பூஜை குறிப்புகள்


பூஜை குறிப்புகள்




பூஜை செய்பவர்



பூஜை செய்யும் முன் குளித்து இருத்தல் வேண்டும்.

சந்தனத்திலகம் இட்டிடுக்கொள்ள வேண்டும். நெற்றியில் பிறைக்குறி அதன்மேல் சிறு பொட்டு; மார்பில் ப வடிவம், புஜங்கள் இரண்டிலும் சாமரை போலும் வளைந்த கீற்று. முழங்கை மேற்புறங்களிலும் நீண்ட சந்தனக் கீற்றுகள் இவை பொதுவாக வழக்கத்திலுள்ள  முறை. சில பிரத்யேக முறைகளும் கடைபிடிப்பவர்களும் உண்டு.

பூணூல் அணிதல்;  தென்னாட்டில் குறிப்பாக ஆச்சார்யர்களால், மடாதிபதிகளால் , சாஸ்திரியார்களால் உபதேசம் கொடுக்கப்பட்டவர்களுக்குத்தான் பூணூல் அணிதலும், அவற்றுடன் தான் பூஜை செய்யும் தகுதியும் உண்டு. அதனை முப்பிரி நூலாக யக்ஞோப வீதம் என்பர். மணமானவர்கள் 9 இழைவரை நூல் அணிவர்.

துவைத்து தனியாக உலர்த்திய ஆடையைத்தான் உடுத்த வேண்டும். 
பூஜை முடியும் வரை பிறரோடு பேசுதல் கூடாது;
அவர்களிடம் மெளனமாக இருத்தல் வேண்டும்.
பூஜைப் பொருட்கள் கையாளும் போது விழிப்போடு ஆள வேண்டும்.
சிற்றுயிர்களுக்கும் தீங்கு நேரா வண்ணம் செயல்படுத்த வேண்டும்.
வடித்த நீரைதான் பயன்படுத்த வேண்டும்.
கிணற்று நீரை பயன்படுத்துதல் நல்லது.




பூஜைப் பொருட்கள்



ஆலயத்திற்கு சென்று செய்தாலும் பூஜைக்குரிய பொருட்களை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லல் வேண்டும்.


பயன்படுத்தப்படும் பொருட்கள் அதற்குரிய கால மரியாதையாக இருக்க வேண்டும்.

இல்லையெனின் அதில் உயிர் உற்பத்தி ஏற்பட்டு இம்சைக்கு ஆளாக நேரிடும்.
அவரவர் சக்திக்கு ஏற்றாற்போன்று பொருட்களை சேகரித்து எடுத்துச் செல்லலாம்.

பச்சரிசியை பயன்படுத்தவேண்டும், அதுவும் முனை முறியாததாக இருத்தல் வேண்டும்.

தீபத் திரிக்கு பழைய துணியைப் பயன்படுத்துதல் கூடாது. பஞ்சினால் திரித்த திரியோ, புது நூலோ உபயோகப்படுத்த வேண்டும்.

ஆசமனம் செய்ய கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
பூஜை செய்யும் போது பயன்படும்.

இதைச் சந்தியா வந்தனம் என்றும் கூறுவர். நீராடி, சந்தனம் அணிவதற்கு முன் இதைச் செய்வது முன்னோர் மரபு. இதனை எவ்வாறு செய்தல் என்பதையும் நேரடியாக அறிந்து கொள்வதே நலம் பயக்கும். அப்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

ஓம், ஓம், ஓம் – ஹ்ரீம், ஹ்ரீம், ஜ்வீம், ஜ்வீம், க்ஷ்வீம், வம் மம், ஹம், ஸம், தம் பம் த்ராக், த்ரீம் த்ராவய த்ராவய அம்ஸ  அ ஸி ஆ உ ஸ  மம முகப்ராணாயாமிம் கரோமி ஸ்வாஹா என்று மூன்று முறை செய்வர்.

உள்ளத்தில் நல்லுணர்வும் பக்தியும் அவசியம் தேவை.


பூஜைக்கு வேண்டிய பாத்திரங்கள்.



பூஜை திரவியங்களை வைத்துக் கொள்ள தட்டு
பூஜை திரவியங்களை அர்ப்பணம் செய்யும் தட்டு அல்லது மனை மீதும் செய்யலாம்

நீர், சந்தனம் வைத்துக் கொள்ள தனித்தனி கிண்ணம்

அவற்றை அர்ப்பணம் செய்ய இரண்டு கிண்ணங்களும் அவசியம்

சிறு கரண்டிகள் இரண்டு

தட்டை சுத்தம் செய்ய துவைத்த கைத்துணி

ஜின பிம்பத்தைத் துடைக்க பயன்படுத்தப்படாத புதிய துணிகள், நிருக்கு வடிசீலை ஒன்றும்.

தீபம் ஒன்று

ஜபமாலை.


பூஜைக்கு முன் ஏற்பாடுகள்


வீடு மற்றும் ஜினாலயத்தில் பூஜையைத் தொடங்குவதற்கு முன் பூஜிப்பவர் நீராடித் தம்மை புறத்தூய்மை செய்தல் அவசியம்

முன்பே துவைத்து உலர்த்திய வெண்ணிற ஆடைகளை, வேஷ்டி, துண்டை உடுத்த வேண்டும்

வேஷ்டியை பஞ்சகச்ச முறையில் கட்டிக்கொள்ள வேண்டும். துண்டினை மேலோ இடையூறாக இருப்பின் இடுப்பிலோ கட்டிக் கொள்ளல் நல்லது.

பூஜிக்கும் இடம், ஸ்தலத்தை சுத்தம் செய்தல் வேண்டும். அங்கு ஜீவஹிம்சை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளுதல் முக்கியம்.

ஆலயம் சமவசரணத்திற்கு ஒப்பானது; அப்பாவனையோடு அங்கு குப்பை, கூளம் போன்றவை சேராமல் பார்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையில் பயன்பத்தப்படும் திரவியங்களைப் பற்றி அறிதல் நல்லது.



நீர்: 
ஆற்று நீர் அல்லது கிணற்று நீர் எடுத்து, சூரியஒளி புகாத அளவிற்கு கெட்டியான துணியினால் வடிகட்டி இளஞ்சூடாக்கி வைத்துக் கொள்ளவும்.


சந்தனம்:
அப்பொழுதே இழைத்தெடுத்த சந்தனம் அன்றி கடையில் விற்கும் தூளையோ, வில்லைகளையொ பயன்படுத்தக் கூடாது.  பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்க்கலாம்.


அரிசி:
முனை முறிவில்லாததும், புழுபூச்சிகள், கற்கள் இல்லாததுமான தூய்மை செய்த பச்சரிசியை நீரில் கழுவியபின் உபயோகித்தல் வேண்டும்.


புஷ்பம்:
செடி அல்லது கொடிகளில் பறிக்கப்பட்ட மலர்களைப் பயன்படுத்தி வருவது பல கால வழக்கத்தில் இருந்து வருகிறது. காலையில் கீழே விழும் பவழமல்லிகை பூக்கள் மிக உசிதம். இதையோட்டியே புஷ்பாஞ்சலி என்னும் சொல்வழக்கம் தோன்றி விட்டது.  இவற்றிற்கு பதிலாக நீரால் கழுவப்பட்ட இலவங்கம் அல்லது சந்தனம் கலந்த அரிசியை மலராகப் பாவித்து வைத்துக் கொள்ளவும்.


சரு: 
தின்பண்டம் எனக் கூறலாம். முன்னர் மாவினால் செய்யப்பட்ட கச்சாயம், பனியாரம், முறுக்கு இவைகள் இவ்வகையைச் சேர்ந்தவை உபயோகப்படுத்தப்பட்டது. இவற்றிற்கு பதிலாக அரிசியோ, கொப்பரை தேங்காய்த் துண்டுகளையோ கழுவி வைத்துக் கொள்ளலாம்.


தீபம்:
ஸுத்தமான நெய் அல்லது எண்ணையைப் பயன்படுத்த வேண்டும். திரிக்குப் பழைய துணிகளைப் பயன்படுத்துதல் கூடாது. பஞ்சு அல்லது நூல் இவற்றைப் பயன்படுத்தவும்.


தூபம்:
வாசனைதரும் நறும்புகையாகும்.  இதற்கு வழக்கமாக ஊதுவத்தியையோ வாசனைப் பொடியையோ பயன்படுத்துகின்றனர்.  இதற்குப் பதிலாக சந்தனைத் தூளையோ, கொப்பரைச் சீவலையோ, தூபமாக பாவித்து அர்ப்பணம் செய்வதில் பிழை இல்லை.


பழம்:
திராட்சை, பாக்கு, பாதாம் கொட்டை, ஏலக்காய், பேரிச்சை முதலானவற்றைப் பயன்படுத்தலாம்.  இவைகள் கிடைக்காத போது, கொப்பரைத் துண்டுகள், தாமரைக் கொட்டை, மிளகு இவற்றையும் பயன்படுத்தலாம்.


அர்க்கியம்:
மேலே குறிப்பிட்ட நீர், சந்தனம், அரிசி, மலர், சரு, தீபம், தூபம், பழம் ஆகிய எட்டுப் பொருட்களும் பூஜைக்குரிய பொருட்களாகும். புஜா திரவியம் எனப்படும்.

இவற்றைச் சேர்த்து இறைவனுக்கு அர்ப்பணிக்கும் போது அர்க்கியம் எனப்படும்.


பூஜையை ஆலயத்தில் செய்வதாக இருப்பின் பூஜைக்கான அனைத்து பொருட்களையும் ஒரு தட்டில் வைத்து,  தூய்மையான துணியால் மூடி  எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். ஆலயத்தை மும்முறை வலம் வந்து துதிப்பாடல்கள் தெரிந்த வற்றைப் பக்தி உணர்வுடன் சொல்லி கொண்டே சுற்றி வரவும். பின்பு கால்களைக் கழுவி சுத்தம் செய்து உள்ளே வரும்போது வாயிற்படியயை நெருங்கியதும் நிக்ஷிதி, நிக்ஷிதி என்றோ என் உள்ளத்தைத் தீய வழிகளில் செல்லாமல் தடுப்பேன் என்று இரண்டு முறைகள் கூறி, துவாரபாலகர் அனுமதியைப் பெற்ற பாவனையுடன் மெதுவாக உள்ளே சென்று பகவானை விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம், உடல் நிலம் படும்படியாக வணங்கி எழுந்த பின்னர். ஆசமனம் செய்து கொண்டு, சந்தனம் அணிந்து கொள்ளவும்.

ஆலயமாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் சிம்மாசனம் முன்பாக அர்ச்சனைப் பொருட்களை வைத்துக் கொண்டு, நம் வினைகள்யாவும் அழிந்து அனந்த சுகம் தருவதாகிய முக்தி பதத்தைப் பெறவேண்டும் என்னும் உயரிய நோக்கத்தை மனதில் கொண்டு, வேறு சிந்தனைகள் எவையுமின்றிப் பூஜையைத் தொடங்க வேண்டும். பூஜையை பணிவுடன் நின்று கொண்டே செய்தல் நலம் பயக்கும்.


பூஜை தொடங்குதல்

----------------------------------------------- 
ஆலயத்தில் செய்வதாக இருப்பின்.

ஜிநாலய காட்சி துதி  (த்ருஷ்டாஷ்டக ஸ்தோத்ரம்)
ஜினபகவான் காட்சி துதி ( அத்யாஷ்டக ஸ்தோத்ரம்)
இம்முறைகளை சேர்க்க வேண்டும்.
----------------------------------------------- 


முதலில் சிம்மாசனத்தை நீர் விட்டுக் கழுவிய பின்னர், நற்காட்சி , நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மூன்றையும் குறிக்கும் வகையில் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டுள்ள தட்டில் அரிசியால் மூன்று புஞ்சங்கள் இடவும். பின்னர் இருகரங்களையும் கூப்பித் தொழுதவாறே,

ஓம் நம சித்தேப்ய: என்று மூன்று முறை சொல்லவும்.



பின்னர்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹெரெளம் ஹ்ர: அ ஸி ஆ உ ஸா ணமோர்ஹதே பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலேன உப வேசனபூமி சுத்திம் கரோமி ஸ்வாஹா:

(இம்மந்திரத்தை சொல்லி தன்னைச் சுற்றி சிறு கரண்டியால் நீர் எடுத்துத் தெளிக்க வேண்டும்.)



ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹெரெளம் ஹ்ர: அ ஸி ஆ உ ஸா ணமோர்ஹதே பகவதே ஸ்ரீமதே பவித்ர் ஜலேன மம  ஹஸ்த சுத்திம் கரோமி ஸ்வாஹா

(இம் மந்திரத்தைச் சொல்லி நீர் தெளித்து இரு கைகளையும் கழுவுதல் வேண்டும்)



ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹெரெளம் ஹெர: அ ஸி ஆ உ ஸா ணமோர்ஹதே பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலேன ஸர்வாங்க சுத்திம் கரோமி ஸ்வாஹா

(ஈம் மந்திரத்தாய்ச் சொல்லி சிறு கரண்டியால் நீர் எடுத்துத் தன் தலையில் தெளித்துத் கொள்ள வேண்டும்.)



ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹெரெளம் ஹெர: அ ஸி ஆ உ ஸா ணமோர்ஹதே பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலேன பூஜா பாத்ர சுத்திம் கரோமி ஸ்வாஹா

(இம் மந்திரத்தைச் செல்லி அஷ்டவிதார்ச்சனை பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் மீது நீர் தெளிக்க வேண்டும்)



ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹெரெளம் ஹெர: அ ஸி ஆ உ ஸா ணமோர்ஹதே பகவதே ஸ்ரீமதே பவித்ர ஜலேன புஜா த்ரவ்யம் சுத்திம் கரோமி ஸ்வாஹா

(இம் மந்திரத்தைச் சொல்லி அஷ்ட வித பூஜைப் பொருட்கள் மீது நீர் தெளிக்க வேண்டும்.)

சுத்தம் செய்வது முடிவடைந்தது.


ஸ்ரீமஜ் ஜிநேந்த்ர மபிவந்த்ய ஜகத்த்ரயேஸம்
ஸ்யாத்வாத நாயக மனந்த் சதுஷ்டயார்ஹம்
ஸ்ரீ மூலஸங்க ஸுத்ருசாம் ஸுக்ருதைகஹேதுர்
ஜைநேந்த்ர யஜ்ஞவிதிரேஷ மயாப்யதாயி

(இந்த ஸ்லோகத்தைக் கூறி புஷ்பாஞ்சலிம் க்ஷிபாமி என்று புஷ்பாஞ்சலி இடுதல் வேண்டும்)


ஓம் ஜய ஜய ஜய! நமோஸ்து ! நமோஸ்து ! நமோஸ்து !


ணமோ அரஹந்தாணம்
ணமோ சித்தாணம்
ணமோ ஆயிரியாணம்
ணமோ உவஜ்ஜாயாணம்
ணமோ ளோயே ஸவவ ஸா ஸூணம்.
(இதைச் செல்லிக்கொண்டே புஞ்சம் வைக்கலாம்)


ஓம் ஹ்ரீம் அநாதி மூல மந்த்ரேப்யோ நம:
புஷ்பாஞ்சலி க்ஷிபாமி.

(இம் மந்திரத்தை சொல்லி மலர்/ மஞ்சள் அரிசி இடவும்)


ஸத்தாரி மங்களம்: அரஹந்தா மங்களம், ஸித்தா மங்களம், ஸாது மங்களம் , கேவலி பண்ணத்தோ தம்மோ மங்களம்

சத்தாரி லோகுத்தமா: அரஹந்தா லோகுத்தமா, ஸித்தா லோகுத்தமா, ஸாது லோகுத்தமா , கேவலி பண்ணத்தோ தம்மோ லோகுத்தமா

சத்தாரி சரணம் பவ்யஜ்வாமி:  அரஹந்தா ஸரணம் பவ்வஜ்ஜாமி, ஸித்தா ஸரணம் பவ்வஜ்ஜாமி, ஸாது ஸரணம் பவ்வஜ்ஜாமி, கேவலி பண்ணத்தோ தம்மம் ஸரணம் பவ்வஜ்ஜாமி


ஓம் நமோஅர்ஹதே ஸ்வாஹா; புஷ்பாஞ்சலி க்ஷிபாமி
இம் மந்திரத்தை சொல்லி மஞ்சள் அரிசி இடவேண்டும்)

அபவித்ர: பவித்ரோ வா ஸுஸ்திதோ து: ஸ்திதோஒபி வா
த் யாயேத் பஞ்ச நமஸ்காரம் ஸர்வ பாபை: ப்ரமுச்யதே

அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோஒபி வா
ய: ஸ்மரேத் பரமாத்மானம் ஸ பாஹ்யாப்யேந்தரே சுசி:

அபராஜித மந்த்ரோ ஒயம் ஸர்வ-விக்ன-விநாசன:
மங்கலேஷு ச ஸர்வேஷு ப்ரதமம் மங்கலம் மத:

ஏசோ பஞ்ச ணமோயாரோ ஸவ்வ பாவப்பணாஸணோ
மங்கலாணாஞ் ச ஸவ்வேஸிம் படமம் ஹோயி மங்கலம்

கர்மாஷ்டக விநிர்முக்தம் மோக்ஷ லக்ஷ்மீ நிகேதனம்
ஸம்யக்த்வாதி குனோபேதம் ஸித்த சக்ரம் நமாம்யஹம்

அர்ஹமித்யக்ஷரம் ப்ரம்ஹ வாசகம் பரமேஷ்டின:
ஸித்த சக்ரஸ்ய ஸத்பீஜம் ஸர்வத: ப்ரணமாம்யஹம்

விக்நெளதா: ப்ரலயம் யாந்தி சாகினி பூத பந்நகா:
விஷம் நிர்விஷதாம் யாதி ஸ்தூயமாநே ஜிநேஸ்வர

(புஷ்பாசலிம் க்ஷிபாமி என்று சொல்லி மஞ்சள் அரிசஇட வேண்டும்)


(நேரமிருந்தால் ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் படித்து முறையாக பத்து அர்க்யம் இடலாம். இல்லை அடுத்த அர்க்யம் தொடரலாம்.)


உதக சந்தன தண்டுல புஷ்பகை ச்சரு ஸுதீப ஸுதூப பலார்க்யகை:
தவள மங்கல கான ரவாகுலே ஜிந க்ருஹே ஜிநநாத மஹம்யஜே
ஓம் ஹ்ரீம் ஸ்ரீபகவஜ்ஜின ஸஹஸ்ரநாமப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

என்று சொல்லி அர்க்யம் இட வேண்டும்.


ஸ்வதி த்ரிலோக குரவே ஜிந புங்க வாய ஸ்வஸ்தி ஸ்வபாவ மஹிமோதய ஸுஸ்தி தாய

ஸ்வஸ்தி ப்ரகாச ஸஹஜோர்ஜித த்ருங்மயாய ஸ்வஸ்தி ப்ரஸன்ன லலிதாத்புத வைபவாய

ஸ்வஸ்தி ஜ்வலத்விமல போத ஸுதா ப்ளவாய
ஸ்வஸ்தி த்ரிலோக பரபாவ விபாஸகாய
ஸ்வஸ்தி த்ரிலோக விததைக சிதுத்கமாய
ஸ்வஸ்தி த்ரிகால ஸகலாயத விஸ்த்ருதாய

த்ரவ்யஸ்ய சுத்தி மதிகம்ய யதானுரூபம்
பாவஸ்யசுத் மதிகாமதி கந்துகாம:

ஆலம்பனாநி விவிதாந்ய வலம்ப்ய வல்கன்
பூதார்த்த யஜ்ஞ புருஷஸ்ய கரோமி யஜ்ஞம்

அர்ஹன் புராண புருஷோத்தம பாவனாநி
வஸ்தூன்ய னூன மகிளான்ய ய மேக ஏவ
அஸ்மின் ஜ்வலத் விமல கேவல போத வன்ஹெள
புண்யம் ஸமக்ரமஹமேகமனா ஜுஹோமி

இதி புஷ்பாஞ்சலிக்ஷிபாமி என்று சொல்லி மஞ்சள் அரிசி இடுதல் வேண்டும்.

----------------------------------------------- 

விரிவாக செய்ய கீழுள்ள வற்றையும் சேர்த்து செய்யவும்

ஸ்வஸ்தி மங்கலம்
நவதேவதை பூஜை
தேவ சாஸ்த்ர குரு பூஜை
தீர்த்தங்கரர் பூஜை
விருஷப தீர்த்தங்கரர் பூஜை
ஸித்தர் பூஜை
விதேஹ க்ஷேத்ர தீர்த்தங்கரர் பூஜை

----------------------------------------------- 

பின்னர் அந்தந்த தீர்த்தங்கரருக்கான பிரத்யேக பூஜையைத் தொடரவும்.
அந்தந்த பரிநிர்வாண (மற்றும் மற்ற நான்கு) கல்யாண திதிகளில் அவசியம் செய்தல் நலம் பயக்கும்)


----------------------------------------------- 











No comments:

Post a Comment