The aim of worship in Jainism - சமண வழிபாட்டு நோக்கம்



  வழிபாட்டு நோக்கம்
Aim of WORSHIP










வழிபாட்டின் நோக்கம்…… 


ஜினர்: - வென்றவர்.  அதாவது வாழ்வில் தீவிர உணர்வுகளை வென்றவர். துன்பத்திற்கு காரணமான ஆசை, வெறுப்பு, குரோதம், உலோபம், கர்வம் போன்ற உணர்வுகளை வென்றவர். உலக வாழ்வை கடந்து, பிறவி சுழற்சியிலிருந்து விடுதலை பெற்றவர்.

ஆனாலும்  ஜினர் ஒரு மனிதரே.
உலோகதீதமோ, இயற்கை மீறிய ஜீவனோ, கடவுளின் அவதார புருஷரோ அல்ல. மனிதனாக பிறந்து சராசரி வாழ்வைத் துவங்கியவர்.

ஜினர் நல்லொழுக்க வழியே ஆன்மீக வெற்றி கண்டவர். ஆன்மவிஜயர். உலகில் மனிதனாக பிறந்து எதிர்வரும் துன்பத்திலிருந்து விடுபடும் வழிகளை அளித்த உத்தமர். நாமும் வாழ்ந்து அனைத்துயிரும் வாழ வழிவகுத்தவர்.

அம் மாமனிதர், பற்றுக்கு காரணமான பலவகை விருப்பு, வெறுப்பு உணர்லிருந்தும் விடுதலை பெற்றதால் அனைத்துலகையும் அறியும் முழுதுணர்ஞானத்தை பெற்றவர். மேலும் மனிதர் யாவரும் விடுதலைக்கான செயல்திறம்  பெற்றவர்கள் என்பதை நிரூபித்தவர்.









அந்த மகோன்னத மனிதரின் போதனைகளை தன்னகம் கொண்டுள்ளதே சமணம், ஜைனம்.

சமணம், கடவுளின் அவதார புருஷராலோ அல்லது மனிதனைவிட உயர்ந்த  ஒன்றினால் போதிக்கப்பட்டோ அல்லது மேலான ஒன்றினது புனிதநூலாலோ  ஏற்பட்டதல்ல.

மாறாக ஜைனம் முழுமையும் மனித மூலகூறைக் கொண்டது; சுய முயற்சியின் வழியே தன்னடக்கமும்,  முழுதுணர்ஞானமும் பெற்ற ஒருவரால் எடுத்துரைக்கப்பட்டது.

சுருக்கமாக, ஜினர் நிலையை அடைந்த தூயஆன்மாவின் போதனைகளின் சாராம்சத்தை கொண்டது.

அந்த ஜினர் வழியில் பயணிப்பவர்களால் உருவானது ஜைன தர்மம் எனும் கொள்கை. அத்தருமத்தை பின்பற்றுபவர்களை பிறசமூகத்தவர்  ஜைனர் என்று அழைத்தனர்.




ஆகவே ஜினவறமே, ஜைன தர்ம(அற)மானது. அவ்வழியில் நடப்பவர்கள் ஜைனர் எனப்பட்டது.

சமஸ்கிரத ஜைன தர்மமே ஆங்கிலத்தில் ஜைனிசம் (Jainism) என்றும், ஜெர்மானியர்கள் ஜெனிஸ்மஸ்(Janismus or ஜினிசம், Jinism)  என்றும், வடஇந்தியாவில் ஜைனம் என்றும்,  தமிழகத்தில் சமணம் என்றும் வழங்கலாயிற்று.

அனைத்தும் ஜினர் வழங்கிய ஜைன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டவையே. யாராலும் தோற்றுவிக்கப்படாமல் கடைபிடிப்பவரால் தோன்றியதே ஜினமதம், ஜைனமதம்.

சமணம் இயற்கைநிகழ்வான ஜீவராசிகளின்  கூட்டுவாழ்வை, பரஸ்பர சார்புநிலையை நன்குணர்ந்துள்ளது.  இந்த நவீனகாலத்தின் உயிரினவாழ்க்கைச்சூழலை அன்றே கூறியுள்ளது.

அதாவது இன்றைய சூழலியல் கூறப்படும் நுண்ணுயிரிகளிலிருந்து, பேரண்டம் வரைப் பரந்து உயிர்வாழ்க்கையை உய்த்துணரப் பயன்படுகிறது. உயிர்களின் பல்வகைமையை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளையும், மேலும் இவ்வேறுபாடானது அவற்றின் உணவு, உறையுள், சமூகம் மற்றும் இனவிருத்தி ஆகிய கூறுகளினால் விளக்கப்படுவதை அன்றே ஜினரால் கூறப்பட்டது..



உயிர் வாழ்க்கையின் பரவல் பற்றியும், உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான இடைவினைகள் பற்றியும் அறிவியல் அடிப்படையில் ஜினரால் தரப்பட்டுள்ளது.

வாழ்க்கை என்பது கூட்டுவாழ்க்கையிலும், இணக்கத்திலும், சார்புநிலை அங்கத்தில் உலகாயபெருக்கமடையவதிலும் உள்ளது.

சமண சாது, சாத்விக்களும், இல்லறதாரும் முறையே: பிரார்த்தனையாலும்; நேர்மையான அணுகுமுறையாலும்; மனதால் பிறரை மன்னித்தும், அவரது மன்னிப்பை ஏற்றும்; அனைத்து ஜீவனிடமும் ஸ்நேகத்துடனும்; அவை வெளிப்படுத்தும் நட்புறவை ஏற்றும்;  கடுகளவு பராதீனமோ, பகைமையோ இல்லா இதயமுடன்; எந்தவொரு ஜீவனிடமும், பொருளிடத்தும் அணுகுமுறையைக் கைக்கொண்டவர்கள்.

அதேபோல் பொருத்தளும் பண்பும், நட்புறவும் உலகில் ஆட்சிசெய்ய உயிரினங்கள் ஒன்றோடொன்று நேசத்துடன் வாழ பிரார்த்திப்பவர்கள்.

இக்குணங்களை யுடையவரே ஸ்ரமணர், சமணர், ஜைனர். அவ்வழியை கற்றுத்தந்த முழுதுணர்ஞானம் பெற்ற ஜினர்களை வணங்குபவர்கள்.

ஜினர் ஒருவரின் பிரதிமையை மேடையில் நிறுவி வழிபாடு செய்யும் கூடமே ஜினர் வாழும் ஆலயமான ஜினாலயமாகும்.

கடவுள் நிலை ஒன்று கடவுளர் பலர் என்பதை வலியுறுத்தவது சமண சிந்தாந்தம். அனைத்துயிரும் நல்லொழுக்கத்தின் வழியே முழுதுணர்ஞானம் அடைந்து விடுதலை பேற்றிற்கு வித்திடுவர் என்பது ஜினரின் வழக்கு. அவ்வழியில் நோக்குங்கால்;


ஜினரை வணங்குவன் வணங்கத்தக்கவனாக உயர்வதே வழிபாட்டின் நோக்கமாகும்.





Literally Jina means a conqueror, that is, one who has conquered the worldly passions like desire, hatred, anger, greed, pride, etc. by one's own strenuous efforts and has been liberated himself from the bonds of worldly existence, the cycle of births and deaths. Jina, therefore, is a human being and not a supernatural being or an incarnation of an all mighty God. Hence the term Jina is applied to a person who is a spiritual victor.


Further, human beings have the potentiality to become Jinas and, as such, Jinas are persons of this world who have attained Supreme Knowledge, subjugated their passion and are free from all sorts of attachment and aversion. Jainism is thus a set of principles preached by the Jinas. Hence Jainism is not an Apauruseya religion, i.e., a religion propounded by a non-human being or based on a sacred book of non-human origin. On the contrary it is a religion of purely human origin and is preached by one who has attained Omniscience and self-control by his own personal efforts. In short, Jainism is the substance of the preaching of those perfect souls who have attained the state of Jainas.


Again, the term Jainism, connotes the religion professed by the Jainas, i.e. the followers of the path practiced and preached by the Jinas. This term Jainism is an English word rendering from the original Sanskrit word Jaina-dharma or Jina-dharma. That is why some German Jainologists, like Leumann, Winternitz and Schubring, prefer the term Jinismus or Jinism. Both the terms are, however, correct since Jainism means the religion followed by the Jinas and Jainism means the religion of the Jina. But between the two terms, Jainism and Jinism, the former is more popular and in current use both in literature and common parlance.
Jain religion recognizes the fundamental natural phenomenon of Symbiosis or mutual dependence, which forms the basis of the modern day science of ecology. Life is viewed as a gift of togetherness, accommodation, and assistance in a universe teeming with interdependent constituents.




Jain whether monks, nuns or householders, therefore, affirm prayerfully and sincerely, that their heart is filled with forgiveness for all living beings and that they have sought and received the forgiveness of all beings, that they crave the friendship of all beings, that all beings give them their friendship and that there is not the slightest feeling of alienation or enmity in their heart, for anyone or anything. They also pray that forgiveness and friendliness may reign throughout the world and that all living beings may cherish each other.


Jina pratima is installed on the vedi’s of Jain temples ie Jinalayas’. According to Jina’s every livings have the potential to attain Omniscience to get rid of birth-cycle. That state is God.


So status of God is one but Gods are so many. Every one getting that state through his strenuous effort.


The aim of Worship is

Worshipper have a motto to elevate himself to Worshipped status.

 *********************************







No comments:

Post a Comment