ஈராறு சிந்தனைகள்
ஈராறு சிந்தனைகள்
(த்வாதச அணுப்ரேக்‌ஷா)திருவறம் வளர்க வாட்ஸ் அப் குழுவில் திரு. ரவிச்சந்திரன், போளூர் அவர்களால் தொடராக பதிவு செய்யப்பட்டதின் தொகுப்பு.


மங்களா சரணம்ணமிஊண ஸவ்வஸித்தே ஜாணுத்தம் கவிததீஹஸந்ஸாரே I

தஸ தஸ தோ தோ வ ஜிணேதஸ தோ அணுபேஹணம் போச்சே II – 1


யார் சிறந்த தியானத்தால் நீண்ட ஸந்ஸாரம் (பிறவி சுழற்சி) நஷ்டம் செய்தாரோ, இப்படிப்பட்ட எல்லா சித்தர்களுக்கும் மற்றும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களுக்கும் வணக்கம் செய்து ஈராறு சிந்தனைகளை சொல்கிறேன்.ஈராறு சிந்தனைகளின் பெயர்கள்அத்த்ரூவ மச்ரணமேகத்தமண்ண ஸந்ஸாரலோகமஸுசித்தம் I

ஆஸவஸஸம் வரநிஜ்ஜர தம்மம் போஹிம் ச சிந்தேஜ்ஜோ II-2


நிலையாமை, அடைக்கலமின்மை, தனிமை, வேறானவை, ஸந்ஸாரம் (பிறவி), உலகம், தூய்மை இன்மை, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, அறம் மற்றும் மும்மணிபெறற்கருமை. இந்த ஈராறு சிந்தனைகளை செய்யவேண்டும்.


அத்த்ருவ அனுப்ரேக்‌ஷா


வரபவண ஜாணவாஹணஸயணாஸண தேவ மனுவராயணம் I

மாதுபிதுஸஜன பிச்சஸம்பந்திணோ ய பித்வியாணிச்சா II- 3


சிறந்த மாளிகை, ஆகாய விமானம், வண்டி, படுக்கை, ஆசனம் (இருக்கை) தேவர், மனிதர், அரசர், தாய்-தந்தை, குடும்பத்தார்கள் மற்றும் சேவகர் முதலான எல்லாம் நிலையாமை ஆக இருக்கின்றன. ஒரு முறை தனியாக பிரியக்கூடியவர்கள்.
ஸாமக்கிந்தியரூவம் ஆரோக்கம் ஜோவ்வணம் பலம் தேஜம் I

ஸோஹக்கம் லாவண்ணம் ஸுரதனுமிவ ஸஸ்ஸயம் ண ஹவே II - 4

எல்லா வகையான பற்றுக்கள், புலன்கள், உருவம், ஆரோக்கியம், இளமை, பலம், உடல் ஒளி, ஸெளபாக்கியம், அழகு இந்த எல்லாம் வானவில் போல நிலை இல்லாதவை. சீக்கரம் அழியக்கூடியவை.ஜலபுப்பு தஸக்க தணுகணருசிகண ஸோஹ மிவ திரம் ண ஹவே I

அகமிந்தட்டாணா இம் பலதேவப்பஹுதி பஜ்ஜாயா II
-    5


அகமிந்தர்களுடைய பதவி மற்றும் பலதேவர்கள் முதலானவர்கள் உடைய நிலைகள் நீர்க்குமிழ், வானவில், மின்னல். மேகக் கூட்டத்தின் அழகு உருவம் போல நிலையில்லாதவை.


ஜீ வணிபத்தம் தேஹம் கீரோதயமிவ விணஸ்ஸதே ஸிக்கம் I

போகோபகோ காரணதவ்வம் ணிக்கம் கஹம் ஹோதி II  - 6


எப்பொழுதும் பாலும் நீரும் போல, ஜீவனோடு சேர்ந்து இருக்கக்கூடிய உடல், உபயோகத்திற்கு காரண ரூபமாக் த்ரவயம் (பெண்கள் முதலான) சுற்றியிருக்கும் பொருள்கள் நிலையாக எப்படி இருக்க முடியும்?.பரமட்டேண து ஆதா தேவாஸுரமனுவராயவிபவேஹிம் I

வதிரித்தோ ஸோ அப்பா ஸஸ்ஸதமிதி சிந்தய ணிச்சம் II  = 7


நிச்சயதால் தனியாக இருக்கிறது மற்றும் அந்த ஆன்மா ஸாஸ்வதமானதாக இருக்கிறது. இப்படி எப்பொழுதும் சிந்திக்க வேண்டும்.


அசரண அனுப்ரேக் ஷா


மணிமந்தோஸஹரக்கா ஹயகயரஹஓய ஸயலவிஜ்ஜாஓ I

ஜீவாணம் ண ஹி ஸரணம் திஸு லோஏ மரணஸமயம்ஹி II - 8


மரண காலத்தில் மூன்று உலகத்திலும் மணி, மந்திரம், மருந்து முதலானவை காப்பாற்றும் பொருள்களாக இல்லை. யானை, குதிரை, ரதம் மற்றும் எல்லா வித்தைகள் ஜீவன்களுக்காக அடைக்கலம் இல்லை. என்ன அர்த்தம்? மரண காலத்தில் ஜீவனைக் காப்பாற்றுவதற்கு ஸாமர்த்தியம் இல்லை.ஸக்கோ ஹவோ ஹி துக்கம், பிச்சா தேவா ய பஹரணம் வஜ்ஜம் I

அஇரவணோ கஇந்தோ இந்தஸ்ஸ ண விஜ்ஜதே ஸரணம் II – 9


சொர்க்கமே அவருடைய கோட்டையாக இருக்கிறது. தேவர்களே சேவர்களாக இருக்கிறார்கள். ஆயுதங்கள் மற்றும் ஐராவத யானை இருக்கிறது. அப்படிப்பட்ட இந்திரனுக்கு கூட மரண காலத்தில் யாரும் காப்பாற்றுவர் இல்லை.
ணவணிஹி சஉதஜரயணம் ஹயமத்தக இந்த சாஉரங்கபலம் I

சக்கேஸஸ்ஸ ண ஸரணம் பேச்சந்தோ கத்தயே காலோ II -10


ஒன்பது நவநிதிகள், பன்னிரெண்டு ரத்தினங்கள், குதிரைகள், மதம் உடைய யானைகள் மற்றும் நான்கு படை, சேனா உடைய சக்கரவர்திக்கு கூட அடைகலம் இல்லை. பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவர்களை காலம் நஷ்டம் செய்கிறது.ஜாஇஜராமரணரோகபயதோ ரக்கேதி அப்பணோ அப்பா I

தம்ஹா ஆதா ஸரணம் பந்தோதய ஸத்தகம் மவரித்தோ II – 11


எந்த காரணத்தால் ஆன்மாவுக்கு, பிறப்பு, மூப்பு, இறப்பு, நோய் மற்றும் பயம் உண்டாகின்றதோ, அந்த ஆன்மாவை காப்பாற்றுவதற்கு அந்த காரணத்தால் பந்தம், உதயம் மற்றும் ஸத்தா ரூபநிலை பெற்ற வினைகளிலிருந்து தனியாக இருக்கும் ஆன்மாவே சரணம் இருக்கிறது. ஆன்மாவினுடைய வினை இல்லாத நிலைதான் அந்த ஆன்மாக்களுக்கு பிறப்பு, மூப்பு, முதலானவைகளிலிருந்து காப்பாற்றுகிறது.அருஹா ஸித்தாஇரியா உவஜ்ஜாயா ஸாஹூ பஞ்சபரமேட்டி I

தேவிஹு சிட்டதி ஆதே, தம்ஹா ஆதா ஹூ மே சரணம் II - 12


அரஹந்தர், சித்தர், ஆசாரியர், உபாத்தியாயர் மற்றும் ஸாதுக்கள் இந்த ஐந்து பரமேட்டிகள் இருக்கிறார்கள். இந்த ஐந்து பஞ்ச பரமேஷ்டிகள் கூட தங்கள் ஆன்மாவில் வசிக்கிறார்கள். (தங்கி இருக்கிறார்கள்). ஆகையால் (நிச்சய நயத்தால்) ஆன்மாவே என் அடைக்கலமாக இருக்கிறது.ஸம்மத்தம் ஸண்ணாணம் சச்சாரித்தம் ச ஸத்தவோ சேவ I

சஉரோ சிட்டாதி ஆதே, தம்ஹா ஆதா ஹூ மே சரணம் II  - 13


ஏனெனில் நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் மற்றும் நல்ல தபம் இந்த நான்குமே ஆன்மாவில் தங்கி இருக்கின்றன. ஆகையால் ஆன்மாவே என் அடைக்கலம் ஆக இருக்கிறது.


ஏகத்வ அனுப்ரேக்ஷா


ஏக்கோ கரேதி கம்மம் ஏக்கோ ஹிந்டதிய தீஹஸந்ஸாரே I

ஏக்கோ ஜாயதி மரதிய தஸ்ஸ பலம் புந்ஜதே ஏக்கோ II – 14ஜீவன் தனியாகவே வினை சேர்க்கிறது. தனியாகவே நீண்ட பிறவிச்சுழற்சி செய்கிறது. தனியாகவே பிறக்கிறது. தனியாகவே இறக்கிறது. மற்றும் தனியாகவே வினையின் பலனை அனுபவிக்கிறது.ஏக்கோ கரேதி பாவம் விஸயணிமித்தேண திவ்வலோஹேண I

ணிரயதிரியேஸூ ஜீவோ தஸ்ஸ பலம் புந்ஜதே ஏக்கோ II - 15


ஐம்புலன்களுக்கு விஷயங்களின் தொடர்பு ரூபமாக, மிகு லோபத்தால் ஜீவன் தனியாகவே பாபம் சேர்க்கிறது. மற்றும் நரகம், விலங்கு கதியில் தனியாகவே அதன் பலனை அனுபவிக்கிறது.ஏக்கோ கரேதி புண்ணம் தம்மணிமித்தேண பத்ததாணேண I

மணுவதேவேஸூ ஜீவோ தஸ்ஸ பலம் புந்ஜதே ஏக்கோ II - 16


அறத்தொடர்பு ரூபமாக பாத்திர தானத்தால் ஜீவன் தனியாகவே புண்ணியம் சேர்க்கிறது. மற்றும் மனஷ்ய தேவ நிலையில் தனியாகவே அதன் பலனை அனுபவம் செய்கிறது.


உத்தம்பத்தம் பணியம் ஸம்மத்தருணேன ஸஞ்ஜூதோ ஸாஹூ I

ஸம்மாதிட்டி ஸாவய மஜ்ஜிம பத்தோ ஹூ விண்ணே ஒ II – 17


ணித்திட்டோ ஜிணஸமயே அவிரதஸம்மோ ஜஹண்ண பத்தோத்தி I

ஸம்மத்தரயணரஹிஒ அபத்தமிதி ஸம்பரிக்கேஜ்ஜோ II – 18


நற்காட்சி குணமுடைய ஸாது உத்தம (சிறந்த) பாத்திரம் என்று சொல்லப்படுகிறது. நற்காட்சி உடைய சிராவகர்  மத்யம பாத்திரம் என்று அறியவேண்டும். ஜின ஆகமத்தில் அவிரத ஸம்யக் திருஷ்டி (அணுவிரதம் இல்லாத ஸம்யக் திருஷ்டி)  ஜகன்ய பாத்திரம் என்று சொல்லப்படுகிறது. யார் நற்காட்சி ரத்தினம் இல்லாமல் இருக்கிறாரோ, அவர் அபாத்திரம் என்று சொல்லப்படுகிறது. இப்படி பாத்திரம் மற்றும் அபாத்திரத்தை நல்லபடி பரீட்சை செய்ய வேண்டும்.தந்ஸணபட்டா பட்டா தந்ஸணபட்டஸ்ஸ ணத்தி ணிவ்வாணம் I

ஸிஜ்ஜந்தி சரியபட்டா தந்ஸணபட்டாண ஸிஜ்ஜந்தி II – 19யார் நற்கட்சியில் இருந்து நழுவி இருக்கிறாரோ, அந்த ஆத்மா தான் நழுவி விட்டவர்கள். நற்காட்சி விட்டவர்களுக்கு மோக்ஷம் இல்லை. ஆனால், யார் சாரித்திரத்தில் இருந்து நழுவி இருக்கிறாரோ, அந்த ஆன்மா (மறுபடியும் சாரித்தரம் எடுத்து) ஸித்தர் ஆகிறார்கள்.  ஆனால் யார் நற் காட்சியில் இருந்து நழுவி இருக்கிறாரோ அந்த ஆன்மாவிற்கு ஸித்தி இல்லை. மோக்ஷம் இல்லை.ஏக்கோஹம் ணிம்மமோ ஸுந்த்தோ ணாணதந்ஸணலக்க்னோ I

ஸுத்தேயத்தமுபாதேயே மேவம் சிந்தேஇ ஸஜ்ஜதோ II - 20நான் தனியன், விருப்பம் இல்லாதவன், தூய்மை உடையவன் மற்றும் பார்த்தல், அறிதல் ரூபமான இயல்பு உடையவனாக இருக்கிறேன். ஆகையால் தூய்மையான தனியன் பாவமே (பாவனையே) அடைய வேண்டி இருக்கிறது. இப்படி ஸய்யம் உடையவர், சாதுக்கள் எப்பொழுதுமே சிந்திக்க வேண்டும்.அன்யத்வானுப்ரேக்ஷா


மாதாபிதரஸஹோதர புத்தகல்த்தாதி பந்துஸந்தோஹோ I

ஜீவஸ்ஸ ண ஸம்பந்தோ ணியகஜ்ஜவஸேண வட்டந்தி II – 21தாய், தந்தை, சகோதரர், மகன் மற்றும் மனைவி முதலான பந்துகளை உடைய சமூகம் முதலானவர்கள் ஜீவன்களுக்கு தொடர்புடையவர்கள் இல்லை. இவர்கள் எல்லாம் தன் தன் வேலைக்காக சுயநல பாவனையோடு இருக்கிறார்கள்.அண்ணோ அண்ணம் ஸோயதி மதோ த்தி மம ணாஹகோ த்தி மண்ணந்தோ I

அப்பாணம் ண ஹு ஸோயதி ஸந்ஸார மஹண்ணவே புட்டம் II - 22


இவன் என் ஸ்வாமியாக இருந்தான். அவன் இறந்தான். இப்படி கருதும் ஜீவன் பெற ஜீவன்களுக்காக முன்னே சோகப்படுகிறான். ஆனால் ஸந்ஸார ரூபமான கடலில் மூழ்கும் போது தன்னைப் பற்றிச் பேசப்படவில்லை.


அண்ணம் இமம் ஸரீராதிகம் பி ஹோஜ்ஜ பாஹிரம் தவ்வம் I

ணாணம் தந்ஸணமாதா ஏவம் சிந்தேஹி அண்ணத்தம் II – 23இந்த உடல் முதலானவை புற த்ரவ்யங்களாக இருக்கின்றன. அவை எல்லாம் என்னை விட்டு வேறாக இருக்கின்றன. பார்த்தல், அறிதல் தான் என் பொருள் இப்படி அன்யத்வ பாவனை பற்றி சிந்திப்பாயாக!


ஸந்ஸாரானுப்ரேக்ஷா


பஞ்சவிஹே ஸந்ஸாரே ஜாஇஜராமரணரோக பயஉரேம் I

ஜிணமக்கம பேச்சந்தோ ஜீவோ பரிபமதி சிரகாலம் II - 24


ஜிந பகவானால் சொல்லப்பட்ட நெறி பற்றி அறியாது இருக்கும் காரணத்தினால்  ஜீவன் நீண்ட காலமாக பிறப்பு, மூப்பு, இறப்பு நோய் மற்றும் பயத்தினால் நிரம்பி ஐந்து வகையுள்ள பிறவியில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

(த்ரவ்ய, க்ஷேத்ர, கால, பவ மற்றும் பாவ இந்த ஐந்து மாற்றல்தான் ஐந்து விதமான ஸந்ஸாரம் என்று சொல்லப்படுகின்றன)


ஸவ்வே வி போக்கலா கலு ஏகே புத்துஜ்ஜியா ஹு ஜீவனே I

அஸயம் அணந்தகுத்தோ புத்கலபரியட்ட ஸந்ஸாரே II - 25

புத்கல மாற்றம் (த்ரவ்ய மாற்றம்) ரூபமான ஸந்ஸாரத்தில் இந்த ஜீவன் தனியாகவே எல்லா புத்கலங்களையும் அனந்த முறை போகம் செய்துவிட்டு விட்டது.


க்ஷேத்ர மாற்றலின் இயல்பு


ஸவ்வம் லோயகேத்தே கமஸோ தம்ணத்தி ஜம் ண உப்பண்ணம் I

உக்காஹணேன பஹூஸோ பரிபமிதோ கேத்த ஸந்ஸாரே II - 2  6எல்லா உலக ரூபமான க்ஷேத்திரத்தில் அப்படி எந்த இடம் இல்லை. எங்கே இந்த ஜீவன் வரிசையாக பிறக்கவே இல்லை. எல்லா அவகாஹன (உடல் உயரம்) வழியால் இந்த ஜீவன் க்ஷேத்ர ஸந்ஸாரத்தில் பலமுறை சுழன்றுகொண்டு இருந்தது.
க்ஷேத்ர மாற்றலுக்கு தன்க்ஷேத்ர மாற்றல் மற்றும் பிற க்ஷேத்ர மாற்றல் பேதத்தால் இரண்டு வகையாகும். முழு லோகாகாசத்தில் வரிசையாக பிறப்பதற்கு எவ்வளவு காலம் இருக்கிறதோ அது ஸவ் தன்க்ஷேத்ர மாற்றல் ஆக இருக்கிறது. மற்றும் வரிசையாக குறைந்த அவகாஹனத்திலிருந்து உடல் உயரம் அதிகமான அவகாஹனம் வரை அடைவதற்கு எவ்வளவு காலம் ஆகிறதோ அவ்வளவு பிறக்ஷேத்ர மாற்றல் இருக்கிறது. இந்த காதையில் மேலே சொல்லப்பட்ட இரண்டு க்ஷேத்ர மாற்றல் பற்றி சொல்லப்படுகிறது.


கால மாற்றல் இயல்பு


அவஸப்பிணி உஸ்ஸப்பிணி ஸமயாவலியாஸு ணிரவஸேஸாஸு I

ஜாதோ முதோ ய பஹுஸோ பரியமிதோ கால ஸந்ஸாரே II - 27இந்த ஜீவன் அவஸர்பிணி மற்றும் உத்ஸர்பிணி காலத்தில் எல்லா ஸமயாவளிகளில் பிறந்தது. அதே போல இறந்தது. இப்படி இந்த ஜீவன் கால ஸந்ஸாரத்தில் நிறையமுறை சுழன்றது.பவமாற்றலின் இயல்பு


ணிரயாஉஜண்ணாதிஸு ஜாவது உவரில்லயாது கேவேஜ்ஜா I

மிச்சத்தஸந்ஸிதேண து பஹுஸோ வி பவட்டிதி பமிதோ II – 28மித்யாவத்தின் தொடர்பால் இந்த ஜீவன் நரக சம்பந்தமான குறைந்த ஆயுளிலிருந்து தொடங்கி கடைசி க்ரைவேயக வரையில் பவ (பிறவி) ஆயுள் அடைந்து நிறையமுறை சுழன்றது.
நரகம், விலங்கு, மனுஷ்ய மற்றும் தேவ கதியில் குறைந்த ஆயுள் எடுத்து அதிகமான ஆயுஷ்யம் வரை வரிசையாக அடைவதற்காக எவ்வளவு காலம் ஆகிறதோ அவ்வளவு ப்வப்ரத்தயம் என்று பெயர். மித்யா த்ருஷ்டி ஜீவனுடைய பிறப்பு தேவகதியில் முப்பத்தொன்று கடற்காலம் ஆயுள் உள்ள கடைசி க்ரைவேயகம் வரை மட்டுமே ஆகிறது. ஆகையால் பிறவி மாற்றல் விஷயத்தில் தேவகதியில் பிறவிகாலத்திற்கு கடைசி எல்லை க்ரைவேயகம் வரை மட்டுமே சொல்லப்படுகிறது.பாவ மாற்றல் இயல்பு


ஸவ்வே பயடிட்டிஓ அணுபாக பதேஸ பந்தடாணாணி I

ஜீவோ மிச்சத்தவஸா பமிதோ புண பாவ ஸந்ஸாரே II - 29இந்த ஜீவன் மித்யாத்வத்தின் தொடர்பால் எல்லா கர்ம ப்ரக்ருதி எல்லா ஸ்திதிகள் எல்லா அணுபாக பந்த ஸ்தானங்கள்,  மற்றும் எல்லா ப்ரதேச பந்த ஸ்தானங்களை மீண்டும் மீண்டும் அடைந்து பாவ பிறவி சுழற்சியில் சுழன்று கொண்டிருக்கிறது. (இந்தப் பிறவி சுழற்சியில் ஜீவனுடைய சுழற்சி மித்யாத்துவம் காரணமாக ஆகிறது. நற்காட்சி, ஐந்து பிறவி சுழற்சியை நஷ்டம் செய்கிறது).புத்தகலத்தணிமித்தம் அத்தம் அஜ்ஜயதி பாபபுத்திஏய I

பரிஹரதி தயாதாணம் ஸோ ஜீவோ பமதி ஸந்ஸாரே II – 30எந்த ஜீவன் மகன் மற்றும் மனைவி காரணமாக பாப எண்ணத்தோடு தனம் சம்பாதனை செய்கிறதோ, மற்றும் கருணை, தானம் செய்யாமல் விடுகிறதோ அந்த ஜீவன் ஸந்ஸாரத்தில் சுழன்று கொண்டிருக்கிறது.மம புத்தம் மமபஜ்ஜா மம தணதண்ணோ த்தி திவ்வகங்காஏ I

சஇஊண தம்ம புத்திம் பச்சா பரிபடதி தீஹஸந்ஸாரே II – 30எந்த ஜீவன் இவன் என்னுடைய மகன், இவள் என்னுடைய மனைவி, இவை என்னுடைய தனம், தானியம் இப்படி மிகு ஆசையோடு அறம் பற்றிய எண்ணம் விடுகிறதோ, அந்த ஆன்மா பிறகு நீண்ட பிறவிச் சுழற்சியில் உழல்கிறது.மிச்சோதயணே ஜீவோ நிணிந்தத் தோ ஜோண்ஹபாஸியம் தம்மம் I

குதம்ம குலிங்க குதித்தம் மண்ணந்தோ பமதி ஸந்ஸாரே II – 32


மித்யாத்வத்தின் உதயத்தால் இந்த ஜீவன் ஜினேந்திர பகவான்களால் சொல்லப்பட்ட தர்மத்தினை நிந்தனை செய்கிறது. மற்றும் கு.தர்ம, கு.லிங்க,கு.தீர்த்தம் மேலே நம்பிக்கையோடு பிறவி சுழற்சியில் சுழன்று கொண்டிருக்கிறது.ஹந்தூண ஜீவராஸிம் மஹுமம்ஸம் சேவிஊண ஸுராயாணம I

பரதவ்வ பரகலத்தம் கவரிஊண ய பமதி ஸந்ஸாரே II  - 33


ஜீவன்களுக்கு ஹிம்சை செய்து புலால்  தேன் மற்றும் கள் உண்டு (சாப்பிட்டு) மற்றும் பிற பொருள்கள், பிற பெண்கள் அபகரித்து இந்த ஜீவன் ஸந்ஸார சுழற்சியில் சுழன்று கொண்டிருக்கிறது.ஜத்தேண குணஇ பாவம் விஸயணிமித்தம் ச அஹணிஸம் ஜீவோ I

மோஹந்தயாரஸஹிஓ தேண து பரிபடதி ஸந்ஸாரே II – 34மோஹம் ரூபமாக இருட்டோடு இந்த ஜீவன் ஐம்புலன்கள் ஆசை காரணமாக விருப்பத்தோடு பாவம் செய்கிறது மற்றும் அதிலிருந்து பிறவி சுழற்சியில் உழல்கிறது.
ணிச்சி தரதாதுஸத்தய தருதஸ பியலிந்திரஸு சச்சேவ I

ஸுரணியதிரியசஉரோ சோத்தஸ மணுஏ ஸதஸஹஸ்ஸா II – 35


நித்ய நிகோதம் – இதர நிகோதம். மண் உடலி, நீர் உடலி, நெருப்பு உடலி மற்றும் காற்றுடலி இந்த ஆறு வகையுடைய ஜீவன்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஏழு இலட்சம். ப்ரதயேக வனஸ்பதி காயத்திற்கு 10 இலட்சம், விகலேந்திரியத்துக்கு (2,3,4,இந்திரிய ஜீவன்) ஆறு இலட்சம், தேவ, நாரகி மற்றும் ஐந்து இந்திரிய விலங்குகளுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 இலட்சம், அதே போல மனிதர்களுக்கு 14 இலட்சம். இப்படி எல்லாம் சேர்ந்து 84 இலட்சம் யோனிகள் இருக்கின்றன. இதில் ஸந்ஸாரி ஜீவன் சுழன்று கொண்டு இருக்கிறது.ஸஜ்ஜோகவிப்பஜோகம் லாஹாலாஹம் ஸுஹம்ச துக்கம் ச I

ஸந்ஸாரே பூதாணம் ஹோதி ஹு மாணம் தஹாவ மாணம் ச II - 36


பிறவி சுழற்சியில் ஜீவன்களுக்கு தொடர்பு, தொடர்பு போதல், லாபம், அலாபம், இன்பம், துன்பம் மற்றும் மானம், அவமானம் கிடைக்கிறது.கம்மணிமித்தம் ஜீவோ ஹிந்டதி ஸந்ஸாரகோர கந்தாரே I

ஜீவஸ்ஸ ண ஸந்ஸாரோ ணிச்சய நய விமுக்கோ II - 37வினை காரணமாக இந்த ஜீவன் பிறவி சுழற்சி ரூபமான பயங்கரமான காட்டில் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால் நிச்சய நயத்தால் ஜீவன் வினை இல்லாது இருக்கிறது. ஆகையால் அந்த ஜீவனுடைய பிறவி சுழற்சி கூட இல்லை.ஸந்ஸாரமதிக்கந்தோ ஜீவோவாதேயமிதி விசிந்தேஜ்ஜோ I
ஸந்ஸார துஹக்கந்தோ ஜீவோ ஸோ ஹேயமிதி விசிந்தெஜ்ஜோ II – 38பிறவிச் சுழற்சியிலிருந்து விடப்பட்ட ஜீவன் உபாதேயம் இப்படி சிந்திக்க வேண்டும். மற்றும் ஸந்ஸாரம் நாற்புறமும் துன்பமுடையது. ஜீவன் இதை விட வேண்டியது. இப்படி சிந்திக்க வேண்டும்.


லோகானுப்ரேக்ஷா


ஜீவாதி, பயட்டாணம் ஸம்வாஓ ஸோ ணிருச்சஏ லோகோ I

திவிஹோ ஹவேஇ லோகோ அஹமஜ்ஜிமஉட்டபே ஏண II - 39எங்கு ஜீவன் முதலான பொருள்களின் சமூகம் இருக்கிறதோ, அது உலகம் என்று சொல்லப்படுகிறது. கீழ் உலகம்,நடு உலகம் மற்றும் மேல் உலகம் என பேதமுடைய உலகம் என்று மூன்று வகைப்படும்.ணிரயா ஹவந்தி ஹேட்டா மஜ்ஜே தீவம்புராஸயோ ஸங்கா I

ஸக்கோ திஸட்டிபேஓ ஏத்தோ உட்டம் ஹவே மோக்கோ II - 40கீழே நரகம் இருக்கின்றது. நடுவில் அஸங்க்யாத் (எண்ணிக்கைக்கு மேற்பட்ட) த்வீபம், சமுத்ரம் இருக்கின்றது. மேலும் அறுபத்து மூன்று பேதமுடைய சொர்க்கம் இருக்கின்றது. மற்றும் இவைகளுக்கு மேலே மோக்ஷம் இருக்கிறது.


இக்தீஸ ஸத்த ரத்தாரி தோண்ணி ஏக்கேக்க சதுகப்பே I

தித்திய ஏக்கேக்கேந்திய ணாமா உடுஆதி தேஸட்டி II – 41


சௌதர்ம மற்றும் ஈசான சொர்க்கத்தில் முப்பத்தொன்று, ஸானத்குமார மற்றும் மாஹேந்திர கல்பத்தில் ஏழு, ப்ரம்ம மற்றும் ப்ரம்மோத்ர கல்பத்தில் நான்கு லாந்தவ மற்றும் காபிஷ்ட சொர்க்கத்தில் இரண்டு, ஸுக்ர மற்றும் மஹா ஸுக்ர கல்பத்தில் ஒன்று, ஸதார மற்றும் ஸஹஸ்ரார கல்பத்தில் ஒன்று, அதேபோல் ஆனத, ப்ராணத, ஆரண, அச்யுத, இந்த கடைசி நான்கு கல்பங்களில் ஆறு, இப்படி பதினான்கு கல்பங்கள் சேர்ந்து ஐம்பத்தி இரண்டு படலங்கள் இருக்கிறது. அடுத்து கீழ் க்ரைவேயகம், நடு க்ரைவேயகம் மற்றும் மேல் க்ரைவேயகம் ஸம்மந்தமான ஒரு இடத்திலேயும் என்று மூன்று, மூன்று அல்லது ஒன்பது க்ரைவேயகத்தில் ஒன்பது அணுதிசைகளில் ஒன்று. அதே போல அணுத்தர விமானங்களுக்கு ஒரு படலம் இருக்கிறது. இப்படி எல்லாம் சேர்த்து அறுபத்து மூன்று படலங்கள் இருக்கின்றன.அஸுஹேண ணிரயதிரியம் ஸுஹஉவஜோகேண திவிஜணர I

ஸுத்தேண லஹஇ ஸித்தம் ஏவம் லோயம் விசிந் திஜ்ஜோ II – 42அசுப உபயோகத்திலிருந்து  நரகம் மற்றும் விலங்கு கதி கிடைக்கிறது. சுப உபயோகத்திலிருந்து தேவகதி மற்றும் மனுஷ்ய கதி  சம்பந்தமான இன்பம் கிடைக்கிறது. ஸுத்தோபயோகத்திலிருந்து ஜீவன் மோக்ஷம் அடைகிறது.  இப்படி உலகம் பற்றி சிந்திக்க வேண்டும்.


அஸுசித்வானுப்ரேக்க்ஷா


அட்டிஹிம் படிபத்தம் மம்ஸவிலித்தம் தஏண ஓச்சண்ணம் I

கிமிஸங்குலேஹிம் பரியம சோக்கம் தேஹம் ஸயாகாலம்  II - 43


இந்த உடல் எலும்புகளால் செய்யப்பட்டது. மாமிசத்தால் பூசப்பட்டுள்ளது. தோலினால் மூடப்பட்டுள்ளது. கிருமிக் கூட்டங்களால் நிரப்பப்பட்டுள்ளது. மற்றும் எப்பொழுதும் கெட்டதாக இருக்கிறது.துக்கந்தம் பீ பச்சம் கலிமலபரிதம் அசேயணம் முத்தம் I

ஸ்டணப்படண ஸஹாவம் தேஹம் இதி சிந்ஏ ணிச்சம் II – 44


இந்த உடல் துர்வாசனையோடு இருக்கிறது. அருவருப்போடு இருக்கிறது. கெட்ட மலத்தினால் நிரம்பியிருக்கின்றது. மற்றும் அழுகி போதல் கரைந்து போதல் போன்ற ஸ்வாபத்துடன் இருக்கிறது. இப்படி எப்போதும் சிந்திக்க வேண்டும்.


ரஸருஹிரமம்ஸமேதட்டீமஜஜஸங்குலம் புத்த பூயகிமி பஹுலம் I

துக்கந்த மஸுசி சம்மமயமணிச்சமசேயண படணம் II – 45இந்த உடல் ரஸ, இரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மற்றும் மஜ்ஜையோடு இருக்கிறது. மூத்திரம், சீழ் மற்றும்  கிருமிகளால் நிரம்பி இருக்கிறது. துர்வாசனையோடு இருக்கிறது. அபவித்ரமாக இருக்கிறது. தோலோடு இருக்கிறது. நிலையாமையாக இருக்கிறது. ஜடமாக இருக்கிறது. அழியக்கூடியதாக இருக்கிறது.தேஹாதோ வதிரித்தோ கம்மவிரஹிஓ அணந்த ஸுஹ ணிலயோ I

சோக்கோ ஹவேஇ அப்பா இதி ணிச்சம் பாவணம் குஜ்ஜா II – 46


ஆன்மா இந்த உடலில் இருந்து தனியாக இருக்கிறது. விநாயகன் இல்லாது  இருக்கிறது. அனந்த  இன்பத்திற்கு இடமாக இருக்கிறது. மற்றும் பரிசுத்தமாக இருக்கிறது. இப்படி எப்பொழுதும் சிந்திக்க வேண்டும்.ஆஸ்ரவானுப்ரேக்‌ஷா


மிச்சசத்தம் அவிரமணம் கஸாயஜோகா ய ஆஸவா ஹோந்தி I

பண பண சஉதியபேதா ஸம்மம் பரிகித்திதா ஸமஏ II – 47


மித்யாத்வம், அவிரதி, கஷாயம் மற்றும் யோகம் ஆஸ்ரவங்கள் ஆக இருக்கின்றன. இந்த மித்யாத்வம் முதலான ஆஸ்ரவங்கள் வரிசையாக ஐந்து, நான்கு மற்றும் மூன்று பேதமுடையவையாக இருக்கின்றன. ஆகமத்தில் இதுபற்றி தெளிவாக வர்ணனை செய்யப்பட்டுள்ளது.


ஏயந்த விணய விவரிய சந்ஸய மண்ணாணமிதி ஹவே பஞ்ச I

அவிரமணம் ஹிந்ஸாதி பஞ்சவிஹோ ஸோ ஹவஇ ணியமேண II - 48


ஏகாந்த, விநய, விபரீத, ஸம்ஸய மற்றும் அஞ்ஞானம் இப்படி மித்யாத்வம் ஐந்து வகைப்படும். அதே போல இம்சை முதலான அவிரதி நிச்சயமாக ஐந்து வகைப்படும்.


கோஹோ மாணோ மாயா லோஹோவிய ச உவ்விஹம் கஸாயம் கு I

மண வசிகாஏண புணோ ஜோகோ திவியப்ப மிதி ஜாணே II - 49


குரோதம்,மானம்,மாயை மற்றும் லோபம் இந்த நான்கு பேதமுடையதாக கஷாயம் இருக்கிறது. அதே போல மனம்,வசனம், மற்றும் காயம் பேதத்திலிருந்து யோகம் மூன்று வகைப்படும். இப்படி அறிய வேண்டும்


அஸுஹேதர பேதேண து ஏக்கேகம் வண்ணி தம் ஹவே துவிஹம் I

ஆஹாராதி ஸண்ணா அஸுஹமணம் இதி விஜாணேஹி II - 50


மனம், வசனம், காயம் இந்த மூன்று யோகத்திலிருந்து ஒவ்வொரு யோகமும் அசுப மற்றும் சுப பேதத்தினால் இரண்டு வகையாக சொல்லப்பட்டது. ஆஹாரம் (ஆஹாரம்,பயம்,மைத்துனம்,பரிக்ஹம்) முதலான ஸஞ்ஞாக்கள் இருத்தல் அசுபனம் ஆகும். இப்படி அறிய வேண்டும்.


கிண்ஹாதி திண்ணி லேஸ்ஸா கரண ஜஸோக்கேஸு கித்தி பரிணாமோ I

ஈஸா விஸாத பாவோ அஸுஹமணம்ம்ம்த்திய ஜிணா வேந்தி II - 51


கிருஷ்ணாதி (கிருஷ்ண, நீல, காபோத) மூன்று லேஸ்யைகள் ஐம்புலன்களால் தோன்றிய இன்பத்தில் தீவிரமான ஆசை, பொறாமை,பாவனை மற்றும் துக்கப்படுதல் அசுபமனம் ஆக இருக்கிறது. இப்படி ஜிநேந்திர தேவர் அறிகிறார்கள்.ராகோ தோஸோ மோஹோ ஹாஸ்ஸாதீணோ கஸாய பரிணாமோ I

தூலோவா ஸுஹுமோவா அஸுஹமணோ த்தி ய ஜிணா வேந்தி II – 52


விருப்பு, வெறுப்பு, மோகம் அதேபோல சிரிப்பு முதலான ஒன்பது கஷாயங்கள் ரூபமான பரிணாமம் ஸ்தூலம் (பெரியதாக) ஆக இருந்தாலும் சூஷ்மம் (சிறியதாக) ஆக இருந்தாலும் அஸுபமனம் ஆகும். இப்படி ஜிநேந்திர தேவர் அறிகிறார்கள்.பத்தித்திராய சோரகஹாஓ வயணம் வியாண அஸுஹமிதி I

பந்தண சேதண மாரணகிரியா சா அஸுஹகாயேத்தி II  - 53போஜன (உணவு) கதை, ஸ்திரி (பெண்கள்) கதை, ராஜ்ய (அரசியல்) கதை, சோர் (திருடு) கதை  இந்த நான்குமே அசுப பேச்சாக இருக்கிறது. இப்படி அறியவேண்டும். அதேபோல கட்டுதல், குத்துதல் மற்றும் கொல்லுதல் ரூபமாக எந்த கிரியை (செயல்) இருக்கிறதோ அது அசுப உடலாக இருக்கிறது.


மோத்தூண அஸுஹபாவம் புவ்வுத்தம் னிரவேஸ ஸதோ தவ்வம் I

வதஸமிதிஸீலஸஜ்ஜம பர்ணாமம் ஸுஹமணம் ஜாணே II - 54


முன் சொல்லப்பட்ட அஸுப பாவம் மற்றும் அஸுப த்ரவ்யம்  முழுமையாக விட்டு விரதம், ஸமிதி,  சீலம் மற்றும் ஸய்யம் (கட்டுப்பாடு) ரூபமாக பரிணாமங்கள் இருத்தல் ஸுப மனமாக இருக்கிறது. இப்படி அறியவேண்டும்.


ஸந்ஸார சேதகாரணவயணம் ஸுஹவயணமிதி ஜிணுதிட்டம் I

ஜிணதேவாஸு பூஜா ஸுஹகாயம் த்தி ய ஹவே சேட்டா II - 55எந்த பேச்சு பிறவிச்சுழற்சி நஷ்டம் செய்வதற்கு காரணமாக இருக்கிறதோ அது ஸுப பேச்சாகும். இப்படி ஜிநேந்திர தேவர் அருளியுள்ளார். அதேபோல ஜிநேந்திர தேவர் முதலானவர்களின் (பஞ்ச பரமேஷ்டி அல்லது நவ தேவதாக்கள்) பூஜை ரூபமாக எந்த உடல் சம்பந்தமான க்ரியை இருக்கிறதோ அது ஸுப காயமாக இருக்கிறது.

ஜம்ம ஸமுத்தோ பஜுதோஸ பிசியே துக்க ஜலசராகிண்ணே I


ஜீவஸ்ஸ பரிப்பமனம் கம்மஸவகாரணம் ஹோதி II – 56பல குற்றம் ரூபமான அலைகளோடு மற்றும் துன்பம் ரூபமான நீர்வாழ் ஜீவன்கள் நிரம்பிய பிறவி ரூபமான கடலில் ஜீவனுடைய எந்த சுழற்சி இருக்கிறதோ அந்த சுழற்சி கர்ம ஆஸ்ரவத்திற்கு காரணமாக ஆகிறது. அர்த்தம் என்னவென்றால் கர்மாஸ்ரவத்தின் காரணமாகத்தான் ஜீவனுக்கு ஸந்ஸார கடலில் சுழற்சி ஆகிறதுகம்மாஸவேண ஜீவோ பூடதி ஸந்ஸாரஸாகரே கோரே I

ஜம் ணான வஸம் கிரியா மோக்கணிமித்தம் பரம்பரயா II - 57கர்மாஸ்ரவத்திற்கு காரணமான ஜீவன் ஸந்ஸாரம் ரூபமான பயங்கர கடலில் ஆழ்ந்து போகிறது. எந்த செயல், ஞானம், ரூபமாக (ஞானமொடு) ஆகிறதோ அந்த செயல் பரம்பரையில் மோக்ஷத்திற்கு காரணமாக அமைகிறது.ஆஸவஹேதூ ஜீவோ ஸம்மஸமுத்தே ணிமஜ்ஜதே கிப்பம் I

ஆஸவகிர்யா தம்ஹா மோக்கணிமித்தம் ண சிந்தேஜ்ஜோ II - 58ஆஸ்ரவத்திற்கு காரணமான ஜீவன் ஸந்ஸாரக்கடலில் சீக்கிரம் மூழ்கிவிடுகிறது. ஆகையால் ஆஸ்ரவ ரூபமான கிரியை (செயல்) மோக்ஷத்திற்கு காரணம் இல்லை. இப்படி சிந்திக்க வேண்டும்.பாரம் பஜ்ஜாஏண து ஆஸவகிர்யாஏ ணத்தி நிணிவ்வாணம் I

ஸந்ஸார கமண காரண மதி ணித்தம் ஆஸவோ ஜாண II - 59

பரம்பரையில் கூட ஆஸ்ரவ ரூபமான கிரியை வழியால் நிர்வாணம் ஆகாது. (மோக்ஷம் இல்லை). ஆஸ்ரவம் பிறவி சுழற்சி காரணமாக இருக்கிறது. ஆகையால் நிந்தனைக்கு உரியதாக இருக்கிறது. இப்படி அறியவேண்டும்.
(பாவ அர்த்த விளக்கம்)


ஆஸ்ரவம் பிறவி சுழற்சிக்கு காரணம் என்பது உண்மைதான். ஆனால் ஒரே நேரத்தில் நான்கு செயல்கள் நடக்கிறது. எப்பொழுது ஆஸ்ரவ க்ரியை நடக்கிறதோ, அப்போது அதனுடன் பந்தம், ஸம்வரை, நிர்ஜரை என மூன்றும் ஆகிறது. பாப க்ரியையில் ஆகும் பாப் ஆஸ்ரவம் துன்பத்திற்கு காரணம் ஆகும். ஆனால் தானம், பூஜை, விரதம் பற்றி செயல் இவை எல்லாம் புண்ணிய ஆஸ்ரவத்திற்கு காரணமாகும். புண்ணியம் என்ன அர்த்தம்? தீர்த்தங்கர பதவி, விரதம் ஏற்பதற்கு நல்ல சூழ்நிலையை அமைகிறது. இது புண்ணியத்தால் ஏற்படுகிறது.இது மட்டுமல்ல "புண்ணிய பலா அரஹந்தா" என்று கூட சொல்லப்படுகிறது. என்ன அர்த்தம்? புண்ணியத்திற்கு உத்க்ருஷ்ட நிலை அரஹந்த நிலை என அறிய வேண்டிம். புண்ணிய ஆஸ்ரவம் ஆகும் போது உடனே பந்தம் (கட்டுதல்) ஆகிறது. மற்றும் அப்போது பாபத்திற்கு ஸம்வரை கூட ஆகிறது. எப்பொழுதுமே கர்ம நிர்ஜரை ஆகிறது. கர்மம் வருகிறது. பலன் தருகிறது. போகிறது. இப்படி தர்ம முயற்சியால் தானம், பூஜை, விரதம் முதலானவை செய்யும் போது நிர்ஜரை ஆகிறது. அப்பொழுது ஆஸ்ரவம் நடக்கும்போதுகூட இந்த அவிபாக நிர்ஜரை வழியால் இந்த ஆன்மா மோக்ஷம் அடைகிறது. அதனால் தானம், பூஜை, விரதம் ரூபமாக க்ரியை ஆஸ்ரவத்திற்கு மட்டுமே காரணமில்லை. மோக்ஷத்திற்கு கூட காரணமாக இருக்கிறது. இப்படி அறியவேண்டும்.புவ்வுத்தாஸவ பேதா ணிச்சயணய ஏண ணத்தி ஜீவஸ்ஸ I

உஹயாஸவ ணிம்முக்கம் அப்பாணம் சிந்தஏ ணிச்சம் II – 60


முன்பு சொல்லப்பட்ட ஆஸ்ரவத்தின் பேதங்கள் நிச்சய நயத்தால் ஜீவனுக்கு இல்லை. ஆகையால் ஆன்மா இரண்டு வகை ஆஸ்ரவம் இல்லாமல் இருக்கிறது. இப்படி சிந்திக்க வேண்டும்.ஸம்வரானுப்ரேக்ஷா


சலமலினமகாடம் ச வஜ்ஜிய ஸம்மத்திடக வாடேண I

மிச்சத்தாஸவதார ணிரோஹோ ஹோதித்தி ஜிணேஹி ணித்திட்டம் II – 61சல,மலின,அகாடம் இவ்வாறான குற்றங்களை விட்டு  ஸம்யக்தவ ரூபமாக  திடமான கதவுகள் வழியால் மித்யாத்வ ரூபமான ஆஸ்ரவத்தின் வழி தடைபடுகிறது. இப்படி ஜிநேந்திர பகவான் அருளியுள்ளார்கள்.பஞ்சமஹவ்வய மணஸா அவிரமணணி ரோஹணம் ஹவே ணியமா I

கோஹாதி ஆஸவாணம் தாராணி கஸாயரஹிய பல்லகேஹி II - 62


பஞ்சமஹாவிரதங்கள் உடைய மனத்தினால் அவிரதி ரூமான ஆஸ்ரவம் நிச்சயமாக தடைபடுகிறது. மற்றும் குரோதாதி கஷாயம் ரூபமான ஆஸ்ரவங்களின் த்வாரம் கஷாயம் இல்லாத கதவுகளில் இருந்து அடைபடுகிறது.ஸுஹஜோகஸ்ஸ பவித்தி ஸம்வரணம் குணதி அஸுஹஜோகஸ்ஸ I

ஸுஹஜோகஸ்ஸ ணிரோஹோ ஸுத்துவஜோகண ஸம்பவதி II – 63


ஸுபஉபயோக செயல் அஸுப உபயோகத்தின் செயலை ஸம்வரம் செய்கிறது. (தடுக்கிறது). மற்றும் ஸுத்தோபயோகம் வழியால் ஸுபோபயோகம் தனக்குத்தானேவே தடைபடுகிறது.ஸுத்துபஜோகேண புணோ தம்மம் ஸுக்கம் ச ஹோதி ஜீவஸ்ஸ I

தம்ஹா ஸம்வரஹேதூ ஜ்ஜோணோ த்தி விச்ந்தஏ ணிச்சம் II – 64ஸுத்தோப யோகத்திலிருந்து ஜீவன்களுக்கு தர்ம தியானம் மற்றும் சுக்ல தியானம் ஆகின்றது. ஆகையால் தியானம் ஸம்வரத்திற்கு காரணமாக இருக்கிறது. இப்படி சிந்திக்க வேண்டும்.ஜீவஸ்ஸ ந்ண ஸம்வரணம் பரமட்டணஏண ஸுத்தபாவாதோ I

ஸம்வரபாவவிம்முக்கம் அப்பாணம் சிந்தஏ ணிச்சம் II - 65பரமார்த்த அல்லது நிச்சய நயத்தால் ஜீவனுக்கு ஸ்ம்வரம் இல்லை.ஏனெனில் அது ஸுத்த பாவமோடு இருக்கிறது. அதனால் ஆன்மா எப்பொழுதும் ஸம்வர பாவம் இல்லாதது என சிந்திக்க வேண்டும்.நிர்ஜரானுப்ரேக்‌ஷா


பந்தபதேஸக்கலணம் ணிஜ்ஜாரணம் இதி ஜிணேஹி பண்ணத்தம் I

ஜேண ஹவே ஸம்வரணம் தேண து ணிஜ்ஜரணமிதி ஜாண II - 66


கட்டிருக்கின்ற வினைகள் (கர்ம பிரதேசங்கள்) நீங்குதல் நிர்ஜரை ஆகும். இப்படி ஜிந பகவான் அருளியுள்ளார்கள். எந்த காரணத்தால் ஸம்வரை ஆகிறது. அதே காரணத்தால் நிர்ஜரையும் கூட ஆகிறது. இப்படி அறிய வேண்டும்.


ஸா புண துவிஹா ணேயா ஸகாலபக்கா தவேண கயமாணா I

சதுகதியாணம் படமா வயஜுத்தாணம் ஹவே விதியா II - 67

அந்த நிர்ஜரை இரண்டு வகைப்படும். ஒன்று தன் உதய காலம் வரும்போது கர்மங்கள் தானகவே பக்குவம் அடைந்து விலகுவது (ஸவிபாக நிர்ஜரை) மற்றும் இரண்டாவது தபம் வழியால் (தன் காலத்திற்கு முன்) விலகுவது (அவிபாக நிர்ஜரை) இருக்கிறது. இதிலிருந்து முதல் வகையான நிர்ஜரை நான்கு கதியில் உள்ள ஜீவன்களுக்கு ஆகின்றது. மற்றும் இரண்டாவது நிர்ஜரை விரதம் உடைய ஜீவன்களுக்கு ஆகின்றது.


தர்மானுப்ரேக்‌ஷா


ஏயாரஸதஸபேயம் தம்மம் ஸம்மத்தபுவ்வயம் பணியம் I

ஸாகாரணகாராணம் உத்தமஸு ஹஸம் பஜுத்தேஹிம் II – 68பதினொன்று மற்றும் பத்து பேதமுடைய இல்லறத்தார் மற்றும் முனிகளுடைய தர்மம் உத்தம(சிறந்த) சுக செல்வமுடைய ஜிநேந்திர பகவான்களால் சொல்லப்படுகிறாது. மற்றும் அந்த தர்மம் ஸம்யக் தர்சனமோடு ஆகிறது.தந்ஸணவயஸாமாஇயபோஸஹஸச்சிதராயபத்தே ய I

பம்ஹாரம்பபரிக்கஹ அணிமண முத்தட்ட தேசவிரதே தே II - 69தர்சன், விரதிகன், சாமாயிகன், ப்ரோஷரன், ஸசித்த தியாகம், இராத்திரி புக்தி தியாகம், ப்ரம்மசரியம், ஆரம்ப தியாகம், பரிரஹ தியாகம், அனுமதி தியாகம் மற்றும் உத்திஷ்ட தியாகம் இந்த பதினொன்று தேசவிரதம், இல்லறத்தார்களுடைய விரதமாக இருக்கின்றன.உத்தமகமமத்தவஜ்ஜவஸச்சஸ உச்சம் ச ஸஜ்ஜமம் சேவ I

தவசாக மகிச்சண்ஹம் பம்ஹா இதி தசவிஹம் ஹோதி II – 70உத்தம க்ஷமா, உத்தம மார்தவம், உத்தம ஆர்ஜவம், உத்தம சத்யம், உத்தம செளசம், உத்தம ஸய்யம், உத்தம தபம், உத்தம தியாகம், உத்தம் ஆகிஞ்சன்யம் மற்றும் உத்தம பிரம்மச்சரியம் இப்படி முனி தர்மத்திற்கு பத்து தர்ம பேதங்கள் இருக்கின்றன.
கோஹூப்பத்திஸ்ஸ புணோ, பஹிரங்கம் ஜதி ஹவேதி ஸக்காதம் I

ண குணதி கிச்சி வி கோஹோ, தஸ்ஸ கமா ஹோதி தம்மோதத்தி II – 71


குரோதத்தின் உற்பத்திக்கான நேராக புறக்காரணம் இருக்கும் போது கூட கொஞ்சம் கூட கோபம் செய்யமாட்டார்களோ அவருக்கு க்ஷமா தர்மம் ஆகின்றது.


குலரூவஜாதி புத்திஸு தபஸுதஸீவேஸு காரவம் கிம் சி I

ஜோ ண வி குவ்வதி ஸமணோ மத்தவதம்மம் ஹவே தஸ்ஸே II - 72எந்த ஸாது குலம், உருவம், ஜாதி, புத்தி, தவம், சுருதம் மற்றும் சீலத்தின் விஷயத்தில் கொஞ்சம் கூட கர்வம் செய்ய மாட்டாரோ அவருக்கு மார்தவ தர்மமாகிறது.மோத்தூ ண குடிலபாவம் ணிம்மலஹிதஏண சரதி ஜோ ஸமணோ I
அஜ்ஜவதம்மம் தஇயோ தஸ்ஸ து ஸம்பவதி ணியமேண II – 73


எந்த ஸாது குடில (மாயாசார) பாவம் விட்டு நிர்மலமான எண்ணத்தோடு ஒழுகுகிறாரோ அவருக்கு நிச்சயமாக, மூன்றாவதான ஆர்ஜவ தர்மம் இருக்கிறது.


பரஸத்தாவயகாரணவயணம் மோத்தூண ஸபரஹிதவயணம் I

ஜோ வததி பிக்கு துரியோ தஸ்ஸ து தம்போ ஹவே ஸச்சம் II – 74


யார் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய பேச்சுவிட்டு தனக்கும், பிறருக்கும் நன்மை செய்யும் வசனம் பேசுகிறாரோ அந்த ஸாதுக்களிடம் நான்காவதான சத்திய தர்மம் ஆகிறது.


கங்காபாவணிவித்திம் கிச்சா வேரக்கபாவணா ஜுத்தோ I

ஜோ வட்டதி பரமமுனி தஸ்ஸது தம்மோ ஹவே ஸோச்சம் II - 75எந்த சிறந்த முனி காங்க்ஷா  பாவனையிலிருந்து தூரமாகி வைராக்கிய பாவமோடு இருக்கிறாரோ அவரிடம் சௌச இருக்கிறது.வதஸமிதி பாலணாஏ தந்டச்சாஏண இந்தியஜஏண I

பர்ணமமாணஸ்ஸ புணோ ஸஜ்ஜம தம்மோ ஹவே ணியமா II - 76


எண்ணம், பேச்சு,உடல் (மன, வசன, காய) செயல் ரூபமாக தண்டம் (தேவையற்றவை) தியாகம் செய்து மற்றும் இந்திரியங்கள் மேல் கட்டுப்பாடு வைத்து யார் விரதம் (அஹிம்சை, சத்யம், அசௌகரியம், ப்ரம்மசரியம், அபரிக்ரஹம்) அதே போல ஸமிதிகள் (ஈர்யா, பாஷா, ஏஷணா, ஆதாபன, நிக்ஷேபணா, ப்ரதிஷ்டாபன) பாவனை ரூபமாக ஒழுக்கமொடு இருக்கிறாரோ அவருக்கு நிச்சயமாக ஸய்யம தர்மம் ஆகிறது.விஸயகஸாய விணிக்கஹபாவம் காஊண ஜ்ஜாண சஜ்ஜாஏ I

ஜோ பாவஇ அப்பாணம் தஸ்ச தவம் ஹோதி ணியமேண II – 77


விஷயம் மற்றும் கஷாயம் தடுத்தல் ரூபமான பாவமோடு யார் தியானம் மற்றும் ஸ்வாத்யாயம் ரூபமான ஆன்மா பாவனையோடு இருக்கிறாரோ அவருக்கு நிச்சயமாகத் தப தர்மம்  ஆகிறது.ணிவ்வேகதியம் பாவஇ மோஹம் சஇஉண ஸவ்வதவ்வேஸு I

ஜோ தஸ்ஸ ஹவே சாகோ, இதி பணிதம் ஜிணவரிம் தேஹிம் II – 78யார் எல்லா த்ரவியங்களின் விஷயங்கள் பற்றி மோஹம் த்யாகம் செய்து ( ஸந்ஸாரம், சரீரம் மற்றும் மோஹம் ரூபமாக) மூன்று வகையுள்ள நிர்வேகத்திற்கு பாவனை செய்கிறாரோ அவருக்கு த்யாக தர்மம் ஆகிறது. இப்படி ஜிநேந்திர பகவான் அருளியுள்ளார்.ஹோஊணய ணிஸ்ஸங்கோ ணியபாவம் ணிக்கஹித்து
ஸுஹதுஹதம் I

ணித்தம்தேண து வட்டதி அணயாரோ தஸ்ஸ கிம்சணஹம் II - 79எந்த அனகார் (முனி) நிஸ்ஸங்க பற்று தியாகம் செய்து இன்பம் மற்றும் துன்பம் தரக்கூடிய தன் பாவங்கள் அடக்கம் செய்கிறாரோ அவர் நிர்க்ருந்த ஆக இருக்கிறார்கள். அல்லது எவர் இஷ்ட, அனிஷ்டம் பற்றி விகல்பம் இல்லாதவராக இருக்கிறாரோ அவருக்கு ஆகிஞ்சன்யம் தர்மம் இருக்கிறது.ஸவ்வங்கம் பேச்சம்தோ, இத்திணம் தாஸு முயதி துப்பாவம் I

ஸோ பம்ஹசேர பாவம், ஸக்கதி கலு துத்தரம் தரிதும் II - 80யார் பெண்களுடைய எல்லா அங்கங்கள் (உருவம்) பார்க்கும்போது கூட அதில் கெட்ட பாவம் விடுகிறாரோ அல்லது எந்த வகையிலும் விகார பாவம் அடைய மாட்டாரோ அந்த (ஆன்மா) நிச்சயத்தால் ரொம்ப கடினமான ப்ரம்மச்சரியம் தரிப்பதற்கு சாமர்த்தியமாக இருக்கிறார்கள்.ஸாவயதம்மம் சத்தா ஜதிதம்மே ஜோ ஹு வட்டஏ ஜீவோ I

ஸோணைய வஜ்ஜதி மோக்கம் தம்மம்‌ இதி சிந்தஏ ணிச்சம் II – 81எந்த ஆன்மா (முன் சொல்லப்பட்ட பதினொன்று பிரதிமா சம்பந்தமான நிலைகள் ரூபமாக) சிராவக தர்மம் விட்டு (உத்தம க்ஷமாதி பத்து லக்ஷணம்) முனி தர்மம் தரிக்கிறாரோ அவரை மோக்ஷம் விடுவதில்லை. அவருக்கு மோக்ஷம் கண்டிப்பாக கிடைக்கிறது. இப்படி எப்பொழுதும் தர்மம் பற்றி சிந்திக்க வேண்டும்.
இல்லறத்தார் தர்மம் பரம்பரையில் மோக்ஷத்திற்கு காரணமாக இருக்கிறது. மற்றும் முனி தர்மம் நேராக மோக்ஷத்திற்கு காரணமாக இருக்கிறது. மேல்படி போன்ற முனிதர்மம் ஏறுவதற்காக கீழ்படி போன்ற இல்லறத்தார் தர்மம் விட்டு முக்தி மாடிப் பக்கம் போகிறார்கள். இப்படி போனால் கண்டிப்பாக அந்த முனிகளுக்கு மோக்ஷம் கிடைக்கிறது. ஆகையால் எல்லா பவ்ய ஆன்மாக்களும் நற்காட்சியோடு இல்லறத்தார் தர்மம் பாலித்து முனிதர்மம் அடைந்து முக்திக்காக மோக்ஷ வழியில் செல்ல வேண்டும்.ணிச்சயணஏண ஜீவோ ஸாகாரணகாரதம் மதோ பிண்ணோ I

மஜ்ஜத்த பாவணாஏ ஸுத்தப்பம் சிந்தஏ  ணிச்சம் II – 82


நிச்சய நயத்தினால் ஜீவன் இல்லறத்தார் தர்மம் மற்றும் முனி தர்மத்திலிருந்து தனியாக இருக்கிறது. ஆகையால் இரண்டு தர்மத்தில் மாத்யஸ்த (சம) பாவனை வைத்து (ஹே! முனிகளே) எப்பொழுதும் சுத்த ஆன்மா பற்றி சிந்திக்க வேண்டும்.


போதி துர்லப பாவனா


உபஜ்ஜதி ஸண்ணாணம் ஜேண உவாஏண தஸ்ஸு வாயஸ்ஸ I

சிந்தா ஹவேஇ போஹோ அச்சந்தம் துல்லஹம் ஹோதி II - 83


எந்த உபாயத்திலிருந்து ஸம்யக் ஞானம் தோன்றுகிறதோ அந்த உபாயம் பற்றி கவலை இருத்தல் போதி எனப்படும். இந்த போதி மிகவும் துர்லபமாக இருக்கிறது.


கம்முதயஜ பஜ்ஜாயாம் ஹேயம் காஓவஸமிய ணாணம் து I

ஸகதவ்வமுவாதேயம் ணிச்சயத்தி ஹோதி ஸண்ணாணம் II – 84க்ஷாயோபசமிக ஞானம் கர்ம உதயத்திலிருந்து தோன்றும். பரியாயம் ரூபமாக இருக்கிறது. அதனால் நிச்சயத்தால் அந்த ஞானம் விடவேண்டியதாக இருக்கிறது. மற்றும் தன் ஆத்மத்ரவ்யம் ஏற்க தக்கதாக இருக்கிறது. இப்படி நிச்சயம் செய்தால் ஸம்யக் ஞானமாகும்.


மூலுத்தரபயடிஓ மிச்சத்தாதி அஸங்கலோகபரிமாணா I

பரதவ்வம் ஸகதவ்வம் அப்பா இதி ந்ணிச்சயணஏண II – 85மித்யாத்வம் தொடங்கி அஸங்க்யாத் லோக ப்ரமாணம் உலக அளவு கர்மங்களுடைய மூல மற்றும் உத்தர ப்ரக்ருதிகள் இருக்கின்றன. அவை பிறத்ர்வயமாக இருக்கின்றன. மற்றும் ஆத்மா தன் த்ரவ்யமாக இருக்கிறது. இப்படி நிச்சய நயத்தால் சொல்லப்படுகிறது.ஏவம் ஜாயத்தி ணாணம் ஹேயமுவாதேய ணிச்சயே ணத்தி I

சிந்திஜ்ஜஇ முணி போஹிம் ஸந்ஸாரவிர மணட்டே ய II - 86


இப்படி தன் த்ரவ்யம் மற்றும் பிற த்ரவ்யம் பற்றி சிந்தனை செய்யும் போது ஹேய (விடத்தக்கது) மற்றும் உபோதேய (ஏற்க தக்கது) பற்றி ஞானம் ஆகிறது. அதாவது பிற திரவியம் விடத்தக்கது. தன் திரவியம் ஏற்கத் தக்கது. நிச்சய நயத்தில் ஹேய மற்றும் உபோதேய சம்மந்தமான விகல்பம் இல்லை. பிறவி சுழற்சியை தடுப்பதற்காக ஹே! முனி போதியை சிந்திப்பாயாக.வாரஸ அனுவேக்காஓ பச்சகாணம் தஹேவ படிக்கமணம் I

ஆலோயணம் ஸமாஹிம் தம்ஹா பவேஜ்ஜ அனுவேக்கம் II - 87இந்த பன்னிரண்டு அனுப்ரேக்‌ஷகளே ப்ரத்க்யானம், ப்ர்திக்கரமணம், ஆலோசனா மற்றும் ஸமாதியாக இருக்கின்றன. ஆகையால் இந்த அனுப்ரேக்‌ஷகளை எப்பொழுதும் சிந்திக்க வேண்டும்.ரத்திதிவம் படிகமணம் பச்சக்காணம் ஸ்மாஹிம் ஸாமாஇயம் I

ஆலோயணம் பகுவ்வதி ஜதி விஜ்ஜதி அப்பணோ ஸத்தி II – 88தன் சக்திக்கு ஏற்றபடி இரவும், பகலும் ப்ரதிக்ரமனம், ப்ரத்க்யானம், ஸமாதி (தியானம்), ஸாமாயிகம் மற்றும் ஆலோசனை செய்யவேண்டும்.

நம்முடைய சக்தி மறைக்காமல் எப்பொழுதும் தன்னுடைய ஆவஸ்யங்களில் ஆழ்ந்து போக வேண்டும்.


மோக்ககயா ஜே புரிஸா அணாஇகாலேண வாரஸனுவேக்கம் I

பர்பாவிஊண ஸம்மம் பணமாமி புணோ புணோ தேஸிம் II – 89அனாதிகாலமாக எந்த புருஷர்கள் பன்னிரண்டு அனுப்ரேக்‌ஷைகளை நல்லபடி சிந்தனை செய்து மோக்ஷம் அடைந்தார்களோ அவர்களை நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.கிம் பலவிஏண பஹுணா ஜே ஸித்தா ணரவரா கயே காலே I

ஸிஜ்ஜிஹதி ஜேவி பவியா தம் ஜாணஹ தஸ்ஸ மாஹப்பம் II - 90


நிறைய சொல்வதினால் என்ன லாபம்? சென்ற காலத்தில் எத்தனை சிறந்த புருஷர்கள் ஸித்த நிலை அடைந்தார்களோ மற்றும் எதிர்காலத்தில் ஸித்தி அடைவார்களோ அவை யாவும் அனுப்ரேக்‌ஷைகளின் பெருமை தான் என்று அறிய வேண்டும்.இதி ணிச்சயவவஹாரம் ஜம் பணியம் குந்தகுந்த முணிணாரஹே I

ஜொ பாவஇ ஸுத்தமணோ ஸோ பாவஇ பரமணிவ்வாணம் II - 91இப்படி குந்தகுந்த முனிராஜ் மூலமாக நிச்சயம் மற்றும் வியவஹாரத்தின் துணையோடு ந்த வர்ணனை சொல்லப்பட்டதோ, யார் அது பற்றி தூய்மை எண்ணத்தோடு பாவனை செய்கிறாரோ அவர் பரம நிர்வாணம் (சிறந்த மோக்ஷம்) அடைவார்கள்.இப்படி குந்த குந்த ஆசாரியார் அருளிய வாரஸ அனுவேக்கா க்ரந்தம் முடிவு பெற்றது.


பவ்யர்கள் தினம் தினம் ஸ்வாத்யாயம் செய்து ஆன்ம முன்னேற்றம் பெறவேண்டும் என்பது மங்கல பாவனை ஆகும்.வாரஸ அணுவேக்கா

ஸ்ரீ குந்த குந்த ஆசாரியர்

No comments:

Post a Comment