சமணத்தில் சரஸ்வதிசமணத்தில் சரஸ்வதி
பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்குத் தான்.

தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று நாம் சொல்லுவதில்லை.

பூஜா என்பதிலிருந்து வந்தது பூஜை
பூ என்றால் பூர்த்தி; ஜா என்றால் உண்டாக்குவது

இங்கு சரஸ்வதிக்கு பூஜை என்பதால்
கல்விக்கடவுளுக்கு பூஜை என்பதால்
அறியாமையை அகற்றி ஞானத்தை பூர்த்தி செய்வது, உண்டாக்குவது என்பது பொருள்.


முதல் தீர்த்தங்கரரின் த்வியத்தொனியினை சரஸ்வதியாக கொண்டு சமணத்தில் இல்லறமும், துறவறமும் உருவாக்கப்பட்டுள்ளது.

திவ்யத்தொனி என்பது பெண்பால் ஈற்று சொல்லாகிய இகரத்தில் முடிவதால் ஆகமங்களை *ஜினவாணி; ஆகமஸ்வரூபி* என அழைக்கப்பட்டது.

மனித வாழ்வுக்கு இன்றியமையாதனவாக கருதப்பட்டதாலும், ஆத்மாவிற்கு தூய்மையும், இனிமையும், சுகமும் அளிப்பதால், நீருடன் ஒப்புமைக்கப் பட்டு *சரஸ்வதி (சரஸ் – நீர் நிலை)* என அழைக்கப் பட்டாள்.


துறவறத்தை ஏற்பவர்கள் புது வாழ்வுமுறை துவக்கும்போது பூர்வாசிரம பெற்றோர்களை விலக்கி, ஸ்ரீ ஆதிநாதரை தந்தையாகவும், ஜினவாணியை தாயாகவும் ஏற்றுக் கொள்ள வைக்கும் நிகழ்வே தீட்சை என்னும் சடங்காகும்.

அகமங்களுக்கு ஸ்ருதி என்ற பெயருள்ளதால், ஸ்ருத தேவி எனவும்,  சொல்லாக (வாக்கு) வெளிவருவதால் வாக்தேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.  செல்வமாக கருதப் பட்டதால் ஜினஐஸ்வர்யம் என்றழைக்கப்பட்டது.

காலப் போக்கில் கலைகள் வளர, வளர பதினாறு வகைகளாக பிரிக்கப்பட்டது. அவற்றையே பதினாறு தேவியராக பாவித்து வணங்கப்பட்டன. இவர்களை கோடசவித்யா தேவியர் எனவும் அழைப்பர். இவர்களின் தலைவியே *மஹாசரஸ்வதி தேவி.*

---
மஹா சரஸ்வதி

பதினாறு வித்யா தேவியர்:

ரோகினி;  பிரஞ்ஞப்தி;  வஜ்ரஸ்ருங்கலா;  வஜ்ராங்குசா;  அப்ராதிகாரா;  புருஷதத்தா;  காளி;  மகாகாளி;  காந்தாரி;  கெளரி;  மகாஜ்வாலா;  மானவி;  வைரோடி;  அஸ்யுப்தா;  மானவி;  மகாமானசி.

--
அறிவின் நிலையை ஐந்து உயர்படி நிலையாக அளித்து உச்சநிலையான கேவலஞானத்தைப் பெற்ற மனிதனே முழுகடவுள் தன்மையை பெற்றதாக சமணம் கூறுகிறது. அம்முற்றறிவு எய்திவர்களுக்கு இப்பூவுலகில் கற்பதற்கு ஏதும் இல்லை. அந்நிலை எய்திய அறியாமை எனும் மாசு முழுவதும் நீங்கிய, அத்தூய ஆன்மன் மீண்டும் இப்பிரபஞ்சத்தில் பிறப்பதில்லை என்பதையே அறியாமை எனும் கிரகணம் நீங்கிய மோட்ச நிலை, முக்தி நிலை என்று  பகர்கின்றது.


அறிவுக்கு முக்யத்வத்தை முழுமையாக அளிப்பது சமணம் என்பதை அறியலாம்.

ஆகவே அறிவுக்கடவுளாக அமைக்கப்பட்டுள்ள அந்த ஜினவாணியை, நீர்நிலைக்கு ஒப்பான அறிவுக் கடவுளை, சரஸ் என்றும் தாயாக கருதி சரஸ்வதி என்றும் வணங்குகிறோம். அன்னை எதையும் அளிப்பவள். அவ்வறிவன்னை முற்றறிவு வரை அளிப்பது நிச்சயம் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.


இதனை மனதில் கொண்டு இன்று அவரவர்கள் இல்லத்தில் பெரியோர்கள் எப்படி சரஸ்வதியை வணங்கினார்களோ அம்முறையை தொடர்ந்து செய்திட்டால் அறிவும், அவ்வழி செயலில் திறமையும் கூடும் என்பதை மனதில் நம்பிக்கையுடன் இருத்தி வழிபடுவோமாக.

-----------------------------------------
இந்த தலைப்பில் சென்றால் கிழேயுள்ள மந்திரங்களைப் பெறலாம்.
***************************************

ஸ்ரீ சரஸ்வதி பூஜை

ஸ்ரீ சரஸ்வதி சதாஷ்டகம்

ஸ்ரீ சரஸ்வதி ஸ்தோத்ரம்

ஸ்ரீ சரஸ்வதி மந்த்ராஷ்டகம்

**********************************************

No comments:

Post a Comment