மங்களாஷ்டகம்




ஸ்ரீஜிநாய நம:


 மங்களாஷ்டகம்








இந்த மங்களாஷ்டகம் சொல்லப்படாத பூஜை,  விதானமே நம் ஆலயத்திலும், வீட்டிலும்  இல்லை. துவக்கத்தில் இம்மந்திரத்தை சொல்லித்தான் பூஜையை ஆரம்பிப்பார்கள். பத்து சரணங்களைக் கொண்டது.

*****************
  


                    

                        
ஸ்ரீ மன் நம்ர  சுராசுரேந்த்ரமகுட ப்ரத்யோத ரத்னப்ரபா


பாஸ்வத்பாத நகேந்தவ: பிரவசனாம் போதீந்த வஸ்தாயிந:


யேஸர்வேஜிநஸித்த சூர்யநுகதா: தே பாடகா: ஸாதவ:


ஸ்துத்யாயோகிஜினைஸ்ச பஞ்சகுரவ: குர்வந்துமே மங்களம்.

 ( 1 )


கருத்துரை
"""""""""""""""""""

தேவர்களான பவண வியந்தர ஜ்யோதிஷ்க  கல்பவாசிகள் என்னும் நான்கு விதமான தேவேந்திரர்களால் வணங்கப்படும் பாத கமலங்களில் அந்த தேவர்களின் கிரீட ரத்னங்களின் ஒளியினால் பிரகாசமடைந்த பாதநகங்கள் சந்திரனுடைய ஒளியைப் போன்று விளங்கக் கூடியதும், அத்தூயோர்களின் அறவுரையாகிற கடலில் பொங்கும்படி செய்யும் பூர்ணசந்திரனைப்  போன்று விளங்குவதும் மற்றும் அனைத்து முனிகளாலும் துதிக்கப்படும் வைபத்தையுடைய அரகந்தர், சித்தர், ஆசாரியர் உபாத்தியாயர், சர்வஸாதுக்கள் ஆகிய ஐவரும் எனக்கு மங்களத்தை (நன்மையை) உண்டாக்கட்டும்.

 *****************


ஸம்யக்தர்சன போதவ்ரத்தமமலம் ரத்னத்ரயம் பாவனம்


முக்திஸ்ரீ நகராதிநாத  ஜிநபத்யு-க்தோபவர்கப்ரதம்


தர்மம் சூக்தி சு தாச்சதசத்ய மகிலம் சைத் யாலயம் ஸ்ரீயாலயம்


ப்ரோக்தம் தத்த்ரிவிதம் சதுர்விதமமீ குர்வந்துமே மங்களம்.

( 2 )

கருத்துரை:

மோக்ஷலஷ்மிக்குத் தலைவனாகிய ஜினபகவானால் முக்தியடைவதற்கு மார்க்கமாகச் சொல்லப்பட்ட, நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம்  ஆகிய இரத்தினத்த்ரய ஸ்வரூபமான ஜிநதர்மம், ஜிநசாஸ்திரம், ஜிநபிம்பம், ஜிநசைத்யாலயம்  என்னும் இந்நான்கும் எனக்கு மங்களத்தை (நன்மையை) விளைவிக்கட்டும்.


 *****************


நாபேயாதி  ஜிநாதிபா  த்ரிபுவனே க்யாதா:  சதுர்விம்சதி


ஸ்ரீமந்தோ பரதேஸ்வப்ரப்ரதயோ யே சக்ரிணோ த்வாதச


யேவிஷ்ணு  ப்ரதிவிஷ்ணுலாங்கலதரா ஸப்தோத்தராவிம்சதி


த்ரைகால்யே ப்ரதிதிதா: த்ரிஷஷ்டி புருஷா: குர்வந்துமே மங்களம். 
                                            
( 3 )


கருத்துரை:

இம்மூவலகிலும் பிரசித்தி பெற்ற விருஷபதேவர் முதலான இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களும், பரதேஸ்வரர் முதலான பன்னிரண்டு சக்ரவர்த்திகளும், விஜயர் முதலிய ஒன்பது பலதேவர்களும், த்விப்ரஷ்டர் முதலிய ஒன்பது  வாசுதேவர்களும், அஸ்வக்ரீவர் முதலான ஒன்பது ப்ரதிவாசுதேவர்களும் எனக்கு (எமக்கு) நன்மையை விளைவிக்கட்டும்.

*****************

தேவ்யோஷ்டௌச ஜயாதிகா த்யுகுணிதா: வித்யாதிகாதேவதா:

ஸ்ரீதீர்த்தங்கர மாத்ருகாஸ்ச ஜநகா:  யக்ஷாஸ்ச யக்ஷ்யஸ்த தா

த்வாத்ரிம்சத் த்ரிதசா:  க்ரஹா:  திதிசுரா: திக்கன்யகா சாஷ்டதா

திக்பாலா:  தசசைத்ய மீசுரகுணா: குர்வந்துமே மங்களம்.

   ( 4 )


கருத்துரை:
"""""""""""""""""""

ஜயதேவி முதலான எட்டு தேவதைகளும்,  ரோகிணீ  முதலான பதினாறு வித்யா தேவதைகளும், தீர்த்தங்கரர்களின் மாதாக்களான மருதேவி முதலிய இருபத்து நால்வரும், தீர்த்தங்கரர்களின் தந்தையர்களான நாபிராஜர் முதலிய இருபத்து நால்வரும், தீர்த்தங்கரர்களின் யக்ஷர்களான சக்ரேஸ்வரி முதலிய இருபத்து நான்கு யக்ஷிகளும், பவணதேவர்கள் பதின்மர், வ்யந்தரதேவர்கள்  எண்மர்,  ஜ்யோதிஷ் தேவர்கள் இருவர், கல்பவாசி தேவர்கள் பன்னிருவர் ஆகிய முப்பத்திரண்டு தேவர்களும்,  ஆதித்யன் முதலான நவக்ரகங்கள் ஒன்பதின்மரும், யக்ஷர் முதலிய திதிதேவதைகள் பதினைவரும், ஸ்ரீதேவி முதலான எட்டு திக்கன்னிகைகளும், இந்திரன் முதலான பத்து திக்பாலர்களும் எனக்கு மங்களத்தை விளைவிக்கட்டும்.

 *****************


யேஸர்வௌஷதர த்தய: ஸுதஸோ வ்ரத்திம்கதா பஞ்சயே

யேசாஷ்டாங்க மகாநிமித்தகுசலா: சாஷ்டளவிதா சாரணா:

பஞ்சஜ்ஞானதரா: த்ரயோபி  பலினோயேபுத்தி ரித்தீச்வரா:

ஸப்தைதே ஸகலார்ச்சிதா:  கணப்ரதா: குர்வந்துமே மங்களம்                                                           
 ( 5 )

கருத்துரை:

ஸர்வௌஷதி முதலான ஐந்து ரித்திகளைப் பெற்ற  முனிவர்களும், உக்ரதபம் முதலான  தவங்களையுடைய முனிவர்களும், அஷ்டாங்க (எட்டுவகை) நிமித்தங்களைப் பெற்ற முனிவர்களும், சாரண ருத்தியைப்பெற்ற முனிவர்களும், ஐவகை  ஞானங்களைப் பெற்ற முனிவர்களும், மூன்று வகையான பலம் பெற்றவர்களூம், புத்தி முதலிய ரித்திகளைப்பெற்ற  கணதர பரமேஷ்டிகளும் ஆகிய அனைவரும் எனக்கு மங்களத்தை (நன்மையை) விளைவிக்கட்டும்.

*****************

கைலாசே விருஷபஸ்ய நிர்வ்ரதி மகாவீரஸ்ய பாவாபுரே

சம்பாயாம் வசுபூஜ்ய ஸஜ்ஜிநபதே: சம்மேதசை லேர்ஹதாம்

சேஷாணாமபி சோர்ஜயந்தசிகரே நேமீச்வர ஸ்யார்ஹதோ

நிர்வாணாவ நய: பிரஸித்தவிபவா: குர்வந்துமே மங்களம்


( 6 )


கருத்துரை:
"""""""""""""""""""

கைலாசகிரியில் விருஷபஸ்வாமியும், சம்பாபுரியில் வாசுபூஜ்யஸ்வாமியும்;
ஊர்ஜயந்தகிரியில் நேமிநாத ஸ்வாமியும், பாவாபுரியில் வர்த்தமான ஸ்வாமியும், சம்மேதகிரியில் ஏனைய இருபது தீர்த்தங்கரர்களும், மோக்ஷ (முக்தி) மடைந்தனர். அப்புனித க்ஷேத்திரங்கள் எனக்கு மங்களத்தை (நன்மையை) விளைவிக்கட்டும்.

*****************


ஜ்யோதிர் வ்பந்தரபாவனாமரக்ரஹேமேரெள குலாத்ரௌஸ்திதே

ஜம்பூசால்மலி சைத்ய சாகிஷு ருசே வக்ஷாரரூப் யாத்ரிஷு

இஷ் வாகாரகிரௌச குண்டல நகே த்வீபே ச நந்தீச்வரே

சேலையே மனுஜோத்தரே ஜிநகிரஹா குர்வந்துமே மங்களம்


( 7 )
  


கருத்துரை:
"""""""""""""""""""

ஜோதிர்லோகம், பவணலோகம், வியந்தரலோகம், வைமானிகம் ஆகியவைகளிலும் மேருபர்வதம், குலகிரி, ஜம்பூவிருஷம், சால்மலி விருஷம், சைத்யவிருஷம், வக்ஷாரபர்வதம், விஜயார்த்தபர்வதம், இக்ஷ்வாகாரபர்வதம், குண்டல நகரம், நந்தீஸ்வரத்வீபம், மானுஷோத்தரபர்வதம் இவைகளில் உள்ள அக்ரத்ரிம (இயற்கையான) ஜிநசைத்யாலயங்கள் எனக்கு மங்களத்தை (நன்மையை) விளைவிக்கட்டும்.

*****************

யொகர்பாவதரோத்ஸவேபக வதாம் ஜன்மாபிஷே கோத்ஸவே

யோஜாத:  பரிநிஷக்ரமேண விபவோ ய: கேவலக்ஞானபாக்ய:
 
கைவல்யபுரப்ரவேச  மஹிமாஸம்பாவித: ஸ்வர்கிபி:

கல்யாணநிச தாநிபஞ்ச ஸததம் குர்வந்துமே மங்களம்

   ( 8 )

                                  
கருத்துரை:
"""""""""""""""""""
தீர்த்தங்கரர்களின்  பஞ்சகல்யாணங்களாகிய கர்பாவதரணம் (கர்ப்பத்தையடைதல்) ஜன்மாபிஷேகம், பரிஷ்நிக்ரமணம் ( தீக்ஷை)  கேவலக்ஞானம்,  (முற்றுணரும் அறிவு) பரிநிர்வாணம் (முக்தியடைதல்)  ஆகிய ஐந்து கல்யாணங்களும் எனக்கு மங்களத்தை (நன்மையை)  விளைவிக்கட்டும்.

 *****************

இத்தம் ஸ்ரீ ஜிநமங்களாஷ்டகமிதம் சௌபாக்ய சம்பத்கரம் 

கல்யாணேஷுமஹோத்ஸவேஷுஸுதிய: தீர்த்தங்கராணாமுஷ:

யே ஸ்ருண்வந்தி படந்தி தைஸ்சஸுஜநை: தர்மார்த்தகாமான் விதா:

லக்ஷ்மீராஸ்ரயதே வ்யபாயரஹிதா நிர்வாண லக்ஷ்மீரபி

( 9 )


கருத்துரை:
"""""""""""""""""""

எந்தபுத்திமான்கள் சௌபாக்யம் செல்வம் ஆகிய அனைத்தையும் தரக்கூடிய மற்றும் மங்களகரமான இதுகாறும் கூறப்பட்ட எட்டு ஸ்லோகங்களை காலையிலும், மாலையிலும், விழாக்காலங்களிலும் பக்தியுடன் படிக்கின்றார்களோ அல்லது படிக்கக் கேட்கின்றார்களோ அவர்கள் தர்மம், அர்த்தம், காமம் ஆகிய புருஷார்த்தங்களைப் பெற்று இறுதியில் மோக்ஷ வக்ஷ்மியையும் அடைகிறார்கள்.
  
 *****************





No comments:

Post a Comment