அப்பாண்டைநாதர் பாடல்கள்.

அப்பாண்டைநாதர் பாடல்கள்.






அப்பாண்டைநாத தயாபரனே


கண்டேன் திருநறுங்கொண்டையின் மேலொரு காரணத்தால்
கண்டேன் கன திருமதில் கோபுரங் கோயில்தனைக்
கண்டேன் மனத்தினில் அப்பாண்டைநாதர் என் கர்த்தரடி
கண்டேன் இடர்தனை விண்டேன் என்றன் கருத்துள்ளமே


எப்போதும் உனைமறவாதிருக்க என் நெஞ்சுதனில்
ஒப்பாரும் பிண்டிநிழல் உறைந்திடும் ஜினேஸுவரனே
மெப்பாக என்றன் வினைதனைத் தீர்த்து நான் வீடுசேர
தப்பா வரமருள் அப்பாண்டைநாத  தயாபரனே.


நீதான் துணையின்றி வேறும் உண்டோ இந்த நீணிலத்தில்
ஆதாரமாக அரும்பொருளே அண்ட ரண்டமெலாம்
தாதாவே உன்றன் திருநறுங்கொண்டை தழைக்கவந்த
நாதா அறம்பொழிவதோ எனக்கு இன்பம் நல்குவையே


சீராயவிருங்கமலத்தின்மீது திருமுக்குடைக்கீழ்
வீரா  எனது வினைதீர்த்துச் செல்வம் விளங்கிடவே
காரார் நறுங்கொண்டைக் காவலனே எனக்கு உன் கமலமலர்
தாராய் அருளுடன் அப்பாண்டைநாத தயாபரனே

-----------------

அப்பா அராநிழல் அண்ணலே


ஸ்ரீபாரீசன், பழவினையைப் பெயர்த்த அர்த்த
நாரீசன் நான்முகன் நன்மொழி அருளிய
பேரீசன் பெருமான் ஓராயிரத்து எண்
பெயரீசன் பெரியவன் உனை வந்திக்க அறிகிலேன்
அப்பா அராநிழல் அண்ணலே


அறிவினால் அறியாத அறிவன் நீ
பொதியினால் வரும் போகியும் அல்லன் நீ
மறுவிலாக் குணத்து உனை வாழ்த்துமாறு
அறிகிலேன் அப்பா அராநிழல் அண்ணலே


செற்றங்கள் யாவும் தீர்த்தவன் நீ
மரகத வண்ணப் பெருமான்நீ
மறுவிலாக் குணத்து உனை வாழ்த்துமாறு
அறிகிலேன் அப்பா அராநிழல் அண்ணலே


----------------
அப்பாண்டைநாத ஸ்வாமியே போற்றி போற்றி

திருவடி போற்றி! திருவடி போற்றி

திருப்பெயர் ஆயிரம் சீராய்க் கொண்ட
அரவுநீழல் அண்ணல் திருவடி போற்றி

திருநறுங்கொண்டையின் திகழொளி ஈசன்
மறுவில் கமல மலர் பதம் போற்றி

பெருமலை உலகின் உறவினன் போற்றி

நாவலந்தீவின் நட்பினன் போற்றி
கருமப் பூமியின் இதத்தவன் போற்றி
தருமப் பூமியின் தலைவன் போற்றி
அலைகடல் ஞாலத்து அப்பன்  போற்றி
விலையிலா மரகத வியன் மணி போற்றி

மலைவிலா தவத்து மாதவன் போற்றி
நிலைபேருலகின் நிருமலன் போற்றி போற்றி

கூர்மை மதியின்றி குரவர் துணையின்றி
மேற்றிசை சுடரே நாற்றிசை முகனே
போற்றி போற்றியென்று உனைப்புகழ்வதன்றி
ஏத்துதல் வேறென் செய்குவேன்?
எழில் பணாமுடியனே

-------------- 


அப்பாண்டைநாதர் பேரில் கட்டளைக் கலித்துறை


குற்றங்க ளில்லான் குணத்தால் நிறைந்தான் குணத்தால்
மற்றிந்த வைய மளந்தான் வைய நின்ற பெற்றி
முற்று முரைத்தா னுரையீ ரொன்ப தாயத்தோன்றான்
செற்றங்கள் தீர்ப்பான் விமலன் சரண் சென்னி வைத்தேன்.

கண்டேன் திருநறுங் கொண்டையின் மேலொரு காரணத்தால்
கண்டேன் கனக திருமதில் கோபுரங் கோயில் தனை
கண்டேன் மனதினில் அப்பாண்டைநாதரென் கர்த்தரடி
கண்டேன் யிடரதனை விண்டேன் எந்தன் கருத்துள்ளமே.

எப்போதும் உனை மறவாதிருக்க வென்னெஞ்சுதனில்
ஒப்பாரும் பிண்டி நீழலுறைந்திடுஞ் ஜிநேஸ்வரனே
மெப்பாக எந்தன் வினைதனை தீர்த்து நான் வீடுசேர
தப்பா வரமருள் அப்பாண்டைநாத தயாபரனே.

நீதான் துணையின்றி வேறு முண்டோ இந்த நீணிலத்தில்
ஆதாரமாக அரும்பொருளே அண்ட ரண்டமெலாம்
மாதாவை யுந்தன் திருநறுங் கொண்டை தழைக்க வந்த
நாதா அறம்பொழிவே தாயெனக்கின்பம் நல்குவையே

சீரா யெவருங் கமலத்தின் மீது திருமுக்குடைக் கீழ்
வீரா யெனது வினைதீர்த்துச் செல்வம் விளங்கிடவே
காரார் நறுங் கொண்டை காவலனே எனக்குன் கமலமலர்
தாரா யருளுடன் அப்பாண்டை நாத தயாபரனே.




-------------------

பாரீசநாதா சரணம் சரணம்


அச்சுதா அமலா அருகா சரணம்
அருந்தவ கடலே அறிவா சரணம்
இச்சித்தவர்  மனத்திருப்பாய் சரணம்
எழிலார் மதில் மூன்றுடையாய் சரணம்
நச்சர வணைநிழலானே சரணம்
நவைபல நீக்கிய நாதா சரணம்
பச்சை மலைமாதவனே சரணம்
பாரீசநாதா சரணம் சரணம்



கொங்கலர் பிண்டி வாமா  சரணம்
குலவிய சிங்க அணையாய் சரணம்
திங்கள்  அணைய முக்குடையாய் சரணம்
திருந்திய எழில் சாமரையாய் சரணம்
பொங்கியதோர் துந்துபியாய் சரணம்
பூமலர் மாரி மண்டலத்தாய் சரணம்
பங்கய மலர்மேல் வருவாய் சரணம்
பாரீச நாதா சரணம் சரணம்



தண்ணமை கமலவாகா சரணம்
தரும மாதவனே தலைவா சரணம்
விண்ணுலகோர் தொழ வருவாய் சரணம்
வீரிய அமலா விமலா சரணம்
புண்ணியவாகா புனிதா சரணம்
பூணணி புனையாத வனே சரணம்
பண்ணவனே முதற் பரமா சரணம்
பாரீசநாதா சரணம் சரணம்



கன்னவிற் காமனைக் கடிந்தாய் சரணம்
கதி நான்கினையும் கடந்தாய் சரணம்
மன்னிய நற்குண வாமா சரணம்
மாதவா வரதா மாலே சரணம்
பொன்னெயில் வட்டப் பொருளே சரணம்
போதி நாதா பூரணா சரணம்
பன்னிரு கணம் தொழ வருவாய் சரணம்
பாரீச நாதா சரணம் சரணம்



இதமே எவர்க்கும் உரைப்பாய் சரணம்
இமையவரே தொழ வருவாய் சரணம்
கதமும் மதமும் கடிந்தாய் சரணம்
கமலத்தின் மீது நடந்தாய் சரணம்
ததிஐம் பொறியை தவிர்ந்தாய் சரணம்
தரணியில் தருமம் உரைத்தாய் சரணம்
பதுமை  பரனே பரமா சரணம்
பாரீசநாதா சரணம் சரணம்



விஞ்சலர் பிண்டி விமலா சரணம்
மிகவுலகோர் தொழவருவாய் சரணம்
கஞ்சத்தலரில் வருவாய் சரணம்
கருணாகரனே கமலா சரணம்
நெஞ்சத்தவர்கள் நினைவே சரணம்
நித்தா நிமலா அமலா சரணம்
பஞ்சக் கரத்தைப் பதித்தாய் சரணம்
பாரீசநாதா சரணம் சரணம்



முருகார் அசோக நிழலாய் சரணம்
முனிக்கணமேத்தும் முனிவா சரணம்
பெருமாதவங்கள் புரிந்தாய் சரணம்
பேராயிரத்தெட்டுடையாய் சரணம்
பொருமாரனை போர் தவிர்ந்தாய் சரணம்
பொன்னியில் மன்னிய புங்கவ சரணம்
பரிமா கமலப் பதத்தாய் சரணம்
பாரீசநாதா சரணம் சரணம்



அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவா அருளே சரணம்
முத்தனே முவ்வுலகளந்தாய் சரணம்
முத்தியை யளிக்கும் முதல்வா சரணம்
சித்தனே பக்தர்கள் செல்வா சரணம்
தேவாதிபனே தேவா சரணம்
பக்தர்களே தொழவருவாய் சரணம்

பாரீசநாதா சரணம் சரணம்




அரமென வெண்வினை யரிந்தாய் சரணம்
அரவின் நிழலினமர்ந்தாய் சரணம்,
தாமெனுஞ் சதுர்க்கதி தவிர்ந்தாய் சரணம்
தயவே மிகவுமுடையாய் சரணம்
விரகக்காமனை வென்றாய் சரணம்
வேதமோர் நான்கும் விதித்தாய் சரணம்
பரமாகமங்கள் பகர்ந்தாய் சரணம்
பாரீசநாதா சரணம் சரணம்




அடியார் மனத்தில் அமர்ந்தாய் சரணம்
அணியாடை அணியா அழகா சரணம்
கொடிசேர் மதிற் கோபுரத்தாய் சரணம்
கொல்லாவத மீந்தகோவே சரணம்
கடிமாமர்மேல் கருத்தே சரணம்
காமாதி வினைவென்ற கருணா சரணம்
படியேழுலகும் பகர்ந்தாய் சரணம்
பாரீசநாதா சரணம் சரணம்



மஞ்சாரும் பிண்டிக் கீழ் வாமா சரணம்
மாமுனி போற்றிடும் வரதா சரணம்
எஞ்சாமதிக்குடை எழிலாய் சரணம்
எனையாளும் ஈசா இறைவா சரணம்
நஞ்சார் பணிநிழல் நாதா சரணம்
நளினமலர்த்தேர் நான்முகா சரணம்
பஞ்சாட்சரமீந்த பரனே சரணம்
பாரீசநாதா சரணம் சரணம்


--------------------- 


அப்பாண்டை நாதர்
 ஜெயமாலை


அப்பனே ஜெய ஜெய
அப்பாண்டாரே ஜெய ஜெய
அபிராமி செல்வனே ஜெய ஜெய
அறிவனே ஜெய ஜெய
ஆண்டையே ஜெய ஜெய
ஆயிரத்தெண்நாமனே ஜெய ஜெய
ஆதி மருபூதி ஐயனே ஜெய ஜெய
இறைவனே ஜெய ஜெய
ஈசனே ஜெய ஜெய
உக்ரவம்ச நாயகனே ஜெய ஜெய
உலகு மகிழ் செல்வமே ஜெய ஜெய
ஊருணியே ஜெய ஜெய
எரிமணிச் சுடரே ஜெய ஜெய
ஏத்தருங்குணணே ஜெய ஜெய
ஐராவதனே ஜெய ஜெய
ஒளிமணிக்குன்றே ஜெய ஜெய
ஓங்கார ரூபனே ஜெய ஜெய
ஒளடதமே ஜெய ஜெய
கர்பாவதரண கல்யாணனே ஜெய ஜெய
ஜன்மாபிஷேக கல்யாணனே ஜெய ஜெய
தீட்சா கல்யாணனே ஜெய ஜெய
கேவலஞான கல்யாணனே ஜெய ஜெய
பரிநிர்வாண கல்யாணனே ஜெய ஜெய
குடதிசை நாயகனே ஜெய ஜெய
திரு மேற்றிசையானே ஜெய ஜெய
நறுங்கொண்டை தீர்த்தனே ஜெய ஜெய
வடபாழிக் கடவுளே ஜெய ஜெய
ஆனத கல்பனே ஜெய ஜெய
உக்கிரவம்சனே ஜெய ஜெய
விசாக நட்சத்திரத்தானே ஜெய ஜெய
காசிக் காவலனே ஜெய ஜெய
ஒன்பது முழச்சுந்தரனே ஜெய ஜெய
சதப்பரமாயுளனே ஜெய ஜெய
விமலசிவிகையனே ஜெய ஜெய
அசுவவன யோகியே ஜெய ஜெய
தேவதாரு விருட்சனே ஜெய ஜெய
பணாமுடியனே ஜெய ஜெய
கைவல்ய சுவாமியே ஜெய ஜெய
சம்மேத சிகரியானே ஜெய ஜெய
வினைவென்றவனே ஜெய ஜெய
பெருவிண் பிறையனே ஜெய ஜெய
அறப்பேரரசு நாயகனே ஜெய ஜெய


--------------------------
ஜெய மங்களம்

அருக ஜிந நாதருக்கு ஜெய மங்களம்
நறுங்கொண்டை மாலுக்கு ஜெய மங்களம்
வடபாழி அண்ணலுக்கு ஜெய மங்களம்
குடதிசையோகிக்கு ஜெய மங்களம்

ஜெய ஜெய மங்களம்
ஜெய ஜெய மங்களம்

 ஜெய ஜெய மங்களம்

No comments:

Post a Comment