தீப
ஆரதி
தீப ஆரதி ! ஜெயதீப ஆரதி !
தீபமங்கள தீபமங்கள தீப ஆரதி
ஆதிஜிந  பகவருக்கு தீப
ஆரதி
அஜிதஜிந தேவருக்கு ஆரதி 
ஐம்பதமருள் சம்பவருக்கு தீப ஆரதி 
அபிநந்தன நாதருக்கு தீப ஆரதி 
தீப ஆரதி ! ஜெயதீப ஆரதி !
தீபமங்கள தீபமங்கள தீப ஆரதி
அமலகுண சுமதியற்கு தீப ஆரதி 
அருளும் பத்மபிரபருக்கு தீப ஆரதி 
அகமருள் சுபார்ஸ்வருக்கு தீப ஆரதி 
சோதி சந்திரபிரபர்க்கு தீப ஆரதி 
தீப ஆரதி ! ஜெயதீப ஆரதி !
தீபமங்கள தீபமங்கள தீப ஆரதி
புஷ்பதந்த புங்கவருக்கு தீப ஆரதி 
நிஷ்களங்க சீதளர்க்கு தீப ஆரதி 
ஸ்ரேயம்ஸ தேவருக்கு தீப ஆரதி 
ஸ்ரீவாசுபூஜ்ய தேவருக்கு தீப ஆரதி 
தீப ஆரதி ! ஜெயதீப ஆரதி !
தீபமங்கள தீபமங்கள தீப ஆரதி
விமலநாத அமலருக்கு தீப ஆரதி 
வீடுசேர் அனந்தருக்கு தீப ஆரதி 
தர்மநாத தீர்த்தருக்கு தீப ஆரதி 
தக்கசாந்தி தேவருக்கும் தீப ஆரதி 
தீப ஆரதி ! ஜெயதீப ஆரதி !
தீபமங்கள தீபமங்கள தீப ஆரதி
குந்துவென்னும் கோமாற்கு தீப ஆரதி 
குலவும் அரதிர்த்தங்கரருக்கு தீப ஆரதி 
நல்லறம் சொல் மல்லியற்கு தீப ஆரதி 
நம்முனிசுவ்ரதர் தமக்கும் தீப ஆரதி 
தீப ஆரதி ! ஜெயதீப ஆரதி !
தீபமங்கள தீபமங்கள தீப ஆரதி
அமிதஇசை நமியர்க்கு தீப ஆரதி 
அரிஷ்டநேமி நாதருக்கு தீப ஆரதி 
பச்சை வண்ண பார்ஸ்வருக்கு தீப ஆரதி 
பகரும் மஹாவீரருக்கும் தீப ஆரதி 
தீப ஆரதி ! ஜெயதீப ஆரதி !
தீபமங்கள தீபமங்கள தீப ஆரதி
 
 
No comments:
Post a Comment