புஞ்சம் வைத்தல்




புஞ்சம் வைத்தல்








ஜிநாலயத்தில் / இல்லத்தில் வழிபாடு செய்யும் போது அரிசியினால், நவதான்யத்தால் புஞ்சம் இட்டு வழிபாடு செய்தல் சமண மரபாகும்.

தட்டிலோ, மரப்பலகையிலோ இட வேண்டும்.

சில புஞ்சங்கள் வைக்கும் முறைகள்.



பஞ்சபரமேஷ்டி புஞ்சம் :

அருகரை நினைத்து மையத்திலும், அதற்கு மேல் சித்தர், மையத்திற்கு வலதில் ஆசார்யருக்காவும், கீழே உபாத்தியாயருக்காவும், இடது புறத்தில் சர்வசாதுக்களை நினைத்தும் இடும் முறையாகும்.

அவ்வைந்து தொகுதிக்கு மேல் கிடக்கையாக மூன்றும், அதாவது நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என மும்முணிகளுக்காவும்;
அதற்கு மேற்புறம் மையமாக பிறைவடிவில் புஞ்சம் இடுவது சித்தக்ஷேத்திரத்தை நினைவாகவும், அதற்கும் மேல் ஒரு புஞ்சம் சித்த பரமேஷ்டியை குறிப்பதாகவும் உள்ளது.

இவ்விரண்டு தொகுதிக்கும் இடையில் ஸ்வஸ்தீக குறியீடு போன்ற வடிவமும் வைப்பது சம்சார சுழற்சியை குறிப்பதாகவும் அமையும்.

மேற் தொகுதியில் மூன்று கிடக்கை புள்ளிகளுக்கு பதிலாக நான்கும் வைப்பது பிரதமானுயோகம், கரணாநுயோகம், சரணாநுயோகம், திரவியானுயோகம் போன்ற ஆகமப் பிரிவினை நினைவு கூறும் முகமாகவும் வைக்கும் முறையும் வழக்கத்தில் உள்ளது.



நவதேவதை புஞ்ச முறை இடுதல்:

மேற்கூறிய முறையில் கீழேயுள்ள ஐந்து புஞ்சங்களுடன் கீழ் இடமாக ஜினதர்மம், மேல் இடதில் ஜிநசுருதம், மேல் வலது மூலையில் ஜிந சைத்யத்தையும், கீழ் வலது மூலையில் ஜிந சைத்யாலத்தையும் குறிக்கும் முகமாக வைப்பதை குறிப்பது ஆகும்.

அதே போல் 24 தீர்த்தங்கரர், 72 தீர்த்தங்கரர், ஆஷ்டானிக நந்தீஸ்வர தீப புஞ்சமும் இடலாம்.

No comments:

Post a Comment