அறுநால்வர் ஜெயமாலை

அறுநால்வர் ஜெயமாலை

சோதி வானவர் வணங்க காதியாம் வினைகடிந்த
ஆதிநாதன் பதம்நினைந்து அறைகுவோம் பல்லாண்டு வாழி

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

நிஜமுரைத்(து) அனித்ய வாழ்வின் நிலையுரைத்து கதிதுரக்கும்
விஜய தேவி அன்னை தந்த வீதராக அஜிதநாத

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

பாச கம்பமா கதக் களிற்றை கட்டி வைத்து மதமடக்கி
ஞான தம்பமா தடத்திலார்த்த சம்பவா நின் தாள்கள் வாழ்க

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

கபித் வஜச் சிலாதலத்தின் கர்த்தனாய் பொலிந்திருந்த
அபிநந்தனா உன்னடிகள்பற்றி அறைகுவோம் பல்லாண்டு வாழி

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

நல்லறப் பயிர்தழைப்ப நாடிவந்து கருணை கூர்ந்த
சொல்லறம் துறந்திலாத சுமதிநாதர் பதம் நினைந்து

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

தத்துவப் பொருள் உரைத்து இத்தலத்தில் இனிதுயர்ந்த
பத்துமப் பிரபர்தம் பாதம் பாடுவோம் பல்லாண்டு வாழி

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

அஸ்திநாஸ்தி வாதனைக்கு அந்தமாய் முளைத்தெழுந்து
ஸ்வஸ்திகச் சிலாதலத்தில் சுகித்தமர் சுபார்ஸ்வநாத

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

சந்திரகாந்தி திவ்ய தேஹ! இந்திரர் தொழும் விலாச
சந்திரா புரீநிவாஸ சந்த்ரநாத சரணமைய

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

நிஷ்பலம் கொடுத்தலில்லா நிர்மலச் சுவிதி என்னும்
புஷ்பதந்த புங்கவா எம் புன்மை தீர நன்மை சேர

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

மீதளாவும் மணம் நிறைந்த மேலுலாவும் பதம் நினைந்து
சீதளாஉன் சீர்மைபோற்றிச் சேவிப்போம் பல்லாண்டு வாழ்க

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

காதியாம் வினைகள் வென்று நாதனாய் உயர்ந்து நின்ற
சேதியா ஸ்ரேயாம்ஸ நாதர் சேவடிப் பணிந்து நின்று

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

ஆசிலா அணுவிரதங்கள் அவனியில் அளித்துயர்ந்த
தேசுலாவும் ஞானமூர்த்தி வாசுபூஜ்ய வாழி வாழி

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

விண்முகத் தியங்குகின்ற சண்முக வியக்கன்போற்றும்
பொன்முகத்தின் தேசுலாவும் புன்மைதீர்த்த விமலநாத

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

எண்ணிலாப் பவங் கடந்து இன்னல்சேர் வினைகடந்து
அண்ணலாய் அறமுரைத்த அன்புசேர் அனந்தநாத

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

கருமவல் வினைகடந்து காலமூன்றொருங் குணர்ந்து
தரும சக்ர படைதரித்த தரும நாத தருமநாத

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

காந்தி வீசும் ஸ்வர்ண தேஹ கணதரர் தொழும் விலாச
சாந்தி மந்த்ர சூத்ரதார சாந்தி நாத சரணமையா

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

ஈரம் சேர் குணத்ரயத்தை ஈண்டு வந்து புவியில் வைத்த
சூரசேனன் என்னும் வீரன் சுதலையாம் எம் குந்துநாத

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

சிரம்வணங்கிச் சென்று தாழ சீதளக் கமலம் சூட
அறநெருங்கி அமரர் சூழும் அரப்பெயர் அசோக வாழி

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

ஆசையென்னும் வலையறுத்து ஆன்ம இன்ப சுகமளித்து
மாசறுத்துயர்ந்த சோதி மல்லிநாத அடிகள் போற்றி

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

அணிகளைந்து பணிகளைந்து ஆணவப் பொருள்களைந்த
முனிவுதீர் திகம்பரா முனி சுவ்ரதா நின் நாமம் போற்றி

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

நாகரும் வணங்கும் தெய்வ நமியென்னும் பெயர் தரித்த
சோகம் தீர சோகமர்ந்த ஏகநாத ஏத்தி நின்று

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

துவாரகா பதியுதித்து தேவரால் புகழ் புரிந்த
கேவலாவதி மணந்த நேமிநாதர் அருளமர்ந்து

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

இச்சைதீர்த்த இக்கணத்தே இன்ப வாழ்வு எய்துமென்ற
பச்சை வண்ண திவ்ய தேஹ பார்ஸ்வநாதர் பாதம் போற்றி

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

மண்டலாதிபர் வணங்கும் குண்டலாபுரத்தில் வாழும்
வண்டுலாவும் அலங்கல் தாழும் வர்த்தமான சரணம் சரணம்

ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !
ஜெய ஜெயா ! நமோஸ்துதே ! ஜெய ஜெயா நமோஸ்துதே !

No comments:

Post a Comment