெள லப்தப்ரபாவை: ஸ்புடம் I

கிஞ்சாந்யத்ஸுரஸுந்தரீ குசதடப்ராந்தாவநத்தோத்ம –

ப்ரேங்கத்வல்லகிநாதஜங்க்ருதமஹோ தத் கேந ஸம்வர்ண்யதே II




ஸ்ரீ ஜிநதேவரின் ஜன்மாபிஷேக சமயத்தில் தேவர்கள் ஆனந்த நர்த்தனம் செய்ததும், தேவ ச்திரீகள் வீணையினால் கோஷம் செய்ததும் ஒருவராலும் வர்ணிக்க முடியாது. அவ்வளவு ஆச்சரியமானது என்றபடி.


( 24 )

தேவ! தவத் ப்ரதிபிம்பமம் புஜதள ஸ்மேரேக்ஷணம் பச்யதாம்

யத்ராஸ்மாகமஹோ மஹோத்ஸவரஸோ த்ருஷ்டேரியாந் வர்ததே I

சாக்ஷாத் தத்ர பவந்தமீக்ஷிதவதாம் கல்யாணகாலே ததா

தேவாநாமநிமேஷலோசநதயா வ்ருத்த: ஸ: கிம் வர்ண்யதே II


ஜிநதேவருடைய பிரதி பிம்பத்துக்குச் செய்யப்பட்ட கல்யாண உத்ஸவத்தைப் பார்க்கிற எங்கள் கண்களுக்கு இவ்வளவு ஆனந்தம் உண்டாகின்றது. ஜிநதேவருக்கு நேரிலேயே செய்யப்பட்ட உண்மையான பஞ்ச கல்யாணத்தின் போது நேரிலேயே பார்த்த தேவர்களுகளுடைய ஆனந்தம் பேரானந்தமாக இருந்திருக்க வேண்டும்.


( 25 )

த்ருஷ்டம் தாம ரஸாயநஸ்ய மஹதாம் த்ருஷ்டம் நிதீநாம் பதம்-

த்ருஷ்டம் ஸித்தரஸஸ்ய ஸத்மஸதநம் த்ருஷ்டம் ச சிதாமணே: I

கிம் த்ருஷ்டை ரதவாநுஷங்கிகபலை ரேபிர்மயாத்ய த்ருவம்

த்ருஷ்டம் முக்தி விவிஆஹ மங்கலக்ருஹம் த்ருஷ்டே ஜிநஸ்ரீ க்ருஹே II


ஜிநேச்வரருடைய ஸ்ரீ கோவிலைப் பார்த்த அளவிலேயே தானக வரும் மற்றெல்லாவற்றையும் அடைவதுடன் மோக்ஷ வீட்டையும் அடைவது நிச்சயம் என்பதாம்.


( 26 )


த்ருஷ்டஸ்த்வம் ஜிநராஜசந்த்ர! விகஸத்பூபேந்த்ர நேத்ரோத் பலே

ஸ்நாதஸ்த்வந்நுதி சத்ரிகாம்பஸி பவத்வித்வச் சகோரோத்ஸவே I

நீதச்சாகநிதாகஜ: க்லமபர: சாந்திம் மயா கம்யதே தேவ!

த்வத்கதசேதஸைவ பவதோ பூயாத் புநர்தர்சநம்: II


ஜிநேச்வரரே! உம்மைப் பார்த்து ஸ்தோத்திரஞ்செய்து, என் பாபத்தைப் போக்கி உம்மிடத்தில் நீங்காத மனத்தை உடையவனாக இருக்கிறேன். இனியும் உம்முடைய தரிசனம் உண்டாகட்டும்.




( 27 )


 ஜீவந்முக்தி முபேத்ய ஜீவநிவஹ ப்ரோத்பூத புண்யோதயாத்

ப்ரோத்தாநந்த சதுஷ்டயோ ஜிநபதி: ப்ரோவாச தர்மம் ந சேத் I

சம்ஸாரோக்ர மஹாடவீதவமுஹூர்தம் ஹ்யமாநோ ஜந:

நித்யாநந்தமுபைதி கேந ஸரணேர்மோக்ஷஸ்ய நேதாZவதாத் II



ஜிநேச்வரருடைய தர்மோபதேசமே ஸம்ஸார (பிறவித்) துன்பத்தை கெடுத்து மோக்ஷ சுகத்தை அடையவிக்கத் தகுதியானது.




ஸ்ரீ பூபால ஸ்தோத்திரம் முற்றிற்று.



-------------------------------------------------;

No comments:

Post a Comment